Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிக்கார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 5

Advertisement

ilakkikarththi

Well-known member
Member
இளந்தென்றலோடு ஒரு கவிதை 5

“அன்று சுதாவின் திதி நாள். ஐயர் மந்திரம் ஓதிக்கொண்டிருக்க, ஓமக்குண்டத்தின் அருகில் தினகரனும், தென்றலும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பின் நிர்மலாவும், ஆனந்தனும் அமர்ந்திருந்தனர். கொஞ்சம் தள்ளி, தினகரன், ஆனந்தனின் குடும்பமும், இருந்தனர்.”




“மந்திரம் ஓதி முடித்து, திதிக்கு படைக்கப்பட்ட அரிசி, எள் பிண்டத்தை, நதியில் கரைத்துவிட்டு, இறந்தவருக்கு பிடித்த உணவுகளை சமைத்து, காகத்திற்க்கு படைக்குமாறு சொல்லிவிட்டு சென்றார் ஐயர்.”



“ தினகரனின், தாய் சுசீலா, ‘ நான்காவது வருஷம் திதியும் நல்லபடியா கொடுத்தாச்சு தினகரா, அடுத்து என் பேத்திக்கும், சீக்கிரம் நல்லபடியா கல்யாணம் நடக்கனும். அதுக்கான வேலைய ஒரு நல்ல நாள் பார்த்து ஆரம்ப்பிக்கனும்.”




“அம்மா, தென்றல் இப்போ தான் கடைசி வருடம் படிக்குறா. படிக்கும் போது எதுக்கு கல்யாணம். படிச்சு முடிச்சதும் பார்க்கலாம்.’’ என் ஆனந்தன் சொல்ல.




“ இல்லை அண்ணா, அம்மா சொல்லுறதும் சரி தான். தென்றலுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய நேரம் தான்.’’ என தினகரனும் சேர்ந்து சொல்ல.



“ சுசீலாவின் தங்கை(கற்பகம்), அதாவது தென்றலின் சின்ன அம்மாச்சி, ’உன் தொழில் மாதிரி நீ நினைச்ச நேரம் இதுல முடிவெடுக்க முடியாது. இது கல்யாணம், அதுவும் நம்ம வீட்டு முதல் பெண் வாரிசோட முதல் கல்யாணம். பார்த்து பாக்குவமா செய்யனும். எடுத்தொ, கவிழ்த்தோம்னு செய்யக்கூடாது தினகரா.”



“சரிங்க சித்தி.”



“முதல கல்யாணம் பண்ணிக்க போறவ விருப்பத்தை கேளுங்க. அதை விட்டுட்டு நீங்களா முடிவு பண்ணகூடாது.” என கற்பகம் சொன்னார்.




”அப்போ தென்றல்கிட்ட கேக்கலாம்” என சுசீலா சொல்ல.



“மகேஸ்வரி, போய் தென்றல அழைச்சுட்டு வா” என கற்பகத்தின் மகளை அனுப்பினார்.



”சரிங்க பெரியம்மா”



“தென்றலை, அழைத்து வந்து இரு பாட்டியின் நடுவில் அமர வைத்தனர்.



“ஏன் தேனு உன் கண்ணு கலங்கி இருக்கு, அம்மா நியாபகமா?” என சுசீலா கேட்க.


“அப்படி எல்லாம் இல்ல அப்பாயி”



”இங்க பாரு தேனு, நீ கண்கலங்குனா, உன் அம்மாக்கு பிடிக்காது. அழாதம்மா, அம்மா உன் பக்கதுல தான் இருக்கா. நீ அழுதா, அப்புறம் உன் அம்மா எங்க எல்லார் மேலயும் கோவமா இருப்பா. உனக்கு ஒரு குறையும் வைக்காம நல்லா தானா தேனு பார்த்துகுறோம். அப்புறம் ஏன் ராஜாத்தி அழுகுற.” என கற்பகமும், சுசீலாவும் மாற்றி மாற்றி அவளை தேற்றினர்.



“இனி அழுகமாட்டேன் அப்பாயி’’ கண்ணீரை துடைத்துக்கொண்டால்.



“ஏன் தேனு உனக்கு எப்போ, படிப்பு முடியுது.”



“இந்த வருஷ்த்தோட முடியுது அப்பாயி”



“சரி, நாங்க எல்லாரும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம், நீ என்ன சொல்லுற தேனு.” என சுசீலா கேட்க்க.




