Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 7

Advertisement

ilakkikarththi

Well-known member
Member
இளந்தென்றலோடு ஒரு கவிதை 7

”இந்த கெமிஸ்ட்ரி, பார்முலா என்னனு கொஞ்சம் பார்த்து சொல்லு தென்றல்.” சங்கவி கேட்க.


”இது ரொம்ப ஈசி சங்கவி...” என அதன் பார்முலா விளக்கத்தை தெளிவாக சங்கவிக்கு புரியும் படி சொல்லிக்கொடுத்தாள்.



“வேதியியல் பற்றி முக்கியமான வேதிவினைகளை, சங்கவிக்கும், அவளது வகுப்பு தோழிக்கும் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கும் போது வேறு வகுப்பு மாணவன் தென்றலை தேடி வந்தான்”.



“இங்க யாரு தென்றல்...” என அந்த மாணவன் கேட்க.




”என்ன விசயம், சொல்லு தம்பி” என சீனியர் மாணவனை தம்பி என அழைத்து கலாய்த்தாள் சங்கவி.



“அவனது முறைப்பை கண்டுகொள்ளாமல், மேலும் ஏதோ பேச போகையில், தென்றல் அவளை தடுத்தாள்.”



“நான் தான் சீனியர்...” என எழுந்து அவனது அருகில் செல்ல. அவனோ, ’இதோ இவங்க தான் அண்ணா... நீங்க தேடி வந்தவங்க’. சுவரின் ஓரம் நின்றுகொண்டிருந்தவனிடம் சொல்லிவிட்டு அவன் அகல. அவள் முன் வந்து நின்றான் தனுஷ்.”




“யாரிடம் இவன் பேசுகிறான் என கொஞ்சம் எட்டிப்பார்க்கையில் அவள் முன் வந்தான் அவளின் பிடித்தமானவன்.”



“ திடீரென்று அவன், அவள் முன் வருவான் என நினைக்கவில்லை. ஆனால் திகைத்து நின்றாள் அவன் முன். அவளது வாழ்வில் கிடைக்க வேண்டிய மொத்த சந்தோஷத்தையும் அவன் கொடுத்திருப்பது போல உணர்வு.”



”அவள், அவனையே பார்த்திருப்பது அவனுக்கு சுகமான உணர்வு. ஆனால் அதை அதிக நேரம் நீட்டிக்கவிடாமல் அவளை, சுடக்கு போட்டு நிகழ் காலத்திற்க்கு கொண்டுவந்தான்.”



“உன்கிட்ட கொஞ்சம் பேசனும்”



” என்ன பேசனும்...” அவள் கேட்க. அவளை தாண்டி பின்னிருப்பவர்களை பார்த்தவன். அவளின் அனுமதி இல்லாமல் அவள் கையை பிடித்துகொண்டு அந்த கல்லூரியின் க்ரவுண்டிற்க்கு அழைத்து சென்றான்.



“திடீரென்று, அவன் தன் கையை பிடிப்பான் என்றும், அவன் உடனே அழைத்து செல்வான் என்றும் அவள் நினத்துப்பார்க்கவில்லை.”




“அவனுடனே தன்னை வாழ்க்கை முழுவதும் அழைத்து செல்லமாட்டானா? என அவள் மனம் ஏங்கும் போது தான் அவள் உணர்ந்துகொண்டாள் அவனை காதலிக்க ஆரம்பித்துவிட்டோம் என்று.”



“க்ரவுண்டிற்க்கு அழைத்து வந்ததும் அவளின் கையை விட்டவன். அவளிடம் ‘ மேடம் ரொம்ப அழகா இருந்த, எத்தனை பசங்க வேணாலும் உன் பின்னாடி சுத்தலாமுனு நினைப்பா?’




“என்ன... என்ன சொல்லுறீங்க”



“எதுக்கு, என்னை பத்தி என் ஆபீஸ்ல விசாரிச்ச.”




“நான் எதுக்கு உங்களை பத்தி விசாரிக்கனும், அதுவுமில்லாம எப்போ உங்களை விசாரிச்சேன்.”




