Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-13

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-13

மாமா...மாமா... என்னாச்சு..கண்கள் திறக்க முடியாமல்..ம்ம் என்றான் இனியன்..

அய்யோ உடம்பு இப்படி சுடுதே... வெளியில வேற மழை பெய்யுது... எப்படி மாமாவ கூட்டிட்டு போறது.. உடனே அசோகுக்கு போன் பண்ணி விஷியத்தை சொன்னான் சிவா..

சிவா பயப்படாத நான் எங்க பேமிலி டாக்டரை கூட்டிட்டு வரேன்டா... இதோ கிளம்பிட்டேன்....

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அசோக் டாக்டரோடு இனியன் வீட்டிலிருந்தான்...

இனியாவை பரிசோத்தித்து... வைரல் பீவர் போலதான் இருக்கு... எத்தனை நாளா பீவர் தெரியில... டைபாய்டா இருக்க சான்ஸ் இருக்கு.. பார்க்கலாம் இன்ஞ்ஷசன் போட்டிருக்கேன். பீவர் கொஞ்சம் குறையும்... குறையிலைனா ஆஸ்பிட்டல்ல சேர்த்துதான் டிரிட்மன்ட் கொடுக்கனும்... டிரிப்பஸ் போட்டு போறேன்... அசோக் கையில் மருந்துசீட்டை கொடுத்து, மாத்திரை எழுதி கொடுத்திருக்கேன் த்ரீ டேஸ் பாலோ பண்ணுங்க...

இன்னும் மயக்கம் தெளியாமல் படுத்திருந்தான் இனியன்... மச்சான் என்னடா இப்படியிருக்க ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா... எப்படியாயிட்டான் பாரு சிவா...

அதற்குள் சிவா விஷியத்தை தேனுக்கு சொல்ல, இனியனை பார்க்க வீட்டில் போடும் நைட் பேண்ட், ஷர்டோட ஒடிவந்தாள்...

சோபாவில் உட்கார்ந்திருந்த அசோக்கை பார்த்து அண்ணா அவருக்கு என்னாச்சு.. உள்ளே போய் பாரும்மா..

கதவை திறந்து உள்ளே போனாள்.. மாமா என்று அவன் கையை பிடித்தாள்.. முகத்தில் தாடிவளர்ந்து கண்கள் உள்ளே சென்று , உடம்பு குறைந்து, பொலிவில்லாமல் படுத்திருந்தான்... ஒரு கையில் டிரிப்ஸ் ஏறியிருந்தது...

மாமா... மாமா சொல்லிக்கொண்டே அவன் முகத்தை கையால் தடவினாள்... மாமா இங்க பாருங்க நான் தேனு வந்திருக்கேன்.. மாமா ப்ளீஸ் கண்ணை திறந்து பாருமாமா... தப்புதான் மாமா இனிமே சண்ட போட மாட்டேன்...

தேனு அழுதுக்கொண்டே அவன் கேசத்தை ஒதுக்கி நெற்றியில் முத்தமிட்டாள்... இனியன் தன் கண்ணை மெதுவாக திறந்து பார்த்தான்... வந்திட்டியா தேனு கைகளை தூக்க முடியாமல் அவளிடம் கையை நீட்டினான்...

மாமா செத்துட்டானா உயிரோட இருக்கானா, பார்க்க வந்தியா தேனு.. அசோக் இவளை வெளியே போக சொல்லு...

அப்படி சொல்லாத மாமா, என்னால தாங்கமுடியில... அவனருகில் நெருங்கி அமர்ந்தாள்... என்ன என்று முகத்தை திருப்பிக் கொண்டான்..

அவன் முகத்தை நேராக திருப்பி, முகம் முழுவதும் முத்தமிட்டாள் தேன்மொழியாள்.. ஸாரி மாமா ஸாரி மாமா என்று ஒவ்வொரு முத்ததிற்கு மண்ணிப்பு கோரினாள்...

முத்ததின் மயக்கத்தில் கண்களை மூடி தூங்க ஆரம்பித்தான் இனியன்... அவன் தலையை கோதிய படி அவனை தூங்கவைத்தாள் தேனு...