”தென்றலோ அதிர்ந்து, சுசீலாவை பார்க்க, கற்பகமோ, ‘ உனக்கு இப்போ கல்யாணம் செய்துக்க விருப்பம் இல்லனா சொல்லுமா, நாங்க பார்க்கலை.”



“தென்றலோ, திருமணம் என கேட்ட உடனே காதலனின் முகம் வந்து போனது. ஆனால் இப்பொழுது இவர்கள் கேட்க்கும் கேள்விக்கு நான் என்ன சொல்லுவது” என தெரியாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்தால்.




“பெரியவங்க ரெண்டு பேரும் கேட்க்குறாங்கள தென்றல். ஏன் அமைதியா இருக்க, பதில் சொல்லு” என அவளின் தந்தை சொல்லவும் நிமிர்ந்து அவளது பாட்டியினரை பார்த்தால்.



“என்ன டா ராஜாத்தி, உன் விருப்பத்தை சொல்லும்மா.” இருவரும் கேட்க.



“நான் ஒருத்தரை காதலிக்குறேன் அப்பாயி.”உண்மையை சொல்ல ஆரம்பித்தால். ஆனால் அங்கிருந்த குடும்பத்திற்க்கு அது அதிர்ச்சி தான்.




”என்னம்மா, சொல்லுற?” கொஞ்சம் பதற்றமாய் கேட்டார் கற்பகம்



”ஆமாம், அப்பாயி நான் ஒருத்தரை காதலிக்குறேன். அவங்களும் என்னை விரும்புறாங்க.” என தான் காதலித்த நாட்களையும், காதலனையும் அவர்களுக்கு புரியும்படியாக்க சொல்லி முடித்தாள்.




“தினகரனோ, ‘உன் மனசுல காதலிக்கிற எண்ணம் எப்போ இருந்து வந்தது தென்றல்.” அவளின் கையை பிடித்து அடிப்பது போல் கேட்டார்.


“தினகரா... தம்பி... அண்ணா,” என அனைவரும் தென்றலை, தினகரன் அடித்துவிடக்கூடாது என தடுத்தனர்.




“தென்றலை தன் பக்கத்தில் இழுத்து வைத்துகொண்டார் ஆனந்தன். தந்தையின் கைப்பட்டதே அவளது உடம்பு முழுவதிலும் நடுங்க ஆரம்பித்தது.”




“கற்பகமும் கொஞ்சம் நேரம் யோசித்து, ‘நம்ம பொண்ணோட விருப்பம் தான் நமக்கு முக்கியம். அதனால அந்த பையன பற்றி விசாரி ஆனந்தா. தினகரா நீயும் அந்த பையனோட குடும்பம் பற்றியும் விசாரி.



‘’எல்லாம் சரியா இருந்தா நம்ம பொண்ணோட விருப்பத்துக்கு சம்மதிக்கலாம். என்ன சுசீலா அக்கா, நான் சொல்லுறதுல உங்களுக்கு எதுவும் தவறு இருக்கா?’




“இல்லை கற்பகம், நீ சொல்லுறது தான் சரி. தென்றல் நம்ம வீட்டு பொண்ணு. சுதா இருந்திருந்தாலும் இதை தான் சொல்லிருப்பா. தாய் இல்லாத பொண்ணுனு, நம்ம விருப்பத்துக்கு செய்ய கூடாது. அதே மாதிரி அவளோட விருப்பத்துக்கு தடை போடக்கூடாது.” என சுசீலாவும் சொல்ல.




”தென்றலுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இப்பொழுதே தனுஷிற்க்கு போன் செய்து சொல்ல வேண்டும் போல் இருந்தது.”



“சரி மகேஸ்வரி, நீயும் நிர்மலாவும் மதிய உணவுக்கு ஏற்ப்பாடு பண்ணுங்க. மாலையில எல்லாரும் கோவிலுக்கு போயிட்டு வரலாம்.” என கற்பகம் சொல்லிவிட்டு சுசீலாவை கையோடு அழைத்து சென்றுவிட்டார்.




“தனது அறைக்கு வந்தவளின் மனம் மிகவும் ஆனந்தமாக இருந்தது. சேருமா, சேராதா என்றிருந்த அவளது காதல் இன்று, காதலனின் குடும்பமும், அவனை பற்றியும் விசாரிக்கும் அளவிற்க்கு வந்துவிட்டது. இனி எல்லாம் நல்லதாகே நடக்கும் என நம்பிக்கை அவளது வந்துவிட்டது.”