”ஏய், நடிக்காதா... நீ தான் என் ஆபீஸ் வந்து உன் பெயர் சொல்லி என்னை விசாரிச்சுருக்க. அதுக்கு சாட்சி என் ப்ரண்ட் சுந்தர் இருக்கான்.”




“உங்க ஆபீஸ், எங்க இருக்குனு எனக்கு தெரியாது. அதுவும் நீங்க எந்த ஆபீஸ்ல வொர்க் பண்றீங்கனு எனக்கு தெரியது. இதெல்லாம்விட உங்க பேரே எனக்கு தெரியாது.” அவள் விளாவாரிக அவனுக்கு சொல்லிகொண்டு இருந்தாள்.



“இன்னொரு முறை பொய் சொன்ன உன்னை...” என அவள் கழுத்தை நெறிப்பது போல் அவன் செய்கை காட்ட அவளுக்கு பயமாக போனது.”



“டேய்... டேய்ய்... நிறுத்துடா... தனுஷ்...” என சுந்தர் அவனை நோக்கி வர.



“சுந்தர், நீ தான சொன்ன என்னை தேடி ஒரு பொண்ணு வந்தா, என்ன பற்றி விசாரிச்சானு சொன்னியே. ஆனா இவ இல்லைனு சொல்லுறா?”



“அவளோ, இருவரையும் பார்த்துகொண்டு அமைதியாக நடப்பதை பார்த்துகொண்டிருந்தாள்.”



“டேய்ய்... உன்னை ஒரு பொண்ணு விசாரிச்சா தான். ஆனா அது இந்த பொண்ணு இல்லை.” என சுந்தர் பல்லை கடித்துகொண்டு சொல்ல.



“டேய்... இவ பேரு தான் தென்றல். அப்போ நீ சொல்லுற பொண்ணு இவ தானா?” அவன் சொன்னதையே சொல்ல.



“ஆமா தனுஷ்... ஆனா அன்னைக்கு வந்தது இந்த பொண்ணு இல்லை, அது வேற பொண்ணு.” என மறுபடியும் சொன்னான்.



“என்ன சுந்தர் குழப்புற?” தனுஷ் புரியாத நிலையில் இருக்க.



”சுந்தரோ, சாரி ம்மா... இவன் பண்ண தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன், ஒரு சின்ன கன்பூயுஸன்.” அவளிடம் மன்னிப்பு கேட்க.



“அவளோ, என்னனு எனக்கு புரியிரமாதிரி சொல்லுங்க அண்ணா.”



” என் பேர் சுந்தர், இவன் என் ப்ரண்ட் தனுஷ். நாங்க ரெண்டு பேரு ஒரே கம்பெனில தான் வேலை பார்க்குறோம். ஒரு பொண்ணு, எங்க கம்பெனிக்கு வந்து இவனை பத்தி விசாரிச்சுருக்கா என்கிட்ட. அதை நான் இவன்கிட்ட இன்னைக்கு சொன்னதும் இவன் தேடி வந்துட்டான். அவனை தேடி வந்த பொண்ணு இந்த காலேஜ்ல தான் படிக்குறேனு என்கிட்ட சொன்னா. நானும் அதேயே அவன்கிட்ட சொல்லிட்டேன். அந்த கோவத்துலயே அவன் இந்த காலேஜ்கு, அந்த பொண்ண தேடி வந்துடான். ஆனா அது நீயில்லமா. மறுபடியும் நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டுகுறேன்.” சுந்தர் விளக்கமாக சொல்லிமுடித்தான்.



”டேய் ஒழுங்கா அந்த பொண்ணுகிட்ட சாரி சொல்லிட்டு வா. நான் எண்ட்ரன்ஸ்ல வெயிட் பண்ணுறேன்.” சுந்தர் அவனிடம் சொல்லிவிட்டு, அவளிடம் தலையசைத்துகொண்டு விடைபெற்றான்.”




“தனுஷோ, அவளிடம் ‘ என்ன ஏதுனு விசாரிக்காம உன்கிட்ட தப்பா பேசிட்டேன். சா...’ என அவன் சொல்லவருவதற்க்குள்.”




