Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 20.1 final

Advertisement

இளந்தென்றலோடு ஒரு கவிதை 20



”அவன் எங்க இருக்கானு எனக்கும் தெரியாது அண்ணா. நானுமே, அவனை காண்டெக் பண்ணுனா போன் எடுக்க மாட்டுறான் அண்ணா, கடைசியா அவனை கோயம்போடு பஸ்டாண்ட்ல இறக்கிவிட்டது தான் அதுகடுத்து அவன் எனக்கு போன் போடலை அண்ணா”. என்று தனுஷின் மாமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான் சுந்தர்.



வேற வழி இல்லையா, அவனை கண்டுபிடிக்குறதுக்கு. அவனுக்கு தெரிஞ்சவங்க வேற யாரும் இல்லையா சுந்தர். என மேலும் எதாவது தகவல் கிடைக்குமா என நப்பாசையால் அவர் கேட்க.





அவனோ, கொஞ்சமும் யோசிக்காமல் தென்றலை பற்றியும், அவர்களின் காதல் பற்றியும் கூறினான். ‘ஒரு வேளை அந்த பொண்ணுக்கும் தெரிஞ்சு இருக்கலாம் அண்ணா.’



அந்த பொண்ணு எங்க இருக்குனு சொல்லு சுந்தர். முடிஞ்சா அந்த பொண்ணோட அட்ரெஸ், போன் நம்பர் இருந்தா கொடு சுந்தர். என அவர் கேட்க




அட்ரெஸ் தெரியாது அண்ணா, ஆனா அந்த பொண்ணோட ப்ரண்ட் எனக்கு தெரியும் அவங்களை கேட்டு நான் போன் நம்பர் வாங்கி தரேன் வாங்க. தனுஷின் மாமாவை அழைத்துகொண்டு சங்கவியை பார்க்க சென்றார்கள்


************


தென்றல் அவளின் வீட்டிற்க்கு வந்து இரண்டு நாள் சென்றுவிட்டது. ஆனால் அவள் மட்டும் தான் அங்கு இருந்தாளே தவிர அவளின் தந்தை தொழிலை பார்க்க காலையில் சென்றுவிட்டு இரவில் வருவார். அவருக்காகவே அவள் இரவில் காத்திருப்பாள் ஆனால், அவர் தாமதமாகவே வருவார். சில சமயம் அவர் வீட்டில் இருந்தாலும், அதிலும் தொழிலை மட்டுமே கவனித்தார். இவளாக சென்று, காஃபி, கொடுப்பது போல் அவரிடம் பேசினாலும், அதிலும் மூன்று வார்த்தைகளுக்கு மேல் செல்லாது.



அவளுக்கு உள்ளுக்குள் வேதனையாக இருந்தாலும், இன்னும் சிறிது நாட்கள் அவருடன் இருந்துவிட்டு பெரியப்பாவின் வீட்டுக்கு சென்றுவிடலாம் என அவள் எண்ணிருந்தாள்.



எதை எதையோ நினைத்துகொண்டு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். எதர்ச்சையாக தென்றலின் அறையை தாண்டி செல்லும் போது அவள் தூங்குவதை பார்த்தார் தினகரன். அவளின் அறைக்கு சென்று, அவளின் அருகில் அமர்ந்து தலையை கோதிவிட்டார். அவரின் மனதிலும் மகளின் மீது பாசம் இருந்தது ஆனால் அதை வெளிகாட்டிகொள்ளவில்லை. அவரது பாசத்தை, அவள் மேல் காட்டாமல் அவள் விருப்பபட்டத்தை அவளுக்கு தெரியாமல், அவர் நிறைவேற்றுவார்.




அப்போது தான், அவளின் காதில் இருந்த ஹெட்செட்டை எடுத்து பார்த்து அவரின் காதில் வைத்தார், அதில்

“ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு

கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்
அடடா தெய்வம் இங்கு வரம் ஆனதே
அழகாய் வீட்டில் விளையாடுதே
அன்பின் விதை இங்கே மரம் ஆனதே ...............
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே......
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே.......
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே

ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு




ஒவ்வரு வரியும் அவள் தந்தைக்காக நினைத்து உருகி கேட்டுகொண்டே தூங்கிக்கொண்டிருந்தாள்.



