Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-27

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-27

தேனு இனியனின் தோளை சுரண்டி, திரும்பி பாருங்க மாமா என்றாள்... இனியன் கண்னை திறந்து பார்க்க, ரேனு அவனின் பக்கத்தில் வந்து நின்றாள்...

அய்யோ அத்தை, ரேணுவை பார்த்து சிரித்தான், வா அத்தை எப்ப வந்தீங்க...

டேய் கேடி என்ன வேலைடா செஞ்சிருக்க...

இருவர் கையில் அசோக் ரோஜா மாலையை கொடுக்க... இருவரும் மாலையை மாற்றிக் கொண்டார்கள்...

ராஜ்சேகர் இனியனை பார்த்து ,அப்படியென்ன நம்பிக்கையில்ல என்மேல, உனக்காக எல்லாம் வரல, எட்டு வருஷம் கழிச்சு என் பொண்ணு நேற்றுதான் எங்கிட்ட பேசினா... அதுக்காக உன்னை மன்னிச்சு விடுறேன்... தன் மகளின் தலையை வருடி.. உனக்கு ஹாப்பியாடா செல்லம்

ம்ம், தேங்க்ஸ் பா..

உன்னை ஏதாவது பிளாக்மெயில் செஞ்சானா சொல்லுமா.. இல்லை என்று தலையை ஆட்டினாள் தேனு... அனைவரும் வெளியே வந்தனர்... டேய் அசோக்கு எனக்கு தேனுவ கிஸ்ஸடிக்கனும் தோனுது தள்ளி விடுடா...

நான் மாட்டேன்... உன் மாமனார் இருக்காரு..

ப்ளீஸ்டா இனியன் கெஞ்ச...

இனியனை தள்ளிவிட்டான் அசோக் , அந்த நேரம் தேனு தன் அம்மாவிடம் நகர, இனியன் ராஜ்சேகர் மேல்விழுந்து அவரின் கண்ணத்தில் இச் என்று முத்தமிட்டான்...

அய்யோ சாரி மாமா, நான்..தேனு நினைச்சு... இந்த காட்சியை பார்த்து அசோக் வாயை மூடிக்கொண்டு சிரிக்க

ராஜ்சேகர் கேவலமான ஒரு பார்வையை பார்த்துவிட்டு, ஏய் ரேணு இந்த பக்கம் வாடி, இவன் அடங்க மாட்டான்...

டேய் அசோக்கு யார்கிட்டயும் சொல்லாத சொன்னேன்டா, மொத்த குடும்பத்தையும் கூட்டிட்டு வந்திருக்கா பாரு ,வெளியே நின்ற அவளின் சித்தி, சித்தப்பா,பாட்டி பார்த்து சொன்னான்,..., இதுக்கு நான் ஊரை கூட்டியே கல்யாணம் பண்ணிருக்கலாம்...

சரி வாங்க எல்லோரும் கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு போகலாம் .... வழக்கமாக மூன்று கார்கள் தேனுவின் வீட்டின் முன் நின்றது... மணமக்களை ஆர்த்தி சுற்றி வீட்டுக்குள் அழைத்தார் உமா...

என்னடி விழுப்புரத்தில இருக்க வீட்டை காலிசெய்துட்டு வந்திட்டிங்களா. மொத்த குடும்பமும் இங்கதான் இருக்கு..

தன் மாமன், அத்தையிடம் முதலில் ஆசிர்வாதம் வாங்கினர், பிறகு ஒவ்வொரு தம்பதியனரிடம் ஆசிர்வாதம் பெற்றனர்...

சோபாவில் உட்காரந்து அனைவரையும் பார்த்து பேசினான் முக்கியமா தேனுவின் பாட்டியை பார்த்து .. அது வந்து இங்கிருந்து போகும்போது எனக்கு ஒரு குடும்பம் வேணும் நினைச்சுதான் ,ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் ஐடியா... மற்றபடி ஒண்ணுமில்ல...

உடனே ராஜ்சேகர், நீ சொன்னவுடனே தேனு சொல்லிட்டா, இன்னைக்கு ஈவினிங் உங்களுக்கு நிச்சியம் செய்யலாம் முடிவு பண்ணிட்டோம்.. ஹோட்டல் கிரான்ட் பேலஸ்ல... பிஸினஸ் பீப்புள்ல எல்லாரையும் அழைச்சிருக்கேன்... உன் சைட் எல்லாரையும் கூப்பிட்டிருக்கேன்... அசோக் மூலமா எல்லோரையும் இன்வைய்ட் பண்ணியாச்சு... நீ டிரைனிங் முடிச்சிட்டு வந்தவுடனே கல்யாணம் வச்சிக்கலாம்...