“நான் உங்களை விரும்புறேன்...’ என அவள் காதலை சொல்ல.”



”முதல் முறையா பார்த்தபோ எனக்கு பிடிச்சிருந்தது. அது வெறும் பிடித்தம்னு தான் நினைச்சேன். ஆனா, இரண்டாவது முறை உங்களை பார்த்ததும் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஒருவரா நீங்க எனக்கு தெரிஞ்சீங்க. இப்போ இந்த நிமிஷம் என் கையை பிடிச்சு, இங்க வரை கூப்பிட்டு வரும் போது தான் நான் உணர்ந்தேன் உங்களை நான் காதலிக்க ஆரம்பிச்சுட்டேனு.”



“இப்போ கூட நீங்க என்னை தேடி வரப்போரங்கிறது எனக்கு தெரியாது. ஆனா, நான் உங்களை விரும்பறது மட்டும் உண்மை.”



“அவனோ, ஒற்றை புருவத்தை அழகாக தூக்கி, ‘நீயே வழிய வந்து காதல் சொன்னா, நானும் அப்படியே ஷாக் ஆகி, அப்படியே நானும் உன்னை விரும்புறேனு ஒரு வாரம் கழிச்சு சொல்லனும் எதிர்ப்பார்க்கிறையா?”



“இல்லை... நீங்க சொல்ல வேண்டாம்.”


“புரியாமல் அவன், அவளை பார்க்க.”



”நான் உங்களை விரும்புறேனு, உங்களுக்கு தெரிஞ்சா போதும். நீங்க வந்து என்கிட்ட காதல் சொல்லனும்னு நான் எதிர்பார்க்கலை. ஆனா உங்களோட சின்ன சிரிப்புல உங்க மனசு எனக்கு புரியும்.”



“காதல் படம் நிறையா பார்க்குறேனு நினைக்குறேன். அதான் நிறைய காதல் வசனம் பேசுற. இங்க பாரு, எனக்கு காதல் மேலயும், அப்புறம் பொண்ணுங்க மேலையும் பெரிசா இஷ்டம் இல்லை. அதனால உன்கிட்ட அந்த சின்ன சிரிப்பு கூட நான் காட்டமாட்டேன்.” என அவளிடம் விடைபெற்றான்.



“போகும் அவனையே பார்த்துகொண்டிருந்தவளின் முதுகில் லேசாக தட்டினாள் சங்கவி.”




” என்ன லவ் சொல்லிட்டியா”



” நான் லவ் தான் சொல்லப்போறேனு உனக்கு எப்படி தெரியும்.”



” அதான் நான் உன் பேர் சொல்லி அவன் கம்பெனில போய் விசார்ச்சுட்டுல வந்தேன். ஆனா அவன் தேடி வரமாட்டானு நினைச்சேன். இப்படி, அடுத்த நாளே வருவானு எனக்கு தெரியாது.”



“அப்போ, அது நீ தானா” அதிர்ந்து கேட்க.


“ஆமா, நான் தான்...”



” ஏன் சங்கவி உனக்கு இந்த வேலை.”



“உன் முகமே இரண்டு வாரம் ரொம்ப டல்லா இருந்துச்சு. அதுக்கு காரணம் உன் மனசுக்கு பிடிச்சவன் தான் தெரியும் அதான் என்னால முடிஞ்ச ஒரு சின்ன உதவி. ஆனா உன் ஆளு ரொம்ப கோவம் படுவாங்களா, அதான் ரெண்டு பேர்கிட்ட விசாரிச்சு, இந்த காலேஜ்ல தான் படிக்குறேனு சொன்னா, தேடி வருவான்ல. நீயும் உன் மனசுல இருக்குறதை சொல்லுறதுக்கு இது சரியான நேரமா இருக்கும்.”



“தோழியின் செயல் தவறாக இருந்தாலும், உயிர்தோழிக்காக அவள் உதவியது தென்றலுக்கு பிடித்தது. ‘ரொம்ப தாங்க்ஸ் டி, சங்கவியை கட்டிகொண்டு நன்றி கூறினாள் தென்றல்.



தொடரும்.........
 
Top