Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இமைதாண்டா கனவுகள் 1

Advertisement

TNWContestwriter067

Member
Member
ஹாய் மக்களே இது எனது முதல் முயற்சி..நான் நம்பர் 67..காதல் கதைன்னு சொன்னதும் வந்துட்டேன்.பட் கொஞ்சம் பயமா இருக்கு..பரவால எழுதிடலாம்னு ஒரு தைரியத்தில் வந்துட்டேன்..அந்த தைரியதுல முதல் பதிவு போட்டுட்டேன்..படித்து விட்டு கருத்துகளை கூறுங்கள்...





இமைதாண்டா கனவுகள்

அத்தியாயம் 1



பளார் என்ற சத்தம் அந்த இடத்தையே அதிர வைத்தது..

கன்னத்தில் கை வைத்தபடி அவளையே பார்க்க, அங்கே முகமெல்லாம் இரத்தமென சிவந்து போய்,கண்களில் இருந்து கண்ணீர் வழிய,என்ன சொன்னீங்க..?இதை சொல்ல உங்களுக்கு எப்படிங்க மனசு வந்தது என்று அவனது சட்டையை பற்றி கொண்டு கதறினாள்...

அவனோ கண்களை தாண்டி கீழே விழ போகும் கண்ணீரை அடக்கி,தனது இதயத்தை இரும்பாக்கி கொண்டு அந்த வார்த்தையை கூறினான்...

உண்மையை தான் சொல்றேன்..நீ என்னையும்,என் வாழ்க்கையையும் விட்டு தூரமா போயிடு..எனக்கு வீட்ல வேற பொண்ணு பார்த்திருக்காங்க என்று எங்கோ பார்த்தபடி கூறினான்..

அவன் கூறியதை கேட்டு சட்டென நிமிர்ந்து அவனது முகத்தை பார்க்க,அவளால் அவனது முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை...

எ..எ.என்ன சொல்றீங்க..?என்று அதிர்ந்தவள்,அடுத்த நிமிடம் ஏதோ தோன்ற ஹாஹாஹா என்று வாய்விட்டு சிரித்தாள்..எதற்காக சிரிக்கிறாள் என்று உணர்ந்த அவனோ சிலையென நின்றிருந்தான்...

ஏங்க இன்னைக்கு ஏப்ரல் ஒன்னு தானே..?இந்த வருஷமும் என்னை முட்டாள் ஆக்கிட்டீங்களா..?இது தெரியாமல் நான் வேற உங்களை அடிச்சிட்டேன்..அய்யோ வலிக்குதா என்று கேட்டுக் கொண்டே அவனது கன்னத்தை தடவினாள்..

சட்டென அவளது கையை பிடித்து தடுக்க, என்னாச்சுங்க என்று சிரித்து கொண்டே கேட்ட அவளது முகத்தை பார்த்தான்.அந்த பார்வையில் தான் எத்தனை காதல்,அன்பு, நம்பிக்கை ...கடந்த ஏழு வருடமாக தான் மட்டுமே உலகம் என்று வாழ்பவளை இன்னும் சிறிது நேரத்தில் யாரோ அறியாதவள் போல் நடந்து கொள்ள போகும் தன் நிலையை வெறுத்தான்...கடவுளே எனக்கு இப்படி ஒரு நிலையை கொடுத்ததற்கு பதிலாக என்னை கொன்றிருக்கலாமே..?தான் செய்ய போகும் துரோகத்திற்கு கடவுளை குறை கூறினான்...



இதோ பாருங்க நீங்க வருஷா வருஷம் இப்படி தான் என்னை ஏமாத்துறீங்க..ஆனா பொய்யா கூட இப்படி எல்லாம் இனிமே சொல்லாதீங்க என்று கூறி கண்ணீர் சிந்தினாள்..



அவளது கண்களில் இருந்து வரும் கண்ணீரை பார்த்து அவனது இதயத்தில் இரத்தம் வலிந்தது..மெல்ல அவளது கண்ணீரை துடைக்க சென்றவன் கைகள் அந்தரத்திலே நின்றது..பல கேள்விகள் அவனது மனதை குடைந்தது...சிறிது நேரம் எதையோ யோசித்தவன் ஒரு முடிவெடுத்தவனாய் தனது கைகளை இழுத்து கொண்டு ஆழ்ந்த மூச்சை விடுத்து பேச தொடங்கினான்..



