Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இணையே என் உயிர்த்துணையே! -9-

Advertisement

Banupriya "பா.ரியா"

Well-known member
Member
அத்தியாயம் -9

மெல்லினி கண்களை திறக்க மிகவும் சிரமப்பட்டாள். இமைகளின் மீது ஒருவித கணம் தெரிந்தது. உடல் அடித்துப்போட்டது போல வலி எடுத்தது. மெதுமெதுவாய் அவள் கண்விழித்த போது ஜன்னலின் ஊடே பாய்ந்த சூரிய கதிர்கள் அவள் மேனியெங்கும் தாறுமாறாய் ஸ்கேன் செய்தது. ஆம். அவள் உடலை மறைத்திருந்த உடைகள் கட்டிலின் ஓரமாய் கசங்கியவாறு கிடந்தது.

அவள் அதிர்ந்துபோய் அலறியடித்து எழுந்தாள். படுக்கையில் கிடந்த போர்வையை இழுத்து தன்னை மறைத்துக்கொண்டாள். தனக்கு என்ன நேர்ந்தது என்பதை உணர்ந்து கொள்ள சில நிமிடங்கள் ஆனது அவளுக்கு. அவளுக்கு அடக்கமுடியாமல் அழுகை வந்தது. கத்தி கத்தி அழுதாள். அந்த அழுகை தீரவே முடியாத அழுகை. தன் கற்பு பார்வையால் பறிபோனாலே அதை ஒரு பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியாது. இங்கு மெல்லினியோ.. தன் கற்பு பறிபோனதை நினைக்கையிலேயே அவளுக்கு உடம்பெங்கும் கூசியது. செய்வதறியாது பித்துபிடித்தவள் போல எழுந்து ஓடி ஷவரை திறந்துவிட்டு மேனியெங்கும் பரபரவென தேய்த்தாள். எத்தனை தேய்த்தாலும் அந்த அழுக்கு தீராதது என்று புரிந்ததும் அப்படியே அமர்ந்து நெடுநேரம் அழுதாள். எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அவளாகவே சுயநினைவுக்கு வர எழுந்து சென்று உடைகளை அணிந்துவிட்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். ஆங்காங்கே இருந்த நகக்கீறல்களை பார்க்க அவளுக்கு உதறல் எடுத்தது. தன்னைப் பார்க்கையில் தன்மீது அவளுக்கே கோபம் வந்தது. உடனே செத்துவிடலாம் போல எண்ணம் எழுந்தது. அவளது எண்ணத்தை கலைப்பது போல அலறியடித்தது ரூம் பெல்.

மெல்லினி ஒருகணம் பதறியதில் அவளது உடம்பு தூக்கிப்போட்டது. கதவு நெடுநேரம் தட்டப்பட்டுக்கொண்டிருந்தது. மெல்லினி ஒவ்வொரு அடியாய் பின்வாங்கி சுவரோடு ஒண்டிக்கொண்டாள்.

"மெல்லினி! மெல்லினி! நான் தான் முகிலன். என்னாச்சு.. கதவை திறங்க.." முகிலனது குரலைக் கேட்டதும் தான் அவளுக்கு உயிர் வந்தது. கதவை நோக்கிச் சென்றவள் அப்படியே கதவில் சாய்ந்து அமர்ந்துக்கொண்டு பெருங்குரலெடுத்து அழுகத் தொடங்கினாள்.

அவளது அழுகைக்குரலைக் கேட்டதும் பதட்டம் கொண்டவனாய் இன்னும் பலமாகத் தட்டத்தொடங்கினான் முகிலன். தனி காட்டேஜாக இருக்கவும் அவனது தட்டல் சத்தம் பெரிதாக யாருக்கும் கேட்டிருக்கவில்லை.

"மெல்லினி.. திறங்க.. "

கதவு மெதுவாக திறக்கப்பட உள்ளுக்குழௌ நுழைந்த முகிலன் மெல்லினியை கண்டு திகைத்தான். துவண்ட கொடியாய் சிதைந்து போயிருந்தாள் அந்த பேதை.

"மெல்லினி... " அவள் அருகில் சென்றவன் அவள் கழுத்திலும் கைகளிலும் தெரிந்த அடையாளங்களை கண்டு ஒருகணம் மின்சாரத்தால் தாக்குண்டவன் போல நின்றுவிட்டான். பற்களால் கடித்தும், நகத்தால் பிராண்டியும், கன்னங்களில் பதிந்திருந்ந கைவிரல் அடையாளங்களும் அவனை நிலைகுலையச் செய்தது. அவளை மெதுவாக அணுகவும் மெல்லினி பதறியடித்து கத்தத்தொடங்கினாள்.

