Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-30

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-30

சிவா காலேஜில் படிக்கும்போது, தேனு சூப்பர் மார்க்கெட்டை கவனிப்பாள்... மதியத்திற்கு மேல் சிவா பார்த்துப்பான் .. அங்கே மேற்பார்வையாளராக மாரியை போட்டிருந்தான் இனியன்... அவளின் பாதுகாப்புக்காகவும்... மாரியை அடியாள் வேலையை விட்டு ,அவனை இந்த வேலை பார்க்க வைத்தான்...

அசோக்கிடம் கார்மெட்ன்ஸில் வரும் லாபத்தை சிவாவிடம் கொடுக்க சொன்னான்... சிவா அதையும் பிஸினஸில் போட்டான்... படிக்கும்போதே நன்றாக உழைத்தான், தன் தொழிலுக்கு தேவையானதை அனைத்தும் கற்றுக்கொண்டான் சிவா..

ஆனா, சிறியவன் மோகனை கன்ட்ரோல் பண்ணமுடியவில்லை, தன் தகப்பனை நினைத்து அழுது ஆர்ப்பாட்டம் செய்வான்... கூட்டு குடும்பத்துல இருந்த மோகனால் தனியா இருக்கமுடியில... காலையில் எழுந்தவுடனே அழுவான்.. அப்பா வேண்டுமென்று தேனுவின் மடியில் படுத்து அழுதபடியே இருப்பான்..

அவனை சமாளிக்க முடியவில்லை ரேணுவால், இந்த ஊரே பிடிக்கவில்லை என்று அழுவான்... நம்ம வீட்டுக்கு போகலாம், அங்கே சித்தி,சித்தப்பா, பாட்டி இருப்பாங்க என்பான்... ஸ்கூலுக்கு போகாமல் அழதபடியே இருந்தான்.. இப்படியே எத்தனை நாள் ஸ்கூல் போகாமல் இருப்பது... இதுவே பெரிய பிரச்சனையாக இருந்தது சிவாக்கு, எவ்வளவோ சொல்லி பார்த்தான் , அடித்தும் விட்டான்.. சிறுபிள்ளையால் புரிந்துக் கொள்ள முடியவில்லை..

அன்று சனிக்கிழமை ,அப்படிதான், தேனுவின் மடியில் படுத்து.. அழ ஆரம்பித்தான்.. அந்நேரம் சிவாவுக்கு இனியனிடமிருந்து போன் வந்தது.. என்னடா செய்யற... என்று கேட்கும்போதே மோகன் அழுக்குரல் கேட்டது..

ஏன்டா மோகன் அழறான்..

மாமா தினமும் இவன் இப்படிதான் அப்பாவை நினைத்து அழறான்... அங்க பழைய வீட்டில இவன்கூட விளையாட சித்தி பசங்க இருப்பாங்க.. இங்க யாருமேயில்ல அதான் லோன்லியா ஃபீல் செய்யறான் போல..

ஏன் முதல்லே சொல்லலை...

அது அக்காதான் இந்த மாதிரி சின்ன விஷியமெல்லாம் மாமாகிட்ட சொல்லி டென்ஷனாகாதே... அங்கே அவருக்கே பிரஷரா இருக்கும் சொன்னா..

உங்க அக்காயிருக்காளே அவள, டேய் இதுதான்டா முக்கியமான விஷியம்.. வளரும் பையன்டா அவனைதான் முதல்ல பார்க்கனும்... மனப்போராட்டம் ஆரம்பிக்கும் இப்போதுதான்... அவன்கிட்ட போனை கொடு...

மோகன், மாமா பேசுனுமாடா இந்தா பேசு..சிவா போனை கொடுக்க..

வேணாம் என்று இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்தான்...

மாமா அவன் வாங்க மாட்டுறான்...

ம்ம்... நான் சொல்லுறதை அவன்கிட்ட சொல்லு...சரி மாமா.

மோகன் மாமா உனக்கு கீர் வச்ச சைக்கிள் வாங்கிருக்காராம் என்ன கலர் வேணும் கேட்கிறாரு..

டக்கென்று அழுவதை நிறுத்தி... நிஜமாவா போனை சிவாவிடமிருந்து பிடுங்கி... மாமா எனக்கு பிளாக் லைட் ரெட் ஷேட் போட்ட வண்டி...

