Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உண்மை காதல் மறந்து போகுமா பகுதி 4

Advertisement

kavi nila

Active member
Member
ஹாய் செல்லம்ஸ்...... அனைவருக்கும் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்......

போன பதிவுக்கு லைக், கமெண்ட் போட்ட எல்லாருக்கும் நன்றி??... இதோ அடுத்த பதிவு, படிச்சிட்டு உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க....

காதல் 4



தூக்க முடியாமல் தூக்கி ஒருவர் பூந்தோட்டியை கீழே போட்டுவிட்டார்.

அதை பார்த்தவன், “சீக்கிரம் இதை சுத்தம் பண்ணுங்க”, என்று விட்டு சற்று தள்ளி நின்றான்.

யோசித்துக் கொண்டே வந்த சிவா கீழே உள்ள பிங்கான் துண்டை பார்க்காமல் அதில் காலை வைக்க அது அவளின் காலை பதம் பார்த்தது.

அவளின் ஆஆ!.. என்ற அலறுகிற சத்தத்தில் அனைவரும் அவளை பார்க்க

“ஏய் சிவா.. பார்த்து” என்று அடுத்த நொடியே விழ போனவனை தாங்கினான் பிரகாஷ்.

அவளை மெதுவாக சோபாவில் அமர வைத்தான். அதற்குள் அங்கு வந்த ரித்து அவளின் காலை பார்த்துவிட்டு வேகமாக தனது அறைக்கு சென்று முதலுதவி பெட்டியை எடுத்து வந்தாள்.

யாரையும் கண்டுக்காமல் அவளிடமிருந்த பொட்டியை வாங்கிய பிரகாஷ் சிவாவின் காலை எடுத்து தனது மடியில் வைத்தான். சுற்றி இருந்த அனைவரும் அவனை ஆச்சியமாக பார்க்க அதை கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.

“ரொம்ப வலிக்கிறதா சிவா”, என கேட்டுக் கொண்டே அவளின் காலில் இருந்த பிங்கான் துண்டை எடுத்தான்.

வலியில் ‘ஆஆ!..’ என்று கத்திக் கொண்டே பிராகஷின் தோய்ப்பட்டையை இறுக்கி பிடித்தாள்.

வலியில் கலங்கும் சிவாவின் கண்களைவிட பிரகாஷின் கலங்கிய கண்களையே ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் பார்த்தனர், இரு வீட்டு குடும்பத்தாரும்.

“விடுடா ரொம்ப வலிக்கிது”, என சிவா சொல்ல

“இதோ முடிஞ்சிடுச்சு டி. உனக்குயெல்லாம் எதுக்கு ஆன்டவன் கண்ணு கொடுத்து இருக்கான். பார்த்து கவனமா வர மாட்ட”, என பொறிந்து தள்ள

அவன் அவளை ஒருமையில் அழைத்ததை அவள் கவனிக்கவில்லை ஆனால் அனைவரும் அதை கவனித்துவிட்டனர். ஆனால் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.

காமாட்சிக்கு ஆச்சரியமே.. தன் மகளை ஒருவன் எளிதில் அடக்கிவிட்டான் என்று.

ப்ச்.. என முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள். இந்த சிவா அனைவருக்கம் புதிது.

சிறிது நேரத்தில் வலி கொஞ்ச மட்டுப்பட அனைவரையும் பார்த்து, “என்ன எல்லோரும் என் முகத்தை பார்த்துட்டு இருங்கிங்க. போய் வேலையை பாருங்க” என்று விட்டு பிரகாஷை முறைத்துக் கொண்டே தனது அறைக்கு தாங்கி தாங்கி நடந்து சென்றாள்.

அவளின் முறைப்பை பார்த்துவிட்டு அவள் கஷ்டப்பட்டு நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தான்.