இதோ பார் நான் உன்கிட்ட விளையாடல..உண்மையை தான் சொல்றேன்..நீ என்னை மறந்திடு..வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ என்று கூறினான்...



போதுங்க..இதுக்குமேல விளையாடாதீ.... என்றவள் அப்போது தான் அவனது முகத்தை உற்று பார்த்தாள்..இவளை பார்த்த உடனே அவனது கண்களில் தெரியும் அந்த காதல் இன்று இல்லை..உதட்டில் சிரிப்பு இல்லை..மாறாக எங்கையோ வெறித்து கொண்டிருந்தான்..



எ..என்னாச்சுங்க.வீட்ல எதுவும் பிரச்சனையா..?அவனது முகத்தை பார்த்து கேட்க.., எப்பொழுதும் போல் இப்பவும் அவளை ஆச்சரியமாய் பார்த்தான்...



அது..அது..அது வந்து வீட்ல வேற பொண்ணு பார்த்திருக்காங்க...எனக்கு வேற வழி..என்று அவன் கூறி முடிப்பதற்குள்,



நீங்க என்ன‌ முடிவு எடுத்திருக்கீங்க..?அவனை தீர்க்கமாய் பார்த்து கொண்டே கேட்டாள்..



எ..என்னால் அம்மா பேச்..சை தட்ட முடியாது..இந்த க..கல்யாணம் நடந்தா எங்களுக்கு உள்ள எல்லா பிரச்சனையும் தீர்ந்துடும்...அவன் திக்கி திக்கி கூறினான்..



சிறிது நேரம் அப்படியே நின்றவள்,அப்போ சரிங்க நீங்க உங்க அம்மா சொல்ற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கோங்க..தெளிவாய் அதேசமயம் உறுதியாய் கூறினாள்...



அவன் அவளை ஆச்சரியமாய் பார்த்தான்..இவன் கூறியதை கேட்டு அவள் அடிப்பாள்,திட்டுவாள்,அழுவாள் என்று அவன் நினைத்திருக்க,அவளோ அவன் நினைத்தற்கு எதிர்மறையாக நடந்து கொண்டிருந்தாள்...அப்படி என்றாள் இவள் உண்மையாக என்னை காதலிக்கவில்லை யா..?இவ்வளவு வருடம் என்மீது காட்டிய அன்பு அனைத்தும் பொய்யா..?என்று நினைக்க தொடங்கினான்...



என்னடா இவ கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி பேசுறாளேனு யோசிக்கிறீங்களா..?கடந்த ஏழு வருஷமா நாம காதலிக்கிறோம்..உங்களை பற்றி என்னைக்கு நல்லாவே தெரியும்.. நீங்க உங்க குடும்பத்து மேல் எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்கனு எனக்கு தெரியும்...என்னால அந்த குடும்பம் உடைய வேண்டாங்க..இப்படி ஒரு நாள் வரும் என்று எதிர்பார்த்தேன்..ஆனால் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கல என்று கூறி முடித்தவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது....



அவனோ அவளது கண்ணீரை துடைக்க போக,சட்டென முகத்தை திருப்பி கொண்டாள்..



உங்களுக்கும் எனக்கும் இந்த நிமிஷத்தில் இருந்து எந்த சம்பந்தமும் இல்லை..நீங்க இங்கிருந்து கிளம்பலாம் என்று உறுதியாய் கூற..அவன் ஏதோ கூற வாயெடுக்க..,



நீங்க எதுவும் சொல்ல வேணாம்.. தயவுசெய்து இங்கிருந்து கிளம்புங்க என்று குரலை சற்று உயர்த்த,அவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் விடுவிடுவென அங்கிருந்து கிளம்பினான்..



அவன் கிளம்பிய அடுத்த நிமிடம்,இதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து சிதறியது..கடவுளே நான் யாருக்கும் என்ன பாவம் செய்தேன்.எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று கதறி அழுதவள் சுவற்றோடு சரிந்து,கால் இரண்டையும் மடித்து வைத்து அதில் முகம் புதைத்து அழுதாள்..அவளது கைகளோ அவளது வயிற்றை தடவி கொண்டிருந்தது....