இனியன் தேனுவை பார்க்க, அது சர்பரைஸ் கொடுக்கலாம் நினைச்சேன் மாமா... மற்றதெல்லாம் அப்பாதான் ப்ளான் போட்டாரு..

நீ ப்யூட்டிபார்லர் போனேன் சொன்னவுடனே யோசிக்காம விட்டேன்... குடும்பமே போனீங்களா...

ஆமாம் மாமா, இன்னைக்கு என்கேஜ்மன்ட் தானே அதுக்குதான், எப்படி கண்டுபிடிச்சீங்க ஆவலாக கேட்க...

எல்லாம் பேய் படத்தில வர மாதிரி அழகாக இருக்கீங்க... அங்கே காலை டிபன் ஹோட்டலிருந்து வர, பாய் சாப்பிட்டு கிளம்புங்க ,ராஜ்சேகர் பாயிடம் சகஜமாக பேசினார்... இனியன் பாயோடு சாப்பிட உட்கார...

பாய் எங்க மாமாவ உங்களுக்கு முன்னாடியே தெரியுமா...

நீ சென்னைக்கு வந்ததிலிருந்து உன்னை பற்றி அடிக்கடி போன் போட்டு கேட்பார்டா... நீ எப்படி படிக்கிற , என்ன செய்யறேன்னு , அப்படிதான் பழக்கம்... பிறகு அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்...

அத்தை நான் வீட்டுக்கு கிளம்பறேன்,

டேய் மதியம் மன்டபத்துக்கு போகனும்டா, இங்கேயே ரெஸ்ட் எடு...

அத்தை எனக்கு வெளியே கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சிட்டு நேரே ஹோட்டலுக்கு வந்துறேன்.....

தேனு ,மாமா கிளம்பறான் பாரு, ரேணுகா தேனுவை கூப்பிட... அங்கே தன் சித்திகளோடு பேசிக் கொண்டிருந்த தேனு, இனியனிடம் வந்தாள்...

பால்கனிக்கு வா... அவளிடம் சொல்லிட்டு கிளம்பினான்...

இனியன் பால்கனி கதவை திறந்து வெளியே வர... எதிரே தேனு நின்றிருந்தாள்... என்ன மாமா கூப்பிட்டிங்க...

மவளே நீ கையில கிடைச்சா அவ்வளவுதான்டி, யாருக்கிட்டையும் சொல்லாதடி சொன்னா... ஊருக்கே சொல்லிருக்க, என் மானம் போச்சுடி..எரும கையிலிருந்த சென்ட் பாட்டிலை அவள் மேல் எறிந்தான்... தன்மேல் படாமல் அவள் விலகிக் கொள்ள...

உங்கப்பா என்னடி நினைப்பாரு...வெள்ள பண்ணி பவுடர் டப்பாவை எறிந்தான்.. அதிலிருந்து தேனு எஸ்ஸாக...

கட்டின புருஷன பார்க்காம, உனக்கென்டி மத்தவங்க கிட்ட பேச்சு, சீப்பை தூக்கி எறிந்தான்.. இதுல வேட்டி கட்டலையான்னு கேள்வி...

மாமா... யாருக்கும் தெரியாம கல்யாணம் செய்யறது தப்புதானே மாமா... அதான் அப்பாகிட்ட கேட்டேன்...

தேனு...னு.. கீழே ரேணுகா கூப்பிட... மேக் கப் செய்ய வந்துட்டாங்க நினைக்கிறேன்... நான் கிளம்பவா..

ஹோட்டல் கிரான்ட் பேலஸில் , ராஜ்சேகர் , இனியனை தன் மாப்பிள்ளை என்று அறிமுக படுத்தினார்... அழகாக காக்ரா சோளி அனிந்து தேவதை போல் இருந்தாள் தேனு, அவளாவன் மெரூன் கலரில் ஷர்வானி அனிந்து அவளுக்கேற்ற ஜோடியாக இருந்தான்... வந்தவர்கள் அவர்களின் பொருத்தம் பற்றி பேசினர். இதில் நிர்மலா மற்றும் சந்தோஷ் இருவரும் வயிறேரிச்சலில் இருந்தன...

இனியனின் நன்பர்கள், குருநானா குடும்பம், பாய் குடும்பம் அனைவரும் வந்திருந்தன... ராஜ்சேகருக்கு ரொம்ப சந்தோஷம் தன் மருமகன் கலெக்டர் ஆகபோவதை எல்லா பிஸினஸ்மேன்களிடம் சொன்னார்... அவருடைய மகிழ்ச்சியை ரசித்து பார்த்திருந்தான்... இந்த சந்தோஷத்தை தான் தன் மாமனுக்கு கொடுக்கனும் நினைத்தான்...