சந்தோஷ், “எவ்வளோ கஷ்டமா இருந்தா நீயே தூக்கிட்டு போயேன்”, என

“என் தேவதையை நான் தூக்கிட்டு போகாம நீயா தூக்குவ. பாவம்டா ரொம்ப வலிக்கும்ல”, என சோகமாக சொல்ல

“டேய் அவங்க உன்னை கொலைவெறியோட முறைச்சிட்டு போனாங்கடா. தனியா மாட்டுன உன்னை மர்டர் பண்ணிட்டு போய்டுவாங்க. பார்த்து இருந்துக்கோ”, என

“என் செல்லக்குட்டிகாக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் டா”,

"முத்திக் போச்சு. என்ன செய்ய உன் விதி அதை யாராலும் மாத்த முடியாது. உனக்கு அடி சிவா கையில் தான். போய் அதுக்கு ரெடியாக இரு",

"போ ப்ரோ அண்ணி உன்னை அடிக்கிறாங்கனு அவங்களை நீ திட்ட கூடாது பாவம்டா அண்ணி", என உச்சு கொட்டி சொல்ல,

“டேய் நான் எப்படா அப்படி சொன்னேன்”, என திரும்பி பார்க்க அங்கு ரித்து காளியாக மாறி அவனை முறைத்துக் கொண்டுயிருந்தாள்.

பிரகாஷிடம் திரும்பி ஏன்டா என கண்ணாலே கேட்க,

“என் வேலை முடிச்சிது ப்ரோ பாய்”, என கை அசைத்துவிட்டு சென்றான்.

பாவி.. இப்படி மாட்டிவிட்டு போறானே. சரி சமாளிப்போம் என அவளை தாஜா பண்ண சென்றான்.

நிச்சய நேரமும் வந்தது. லக்கின பத்திரிக்கை வாசிக்கப்பட்ட பின் மனமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். பிரகாஷின் மொத்த ஃபோகசும் சிவா மட்டும் தான். அதுவும் சேலையில் தேவதையே தோற்றுவிடும் அளவிற்கு இருந்தாள்.

விழா முடிந்து பெரிய தலைகள் எல்லாம் கிளம்பிய பின் இரு வீட்டார் மட்டுமே இருந்தனர்.

அனைவரும் ஒரமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருக்க பிரகாஷ் மட்டும் நடு ஹாலில் நின்று சிவாவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான்.

எதேர்ச்சையாக திரும்பிய சிவாவின் கண்களுக்கு அவனின் பார்வை புலப்பட அவனை முறைத்துவிட்டு திரும்ப, அப்போழுது தான் மேலே பார்த்தாள். மேலே இருந்த சன்டிலியர் விழும் நிலையில் இருந்தது.

அதன் கீழே தான் பிரகாஷ் நின்று கொண்டியிருந்தான். அது கீழே விழ சரியாக அதே நேரத்தில் சிவா பிரகாஷை பிடித்து தள்ளி அவளும் அவன் மேல விழுந்தாள். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த நிகழ்வில் இருந்து யாரும் வெளியே வராமல் சிலையாக இருந்தனர்.
 
Last edited:
சிவாவின், ‘ஜான்!’ என கத்தலே அனைவரையும் நிதானத்திற்கு வர வைத்தது.

“எஸ் மேடம்”, என வந்தான் ஜான், அந்த வீட்டின் வேலையாள். முகத்தில் பயத்தின் ரேகை தாண்டவம் ஆட

“யாராவது புதுசா இன்னைக்கு வேலை பார்க்க உள்ள வந்தாங்களா”, என கேட்ட குரலில் இருந்தது என்ன பயமா கோபமா இல்ல வெறியா என யாராலும் உணர முடியவில்லை.