"வே.... வேணாம் முகில். இந்த பாவி பக்கத்துல வராதிங்க.. அசிங்கம்.. நான் அசிங்கம் பிடிச்சவ....."

"மெல்லினி... எ..என்..என்னாச்சி... என்ன சொல்றிங்க...."

"நா.. என்னனு சொல்வேன் முகில்.... என்ன... என்னை.. அந்த... " அவள் திக்கித்தினறி சொல்லத்தொடங்கினாள். அவள் சொல்ல சொல்ல முகிலனின் நரம்புகள் முறுக்கேறின.

"முகில்.. செத்துடலாம் போல இருக்கு.. இந்த அசிங்கத்தோட நான் எப்படி வாழ முடியும்... நா..நான் சாகனும்... " என கத்திக்கொண்டே தலையை சுவற்றில் மோதிக்கொள்ளத் தொடங்கினாள்.

வேகமாக செயற்பட்ட முகிலன் பாய்ந்து அவளை தடுத்து நிறுத்தினான்.

"பைத்தியமா உனக்கு.... நீ எதுக்காக சாகனும்.. உனக்கு ஒன்னும் இல்ல.. நான் இருக்கேன் உனக்கு... நீ எதுக்கு உன்னை வருத்திக்கிற...?என்ன தப்பு செஞ்ச நீ.. சாக வேண்டியது அந்த படுபாவி.. அந்த தண்டணையை ஆண்டவனே அவனுக்கு கொடுத்துட்டான்..."

"என்ன..என்ன சொல்றிங்க முகில்...."

"நேற்று நைட் ஒரு ஆக்ஸிடண்ட். அதுல அந்த மஞ்சுநாத் ஸ்பாட் அவுட்... அதை சொல்லத்தான் இங்க வந்தேன்.. இங்க வந்தா... அப்படினா அவன் இங்க இருந்து திரும்பி போகும் போதுதான் ஆக்ஸிடண்ட் ஆகிருக்கனும்... " சொல்லிவிட்டு முகிலன் பலமாக யோசித்தான்.

"மெல்லினி.. சீக்கிரம் உன் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணு... நான் ரூம் பில்ஸ் எல்லாம் ப்பே பண்ணிட்டு வாரேன்..."

"எதுக்கு முகில்... அவசரமா..."

"அவன் கடைசியா வந்துட்டு போனது இங்கனு தெரிஞ்சா தேவையில்லாத கேள்விகள் எல்லாம் வரும்.. " அவளது பதிலை எதிர்பார்க்காமல் விறுவிறுவென ரூமை காலி செய்துவிட்டு மெல்லினியை அழைத்துக்கொண்டு வண்டியில் ஏறினான்.

"மெல்லினி... டாக்டரை ஏதும் பார்க்கனுமா.." தயக்கமாய் கேட்டான் அவளிடம். மறுப்பாய் தலையசைத்தாள் அவள்.

"இதோ பாரு மெல்லினி.. இப்ப நான் உன்னை என்னோட கெஸ்ட் அவுஸ்க்கு தான் கூட்டிக்கிட்டு போறேன். உனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை.. நீ என்னோட வாரதுக்கு மறுப்பு சொல்ல மாட்டனு நினைக்கிறேன். முக்கியமான விஷயம்.. இங்க நடந்தது எல்லாம் இனிமே நீ நினைச்சு பார்க்க கூடாது.. மறந்திடு.. " சொல்லிவிட்டே வண்டியை கிளப்பினான்.

மெல்லினிக்கு அவன் சொன்னது எதுவும் காதில் விழவில்லை. அவன் அருகில் இருக்கும் போது பாதுகாப்பாய் உணர்ந்தாள். அவள் சுயநினைவிலேயே இல்லாமல் ஜன்னல் ஊடே வெறித்து பார்த்துக்கொண்டு வந்தாள். தன் மீது வெறுப்புதான் வந்தது அவளுக்கு.

முகிலன் அவளை தன்னுடைய கெஸ்ட் அவுஸிற்கு கூட்டிச்சென்றான். வீட்டில் வேலைக்கிருந்த பெண்மணியை அனுப்பிவிட்டான். அவனைத்தவிர அங்கு காவலுக்கு ஒரு வாட்ச்மேன் மட்டும் இருந்தார்.

அவளுக்காக ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தான். அவள் மாலை வரை அடித்துப்போட்டது போல உறங்கினாள். அவள் எழுந்துக்கொண்ட சத்தம் கேட்டதும் அவளுக்காக சூடாக காபி போட்டு பிரட் டோஸ்ட் செய்துகொண்டு சென்று அவளது அறையை தட்டினான்.

மெல்லினி வந்து மெதுவாய் திறந்தாள் கதவை.