இருவரும் மோதிரத்தை மாற்றிக் கொண்டனர்... பங்ஷன் முடிந்து அனைவரும் கிளம்ப... தேனுவை கூட்டிக்கொண்டு இனியன் தன் மாமா ராஜ்சேகரிடம் வந்தான்...

மாமா... நாளைக்கு காலையில பிளைட்டு, இன்னிக்கு நைட் தேனு எங்க கூட என் பிளாட்டல இருக்கட்டும்.. அப்பறம் இரண்டு வருஷம் ஆகும் பார்க்கிறதுக்கு... தடுமாறி சொல்ல...

ம்ம் சிறிது யோசித்து சரி... கிளம்புங்க, தேங்க்ஸ் மாமா , இருவரும் காரில் கிளம்ப, போகும் வழியில் காரை நிறுத்தி பர்ஸ்ட் ஏய்ட்டு கிட் வாங்கிட்டு வரேன்டி , மெடிக்கலுக்கு சென்றான்...

அங்கே ரேணு, ஏங்க தனியா அனுப்பினீங்க... உங்கம்மா ஏதாவது சொல்ல போறாங்க..

வேண்டாம் சொன்னா, உன் அண்ணன் பையன்... என் பொண்டாட்டி, நான் கூட்டிட்டு போவேன் அடம்பிடிப்பான்... எதுக்கு என் பொண்ணுமேல எனக்கு நம்பிக்கையிருக்கு ரேணு...

வீட்டுக்குள் நுழைந்தவுடனே , தேனுவை தூக்கிக் கொண்டான்...

மாமா விடுங்க...

காலையிலிருந்து பேசவா விடுறாங்க உங்கவீட்டு ஆளுங்க, உன்னை தள்ளிட்டு வரதுக்குள்ள போதும் போயிடுச்சு... சரி நீ ப்ரஷ் ஆகு, நானும் குளிச்சிட்டு வரேன்...

இரவு சில்லென்று காற்று, பால்கனியில் சிறிய பெட்டை போட்டு அவளை அனைத்து படுத்தான் ....பயப்படாதடி ... உங்கப்பா என் மேல நம்பிக்கை வச்சி அனுப்பிருக்காரு எதுவும் செய்ய மாட்டேன்..தேனுமா நீயேன் அப்பாகிட்ட எட்டு வருஷமா பேசலை...

அவன் கையை இறுக்கமாக பிடித்து, நான் உங்களை பார்த்த அன்னைக்கே சொல்ல வந்தேன் மாமா, நீங்கதான் கேட்கல..

நீங்க நீச்சல் குளத்துலிருந்து காப்பத்தினீங்க, அப்ப ரொம்ப பயந்துட்டேன் மாமா.. என்ன நடந்துச்சினே புரியல, மூக்கெல்லாம் தண்ணீர் அதான் அழுதேன்..அப்போ அப்பா உங்கள அடிச்சாரா எதுக்கு அடிச்சாருன்னு தெரியில மாமா.. நீங்க கத்தினீங்க அப்பதான் புரிஞ்சது, சந்தோஷ்தான் தள்ளுனா, சொல்ல வந்தேன் மாமா, எங்க ரவி சித்தப்பா வாயை பொத்திட்டாரு... அப்பறம் சொல்ல கூடாதுன்னு கையை இருக்க பிடிச்சிட்டாரு... நீங்க போயிட்ட பிறகு

அப்பாகிட்ட போனேன் மாமா, அவர்கிட்ட நான் சொன்னேன் , சந்தோஷ்தான் செஞ்சான்னு... அப்பாவும் பீல் பண்ணாங்க, வாங்க மாமாகிட்ட ஸாரி கேட்கலாம் சொன்னா, வரமாட்டேன் சொல்லிட்டாங்க, அப்ப அப்பாகிட்ட சண்டை போட்டேன், நீங்க ரொம்ப பேட் டாடி, திரும்ப நான் மாமாவ பாரத்து சாரி கேட்பேன்...

எனக்கு பிடிக்கவேயில்லை, அத்தைக்காக அப்பா வரலையாம்... அதனால நான் அப்பாகிட்ட எப்போவாது ஒரு வார்த்தை தான் பேசுவேன்... அப்பாக்கு தெரியும் மாமா, நீங்க சென்னையிலதான் இருக்கீங்க, உன்னை பார்க்கதான் நான் காலேஜ் சேர்த்தேன்னு...