“புதுசா யாரும் வேலைக்கு வரலை மேடம். ஆனால் காலையில் வீட்டை டெகரேட் பண்ண இரண்டு பேர் நீங்க சொன்னதாக வந்தாங்க. உங்களுக்கு காலில் அடிப்பட்ட போது நான் அவங்களை கடைசியா பார்த்தேன். அதுக்கு அப்புறம் அவங்க இங்க இல்லை கிளம்பிட்டாங்க”, என

ஒரு நிமிடம் தன்னை நிதானித்துக் கொண்டு அனைவரையும் பார்த்து, “எல்லோரும் இப்ப கிளம்புங்க. அம்மா ரித்து நீங்க இரண்டு பேரும் சந்தோஷ் கூட அவங்க வீட்டிற்கு கிளம்புங்க. கோபி பாம் ஸ்காடுக்கு போன் போட்டு உடனே வர சொல்லு. ஒருத்தர் கூட உள்ள இருக்க கூடாது. எல்லா சர்வன்டையும் வெளியே போக சொல்லுங்க”

சந்தோஷின் பெற்றோர் ஒரு காரிலும் காமாட்சியும் ரித்துவும் ஒரு காரில் செல்ல, இவர்கள் இரு காருக்கும் முன்னும் பின்னும் இரண்டு கார் அவர்களுக்கு பாதுகாப்பிற்காக சென்றது.

இவளின் வேகத்தை பார்த்து அனைவரும் வாயடைத்து நின்றுவிட்டனர். அனைவரும் கிளம்ப பிரகாஷ் மட்டும் போக மனமில்லாததால் சிவாவோட நின்று இருந்தான்.

பாம் ஸ்காடு வந்துவிட அடுத்த ஐந்து நிமிடம் அந்த இடமே பரபரப்பாக இருந்தது. ஐந்து நிமிடம் கழித்து வந்த ஒர் அதிகாரி,

“மேடம் நீங்க சரியான நேரத்திற்கு கூப்பிட்டிங்க. இது ரொம்ப பயங்கிரமான பாம். வெடிச்சா ஒரு கிலோ மீட்டருக்கு உள்ள எல்லாமே வெடிச்சி சிதறிடும். எதுக்கும் இன்னும் கொஞ்ச பாதுக்காப்பாக இருங்க”, என்று விட்டு அவர்கள் அனைவரும் சென்றனர்.

பாம் ஸ்காட் சென்ற பின் மேலும் வீட்டின் பாதுகாப்பை அதிகரித்துவிட்டு பிரகாஷ் உடன் சந்தோஷின் இல்லம் நோக்கி சென்றனர்.

இருவரையும் பார்த்த பின் தான் அனைவருக்கும் முச்சே வந்தது. சிவாவிடம் என்ன நடந்தது என கேட்க நடந்ததை சொன்னாள்.

சந்தோஷ், “நீங்க எப்படி கரெட்டா கண்டுப்பிடிச்சிங்க?”

சிறிதாக சிரித்துவிட்டு, “என்னை சுற்றி அப்பவுமே ஆபத்து நிறைய இருக்கும். நான் கொஞ்ச அசந்தனா கூட என்னை அழிச்சிட்டு போய்டுவாங்க. நல்ல வேலை நம்ம கடைசி நிமிசத்தில் ஈவினிக் இருந்த பங்ஷனை மார்னிங் மாத்திட்டோம். அவங்க ஈவினிங் தான் பங்ஷன்னு நினைச்சு டைம் கரெட்டா ஆறு மணிக்கு சேட் பண்ணிருக்காங்க. நீங்க யாரும் பயப்படாதிங்க. அவங்களை எல்லாம் ஒரு நிமிசத்தில் ஒன்றும் இல்லாமல் ஆக்கிடுவேன். ரித்து கல்யாணத்துக்காக பொறுமையா இருந்தேன். அவங்க நேரம் கெட்டாதா இருந்தால் என்ன பண்ண முடியும். நாளைக்கு அவனுக்கு விடியுமா... சந்தேகம் தான்”.

“நீ மட்டும் தனியா எப்படி மா இவங்களை எல்லாம் சாமாளிப்ப?” என ஜோதி கேட்க

“ம்மா.. இதெல்லாம் அவங்களுக்கு ஜிஜீபி மேட்டர். இல்லையாங்க,” என சந்தோஷ் கேட்கும் போதே சிவாவின் கைப்பேசி அலறியது.

