Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -11

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -11

நல்ல படியாக நிச்சயம் முடிய அனைவருக்கும் அங்கே விருந்து அளிக்கபட்டது... மாலை நேரம் அனைவரும் வீட்டுக்கு வர... அங்கே வீட்டின் வாசலில் பையோட நின்றிருந்தான் மோகன்..

முதலில் இறக்கியது ஐலா தான், அவனை அருகே பார்த்தவுடன் கண்கள் கலங்கி நின்றாள்... அவளை நோக்கி ஓடி வந்தான்.... கால்கள் நடக்க இயலாமல் அப்படியே நின்றாள் பெண்ணவள்.. தன் பிள்ளையைவிட பாசமாக வளர்த்தவள் அல்லவா.. சிறியவன், உலகம் தெரியாதவன் அப்பா வேணும் என்று அழுது போராட்டம் நடத்தியவன் தான் இரண்டு வருடம் கழித்து பார்க்கிறாள் நன்றாக வளர்ந்திருந்தான்.. மீசையும் முளைத்திருந்தது...

ஸ்தம்பித்து நின்றாள்.. அவளை கடந்து சென்று இனியனை மாமா என்று கட்டியனைத்தான் மோகன்.

இனியன் தோளுக்கு மேல் வளர்ந்திருந்தான்... ஆனாலும் குழந்தையே இனியனை பொறுத்தவரை.. அவனை மேலும் கீழும் கண்களால் ஆராய்ந்து எப்படா வந்த... சாப்பிட்டியா. வா நம்ம வீட்டுக்கு போகலாம்..

பின்னாடியே வந்த அசோக்... என்னடா மோகன் நைட் ஆகிடும் சொன்ன சீக்கிரமே வந்துட்டே..

அண்ணா.. சர்ப்ரைஸா வரலாம் நினைச்சு வந்தேன் நீங்க யாருமே இல்ல.. ஹாங் மாமா பங்க்ஷன் நல்லபடியா முடிஞ்சதா..

ம்ம்.. இதோ போறாங்களே அந்த சிகப்பு நிற பட்டுசேலை அவங்கதான்டா உங்க அக்கா, மாமாவ கட்டிக்க போறாங்க..

சூப்பர் மாமா.. கடைசியில அக்கா வடையிலிருந்து எஸ்கேப் ஆயிட்டு இப்ப புதுசா பெசரெட் சாப்பிடலாம்..

அவன் சொன்னதை கேட்டு புன்னகைத்து சரி வா வீட்டுக்கு போகலாம் என்றான் இனியன்..

அசோக் மட்டும் மோகனை பார்த்துக்கொண்டு நின்றான்.. டேய் மோகனு உனக்கு கண்ணு தெரியலையாடா.. உங்க அக்கா தேனு அங்கே நிற்கிறா யாரோன்னு வர..

யாரு என்று திரும்பி பார்த்தான்.. புதுசா யாருமாமா அக்கா

ஹப்பா போதும்டா சாமி ஏற்கனவே உன் மாமன் தொல்லை தாங்கமுடியல நீ வேற நடிக்காதேடா..

இவன் பேசுவதை காதில் வாங்காமல் ஐலாவை கடந்து சென்றார்கள் இனியனும், மோகனும்.

வீட்டிற்குள் நுழைந்தார்கள்.. மாமா வீடு செமயா இருக்கு..

ரெட்டி வீடுடா... வருங்கால மாமனாருது அசோக் சொல்ல.

வீட்டை சுற்றி நடந்துவிட்டு, மாமா பப்பு எங்க..

அவன் ஐலாவோட ஐக்கியமாயிட்டான் மோகன்.. அதற்குள் அவனுக்கு காபி போட்டு எடுத்து வந்தான் இனியன்..

காபியை குடிச்சிட்டு, ரூமுக்கு போய் ரெஸ்ட் எடுடா மோகன், நைட் டின்னர் ரெட்டி வீட்டுல..

....

ஏழு மணியளவில் மூவரும் கிளம்பி ரெட்டி வீட்டிற்கு வந்தார்கள்.. அனைவருக்கும் மோகனை அறிமுக படுத்தினான் இனியன்.. டைனிங் டெபிளில் ஆண்கள் சாப்பிட உட்கார்ந்தார்கள்... துளசி,தங்கம் ஆண்களுக்கு உணவு பரிமாறினர்..

எதுவும் வேண்டாம் என்று தவிர்ந்தான் இனியன்..

ஏன் தம்பி எதுவும் சாப்பிட மாட்டிறீங்க துளசி இனியனை கேட்டாள்.

