Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-01

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-01

“அத்துமீறி நுழையாத பெண்ணே

என் இதயத்தில் சிறைப்பட்டு

ஆயுள் கைதியாயிடுவாய்…..”



கீ..கீ.. என்று ஹாரன் அடித்துக்கொண்டே கார் ,அந்த ரோட்டின் உள்ளே செல்ல முயல, வழக்கமான டிராபிக் இந்த சென்னை மாநகரில்..

ச்சே..மெயின் ரோட்டில் தான் டிராபிக்குன்ன இந்த பொந்துக்குள் கூட இவ்வளவு கூட்ட நெரிசல், தமிழ்நாட்டிலிருக்கும் எல்லா ஜெனங்களும் இங்கதான் இருப்பார் போல, இந்த சென்னை நேரிசலில் கார் ஒட்டும் ஆசையே போயிடும் சளித்தப்படி தன் மனைவியிடம் பேசினார் ராஜ்சேகர்...

தன் கனவன் பேசியதை ஆமோதித்த ரேணுகா, ஆனாலும் மக்களுக்கு சென்னைதாங்க பிடிக்குது...அதுவும் இது டி.நகர் எப்படியிருக்குமா.

என்னதை பிடிக்குது, இந்த தெருவிலே எவ்வளவு நெரிசல் பாரு பத்து நிமிஷம் ஆகுது, கிளியராகல ரேணு... அந்த பக்கம் போன ஒரு ஆளை கூப்பிட்டு ஸார் ஏன் டிராபிக்..

நம்ம குருமூர்த்தி ஐயாவோட அப்பா இறந்திட்டாரு பெரிய சாவு சார் அதான் ரோட்டையே மூடிட்டாங்க... கொஞ்சம் நேரமாகும் பார்த்து போங்க ஸார்.

சரிங்க தேங்க்ஸ்..அந்த தெரு கொஞ்சம் பெரிசு, தெருவின் மூளை திரும்ப அதை ஒட்டி போடப்பட்ட பந்தல் , முன்னாடி பறை, மோளம் அடிக்க, மாலையை தூக்கிக்கொண்டு ஒரு கும்பல் வந்தது. டோம்..டோம் பட்டாசு வெடித்தார்கள். பேண்ட் மேளம் காதை கிழிக்க... அதில் நான்கு பேர் தண்ணீய போட்டு குத்தாட்டம் போட்டனர் கூட அந்த தெரு சிறுவர்களும் ஆடினர்.

ரேணு அங்க பாரு யாரு டான்ஸ் ஆடுறது...

யாரு... ரேணு அவர்களை பார்க்க... நடுவுல லுங்கியை பல்லில் கடித்துக் கொண்டு ஒத்த காலை தூங்கி ஆடிக்கொண்டிருந்தான் இனியன்...

இனியா... இனியாவா இது, அலை அலையாக முடி, அடர்த்தியான மீசை மாநிறம், ஆறடி உயரம் ,ஏங்க எவ்வளவு அழகாக டான்ஸ் ஆடுறான் பாருங்க. அழகு என் அண்ணா பையன், லட்சனம்மா இருக்கான்..

ஏன்டி பொணத்துக்கு முன்னாடி டான்ஸ் ஆடுறான் , படிக்கிற பையனா... அவன பத்தி என்ன தெரியும்.. குடிச்சிருக்கான்டி ,ரோடுல ஆடுறான் பாரு மானமே போகுது.. ச்சே தலையில் அடித்துக்கொண்டார்.. காரின் ஹாரன் அடிக்க, அந்தபக்கம் ஒருவன் தள்ளிவிட காரின் மீது விழுந்தான் இனியன்..

ஏய், எவன்டா கார குறுக்கால எடுத்துட்டு வரது.. எங்கய்யா இல்லாத துக்கத்தில இருக்கோம்.காரின் விண்டோவை பார்க்க...

எங்கயோ பார்த்த முகம்.. முகத்தை கிட்ட எடுத்து வந்து பார்க்க..ஹா..ஹா நம்ம பிரகாஷ்ராஜ் போல இருக்கு. மாமோய் எப்படியிருக்கீங்க.. தன் உதட்டை பிதுக்கி.. நல்லாதான் இருப்பிங்க..