“ஹாலோ சிவா ஹியர். ம்ம்ம் குட்.. அப்படியா ஒரு பிரச்சனையும் இல்ல. அவனை பார்சல் பண்ணி அவ வீட்டிற்கு அனுப்பிடு. அப்புறம் அவனோட பொன்னை அடாப்ட் பன்ற பிரோசிஜரை பாருங்க. வேற எதாவது இருந்தால் எனக்கு கால் பண்ணு கோபி”, என போனை அவள் அனைக்க அப்போது தான் பார்த்தால் அவசரத்தில் அனைவரின் முன்பே போனில் பேசியது. அனைவரது அதிர்ந்த முகமே சொன்னது இதை யாரும் எதிர்பார்க்கவில்லை என்று.

“உங்க எல்லார் முகமே சொல்லுது இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டிங்கனு. பட் இது தான் நான். சிவாவை இவ்வளோ ஈசியா நினைச்ச அந்த சதாசிவம் அவனோட ரைட் ஹான்ட் வேதநாயகத்தை நம்பலை அழிக்க நினைச்சான். அவனை ஈசியா பிடிச்சாச்சு. நாளைக்கு அப்படி ஒருத்தன் இந்த உலகத்தில் இருக்க மாட்டான். அந்த வேதநாயகத்திற்கு ஒரு பொன்னு இருக்கு. அந்த பொன்னை நான் பார்த்துப்பேன்”, என

அனைவரின் முகத்திலும் பயம் தெரிய,

“நான் தனியா இல்லங்க. என் கிட்ட சக்தி இருக்கு. யாருக்கும் கிடைக்காத சக்தி எனக்கு இருக்கு. நீங்க கவலைப்படாதிங்க. கல்யாண வேலையை பாருங்க. பட் எல்லோரும் கொஞ்ச கவனமாக இருங்க”, என அனைவரும் தலையை ஆட்டினர்.

பிரகாஷ் மட்டும் சிவாயை பார்த்து சிரித்தான். அவனின் சிரிப்பிற்கு அர்த்தம் அவனுக்கு மட்டுமே தெரியும். அனைவரும் அவனை புரியாமல் பார்க்க சிவா அவனை முறைத்ததும் அவனது அறைக்கு சென்றான்.

கல்யாண நாளும் நெருங்கியது. ஒரு நாள் சந்தோஷ் ரித்து பிரகாஷ் சிவா நால்வரும் மாலுக்கு சென்றனர். வரமாட்டேன் என்ற சிவாவை பல முறை கெஞ்சிய பிறகே வந்தாள்.

முவரும் ஜாலியாக வர சிவா மட்டும் நான்கு புறமும் நொட்டம் விட்டு கொண்டே வந்தாள். அதை கவனித்த பிரகாஷ் 'ச்சை இப்ப பார்த்தாலும் சிஐடி வேலை தான். நான் எப்ப அவளை கரெட் பண்ணி கல்யாணம் பண்ணி.. நினைக்கும் போதே முச்சி முட்டுதே', என அவளையே ஏக்கமாக பார்த்துக் கொண்டு வந்தான். ரித்துவும் சந்தோஷம் தனி உலகத்திற்கு சென்றனர்.

திரும்பி செல்ல, காரின் பின்னிருக்கையில் ரித்துவும் சந்தோஷம் உட்கார பிரகாஷ் காரை ஓட்ட சிவா அவன் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.

ஒரு வளைவில் எதேர்ச்சையாக ரியர் வியூ மிரரில் பார்க்க அவர்களை இரண்டு லாரி துரத்திக் கொண்டு வருவதை பார்த்தாள்.

