Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிக்கார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 8

Advertisement

ilakkikarththi

Well-known member
Member
இளந்தென்றலோடு ஒரு கவிதை 8

”அன்று முழுவதும் கோவிலில் நடந்த கெடவெட்டு, பொங்கலில் அனைவருக்கும் வேலை சரியாக இருந்தது. சிறியவர்கள், சாப்பிட வந்தவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தார்கள்.”



“அனைத்து வேலைகளும் முடிந்து, அனைவரும் சேர்ந்து மாலையில் தான் வீடு வந்து சேர்ந்தார்கள். வந்த உடன் சிறிவர்கள் அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர். பெரியவர்கள் மட்டும், ஹாலில் அமர்ந்திருந்தனர்.”



“அப்பொழுது மேகலை, ‘ இன்னைக்கு கோவில்ல பூசாரி சொன்னது எனக்கு மனசு திருப்தியா இருந்துச்சு.’



“ஆமா, மேகலை எனக்கும் ஏதோ நம்ம வீட்டுல சந்தோஷமான விசேஷம் நடக்க போறமாதிரி இருக்கும்” என்றும் நாதனும் அவருடன் சேர்ந்து சொன்னார்.



“எல்லாரும் இருக்கும் போதே நான் நினைச்சதை சொல்லிடுறேன். உங்களுக்கு சம்மதம்னா அடுத்து பேசலாம்.” என மேகலை அர்த்ததுடன் பேச.




“நாதனை தவிர மற்ற அனைவரும் என்னவென்று பார்க்க.”




“கௌதமுக்கு, என் மகன் செல்வராஜ், பார்வதியோட பொண்ணு, கௌசல்யாவுக்கு நம்ம கல்யாணத்தை முடிக்கலாம்னு எங்க ஆசை. உங்களுக்கு எப்படி தோணுது மருமகனே.” என பிரபாகரனிடம் கேட்க.




“என் தங்கச்சியோட பொண்ணு எனக்கு மருமகளா வர நாங்க தான் கொடுத்து வச்சுருக்கனும். எங்களுக்கு இதுல பரிபூரண சம்மதம் அத்தை.”




“ஆமா அம்மா... எங்களுக்கு முழு சம்மதம். எப்போ நிச்சயம் பண்ணிக்கலாமுனு பொண்ணு வீட்டுக்காரவங்க சொல்லுங்க.” என ராதா பார்வதியின் கையை பிடித்துகொண்டு சந்தோஷத்துடன் கேட்டாள்.




“அப்போ, சிவாவுக்கும், அகல்யாவுக்கு சேர்த்து நாம நிச்சயம் பண்ணலாம். என்ன சொல்லுறீங்க மருமகனே” என ராஜேஷிடம் மேகலை கேட்க.




“செல்வராஜிர்க்கு திகைப்பாகவும், பார்வதிக்கும், மற்றவர்களுக்கும் மகிழ்ழ்சியாகவும் இருந்தது.”



“அத்தை, இன்னைக்கு சிவாவும், அகல்யாவும் சேர்ந்து வந்ததை பார்த்து நாம எல்லாரும் சந்தோஷப்பட்டோம். ஆனா, கல்யாணம் பண்ணி வாழப்போறவங்க அவங்க தான். அவங்களுக்கு இதுல சம்மதமானு நாம தெரிஞ்சுக்கலாம். சிவாவையும், அகல்யாவை கூப்பிட்டு கேட்டுக்கலாம். நாமளே முடிவு பண்ணிடு, பின்னாடி வருத்தப்படக்கூடாது அத்தை. இது என் கருத்து தான் நீங்க என்ன சொல்லுறீங்க அத்தை, மாமா.” என மேகலியிடம், நாதனிடமும், வெளிப்படையாக சொல்லிவிட்டார்.



“மேகலைக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும். நிதர்சனம் அது தானே. மருமகனின் வார்த்தைக்கு இணங்க மேகலையும் ‘சரிங்க மருமகனே நாம ரெண்டு பேரிடமும் சம்மதம் கேட்டுக்கலாம்.’




