Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உண்மை காதல் மறந்து போகுமா பகுதி 2

Advertisement

kavi nila

Active member
Member
ponna ud yai padichavanga comment pannavanga ellarukum thanks... waiting for ur valauable comments....

காதல் 2

ஆறு மாதங்களுக்கு பிறகு,

டெல்லியின் பிராதன சாலையில் காரில் சென்றுக் கொண்டு இருந்தாள் ரித்விக்கா. மனம் முழுவதும் தன்னவனின் நினைவுகள். அவனை காண மனம் ஏங்கினாலும் அக்காவின் சொல்லிற்கு கட்டுப்பட்டு இருக்கிறாள். அப்போது போன் ஒலிக்க, அம்மாவின் பெயரை பார்த்துவிட்டு வண்டியை ஓரம் கட்டிவிட்டு பேச தொடங்கினாள்.

‘ஹாய்! ம்மா.. என்ன காலையே கால் பண்ணிருக்க
' என

“என்ன ரித்துகுட்டி மறந்துட்டியா. இன்னியோட ஆறு மாசம் முடிச்சிடுச்சு. சிவா உன்னை வீட்டிக்கு வர சொல்லிட்டா. சீக்கிரமா வந்துடு மா”, என்றாள் அந்த தாய் மகளை பிரிந்த ஏக்கம் அவரின் குரலில் இருந்தது.

“ஓகே ம்மா. இன்னைக்கு இங்க இருக்கிற வேலையெல்லாம் முடிச்சிட்டு நாளைக்கு அங்க இருப்பேன். நீங்க கவலைப் படாமல் இருங்க. அப்புறம் சிவா எப்படி இருக்கா மா. என் கிட்ட அக்கா பேசியே முன்று வாரம் ஆகுது”, என

“சிவா நல்லா தான் இருக்காமா. ஏதோ பிரச்சனை போல ஒரே டென்ஷனா இருக்காள். வீட்டிற்கும் சரியா வரதே இல்லை. நேத்து கூட லேடா தான் வந்தா. உன்னை வர சொல்ல சொன்ன. காலையில் நான் எழுந்தரிக்கிறதுக்கு முன்னே கிளம்பிட்டாள்”, என கவலையாக சொன்னாள்.

அதே நேரத்தில் அங்கே சிவா ஒருவனை சரமாரியாக அடித்துக் கொண்டுயிருந்தாள்.


“ஏன்டா என்ன நினைச்ச என்னை பற்றி. பொண்ணு தானே ஈசியா ஏமாற்றிடலாம்னா ஓன்னும் பண்ண முடியாதுனு நினைச்சியா”, என அவனின் கன்னத்தில் அறைய அவன் சுவற்றில் முட்டி கீழே விழுந்தான்.

“என்னை உளவு பார்க்க அனுப்பினான் பாரு அவனுக்கு உண்மையாலுமே அறிவு இல்ல போல. அறிவே இல்லாத உன்னை போய் அனுப்பிருக்கான். உன்னை பார்த்த முதல் தடவையே எனக்கு தப்பா பட்டுச்சு. அதான் உன்னை தனியா கவனிச்சேன்”, என அவனை பார்த்து நக்கலாக சிரித்தாள்.

சிவாவின் பக்கத்தில் இருந்த ஒர் அடியாள் அவளின் கண் அசைவில் அவனை கொல்ல கத்தியோடு முன்னேற,

ரகு, “வேண்டாம் சிவா மேடம். என்னை விட்டுங்க. நான் இனி உங்க பக்கமே வர மாட்டேன்” என

“உன்னை விடனுமா ம்ம்ம்... ஒரு வேல நீ என்னோட எதிரியா இருந்தா இதை யோசிச்சு இருப்பேன். ஆனா நீ துரோகி. உனக்கு வேற சன்ஸ்யே இல்ல. நீ போ முதல் உன்னை அனுப்பியவனை சீக்கிரம் உனக்கு துணையா அனுப்புகிறேன்”, என சொல்லிவிட்டு அதற்கு மேல் அவளுடைய ஆட்கள் பார்த்துக் கொள்வார்கள் என கிளம்பி விட்டாள்.


ஆபிஸ்க்கு வந்தவள் , “கோபி” என அழைக்க

'எஸ் மேம்', என வந்து நின்றான். கோபி சிவாவின் நம்பிக்கையான ஆள்.

