Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உண்மை காதல் மறந்து போகுமா பகுதி 3

Advertisement

kavi nila

Active member
Member
காதல் 3

ஓரு வாரத்தில் நிச்சயமும் ஒரு மாதம் கழித்து கல்யாணம் என நாள் குறிக்கப்பட்டது. நிச்சய மற்றும் கலியாண வேலையை யாருக்கும் கொடுக்காமல் சிவாவே அனைத்தையும் பார்த்துக் கொள்வதாக கூறினாள்.

காலை நேரத்தில் புஜையறையில் இருந்த காமாட்சியின் மனதின் ஒரு ஒரத்தில் சிவாயை நினைத்து கவலை அதிகரித்தது. அக்கா இருக்க தங்கைக்கு கல்யாணம் என்ற கவலையும் சிவாவின் பிடிவாதம் கோபம் அவளின் வாழ்க்கையை அழிக்க கூடாது என வேண்டுதலும் அந்த தாயின் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

“அம்மா..” என அழைத்து கொண்டே மாடியில் இருந்து கீழே வந்தாள் சிவா.

புஜையறையில் இருந்து வெளியே வந்தார் காமாட்சி, “என்னமா?”

“இன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. ரித்து சந்தோஷ் வீட்டிற்கு போகனும் சொன்னாள். நான் அவளை கூப்பிட்டு போய் அங்க விட்டு, அவங்க கிட்ட கொஞ்ச பேசனும். அதையும் பேசிட்டு நான் கிளம்பிடுவேன். நைட் லேட்டா தான் வருவேன். நான் வர வரைக்கும் தூங்காம இருக்காதிங்க. டைமுக்கு தூங்குங்க”, என தாயிடம் சொல்லிவிட்டு வேலையாளை அழைத்து ரித்துவை வர சொன்னாள்.

“அக்கா.. நான் ரெடி. கிளம்பலாமா”, என அங்கே வந்தாள். இருவரும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

“சேலையில் இன்னும் அழகாக இருக்க ரித்துமா”, என காமாட்சி அவளுக்கு திஷ்டி எடுக்க,

“ரியலி லுக்கிங் பியுட்டிபூல்”, என்று விட்டு சிவா காருக்கு சென்றாள்.

ரித்து கல்யாண பெண்ணுக்கே உரித்தான வெக்கத்துடன் அக்காவின் பின்னே சென்றாள்.

*****

சந்தோஷ் வீட்டில்,

“நான் போக மாட்டேன்... போக மாட்டேன்..... போக மாட்டேன்”, என கத்திக் கொண்டு இருந்தான் பிரகாஷ்.

அந்தோ பரிதாபம் யாரும் அவனை சட்டை கூட செய்யவில்லை.

“மம்மு ப்ளீஸ் எனக்கு என்ன தெரியும் நான் குழந்தை தானே. நீங்களே போய்ட்டு வாங்களேன்”, என அவனின் அம்மாவிடம் செல்லம் கொஞ்சினான்.

“டேய் சொன்ன புரிஞ்சிக்கோடா. இது ஓன்னும் பெரிய வேலையில்ல டா. இந்த துணியை அந்த ஆசிரமத்தில் கொடுத்துட்டு வந்துடு. நான் தான் போய் கொடுக்கிறதாக இருந்துச்சு. ஆனால் காலையில் சிவா போன் பண்ணி வரதா சொன்னடா. காரில் போய் வரத்துக்கு பத்து நிமிசம் அங்க இதை கொடுக்கிறதுக்கு 5 நிமிசம் தான் ஆகும். போய்ட்டு வாடா”,

"சரி போறேன். ஆனா ஒரு கன்டிசன்"

“என்னது”, என கேட்டுக் கொண்டே வந்தான் சந்தோஷ்.

"அது.. நான் வர வரைக்கும் அண்ணியை கிளம்பாமால் பார்த்துக்கனும்" என

அண்ணிய மட்டுமா!.. என சந்தோஷ் இழுக்க

“டேய் ப்ரோ.. வாயை முடுடா, என் செல்ல மம்மு நான் சொன்ன கேட்பாங்க, என்று தன் தாயை பார்க்க”, அவருக்கு ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் தலையை ஆட்டினார்.

அவனின் கார் சென்ற அடுத்த நிமிடம், சிவாவின் கார் வந்தது.

சேலையில் வந்து இறங்கிய ரித்துவை பார்க்க சந்தோஷ்க்கு இரண்டு கண் போதவில்லை. அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவளும் அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள்.

உள்ளே சென்ற சிவா ஜோதியிடம் நிச்சய வேலையை பற்றி பேசினாள். சந்தோஷம் ரித்துவும் உள்ளே வந்தனர்.