எனக்கு உங்க ஊர் காரம் ஒத்துவரல.. சாப்பிட முடியல ஸாரி என்றான்.. தயிர் சாதம் போதும்..

இவர்கள் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்த ரெட்டி... அம்மா ஐலா நீ வெச்ச மோர் குழம்பு, உருளைகிழங்கு வறுவல் எடுத்துட்டு வாடா என்று குரல் கொடுத்தார்..

மாப்பிள எங்க ஐலா பாப்பா எனக்கு ரொம்ப பிடிக்குமுனு, உங்க ஊர் சமையல் செஞ்சி வைக்கும், சாப்பிட்டு பாருங்க..

பெரிய தட்டில் சாதம் வைத்து அவனுக்கு பிடித்த உருளைக்கிழங்கு வறுவல் எடுத்து வந்து இனியனுக்கு பரிமாறினாள்..

இரண்டு வருஷம் கழித்து இன்றுதான் மனைவியின் கைமணத்தில் சாப்பிட போறான்..

தட்டில் மோர் குழம்பை ஊற்றி பிசைந்து வாயில் வைத்தான்.. கண்கள் கலங்கி விட்டது அவனுக்கு, எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் தன் மாமனுக்கு அவள் கையால்தான் சமைப்பாள்... இரவு நேரங்களில் அவனுக்கு பிடித்ததை பார்த்து பார்த்து சமைப்பாள்.. காலை பரப்பரப்பில் சாப்பிடாமல் ஓடும் கணவனுக்கு ஊட்டிவிட்டுதான் அனுப்புவாள்..

விடுடி டைமாயிடுச்சு என்று கத்துவான்..

நேரத்திற்கு தூங்கனாதானே காலையில சீக்கிரம் எழுந்திருக்க முடியும் மாமா.. லேட்டா எழுந்துட்டு,

அடிப்பாவி நான் தூங்கிறேன்தான் சொன்னேன், நீதான் டூ ரௌன்ட் கேட்ட..

யாரு நான், அவனை முறைத்தாள் தேனு...

நீ சொல்லனும் அவசியமில்ல மாமா எக்ஸ்ரே கண்ணால உன் மனசில நினைக்கிறது கண்டுபிடிச்சேன்...

திருந்தவே மாட்டியா மாமா.. வாயின் நிறைய தண்ணீர் குடித்து தேனுவின் வாயின் வழியாக செலுத்தினான், அவளின் தொண்டைக்குள் இறங்கியது..

எப்படி , அவளை இறுக்கி அனைத்துவிட்டு பாய் என்று ஆபிஸுக்கு கிளம்பினான்...

இப்போ நினைத்து கண்கள் கலங்கிவிட்டது இனியவனுக்கு...

மாமா நீ எப்படிதான் அக்கா செஞ்சதை சாப்பிடுறீயோ, எவ்வளவு அயிட்டமிருக்கு மோகன் மெதுவாக கிசுகிசுத்தான்..

அதற்கு சிரிப்பு மட்டுமே பதிலாக கொடுத்தான்... இன்னும் கொஞ்சம் வச்சிங்க தம்பி, துளசி அள்ளி வைத்தார்..

அய்யோ போதும் எனக்கு அதிகமா வச்சிட்டிங்க அத்தை, சாப்பிட முடியாமல் மீதி வைத்தான். உள்ளே இதையெல்லாம் கேட்டபடி பப்புவுக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள் ஐலா... அவனின் முகத்தை துடைத்துவிட்டு சரளா பாட்டி இவனை விளையாட விடுங்க , அவர்களிடம் கொடுத்துவிட்டு திரும்ப..

ஐலாவிடம் இனியன் சாப்பிட்ட தட்டை கொடுத்தார் துளசி.. சிறிய சிரிப்புடன் தன் மகளை பார்த்தார்... பழைய ஆளு நாங்களே புருஷன் சாப்பிட்ட எச்சில சாப்பிடமாட்டோம்.. நீ எம்பூட்டு படிப்பு படிச்ச பொண்ணு...

தன் கணவன் வைத்த உணவை ஒரு வாய் சாப்பிட்டு, அம்மா அவருடைய எச்சிலை சாப்பிட கூட எனக்கு அருகதையில்லை சொன்னவுடன்,

தேனு என்று கட்டியனைத்தாள் துளசி... அப்படி சொல்லாதே தேனும்மா, என் ராஜாத்தி உனக்கென்ன குறைச்சல், தேனுவின் கண்களில் வரும் கண்ணீரை துடைத்துவிட்டு, இன்னும் கொஞ்சம் சாதம் வைக்கவாடா என்றார்..

போதும்மா... எனக்கு வயிறு நிறைஞ்சிடுச்சு.

