Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 20.2 final

Advertisement

*********************

அனைவரின் முன் குற்ற உணர்சியில் நின்றிருந்தான் தனுஷ். நாதன் வீட்டில் அனைவருக்கும் அவன் சிவா இல்லை, தனுஷ் என தெரிந்துவிட்டது. செல்வராஜ்,கௌதம், நாதன், மேகலை, பார்வதியை தவிர மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டது. ஆனால் யாரும் எதுவும் அவனை சாடவில்லை, அது தான் ஏன் என தெரியவில்லை அவனுக்கு.

‘என் மகன் இல்லாத குறையை இவ்வளவு நாள் நீ தீர்த்து வச்சுருக்க. ஆனா உன்னையே என் மகனாவே பார்த்த எனக்கு உன் பிரிவ தாங்க சக்தி இல்லை. என் மகன் இந்த உலகத்துல இல்லைனு நான் உணர்ந்தாலும், உன் மூலமா என் மகன் தினமும் என்கிட பேசுனான், என் கையில சாப்ட்டானு, என்கூடவே இருந்தானு உணர்ந்தேன்.’ என பார்வதி அழுகையில் சொல்லிமுடிக்க

”போதும், தம்பி இனி உன் குடும்பத்துல நீ இருக்குறது தான் சரி. உன்னையும், உன் அக்காகிட்ட இருந்து பிரிச்சது போதும். நீ உன் குடும்பத்தோட மகிழ்ச்சியா இரு. ஆனா உன் கல்யாணத்தை மட்டும் எங்க சார்ப நடத்தனும் ஆசை அதுக்கு மட்டும் சம்மதம் சொல்லுப்பா.’ என நாதன் சொல்ல

’தனுஷின் அக்காவிடம் சென்று, ‘உங்க தம்பிய என் மகனா தத்துகொடும்மா. உன் கால்லுல வேனா நான் விழுகுறேன்.’ என செல்வராஜ் கேட்க.

அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியானர்கள்.

“அய்யோ, என்னது இது... என் தம்பிய பிறந்தது முதல் இப்போ வரை வளர்த்துருக்கேன். அவனுக்கு இப்படி ஒரு குடும்பம் கிடைக்க அவன் தான் கொடுத்து வச்சுருக்கனும். என் தம்பிய இனி உங்க மகனா நீங்க நினைச்சுகோங்க.” ஒரு பெற்றோரின் கண்ணீர் இறங்கிய தேவியை பார்த்து சூர்யா வியந்து போனான்.

‘ரொம்ப நன்றிமா,’ என செல்வராஜ் சொல்ல.

”இனிமே, தனுஷ் நம்ம வீட்டு பிள்ளை... நாங்க எல்லோரும் அதை ஏத்துகிறோம்.” என லக்‌ஷ்மியும், ராதாவும் சொல்ல.

‘ஆமா,’ என அனைவரும் சேர்ந்து கூறினார்கள்

”உங்க எல்லாரின் அன்பும் எனக்குனு நினைக்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா, இது எல்லாம் கிடைக்க வேண்டியது சிவாவுக்கு தான். அவனோட இடத்துல என்னை வச்சு பாருக்குற உங்களுக்கும், அவன் இடத்துல இருக்குற எனக்கும் அந்த சந்தோஷ்ம இருக்காது. என்னை சிவாவ பார்க்காம தனுஷா பாருங்க. அப்போ நான் சந்தோஷமா இருப்பேன். சிவாவோட இடத்தை என்னால நிறைப்ப முடியாது, ஆனா தனுஷா நான் எப்போவும் உங்க கூட இருப்பேன்.” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட்டான்.

அனைவரும் தனுஷை ஏற்றுக்கொண்டாலும், மேகலை மட்டும் எதுவும் சொல்லாமால் அமைதியாக இருந்தார். அவருக்கு உண்மை தெரிந்ததில் இருந்து சிவாவின் இடத்தில் தனுஷை வைத்துப்பார்க்க முடியவில்லை. வீட்டின் மூத்த பேரனாக வளைய வந்த சிவாவை இனி பார்க்க முடியாது. ஆனால் புதியவனாக இந்த வீட்டில் இருப்பவனை அவரால் பேரனாக நினைக்க முடியவில்லை.