சிவா, “அப்ப ஓகே ஆன்ட்டி நான் கிளம்புறேன்”, என

“என்னங்க அதுக்குள் கிளம்புறீங்க”, என்று சந்தோஷ் கேட்க

“இல்ல சந்தோஷ் வேலையிருக்கு. ரித்து இங்க இருப்பாள்”, என கிளம்பினாள்.

கீழே இருந்த தண்ணீரை கவனிக்கமால் காலை வைக்க, அது வழுக்கி விட கண்களை இறுக்க முடிக் கொண்டாள்.

இதோ குறுகுறுப்பு தோன்ற இன்னுமா நாம விழல என கண்ணை திறந்து பார்த்து அதிர்ந்தாள்.

அவளின் முகத்துக்கு வெகு அருகில் அவனது முகம் இருவரின் இதயத் துடிப்பும் வெளியே கேட்க, அவளது இடையில் அவனது கை இறுகி பற்றிருக்க இருவரது கண்களும் நேர் கோட்டில் சந்தித்து சிலையானது.

சிவாவின் சத்தத்தை கேட்டு அங்கு வந்த சந்தோஷ் ரித்து இருவரது நிலை பார்த்து வாய் மேல் கை வைத்தனர்.

ரித்துவோ, ‘நம்ம அக்காவா இது?’ எனவும் சந்தோஷ், ‘ஐய்யோ நம்ம தம்பி அடி வாங்க போறானே’ என்றும் நினைக்க,

முதலில் சுதாரித்த சிவா, அவனை தள்ளிவிட்டு யாரையும் பார்க்காமல் தன் காருக்கு விரைத்து சென்றாள்.

அவள் சென்ற திசையே பார்த்தான் பிரகாஷ். அவனிடம் வந்த சந்தோஷ்,

“அவங்களுக்கு எதோ முக்கியமான வேலை சொன்னாங்க. அதான் அமைதியாக போறாங்க. இல்லனா உன்னை சும்மா விட்டு இருக்க மாட்டாங்க. யாரு அது தெரியுமா”, என சந்தோஷ் கேட்க

“இது கூட தெரியாம இருப்பேனா. அண்ணியோட அக்கா சிவா. அது பார்த்தாலே தெரியுது. என் தேவதைடா. அப்பா... என்ன கண்ணுடா அது.. ஒவ்வொரு முறை ஆளை அப்படியே இழுக்குது”,

"டேய் போதும்டா என் கல்யாணம் வரைக்கும் கொஞ்ச உன் சேட்டையெல்லாம் முட்டை கட்டி வைடா. கொஞ்ச கருணை காட்டுடா",

"உனக்கு உன் கஷ்டம், ஹாய் அண்ணி எப்படி இருக்கிங்க",

"என்ன கொழுந்துனாரே இப்ப தான் நாங்கயெல்லாம் கண்ணுக்கு தெரிகிறோம் போல" என

ஈஈஈஈ..... என மலுப்புலாக சிரித்துவிட்டு தனது அறைக்கு சென்றான்.



நிச்சயத்திற்கு இரண்டு நாள் இருந்த நிலையில் சிவாவிற்கு ஒரு கால் வந்தது.

"என்ன சிவா மேடம் வீட்டில் விசேஷம் போல. எங்க உதவி எல்லாம் வேண்டாமா. பொண்ணுகூட நல்ல பெங்களுர் தங்காளி மாதிரி தான் இருக்கா. கல்யாணம் வேறல" என

“யாருடா நீ”, என்ற குரலில் கோபத்தைவிட ஆளுமை அதிகமாக இருந்தது.

"ஓ.. மேடமிற்கு என்னை யாருனு தெரியாதுல. பரவாயில்லை அப்படியே இருக்கட்டும். உனக்கு அறிவு இல்லனு இப்படியா மா ப்ரு பண்ணுவ" என நக்கலாக கேட்க

ஏய்ய்!... என்ற சிவாவின் குரல் அந்த அறையையே அதிர வைத்தது.

"கூல் பேபி கூல் நான் என்னமா பண்றது. கல்யாண பொண்ணு வீட்டில் இல்லமால் வெளியே அதுவும் தனியா இருக்கு. நான் வேண்டும்னா போய் கம்பெனி கொடுக்கவா",

“நீ மட்டும் யாருனு தெரிந்தது அடுத்த நிமிசம் உன் உடம்பில் உயிர் இருக்காது”, என காலை கட் செய்துவிட்டு ரித்துவை அழைத்தாள்.

