Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிக்கார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 1

ilakkikarththi

Member
Member
இளந்தென்றலோடு ஒரு கவிதை 1
” எல்லாத்துக்கும் காரணம், நீ தான்.”


“ நான் என்ன பண்ணேன்”“ நீ மட்டும், நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருந்தா இப்போ நம்ம கல்யாணம் முடிஞ்சிருக்கும்.”“எந்த நேரத்துல என்ன பேசுற தனுஷ்.”“இப்போவும் நான் பேசலனா, அப்புறம் பேச முடியாம போயிடும்...”


”நான் என்ன நிலைமையில இருக்கேனு உனக்கு தெரிஞ்சும் நீ பேசுறது எனக்கு பிடிக்கல””எப்போ பார்த்தாலும், இதையே சொல்லாத தென்றல். இப்போ முடிவா என்ன சொல்லுற.”


“இன்னும் கொஞ்ச நாள் எனக்கு டைம் கொடு தனுஷ். நான் என் அப்பாகிட்ட பேசுறேன்.”


“ இரண்டு முறை உனக்கு டைம் கொடுத்துட்டேன் ஆனா நீ உன் அப்பாக்கிட்ட பேசல. இப்போ மறுபடியும் டைம் கேக்குற.”” சரி தறேன் ஆனா உங்க அப்பா ஒத்துக்கலைனா என்ன பண்ணுவ. சொல்லு?”


“கண்டிப்பா ஒத்துப்பாங்க... எனக்கு நம்பிக்கை இருக்கு”


“ ஆனா எனக்கு இல்லை. ஓகே, நான் உனக்காக சம்மதிக்குறேன்.”


“தாங்க்ஸ் தனுஷ். என அவள் அவனை அணைக்க முயல. அவனோ, ப்ச்சு இது ஒன்னு தான் இப்போ குறைச்சல் நமக்கு.”“சும்மா சும்மா, என்கிட்ட லவ் டைலாக் பேசிட்டு, உன் அன்பான வார்த்தையால என்னையும், என் மனசையும் மாத்தலாம்னு நினைக்காத. நான் எல்லாம் இதுக்கெல்லாம் இரங்க மாட்டேன்.”“உன்கிட்ட நானா வந்து காதலை சொல்லலை, நீயா வந்த என்கிட்ட அன்புனு ஏதோ ஒன்னு காட்டி என்னை விரும்புறதா சொன்ன. ஆனா நான் உன்கிட்ட என்ன சொன்னேனு கொஞ்சம் நினைச்சு பாரு.”“அவனின் பேச்சில் கொஞ்சம் திகைத்தாலும், அவனின் குணமே இது தானே என அவள் மனதை தேற்றிகொண்டால்”.“ நான் கிளம்புறேன் தனுஷ், அவள் செல்ல முயல்கையில். அவளின் கை பிடித்து நிறுத்தினான்.”“அவள் என்ன என்பது போல் பார்க்க.”


“நான் நாளைக்கு கிராமத்துக்கு போறேன். திரும்பி வரதுக்குள்ள உன் அப்பா சம்மதிச்சிருக்கனும். இல்லைனா நான் வேற முடிவு எடுக்க வேண்டி வரும்.”
“வேற முடிவுனா...” அவள் கண்கள் இடுங்க கேட்க.“நம்ம வாழ்க்கையோட கடைசி முடிவா கூட இருக்கலாம்.” என சொல்லிவிட்டு அவளை கடந்து சென்றுவிட்டான். ஆனால் அவள் மட்டும் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தால்.“அவன் பேசியதில் மொத்தமும் அதிர்ந்து நின்றால். இப்படி அவன் வாழ்க்கையோட கடைசி முடிவு என அவன் சொன்னதும் அவளுக்கு திக்கென்று போனது. அவனையே உலகம் என நினைத்து இருந்தவள், இப்படி அவன் பேசியதில் எங்கே அவன் தன்னைவிட்டு நீங்கி சென்றுவிடுவானோ என பயம் அவளை பிடித்துகொண்டது”.

“அவளிடம் பேசிவிட்டு வந்தவனின் மனது மிகவும் கவலையில் இருந்தது. தான் எவ்வளவு கோபம் கொண்டாலும், திமிராக இருந்தாலும், அவள் தன்னிடம் காட்டும் இயல்பான அன்பு அவனின் கோபத்தை குறைத்துவிடும். ஆனால் அவனின் குணத்தை என்றும் மாற்றமுடியாது என அவள் பல சமயங்களில் நினைத்து இருக்கிறால். அதையும் அவனிடமே சொல்லியும் இருக்கிறால்.”