ப்ரவீன், வருண், கௌசி, அகல்யா, லாவன்யா, பார்கவி என அனைவருக்கும் உண்மை தெரிந்து அவர்களும் தனுஷை ஏற்றுகொண்டனர்.

***************

சாரி அக்கா... உன்கிட்ட சொல்லாம போனதுக்கு.

’எப்போ வந்து சாரினு சொல்லுறாங்கனு பாருங்க.’ தேவி சண்டைக்கு தயாரக.

“அப்போதைக்கு அவங்க என்கிட்ட கேட்ட உதவியை என்னால மறுக்க முடியலக்கா. அதான் உடனே உன்கிட்ட சொல்லாம கிளம்பிட்டேன்.”

‘உன்னை காணம தவிச்சுட்டேன்... தினமும் என்கிட்ட சண்டை போட்டு, உனக்கு பிடிச்சது எதுனு நான் பார்த்து செஞ்சு. இதெல்லாம் விட நீயும், மாமாவும் சேர்ந்து என்னை கேலி பேசுறது எல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன் டா.’

’இப்படியெல்லாம் பேசுனா நீ என் அக்காவ தெரியமாட்ட புதுசா யாரோ என்கிட்ட பேசுற மாதிரி இருக்கு.’

“அதுவும் சரி தான், ஆமா தென்றல் பற்றி ஏன் டா எங்ககிட்ட சொல்லல”

‘அவங்க அப்பாக்கிட்ட சம்மதம் வாங்குன பின்னாடி உன்கிட்ட , மாமாகிட்ட சொல்லலாம் நினைச்சேன் அக்கா. ஆனா, அவகிட்ட சண்டை போடுறடுக்கே நேரம் சரியா இருக்கு. இதுல எங்க உன்கிட்ட சொல்ல முடியும்.’

“ஏன் டா... என்கிட்ட தான் சண்டை போடுறேனா, அந்த பொண்ணையும் விட்டு வைக்கமாட்டீயா?”

“கொஞ்சமாச்சும் தைரியம் வேணும், என்கிட்ட லவ் சொல்லுறதுக்கு தைரியம் இருக்கு ஆனா, அவங்க பேமிலிகிட்ட பேச தைரியம் இல்லை. அதான் இரண்டு சண்டை போட்டேன்.”

“இவ்வளவு சண்டை போட்டு அந்த எப்படி டா உன்கிட்ட இன்னும் காதலா இருக்குறா. ரொம்ப ஆச்சர்யம் தான், நான் அந்த பொண்ண பார்க்கனும் டா.”

“அது தான் அவகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது நான் எவ்வளவு சண்டை போட்டாலும், கோவப்பட்டாலும் என்மேல அவளுக்கு காதல் துளியும் குறையாது. நான் தான் அவளோட பலம், பலவீனம், என்னை ரொம்ப காதலிக்கிறாக்கா அது போதும் எனக்கு.”

“ரொம்ப சந்தோஷம் டா... உன்னை எல்லாம் ஒரு கல்யாணம் பண்ணிகிறதே அபூர்வம். இதுல உன்னை ஒருத்தி காதலிக்கிறா, கண்டிப்பா நான் பார்த்தே ஆகனும்”

“ம்ம்... கூப்பிட்டு போறேன் அவங்க அப்பாகூட இருக்குறா. பார்க்க மட்டும் போகாத அப்படியே கையோடு கல்யாணத்தை எப்போ வைச்சுக்கலானு கேட்டு தேதி குறிச்சுட்டு வந்திருங்க நீயும், மாமாவும்.”

“அதெல்லாம் எங்களுக்கு தெரியும்... ஏங்க அந்த பொண்ணு வீடு உங்களுக்கு தெரியும் தான என்னை கூப்பிட்டு போங்க”

”சரிம்மா... நாளைக்கே போகலாம்.” மனைவியின் முகத்தில் மகிழ்ச்சியை பார்த்த பின்பு தான் அவருக்கு நிம்மதியே.



