Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -18

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -18

மதியம் 3 மணிக்கு மழலையர் வகுப்புகள் முடிவடைவதால், தன் மகனை அழைத்துக்கொள்ள வந்திருந்தாள் தேனு... காரிலிருந்து இறங்கினாள்.. வகுப்பை விட்டு சின்னபிள்ளைகள் ஓடிவந்தன.. தூரத்திலே பப்பு பார்த்துவிட்டான் தன் தேனுவை, அம்மா என்று கையை விரித்து ஓடிவந்தான். அவள் கண்களில் தன் மகன் மட்டுமே தெரிந்தான்..

பூரித்த சிரிப்பில் பப்பு என்று உதடுகள் அசைக்க,விரைந்து தன் கால்தடத்தை வைத்தாள்... சரசரவென்று அங்கேயிருந்த காரிலிருந்து இறங்கினான் கோட்ட சீனு.. கையில் கத்தியோடு அவளுக்கு பின்னால் வந்து கழுத்தில் கோடுபோட ஆக்ரோஷமாக கையை தூக்கினான்...

தேனு என்று இனியன் அவளை இழுக்க, வேகமாக வீசின கத்தி இனியனின் தோள்பட்டையில் கீறியது... என்ன நடந்தது என்று யோசிக்க கூட முடியவில்லை தேனுவால்... இனியன் மேல் இருவர் தாக்கவர.. அவள் கண்கள் பார்த்தது இனியன் கையிலிருந்து வரும் ரத்தம் மட்டுமே..

மாமா.. என்று கத்தி அவன்மேலே சரிந்து மயங்கிவிழுந்தாள்... பின்னாடியே வந்த அசோக், பப்பை தூக்கிக்கொண்டு அவர்களது காரில் அமரவைத்தான்... பயத்தில் அப்பா என்று அழ ஆரம்பித்தது அந்த சின்ன சிட்டு...

தொடையில் தன்னவளை தாங்கினான், இனியன்... அதற்குள் அங்கே ஏழு அடியாட்கள் சூழ்ந்துக்கொண்டனர், நடுவில் நின்றான் கோட்ட சீனு..

அவனை முறைத்து பார்த்து, தேனுவை தூக்கி தோள்மேல் போட்டான்...

என்னடா அப்படி பார்க்கிற... இன்னைக்கு என் கையால தான்டா சாவு உனக்கு ,என்று கையில் கத்தியோட ஓடிவர அங்கே கூடியிருந்த கூட்டம் பயந்து அங்கும் இங்கும் ஓடியது,

அவர்களை தள்ளிவிட்டு இனியன் நோக்கி வந்தான் கோட்ட... அவனின் கையாட்களும்.. தேனுவை தூக்கிக்கொண்டு விறுவிறுன்னு நடந்தான்... அசோகிடம் தேனுவை கொடுத்து காரை எடுத்து கிளம்புடா..

அசோக் திகைப்பாக தன் நன்பனை பார்க்க.. எனக்கு ஒண்ணும் ஆகாது இவளை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போ அசோக்...

இல்ல.. என்று தலையை மறுப்பாக ஆட்டினான்..

போடா.... இனியன் கத்த.. தேனுவை காரின் பின்னாடி இருக்கையில் சாய்த்து காரை ஸ்டார்ட் செய்தான் அசோக்.. பப்புவோ அம்மா அம்மா என்று தேனுவின் தாடையை பற்றி எழுப்பினான்..

திரும்பி பார்த்த இனியன், கண்கள் வேங்கையே போல் ஒளிக்க, தன் காலை தூக்கி ஒங்கி மிதித்தான் அவனை நோக்கி வந்த அடியாளை, கோட்டவும் கத்தியை தூக்கிக்கொண்டு அவனின் அருகே வர, அந்த கையை தடுத்து அவன் மூஞ்சில் ஒரு குத்து விட்டான்...

இப்படியே ஒருத்தரை விடாமல் இனியன் அடித்து தூள்கிளப்ப.. தூரத்தில் போலிஸ் ஜீப் வருவதை பார்த்து அனைவரும் காரை கிளப்பி அதிலேறினர்..