சிவாவிடம் திரும்பி, “டேய் நீ வண்டியை உருட்டன வரைக்கும் போதும். இப்ப கொஞ்சம் வேகமாக போறியா”

“வாட்! நான் உருட்டுறனா. ஹாலோ நான் 120 கி.மீ வேகத்தில் போறேன். இதுக்கு மேலயெல்லாம் ஓட்ட முடியாது”, என

அவனின் சீட்டை பின் புறமாக தள்ளிவிட்டு அவனின் மேல ஏறி உட்கார்ந்தாள். இவளின் செயலை பார்த்து சந்தோஷம் ரித்துவும் அதிர்ச்சியாக பார்க்க பிரகாஷ் இது தான் சமயம் என்று அவளை நெருங்கி ஒட்டிக் கொண்டு இருந்தான்.

“அக்கா என்ன பண்ற”,

“முன்று பேரும் பதறாமால் கேளுங்க, நம்ம காரை இரண்டு லாரி துரத்துராங்க. நீங்க பயப்படாதிங்க”, என அந்த காரை வேகமாக ஒட்டினாள்.

அவளின் வேகத்தில் சந்தோஷ் ரித்து இருவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்க, பிராகாஷோ சிவாவின் இடையை தன் கைகளால் அளந்துக் கொண்டு இருந்தான்.

அவளுக்கு குறுகுறுப்பு தோன்றினாலும் சாலையிலும் பின்னாடி வரும் லாரியிலும் கவனத்தை செலுத்தியதால் அதை அவள் கவனிக்கவில்லை.

ரித்து, “சந்து மாமா.. அங்க பாரேன் உன் தம்பி சந்தடி சாக்கில் அக்கவோட இடுப்பை பிடிச்சிருக்கான்”, என

அட கடவுளே!.. “டேய் பிரகாஷ்”, என அவனோ திரும்பினால் தானே

டேய்..... என அவனின் தோளில் உரச அவனும் திரும்பி பார்த்து என்ன என்று கண்ணாலே கேட்டான்.

“நீ பண்றதை அவங்க கவனிக்கலடா. தயவு செய்து கையை ஓழுங்க வைச்சிட்டு வா”, என

“எனக்கு தெரியும் ப்ரோ. முடிட்டு உன் வேலையை பாரு. என் தேவதைய இவ்வளோ கிட்ட பார்க்க திரும்ப வாய்ப்பு கிடைக்குமோ, அதுவும் இது மாதிரி ஒரு சேசிங்ல. நீ வாயை முடிட்டு போகல அண்ணானு கூட பார்க்க மாட்டேன் வாயை உடைச்சிடுவேன்”, என்று மெதுவாக அவனை திட்ட

“ஏப்பா டேய் நீ எதோ பண்ணு”, என ரித்துவிடம் அவன் சொன்னதை சொன்னான். அவளும் சிரித்துக் கொண்டே பின்னால் வரும் லாரியை பார்த்தால் அது அங்கு இல்லை.

“அக்கா பின்னாடி லாரி வரலை. நம்மலும் வீடுக் கிட்ட நெருக்கிட்டோம்”, என

சிவா பின்னாடி லாரி வராததை பார்த்துவிட்டு தனது சீட்டிற்கு சென்றாள். பிரகாஷ் வண்டி ஒட்ட ஆரம்பித்தான்.

கல்யாண நாளும் வந்தது. நாளை கல்யாணம் இன்று இரவு வரவேற்பு விழா.

வரவேற்பு விழா பிரம்மாண்டமாக நடந்தது. அவ்வளவு சிறப்பாக சிவா ஏற்பாடு செய்திருந்தாள். வெகு நேரம் ஆகியதால் அனைவரும் தூங்க சென்றனர். ஆனால் சிவா மட்டும் எதோ யோசித்துக் கொண்டே இருந்தாள். அவளுக்கு அங்கு வேலை செய்யும் ஒருவர் வந்து ஜீஸ் கொடுக்க இருந்த குழப்பத்தில் யார் கொடுப்பது என கவனிக்காமல் அதை குடித்துவிட்டாள். அவளுக்கு தலையெல்லாம் சுற்ற ஆரம்பித்தது. மெதுவாக படியேறி நடக்க ஆரம்பித்தால் கொஞ்ச தூரம் சென்ற பின் தள்ளாடி கீழே விழுந்து விட்டாள். அப்போ பக்கத்தில் இருந்த விளக்கில் முந்தாணி பட்டு தீ பிடித்தது. அதை கவனிக்காமல் தன் அறைக்கு செல்ல அவளை பின்னிருந்து வேகமாக இழுத்தான் பிரகாஷ்.