அந்த பாடலை கேட்டதும், அவருக்குமே மகளின் மீதுள்ள பாசத்தை இப்பொழுதே வெளிகாட்டிவிடும் வேகம் இருந்தது. ஆனால் அவரின் குணம் அதை தடுத்தது.



”பாசம் என்று வந்துவிட்டால், கெட்ட குணம் கொண்டவனை கூட நல்ல மனிதராக மாற்றிவிடும். அது போல் தான் தினகரன், யார் மீது பாசம் வைத்தாலும் அதை வெளிகாட்டிகொள்ளவில்லை.”
மனைவி இறந்த பின் தன்னையே தனிமைப்படுத்திகொண்டார். மனைவியின் நினைப்பில் இருந்தவர் தொழிலில் தன் கவனத்தை மாற்றிகொண்டார். மகள் மீது கூட அவர் கவனம் திரும்பவில்லை, அதனால் தான், அண்ணணின் கவனிப்பில் தென்றலை விட்டுவிட்டார்.



அதன் பின் அவளை இரண்டு மாதம் அல்லது நான்கு மாதம் கழித்தே பார்க்க போவார். அதிலும் தொழிலில் சில முக்கிய விஷயங்கள் அண்ணின் முடிவு கொண்டு எடுப்பதால்.



அனைத்தையும் நினைத்து பார்த்தவரின் கையை, தென்றல் பற்றிகொண்டு தூங்குவதை உணர்ந்து அவர் லேசாக விலக்கி கொண்டு, செல்போனையும், ஹெட்செட் தனியாக எடுத்து டேபில் இல் வைக்கும் போது, போனில் மெசேஜ் டோன் வந்தது. போனை அன்லாக் செய்து பார்க்கும் போது, போனில் ஸ்கீரின் சேவரில், தினகரனும், தென்றலின் அம்மாவும் சேர்ந்து எடுத்த போட்டோ இருந்தது. அதைப்பார்த்தது, அவருக்கு ‘மகளைவிட்டு ரொம்ப தூரம் விலகிருந்துவிட்டோம் என புரிந்தது’ என நினைத்துகொண்டு அவர் போனை வைத்துவிட்டு அறையைவிட்டு சென்றுவிட்டார்.



***************



திடிருனு சென்னை கிளம்புறேனு சொன்னா என்ன அர்த்தம் சிவா. உனக்கும், தென்றலுக்கும் கல்யாணம் செய்ய இன்னும் ஒரு வாரம் இருக்கு. இந்த நேரம் சென்னை போகனுமா? என பார்வதி கேட்க.
ஆமா, அம்மா... போய் ஆகனும், வேலை கொஞ்சம் முடியனும். அதுக்காக என்னை என் கம்பெனில இருந்து கூப்பிடுறாங்க என் டிம் லீடர்.


இப்போ போனா, எப்ப வருவா சிவா... இரண்டு நாள்ல வந்திருவியா. இல்லை கல்யாணத்துக்கு முதல் நாள்ல வருவியா.



வந்திருவேன் சீக்கிரம்... என ஒரு வார்த்தையில் முடித்துகொண்டான்.
பார்வதி மட்டுமே பேசிகொண்டிருந்தார், மேகலையோ அங்கு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டிருந்தார். அவருக்கு எப்பொழுது தன் குடும்ப வாரிசு இந்த தனுஷ் இல்லை என தெரிந்ததோ, அப்பொழுது இருந்து தனுஷிடம் பேசமுடியவில்லை.




அவனுக்கு குற்ற உணர்வாக போனது இன்னும் எத்தன நாட்கள் இப்படி மற்றவரின் இடத்தில் இருந்தது நடிப்பது. அவன் சென்னை கிளம்புவது கூட வேலையின் காரணமாக தான். அவன் எடுத்த லீவ் முடிந்துவிட்டது இதற்க்கு மேல் அவன் லீவ் எடுத்தால் அவனது வேலை போகும். அதனால் தான் அவன் சென்னை கிளம்புகிறான்.




‘சரி சிவா பார்த்து போயிட்டு வா... ஆனா சீக்கிரம் வந்திரனும். நாதனுக்கும், செல்வராஜூக்கும் அவன் ஏற்கனவே சொல்லிவிட்டான் அதனால் அவர்களிடம் தலையசைப்பில் விடைபெற்றான். அவனுக்கு தெரியாது, அவன் சென்னையில் இறங்க அவனது அக்கா, மாமா நாதனின் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பது.



