Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-16

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-16

மாரி, கையில் டீயோடு தேனுயிருக்கும் அறைக்குச் சென்றான்.. அவள் வாயிலிருக்கும் கட்டை பிரித்து இந்த டீ குடிம்மா.. காலையிலிருந்து இவனுங்க ஒண்ணும் சாப்பிட தரல...

யாராவது இருக்கிறார்களா சுற்றியிலும் பார்த்தாள் தேனு.. அண்ணா... எங்க மாமா தான் இனியன்...

நீ தப்பிச்சு போக முடியாதுமா.. காலையில் நாங்க பேசியதை கேட்டு நீ சொல்லுற...

இல்ல ,இனியா மாமா சொந்த ஊரு பூங்குடி.. அவங்க அத்தை பெயரு ரேனுகா... நான் தேனு..

நீ தேனுவா.. ஏன்மா முன்னாடியே சொல்லாம... இனியனை பார்த்த தானே.. தன் தலையில் அடித்துக் கொண்டான் மாரி.. ச்சே வாய் கட்டி வச்சிருந்தோம்...

நீ பயப்படாத இனியன் இன்னேரம் வந்துட்டு இருப்பான்.. போன்ல சிக்னலும் கிடைக்காது... மேசெஜ் அனுப்ப முடியுமா பார்க்கிறேன்... இந்தா தேனு டீ குடி...

அவள் வாங்கி டீ குடிப்பதற்குள் உள்ளே நுழைந்தான் செம்பு என்ற அடியாள்.. தீபக் அண்ணா உன்னை கூப்பிடுறாரு...

ம்ம்.. வெளியே தயங்கிய படி செல்ல..

குட்டி ரொம்ப சோக்கதான் இருக்கிற.. தேனுகிட்டே வந்தான்... அவள் தோளில் கையை வைத்தான்.. அப்பறம் என்று அவள் கண்ணத்தில் கையை வைக்க போக. அவனை தள்ளி விட்டாள் ...

ஏய் எவ்வளவு திமீர் உனக்கு... ப்ளாருன்னு கண்ணத்தில் ஒரு அடி வைத்தான் ..

சுருண்டு கீழே விழுந்தாள்.. இன்னிக்கு எனக்கு விருந்து நீதான்டி..

மாரி அதற்குள் உள்ளே ஒடி வந்தான்... ஏய் செம்பு என்னடா செய்யற... அந்த பொண்ணுகிட்ட.. தேனுவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

டேய் அவளை எங்க கூட்டிட்டு போற... ம்ம் தீபக் கிட்ட...

சரக்கு அடித்துக் கொண்டிருந்த தீபக்கிடம்... மாரி, தீபக் இது இனியாவோட அத்தை பொண்ணு... செம்பு என்ன செய்யறான் பாரு... இனியாவுக்கு தெரிஞ்சா உங்களை கொலை பண்ணி மீனுக்கு இரையா வீசிடுவான்...

என்னடா மாரி , இங்க நான் பாஸா இல்ல உன் இனியன் பாஸா... எங்க அப்பா அப்படியே அவனை தலையில் தூக்கி வைத்து ஆடுறாரு.. அவன் என்ன பெரிய கலெக்டரா, இல்ல மினிஸ்டரா... ஏய் , எனக்கு முதல்லே தெரியுமுடா... அதுக்குதான் எங்க அப்பாகிட்ட போகாத நானே டீல் செஞ்சேன்.. அவன் வரட்டும் நானா அவனா பார்க்கிறேன்... அப்பறம் வைக்கிறேன்டா இந்த பொண்ணுமேல கையை...

இவர்கள் பேசும்போதே போட்டின் மேலே சத்தம் கேட்க... ஏய் இவளை அந்த ரூமுல அடைச்சி வை..

உள்ளே இனியன் ,தீபக்... டேய் தீபக் என்று கத்திக் கொண்டே வர...

ஹாங் வந்துட்டான் ஹீரோ... அடிங்கடா அவனை, காதை பட்ஸ்சால் குடைந்தபடி சொன்னான் தீபக்..

வெளியே இருந்த இரு குண்டர்களையும் அடித்துவிட்டு, தீபக்கிடம் வந்தான்..

அவன் சட்டை பிடித்து அவனை தூக்கினான்.. எங்கடா என் தேனு... கண்களில் ரௌத்திரம் பொங்க...நீ பேச பேச அமைதியா இருந்தா... என்னை சொம்பு நினைச்சியாடா நாயே.. வெட்டி கூறு போட்ருவேன்...