ராஜ்சேகர் இனியனை முறைத்து பார்க்க..ஹாய் டார்லிங் நீயும்மா வந்திருக்க..இரு நான் அந்தப்பக்கம் வரேன்..

ரேணு ,அவன் கண்ணத்தை கையிலால் தொட்டு முத்துமிட... நல்லாயிருக்கீயாடா.. என் செல்லம்..

நீ எப்படியிருக்க அத்தை... உன்னை கட்டிக்கொடுக்க முன்னாடி குஷ்பு மாதிரி இருந்த இந்த ஆளை கட்டிக்கிட்டு தமன்னா மாதிரி ஒல்லியாயிட்டே அத்தை.. புருஷன் சோறு போடலியா.. பேசாம எங்கிட்ட வந்துடு அத்தை.. நான் பார்த்துக்கிறேன் என் டார்லிங்கை..

போடா போக்கிரி... மாமாவ இப்படி பேசக்கூடாதுடா... சரி உன் போன் நம்பர் கொடு சீக்கீரம்...

அவள் செல்லை வாங்கி டைப் பண்ணி கொடுத்தான்..பை மாமா, அத்தை...விட்ட இடத்திலிருந்து ஆட தொடங்கினான்..

கார் அங்கேயிருந்து கிளம்பியது... இவன் பேசுவதை கேட்டு தன்னை மறந்திருந்தாள், காரின் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த...ரேனு, ராஜ்சேகரின் மூத்த புதல்வி இவர்களின் வீட்டின் தேவதை, மகாலட்சுமி, குட்டிம்மா என்கிற தேன்மொழியாள்...

மாமா என்று மனதிலிருந்து தேணு அழைக்க, ஆடிக்கொண்டிருந்தவன் தீடிரென்று திரும்பி அசோக் கூப்பிட்டியாடா..

நானா.. இல்லையே ,இனியன் சுற்றி சுற்றி பார்க்க.. கார் அந்த இடத்தை விட்டு சென்றது...

ரேனு உன் அண்ணன் எப்படி இவனை தறுதலையா வளர்த்துவிட்டிருக்கான்... சுத்தம்மா கேட்டு போயிட்டான்டி.. தண்ணீ அடிச்சி, தெருவில ஆடுறான்..

இவன் இப்படியாகுறது யார் காரணம்ங்க... அத்தைகிட்ட உதவி கேட்காம தள்ளி நிற்கிறானே... என் அண்ணா, அண்ணீ உயிரோட இல்லை... அவனுக்கு இருக்கிற ஒரே பந்தம் இந்த அத்தை... நானே அவனை கவனிக்கல விடுங்க... நடந்ததை நினைத்து ஒரு பிரயோஜனம் இல்லை. கண்களில் வரும் கண்ணீரை துடைத்த படி பேசினாள்...

இப்போ எதுக்கு அழற...

ஆமாம் இனியாவ உங்களுக்கு பிடிக்காது... அதான் இப்படி பேசிறீங்க...

சரி நீயே ஏதாவது நினைச்சிகோ..அதுக்கு நான் பொறுப்பில்ல....

.......

அடுத்த நாள் மதியம் முனு மணிக்கு பீனீக்ஸ் மாலில்,ரேணுவும், இனியனும் அங்கேயிருக்கும் உணவகத்தில் சந்தித்தார்கள்... அத்தைக்கு என்ன உணவு என்று ஆர்டர் செய்தான்..

அப்பறம் அத்தை, எதுக்கு இந்த ஊருக்கு வந்திருக்கீங்க.. மாமா ஏதாவது பிஸினஸ் செய்ய போறாரா...

அதைபற்றி எனக்கு எதுவும் தெரியாது இனியா, நீ அப்ப பார்த்த மாதிரி தான் நான் இருக்கேன். ஏன்டா இனியா இப்படியிருக்க..

ஏன், எப்படியிருக்கேன்...அழகாக இல்லையா அத்தை..

டேய் நீ எப்பவும் அழகன்தான்டா... சின்னவயசிலே களையா இருப்படா இப்போ பெரியவனா ஆயிட்டியா, ஹூரோ மாதிரி இருக்க, நான் அத சொல்லலை இப்படி தண்ணீ அடிச்சிட்டு...