ஜன்னல் பக்கத்தில் இருக்கும் சுவற்றில் சாய்ந்து இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான் இனியன்...

அன்று இரவு பத்து மணிக்கு, ம்மா நான் அப்பாகிட்ட போகனும் என்று பப்பு அழுது அடம்பிடிக்க ஆரம்பித்தான்.

டேய் டைமாயிடுச்சு டா நாளைக்கு காலையில போகலாம், அப்பவே உங்கப்பா கூப்பிட்டாருதானே நீ ஏன் போகல, தன் மகனை கடித்துக்கொண்டாள்...

நான் இல்லாம அப்பா தூங்கமாட்டாரு, த்ரீ டேஸ் ஆயிடுச்சு நான் போறேன் மறுபடியும் அழ ஆரம்பித்தான்...

சரி வா என்று அவனின் கையை பிடித்துக்கொண்டு இனியன் வீட்டிற்குள் நுழைந்தாள்..

தயங்கி தயங்கி ஐலா நிற்க.. சீக்கிரம் வாங்க மம்மி.. அவன் வந்துட்டான்..

யாருடா பப்பு..

ம்ம் அந்த மோகன்தான் அப்பா பக்கத்தில படுத்துப்பான்...

டேய் மாமான்னு சொல்லு..

நான் மோகன் தான் அவனை கூப்பிடுவேன்.. பேட் பாய் தெரியுமா, நாலு அடிபோடுங்க மம்மி... சாக்கி சாப்பிட்டா பல்லு கெட்டுபோயிடுமுன்னு சொல்லி என்கிட்டயிருந்து பிடுங்கி அவன் முழுசா சாப்பிடுவான்..

சிரிப்பு வந்துவிட்டது ஐலாவிற்கு , வாண்டு எப்படியெல்லாம் பேசுது... மோகனுக்காக கூட்டிட்டு வந்திருக்கு மனதில் நினைத்துக்கொண்டாள்...

மாடியேறி படாரென்று கதவை திறந்தான் பப்பு...

அங்கு கண்ட காட்சியை பார்த்து அப்படியே நின்றாள் ஐலா..

மோகன், இனியன் காலில் எண்ணெய் தடவி நீவிக்கொண்டிருந்தான்.. விடுடா மோகன் இனியன் கெஞ்ச..

நீங்க சும்மாயிருங்க மாமா...

டாடி என்று ஓடிவந்து இனியன் மேல் ஏறினான் பப்பு...

யாரு மாமா இந்த பையன்...புதுசா இருக்கான் , பக்கத்துவீட்டு பையனா மோகன் வெறுப்பேற்ற.

மோகனை அடித்தான் பப்பு.. இது எங்க வீடு.. நீ போ..

நான் ஏன்டா போகனும் எங்க மாமா இது என்று இனியனை ஒரு பக்கம் கட்டிக்கொண்டான்..

இல்ல எங்கப்பா என்று அடுத்தபக்கம் கட்டிக்கொண்டான் பப்பு... இருவரின் சண்டையை பார்த்து சிரித்தான் இனியன்.. எப்படா திருந்துவீங்க சொல்லி ஐலாவை நோக்கினான்...

கண்கள் பூரித்துபோய் நின்றாள்...தன்னவனுக்கு பாசம் காட்ட நம்வீட்டார் இருக்கிறார்கள் அதுபோதும், தன் வீட்டை நோக்கி நடத்தாள்..

.....

12 மணிக்கு பார்ட்டி முடிந்து, தள்ளாடியபடி ரூமிற்கு வந்து ஏஸியை ஆன் செய்தான் அன்பு வேந்தன்... இன்று அவனுக்கு பிறந்தநாள் கோட்டதான் விசாகபட்டினத்திற்கு அழைத்தான்.. அவன் கோட்டையில் பார்ட்டி நடந்தது..

அதை முடித்துவிட்டுதான் தள்ளாடியபடி வந்தான் அன்புவேந்தன். தொழில் முறையில் சிநேகிதன்... கூடவே படித்தவன்..

அவன் மெத்தையில் படுத்து திரும்ப... முகத்தின்முன்னே நோக்கி வரும் கத்தியை பிடித்துக்கொண்டான்.. எதிரே கறுப்பு அங்கி போட்ட உருவம் நிற்க..