”அவளோட இயல்பே அது தானே... தேவையில்லாம நான் அவகிட்ட கோபத்தை காட்டிட்டேன்... இப்போ அவ என்ன பண்ணிட்டு இருப்பா.” என ஒரு மனது நினைக்க.
“நான் மட்டும் இப்படி பேசலைனா அவ முடிவெடுக்க மாட்டா. அவங்க அப்பாகிட்டயும் பேச மாட்டா... நல்லது தான் யோசிக்கட்டும் அப்போதாவது என்னைப் பற்றி பேசுவாள்.” என இன்னொரு மனது நினைத்துகொண்டிருந்தது.
“ எங்க போயிட்டு வர தென்றல்.”“ என் தோழிய பார்த்துட்டு வரேன் பெரியப்பா.”“ யாரு, சங்கவியா தென்றல்”“ இல்லை பெரியப்பா, கல்பனா”


“ஓ... சரி...”


“தென்றல், சாப்பிட வா...” அவளின் பெரியம்ம அழைக்க.
“ இல்லை பெரியம்மா, நான் சாப்பிட்டேன்...” அவரிடம் சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டால்.“ பாவம் பிள்ளை படிப்பு படிப்புனு அதுலயே மூழ்கி கிடக்கு, சீக்கிரம் இந்த படிப்பு முடிஞ்சா கல்யாணம் பண்ணி வைக்கனும்ங்க.” கணவரிடம் புலம்ப.“ தென்றலுக்கு வயசு இருக்கு நிர்மலா இப்போவே கல்யாணம், குடும்பம் ஆகிட்ட அவளுக்கு தான் சிரமம்.” மகளுக்கு பரிந்து பேசினார்.
“ தனது அறைக்கு வந்தவள், தனுஷிற்க்கு போன் செய்ய, அவனோ, அவளின் அழைப்பை எடுக்காமல் இருந்தால்.”
”அவளோ விடாமல் முயற்சிக்க, அவனோ பிடிவாதமாக எடுக்காமல் இருந்தான்.”
“அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் அவள், ஆனால் அவனோ அவள் அனுப்பிய செய்தியை பார்க்காமல் ஒதுக்கினான்.”” இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு, தனது தந்தையிடம் பேசினால் மட்டுமே உண்டு. ஆனால் தந்தை எப்படி எடுத்துக்கொள்வார் என்ற பயமும் அவளுக்கு உண்டு.”“இதை எல்லாம் விட, வரும் வாரம் அவளின் தாய் சுதாவின் நினைவு நாள். அன்று குடும்பமே ஒன்று கூடும். அப்பொழுது பேசினால் அனைவரும் தந்தையை சம்மதிக்க வைத்துவிடுவார்கள் என அவள் நினைக்க.”“அவள் அனுப்பிய மெசேஜ், போன்கால் எதையும் அவன் கவனித்தும் கவனிக்காமல், அவன் சொந்த ஊரான் தேனிக்கு செல்வதற்க்கு பேருந்து நிலைத்திற்க்கு நண்பனுடன் வந்தான்.”
“என்ன மச்சான் சிஸ்டரோட காலையில சண்டை போட்டயா?”


“ஏன் கேக்குற சுந்தர்.”


” உன் முகம் சரி இல்லை அதான் கேட்டேன்.”


“ எப்படி பேசினாலும், அவளோட நிலையில வந்து நிக்கிறா சுந்தர். அதான் என் கோபத்தை அவகிட்ட கொஞ்சம் அதிகமா காட்டிட்டேன், அப்போவாச்சும், யோசிச்சு பார்ப்பா.” என அவன் சுந்தரிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது தனுஷிற்க்கு மீண்டும் அவள் போன் செய்தால்.“தனுஷோ, அதை சைலெண்டில் போட போக, அதை தடுத்த சுந்தர், பேசுமாறு சொன்னான்.”


“நண்பனின், சொல்லை மதித்து, போன் அட்டென் செய்து காதில் வைத்தான்.”“என்ன தனுஷ் ஏன் என் போன், மெசேஜ் எதையும் எடுக்கலை நீங்க. இன்னும் கோபம் குறையலயா?” அவள் பேச, அவனோ அமைதியாக இருந்தான்.“ சுந்தர் அவனுக்கு தண்ணீர் பாட்டில் வாங்க சென்றான். நண்பன் சென்ற பின், ‘ இப்போ என்ன டி உனக்கு பிரச்சனை”. அவன் கோவத்தை காட்ட.“ ஏன் போன் எடுக்கலை.” அவள் அமைதியாக கேட்க.