கழுத்தில் ஒரு அடி கொடுக்க.. போதையில் சுருண்டு விழுந்தான்..அவனை காலால் அடித்து.. குரு நானாக்காக உயிரோட இருக்க.. அவனை தூக்கி நிறுத்திய படி.. கண்ணத்தில் பளாருன்னு அடித்து... உனக்கு தெரியாது தேனு யாருன்னு..

தெ..தெரியும்.. தீபக்கு உதடு கிழிந்து ரத்தம் வர.... சின்ன வயசிலே உங்கப்பாகிட்ட வேலைக்கு சேர்ந்தவன்டா... என் அடி எப்படியிருக்கும் தெரியுமா.. கையை முறுக்கி.. இரண்டுநாள் எழுந்துக்கவே முடியாது.. எல்லாம் உள்காயமாவே இருக்கும்...

அங்கே மாரி கதவை தட்ட... ஒடி சென்று செம்பு கதவை திறந்தான்... உள்ளிருந்து தேனுவும் மாரியும் வந்தார்கள்...

தன் மாமனை கண்டவுடன் மாமா என்று ஓடி வந்து கட்டிக்கொண்டாள்... தேனுமா...அவள் தலையில் தன் நாடியை பதித்தான்..

அவள் உடல் நடுங்க... தேனுசெல்லம் மாமா வந்துட்டேன்டா.. ஒண்ணுமில்லடா அவளை இறுக்கிக் கொண்டான்... அவள் நிமிர்த்தி முகம் முழுவதும் இச்.. இச்..ன்னு முத்தமிட்டான் , கண்ணத்தை தன் கையால் தடவி , தேனுகுட்டி உன்னை யாருடா அடிச்சது..

மா..மா..மாமா... தன் உதட்டை பிதுக்கி அழுதபடி இந்த பையன்தான் மாமா என ஆள்காட்டி விரலால் செம்புவை காட்ட... அவன் என்னை தொட வந்தான் மாமா.. தேம்பி தேம்பி தேனு சொல்ல..

என் செல்லம் அழக்கூடாது , மாமா அவனை அடிச்சிட வா...

ம்ம்..

ஐயோ அண்ணா எனக்கு தெரியாது என்னும் போதே ஆ..ஆ என்று கத்தினான் செம்பு...

இப்ப அழக்கூடாது... சரியா... சிறுவயதில் தேனுவை பார்ப்பதுபோல் பார்த்தான்... மாமா அவன் கையை உடைச்சிட்டேன் ஓகேவா...

ம்ம்... இனியனை அனைத்தபடியே இருந்தாள்...

மாரியண்ணா போட்டை திருப்பி கரைக்கு கொண்டு வாங்க...

சரி இனியா, பார்த்து தங்கச்சிய கூட்டிட்டு போ.. அவர்கள் வந்த போர்ட்டில் தேனுவை ஏற்றினான்... அசோக் துனையோடு... தேனுவின் தலையை தடவி ஒண்ணுமில்லடா பயப்படாத அசோக் சொல்ல..

கீழ் தளத்தில், கயிற்று கட்டிலில் உட்கார்ந்து தேனுவை பக்கத்தில் உட்கார வைத்தான்.. திரும்பவும் உடல் நடுங்க இனியனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்..

இனியனும் அமைதியாக இருந்தான்... சமாதனம் படுத்தினா இன்னும் அழுவா.. சின்ன வயதிலிருந்தே இப்படிதான் தேனு...

கொஞ்சம் நேரம் சென்றவுடன் அவளுடைய அழுகை நின்றது... மாமா பசிக்குது.. காலையிலிருந்து சாப்பிடல மயக்கமா வருது...

இரு ஏதாவது இருக்கா பார்க்கிறேன்.. அவளை அப்படியே படுக்க வைத்து, மேலே வந்தான்.. அசோக் சாப்பிட ஏதாவது இருக்கா பாரு... தேனுக்கு பசிக்குதாம்...

பிஸ்கெட் இருக்கு அப்பறம்.. இந்த கருப்பட்டி காபிதான் இருக்கு.. ஆனா சூடாயிருக்குடா... இதை குடிக்க வை உடம்புல தெம்பு வரும்..

கையில் பிஸ்கெட்டும், காபியும் எடுத்துக் கொண்டு கீழே வந்தான்... தேனுமா எழுந்துரு... மாமா எனக்கு தூக்கமா வருது...