கம்பனி சார்பாக அனைத்து மீட்டிங் மற்றும் கான்ப்ரன்ஸ் எல்லாத்திலும் அவன் தான் கலந்துக் கொள்வான். சிவா எதிலும் நேரடியாக களம் இறங்க மாட்டாள். அவளை சிலரை தவிர யாரும் பார்த்ததே இல்லை. பத்திரிக்கையாளரும் இவளின் ஒரு புகைப்படமாவது கிடைக்காத என அலைந்து திரிகிறார்கள். ஆனால் பலனோ பூஜியம்.

“நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. ஸோ நீயே எல்லாத்தை பார்த்துக்கோ. எதாவது முக்கியமானதாக இருந்தால் மட்டும் நீ எனக்கு கால் பண்ணு. உன் கூட அந்த கார்த்திகாவை ஹேல்புக்கு வைச்சிக்கோ”, என அங்கு இருந்தும் சீக்கிரம் கிளம்பினாள்.


நேராக வந்த இடம் ஒரு வீடு, தனி வீடு. ஆனால் அந்த இடத்தில் இந்த வீட்டை தவிர வேறு எந்த வீடு இல்லை. தனியாக உள்ளே சென்றாள். பல நேரங்களில் அவள் இருக்கும் இடம் இந்த வீடு தான். அவளின் ரகசியத்தை அறிந்த இடம். அவளின் சோகத்தை கண்ட இடம்.

*******

மாலை வேலை, சென்னை விமான நிலையம் மக்களின் கூட்டத்தில் தத்தலித்தது. சந்தோஷ் தன் தம்பியின் வரவை ஆவலோடு எதிர் பார்த்திருந்தான்.
முழுசாக நான்கு வருடங்களுக்கு பின் தன் தாய் மண்ணை தொட்டான் பிரகாஷ்.

தன் அண்ணனை கண்களால் தேடிய படியே வந்தவனின் மேல் தான் அங்கு இருந்த அத்தனை பெண்களின் கண்களும்.

பிரகாஷ், 26 வயதே ஆனா இளம் காளை. அவன் இருக்கும் இடத்தில் சிரிப்பிற்கு பச்சம் இருக்காது. அனைவரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்வான். வெள்ளை நிறம் வெளிநாடு வாசத்தால் இன்னும் சிவந்து இருந்தது. பார்த்ததும் மயங்கும் மாய கண்கள், அதில் விழுந்தால் எழுவது நிச்சயமாக முடியாது. கூர்மையான நாசி, சிவந்த இதழ், இரண்டு நாள் சேவ் பண்ணாத தாடி என பெண்களை மயக்கும் மாய கண்ணன்.


"ஹாய் ப்ரோ", என சந்தோஷின் அருகில் வந்து நின்றான். பல வருடங்கள் கழித்து சந்தித்த தம்பியை கட்டிக் கொண்டான்.

"எப்படி இருக்கடா", என "நீயே பார்த்து சொல்லு எப்படி இருக்கேன்னு" என்றான்.

“உனக்கு என்னடா ராஜா மாதிரி சும்மா ஜம்முனு இருக்க. சரி வா அம்மா உனக்காக காலையில் இருந்தே வெயிட்டிங்”, என இருவரும் தங்கள் இல்லம் நோக்கி சென்றனர்.


இரவு வேகு நேரம் ஆகியும் வராமல் இருக்கும் சிவாவை நினைத்து வருந்தினார் காமாட்சி. என்னதான் கம்பீரத்துடம் தைரியத்துடம் அடியாட்களுடமும் இருந்தாலும் அவளும் பெண் தானே. பெண் பிள்ளை பெற்றவர்களுக்கு இருக்கு அதே பயம் அவருக்கும் இருந்தது. மணி பதினொன்றை தொட அப்ப தான் காரின் சத்தம் கேட்டது. சிவா தான் வேகமாக இறங்கி வீட்டுக்குள்ள வந்தாள்.

காமாட்சியை பார்த்து, "ம்மா எனக்காக வெயிட் பண்ணாதிங்கனு சொல்லிருக்கேன்ல ஏன் தூங்கமால் இருக்கிங்க", என கேட்க

"உன்னை பார்க்காமல் தூங்க போனால் தூக்கம் வராதுமா. உன்னை பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கு நிம்மதியாக தூங்க முடியும்", என கவலையாக சொன்னார்.