'எங்க இருக்க ரித்து',

"நான் ப்ரெண்டுஸ்க்கு இன்விடேஷன் வைக்க வந்தேன் க்கா. இப்ப ஒரு காப்பி ஷாப்பில் இருக்கேன். என்ன ஆச்சுகா" என்ற ரித்துவிடம், "எந்த ஏரியாமா" என்று கேட்க

"மாதாவரம் க்கா. எதாவது பிரச்சனையா?"

"எதுவெல்லாம் ஒன்றுமில்லடா. நீ அங்கயே இரு. இன்னும் பத்து நிமிசத்தில நம்ம காட்ஸ் வருவாங்க. நீ அவங்க கூடவே போய்டு வா சரியாமா" என

எதோ பிரச்சனை என உணர்ந்து, “ஓகே க்கா. நீயும் பத்திரமா இருக்கா”

சரிடா என போனை வைத்தவள் முன்பு கார்த்திகா வந்ததாள்.

“மேடம் அந்த சிம் குருவோட பெயரில் இருக்கு. அவனை பற்றின விவரம் இதில் இருக்கு”, என ஒரு பையிலை சிவாவிடம் கொடுத்தாள்.

“ஓஓ.. குரு யாரு தெரியுதா கார்த்திகா”, என அவள் இல்லை என தலையை ஆட்ட

"அந்த எக்ஸ் மினிஸ்டர் சதாசிவத்தோட பையன். அப்பன் ஊர் பொறுக்கினா மகன் தெரு பொறுக்கியா இருப்பான் போல. அவன் கம்பெனிக்கு வரவேன்டிய ப்ராஜெட் ஒன்னு நேத்து நமக்கு கிடைச்சுதே. அதான பையம் ரொம்ப துள்ளுறான் போல"

"அவனை என்ன மேடம் செய்யலாம்"

"இப்ப எதுவும் வேண்டாம். ரித்து கலியாணம் முடியட்டும். அவனை வைச்சி நம்ம தீபாவளி கொண்டாடலாம்", என கூறி விட்டு தன் வேலையை பார்க்க கணினியில் தலையை நுழைத்தாள்.

நிச்சய நாளும் வந்தது. சிவாவின் வீடே திருவிழா போல பிரம்மாண்டமாக இருந்தது. நேத்து நைட்டே சந்தோஷின் வீட்டில் இருந்து அனைவரும் வந்து விட்டனர். பல அரசியல்வாதிகள் வருவதால் அந்த இடமே பத்து அடுக்கு பாதுகாப்பில் இருந்தது.

அனைவரும் பரபரப்பாக இருக்க பிரகாஷ் மட்டும் நேற்று நடந்த நிகழ்வை நினைத்துக் கொண்டு இருந்தான்.

சிவா வழக்கம் போல லேட்டாக வந்தாள். சிவாவின் முகமே சரியில்லை என்பதை மாடியில் இருந்த பிரகாஷ் பார்த்தான்.

சிவா நேராக அவளது அறைக்குள் செல்ல சிறிதும் யோசிக்காமல் சிவாவின் அறைக்கு சென்றான் பிரகாஷ்.

அவனை எதிர்பார்க்காததால் அதிர்ந்தே நின்றாள்.

அவளிடம் சென்று, “என்ன ஆச்சுங்க. உங்க முகமே சரியில்ல. எதாவது பிரச்சனையா?” மென்னையாக கேட்டான்.

அவனின் வார்த்தையில் உள்ள அக்கறை மென்னை அவளை எதோ செய்ய அமைதியாக நின்றாள்.

அவளின் அமைதி அவனின் சந்தேகத்தை உறுதி செய்ய அவளின் கையை இழுத்து சென்று படுக்க வைத்தான்.

அவனின் செய்கையை தடுக்க தோன்றாமல் அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றாள் சிவா.

அவளை படுக்க வைத்தவன் அவளின் தலையை கோதி விட்டான். சிறிது நேரத்திலே அவளும் உறங்கிவிட்டாள். அவள் உறங்கியதை பார்த்தும் அவளின் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தத்தை வைத்தான்.

தூக்கத்திலும் அந்த முத்ததில் பாதுகாப்பை உணர்ந்தவளின் இதழில் சிறு முறுவல் தோன்றியது.

அதை பார்த்தவனும் புன்னகைத்துவிட்டு தனக்கு கொடுத்த அறைக்கு சென்றுவிட்டான்.

எதோ கீழே விழுந்து உடையும் சத்தத்தில் நினைவில் இருந்து மீன்டவன் சத்தம் வந்த திசையை நோக்கினான்.

அன்புள்ள
நிலா
 
Top