சரிடா.. நானும் இதைதான் செலக்ட் செஞ்சேன்.. எனக்கு தெரியும் மோகனுக்கு இந்த கலர்தான் பிடிக்குமுனு.. ஆமா ஏன் அழுதீங்க...

மாமா...எனக்கு அப்பாவேனும், யாருமே எனக்கு பிடிக்கல... இந்த ஸ்கூல் பிடிக்கல... மறுபடியும் அழ..

பாய்ஸ் யாராவது அழுவாங்களா மோகன், அதுவும் நீ பிரிலியன்ட் ஆச்சே... எனக்கு கூட இங்க பிடிக்கவேயில்லடா என்னை படி படி சொல்லுறாங்க..

அங்கேயுமா, அய்யோ மாமா நீங்க பாவம், உங்களுக்கு பிரண்ட்ஸ் இருக்காங்களா..

முதல்ல பிரண்ட்ஸ் ஆகல.. அப்பறம் மாமா பிரண்ட்ஸ் பிடிச்சிட்டேன்..

எப்படி மாமா.. எனக்கு சொல்லுங்களேன்.. இங்க யாருமே என்னை சேர்த்துக்க மாட்டுறாங்க.. பக்கத்து கிரவுண்ட்ல விளையாடுறாங்க ஆனா யாருமே சேர்க்க மாட்டுறாங்க..

அப்படியா...நீ யாரை பிரண்ட்டாக நினைக்கிறீயோ அவங்களை விட உன்கிட்ட யாரு பிரண்ட்டாக வர விரும்புறாங்களோ அவங்க கிட்ட உண்மையான நட்பா இரு... மோகன் கிராமத்தில இருக்கிறவங்க உடைதான் அப்படியிருக்குமே தவிர.. அந்த பிள்ளைங்க மனசு வெள்ளையா இருக்கும் நீ உடையை பார்த்து பழகாதே... நான் அசோக்கிடம் அப்படிதான் பழகுனேன்... என்னுடைய பெஸ்ட் பிரண்ட் அவன்தான்... சரி.. மாமா சொல்லுற ஐடியாவ கேட்கிறீயா... சிலவற்றை கேட்டு பாய் மாமா, நாளைக்கு போன் பண்ணுறீங்களா..

ம்ம்... வைக்காவா..

மோகன் சிரித்துக்கொண்டே அக்கா, நான் ஸ்கூலுக்கு போறேன்... சிவாண்ணா எனக்கு பத்து சாக்லெட் வாங்கிதறீங்களா.. எல்லோருக்கும் ஆச்சரியம்... உடனே மாறிவிட்டானே என்று...

பேசியே எல்லாரையும் மயக்கிடுவான் ... தேனுதான் இப்படி யோசித்தாள் தன் இனியவனை நினைத்து...

இப்படியே வாரத்திற்கு இரண்டு முறையாவது இனியன் பேசிவிடுவான்... ஸ்கூல்ல நடந்தது, தான் விளையாடு கேம், அவன் பிரண்ட்ஸ் பற்றி பேசுவான்...

பத்து நாள் சென்றது.. தீடிரென்று அப்பா ஞாபகம் எடுத்து பழையபடி அழ ஆரம்பித்தான் அவள் அக்காவின் மடியில் படுத்து...

சிவா அவனை தேற்ற, நிறைய கத்தி அழ ஆரம்பித்தான்... உடனே சிவா, நீ பழைய படி ஆரம்பிச்சிட்டல, இரு மாமாக்கு போன் போடுறேன்..

மோகன் காதில் போனை வைத்தான்... அங்கே இனியன், மோகன் அப்பா ஞாபகம் வந்திடுச்சாடாம்மா...

ம்ம் என்றான்..

கொஞ்சம் தலையை நிமிர்த்தி உன் அக்காவ பாரு, அவளும் அழுதிட்டுதான் இருப்பா...

அப்படியே மோகன் நிமிர்ந்து பார்க்க தேனு கண்கள் கலங்கி கண்ணீர் விட்டாள்... அப்படியே எழுந்து அமர்ந்தான்...

உள்ள உன் அம்மாவ போய் பாரு மோகன்...

கிச்சனில் அழதபடியே புடவை தலைப்பால் கண்ணை துடைத்தாள் ரேனு...