***********



கௌதமும், கௌசியும் புதிய வாழ்க்கையை நன்றாக வாழ தொடங்கினர். ஒரு வாரம் கழித்து அவனது வேலையின் காரணம் அவன் கோவை செல்ல வேண்டியது இருந்தது. அதற்கான பைல், பென் ட்ரைவ் போன்ற அத்தியாவசிப் பொருள்களை எடுத்து வைத்துகொண்டிருந்தான்.



”உங்க ட்ரெஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டேன்ங்க. இந்த ட்ராலில உங்க நார்மல் ட்ரெஸ், அப்புறம் இந்த ட்ராலில உங்க ஆபீஸ்க்கு போட்டு போற ட்ரெஸ். அப்புறம் இந்த பேக்ல சேவிங் செட், சோப், ப்ரஸ் பேஸ்ட், இருக்கு. எல்லாமே எடுத்து வைச்சுட்டேன்”. அவனிடம் சொல்லிகொண்டிருந்தாள்




”தாங்க்ஸ் கௌசி... அப்புறம் உனக்கு இங்க இருந்து பொழுது போகலைனா, அம்மா கூட நம்ம வீட்டுக்கு போயிட்டு இருந்துட்டு வா. அப்போ அப்போ கால் பண்ணுறேன். ஒழுங்க சாப்பிடு, நல்லா ரெஸ்ட் எடு சரியா”.



”ம்ம்... சரி... அம்மா வீட்டுக்கு போகனும் தோனுச்சுனா போறேன். இல்லனா இங்கயே இருக்கேன், நீங்க வந்த பின்னாடி போயிக்கலாம்.
உன் இஷ்டம்... அம்மா, அப்பாவ பார்த்துகோ நான் கிளம்புறேன்”. என அவர்களின் அறையில் இருந்து இருவரும் கீழ் இறங்கி வந்தனர்.
சரிப்பா, சரிம்மா... நான் கிளம்புறேன்... அவளை பார்த்துகோங்க. நீங்களும் நேரத்துக்கு சாபிடுங்க. என சொல்லிக்கொண்டு அவன் கோவைக்கு சொல்லும் பேருந்தில் ஏறாமல் சென்னை பேருந்தில்
ஏறினான்.



***************



சங்கவியிடம் தென்றலின் போன் நம்பரையும், அட்ரெஸையும் வாங்கி கொண்டு தென்றலை தொடர்பு கொண்டு அவள் இருக்கும் இடத்துக்கு தேவியுடன் சென்றார்கள்.


‘தனுஷ் கிளம்பி இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. மேகலையும், நாதனும் வாசலில் வந்து நிற்க்கு காரை பார்த்தனர். அதில் இருந்து தேவியும், தனுஷின் மாமாவுமான சூர்யா, மற்றும் சுந்தர்.’



”யாரு நீங்க... யாரை பார்க்க வந்திருகீங்க... உங்க முகமே எங்களுக்கு புதுசா. என மேகலை வாசலுக்கு சென்று அவர்களை பார்த்து கேட்க.
வணக்கம் பாட்டி... நாங்க சென்னையில இருந்து வரோம். இவ என் மனைவி, இவன் என் தம்பி மாதிரி பேர் சுந்தர்”.



”இங்க தனுஷ் இருக்கானா? நாங்க அவனை பார்க்கனும்”.



”அந்த பையனுக்கு நீங்க என்ன வேணும்?”



”அவன் என் கூடபிறந்த தம்பி பாட்டி. அவனை தேடி தான் நாங்க இங்க வந்தோம்”. என தேவி சொல்ல


மேகலைக்கு அதிர்ச்சியாக இருந்தது, இப்பொழுது தான் பார்வதி மருத்துவமனை வாசம் முடிந்து வந்துள்ளார். அதற்கடுத்த்து இன்னொரு அதிர்ச்சி அவளுக்கு வேண்டுமா. சிவா இடத்தில் தனுஷ் தான் இத்தனை நாள் இருந்தான் என தெரிந்துவிட்டால் என்ன ஆவது. என அவர் கலங்கி நிற்க