”பொண்ணையும், மாப்பிள்ளையும் அழைச்சுட்டு வாங்கோ. பொண்ணோட அம்மா, அப்பா, மாப்பிள்ளையோட அம்மா, அப்பா மேடைக்கு வாங்கோ. கன்னிகா தானம் கொடுக்கனும்.” ஐயரின் சொல்லுக்கு தென்றலின் பெரியம்மா, பெரியப்ப வர. அவர்களின் எதிரில் செல்வராஜூம், பார்வதியும் வந்து நின்றனர்.

கூரை சேலை உடுத்தி, தங்க நகைகள் நிறைந்திருக்க.மனதில் காதலனுடன் திருமணம் எதிர்பார்த்தது இதோ இப்பொழுது இன்னும் கொஞ்ச நேரத்தில் நிறைவேற போகிறது. புதிதாக வெட்கம் ஒன்று புதிய உணர்வு ஒட்டிக்கொள்ள, தனுஷின் பக்கத்தில் வந்து நின்றாள்.

தனுஷோ, எப்போவும் போல் அவன் மகிழ்ச்சியை வெளிக்காட்டிகொள்ளாமல் அமைதியாக இருந்தான். ஆனால் தென்றலை மனைவியாக அடைய போகிறோம் என்னும் நிகழ்வு அவன் மனதில் உற்சாகத்தை கொடுத்தது. பட்டு வேஷ்டி சட்டையில் எப்பொழுது இருக்கும் அழக்கு மேல் அழகாய் இருந்தான்.

”மாப்பிள்ளை கையில நீங்க உங்க பொண்ணு கையை பிடிச்சு வையுங்க.” ஆனந்த, நிர்மலாவிடம் ஐயார் கூற.

“ஐயா நீங்க அவங்க பிடிச்சு கொடுத்ததும் உங்க வீட்டு மருமகளோட கையை பையன் கையோட சேர்த்து பிடிச்சுக்கோங்க.” செல்வராஜ், பார்வதியிடம் சொல்ல

“அம்மா நீங்க இந்த புனித நீரை அவங்க பிடிச்சிருந்த கையில கொஞ்சம் கொஞ்சமா விடுங்கோ.”

திருமணத்துல இது சடங்கு, பொண்ணோட கையை, மாப்பிள்ளை மற்றும் மாப்பிள்ளையோட அம்மா, அப்பாகிட்ட ஏன் பிடிச்சு கொடுக்குறாங்கனா, இனி என் மகள் இன்னையில இருந்து உங்கவீட்டு மருமகளாவும், மகளாவும் மனபூர்வமாக கொடுக்கிறோம் அர்த்தம்.

“இந்தாங்கம்மா, தாலியை எல்லார்கிட்டையும் ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்க. அப்படியே பெரியவர்கள் மேடைக்கு வரசொல்லுங்க. மாங்கலய தாரம் பண்ணனும்.” என ஐயர் மாங்கய தட்டை தேவியிடம் கொடுக்க

அதை எடுத்துகொண்டு அனைவரிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு மேடைக்கு வந்தாள்.

“ஐயா, அம்மா இந்தாங்க உங்க கையால மாங்கல்யம் எடுத்துகொடுங்க.” நாதன், மேகலையிடம் மாங்கல்யத்தை எடுத்துகொடுக்க

“நாதன் கையோடு மேகலை கை சேர்த்து மாங்கல்யத்தை தனுஷிடம் கொடுக்க. அவனோ, அவர்களின் ஆசீர்வாத்துடன் மாங்கல்யத்தை வாங்கி தென்றலின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு காதலியாக இருந்தவளை மனைவியாக்கிகொண்டான். மூன்றாவது முடிச்சை கௌசி போட்டாள்.”

அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கினார்கள் மணமக்கள். தென்றலின் தந்தையிடம் சென்று ஆசீர்வாதம் வாங்க, அவரோ, ‘உன்னை ரொம்ப தள்ளி வச்சுட்டேன்மா... ஐம் சாரி தென்றல். என்னைக்கும் நீயும், மாப்பிள்ளையும் நல்லா இருக்கனும்’ அவர் ஆச்சிர்வதிக்க

“நினைச்ச மாதிரி காதலிச்சவனை கல்யாணமும் பண்ணிக்கிட்ட. அதே மாதிரி கூடிய சீக்கிரமும் உன் மாதிரி அமைதியான பொண்ணோ, பையனோ பெத்துகொடுத்து எங்களை கொல்லு பாட்டியாக்கனும் சரியா” என தென்றலின் இரு பாட்டிமார்களும் அவர்களை ஆசீர்வாதம் செய்தனர்

”பொண்ணையும், மாப்பிள்ளையும் அழைச்சுட்டு நம்ம வீட்டுக்கு போகலாம் நல்ல நேரம் முடிய போகுது.” பார்வதியும், லக்‌ஷிமியும் சொல்ல

“ நாங்க வர்றது பாட்டிக்கு அவ்வளவா விருப்பம் இருக்காது அதனால நாங்க என் அக்காவீட்டு கிளம்புறோம்மா”

“ஏன்...” எல்லாரும் அதிர்ச்சியாக கேட்க

“பாட்டி இன்னும் என்னை அவங்க பேரன் இடத்துல வச்சு பார்க்க முடியலை. உண்மை தான், சொந்த பேரன் இருக்க வேண்டிய இடத்துல நீங்க எல்லாரும் என்னை வச்சு பார்க்குறது அதிக பாசம் வச்சுருக்குறவங்களுக்கு பிடிக்காது.”

“பாட்டி, உங்க பேரன் இடத்துக்கு என்னால வரமுடியாது. ஆனா உங்கமேல எனக்கு எப்பவும் ஒரு பாசம் உண்டு. எங்களை உங்க மனசார வாழ்த்துங்க அதுவே போதும். என் கல்யாணம் வரை தான் இங்க இருக்க முடிவு பண்ணேன். அதுகூட பார்வதி அம்மாவுக்காக தான், ஆனா இப்போ நான் என் அக்கா வீட்டுக்கு கிளம்புறோம்.” அவரிடம் சொல்லிவிட்டு மற்றவர்களிடமும்,

“ப்ரவீன், பார்கவி கல்யாணம் வச்சா சொல்லுங்க கண்டிப்பா நான் வரோம்.” அவர்களிடம் சொல்லிவிட்டு சென்னைக்கு சென்றான்.

அவன் சொல்லியதில் தவறு இருப்பதாக யாருக்கும் தெரியவில்லை. அதனால் அவனை பத்திரமாக சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர். ஆனால் பார்வதியானல் மட்டும் அவனின் பிரிவை தாங்க முடியவில்லை.

முதலிரவு அறையில்,

“மாமா ஏன் அமைதியா இருக்கீங்க, அத்தை, மாமாவை விட்டு வந்தது கஷ்டமா இருக்கா மாமா.” தனுஷிடம் கேட்க

“ம்ம்... ஆமா”

“கஷ்டமா தான் இருக்கும்,போக போக சரியாகிடும் பாட்டியும் மனசு மாறி உங்களை பார்க்க வருவாங்க.”

“ம்ம்...”

“சரி நான் தூங்குறேன்... உங்களுக்கு தூக்கம் வர்ரப்போ தூங்குங்க.” அவள் உறங்க செல்ல

“ஹேய்... என்னடி... தூங்குற... இன்னைகு நமக்கு ஃபர்ஸ்ட் நைட்.” அவன் அலற

”அது உங்களுக்கு இப்போ தான் தெரிஞ்சதா.” சாதரணமாக சொல்ல

“சரி... ஏதோ நினைப்புல இருந்திட்டேன். நம்ம் வாழ்க்கையை ஆரம்பிக்கலாமா.” அவளின் கையை பிடித்துகொண்டு கேட்க

”அப்போ ஐ லவ் யூ சொல்லுங்க.”