“ஊருக்கு கிளம்புறேனு காலையில சொல்லிட்டு தான வந்தேன். அப்புறம் என்ன”“ அவளோ, அமைதியாக இருந்தால் எதுவும் பேசாமல். கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது.”“இப்போ என்ன, உன்கிட்ட சொல்லிட்டு தான் நான் எங்கயும் போகனுமா. என்று அதற்க்கு மேலும் அவளிடம் கோவத்தை காட்ட, அவளோ பாதியிலேயே போனை கட்செய்துவிட்டால்.”“அவளிடம் கோவத்தை காட்டினாலும், அவன் மனது அவளுக்காகவே ஏங்க செய்தது. என்ன ஆனலும் அவள், அவனின் காதலி தானே, அவன், அவளின் காதலன் தானே” என்ற நினைப்பு.“ போனை கட்செய்துவிட்டதை அறிந்து, மீண்டும் அவளுக்கு அவன் போன் செய்ய, அவளோ அதை உடனே எடுத்து, அவனிடம் பேசாமல் அமைதியாக இருந்தால்.”இப்போ என்ன டி உனக்கு பிரச்சனை”


”ஐ மிஸ் யூ மாமா” என அவள் சொல்ல.


” அவனோ, கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தான். அவன் எதிர்பார்த்த வார்த்தை தான்.”
” என்ன இப்படி எல்லாம் சொன்னா நான் சமாதானம் ஆகிருவேனு நினைக்குறையா.”“ கண்டிப்பா இல்லை தனுஷ், என்னமோ நான் உங்களைவிட்டு தூரமா போகுற மாதிரி இருக்கு, அதான் சொன்னேன்.””நான் ஊருக்கு கிளம்புறேன்,” அவளிடம் இனி பேசினால் அவளின் அன்பை காட்டி தன் கோவத்தை குறைத்துவிடுவாள் என வேகமாக போனை கட் செய்துவிட்டான்.“என்ன சிஸ்டர் அஹ சமாதானம் பண்ணிட்டயா...” சுந்தர் கேட்ட கேள்வியில் சிரிப்புடன் பதில் சொல்லிவிட்டு அவனது ஊருக்கு புறப்பட்டுவிட்டான்.”“ நிர்மலாவோ, எதுவும் சாப்பிடாமல் இருக்கும் தென்றலுக்கு பால் எடுத்துகொண்டு அவளது அறைக்கு சென்றார். ஆனால் அவளோ, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தால்.”“அவளின் தலைய கோதிவிட்டு மெதுவாக அவளை எழுப்பினார். ‘ தென்றல் எழுந்திரும்மா... எதுவும் சாப்பிடாம படுத்தா வயிறு வலிக்கும், எழுந்து பால் சாப்பிட்டு தூங்கும்மா’ என அவளை எழுப்பினார்.“தூக்கத்திலோயே எழுந்து அவளது பெரியம்ம கொடுத்த பாலை குடித்துவிட்டு மீண்டும் தூங்கிவிட்டால்.”
”தூங்கியவளின் முகத்தை பார்த்துகொண்டிருந்தவரின் மனதில் நிலைகொள்ளாத எண்ணங்கள் வலம் வந்தன. அவற்றை எல்லாம் நினைத்து பார்த்தவரின் மனம் மிகவும் வருந்தியது.”“அனைவரிடமும் அன்பு மட்டும் காட்டும் இவள் எப்படிதான் வாழ்க்கையை உணர்ந்து வாழப்போகிறாளோ. கோபம் காட்டும் மனிதரிடம் கூட அன்பை எதிர்பாரமல் கொடுக்கும் இவளின் மனம் யாருக்கும் வராது.””தாயை இழந்த கவலை கூட யாருக்கும் காட்டமல் தன் மனதுக்குள் வைத்துகொள்ளும் இவளின் பழக்கம். தந்தையின் கண்டிப்பை கூட மதித்து நடக்கும் தென்றல் தன் வயிற்றில் பிறக்காமல் போயிவிட்டாளே என்ற கவலை அவருக்கு,”“மனைவியின் தோளை தொட்டு திருப்பினார் ஆனந்தன். ‘என்ன நிர்மலா, பால் குடிச்சுட்டாளா தென்றல்.’


“ம்ம்... குடிச்சுட்டாங்க...”


“அப்புறம் ஏன் இன்னும் இங்கயே இருக்க...”
”அவர் கேட்ட கேள்வியில், முந்தானையில் வாயை மூடிக்கொண்டு கண்ணீர் சிந்தினார்.”“ மனைவியின் திடீர் அழுகையில், பதறி போய் என்னவென்று கேட்டார்.”“ அவர் மனதில் நினைத்தைஅ கூறி மேலும் அழுதார். மனைவியை சமாதானம் செய்து அழைத்து சென்றார்.”
தொடரும்…..
 
Banumathi jayaraman

Well-known member
Member
உங்களுடைய "இளந்தென்றலோடு
ஒரு கவிதை"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
இலக்கிக்கார்த்தி டியர்
 
Last edited:

Banumathi jayaraman

Well-known member
Member
மிகவும் அருமையான பதிவு,
இலக்கிக்கார்த்தி டியர்
 
Last edited:
Advertisement

Advertisement

Top