மாமா...

ம்ம்.. பார்த்திட்டியா உன் அண்ணனை போய் பாரு..

பெட்டில் படுத்து தலைமேல் கையை வைத்து சுவற்றை வெறித்து பார்த்திருந்தான் சிவா...

மாமா...

பார்த்தீட்டியா.. அவங்களும் உங்கப்பாவ நினைச்சுதான் அழறாங்கடா கண்ணா... அவங்களால உன்னை சமாதானம் படுத்த முடியவில்லை... ஏன்னா அவங்களும் அப்பாவை இழந்து இருக்கிறாங்க... அவங்க அடுத்த வேளையை பார்க்க முடியாம நீ அப்பாவை ஞாபகப்படுத்துற கண்ணா...

மாமா... சாரி..

உன் கண்ணை துடைச்சுக்கோ... மாமா வருவரை நீ நம்ம குடும்பத்தை அழாம பார்த்திக்கிறீயா... உனக்கு ஃபீலிங்கா இருந்தா மாமாகிட்ட பேசு...

அன்றிலிருந்து அப்பாவை நினைத்து அழமாட்டான், அடம்பிடிக்கமாட்டான்... இனியன் போன்காலுக்காக காத்திருப்பான்... தான் ப்ரஸ்ட் மார்க் எடுத்ததை சொல்லுவான்... அவன்கேட்ட சைக்கிள் அசோக் மூலம் வந்து சேர்ந்தது...

தேனு பேசின பேச்சுக்கு கோவமாக போனவன், மோகனை பார்த்தவுடனே எல்லாம் மாயமா போயிடுச்சு... தன் பிள்ளைபோலவே அவனை பார்த்தான்... அவனிடம் பேசும்போது சகவயது தோழன்போல் பேசுவான்... இப்படியே யோசித்து வந்த டயர்டில் தூங்கியும் போனான்.......

அடுத்த நாள் காலையில் ஹார்ம்லஸ் டிஷர்ட் ரீபோக் பேண்ட் அணிந்து பின்னாடியிருந்த பால் பண்ணைக்கு சென்றான்...

மாமா சீக்கீரமா எழுந்திட்டிங்க சிவா கேட்க..

ஆமான்டா டிரைனீங்கல 5.30 மணிக்கே ரெடியாயிடனும்... அங்கே வேலை செய்வதை சுற்றி பார்த்தான்... அவனும் தலையில் தலைபாகை கட்டி பாலை கறக்க...

மாமா உங்களுக்கு தெரியுமா..

ம்ம்.. சின்ன வயசில நான்தான்டா பாலை கறப்பேன்.. யாரையும் சேர்த்துக்காது எங்க மாடு...

பிறகு விடிந்தவுடன் அப்படியே வீட்டை சுற்றி ஜாக்கிங் செய்தபடி இருந்தான்... காலையில் எழுந்து தேனு தன் மாமனுக்காக , சமையலில் இறங்கினாள்... அவனுக்கு பிடித்த இட்லி ,சாம்பார், இடியாப்பம் செய்ய ஆரம்பித்தாள்...

வீட்டின் காம்பவுண்டை திறந்து உள்ளே நுழைந்தார்கள் மோகனும், கெமிஸ்ட்ரி மிஸ் அகிலாவும்...

அந்தபக்கமாக வந்த சிவா, சித்தப்பூ யாரு இவங்க, நான் பார்த்ததேயில்ல...

டேய் இவங்க பக்கத்து தெரு மோகனோட மிஸ்... இவங்க ஏன்டா இங்க வராங்க...

மாமாவ பார்க்க கூட்டிட்டு வரான்போல, சித்தப்பூ நேத்து மாமா அக்காகிட்ட சண்டை போட்டு கோவிச்சிட்டு போயிட்டாரு... நல்லவேளை அப்ப மோகன் வந்தான்... அவனை பார்த்தவுடனே ஆப் ஆயிட்டாரு... இல்ல இந்நேரம் என்ன நடந்திருக்குமோ....

இப்ப இந்த மோகன் மிஸ்ஸை கூட்டிட்டு வந்து ஏழரை கூட்டுறான் சிவா சொல்ல..

அதனால என்னடா அறிமுகப்படுத்துறான்...

