Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிக்கார்த்தி ‘ இளம்தென்றலோடு ஒரு கவிதை 3

Advertisement

ilakkikarththi

Well-known member
Member
இளந்தென்றலோடு ஒரு கவிதை 3

”அம்மா உன் பக்கத்துல தான் இருக்கேன் கண்ணம்மா. உன்னைவிட்டு எங்கயும் போகலை. உன் விருப்பத்தை அப்பாகிட்ட சொல்லு, அவர் கண்டிப்பா சம்மதிப்பாரு. அப்பாக்கு, நான்னா ரொம்ப பிடிக்கும், அவர்கிட்ட எதையும் மறைக்காதா கண்ணம்மா.”



“நீ விரும்புறதை அப்பாக்கிட்ட சொல்லும்மா, அப்பா கண்டிப்பா ஒத்துப்பாங்க. எந்த கஷ்ட்டம் ஆனாலும் நீ எதுக்கும் கலங்காத, அம்மா உன் பக்கத்துல தான் இருப்பேன்.”



“தென்றலின் தலையை கோதி ஆறுதல் கூறிவிட்டு, மகளைவிட்டு பிரிய மனம் இல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்தார்.” தென்றலின் தாய் சுதா.



“மெதுவாக கண் விழித்த தென்றல், அவளுக்கு நேராக இருக்கும் சுதாவின் புகைப்படத்தில் முழித்தால். தெற்றுப்பலுடன், சிரித்த முகத்துடன் இருந்த சுதாவை பார்த்தவளின் மனது தாயின் மடிக்கு ஏங்கியது.”




” ஒரு நிமிடம் தாயின் முகத்தை பார்த்தவள் மனது, தனது காதலனிடம் வந்து நின்றது. வேகமாக அவளது போனை எடுத்து பார்த்தவளின் மனம் அவனின் மெசேஜிற்க்காக ஏங்கியது. ஆனால் அவன் போன் கால், மேசேஜ் எதுவும் இல்லை.”



“ சரி அவளாவது மெசேஜ் செய்யலாம் என்றால், அவன் பதில் அனுப்புவானா? என்ற கேள்வி குறியாக இருந்தது. அவன் பதில் செய்கிறானோ, இல்லையோ, நான் அவனுக்கு மேசேஜ் செய்வேன் என முடிவெடுத்துகொண்டு அவனுக்கு செய்தி அனுப்பினால்.”


“ குட் மார்னிங், ஊருக்கு போயிட்டாங்களா?, சாப்பிட்டேங்களா...” அவனுக்கு செய்தி அனுப்பினால்.



” மெத்தையில் இருந்து கீழறங்கி, குளியல் அறைக்கு சென்று குளித்துமுடித்துவிட்டு கீழே சென்றால்.”



“பெரியம்மா... எங்க இருக்கீங்க... எனக்கு காஃபி வேணும்” என சொல்லிகொண்டே சமையல் அறைக்கு சென்றால்.



“ அவளை பார்த்து புன்னகைத்துக்கொண்டே, அவளுக்கான காஃபியை கொடுத்தார்.”


“நல்லா தூங்கினயா தென்றால்,”


“ ம்ம்.. தூங்கினேன் பெரியம்மா... ஏன் கேக்குறேங்க”



“நேத்து வீட்டுக்குள்ள வரும் போதே சோர்வா இருந்த அதான் கேட்டேன்.”
“இப்போ ஓகே பெரியம்மா...”



“அப்படினா நாம ஊருக்கு கிளம்பலாம? தென்றல்” என சொல்லியப்படி வந்தார் ஆனந்தன்.



“எப்போ கிளம்பனும் பெரியப்பா.”


“இன்னைக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு, தம்பி கார் அனுப்புறேனு சொல்லிருக்கான்.”




“ஏன் பெரியப்பா, ஃப்ளைட்ல போகலையா?”



“இல்லமா, தம்பி வேண்டாம் சொல்லிட்டான் தென்றல்.”


“சரிங்க பெரியப்பா. நான் ட்ரஸ் எடுத்து வைக்க இப்போ கரெக்ட் அஹ இருக்கும்.”



“தென்றல், நீ எதாவது பெரியப்பாகிட்ட மறைக்குறையாம்மா?”



“அவளுக்கோ திக்கென்றானது, ‘என்ன மறைக்குறேன் பெரியப்பா..., எதுவும் இல்லையே”. தனது பயத்தை அவரிடம் காட்டமல் பேசினால்.



“சரிம்மா, நீ போய் ட்ரெஸ் எடுத்து வை” அவளை அனுப்பிவிட்டு நிர்மலாவிடம் விரைவாக புறப்படுமாறு சொல்லிவிட்டு நகர்ந்தார்.