காலை பத்து மணி..க்ளிங் க்ளிங் என்று அலாரம் சத்தம் போட்டது..அது காதில் விழுந்ததும்,சட்டென்று போர்வையை விலக்கியவள்,அலாரத்தை அணைத்துவிட்டு மறுபடியும் போர்வையை இழுத்து போர்த்த..,இப்போது அவளது போன் சத்தம் போட்டது...



காலையிலே நிம்மதியா தூங்க முடியுதா என்று சலித்து கொண்டவள், எழுந்து போனை எடுத்தாள்..அதில் வந்த நம்பரை பார்த்து,இவ ஒருத்தி காலையிலே தூக்கத்தை கெடுத்துகிட்டு என்று சலித்து கொண்டே போனை ஆன் செய்து காதில் வைத்தவள்,



சனியனே,காலையிலே ஏண்டி தூக்கத்தை கெடுக்குற...



எது காலையிலே வா..,அடியேய் மணியை பாரு..மணி பத்து... எதிர்முனையில் இருந்து பதில் வந்தது..



அதுக்கு என்ன இப்போ..?



அடியேய் விது இன்னைக்கு முக்கியமான பிராக்டிகல் க்ளாஸ் இருக்குடி..இதை மிஸ் பண்ணவே கூடாது..நீ சீக்கிரம் கிளம்பி வா...



எவ்வளவு முக்கியமான க்ளாஸா வேணாலும் இருக்கட்டும்.. என்னால் வர முடியாது..எனக்கு நல்லா தூக்கம் வருதுடி..நான் டூடே லீவ் என்று கூறிக் கொண்டே கொட்டாவி விட்டாள்...



விது விளையாடாதா..?நீ உடனே கிளம்பி வா...



வாய்ப்பில்லை ராசாத்தி...அழுத்தமாய் கூறினாள்..



எதிர்முனையில் இருந்த நிகிதா இவளை எப்படி வரவழைப்பது என்று யோசித்தவள் சட்டென,அப்போ சரி நான் அவன்கிட்ட சொல்லிடுறேன்...



எவன்கிட்ட..?



அதான் அந்த எருமைமாடு மித்ரன் கிட்ட...



மித்ரன் என்ற பெயரை கேட்டதும் வாயெல்லாம் பல்லாக,மித்ரன் என்னை தேடுனானா..? ஆர்வமாய் கேட்டாள்..



ஆமா.ஆமா..என்றவள்,சரி நீ இன்னைக்கு லீவுனு அவன்ட சொல்லிடுறேன்...





ஏய் ஏய் முட்டகண்ணி அப்படி சொல்லிடாத..இன்னும் பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன்..



பத்து நிமிஷத்துலயா..?உன் வீட்டிலிருந்து காலேஜ் வர அரைமணி நேரம் ஆகுமே.. ?



அடியேய் அதெல்லாம் உனக்கு எதுக்கு..முதல்ல நீ போனை வை என்றவள்,அதை அணைத்து விட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள்..நுழைந்த வேகத்தில் திரும்பி வந்தவள், போட்டிருந்த துணியை கழட்டி தூக்கி தூர எறிந்து விட்டு,ஒரு ப்ளாக் கலர் ஜீன்ஸ் பேண்ட்,ஒரு ரெட் கலர் டாப்பை எடுத்து மாட்டிக் கொண்டு, அங்கிருந்த பாடி ஸ்பிரேவை உடல் முழுவதும் அடித்து கொண்டு ஒரு கையை தூக்கி முகர்ந்து பார்த்தவள்,ஓகே தான் என்றவள் தலையை அள்ளி கட்டிக் கொண்டு ஓடினாள்...





சின்னம்மா சாப்பிட வர்ரீங்களா..?வேலைக்கார பெண்மணி கேட்க,இல்ல வேணாம் என்று கூறிவிட்டு,தனது காரை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டாள்...