டேய் எங்க மாமா பத்தி உனக்கு என்ன தெரியும், சென்னைக்கு போனேன்ல , இவரு அடிக்கிற லூட்டியிருக்கே... பாவம்டா அசோக் அண்ணா, நொந்து போவாரு... இப்போ இந்த சீனை பாரேன், அக்காதான் டென்ஷன் ஆவா... மாமா போடுற சீனை பார்த்து...

ஹாய்...ஸார்.., நான் அகிலா என்று கையை கொடுக்க..

ம்ம் ஹாய், மோகன் சொன்னான் அகிலா மிஸ்... கம் இன்.... தோட்டத்தில் போடப்பட்ட பென்ஞ்சில் உட்கார்ந்தார்கள்... இனியன் மோகனை பார்த்து, தேனுவ எங்க இரண்டுபேரு காபி எடுத்துட்டு வரச்சொல்லு.

மோகன் உள்ளே சென்று தேனுவிடம்... அக்கா மாமாக்கு மிஸ்க்கும் காபி எடுத்துட்டு வரச்சொன்னாங்க..

மிஸ்ஸா..

ஆமாம் எங்க கெமிஸ்டரி மிஸ்... எனக்கு டைமாயிடுச்சு நான் குளிச்சிட்டு வரட்டா..

ம்ம்... கிச்சன் ஜன்னலில் தோட்டத்தை பார்த்தாள் தேனு, அங்கே இனியன் அகிலாவிடம் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தான்...

ட்ரேயில் காபியை எடுத்திட்டு அவர்களை நோக்கி வந்தாள்.. அகிலாவை பார்த்தவுடனே அப்படியே நின்றாள்.. என்ன இந்த பொண்ணு டிரௌசர் போட்டுட்டு வந்துருக்கு... அதுக்கு தான் இப்படி வழிறான்.

தேனுகிட்ட வரும்போதே... ஸார் நீங்க ஹன்ட்ஸம்மா இருக்கீங்க... ஹா..ஹா ஈ.ஸிட்.. நீங்க கூட மிஸ் எப்படி ஜீரோ சைஸ் மைன்டெய் செய்றீங்க.. இங்க இருக்கிற சிலர் தொப்ப போட்டு பார்க்கவே பயம்புறுத்திறாங்க.. தேனுவிடமிருந்து காபியை வாங்கினான், அகிலாவுக்கு கொடுத்தாள்...

காபியை ஒரு மிடறு குடிக்க, த்தூன்னு துப்பி புரையேறியது... ஸார் வாட் ஹாப்பன்... அவனருகில் அகிலா வர..

நத்திங் மிஸ்.. நீங்க குடிங்க... தேனுவை பார்த்து முறைத்தான்.. இனியன் பார்ப்பதை சட்டை செய்யாமல் உள்ளே சென்றாள்... ஒகே எனக்கு டைமாயிடுச்சு ... அகிலாவை அனுப்பிவிட்டு உள்ளே வந்தான்...

அத்தே இங்கபாருங்க காபியில உப்பு போட்டு கொடுத்திருக்கா... திமீர் பிடிச்சவ...

தேனு ஏன்டா இப்படி பண்ணுற.. ரேனு கேட்க..

அது தெரியாம சக்கரை டப்பா பதிலாக உப்பு டப்பா எடுத்து போட்டுடேன்மா..

தெரியாம செஞ்சிருக்கா இனியா...

தெரியாம..ம்ம்.. அவள் பின்னாடியே சென்றான்... தேனு ரூமிற்குள் செல்ல, உள்ளே நுழைந்து கையிலிருந்த காபியை ஒரு வாய் குடித்துவிட்டு அவள் திமிற திமிற தன் வாயால் காபியை புகட்டினான்... அவள் தொண்டைக்குள் உப்பு போட்ட காபி இறங்கியது

தெரியாம பண்ணிட்ட... யாருக்கிட்ட , அவள் அடிக்க வருவதற்குள் ஓடிபோய் பாத்ரூமில் புகுந்துக் கொண்டான்..

---சிக்க வைக்கிறான்
 
Last edited by a moderator:
நல்லா இருக்கு
மோகன் பிள்ளயாட்டம்
கவனிச்சு பாசம் காட்டுவது
இனியனுக்கு உப்பு காபியா
, ???
 
Nirmala vandhachu ???
 
Top