Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் - முன்னுரை

Advertisement

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் புவியில் நிகழ்ந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக ஐஸ் ஏஜ் எனப்படும் உறைபனி காலம் முடிவுக்கு வந்தது என்றும் அதுவரை நீர்ப்பரப்புக்கு மேலிருந்த பல நாகரிகங்கள், சிறிது சிறிதாக உருகிய பனிநீரால் கடலில் மூழ்கியதாகவும் ஒரு கோட்பாடு ஆதிகாலம் தொட்டே உலகில் உண்டு.

எல்லா மதங்களிளும், ஊழிக்காலத்தில் இறைதூதுவன் மக்கள் மற்றும் விலங்குகளை கப்பலில் ஏற்றிக்கொண்டு காப்பாற்றுவது போன்ற கதைகள் ஏராளமாய் உள்ளன.
இந்து மதமாகட்டும், கிருத்துவமாகட்டும் இன்னும் பல கலாச்சாரங்கள் அவற்றை நமக்கு எடுத்துரைக்கின்றன.
கிரேக்க புராணங்களில் வரும் அட்லாண்டிஸ், தமிழ் நூல்கள் விவரிக்கும் குமரிக்கண்டம், சமஸ்கிருத மொழி சொல்லும் துவாரகை மற்றும் பல நம்ப முடியாத கதைகளில் மறைந்துள்ள உண்மைப் பின்னணியைத் தேடி பல ஆய்வாளர்கள் இன்றும் உலகை சுற்றி வருகிறார்கள்.
ராவணனுக்கு பத்து தலையென்றும், முருகனை ஆறுமுகன் என்றும், சீதையும் திரௌபதியும் ஆதிரையும் தீயில் குளித்து மீண்டனர் என்பதையும், அனுமன் சஞ்சீவி மலையை சுமந்ததையும் நம்பும் நாம் இவற்றை தாண்டி அறிவியலுக்கு மிக அருகில் இருக்கும் மேற்கண்ட இந்தகோட்பாடுகளையும் சிறிது காலம் நம்புவோம்….
இக்கதை முடியும் வரை…
View attachment 2726
Posted first episode... Padichu paarunga makkale❤️
 
Top