’வாங்க தம்பி, வாம்மா... நீங்க தனுஷோட குடும்பம் தானே. எனக்கு தெரியும் நீங்க அவனை தேடி இங்க வருவீங்கனு, உள்ளே போய் பேசலாம் ஏன் வாசல்ல நிக்குறேங்க. மேகலை உள்ளாற போய் இவங்களுக்கு குடிக்க எதாவது எடுத்து வா.’ சூழ்நிலையை சரியாக கையில் எடுத்துகொண்டார் நாதன்



’என் தம்பிய பார்க்கனும்... அவனை கூப்பிடுங்க தாத்தா.’ என தேவி சொல்ல



”தனுஷ் சென்னை போயிருக்கான் மா... வர்ரதுக்கு இன்னும் ஒரு வாரம் ஆகும்னு சொல்லிருக்கான்”.



ஏன்? என சூர்யா கேட்க



”முக்கியமான வேலை இருக்குனு சொல்லிட்டு போனான். என்ன வேலைனு எங்களுக்கு தெரியாது”.



‘அவன் ஏன் இங்க இருந்தானு சொல்ல முடியுமா.’ சுந்தர் கேட்க
நாதன் முதலில் இருந்து சொல்ல ஆரம்பித்தார். தனுஷ், சிவாவையும், அவனது காதலியயும் ஆக்சிடண்ட் ஆனா இடத்தில் இருந்து மீட்டு, மருத்துவமனையில் சேர்த்து பின் அவனது மாமன் மகனான, கௌதமிடம் நிலையை கூறி. அவர்கள் வந்தபின் அவர்களிடம் அவ்விருவரையும் ஒப்படத்துவிட்டு, அவன் சென்றது.



பின் தனுஷை தேடி, அவர்கள் அவனது வேலை பார்க்கும் இடத்திற்க்கு சென்று அவனிடம் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக சிவாவின் இடத்தில் நடிக்க வைத்துகொண்டிருப்பது வரை நாதன் சொல்லிமுடித்தார்.



இவையனைத்தையும் பார்வதி கேட்டுவிட்டார் என யாருக்கும் தெரியாது.


*************


’என்னால முடியாது தனுஷ்... ஏற்கனவே நாங்க சிவா, தரணிதாவை இழந்துட்டு தவிக்குரது போதாத. இப்போ உங்க உயிரையும் பனயம் வச்சு இந்த பெண்ட்ரைவ்ல இருக்குற விஷயத்தை டெலிகாஸ்ட் பண்ணா, அடுத்த நொடி உங்களை கண்டுப்பிடிச்சுடுவான் அந்த முத்துவேலவன்.’
அவன் செய்யிற தப்பு இன்னும் நிறையா இருக்கு. அது எல்லாம் இந்த பெண்ட்ரைவ்ல இருக்கு. மருத்துவமனை மட்டும் இல்லை, ஒட்டுமொத்த மக்களையும் அவன் கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்க போறான். அதுக்கான ஆதாரம் இதுல தான் இருக்கு தேவா.



”ஆமா, தேவா... தரணிதா இந்த பெண்ட்ரைவ இறக்குறதுக்கு முன்னாடி தனுஷ் கையில கொடுத்துருக்காங்க”. என கௌதமும் சேர்ந்து சொல்ல.
தேவாவுக்கு தான் என்ன செய்வதென்று தெரியவில்லை.



கொஞ்சம் யோசித்தவன், கௌதம் கையில் வைத்திருந்த பெண்ட்ரைவை கை நீட்டி வாங்கி அதில் இருப்பதை பார்த்துவிட்டு அதை உடனடியாக முக்கிய சேனல்களுக்கு அவன் மெயில் செய்தான். அது மட்டுமல்ல, நாட்டில் உள்ள டாப் சேனல்களுக்கு இதுவே முக்கிய செய்திகளாக போட வேண்டும் என வலியுறுத்தி அவன் அந்த வீடியோவை அனுப்பி வைத்தான்.




நீங்க சொன்ன மாதிரி நான் செய்துட்டேன், ஆனா இதோட விளைவுகள் இன்னும் கொஞ்சம் நேரத்துல நமக்கும் தெரியும் ஆனா அந்த வேலவன் சும்ம இருக்கமாட்டான். அதனால நீங்க இரண்டு பேரும் உடனே இங்க இருந்து கிளம்புங்க.