” பெரியவர்கள் பேசிகொண்டிருந்தை தற்செயலாக அறையில் இருந்து வெளியே வந்த சிவ கேட்டுவிட. அவனுக்கு பெரும் அதிர்சியாக இருந்தது. அவன் மனதிலோ, காதலியின் முகம் தான் வந்து போனது.”



“கொஞ்சம் நிதானமாக யோசித்த சிவா, பெரிவர்கள் தன்னிடம் பேசும் பொழுது பார்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்து மறுபடியும் அறைகுள்ளயே நுழைந்துகொண்டான்.”




”மாமா... மாமா... ப்ரவீன் மாமா...” முக்கியமான வேலையில் இருந்தவனை தொந்திரவு செய்து கொண்டிருந்தாள் பார்கவி.”




” என்ன கவி...”





“நம்மக்கு எப்போ கல்யாணம் மாமா.”




”கவியின் கேள்வியில் பார்த்துகொண்டிருந்த வேலையை தள்ளி வைத்துவிட்டு, அவளை பார்த்து பேச ஆரம்பித்தான்.”




”ஏன், உனக்கு தெரியாத... கௌதமுக்கு முடிச்சுட்டு, ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு தான் நமக்கு கல்யாணம்.”



“அது வரை நாமா இப்படியே பேசிட்டு, காதலிச்சுட்டு இருக்க போறோமா?”



“அவனோ, புன்னகையுடன் ‘ஆமா... நாமா நல்லா புரிஞ்சுக்க நேரம் கிடைச்சுருக்கு. நீ, என்னை பற்றியும், நான் உன்னை பற்றியும் இன்னும் நல்லா தெரிஞ்சுக்கலாம். உனக்கு இப்படி காதலிக்குறது பிடிக்கலையா கவி’



“உங்களை காதலிக்க எனக்கு கசக்குமா. பிடிச்சிருக்கு மாமா, ஆனா கல்யாணம் பண்ணிட்டா இன்னும் அதிகமா உங்களை காதலிப்பேன்ல. இப்போ கம்மியா காதலிக்குறேன். இன்னும் நாலு நாள்ல நீங்களும் ஊருக்கு போயிடுவீங்க. நானும் காலேஜ் போய்டுவேன் திரும்பி எப்போ மீட் பண்ண போறோமோ.” என அவனின் தோளில் சாய்ந்து சொல்ல.



” அவளின் தோளை ஆறுதலாக அணைத்துகொண்டு, ‘இன்னும் ரெண்டு வருஷம் தான், நாமா காதலிக்குறதுலே போய்டும். அப்புறம் நாம்ம வீட்டுல எப்படியும் எனக்கும், உனக்குமான கல்யாண பேச்சு எடுப்பாங்க அப்படியே கல்யாணமும் நமக்கு முடிஞ்சிரும்.”



“ம்ம்... சரி மாமா...”




“கவி, மாமாக்கு இப்போ வேலை இருக்கு அதுனால என்னை வேலை பார்க்கவிடுறியா.” அவளிடம் பர்மிஷன் கேட்க.




“சாரி மாமா... தொந்திரவும் பண்ணிட்டேன். நீங்க வேலைய முடிச்சுட்டு எனக்கு மேசேஜ் பண்ணுங்க. நான் என் ரூம்க்கு போறேன்.”




“இதுகெல்லாம் சாரி வேணாம் கவி. நான் முடிச்சுட்டு மெசேஜ் பண்ணுறேன். பால் குடிச்சிட்டு நீ தூங்கு சரியா.”




”ம்ம்... சரி மாமா.” என அவனிடம் விடை பெற்று மாடியில் இருந்து அவளது அறைக்கு சென்றாள்.