ஸார்.. என்று இனியனை நோக்கி வந்தார் இன்ஸ்பெக்டர்...

எனக்கு ஒண்ணுமில்லை ஸார்... அவர்கள் போவதை காட்டினான்.. போலிஸ் ஜீப் இவர்களை துரத்திக்கொண்டு சென்றது கொஞ்ச நேரத்தில் கார் எங்கே சென்றது என்று தெரியவில்லை, அவர்கள் வேறுபாதையாக சென்றனர்...

ஊரை தாண்டி சென்றது கோட்ட சீனுவின் கார்.. அந்த காரில் மூவர் மட்டுமே இருந்தனர்... பின்னாடியே ப்ளாக் ஆடி அவர்களை சேஸ் செய்து வந்தன..

அசரப் சீனுவிடம், அண்ணா அந்த இனியன் நம்மளை துரத்திட்டு வரான்... அடிபட்ட பாம்புன்னா கொத்தாம விடமாட்டான்..ட்ரைவரை நோக்கி ஸ்பீடா ஒட்டுடா கத்தினான்...

உயிர்பயத்தில் பயங்கர ஸ்பீடாக ஒட்டினான்... இவனை பார்த்தபடியே நான்கு பக்கம் ரோட்டில் திரும்ப, எதிர்க்க வந்த லாரி அவர்களின் காரில் மோதியது.

கார் வேகமாக வந்ததால் ட்ரைவரால் பிரேக்கை கண்ட்ரோல் செய்யமுடியாமல் வந்த லாரிமேல் மோதினான்... கார் லாரியின் சக்கரத்தில் மாட்டி அப்பளமாக நொறுங்கியது... தூரத்திலே நின்று பார்த்தான் இனியன், அவனின் கணிப்பு யாரும் உயிரோட இருக்கமாட்டார்கள் என்று... தன் தலைமூடியை சிலுப்பிக் கொண்டு காரை எடுத்தான்...

......

இரவு ஏழு மணி ஆனது, ஹாஸ்பிட்டலே பரப்பரப்பாக இயக்கிக்கொண்டிருக்க... மெல்ல கண்விழித்தாள் தேனு.. டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க.. தாம் எங்கேயிருக்கிறோம் என்று நினைவு கூர்ந்தாள்...

அவள் இதயம் துடிக்க.. மாமா, மாமா என்று மூனுமூனுத்தபடி கையில் ஏறிய டிரிப்ஸை எடுத்துவிட்டு.. தள்ளாடியபடி இறங்கினாள்.. மனம் பதைக்க, அவள் கண்திரையில் இனியனை கத்தியால் குத்தினது தான் வந்துசென்றது.. கதவை திறந்து வெளியே வந்தாள்..

அந்த ஹாஸ்பிட்டல் புதுசு எங்கே போகிறதென்று தெரியவில்லை.. எதிரே வந்த நர்ஸின் கையை பிடித்தாள் தேனு.. எங்க மாமாவுக்கு என்னாச்சு...

புரியவில்லை நர்ஸூக்கு... மாமாவா.. தமிழ் தெரியும்போல அந்த பெண்மணிக்கு... என்ன மாமா... யாரை கேட்கிறீங்க... வார்தைகள் வரவில்லை தேனுவிற்கு சைகையால் மாமாவ கத்தியால குத்திட்டாங்க காட்டினாள்..

ஓ அந்த கேஸா.. பக்கத்து ரூம்தான்மா. சீக்கிரம் போய் பாரு உயிர் மட்டும்தான் இருக்கு... அதுவே கடைசி நிமிடங்கள்..

அந்த பெண் சொல்ல சொல்ல , தேனுவிற்கு தலை சுற்றியது, கண்கள் இருட்ட... சுவற்றை பிடித்துக்கொண்டே வேகமாக நடந்தாள்.. ரூமின் கதவை திறந்து மாமா என்று கத்தியபடி அவன் காலை பிடித்தாள்..