டேய் கொஞ்சமா சாப்பிடு... உனக்கு மயக்கமா வருதுன்னு சொன்னே... அவளை தூக்கி மடியில் உட்கார வைத்து... காபியை கொடுத்தான்... இந்தாடா பிஸ்கெட் சாப்பிடு, வாயை திற..

வேணா மாமா... சாப்பிடுடி.. படுத்தாதே..

நாலுபிஸ்கெட் சாப்பிட வைத்து அப்படியே அவளை அனைத்தபடி தூங்க வைத்தான்.. அவள் முகத்தில் விழும் முடியை காதுபக்கம் ஒதுக்கினான்... அவள் நெற்றியில் முத்தமிட்டான்.. இனிமே மாமா உன்னைவிட்டு பிரியமாட்டேன்டா...

ஒரு மணிநேரம் கழிச்சு நெளிய ஆரம்பித்தாள்.. என்னடி தூங்கு..

மாமா.. எனக்கு பாத்ரூம் போனோம்... அவளை கூட்டிட்டு போனான்... உள்ளே தாழ்பாள் இல்ல.. நான் வெளியே இருக்கேன்.. பயப்படாம போ.. இருட்டாக இருந்தது, டார்ச்சை கையில் கொடுத்தான்..

வெளியே தேனு வர.. போட்டின் விளிம்பில் நின்றிருந்தான் இனியன்...

நிலா வெளிச்சத்தில் , நீர் மினுக்க.. எங்கும் இருட்டு... இந்த ரம்மியமான இரவில்..... இரு கையையும் கம்பியின் மேல் வைத்து நின்றிருந்தான்... இனியன் பக்கத்தில் தேனும் வந்தாள்.. கொஞ்சம் கொஞ்சமாக தன் கையை நகர்த்தி இனியன் கை மீது வைத்தாள்... அடுத்த நொடி அவளை வளைத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

அவன் மார்பில் முத்தமிட்டாள், அவன் வாசம் முச்சில் நிரம்பிக்கொண்டு தன் கையை மெல்ல அவன் கழுத்தை தடவி , காதுமடலில் வந்து நின்றது... அவள் கைவிரல் செய்யும் மாயையில் போதையேறி கண்களை மூடி மயங்கி நின்றான் , அவளின் இனியவன்...

இரவுபொழுதின் காற்று இனியனின் கேசத்தை வருடிச்செல்ல... இவன் கேசத்தை தடவியபடி மோக குரலில் மாமா என்று தேனு அழைக்க.

அவள் முகத்தின் அருகே தன் முகத்தை வைத்து , அவள் மூக்கை உரசி.. ம்ம் இனி மாமாதான்டி என்று அவள் இதழை சுவைத்தான்... உதட்டை எடுத்து ஐ லவ் யூடி என்று முதன்முதலாக தேனுவை பார்த்து சொன்னான்.. மறுபடியும் முத்தமிட... அவ இதழில் தேனை பருகினான்... இரவில் பூத்த அல்லி மலரோ இவள்... நிலவு ஒளியில், அள்ளி பருகினான் அல்லி பூவின் தேனை தன் இதழ் கொண்டு...

மனமில்லாமல் தன் இதழை அவளிடமிருந்து பிரித்தான்... இனியனை பார்த்து வெட்கம் கொண்டு புன்னகைத்தாள்..

ஏய் சூப்பர்டி... சின்ன வயசில நான் கிஸ் பண்ணா இப்படிதான் சிரிப்ப அப்படியே இருக்கடி மாறவேயில்லை..

இந்த ஒருநாள்ல எனக்கு தெரிஞ்சிடுச்சு... நீ என் உயிரு.. நீயில்லாம என்னால இருக்க முடியாதுன்னு... நீயே நினைச்சாலும் என்னை விட்டு பிரிய முடியாதுடி... மாமா முடிவெடுத்துட்டேன்.. இந்த தேனுபொண்ணை கல்யாணம் செஞ்சிக்கலாம்...

அதெல்லாம் முடியாது... எனக்கு கோவம் அப்படியேதான் இருக்கு...

ஏய் தேனு இப்போதானே கிஸ் அடிச்சு , என் காதலை உங்கிட்ட சொன்னேன்...

அப்படி சொன்னவன்.. ஏன்டா இன்னொரு பொண்ணை நிச்சியம் செய்ய போனே..