இனியன் தூங்கிய பிறகு... ஹாலில் வந்தாள்... இப்போ உனக்கு திருப்தியா தேனு..

அண்ணா என்று அழதபடி தலை குனிந்தாள்..

அவன் எத்தனை முறை கேட்டான் தேனு, என்கிட்ட பேசு உன் ஏக்கமா இருக்குன்னு... நாங்க யாருமில்லாதவங்க தான் ஆனா சந்தோஷமா இருந்தோம்.. இப்போ நீ உறவுன்னு தெரிந்த பிறகு.. அவன் பாசத்துக்கு ஏங்கிறான் தேனு... என்னையே கூப்பிட மறந்திருக்கான் பாரு...உன் ஞாபகத்தில... இனிமே என் நன்பனை நான் பார்த்துப்பேன் தேனு யாரும் வேண்டாம்.. அவனுக்கு நான்போதும்... கிறுக்குபையன் தேனு தேனுன்னு உன் பின்னாடியே சுத்துனான்...

அண்ணா அப்படி சொல்லாதீங்க... நான் உயிர் வாழறதே என் மாமனுக்குதான்... அவர் இதுவரை என்னை புரிஞ்சிக்கல என்ற கோவம்தான்.. தன் கண்களை துடைத்துக் கொண்டு... அவருக்கு கஞ்சி வச்சித்தரேன்.. கிச்சனுக்குள் சென்றாள்..

ஒரு மணிநேரம் கழித்து... அசோக், நான் பார்த்துக்கிறேன் நீ போ தேனு உங்க பாட்டி தேடும்..

சரிண்ணா நான் நைட் வந்து பார்க்கிறேன்... கஞ்சி மட்டும் கொடுங்க காரம் எதுவும் கொடுக்காதீங்க... பார்த்துங்க..தேனு கிளம்பியவுடன் ரூமிற்குள் வந்தான் அசோக்.

டேய்... உலக மகா நடிப்புடா சாமி...

இனியன் பெட்சீட்டை விலக்கி எழுது அமர்ந்தான்.. கதவை லாக் போட்டியா..

ம்ம் போட்டாச்சு... மச்சான் ஒரு டவுட் நீ நல்லவனா கெட்டவனா.. (ரைட்டர்ஜிக்கே தெரியாம முழிக்கிறாங்க )

என் தேனுக்கு மட்டும்தான் அழகான கெட்டவன்... எழுதி கொடுத்த டயலாக்க ஒழங்கா பேசிட்ட.. மூனு நாள் டிரைனிங் கொடுத்து எங்கடா சொதப்பிடுவியோ பயந்தேன்... காலிங் பெல் அடிக்க..

அது தலப்பாகட்டு பிரியானி கொஞ்சம் சரக்கும் வாங்கிட்டு வர சொன்னேன்.. அதான் என் பிரண்டு வந்திருக்கான்..

கதவை திறந்து பார்சலை வாங்கிய அவசரத்தில் கதவை பூட்டாமல் இனியன் ரூமிற்கு வந்தான் அசோக்...

கீழே இறங்கி தன் ப்ளாட்டை நெருங்கும்போது சமீராவிடமிருந்து போன்வர, அதை அட்டன் செய்தால் தேனு...

ஏன்டி காலேஜ் வரல...

மாமாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்ல சமீ, மூனு நாளா ஜூரம்... டாக்டர் வந்து பார்த்தாரு..

என்னது அண்ணாவுக்கு ஜூரமா, காலையில வீட்டுக்கு வந்தாரு நல்லாதான் இருந்தாரே...

என்ன சொல்லுற சமீ... இரு நான் உனக்கு அப்பறம் போன் செய்யறேன்.. அடுத்த நோடியே இனியன் ப்ளாடுக்கு சென்றாள்...

மட்டன் பிரியானி வாசனையை அடிச்சிக்கவே முடியாதுடா இனியா... என்ன ரூசி... அப்படியே இந்த சரக்கு... தேனு உன்கூட சேர்ந்த தால டீரிட்.. இந்தா உனக்கு ஒரு கிளாஸ் இனியாவுக்கு கொடுக்க..