"சரி நீங்க போய் தூங்குங்க. நாளைக்கு ரித்து வந்ததுக்கு அப்புறம் நாம் ஒரு இடத்திற்கு போகனும்", என சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றாள்.

******


'மம்மு', என கத்திக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் பிரகாஷ்.

ஜோதி அவனை பார்த்ததும், "வாடா நல்லவனே இப்ப தான் உனக்கு வீட்டுற்கு வரனும் தோனுதா, இங்கே இருப்பியா இல்ல மறுப்படியும் கிளம்பிடுவியா”, என கலக்கத்துடன் கேட்டார்.

“மம்மு இதுவரைக்கும் நீங்க எல்லாரும் என் தொல்லை இல்லாமல் ஹாப்பியா இருந்திருப்பிங்க. இனிமேல் என் கிட்ட இருந்து யாராலும் தப்பிக்க முடியாது. உங்க எல்லார் கூடவும் தான் இருக்க போறேன்”, என சொல்லும் போதே அவனின் தந்தை வீட்டிற்கு வந்தார்.


"ஹாய் மை ஸ்வீட் பாய் எப்ப வந்த" என சரவனன் கேட்க

"இப்ப தான் வந்தேன் டாடு.."

சந்தோஷ், “டேய் நீ இன்னும் இந்த மம்மு டாடுவை விடலையா”, என "கூடவே பிறந்தது எப்படி ப்ரோ மாறும்",

சரவணன், “டேய் தம்பி சொல்ல மறந்துட்டேன். சிவாவோட பி.ஏ. கால் பண்ணான் டா. நாளைக்கு அவங்க எல்லாரும் வராங்களாம்”, என


"அய்யோ.. என் குட்டிமாவை பார்க்க போறேன். அச்சோ ஆறு மாசமா பார்க்கலையே. எப்படி இருப்பா", என அவன் தனக்கு தானே பேச மற்ற முவரும் அவனை பார்த்து சிரித்தனர்.

"ப்ரோ, அண்ணி வராங்கனு சொன்னயுடனே முகமெல்லாம் சிவக்குது. வெக்கமா ப்ரோ", என

'ச்சீ போடா', என அவனின் அறைக்கு சென்றான். மறுநாள் அனைவருக்கும் அழகாக விடிந்தது. ரித்துவும் அதிகாலையே வீட்டிற்கு வந்துவிட்டாள். சிவா ரித்துவையும் காமாட்சியை அழைத்துக் கொண்டு சந்தோஷின் வீட்டிற்கு சென்றாள். வந்தவர்களை சரவணனும் ஜோதியும் வரவேற்றனர்.

சந்தோஷ் அப்ப தான் கீழே வந்தான். தன் தேவதையை பல நாட்கள் கழித்து பார்த்ததால் அவனின் நிலையை சொல்லவா வேண்டும். வைத்த கண் எடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். ரித்துக்கு தான் முகம் சிவந்துவிட்டது.

சிவா, “ஆன்ட்டி அங்கிள் உங்க எல்லார்கிட்டவும் நான் சொன்ன மாதிரி இவங்க இரண்டு பேரும் இருந்தாங்க. ஸோ நான் இவங்க இரண்டு பேருக்கும் அடுத்த மாசம் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன்”, என சொல்ல

“என்னமா நீயே முடிவு எடுக்கிற. சந்தோஷ் தம்பியோட அப்பா அம்மா கிட்டயெல்லாம் கேட்க வேண்டாமா”, என காமாட்சி அனைவரையும் சங்கடத்தோடு பார்க்க,

“இருக்கட்டு சம்பந்தி. பாப்பா சொல்லுறதும் நல்லது தான். நாளையில் இருந்து ஆடி மாசம் ஆரம்பிக்க போது. அதுக்கு அப்புறம் ஆவணி மாசத்தில் நல்ல நாளா பார்த்து கல்யாணம் வைச்சிக்கலாம்”, என ஜோதியும் சிவாவின் முடிவிற்கு சம்மதித்தார்.

சிவாவின் மேல் அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது.
அனைவரும் இந்த முடிவுக்கு சம்மதித்தனர்.

பின் சிவா, 'சரி அப்ப நான் கிளம்புறேன். எனக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு', என


"அக்கா இப்ப தான் நான் வந்தோம். கொஞ்ச நேரம்", என ரித்து கெஞ்ச

"நான் மட்டும் தான் கிளம்ப போறேன் சந்தோஷ்", என அவனை அழைக்க 'சொல்லுங்க', என பவ்வியமாக கேட்டான்.