“அவளது மகிழ்ச்சியை கலைப்பது போல் அவளது அலைப்பேசி அவளை அழைத்தது. வேறு யாருமில்லை அவளின் காதலன் தனுஷ் தான் அழைத்தது.”




“எடுத்தவுடன் அவளை பேசவிடாமல் அவன் பேச ஆரம்பித்தான். ‘ என்ன ஒரு போன் இல்லை, ஒரு மெசேஜ் இல்லை. என்னை மறந்துட்டயா.’ கோவமாக கேட்க.



“ஒரு சந்தோஷமான விசயம் சொல்லவா தனுஷ்”



”என்ன சந்தோஷமான விசயம்”



” என் குடும்பத்துகிட்ட நம்ம காதலை சொல்லிட்டேன். என் ரெண்டு பாட்டியும் உங்களையும், உங்க குடும்ப்பத்தை பற்றியும் விசாரிக்க சொல்லிருக்காங்க. எல்லாம் நல்லபடியா நடந்தா நம்ம கல்யாணம் சீக்கிரம் நடந்திரும் தனுஷ்”




“அவனுக்கும் மகிழ்ச்சி தான். ஆனால் அவளிடம் அதை வெளிக்காட்டிக்கொண்டால் அவன் தனுஷ் அல்லவே.”



” ஓ... அப்படியா... சரி.” என்று மட்டும் சொன்னான்.



“அவளுக்கு தான் ஒரு மாதிரியாகிவிட்டது. எவ்வளவு பெரிய செய்தியை சொல்லிருக்கிறேன், அவன் சாதாரணமாக எடுத்துக்கொண்டான்.”



“உங்களுக்கு சந்தோஷமா இல்லையா தனுஷ்?’



“ஏன் அப்படி கேக்குற”



” நான் எவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயம் சொல்லிருக்கேன் நீங்க, ஓ... சரினு சொல்லுறீங்க.”



“வேற எப்படி சொல்ல. நானும் உன்னை மாதிரி சொல்லனும் எதிர்ப்பார்க்கிறியா. எனகெல்லாம் அப்படி எல்லாம் சொல்ல தெரியாது.” என சொல்லிவிட்டான்.



“அவளோ அமைதியாக இருந்தாள். அவளின் அமைதி கூட அவனுக்கு பிடிக்காது. ‘ஏன் அமைதியா இருக்குற, இப்போ பேச போறீயா இல்லையா?”



“நான் நாளைக்கு பேசுறேன் தனுஷ்.”




“ ஏன், இப்போ பேசுனா என்ன?”



“அவளுக்கு, அவன் இப்படி நடந்துகொள்வது கொஞ்சம் பிடிக்காமல் இருந்தாலும், அவளின் காதல் மனம் அவனுக்காவே பேச அழைத்தது.”



”சாப்பிட்டேங்களா”



“ம்ம்… நீ சாப்பிட்டயா”



“இல்லை, இன்னைக்கு அம்மாவுக்கு திதி, அப்புறம் தான் சாப்பிடனும்.”


” ஓ... நான் மறந்துட்டேன். அது தெரியாம உன்கிட்ட வேற கொஞ்சம் கோவமா பேசிட்டேன்.”



”இதோ, இது தான் அவளின் தனுஷ். இப்பொழுது பேசுவதுகூட அவனாக நினைத்தால் மட்டுமே பேசுவான். மற்றபடி எப்பொழுதிலும் பேசமாட்டான்.”



“இருக்கட்டும் விடுங்க தனுஷ். நீங்க என்ன மனநிலையில இருக்கீங்களோ.”


“மறக்காம சாப்பிடு. ஆமா, மாமானு ஏன் கூப்பிடமாட்டேங்குற.”


”சரி...,”



“அது... நீங்க கோவமா இருந்தா தான் கூப்பிட தோணும். இப்போ இல்லை”


“ம்ம்ம்... சரி...” அதற்க்கு மேல் அவளிடம் கேட்டால் தன்னையும் காதல் வசனம் பேச வைத்துவிடுவாள் என்று அவனுக்கு தெரிந்துவிட்டது அதனால் அவனும் எதுவும் பேசவில்லை.”




“சரி, நீ சாப்பிட்டு எனக்கு மெசேஜ் பண்ணு.”



“ம்ம்...சரி” என அவள் போனை வைத்துவிட்டு, அவளது பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து அவளது காதலன், அவளை தேடி வந்ததை நினைத்துப்பார்த்தால்.




தொடரும்………..
 
Top