நான் இந்த வீடியோவ சிவா மெயில் ஐடில இருந்து தான் மற்ற சேனலுக்கு அனுப்பிருக்கேன். வேலவனுக்கு தெரிஞ்சாலும் இறந்த்வனை எப்படி தேடுவான். கொஞ்சமே கொஞ்சம் தான் நாம பாதுகாப்பா இருக்க முடியும் அந்த கொஞ்ச நேரத்துல நீங்க பாதுகாப்பா இங்க இருந்து போங்க. என்றான் தேவா




‘ரொம்ப நன்றி தேவா... எங்களா முடிஞ்ச அளவுல மக்களை பாதுக்காப்பா காப்பாத்த முடிஞ்சது அதுவும் கூட தரணிதா எடுத்து வைச்சிருந்த பெண்ட்ரைவால. இனி நாங்க நிம்மதியா இருப்போம்.’ கௌதம் சொல்ல



அன்றையா நாளில் ப்ரேக்கிங் நியூஸாக வேலவன் செய்து வந்த தொழில் அனைத்து வருமான வரித்துறையிரனால் சுற்றி வளைக்கப்பட்டது. அவனது மருத்துவமனை, பேக்ட்ரி, ஐடி கம்பெனி முதல்கொண்டு ஐடி ரெய்டு சோதனைகள் நடந்துகொண்டிருந்தது.




‘அவனது சொத்து மதிப்பும், மற்ற தொழிலில் இருந்து வந்த பணம் அனைத்து தவறான முறையிலும், மக்களின் உடலுறுப்புகளை திருடி, வெளிநாட்டிற்க்கு விற்றதாகவும். மற்றும் அவனது பேக்டிரியில் பாதுகாப்பு இல்லாமல் தொழிலிலாளர்களை வேலை வாங்குவதும், அதுமட்டுமின்றி பேக்ட்ரியின் ரசயான பொருகளை கையாளுவதற்க்கு எவ்வித பாதுக்காப்பும் தொழிலாளர்க்கு கொடுக்கப்படாமல் அதானால் பாத்திதவர்களின் எண்ணிக்கையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.




கணகில்லாத சொத்துகளை முடக்கி, பேக்ட்ரியை மூடி சீல் வைத்து. அவரின் மருத்துவனை அரசாங்கம் கையில் சென்றுவிட்டது.

உடனடியாக முத்துவேலவனை கைது செய்தனர் காவல்துறையினர்.


***********


சிறைசாலையில்


‘வசதியாய் வாழ்ந்தற்க்கும், சக உயிர் என பார்க்காமல் மனிதர்களை பணத்திற்க்கு இறையாகிய வேலவன் கொசுகடியில் வாழ்ந்துகொண்டிருந்தான்.’



”யோவ், உன்னை பார்க்க ஒரு பையன் வந்திருக்கான்.” என ஜெயிலர் சொல்லிவிட்டு செல்ல


‘அவன செய்த குற்றத்திற்க்கு அவனது குடும்பமே அவனை காரி துப்பியது. அவனது பிள்ளைகள் இருவரும் அவனை பார்க்காமல், ஜாமீன் கூட அரசு வழங்ககூடாது என அவனது பிள்ளைகள் வழக்கு போட. வேலவனுடன் சேர்ந்து அவனது பார்ட்னர்களும் சேர்த்து கைது செய்யப்பட்டனர்.’



“நீங்க யாரு”



‘என்ன வேலவன், ஜெயில் வாழ்க்கை எப்படி இருக்கு. சாப்பாடு எல்லாம் நல்லா போடுறாங்களா... இல்லை ஸ்பெல்லா போட சொல்லவா.’



”கண்களை சுருக்கி அவனை பார்த்தான் வேலவன். எங்கயோ பார்த்த முகம் ஆனால் தெளிவாக தெரியவில்லை.”



‘என்ன, என்னை நியாபகம் இல்லையா... கொஞ்சம் ஆறு மாசம் முன்னாடி பெங்களூர் ஹைவேல என்னையும், என் காதலியையும் கொன்னேல.’ என அவன் எடுத்துகொடுக்க



“சிவா...” அவன் அதிர்சியாக சொன்னவன் முன் அன்றைய நாள் கண் முன் விரிந்தது.



பேருந்து முன் சுற்றி வளைத்து நின்ற காரில் இருந்து இறங்கிவர்கள். அந்த பேருந்தில் ஏறி, சிவாவையும், தரணிதாவை தேடினார்கள்...



