Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உனக்காக நான் - அத்தியாயம் 1

Advertisement

Subhashri

Member
Member
"உன்னை நான் சந்தித்தது
முற்பிறவி பந்தமோ
இப்பிறவியின் விதியோ
இனிமேல் எப்போதும் இணைந்திருப்போம்
நீயும் நானும் !!"

################


நீயும் நானும்!!

திவ்யா – அழகு தேவதை என்று சொல்லமுடியாது அவளை…ஆனால் அடுத்த வீட்டு பெண் போல யதார்த்தமான அழகுள்ள பெண்..

குறும்பும் குணமும் ஒரு சேர கலந்திருக்கும் கலவை அவள்.. ஒடிசலான தேகத்துடன் ஓடி ஆடிக் கொண்டிருக்கும் ஓவியம் அவள்.. இடை வரை நீண்ட வகிடெடுத்து வாரி பின்னலிட்ட கூந்தல் அவள் ஆட்டத்திற்கு ஈடாக இடவலமாக ஆடிக்கொண்டிருக்கும்..

வீட்டில் தன் ஒரே அண்ணனோடு பிறந்த செல்லப் பெண்…

அப்பாவின் உயிர் அவள்.. “ இந்த வீட்டு இளவரசி என் மகள்” என்பார் அவர்.



அம்மாவின் கவலை அவள்.. “சிட்டுக்குருவியைப் போல் ஆனந்தமாய் சுற்றித் திரிகிறாள் இந்த வீட்டில். போகிற இடத்தில் எப்படி இருக்கப்போகிறாளோ?” என்று புலம்புவாள் .

பாட்டி தாத்தாவின் செல்ல பேத்தி..23 வயதிலும் பாட்டியிடம் கதை கேட்க பிடிக்கும் அவளுக்கு.. பாட்டியும் சலித்துக்கொள்ளாமல் குழந்தைக்கு கதை சொல்வது போல் ஆர்வத்துடன் சொல்வாள்.

அண்ணன்- ஸ்ரீதர் – சில சமயங்களில் அவளை சீண்டி விட்டு சண்டை போடுவான். சில நேரங்களில் அவள் கேட்பதையெல்லாம் விட்டு கொடுத்து அன்பு மழை பொழிவான்.

திவ்யா – பெயருக்கு ஏற்ப திவ்யமாக பாடுவாள், பரதநாட்டியம் ஆடுவாள், நன்கு படிப்பாள், கோலம் போடுவாள் , வரைவாள், வீணை வாசிப்பாள். மொத்தத்தில் அவள் ஒரு சகலகலாவல்லி..

ஆசிரியர் பயிற்சி கல்வி முடித்து விட்டு சென்னையிலே வீட்டிற்கு அருகில் ஒரு ஆரம்ப பள்ளியில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆசிரியையாக பணியாற்றுகிறாள்.

இன்று அவளை மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்க்க வருகிறார்கள். தரகர் விஷயத்தை சொன்னதில் இருந்து வீடே அல்லோலகல்லோலப் பட்டது..

மாப்பிள்ளை வீடு...
அர்ஜுன் - ஆறடி உயரத்தில் ஓர் ஆணழகன்.. அப்பாவின் சிறிய வியாபாரத்தை தன் சுய உழைப்பாலும் திறனாலும் பல மடங்கு வேர் விட்டு வளரச் செய்தவன். பல பெண்களின் கனவில் வந்து இம்சை செய்யும் 25 வயது இளைஞன்.

அவனுடைய அப்பா சிவனேசன் அவனை அவசரப் படுத்திக் கொண்டிருந்தார். "டேய்!! அர்ஜுன் !! எவ்வளவு நேரம் டா.. கிளம்ப? அவங்க வீட்டுக்கு 5 மணிக்கு வர்றதா தரகர் கிட்ட சொல்லி அனுப்பி இருக்கோம்.இங்கேயே 4 ஆகிடுச்சு. உனக்கு தயாராக இவ்வளவு நேரமா? உன்னை பார்த்து எந்த பெண்ணாவது வேண்டாம், பிடிக்கலை னு சொல்வாளா? எதுக்கு தயாராக இவ்வளவு நேரம் உனக்கு? " என்று படபடத்தார்.

"அப்பா!! தப்பித் தவறி கூட வேண்டாம், பிடிக்கலை னு சொல்லிடக்கூடாது பா.. இந்த ஜென்மத்துக்கு திவ்யா தான் எனக்கு பொண்டாட்டி. அதுல எந்த மாற்றமும் இல்ல " என்று சொன்னவன் , " அவ செஞ்ச பாவத்துக்கான தண்டனையை அப்பதானே வாழ்க்கை பூரா நான் அவளுக்கு கொடுத்து சந்தோஷப்படமுடியும்" இவ்வாறு மனதினில் எண்ணிக் கொண்டே அர்த்தமுள்ள சிரிப்பை உதிர்த்தான்.

தொடரும்............
 
Top