Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற-38

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற-38

கிச்சன் வாயலில் நின்ற தேனுவை பார்த்து கண்களால் ரூமுக்கு வரச்சொன்னான் இனியன்... அவன் பின்னாடியே கையில் காபியோடு உள்ளே சென்றாள்...

டையை கழிற்றி, என்னடி தீடிரென்று சப்ரைஸ், சிவா கூட சொல்லவேயில்ல... அவளை கட்டியனைத்த படி பேசினான்...ம்ம் மாமாவிட்டு பிரிஞ்சியிருக்க முடியல அப்படிதானே... அவள் கையில் ஜாதிமல்லியை கொடுத்துவிட்டு, தேனு ரொம்ப டயர்டா இருக்குடி....

இனியனின் தலைமுடியை சரி செய்துவிட்டு, ஆமாம் மாமா சோர்வா தெரியிறீங்க என்று சட்டை பட்டனை கழிட்டினாள், போய் ப்ரஷ் ஆகிட்டு வாங்க மாமா.. நான் ஏதாவது ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வரேன்.. சிறிது நேரத்தில் தேனு உள்ளே வர.. அப்படியே பெட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தான் இனியவன்... மாமா காபிக்கூட குடிக்கல... அவனை தொந்தரவு செய்யாமல் கதவை தாளிட்டு வெளியே சென்றாள் தேனு...

இரவு டின்னரை சாப்பிட்டு அனைவரும் உறங்கிவிட, தூக்கம் தெளிந்து எழுந்து வந்தான், அப்போது தேனு டிவியை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் அமர்ந்து தோளில் கையை போட்டு சாரிடீ தூக்கிட்டேன்.. சாப்பிடலாம் வா...

சாப்பிட படியே... தேனு இன்னைக்கு என் பிரன்ட்ஸ் எல்லாம் ஒட்டினாங்கடி.. மீட்டிங்கல தூங்கி வழிஞ்சேனா... கமென்ட்ஸ் பண்ணிட்டே இருந்தாங்க புது மாப்பிள்ள தூக்குறான்னு.. அப்பறம் சி.எம் என்னை சிறப்பா செய்யறீங்க என்று பாராட்டினார்... அந்த போதை கேஸ் பிடிச்சேன்தானே அதுக்கும் ,புயல் அப்ப செய்த நிவாரண பணிக்கும்...

தனியாவேற கூப்பிட்டு கல்யாணத்து வாழ்த்து சொன்னாரு... அவனுக்கு சாப்பாடு பரிமாறியபடியே இனியன் சொல்லுவதை கேட்டாள்.

அந்த அறைக்கு பால் கொண்டு வந்து இனியனிடம் கொடுக்கும் போது, மூன்று வருடம் முன்பு நடந்தது ஞாபகம் வந்தது தேனுவிற்கு...

லேப்டாப்பில் வேலையை பார்த்தபடி தேனு எனக்கு நிறைய வேலையிருக்கு என்னை தொந்தரவு செய்யாதே... இன்னைக்கு எதுவும் கிடையாது சொல்லி முடிக்கும் முன்னே..

மாமா... இது எனக்கான நேரம், இந்த வேலையை உன் ஆபிஸில போய் பாரு... நம்ம பெட்ரூமுக்கு எடுத்துட்டு வராதே...

ஓ.. இந்த ரூமுல நடந்ததெல்லாம் மறந்துபோச்சா. அன்னைக்கு என்ன பீலிம் ஒட்டுன...ம்ம்..

அவன் கையில் ஸ்டராபெர்ரி படம் போட்ட கவர் கொடுக்க...

அதை வாங்கி பார்த்து ,இத வச்சிட்டு நீ என்னடி செய்யபோற...

ரொம்ப பேசறானே வேலைக்கு ஆகமாட்டான் போல... அதெல்லாம் தெரியாது மாமா லைட்டை ஆப் பண்ணிட்டு பெட்டுக்கு வா...

நோ.. கவர்மெண்ட்டு என்னை நம்பியிருக்கு நான் துரோகம் செய்யமாட்டேன்... வேலைதான் முக்கியம்...

ஓ..ஓ அப்ப மேட்டருக்கு வர மாட்டே..

மாட்டேன்.. மாட்டேன்...மாட்டேன்.