“அறைக்குள் வந்தவளின் மனது பெரியப்பாவின் கேள்வில் நிலைத்து நின்றது. அப்பொழுது அவளது போனிற்கு செய்தி வந்தற்கான ஒலி கேட்க, போனை எடுத்துப்பார்த்தால்.”



“குட் மார்னிங், ம்ம் ஊருக்கு வந்துட்டேன், இனிதான் சாப்பிடனும்,” என அவள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் அனுப்பிவிட்டு, அவளைப்பற்றி கேட்க்காமல் இருந்தான்.




“அவனை பற்றி, அவளுக்கு தெரியாததா. சாதாரண நாளிலே அவளை பற்றி கேட்கமாட்டான். இப்பொழுதா அவன் கேட்டுவிடுவான். என்ன இருந்தாலும் காதலன் தன்னை பற்றி கேட்கவில்லை என சோகம் இருந்தாலும் அவள் அதை வெளிக்காட்டவில்லை.”



” மறுபடியும் அவனுக்கு செய்தி அனுப்பினால், ‘நான் ஊருக்கு கிளம்பிட்டு இருக்கேன், அம்மாவோட திதிக்கு, அப்பாக்கிட்ட நான் பேசிட்டு உங்களுக்கு பதில் அனுப்புறேன்.” என செய்தி அனுப்பிவிட்டு அவளது ட்ரெஸ், மற்ற பொருளை எடுத்து அவளது பெட்டியில் அடுக்களானால்.




“அனைத்து வேளைகளையும் முடித்துவிட்டு, காரில் ஏறி அவளது சொந்த ஊரான மதுரைக்கு சென்றுகொண்டிருந்தால்.”



“சாலையோரம் அவளை கடந்து சென்ற இரு காதல் ஜோடிகள், அவளுக்கு, அவனது காதலனை முதன் முதலில் எங்கு சந்ததித்து என்று தான் நினைவுபடுத்தியது.”




“ வழக்கமாக உலாவும் ஜனசந்தடியில் மக்களின் நடமாட்டம் அதிகம் நிறைந்த அந்த கிராஸ் சிக்னலின் நடுவில் வந்து நின்றது பென்ஸ் கார். கோடியில் இருக்கும் மக்களுக்கு அது சாதாரணம், ஆனால் நடுத்தர வர்க்க மக்கள், அதற்க்கும் கீழே உள்ள மக்களுக்கு அது பெரிய பணக்காரனின் வீட்டு சொத்து.”



“அந்த காரில் ஜன்னலின் ஓரம், வேடிக்கை பார்த்துகொண்டே வந்தவளின் கண்ணில் ஒரு காட்சி தென்ப்பட்டது.”



”ஒரு குழந்தை, தன்னை பத்திரமாக இறக்கிவிட்டுவனின் கையில், ஏதோ ஒரு பொருளை கொடுத்து அவனிடம் இருந்து ஒரு அன்பு முத்ததை பெற்றுக்கொண்டது. இதை பார்த்தவளின் மனது அதை அப்படியே மனதில் பத்தித்துகொண்டால்.”


“ அந்த குழந்தையின் பள்ளி பேருந்து வந்ததை உணர்ந்து, அந்த குழந்தையும், அதனுடன் நிற்க்கும் குழந்தையையும், அதில் ஏற்றிவிட்டு அவர்களுக்கு கையசைத்து அவர்களுக்கு விடைகொடுத்தான்.”



”இதை பார்த்துகொண்டிருந்தவள் அவளது கார் நகர்வதை உணராமல், அவனையே பார்த்துகொண்டிருந்தால். அந்த பள்ளி வாகனத்திற்க்கு பின் இவளது கார் சென்றது. குழந்தையுடன், குழந்தையாக இவளும் ஏதோ ஒரு உணர்வில் அவனுக்கு கையசைத்தால்.”




“ குழந்தைக்கு கையசைத்துகொண்டிருந்தவன், அந்த வாகனத்துக்கு பின் வந்த காரில் அமர்ந்திருந்த பெண், அவனுக்கு கையசைப்பதை பார்த்தவனின் மனம் ஒரு நிமிடம் அதிர்ந்து, அவளுக்கும் சேர்த்து கையசைத்துவிட்டு சென்றான்.”



“ஏதோ ஒரு புதிய உணர்வில் இருந்தவளின் மனம் அவனை மீண்டும் எப்போது சந்திப்போமோ என இருந்தது.”