எனக்கு வேணாம் அசோக், அதைவிட கிக்கா இருக்கு தேனு எனக்கு கொடுத்த கிஸ்... கையை இந்தபக்கம் அந்தபக்கமா வைத்து ஹே இங்க கொடுத்தா, ஹே அங்க கொடுத்தா... அப்படியே சொக்கி விழுந்திட்டேன்டா மச்சான்... அந்த போதையோட இந்த போதை ஒண்ணுமேயில்ல... சும்மாவா சொன்னாங்க பெரியவங்க, மதுவைவிட மாது போதை தரும்... எப்படி இருந்தது தெரியுமா பறக்கிற மாதிரி...

“யாத்தே யாத்தே
யாத்தே என்னாச்சோ…
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ…

தலைகாலு புாியாம தரைமேல நிற்காம
தடுமாறிப் போனேனே நானே நானே”

முகத்தில் கையிலியை போட்டு தனுஷை போல் ஆட... மச்சான் டேய் மச்சான்னு அசோக் தொண்டையை செரும்ம...

இனியன் முகத்திலிருக்கும் கையிலியை விலக்கினாள் தேனு...

பாருடா சந்தோஷத்தில உன் முஞ்சியே என் தேனுவ போல இருக்கு... செம்ம ஹாப்பிடா மச்சான் ...

டேய்... அசோக் கூப்பிட... இனியன் திரும்ப அங்கே அசோக் கைகள் உதறல் எடுத்து நின்றிருந்தான்... அப்ப அவதானா... அய்யோ பத்ரகாளி பூமிக்கு வந்த மாதிரியே இருக்கா.

டேய் ப்ராடுன்னு இனியன் முடியை பிடித்தாள்.. நான் எஸ்கேப்பூ அசோக் ஹாலுக்கு ஓடினான்... மச்சான் என்னை விட்டு போகாதே.. டேய் அசோக்கு..

விடுடி... தலைவலிக்குது பெட்டிலிருந்த தலையனையை எடுத்து விளாசினாள்.. பெட்டில் மேலேறி ஓடினாள்.. என்ன நடிப்பு... இன்னிக்கு செத்தடா...கையால் முதுகில் அடிக்க.. வலிக்குதுடி.. விடு..

அவன் மேல் அமர்ந்து தலைமுடியை பிடித்து ஆட்ட..

தீடிரென்று இனியன் அமைதியாக தன் கீழ் உதட்டை கடித்து மோகப்புன்னகையில் இருக்க .

என்னடா லூசு பைத்தியம் பிடிச்சுபோச்சா... சிரிக்கிற ..அவன் கண்கள் சென்ற இடத்தை பார்க்க..

பாட்டா படிக்கவா தேனு...



“ ஹம்மா ஹம்மா ..

ஹே பள்ளித்
தாமரையே உன் பாதம்
கண்டேனே உன் பட்டுத்
தாவணி சரிய சரிய மீதம்
கண்டேனே”

“அம்மா...ம்மா...மா..மா” இனியன் கத்தினான்... “இப்போ வெளியே போடா மனசு திருப்தியா இருக்கு”, தேனு அவன்மேலிருந்து எழுந்தாள்...

அய்யோ ஆத்தாடி, டபிள்யூ டபிள்யூ எஃப் நடக்குது, அவன் கதை முடியும் நேரமிது... அமைதியாக கையை கட்டி சோபாவில் உட்கார்ந்தான் அசோக்...

அந்த சமயம் சிவா வீட்டிற்குள் நுழைந்தான்.. “என்ன அசோக் அண்ணா, எங்க உன் பிரண்டு.. நூறு ரூபாய்க்கு நடிக்க சொன்னா ஆயிரம் ரூபாய்க்கு நடிக்கிறாரு”..

“இந்த நடிப்பெல்லாம் எங்க அக்கா ஏமாறுவா.. நான் சிவா சான்ஸே இல்ல மாமோய்..”