தன் கையை நீட்டி, அத்தை நிறுத்து உன் வீட்டுக்காரர் சொன்னாரா.. இனியன் கோவமாக கேட்க..

டேய் இப்போ என்ன கோவம்... சரி நான் ஏன் இங்க வந்தேன் சொல்லுறேன்... சிவாவ இங்க காண்வென்ட்ல சேர்த்திருக்கோம்...

ஓ அப்படியா அத்தை, எத்தனையாவது படிக்கிறான்... இப்போ ப்ளஸ் ஒண், டாக்டர் படிக்கனும் ஆசைப்படுறான், சென்னையில தான் படிக்கனும் அடம்பிடிச்சான், அதான் அவங்கப்பா சேர்த்துவிட்டுக்காரு, கொஞ்சம் பார்த்துக்கோடா...

சரி அத்தை, அட்ரஸ் கொடுத்துட்டு போ, நான் ஃப்ரியா இருக்கும்போது பார்த்துக்கிறேன். உன் பிள்ளைக்குன்னா வர, என்னை மறந்திட்டயில்ல..

நீ சென்னையிலதான் இருக்கிற தெரியும்... நம்ம ராக்கு அத்தை சொல்லிட்டு அட்ரஸ் கொடுத்திச்சிடா... நானே இன்னிக்கு வந்து பார்த்திருப்பேன்..

இனியா... மெதுவாக...இனியா..

என்ன அத்தை..

தேனை பத்தி கேட்கவேயில்லையே ,

அவளை எதுக்கு கேட்கனும், அவளைப்பற்றி பேசனும்ன்னா.. நமக்குள்ள எதுவும் இல்லை. அத்தை நான் கிளம்பட்டும்மா கொஞ்சம் வேலையிருக்கு...

டேய் என்னடா அவசரம், கொஞ்சம் நேரம் பேசிட்டு போடா..வந்தவுடனே ஒடுறே..

உண்மையா வேலையிருக்கு அத்தை, நாளைக்கு காலேஜ் வேற போணோம்.. கிளம்ப ரெடியானான்...

இனியா முக்கியமான விஷியம் பேசனோம்டா...

அத்தை போன்ல பேசுங்க.. பார்த்து ஊருக்கு போங்க.. நான் பார்த்துக்கிறேன் சிவாவை ஒகேவா...

ச்சே.. அதுங்க ரெண்டும் என்ன பண்ணபோதோ அதை சொல்லறதுக்குள்ள கிளம்பிட்டான்... ஜாக்கிரதையா இருடா இனியா...தனக்குள் முனுமுனுத்தாள்.

......

சென்னை SSN காலேஜில்,

இன்னியோடு பர்ஸ்ட் இயர் பசங்க வந்து மூனு நாளாச்சுடா... ரேங்கிங் களை கட்டனும்.ஒரு இளைஞர் கும்பல் சிமென்ட் பெஞ்சை சுற்றியிருந்தது. டேய் பார்த்து ஒவரா போக கூடாதுடா.. சின்னதா, ஜாலியா செய்யனும். அதில் ஒருவன் சொல்ல. கூட்டமாக மொத்தம் ஏழு பேர் இருந்தார்கள். அனைவரும் பிஜி இரண்டாம் வருடம் படிக்கும் மாணவர்கள்.

ஏய் அசோக் அங்க பாரு அந்த பர்பல் சுடிதார் செமையா இருக்குடா, கூப்பிடு ஆரம்பிச்சடலாம்..

ஹலோ இரண்டுபேரும் இங்க வாங்க.. என்ன குரூப்பு..

கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ணா, என்று நிவேதா சொல்ல..

ஏய் நான் உன் அண்ணாவா, மரியாதையா பேரவிட்டு கூப்பிடு, அண்ணா சொன்ன கையை காலை எடுத்திடுவேன் ,அசோக் மிரட்ட.

என்னடாது அண்ணா சொன்னது குற்றம்மா, நிவேதா முழித்தாள்...