அவரு என்மேல உயிரே வச்சிருக்காரு... அவர்கிட்ட சொல்லாம நாம்ம கல்யாணம் செய்யறது தப்பு மாமா... உங்க வீட்டு பின்னாடியே குடிவச்சிருக்காருன்னா என் மேல உள்ள நம்பிக்கைதானே.. அதான் அப்பாகிட்ட போய் பேசுனேன்.. அவருக்கு ரொம்ப சந்தோஷம் நான் பேசுனதுக்கே... இப்போ கலெக்டர் மாப்பிள்ளை இன்னும் சந்தோஷம் மனுஷன கையில பிடிக்க முடியில...

எனக்காக உங்க அப்பாகிட்ட பேசாத இருந்தியாடி...

ம்ம்...

தேனுகுட்டி, என்மனசுல அந்த விஷியம் அரிச்சிக்கிட்டே இருக்கும்டா.. இப்போதான் எனக்கு எந்த கசப்புமும் இல்ல.. என் தேனுக்கு மாமாமேல இவ்வளவு பாசமா...

கண்ணத்தில் முத்தமிட்டான்...

…….

இரண்டு வருஷம் கடந்து...

ஏர் இந்தியா ப்ளைட்டில் காலை 9.00 மணிக்கு சென்னை வந்திறங்கினான் இனியன்... தன் டிரைனீங் வெற்றி கரமாக முடித்து சென்னையில் காலடி எடுத்து வைத்தான்...

தன் லக்கேஜை தள்ளிக்கொண்டு இனியன் வர, தூரத்திலிருந்து பார்த்த சிவா, தன் கண்ணை அகலமாக விரித்தான்... இரண்டு வருஷம் கழித்து தன் மாமாவை பார்க்கிறான்... ஹெர் ஸ்டைல் மாற்றி ஒரு பக்கம் காதில் சிறு கடுக்கன் போல் கம்மல், இன்னும் கலர் கூடி, பயங்கற தேஜஸ்ஸாக, உடம்பை ஸிம்மாக வைத்திருந்தான்...

அசோக் அண்ணா ,மாமா ஆளே மாறிட்டாங்க பாருங்களேன்... மாமான்னு கட்டி அனைத்துக் கொண்டான், மச்சான் என அசோக் அனைத்துக்கொள்ள...

எப்படிடா இருக்க அசோக்...

ம்ம் நல்லாயிருக்கேன்டா...

சிவா செல்லம் நேரா பார்க்கும் போது மீசை வந்து பெரிய ஆளா தெரியறடா...கண்கள் தன்னவளை தேடி அலைபாய...... தேனு வரலையாடா இனியன் கேட்க..

அக்கா வரமாட்டேன் சொல்லிட்டா மாமா, அவளுக்கு ஏதோ வேலையிருக்காம்...

முகம் சுண்டி போனது இனியனுக்கு... ம்ம்... என்றான்.

காரில் போகும்போது... சிவாவுக்கு தான் ரொம்ப சந்தோஷம் , மாமா கலெக்டரா இல்ல நீங்க நடிகரா.. சும்மா ஹென்ட்ஸமா இருக்கீங்க... அப்படியே அக்கா பார்த்தா பிளாட் ஆயிடுவா...

பின்னாடி இனியன் பக்கத்தில் உட்கார்ந்த அசோக், டேய் மச்சான் ஏன்டா தங்கச்சி உன் பார்க்க வரல... என்னடா பிரச்சனை உங்களுக்குள்... இரண்டு வருஷம் கழிச்சு வந்திருக்க ,அவளால உன்னை பார்க்காம இருக்க முடியும்மா... டேய்... என்ன சொதப்பி வச்சிருக்க..

அதெல்லாம் ஒண்ணுமில்லடா அசோக், திமீர் ஏறி போயிருக்கு... புருஷன் ஊரிலிருந்து வந்திருக்கேன் பார்க்க வந்தாளா பாரு...நான்தான் முதல்லே சொன்னனே, என் உயிர ஸ்ட்ரா போடாம உறிவா...

தன் கண்களை மூடிய படி, அன்று நடந்ததை நினைத்து பார்த்தான்.

----- சிக்க வைக்கிறாள்
 
Nirmala vandhachu ???
 
Medical la first aid kit vaanginaanay???? Athula thaan problem pola?????
Irunthaalum iniyan always smart and lovely boy, pesi pesiye thenu va kavuthuduvaan
 
ரொம்ப அருமையான பதிவு
அன்னைக்கு ராத்திரி
என்ன குசும்பு செஞ்சானோ
தேனு கோபிக்கிற அளவுக்கு
 
Top