" இதை குடி..."

"முகிலன்! எதுக்காக இதெல்லாம் செய்றீங்க... நான் பாவி முகிலன்.. அசிங்கம் பிடிச்சவ.. எனக்காக இதெல்லாம் செய்யாதிங்க.. உங்க பக்கத்துல கூட இருக்க அருகதை எனக்கில்ல... " வாயை பொத்திக்கொண்டு அழுதாள்.

முகிலன் வேகமாய் எழுந்து அவள் அருகில் வந்து அவள் மணிக்கட்டைப் பிடித்தான்.

"திரும்பத்திரும்ப அதையே பேசிக்கிட்டு இருக்காதே மெல்லினி.. உன் மேல எந்த தப்பும் இல்ல.. நீ எந்தவிதத்திலும் பாவி இல்ல.. நீ எப்படிப்பட்டவ.. உன் மனசு எப்படிப்பட்டது எல்லாம் எனக்குத் தெரியும். இதையே திரும்பத்திரும்ப பேசிக்கிட்டு இருந்தனா எனக்கு கெட்ட கோவம் வரும்..." என்று சொல்லிவிட்டு அறைக்கதவை வேகமாய் மூடிவிட்டு சென்று ஜன்னல் அருகே நின்று இருட்டை
வெறித்துக்கொண்டிருந்தான்.

'ச்சே... என்ன காரியம் செய்துவிட்டேன்... அவளே மனசு உடைஞ்சி கிடக்கிறா... அவகிட்ட போய் அவ கையை பிடிச்சி... என் தொடுகை அவளுக்கு கஷ்டமா இருந்திருக்கும் இல்ல... அவ மனசை காயப்படுத்துற மாதிரி பேசிட்டு வந்திருக்கேன்.. இப்ப அவளுக்கு ஆறுதல் தான் தேவை... அவகிட்ட மன்னிப்பு..' அவனது சிந்தனையை தடை செய்யும் விதமாய் அவள் குரல் மெல்லியதாய் கேட்டது.

"முகில்..."

"மெல்லினி.. ஸாரி.. நான் ரொம்ப ஹார்ஷா.."

"இல்ல முகில்.. ஐ ஆம் ஸாரி. இப்படி ஒரு இக்கட்டான நிலையில இருந்து என்னை மீட்டு எடுக்க முயற்சி செய்றிங்க.. அது புரியாம நான்.. இனிமே இப்படி பேச மாட்டேன்.... " அப்படிச்சொல்லிவிட்டு அறைக்குச் சென்றுவிட்டாள். ஆனால் அவ்வளவு சீக்கிரம் அவளால் அதை மறக்க முடியாது என்பதை அவனும் அறிந்தே இருந்தான்.

முகிலனுக்கு பெரும் சிரமமாக இருந்தது. அவளை தேற்றும் விதம் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான். மறுபுறம் மஞ்சுநாத்தின் இறுதிக்கிரியைகள் நடந்தும் முடிந்திருந்தன. அவனை தன் கையால் நெறித்து கொன்றிருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டான். திருமணம் முடிந்த அடுத்த இருநாட்களிலேயே ஒரு துக்க சம்பவம் நடந்தது அங்கிருப்பவர்களை ஒரு ஆட்டு ஆட்டி வைத்திருந்தது. முகிலன் ஒன்றும் தெரியாதவன் போல இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்டு திரும்பிவிட்டிருந்தான். துக்கநிகழ்வு நிகழ்ந்ததில் கலங்கியிருந்த கயலும் மெல்லினி எங்கிருக்கிறாள்? எப்போது திரும்பிச் சென்றாள் என்றெல்லாம் யோசிக்கவில்லை.

மெல்லினி முகிலனது கெஸ்ட் அவுஸிலேயே ஒருவாரம் வரை இருந்தாள். முகிலன் அவளை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டான். மெல்லினி அவனது அருகாமையில் மனம் தேறினாள். அவள் உடலும் ஓரளவு தேறியதும் அவளை அழைத்துக்கொண்டு கொழும்புக்கு கிளம்பினான் முகிலன்.

ஒருவாரத்தில் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு இரண்டு வாரத்தின் பின் வருவதாக போன் செய்த மகனை வரவேற்க வாசலிலேயே நின்றுக்கொண்ருந்தார் பாரிஜாதம். முகிலனும் வந்து இறங்கினான். கூடவே அவள். அவள் கையோடு தன் கையை பின்னிட்டு இனியில்லை என்ற நெருக்கத்தில் முகிலன். அதியுச்ச அதிர்ச்சியில் அப்படியே படியில் சரிந்தார் பாரிஜாதம்.
 
Nirmala vandhachu ???
 
Top