ஐயோ மாமா, என் இனிமாமா.. நீ இல்லாம என்னால வாழ முடியாது மாமா.. இதுக்கா உன்னைவிட்டு ஓதுங்கியிருந்தேன் தலை கவிழந்து அவன் காலை இறுக்கிபிடித்து ஓவென தேனு அழ... நான் ஒரு பாவி உன்கூட வாழ தகுதியில்லாதவ... உன்னை கஷ்டப்படுத்திட்டேனே மாமா..அவள் பக்கத்திலிருந்த நின்றிருந்த பெண் ஒருத்தி தேனுவையே பார்த்தால்...

தேனு கண்ணீரோட அவன் முகத்தை ஏறிட்டு பார்க்க , அதிர்ச்சியில் பக்கத்திலிருக்கும் பெண் அப்போதுதான் பார்த்தாள்... அந்த பெண்ணின் மையின்ட் வாய்ஸோ அது யாரு நம்ம புருஷனை கட்டிட்டு அழுது என்று..

போலாமா தேனு என்று இனியன் தேனுவின் தோளில் கையை வைக்க.. அப்படியே விக்கித்து நின்றாள் தேன்மொழியாள்..

அது அவங்க புருஷன்.. வா ஐலா என்கிற தேனு...வா. அவளை அனைத்தபடி அழைத்துசென்றான்..

அவனுக்கு எதாவது ஆயிட்டதா என்று தன் கையால் அவன் உடம்பில் தடவி தடவி பார்த்தாள்..

ச்சீ.. கையை எடு.. கண்ட இடத்திலெல்லாம் கையை வைக்கிற...

ஹாஸ்பிட்டல் இருந்து வெளியே கூட்டிட்டு வந்து காரின் கதவை திறந்து அவளை உட்கார வைத்து காரை எடுத்தான்...

எதுவும் பேசவில்லை தேனுவிடம்... அமைதியாகவே வந்தான்.. அந்த அமைதி அவளுக்கு பயத்தை கொடுத்தது. புயல் வருவதற்கு முன் வரும் அமைதி...

அதுவரை தேனுவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் அப்போதுதான் டீ குடிக்க கேன்டீனுக்கு சென்றான்... மயக்கம் தெளிந்த தேனு நர்ஸிடம் கேட்டு ரூமிற்குள் நுழையும்போதுதான் எங்க போற இவ என்று இனியன் பின்னாடியே வந்தான்.. தன்னையறியாமல் அவள் பேசுவதை முழுவது கேட்டபடியே வாயிலில் நின்றான்..

கார் வேகமாக செல்லும்போதே தெரிந்துக்கொண்டாள் தேனு, அவன் காட்டுத்தீப்போல் கோபமாக இருக்கிறான் எப்படியாவது சமாளிக்க வேண்டும் மனதை திடபடுத்திக்கொண்டே வந்தாள்.. வேண்டாத கடவுள் இல்லை எனலாம்.. அனைத்து கடவுளையும் துணைக்கு அழைத்தாள்..

ஆனாலும் மனதில் ஒரு சந்தோஷம் தான் தன்னவனுக்கு எதுவும் ஆகவில்லை என்று.. வீடுவர ரொம்ப நேரமாகும் என்று தேனு நினைக்க, அவன் கார் செலுத்திய வேகத்தில் வீடும் வந்துவிட்டது.. காரின் கதவை திறந்து டமால் என்று மூடினான்..

அதற்கே இருகைகளால் காதை பொத்திக்கொண்டாள்... இனியன் விறுவிறுஎன்று தனது அறைக்கு சென்றான்.. பின்னாடியே மெதுவாக தயங்கியபடி நடந்து வந்தாள் தேனு...

ருமின் உள்ளே வந்து கதவை தாளிட்டாள்... அவன் எங்கிருக்கிறான் என்று பார்க்க.. அவளின் கழுத்தில் கையை வைத்து அப்படியே மேலே தூக்கினான்...

மாமா...மாமா... என்று தேனு கத்த.. இனியன் கோபம் இரு மடங்கானது .. அவளை இறக்கிவிட்டு.. என்னடி சொன்ன மாமாவா..