நீ ரொம்ப அழகன் நினைப்பாடா... போனா போகுது வாழ்கை தந்துருக்கேன்... பத்தாவது படிக்கும் போதே எனக்கு பத்துபேர் லவ் லட்டர் கொடுத்தானுங்க... அவனுங்களை எல்லாம் விட்டு என் மாமாதான் வேணும் இருந்தேன் பாரு... பன்னிரென்டாவது படிக்கும்போது அஜய் என்ற பையன் என் கால்ல விழுந்து தேனு என்னை ஏத்துக்கோன்னு அழுதான்..

இதையெல்லாம் கேட்டு இனியன் இரு கையையும் வாயில் வைத்து அம்மாடி ,

போயும் போய் இந்த கருவாயன் காட்டுபையனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...

ஏய் நானா கருவாயன்...

ஆமாம்.. எங்க அம்மா எப்பார்த்தாலும் உன்னை நினைச்சி அழுதுட்டே இருப்பாங்க.. அதான் பாவம் பார்த்து ஓகே பண்ணிருக்கேன்..

டேய் கடைசியா கேட்கிறேன் அதுக்கு வருவியா வரமாட்டியா..

மாட்டேன்... இன்னிக்கே மீட்டிங்ல தூங்கிட்டேன்...இனியன் சொல்ல

அப்ப வெளியே போடா...

தன் லெப்டாபை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான்... தேனு படுத்து தூங்கிவிட.. இரவு 12.00 மணிக்கு தன் அறைக்குள் வந்தான் இனியன்... போட்டிருந்த சேலையிலே தேனு ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் காட்சி... உயிருள்ள ஒவியம் போல் இருந்தாள்.. கண்ணத்தில் விழுந்த மூடியை காதோரம் ஒதுக்கினான் அவளின் இனியவன்... நேற்று நடந்த கூடலில் அங்காங்கே தேனுவின் உடம்பில் ரத்த கன்றி சிவந்திருக்க, கையில் வைத்திருக்கும் ஆயின்மென்டை எடுத்து தேனுவின் இடுப்பில் தடவினான்... கழுத்தில் , மற்றும் முந்தானையை விலக்க பெண்ணவள் திடுக்கிட்டு கண்னைதிறந்து பார்த்தாள், அவள் முன் கண்கள் கலங்கியிருந்தான் இனியன்..

மாமா... அவன் முகத்தை நிமிர்த்தி ஏன் கண்கள் கலங்குது என்னாச்சு மாமா...

போடீ முகத்தை தூக்கி வைத்துக்கொண்டான்.

அவன் கையிலிருக்கும் ஆயில்மெண்டை பார்த்தாள்... அதிலே கேள்வியை புரிந்தது.

அவளை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டான்

ப்ச்... நான் ஒரு காட்டுபையன் மாதிரி பிகேவ் பண்ணிருக்கேன், யானை சோள காட்டுக்குள் போன மாதிரி... ஸாரிடி உன்மேல அப்படி பாய்ந்துட்டேன்.. நீ வேற வெள்ளையா இருக்கீயா தொட்டாவே சிவப்பா ஆயிடுது... அங்கங்க கடிச்சி வேற வச்சிருக்கேன், நான் காலையிலதான் பார்த்தேன்... வலிக்குது சொல்லிருக்கலாம் தேனு, நான் ஸ்டாப் பண்ணிருப்பேன்...

அவன் இதழில் பட்டு முத்தமிட்டு, இதுக்கா மாமா பீல் செய்யறே...

ம்ம் என்று அவளை கட்டியணைத்துக் கொண்டான் இந்த கள்வன்... தேனு மாமா மருந்து போட்டுவிடவா...

அவன் காதருகில் பேசினாள்..ம்ம் ஆனா இந்த ஆயின்மென்ட் வேணாம்.. என் இனி மாமாவோட லிப்ஸ்தான் போடனும்..

டாலி... அவளை ஆசையா பார்க்க...மாமா மூனு வருஷத்துக்கு முன்னாடி நீ ஆசைபட்டு கேட்ட, ஆனா நான் சம்மதிக்கல... இப்போ அதே லவ் எனக்கு வேணும்... பூவிற்கு வலிக்காமல் தேனை பருக்க ஆரம்பித்தான்...

அடுத்த நாள் மதியம் முழுக்க தேனு தன் மாமாவிற்கு தேவையான துணிகளை ஷாப்பிங் செய்தாள்...