விதுனா நம் கதையின் நாயகி..இவளை பற்றி கூறுவதற்கு பெரிதாய் ஒன்றுமில்லை..கேபி குழுமத்தின் மொத்த சொத்திற்கும் இருக்கும் ஒரே வாரிசு.. சிறுவயதில் தாயை இழந்தவளுக்கு,சொந்தம் என்று சொல்லி கொள்ள இருப்பது தந்தை மட்டுமே..அவரும் தொழில் தொழில் என்று பல நாடுகளுக்கு பறந்து கொண்டிருக்க, இவளுக்கு தனிமையே நண்பனாகி போனான்..தன் தனிமையை போக்க ஆன்லைன் கேம்,சோசியல் மீடியா ஃப்ளாட் பார்ம் என்று இருக்கும் அனைத்திலும் தன்னை புகுத்தி கொண்டாள்.. சோஷியல் மீடியாவில் தெரியாத நபரோடு உரையாடினாள்..அவர்கள் அன்பே சாப்பிட்டியா,தூங்கினாயா,என்ன பண்ற என்று கேட்கும் போதெல்லாம் இவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி..தன் மீது அக்கறையாக இருக்க ஒருவர் இருக்கிறாரே என்று நினைத்து..ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவனது பேச்சு அந்தரங்க விசயங்களை பற்றி இருக்க அவளுக்கு சப்பென்றாகிவிடும்..இப்படியே அவள் தனக்கான உண்மையான உறவை சோசியல் மீடியாவில் தேட, அவளுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான்... நிஜவாழ்க்கையில் அதைவிட அதிகமாக ஏமாற்றபட்டாள்..அவளிடம் உள்ள பணத்திற்காக தான் அவளுடன் பழகினார்களே தவிர அவளிடம் அன்பு காட்ட யாரும் இல்லை...அதனால் ஆண்கள் மீது ஒரு வெறுப்பு உண்டானது..ஆண்களை பணத்திற்காகவும்,பெண்ணின் சதைக்காக அலையும் அர்பர்களாகவே நினைத்தாள்..அதனால் தான் அவள் ஆண்களை மதிப்பதே இல்லை.. ஆண்கள் மீது தவறான எண்ணம் கொண்டிருக்கும் இவள் தான் பிற்காலத்தில் ஒருத்தனை உருகி உருகி காதலித்து,அவனுக்காக தன் உயிரையும் விட தயாராகுவாள் என்பதை அவள் அறியவில்லை.. இப்படி எந்த பக்கம் திரும்பினாலும் சுயநலவாதிகளாய் இருந்த போது அவளது கல்லூரி முதலாமாண்டில் அவளுக்கு தோழியாய் அறிமுகமானவள் தான் நிகிதா..இவள் மீது உண்மையாய் அன்பு காட்டுபவள்..நிகிதாவின் அண்ணன் தான் மித்ரன்... ஒருநாள் விதுனா

நிகிதாவின் வீட்டிற்கு செல்ல,அவளது பெற்றோர் இவளை அவ்வளவு பாசமாக பார்த்து கொண்டனர்..ஆனால் மித்ரன் மட்டும் இவளை சிறிதும் கண்டு கொள்ளவில்லை...இவளே வழியே சென்று பேசினாலும்,அவள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கூறிவிட்டு விலகி சென்றுவிடுவான்.அந்த ஒதுக்கமே அவன் மீது ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியது..அதனால் அவனிடம் நெருங்க நினைத்தாள்..ஆனால் அவளால் முடியவில்லை...அவன் விலகியே தான் சென்று கொண்டிருந்தான்...இவள் இப்படி தன் அண்ணனை நெருங்குவது நிகிதா தெரிந்து கொள்ள,அவளும் இவளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தாள்..இப்படி தான் விதுனா முடியாது என்று கூறும் ஒவ்வொரு செயலுக்கும் நிகிதா மித்ரனின் பெயரை கூறி அதை செய்ய வைத்து விடுவாள்...



விதுனா கல்லூரி பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு இறங்க,அங்கு நின்றிருந்த செக்யூரிட்டி அவளுக்கு வணக்கம் வைத்தார்..அவள் அதை சிறிதும் கண்டு கொள்ளாது மித்ரனை தேடி ஓடினாள்...



வகுப்பில் புரோபசர் பாடம் எடுத்து கொண்டிருக்க,அவரை சிறிதும் கண்டு கொள்ளாது வேகமாக ஓடிச்சென்று மித்ரனின் முன்பு நின்று மூச்சு வாங்கினாள்...