அவளிடம் இருந்து விலகி, அவனின் கபோர்டில் வைத்திருந்த பெரிய க்ஃப்ட் பாக்ஸை எடுத்து வந்து அவள் முன் வைத்தான். அவளோ, ‘என்ன இது’ கேட்க

பெட்டியை பிரித்து முதலில் அவளுடன் முதல் சந்திப்பில் எடுத்த போட்டோ அதை எடுத்து அவளிடம், “ஐ லவ் யூ தென்றல்” அவனின் காதலை முதல் முறையாக அவள் மனைவியான பின் அவன் சொன்னான்.

“வாவ்... இது நம்ம ஃபர்ஸ்ட் மீட்ல எடுத்தது. ஆனா யாரு இந்த போட்டோ எடுத்தா.”

‘சங்கவி’

அடுத்தடுத்தாக அவன் கிஃப்ட்டில் அவள் ஆச்சர்யமாக பார்க்க. அவனோ ஒவ்வொரு கிஃப்ட்டிற்க்கும் ஒரு லவ் யூ சொல்லிகொடுத்தான் அவளிடம்.

”என்ன இப்போ ஹாப்பியா...”

“இல்ல ஹாப்பி இல்ல”

”அடிப்பாவி... உனக்காக ஒவ்வொரு கிஃப்ட் வாங்கி அதை உனக்கு சர்ப்ரைஸா கொடுத்து லவ் சொன்ன ஹாப்பி இல்லைனு சொல்லுற.”

”எனக்கு இந்த கிஃப்ட் எல்லாம் வேணாம், உங்க காதல் அதை வெளிப்படுத்துற ஒவ்வொரு நாளும் தான் எனக்கும் வேணும், அதுல தான் நான் ஹாப்பியா இருப்பேன்.”

“ஒவ்வொரு நாள் என்ன, ஒவ்வொரு நிமிஷமும் சொல்லுறேன், சொல்லுவேன், சொல்லிட்டே இருப்பேன். உன் சந்தோஷம் இது தானு எனக்கு முதல தெரிஞ்சிருந்தா என் காதலை ஊருல சொல்லிருப்பேன்.” அவளை அணைத்துகொண்டு சொன்னான்

காதல் என்னுள் வராது என சொன்னவனை, இப்பொழுது காதலால் பைத்தியம் பிடிக்க செய்தாள். அவன் மனதில் காதல் இருந்ததை திருமணத்துக்கு பின் சொன்னாலும் அதற்க்கு காரணமாக இருந்த ப்ரவீன், பாருவின் காதல் தான்.

சிவா, தரணிதாவின் உயிர் மக்களை காப்பாற்றுவதில் பிரிந்தாலும், அவர்களின் காதல் காற்றோடு காற்றாக தான் கலந்திருந்தது.

அடுத்தடுத்து அவர்களீன் வாழ்க்கை அழகாக சென்றது. ப்ரவீன், பாருவின் கல்யாணத்தில் அந்த வீட்டின் வாரிசாக கலந்துகொண்டாலும் கல்யாணம் முடிந்து அவர்கள் அடுத்த நாளே கிளம்பிவிட்டார்கள். இம்முறை மேகலை தனுஷை இங்கேயே தங்க சொல்ல, அவனோ ‘உங்களை கொல்லு பாட்டியாக்கிட்டு அப்புறம் இந்த வீட்டுக்கு வரேன் பாட்டி’ என சொல்லிசென்றான்.

தென்றலோடு காதல் கணவனாய் அவன் வலம் வர, அவளோ அவனை கண்டுகொள்ளாமல் சுற்ற வைத்தாள். இறுதியாக தென்றல் தனுஷின் காதல் இளமை காலம் மட்டுமின்றி முதுமையிலும் ”என் இளந்தென்றல்(ன்) ஒரு கவிதையின் காதலர்களாக” இருப்பார்கள்.



முற்றும்………..





 
Top