சிவா வாயை கொஞ்சம் அடக்கு என்று வாயில் கை வைத்து காட்டினான் அசோக்... (காலையில் நடந்ததை அசோக் யோசிக்க...)

டாக்டர் இனியனை செக் செய்ய... என்ன இவரு டெம்பரேச்சரையே பார்க்கலையே சிவாக்கு முதல் டவுட்... அப்பதான் டாக்டரை உற்று பார்த்தான்..

நரேன் அவருதாங்க டாக்டர், இனியாவிடம் குனிந்து ..மச்சான் இந்த பையனுக்கு என்னை அடையாளம் தெரிஞ்சிடுச்சுடா.. என் தம்பியோட பிரண்ட்...நரேன் கூற..

அசோக்குகுகு.. சிவாவை பிடிடா இனியன் கத்த.. மூவரும் ஒடிபோய் சிவாவை கோழி பிடிப்பதுபோல் பிடித்தனர்...

“நீ நரேன் அண்ணாதானே... ஏய் இனியா மாமா எங்க அக்காவையே ஏமாத்திறதானே.. நான் போய் சொல்லுறேன்.. எல்லாம் நடிப்புன்னு...”

“சிவா மச்சான் என் செல்லமில்ல...”, சிவாவை முத்தமிட்டான் இனியன்... ச்சீ சிவா கண்ணத்தை துடைத்துவிட்டு... நான் சொல்லதான் போறேன்...

“அப்படியா போய் சொல்லு, இப்பதான் தோனி சைன் போட்ட கிரிக்கெட் பேட் வாங்கி வச்சேன்.. நீ கொடுத்து வைக்கல.. போய் சொல்லு..”

“ஹாங் பேட்டை காமிச்சு என்னை ஏமாத்த பார்க்கிறயா மாமா..”.

இனியா எப்படிடா சமாளிப்ப இவனை... அசைய மாட்டுறான் -அசோக்

“அவன விடுங்கடா ,சரி ஒபனா கேட்கிறேன்... உனக்கு என்ன வேனும்.. சொல்லு மாமா வாங்கித்தரேன் ப்ராமிஸ்...”

“ம்ம்.. இவ்வளவு கெஞ்சிற, கன்சிடர் பண்ணலாம்..”

இனியன் தலையில் அடித்துக் கொண்டு, “அப்படியே அவன் அப்பன் மாதிரிடா அசோக், பிஸினஸ் மேன் புத்தி...”

“அந்த பேட்டும் வேணும்.. அப்பறம் ரெட்ரீவர் நாய்.. பாரின் ப்ரீட்தான் வேணும் கிடைக்குமா...”

“டேய் அந்த நாய் விலை ஜாஸ்திடா”, அசோக் சொல்ல...

“சரி விடுடா மச்சான்.. வாங்கித் தரேன்டா சிவா..”

அக்கா வரா உன் ஆக்ட்டை கன்டினியூவ் செய் மாமா.. (இதுதாங்க நடந்தது...)

சிவா நீயும்மா தேனு வெளியே வர...வாயை மூடுடா சொன்னேன் கேட்டானா இந்த சிவா பையன்...

அக்கா.. சாரிக்கா .. மாமா கெஞ்சிச்சு..

என்கிட்ட பேசாதே சொல்லி அங்கிருந்து வெளியேறினாள் தேனு..

இனியா கண்ணத்தில இருந்து கையை எடு.. என்னடா இது ரத்தமா வருது...-அசோக்

கடிச்சிட்டா டா.. ஆஸ்பிட்டல் போய் டி.டி போடனும்...

அவன் இடது கண்ணத்தை பிடித்து ,”மூனு பல்லு பதிஞ்சிருக்கு இனியா...”

“அம்மா... அம்மா வலிக்குது...”, இனியன் கத்த... ரத்த காட்டேரி ரத்ததை உருஞ்சிட்டா ,வெளியில போகவே அசிங்கமாயிருக்கும் டா.. கண்ணத்தில என்ன காயம் கேட்டா என்ன சொல்லறது...

டெட்டால் எடுத்து வந்து துடைத்துவிட்டான் அசோக்...
 
Top