“காலேஜ் வந்திருச்சு பாப்பா...” என அவளின் வீட்டில் வேலை செய்யும் சாமி அவளின் கனவில் இருந்து எழுப்பினார்.



” சரிங்க தாத்தா...” அவளது கல்லுரிக்குள் நுழைந்தால்.



” அவளது மனம் எங்கிலும், அவனது நினைவுடன் தான் இருந்தால். வகுப்பில் நடத்தும் பாடமும் கூட இன்று அவளுக்கு புரியாமல் போனது.”


“என்ன, தென்றல் இன்னை நீ ஏன் ஒரு மாதிரி இருக்க.” அவளது தோழியான சங்கவி கேட்க.



“காலையில் நடந்த அனைத்தையும் சங்கவியுடன் பகிர்ந்துகொண்டால்.”



“அதான், மேடம் இவ்வளவு ஹாப்பியா இருக்கியா”.



“ம்ம், ஆமா... எனக்கென்னமோ, அவங்களை நான் திரும்பவும் மீட் பண்ணுவேனு தோணுது சங்கவி.”


“சரி மீட் பண்ணா, அவங்க கிட்ட என்ன பேசுவ?”


“பிடிச்சிருக்குனு சொல்லுவேன்.”



“அடிப்பாவி, பார்த்தவுடன் பிடிச்சிருக்குனு சொல்லபோறியா?”


“ ஆமா, அந்த குழந்தைக்கு அன்பா முத்தம் கொடுத்து, பஸ்ல ஏத்திவிட்டு, டாட்டா காட்டுனது பிடிச்சிருக்குனு சொல்லப்போறேன். ஏன் இதுல என்ன இருக்கு”


“ஹப்பா....., நல்ல வேலை, நீ வேற எதையே சொல்லபோறேனு நினைச்சு பயந்துட்டேன்.”


“என்ன நினைச்ச?”



“அந்த மாதிரி பிடிச்சிருக்குனு”


” ஓ...”



“பார்த்தவுடன் காதல் எல்லாம் இல்லை டி, ஆனா பிடிச்சிருக்கு அவ்வளவு தான்.”



“சரி அதைவிடு, இன்னைக்கு...” சங்கவி, தென்றலின் பேச்சை திசை திருப்பி வேறு ஒன்றை பேசியபடி அன்றைய கல்லூரி நாள் சென்றது.



“தென்றல், தென்றல்,” அவளது நினைவை கலைத்தபடி எழுப்பினார் நிர்மலா.



“சொல்லுங்க பெரியம்மா... வீடு வந்துருச்சும்மா... கீழ இறங்கு. அவளை எழுப்பினார்.



“காரில் இருந்து இறங்கியவள் முன் ஆராத்தி தட்டுடன் நின்றிருந்தா மயிலம்மாள்”. அந்த வீட்டின் வேலை செய்பவர்.




“வா கண்ணு, எப்படி இருக்க”




“நல்லா இருக்கேன் பாட்டி.”



”இப்படி வந்து நில்லும்மா, அப்போ தான் ஆராத்தி எடுக்க முடியும்” அவளை மேற்க்கு நோக்கி நிற்க்க வைத்து ஆராத்தி எடுத்தார்.



“ கிட்டதட்ட ஐந்து வருடம் கழித்து இன்று தான் அவளது சொந்த வீட்டிற்க்கு வருகிறாள். தாய் இறந்த பின்பு, பன்னிரண்டாம் வகுப்பு முடிந்த கையுடன் அவளை ஆனந்தனிடம் ஒப்படைத்துவிட்டு அவளது தந்தை தொழிலை பார்க்க சென்றுவிட்டார்.”



” தம்பி வந்துட்டாங்களா ம்மா” என மயிலம்மாவிடம் கேட்டார் ஆனந்தன்.



“ இல்லை ஐயா, அவங்க நேத்து கிளம்பி கம்பெனிக்கு போனாங்க இன்னும் வரலை”, இரவு செய்து வைத்த உணவுகூட அப்படியே இருக்கிறது என அவரிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.



“ஐந்து வருடத்துக்கு முன் பார்த்த மாதிரியே இருந்த வீடு, சிறு வேலைபாடுடன் கொஞ்சம் அழகாய் இருந்தது. பூஜை அறைக்கு சென்று விளக்கேற்றி வைத்துவிட்டு அவளது அறைக்கு சென்றாள்.”