அப்படினா என்னடி அர்த்தம்...

கண்களில் கண்ணீர் அணையாக வழிந்தது தேனுவிற்கு.. ப்ளாரென ஓங்கி அடித்தான்... யாரடி ஏமாத்தின இந்த இனியனையா.. சொல்லுடி இனியனையா.. நீ மூட்டாளுன்னு நிரூப்பிச்சிட்ட பார்த்தீயா... நம்ம வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சு பார்த்தீயாடி.. நீ உயிரோட இருக்கியா இல்ல செத்துபோயிட்டியான்னு இரண்டு வருஷமா தூக்கமில்லாம போராடிட்டு இருக்கேன்டி...

என்கிட்டியே கண்ணாமூச்சி ஆடுறீயா... என்னாச்சு.. எங்கிட்ட ஏன் விலகி போனே...

தேனு மிரண்டு போய் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்..

ஏய் இப்ப அழுதா இன்னும் ரெண்டு அடி விழும் , ஏமாத்தலாமுன்னு ப்ளான் போடாதே..

கண்ணீரை துடைத்துவிட்டு.. அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. அவன் கண்கள் ஜூவாலை போல் தகித்தது.. இனியும் மறைக்க முடியாது என்று தோன்ற..

மாமா.. அந்த விநாயகம் தோட கடைசி பையன் துவாரகேஷ், பார்ட்டியில பெண்களுக்கு போதைமருந்து கொடுத்து அவங்களை பாலியல் பலாத்காரம் செஞ்சதா சொல்லி .. அவனோட சேர்ந்து கடலூர்ல அன்புவேந்தன் போதை மருந்து சப்ளை செய்றவன் அரஸ்ட் செஞ்சிங்களே.. அவங்கதான் மாமா என்னை கடத்திட்டு போனாங்க.. எங்கே எனக்குதெரியல நான் மயங்கியிருந்தேன்..

மயங்கம் தெளிந்து பார்க்கும்போது , இரவாயிடுச்சு.. என்னை ஒரு ரூமுல அடைச்சு வெச்சிருந்தாங்க.. யாருமே இல்ல.. நான் வெளியே போக பார்க்கும்போது ,பாத்ரூமில் இருக்கு ஜன்னலிருந்த கண்ணாடியை எடுத்து அதன் வழியாக கீழேயிறங்கினேன்.. நான் தப்பித்து போகலாமென்று சுவற்றை ஒட்டி மெதுவா நடந்து வந்தேன் மாமா..

எல்லாம் குடிச்சுட்டு தூங்கிட்டு இருந்தாங்க.. அப்போ ஒரு குரல் கேட்டுச்சு.. நான் ஜன்னல் வழியா பார்த்தேன் யாரோ சின்னபெண் அழுதுட்டு இருந்தது. அந்த ரூமில் நாலு சின்ன பொண்ணுங்க பத்துலேயிருந்து பதிமூன்று வயதிருக்கலாம் மாமா.. உடம்பில பாதி துணியே இல்லை மாமா, அழுதுட்டு இருந்த பெண் உடம்பில எதுவுமேயில்ல.. நான் மெல்ல ரூமின் கதவை திறந்து போனேன்...

அந்த பிள்ளைங்க என்னை பார்த்தாங்க.. நான் ச்சூ என்று கையால் சொன்னேன்... யார் நீங்க கேட்டேன்... அந்த பிள்ளைங்களை கடத்திட்டு வந்திருக்காங்க மாமா..

அதுங்களை கெடுத்து, வெளிநாட்டுக்கு அனுப்பறதா ப்ளான் போல..நான் அந்த பிள்ளைகளுக்கு செல்பிலிருந்த துணியை கொடுத்து மாற்ற சொன்னேன்...

எல்லோரும் தப்பிச்சிட்டோம் மாமா.. கடைசியா நான் ஏறுபோதுதான் எங்கிருந்தோ ஒரு கட்டை என் பின் மண்டையில விழுந்தது.. அப்படியே மயங்கிட்டேன் மாமா.. சொல்லிவிட்டு அழுதாள்..