மித்ரன் அவளை மேலும் கீழும் பார்க்க,அங்கு இருந்த அனைவரும் அவளை தான் பார்த்தனர்...அவள் அதை எல்லாம் சிறிதும் கண்டு கொள்ளாது எ..எதுக்காக என்னை தேடுன..?என்று மூச்சு வாங்க கேட்டாள்...ஓடி வந்ததில் அவளுக்கு முகமெல்லாம் வியர்த்து கொட்டியது...



யா..யாரு தேடுனா..?மித்ரன் கேட்டான்..



நீ..நீதான்..நிகி சொன்னா...



அவ ஒரு அரை மென்டல்..அவ சொல்றானு கேட்டு இப்படி ஓடிவந்த நீ ஒரு முழு மென்டல்..என்று அவளுக்கு கேட்கும் படி பல்லை கடித்து அழுத்தி கூறினான்...



அப்போ நீ என்னை தேடலையா..?அதுவரை இருந்த மகிழ்ச்சி காணாமல் போனது..



ஒழுங்கா இங்கிருந்து கிளம்பு.. எல்லாரும் நம்மல தான் பார்குறாங்க...புரோபசர் வேற இருக்கார் என்று கூறும் போதே....,



என்ன நடக்குது இங்க...நான் கிளாஸ் எடுக்கவா வேண்டாமா...?என்று பரோபசர் சற்று அதட்டலுடன் கேட்க...



ச..சாரி சார் என்றான் மித்ரன்...விதுனாவோ சாரை முறைத்து பார்க்க, அவருக்கு கோபம் வர,மித்ரன் முதல்ல கிளாஸை விட்டு வெளியே போ..!கத்தினார்..



ச..சார்..அது..ச...சாரி..



உன்னால் மத்த மாணவர்களுக்கு தொந்தரவா இருக்கு...மேடத்தை கூட்டிட்டு வெளியே போ..உறுதியாய் கூறினார்...



மித்ரன் விதுனாவை முறைத்து கொண்டே கிளாஸை விட்டு வெளியேறினான்...



விதுனாவோ சாரை முறைத்து கொண்டே செல்ல..,அதை சிறிதும் கண்டு கொள்ளாதவர்,ஒகே காய்ஸ் நாம் கன்டிநீயூ பண்ணலாம் என்றவர் தனது பணியை தொடர்ந்தார்...



வெளியே வந்த மித்ரன்,உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா..! என்று விதுனாவிடம் கத்தினான்...அவளோ எதுவும் கூறாமல் அமைதியாய் இருக்க…



இதோ பார் உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன்..இதுபோல் க்ளாஸ் எடுக்கும் போது பர்மிஷன் இல்லாம உள்ள வராதேனு..ஆனா நீ கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்க மாட்ற...நீ இந்த காலேஜ் சேர்மன் பொண்ணுங்குறதால உன்ன திட்ட கூட முடியல அவுங்களால..ஆனா நீ அதை அட்வான்டேஜா எடுத்துட்டு….என்று கூறி முடிப்பதற்குள்,ஒரு கையை தூக்கி போதும் நிறுத்து என்றாள்…



மித்ரன் அவளையே பார்க்க,நீ என்னை தேடுனியா,இல்லையா..?



இல்ல..?



ஏன் தேடலை..?



நீ என்ன லூசா என்பதை போல் பார்த்தான் அவளை..



ஏன் தேடலை..?பதில் சொல்லு..



அவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் அவளை முறைத்து கொண்டே அங்கிருந்து சென்றான்…



இதோ பார் மிது நீ என்ன இப்போ தேடாமல் இருக்கலாம்..ஆனால் கண்டிப்பா ஒரு நாள் தேடுவ என்று சத்தம் போட்டு கூறினாள்…



அவன் அவளை திரும்பி பார்த்து,அது கனவில் கூட நடக்காது என்று கூறிவிட்டு சென்றான்…



அவன் கூறியதை கேட்டு கடுப்பானவள், இதுக்கெல்லாம் காரணம் அந்த முட்டகண்ணி தான்..அவளை என்ன பண்றேனு பாரு என்று பல்லை கடித்து கொண்டே தனது கிளாஸிற்கு சென்றாள்…
 
Last edited:
Top