தலையில் கையை வைத்து கீழே உட்கார்ந்து கொண்டான். லூஸாடி நீ...

ஆமாம்.. நான் லூஸூதான்.. இல்லைன்னா என்னை கழிட்டிவிட்டு பெங்களுருக்கு போறேன் சொன்ன.. உனக்குன்னு ஒரு ஆள் கிடைக்காம போவான்னு ஏக்கமா சொன்னீயாமே...

யாரு இந்த அசோக் சொன்னான்னா... ( இந்த அசோக் எரும எல்லாதையும் உளறிக் கொட்டிருக்கான், இவளை எப்படி கூல் பண்ணறது)அது சும்மா அவனை காண்டேத்த... அதுமில்லாம பொறாமை பிடிச்சவன். இந்த இனியனுக்கு பியூட்டிபுல்லா ஒரு பிகரு கிடைச்சிருக்கேன்னு , பொறாமையில வயிறு எரியிறான்... இவன் மட்டுமில்ல என்னுடைய எல்லா பிரன்ட்ஸும்...

தேனு நம்பாமல் இனியனை பார்த்தாள்..

நம்பல, சரி நீ பிரேக் கப் சொன்னவுடனே யாரு என்ஜாய் செஞ்சது.. இந்த அசோக், நம்ம பிரண்ட்ஸ்... ஹப்பா யோசிக்க ஆரம்பிச்சிட்டா... அவளை உரசிய படி தேனுமா.. நம்ம திரும்ப கன்டினிவ் பண்ணலாமா...

என்னாத்த

ம்ம்..கிஸ்ஸ....

நோ.. நீ மாறவேயில்ல.. என்னை டைவர்ட் செய்யற... நான் நம்ப மாட்டேன்..

நம்பாத போடி, போர்ட் கரையை அடைய, உங்க அப்பன் இருக்கான் பாரு.. போய் கொஞ்சு... போர்ட் கரைக்கு வரும்போதே போன்போட்டு சிவாவிடம் சொல்லிவிட்டான் அசோக்... அங்கே ராஜ்சேகரும், சிவாவும் இருந்தார்கள்...

போர்ட்டை விட்டு இறங்கியவுடன்.. தன் அப்பாவிடம் சென்றாள் தேனு...

தேனு என்று கட்டியனைத்து கொண்டார்.. அக்கா , சிவா கண்களில் கண்ணீர்..

தேங்க்ஸ் இனியா..ராஜ்சேகர் கூற..

மணி 11.00 ஆகுது நாளைக்கு டென்டரை கேன்சல் பண்ணுங்க.. அதுவரைக்கும் சிவா என்கூட இருக்கனும் தேனுக்கு பதில்...

எதுக்கு சிவா...

பணம் வாங்கிட்டிருப்பாங்க... பார்ட்டிக்கு நம்பிக்கை வரனும்.. நீங்க கேன்சல் பண்ணாதான் நம்புவாங்க.. என்கூடதான் இருப்பான் ஏன் பயப்படுறீங்க.. இங்கயிருக்க கெஸ்ட் ஹவுஸ்ல...

சிவாவை தான் கடத்த ப்ளான்.. இந்த தீபக் மாற்றி தேனுவை கடத்திட்டான்.

எல்லோரும் காரில் ஏறினர்.. கெஸ்ட் ஹவுஸில் இனியன் மற்றும் சிவாவும் இறங்கிக் கொண்டனர்..

திரும்பி இனியன் தேனுவை பார்க்க... எதுவும் நடக்காது போல் காரில் உட்கார்ந்திருந்தாள்...

தன் மாமனின் அருகே வந்து.. தேனுக்கு உப்பு காற்று சேரல போல உதட்டெல்லாம் தடிப்பாயிருச்சு... ரத்தம் வர மாதிரி இருக்கு, கண்ணமும் சிகப்பாயிடுச்சு... குளிரு தாங்கல... அவள டாக்டர்கிட்ட கூட்டிட்டு போங்க.. அப்பறம் அலர்ஜியா கூட இருக்கலாம்....

பர்ஸ்ட் டைம் இல்ல , அவளை பார்த்து கண்ணடித்து கரெக்டா தேனு...

டேய்....திருந்த மாட்டியா மனதில் திட்டிக்கொண்டாள் தேனு...

-சிக்க வைக்கிறான்...
 
N

Nirmala vandhachu ???
Iniyanin kurumbuhal arambam
 
Last edited:
Top