யாரு...டேய் எல்லாரும் வாங்கடா என்று அந்த ரூமின் அழைப்பு மணியை அழுத்தினான்... ஒரு கையால் கத்தியையும் மறுகையால் லைட்டை போட்டான்.. கண்டிபிடிக்க முடியவில்லை

முகத்தில் இருக்கும் பர்தாவை பிடுங்க முயற்சி செய்ய ஆட்கள் கதவை திறந்து உள்ளே நுழைந்தார்கள்.. அதற்குள் அந்த வீட்டின் கரண்ட் முழுவதும் நின்றுவிட்டது... ரூம் முழுக்க இருட்டு ஒரு கரம் கத்தி வைத்திருந்த நபரை இழுத்துக்கொண்டு ஓடியது...

வெளியே கார் நிற்க அதிலேறி அமர்ந்தார்கள்...

அதற்குள் அடியாட்கள் துரத்திக்கொண்டே வர... காரின் வேகத்தை அதிகரித்தான் இனியன்..

ஏய் எரும பர்தாவ எடுடி... சொல்ல..

தான் மூடியிருந்த திரையை விலக்கினாள் ஐலா...

எந்த தைரியத்தில கோட்ட வீட்டிற்கு போனே.. எப்படி போனே..

அது..அது... இழுக்க..

சொல்லுடி.

சின்னா தான் அய்யோ சின்னா மாட்டிக்க போறான்..

அவன் எப்போவோ எஸ்கேப்பூ. நீ எதுக்கு இந்த நேரத்தில போனே...

அது..அது..

ச்சீ..சொல்லு ஒரு அறைவிட்டேனா தெரியும்..

உங்களுக்கு தெரியாது எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா.. அவ பத்தாவது படிச்சா

உனக்கு தங்கச்சி..ம்ம்... நம்பாமல் அவளை முறைக்க..

தங்கச்சி மாதிரி கலெக்டரு. எங்க பண்ணையில வேலை செய்றவங்க பொண்ணு.. என் கூடவே இருப்பா... நல்லாவும் படிப்பா அவ கணவு டாக்டர் ஆகனும்..

ஒரு நாள் இந்த பொறுக்கி சைக்கிள்ல வந்த பாப்பாமேல காரை ஏத்திட்டான்.. சரி நின்னு ஆஸ்பிட்டல்ல சேர்த்து விட்டிருக்கலாம் பிழைச்சிருப்பா... அப்படியே விட்டு போயிட்டான் சாரே..

நாங்க வந்து பார்க்கும் போது இறந்துட்டா சாரே... அந்த குடும்பத்துக்கு ஒரே பொண்ணு..

சரி அதுக்கு நீ ஏன் கத்திய தூக்கிட்டு போனே, இந்த நேரத்தில தான் ஒரு கலெக்டருன்னு நிருப்பிச்சான் இனியன்..

ஈஸியா கேள்வி கேட்பான்..பதில் சொல்லுறது எவ்வளவு கஷ்டம் என்று எனக்கு தான் தெரியும்.. மனதில் நினைக்க..

என்னடி யோசிக்கிற.. எப்படி ஏமாற்றலாம் என்றா..

ச்சே..ச்சே.. நாங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போனோம், கோர்ட்டுக்கு கூட போனோம்.. அவன் காரே ஓட்டல என்று சொல்லி வெளியே வந்துட்டான்..

அதுக்கு நாம்ம ஒரு பாடம் கத்துக்கொடுக்கனும் தோனுச்சு.. அவன் கையை வெட்டிட்டா எப்படி வண்டி ஒட்டுவான்.. அதான் கத்தியை எடுத்துட்டு போனேன் தப்பிச்சிட்டான்..

லூஸூ இந்த ஐடியாவ யாரு கொடுத்தா..

வேற யாரு என்ற மாமன் சின்னா..

யாருடி உனக்கு மாமன்.. கோவம் ஊற்றேடுத்து வந்தது.. வண்டியை திருப்பி கோட்ட வீட்டை நோக்கி போனான்..

ஸார் எதுக்கு திரும்பவும் அங்க போறீங்க , ஏதாவது விட்டு வந்திட்டீங்களா.

நீ அங்கேயே இரு உன்ற மாமன் வந்து காப்பாத்துட்டும்...சரியா..

....... என்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
 
மனதில்தந்தையாய்
மனம் விட்டு பேசும் நண்பனாய்
மாமனின் அன்பில் வளர்ந்த
மூத்த மகனாய் மோகன்.....
இனியனுடன் பிள்ளைகளாய்
இருவரும் அடித்து பிடித்துவிளையாடுவது
அருமை ......
இனியன் தேனும் பிரிய
இவன் தான் காரணமா....
இவனை கொலை செய்ய தான்
இந்த நாடகமா????
இனியன் சரியான நேரத்தில் வந்து
இவன் தேனை காக்க.....
இனிதான் மறைந்த உண்மைகள் தெரிய இருக்கும் போல....
 
Top