அவளின் சேலையை இழுத்து வெளியே போட்டான். அவனது அறைக்கு அவளை அழைத்துச் செல்லும் போது தான் அவளின் நிலையை கண்டான்.

“சிவா.. இங்க பாரு.. ஏய்”, என அழைக்க

அவளோ,” ஹான்... யாரு இது. ஓ.. நீயா நீ என்ன பண்ற.. என்னோட ரூமில். எங்கடா என்னோட சேலை”, என தெளிவில்லாமல் பேசினாள்.

இதுக்கு மேல் இவளை ரூமில் வைத்து இருக்கிறது நல்லது இல்லை, என அறையை திறக்க திறக்கமுடியவில்லை. வெளியே யாரோ பூட்டியது போல் இருந்தது.

அவனோட போனில் சார்ஜீம் இல்லை. யாருக்கும் அழைக்க முடியாமல் அவனோட சட்டையை கீழட்டி,

“இதை போடு சிவா”, என சட்டையை கொடுத்தான்.

“நான் ஏன் போடனும். மாட்டேனே..” என அந்த அறையில் ஓடினாள்.

“ப்ளீஸ்டி. என் செல்லம்ல இதை போட்டுக்கோ. நாளைக்கு நான் உனக்கு சாக்லேட் வாங்கி தரேன்”, என குழந்தையிடம் கொஞ்சுவது போல் கெஞ்சினான்.

“சேரி.. அப்ப ரெண்டு வாங்கி தா”, என சட்டையை போட முடியாமல் மாற்றி மாற்றி போட்டல், அதை பார்த்து சிரித்தவன் அவனே அதை அவளுக்கு போட்டு விட்டான்.

“இப்ப நீங்க குட் கேர்ளா தூங்குவிங்களாம்”, என

“மாட்ட.. நான் இப்ப தூங்கினா யாரு எனக்கு கதை சொல்லுவாங்க”,

“நான் சொல்லுறேன் வா தூங்கலாம்”, என அவளை படுக்க வைத்து அவனும் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவளுக்கு கதையை சொல்லிக் கொண்டே இருவரும் தூங்கிவிட்டனர்.

காலை கல்யாண மண்டபமே பரபரப்பாக இருந்தது. சந்தோஷ் மணமேடையில் அமர்ந்தியிருக்க, ரித்துவை எதிர்பார்த்திருந்தான். அவளும் வந்தாள். அனைவரின் ஆசிர்வாதத்துடன் அவளை தன் மனைவியாக்கிக் கொண்டான். சிறிது நேரம் கழித்து தான் அனைவரும் சிவாவும் பிரகாஷ் யும் இங்கு இல்லாமல் இருப்பதை பார்த்து தேட ஆரம்பித்தனர்.

அனைவரும் கிளம்பி இருக்க இன்னும் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் இருந்தது.

“அம்மா பிரகாஷ் மேல தனியா ஒரே ரூம் இருக்கே அங்க தான் தூங்க போவதாக சொன்னான் வாங்க அங்க போய் பார்க்கலாம்”, என அனைவரும் அங்கே சென்றனர்.

ஆனால் கதவு வெளி புறம் தாழ்பாள் பொட்டு இருப்பதை பார்த்து கிளம்ப நினைக்க அவர்களுடன் வந்த ஒரு பெண்மனி, “அங்க பாருங்க இது நேத்து சிவா போட்டுயிருந்த சேலை மாதிரியே இருக்கு”, என

அதை பார்த்த அனைவரும் தாழ்பாளை திறந்து உள்ளே சென்றனர். அவர்கள் இருந்த நிலையை பார்த்து எல்லாரும் அதிர்ந்தனர்.

தொடரும்
நிலா ❤
 
Top