இரவு பிளைட்டில் கோவாவுக்கு ஹனிமுன் சென்றார்கள் தேனுவும், இனியனும்.. முழுக்க அசோக்கின் ஏற்பாடுதான்.. அங்கு செல்ல அனைத்து செலவுகளும்... இனியனுக்கு லீவ் கிடைக்காததால் வெளிநாட்டிற்கு ஹனிமூன் போகவில்லை..பிளைட்டில் ஏறும் போதே செல்பி எடுத்து ஸ்டேடஸ் போட்டு எல்லாருக்கு பை சொல்லிட்டு கிளம்பினான் நம்ம கலெக்டர் தன் மனைவியோடு...அப்பாடா தேனு செம்ம ஜாலிடி.. த்ரீ டேஸ் எந்த தொந்தரவும் இல்லாம..

அடுத்தநாள் காலை 8.30 மணிக்கு சென்னை பிளைட்டில் திரும்பிக் கொண்டிருந்தார்கள்...

மாமா.. ஏன் இப்படி அழுதுட்டே வர.. உன்னை அங்கியே தங்க சொன்னேன்தானே..

ஏய் தனியா யாராவது ஹனிமூன் கொண்டாடுவாங்களா... இங்க பாருடி மீம்ஸ் போட்டு கலாய்க்கிறாங்கடி... இந்த அசோக்கிட்ட வேற சொல்லிட்ட அவன் என் பிரண்ட் புரா பரப்பிட்டான்... பாரு இந்த மெசேஜை சீட்டுகுருவி லேகியம் வாங்கி சாப்பிடுடா சொல்லுறான்.. இன்னொருத்தன் ஹார்ஸ் பவர் மாத்திரை வாங்கி சாப்பிடுடா சொல்லுறான்.. திரும்ப தேம்பி தேம்பி ஆழ ஆரம்பித்தான்..

எவ்வளவு பணம் நஷ்டம் தெரியுமா... கோவாவுல ஒரு வாய் சாப்பாடு கூட சாப்பிடலடி..

அவனிடம் திரும்பி நீயா செலவு செஞ்சே... அசோக்கும், சிவாவும் தான் செய்யறாங்க.. கொஞ்சம் அமைதியா வா அந்த ஹேர் ஹோஸ்டஸ் உன்னையே பார்த்துட்டு வரா..

யாரு...யாரு எட்டி பார்த்தான் இனியன்..

அவன் ரியாக்ஷனை பார்த்து முறைத்தபடி.. நீ அடங்க மாட்டியா.. அதற்குள் அவர்களின் சீட்டின் அருகில் அந்த பெண் வந்தாள்..

சார் எனித்திங் ப்ராபளம் , ஏன் கண்கலங்கிறீங்க என்று வினவ...

அவங்க ஆயா செத்துட்டாங்களாம் அதான் அழுதுட்டு வரான் என்றாள் தேனு.

அய்யோ பாவம்... நீ அவங்க மேல அவ்வளவு அன்பு வச்சிருக்கீங்களா.. சோ ஸ்வீட்... இந்தாங்க டிஷ்யூ பேப்பர் துடைச்சிக்கோங்க...

தேனுவிடம் அந்த பெண் நீங்க அவரு தங்கச்சியா என்று கேட்க... அதை கேட்டவுடன் இனியன் சிரித்துவிட்டான்... அவனின் முகத்தை திரும்பி சிரிச்சியாக்கும் என்றாள் தேன்மொழி...

என்ன கேட்டிங்க.. எங்க பக்கத்துவீட்டு பையன் , நான் இவன் தங்கச்சியில்ல.. அக்கா... நான் பார்த்துக்கிறேன் அவனை நீ உன் வேலையை பாரும்மா...

அய்யோ, ஃபுல் பார்ம்ல இருக்காளே... தேனு இந்த பொண்ணு பேட் கேர்ள்... பொண்டாட்டி நீ பக்கத்துல இருக்க சொல்லவே என்னை சைட் அடிக்கிறா.. அதுக்குதான் சொல்லுறேன்... மாமா கையை பிடிச்சி நெருக்கமா உட்காருன்னு..

மவனே கையை தொட்ட நீ கெட்ட என்கிட்ட...

மாலை ஐந்து மணிக்கு , மலைபிரதேசத்தில் காரில் இனியனும், தேனும் போய்க்கொண்டிருக்க..

எங்கடி போறோம்...

ம்ம்..முதுமலைக்கு அப்படியே ஊட்டிக்கு...

எதுக்குடி அங்க..