சரி, பர்பல் சூடி நீ என்ன செய்யறேன்னா, எல்லாருக்கும் சலியூட் அடிச்சிட்டு, மாப்பிள்ளை அந்த ரோஸை கொடு...பக்கத்தில் இருப்பவனிடம் ரோஸை வாங்கி , உன் லவ்வருக்கு சொல்லுற மாதிரி, இங்க யாருக்குன்னா ஐ லவ் யூ சொல்லு..

ரோஸை வாங்கியவள்... அது எங்க மாமாகிட்ட மட்டும்தான் சொல்லுவேன்...

ஓஓஓ... அப்படி வரீயா... யாரு உங்க மாமா என்று அசோக் கேட்க..

கையை நீட்டி காட்டினாள், என்னது என்று எல்லாரும் திரும்ப, அவர்கள் பின்னாடி பைக்கின் மேல் படுத்துக் கொண்டு,கைகளை நெற்றியில் சாய்த்து, கண்ணை மூடி ஹேட் போனில் பாட்டு கேட்டிருந்தான்...

டேய் இனியாயா.... அவனை தட்டி எழுப்ப..

ம்ம்ம் சொல்லு, டேய் இந்த பொண்ணு உன்னை லவ் பண்ணுதாமே.

என்னது, யாரு... அவர்களை தள்ளி, கண்னை திறந்து பார்த்தான். பர்பள் சூடி அணிந்து சந்தன நிறத்தில் இருந்தாள், என்ன நம்ம காலேஜில இப்படியோரு பிகரா.. இத்தனை நாளா பார்த்தேயில்ல எழுந்து உட்கார்ந்தான்...

மற்றவர்களை போக சொன்னான்...தன் கையை நீட்டி இங்க வா...

அவன் அருகில் வந்தாள்... உன்னை பார்த்ததே இல்லையே, நீ பர்ஸ்ட் இயரா,

இல்ல செகண்ட் இயர், அப்பாவுக்கு டிரான்ஸ்வர் இங்க சேர்ந்திட்டேன்.

ம்ம் நல்லாதான் இருக்க, போன வருஷம் பார்வதியின் சேகண்ட் இயர் பொண்ணு லவ் செய்யறேன் சொன்னா..நான்தான் ஒரு வாரத்தில பிரேக் கப் பண்ணிட்டேன்.. என்னால பிரியாணி ,பிஸ்ஸா வாங்கி கொடுத்து கட்டுபடியாகலை...

அந்த மாதிரி நீ செலவு வைப்பியா, என்னால முடியாது... யோசிச்கோ..

தன் கீழ் உதட்டை கடித்தப்படி, தலையை இல்ல என்று ஆட்டினாள்...

உன்னை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு, ஆனா ஞாபகம் வரமாட்டுங்குது. என்ன ஐஸ்டா பார்க்க முடியில அப்படியே மயக்கிறா. பிறை நிலா போல் நெற்றி, அதில் குட்டியாக பொட்டு, தீட்டிய புருவம், அழகான நாசி, இதற்கு கீழ் அம்மாடியோ பண்ணீர் ரோசா கலர்ல உதடு... இதை எங்கியோ பார்த்த மாதிரி இருக்கே, அப்படியே கொஞ்சம் கீழே இறங்க, ச்சீ தப்பு... அவன் மனசாட்சி சொல்ல... ஹாங் சினிமா நடிகை நயன்தாரா மாதிரி... சூப்பர் பிகரா தான் இருக்கா...

தன் கண்களால் ஸ்கேன் ஒடவிட்டு ஆமாம் உன் பெயர் என்ன... சிகரேட் எடுத்து பற்ற வைத்தான்.

ம்ம்ம் தேண்மொழியாள் மாமா...

சிகரேட்டை கீழே போட்டு அவளை முறைத்துவிட்டு நடந்தான்... மாமா ஏன் எதுவும் சொல்லாம போறீங்க... இனியன் கையை பிடித்தாள்..

கையை எடுடி..மாமா என்று தலையை குனிந்தாள்... இன்னோரு முறை என் முன்னாடி வந்து நில்லு.. அப்பறம் மூஞ்சே இல்லாம பண்ணிடுவேன்... உனக்கு எவ்வளவு கொழுப்பு.

---- சிக்க வைக்கிற
 
Top