"அம்மாவையும் ரித்துவையும் வீட்டில் விட்டுறீங்களா" என

"ஓ.. சுயர்"என மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினான்.

சிவா கிளம்பியா சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்த பிரகாஷ்க்கு எதோ சொல்ல முடியாது ஒர் உணர்வு தோன்ற எழுந்து கீழே வந்தான்.

கீழே வந்த பிரகாஷ்யை இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். பின் ஜோதி,
"கொஞ்சம் நேரத்திற்கு முன்னாடி வந்திருக்க கூடாதாடா இப்ப தான் சிவா பாப்பா கிளம்பினா" என

"அத்தை அவளை போய் பாப்பானு சொல்லுறீங்க. அதை கேட்டால் அவளே சிரிப்பா. அவளை பத்தி உங்களுக்கு சரியா தெரியலை. எதிரில் இருக்கறவங்க தப்பு பண்ணா அவள் கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. அவள் கோட்டில் மரண தண்டனை தான்" என ரித்து தன் அக்காவின் பெருமையை சொல்ல

சந்தோஷ், "என்ன மரண தண்டனையா?" என அலறினான்.

சரவணன், “டேய் பின்ன சும்மாவாடா. இந்த சின்ன வயசில் இவ்வளவு பெயரையும் புகழையும் சம்பாதிச்சு இருக்கிறது. கண்டிப்பா பல எதிரிகள் இருப்பாங்க. உண்மையாவே இவங்க பெயரை கேட்டால் எல்லா அரசியல்வாதிகளும் அப்படி பம்புறாங்க”,

பிரகாஷ் மனதில் ஐய்யோ மிஸ் பண்ணிட்டனே. என்ன பெரிய ரவுடி பேபியா இருப்பா போல. உன்ன பார்க்கனும் ரவுடி பேபி சீக்கிரமா வரேன். தன் ரவுடி பேபியின் தங்கையை கரெக்ட் செய்ய சென்றான்.


"ஹாய் அண்ணி" என ரித்துவிடம் தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டான்.

"நல்லாயிருக்கியா பிரகாஷ். எத்தனை முறை சொல்லுறது நான் உன்னை விட சின்ன பொண்ணு. என் பெயரை சொல்லியே கூப்பிடுனு" என

"ஏன் அண்ணி உங்களுக்கு இந்த கொலைவெறி. நான் உங்களை பெயர் சொல்லி கூப்பிட்டு அதை என் மம்மு பார்த்து. தனியா இதுக்கு ஒரு கிளாஸ் எடுப்பாங்க. என்னால முடியாது", அதை கேட்டு ரித்து சிரித்தாள்.

"அண்ணி உங்க அக்காவோட போட்டோ இருக்கா" என கேட்க அங்கு வந்த சந்தோஷ்,

“டேய் அவங்க எவ்வளோ டெடர் ஆபிசர்னு சொல்லுறாங்க. நீ என்னடானா போட்டோ கேட்கிற. வேண்டாம் மகனே. உனக்கு இந்த விஷப்பரீச்சை அவசியமா”,


"முடு ப்ரோ. அண்ணி நீங்க சொல்லுங்க. உங்க கிட்ட இருக்க" என்றதுக்கு இல்லை என மறுப்பாக தலையை ஆட்டினான்.

இல்லையா என முகம் சுருங்கி விட்டது. அதை பார்த்த சந்தோஷ், “என்ன தம்பி
பிலிங்கா”, என கலாய்க்க

“தெரியலை ப்ரோ. அவங்க பெயரை கேட்கும் போதே ரொம்ப நாள் பழகினா மாதிரியே ஒரு பிலிங்கு”, என தன் அண்ணனை போலவே சொன்னான்.

ஐய்யோ என தன் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான். இதை பார்த்து சிரித்த ரித்து, “இருந்தாலும் கொஞ்சு ஜாக்கிரதையா இருங்க. அக்கா கொஞ்ச டஞ்சரஸ் ஆனா ஆளு”, பின் முவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

சந்தோஷ் வீட்டில் இருந்து கிளம்பிய சிவா வந்த சேர்ந்த இடம் அந்த வீடு. அப்படி என்ன ரகசியம் அந்த வீட்டில்?



தொடரும்
நிலா ❤
 
Top