ம்ம்... அந்த ஊர் கலெக்டரு யானைக்கு எப்படி சாப்பாடு போட சொல்லுறாருன்னு பார்க்க... ஊட்டியில் இப்போது நல்ல மழை சீசன்... எங்கயும் போக முடியாத படி குளிர் வேற...

பெரிய ரிசார்ட்டின் ரூமில்... கம்பளியை தலையில் போர்த்திக் கொண்டு பெட்டில் உட்கார்ந்திருந்தான் இனியன்.. அங்கு தேனு சமீராவிடம் போனில் பேசிக் கொண்டிருந்தாள்...

மெதுவாக தனது வலது காலை எடுத்துட்டு போய் தேனுவின் கால் விரலை சீண்ட.. பேசிக் கொண்டிருந்த தேனு காலை எடு மாமா..

சமீ, நல்ல வக்கிலா சொல்லுடி... எனக்கு எந்த ப்ராபளம் வருகூடாது நான் நிம்மதியா இருக்கனும்... எனக்கு ரொம்ப டௌவுட்டா இருக்குடி தெளிவான பதில் வேணும்..

பாருங்க மக்களே ஒரு கலெக்டர், என்கிட்ட சந்தேகம் கேட்கிறாளா.. சின்ன பொண்ணு சமீரா, அந்த தெய்வமே பத்தாவதுல கோட் அடிச்சு, இப்படி அப்படி பாஸாகி காலேஜ் சேர்த்தோம்.. அவகிட்ட போய் கேட்கிறா.. வர வர கலெக்டருக்கே மரியாதையில்லாம போயிடுச்சு...ஆகட்டும்..

ஏய் சமீ எனக்கு தான் கல்யாணம் ஆயி மூனு வருஷமாயிடுச்சே.. ஒண்ணும் பிரச்சனை வராதுடி நான் டைவர்ஸ் பண்ணலாம்...

இதை கேட்ட இனியன் என்னது டைவர்ஸாஸாஸா... ஏய் தேனு போனை கொடுடி.. அவக்கிட்டயிருந்து பிடுங்கி சமீ, அண்ணா போனை வைக்கிறேன்னு கட் செய்தான்...

மாமா எதுக்கு போனை கட் செஞ்சிங்க, நாளைக்கு அவக்கிட்ட திரும்ப பேசுவேன்...

ஓ டைவர்ஸ் செஞ்சிடுவ, செஞ்சிக்கோ திரும்ப கல்யாணம் பண்ணிக்கலாம்.. இந்த முறை டிப்பரன்டா பர்ஸ்ட் நைட் வச்சிக்கலாம்...அவள் பக்கத்தில் இடித்துக் கொண்டு உட்கார..

தேனுமா ரொம்ப குளிருதுடி... “மனம் சூடான இடம்தேடி அலைகின்றதே”, பாட்டாக பாடினான்..

தேனு அவனை பார்த்து முறைக்க... சிவா வச்சானே என் சூட்கேஸ்ல அந்த சரக்காவது கொடுடி... தாங்கமுடியல...

சிவா நைட் யானை சவாரி ரெடி பண்ணிருக்கானாம் போயிட்டு வா மாமா...

ம்ம்... யானை சவாரியா, அதெல்லாம் பிள்ளையை பெத்துட்டு வந்து போகலாம்.. வேணா குதிரை சவாரி செய்யட்டா அவளை மேலயும் கீழயும் பார்த்து சொல்ல...

இன்னும் இரண்டு மடங்கா தேனுக்கு கோவம் ஏறிக் கொண்டு போக... வேணாடா நான் ஏற்கனவே டென்ஷன்ல இருக்கேன்..

தேனுக்குட்டி.. இந்த அசோக் பையன்தான், என்னை மாட்டிவிட்டான்டி.. நிஜமா நான் யாரையும் பார்க்கல தெரியுமா..

நீ பார்க்கல, ஆனா உன் கண்ணு பார்த்துச்சு அதானே மாமா....

---சிக்க வைக்கிறாள்
 
Nirmala vandhachu ???
 
Oh my god .....
இந்த அவமானம் உனக்கு தேவையா கலெக்டர் sir????
இப்படி தேனுவ கெஞ்ச வைக்கிற man?????
இனியா , பொறுத்தது போதும் பொங்கி எழு!!!!!
கோவால எதோ தரமான சம்பவம் நடந்து இருக்கு?????
என்னவோ தெரியவில்லை????
 
Top