“ அவளது அறைக்குள் சென்றாள், அங்கும் சில வேலை பாடு நடந்ததற்க்கான அறிகுறி இருந்தது. சுவரில் அவளது தாயுடன் மட்டும் எடுத்துகொண்ட புகைப்படம் கொஞ்சம் பெரியதாய் மாட்டப்பட்டு இருந்தது. இன்னொரு புகைப்படத்தில் அவளது பெரியம்மா, பெரியப்பாவின் கழுத்தை கட்டிக்கொண்டு நின்ற படமும் மாட்டப்பட்டிருந்தது.”




“ அறையின் ஒவ்வொரு இடமும் அவளுக்கு பிடித்த மாதிரி மாறி இருந்தது. பால்கனியில் மர ஊஞ்சல் இருந்தது. அதை பார்த்ததும் அவளுக்கு மீண்டும் அவளின் காதலன் தான் நினைவுக்கு வந்தான்.”



“இரண்டாம் சந்திப்பும் அந்த ஊஞ்சலில் தான் ஆரம்பித்தது. அவளது அறைக்கு பக்கத்தில் உள்ள சிறிய ஹாலில் ஊஞ்சல் மாட்ட வேண்டும் என்று, பெரியப்பாவிடம் அடம் பிடித்து ஊஞ்சல் வாங்க சென்றள்”.




“ அவளது பெரியம்மாவுடன் மரப்பொருள்கள் விற்க்கும் இடத்திற்க்கு சென்றாள்.ஊஞ்சல்களை பார்த்துகொண்டே வந்தவள், அந்த காலத்தில் தேக்கில் செய்த ஊஞ்சலில் அதிக வேலைபடுடன் கூடிய அழகில் அந்த ஊஞ்சல் இருந்தது. அதைப்பார்த்தும் அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதன் அருகில் சென்று ஊஞ்சலை தடவியபடி பார்த்துகொண்டிருந்தால்.’



“என்ன மாதிரியான ஊஞ்சல் வேண்டும் மேடம்” கடை ஊழியர் கேட்க.



“எனக்கு இந்த ஊஞ்சல் பிடிச்சிருக்கு, இதை நான் வாங்கிக்கிறேன். என்ன விலைனு சொல்லுங்க”



“ஒகே மேடம், பிக்ஸ்டு ரேட் மேடம் இந்த ஊஞ்சல்”



“ஒகே, பெரியம்மா உங்களுக்கு பிடிச்சிருக்கா” அவளது பெரியம்மாவிடம் கேட்க.



“உனக்கு பிடிச்சா எனக்கும் ஓகே தான்ம்மா”



“பில் போட்டு கொடுங்க”



” இதோ மேடம், அப்படியே உங்க வீட்டு அட்ரெஸ் கொடுத்த நாங்க டெலிவரி பண்ணிடுவோம் மேடம்” என அந்த கடை ஊழியர் சொல்ல. அவளது பெரியாம்மாவை காரில் காத்திருக்க சொல்லிவிட்டு, கடை ஊழியரிடம் டெலிவரிக்கான தகவல்களை சொல்ல சென்றாள்.



“அக்கா இந்த ஊஞ்சல் தான் நல்லா இருக்கு” அவனின் குரல் கேட்டவுடன் அவளது நடை நின்றுவிட்டது. அவளது யோசனையில் ‘அவனாக இருக்குமோ’ என நினைத்தால்.



”இல்ல டா, தம்பி இது தான் நல்லா இருக்கு,”



“ வேண்டாம் அக்கா அது”


“டேய் ஊஞ்சல் எனக்கு வாங்க வந்துருக்கோம், அதனால எனக்கு மட்டு பிடிச்ச போதும்”.



“அக்கா, அந்த ஊஞ்சல் உன் வெயிட் அஹ் தாங்காது. அதான் சொன்னேன்.’ சந்தடி சாக்கில் அவனின் அக்காவை கலாய்த்தான்.


“ நான் ஒன்னும் அவ்ளோ வெயிட் இல்லை,”



“உன்னை பைக்ல வச்சு ஓட்டிட்டு வர்ர எனக்கு தான் தெரியும்”



“ குரல் வந்த திசையை நோக்கி அவளது கால்கள் சென்றது. அவள் நினைத்தது போலவே அவன் தான்”.




”பார்த்தவளின் மனது குத்தாட்டம் போடத குறை தான். அவ்வளவு மகிழ்ச்சி அவளுக்கு, கண்ணகள் முழுவது அவனையே பார்த்ததுகொண்டிருந்தாள். அவளது அக்காவிடம் ஏதோ பேசிகொண்டே திரும்பியவன் கண்ணில் அவள் விழுந்தால்.”



“அவளது பார்வையில், அவன் கண்டுகொண்டான் அவளை எங்கு பார்த்தான் என்று.”


தொடரும்…………….


 
Top