‘இங்க இல்லை’ அடியாள் ஒருவன் சொல்ல



டேய் அவங்க ரெண்டு பேரும் இந்த இடத்தைவிட்டு எங்கயும் போகமுடியாது. நல்லா தேடுங்க டா என இன்னொருவன் சொல்ல.
பேருந்தில் இருந்த அனைவரையும் கீழ் இறக்கிவிட்டு, அவர்களை தேடியவர்களில் ஒருவனை பின்புறமாக தாக்கினான் சிவா.



சத்தம் கேட்டு, சிவாவை தாக்க மற்ற அடியாட்கள் வந்துவிட்டனர். அவனால முடிந்த அளவு சண்டை போட்டுகொண்டிருந்தான்.
இன்னொருவனை அடிக்க பாயும் போது சிவாவின் முதுகில் தான் கொண்டு வந்திருந்த கத்தியை சொருகினான் வேலவன்.



அதுவரை மறைந்திருந்த தரணிதா, ‘சிவா….’ என அலறிகொண்டு முன் வர, அவளை இன்னொருவன் பிடித்துகொண்டான்.



ப்ளீஸ் என் சிவாவ விட்டுறு... நான் தான் அந்த வீடியோவ போட்டோன். என்னை வேனா கொல்லு ஆனா, என் சிவாவ விடு.



‘அவனை நான் விடனுமா... ச்சுச்சு... உச்சு கொட்டியவன் அவள் முன்னாடியே சிவாவை சரமாறியாக குத்தினான். கிட்டதட்ட ரத்த வெள்ளத்தில் அரை உயிராக இருந்தான் சிவா.’
சிவா... சிவா... என அவள் துடிக்க.



‘நீ பத்திரிக்கையில வேலை பார்க்குறதுக்காக நான் என்ன தப்பு செய்யிறேனு உன்னை யாரு டி வீடியோ எடுக்க சொன்னது. அதை எடுத்தது மட்டுமில்லாம தைரியமா நியூஸ் சேனலுக்கு கொடுப்ப. இப்போ பாரு அநியாயமா உன் காதலன் உயிர் போகுது.’ என அவளிடம் பேசிகொண்டே அவளை, கத்தியை கொண்டு வயிற்றில் நாலைந்து முறை குத்திவிட்டு அவர்களை அங்கயே தூக்கி வீசப்பட்டார்கள்.




”அதன் பின் அவர்கள் இறந்துவிட்டதை கவனித்துவிட்டு, அவர்களை அப்படியே போட்டுவிட்டு சென்றனர். அதன் பின் தனுஷின் உதவியால் அவர்கள் மருத்துவமனை சென்றும்,, தனுஷின் கையில் பெண்ட்ரைவ் கொடுக்கும் வரையில் அவர்கள் உயிர் இருந்தது. அதன் பின் அவர்கள் இருவரும் இறந்தது, அவனை தேடி வந்த செல்வராஜூம், கௌதமும் சொல்லிய பிறகே தான் தனுஷ்க்கு தெரிந்தது.”




’என்ன ப்ளாஸ்பேக் முடிஞ்சதா... உன்னை எல்லாம் உயிரோட கொல்லனும் எனக்கு ஆசை. ஆனா, அப்படி செஞ்சா உனக்கும், எனக்கு என்ன வித்தியாசம் சொல்லு. இப்படியே உன் வாழ்நாள் முழுவதும் நீ ஜெயில்ல கிடந்து சாவு.’



”உன்னைவிட மாட்டேன் சிவா...” என அவர்களுக்கிடையில் இருந்த கம்பியை வெறித்தனமாக பிடித்துகொண்டு கத்தினான்.’ வேலவன்



‘முடிஞ்சா என் தொட்டு பாருடா...” அவனிடம் சவால்விட்டு சென்றான் தனுஷ்



உண்மையில் சிவா இறந்துவிட்டான் தான் சிவாவின் தோற்றமும் தனுஷின் தோற்றமும் பார்க்க ஒன்று போல் தான் இருக்கும் அதை பயன்படுத்திகொண்டான் தனுஷ். ஆனால் இதுவும் நல்லதுக்கு தான் சிவா தான் அவனை பழிவாங்கினான் என அவனை நம்ப வைத்தது.



************************.
 
Top