”இந்த காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்ததை எதர்ச்சையாக கேட்க நேர்ந்த சிவாவின் மனதில், “ எத்தனை ஆழமான காதல் இவர்களுடையது. அவன் சொன்னவுடன் காதலுக்காக காத்திருந்து காதல் செய்யலாம் என இவளும் உடனே சரி என்றாளே. அப்பொழுதும் அவன் மனம் தன் காதலியை தான் தேடியது.”




“கௌசல்யா எப்போ வரேனு சொன்னா பார்வதி.”




“நாளைக்கு காலையில வீட்டுக்கு வரேனு சொல்லிட்டாங்க. ஆனா, எனக்கு கொஞ்சம் பயமா இருக்குங்க.”




“எதுக்கு பார்வதி, ஏன் பயம்”




“அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இருக்கனும். நாமளா பேசி முடிவெடுத்துட்டோம் அதான்.”




“அது எல்லாம் என் மகளுக்கு கல்யாணத்துல இஷ்டம் இருக்கும் பார்வதி. எனக்கு சிவாவ நினைச்சா தான் கொஞ்சம் கவலையா இருக்கு பார்வதி.”




“ஏன், சிவா கண்டிப்பா சம்மதிப்பான் இந்த கல்யாணத்துக்கு. எனக்கு அந்த நம்பிக்கை இருக்குங்க.”




“ஒருவர் மாற்றி ஒருவர் அவரவர் செல்லப்பிள்ளைக்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருந்தனர்.”




“ஆனால், செல்வராஜின் மனதில் மிகபெரிய சோகம் தான் குடிகொண்டிருந்தது. அந்த சோகம் மட்டும் அவரது முகத்திலும், மற்றவர் பார்வைக்கு தெரிந்துவிட்டால் குடும்பத்தில் சில குழப்பங்களும், முக்கியமாக பார்வதிக்கு மிக பெரும் அதிர்ச்சியாக இருக்கும்.”




“ஏங்க, உங்ககிட்ட கேட்கமா நான் இன்னைக்கு பேசுனது பிடிக்கலையா?” என மேகலை, நாதனின் காலை அழுத்தி பிடித்துகொண்டு பேச்சை ஆராம்பிக்க.



“என்ன மேகலை, நீ எது செஞ்சாலும் அது நம்ம குடும்பத்தோட நல்லதுக்கு தான். அது எனக்கு தெரியாதா.”




“அப்புறம் ஏன் சபையில அமைதியா இருந்தீங்க.”




”நான் அமைதியா இருக்க காரணமே நம்ம மூத்த பேரன் சிவாவ நினைச்சு தான் மேகலை.”




”ஏங்க, என்னாச்சு...”




“சிவாவோட நடவடிக்கையை பார்த்த நம்ம பேரன் மாதிரியே தெரியலை. சிவா எப்போ ஊருக்கு வந்தாலும் ரொம்ப கலகலப்பா இருப்பான். உன் மடியில படுத்துகிட்டு என் மடியில கால் வச்சு அழுத்திவிட சொல்லுவான். ஆனா இப்போ பாரேன் அவன் நம்மகிட்ட பத்து நிமிஷம் கூட அமர்ந்து பேசலை.”



“அதுவுமில்லாம, சிவாவோட உடை, நடை, பேச்சுகூட மாற்றம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு மேகலை.” அதற்கடுத்து நாதன் பேச போகலையில் மேகலை இடை புகுந்தார்.




“அவன் காலேசு படிக்க போன இடத்துல மாறியிருப்பான். அப்புறம் வேலையும் பார்க்குற இடத்துக்கு தகுந்தாப்புல உடை மாறியிருக்கும். அதுக்காக நம்ம பேரனை சந்தேகம் படலாமா?”இலகுவாக சொல்ல.



“அவரின் மனதிலோ, இன்னும் தாத்தாவிற்க்கு சந்தேகம் போகவில்லை. மனைவியிடம் வெளிப்படையாக எதுவும் சொல்லாமல் அவர் தூங்க ஆரம்பித்தார்.”



தொடரும்…………
 
Top