காலையிலே பார்க்கும்போது... பார்க்கும்போது..மாமா என்று இனியனை கட்டியனைத்தாள் மாது..

தேனு என்னடா..பயப்படாத சொல்லவேணா விடு..

தலையை ஆட்டினாள்.. எனக்கு போதை மருந்து கொடுத்திருப்பாங்க போல மாமா.. என்ன ஆனது தெரியல, சுயநினைவேயில்லை எனக்கு..

அவளை இறுக்க கட்டியனைத்தான் இனியன்.. அவளின் கண்ணீர் அவனின் சட்டையை நனைத்தது..

அரையும் குறையும் ஆடையில்தான் படுத்திருந்தேன் மாமா... அந்த பொறுக்கி துவாரகேஷ் சொல்லுறான்.. அந்த கலெக்டர் கொடுத்து வச்சவன்டா... தினமும் அனுபவிப்பான்.. என்ன சுகமாயிருந்தது தெரியுமா..

ஐயோ இதுக்குமேல எதுவும் சொல்லாத தேனு... உனக்கு ஒண்ணு நடந்திருக்காது இங்க பாருடா அவளின் உச்சியில் முத்தமிட்டான்.. கண்களிருந்து கண்ணீர் வழிந்தது..

மாமா வாங்க..வாங்க மனசிலே சொல்லிட்டே இருந்தேன்.. மாமா கண்ணுல ஏதா ஊத்தினாங்க.. ஒரு பக்கம் கண்ணு எனக்கு தெரியாது மாமா. அதுக்குதான் இந்த லென்ஸ் வச்சிருக்கேன்.. இன்னும் பத்துநாள் ஆபரேஷன் செய்யறாத அப்பா சொன்னாங்க..

என் கண்ணம்மா, என் செல்லம்.. அவளின் முகம் முழுவது முத்தமிட்டு, உன்னை காப்பாத்த முடியாத பாவிடா நான் என்று தலையில் அடித்துக்கொண்டான்..

மாமா... அந்த இடம் தெரிஞ்சிடும்னு வேற இடத்திற்கு மாற்ற கூட்டிட்டு போனாங்க.. அப்பதான் இன்னொருத்தன் வந்தான் அன்புசெழியனோட அண்ணன் கோட்ட சீனு... இவங்க ஒரு நெட்வொர்க்கே வச்சிருக்காங்க..

பாலத்தில் மேல வண்டி நின்னுச்சு அப்ப காரிலிருந்து ஒருத்தன் வந்தான்..

----- உன்னில் சிக்க வைக்கிற
 
Last edited:

அரையும் குறையும் ஆடையில்தான் படுத்திருந்தேன் மாமா... அந்த பொறுக்கி சாருகேஷ் சொல்லுறான்.. அந்த கலெக்டர் கொடுத்து வச்சவன்டா... தினமும் அனுபவிப்பான்.. என்ன சுகமாயிருந்தது தெரியுமா..

ஐயோ இதுக்குமேல எதுவும் சொல்லாத தேனு... உனக்கு ஒண்ணு நடந்திருக்காது இங்க பாருடா அவளின் உச்சியில் முத்தமிட்டான்.. கண்களிருந்து கண்ணீர் வழிந்தது..

மாமா வாங்க..வாங்க மனசிலே சொல்லிட்டே இருந்தேன்.. மாமா கண்ணுல ஏதா ஊத்தினாங்க.. ஒரு பக்கம் கண்ணு எனக்கு தெரியாது மாமா. அதுக்குதான் இந்த லென்ஸ் வச்சிருக்கேன்.. இன்னும் பத்துநாள் ஆபரேஷன் செய்யறாத அப்பா சொன்னாங்க..

என் கண்ணம்மா, என் செல்லம்.. அவளின் முகம் முழுவது முத்தமிட்டு, உன்னை காப்பாத்த முடியாத பாவிடா நான் என்று தலையில் அடித்துக்கொண்டான்..

மாமா... அந்த இடம் தெரிஞ்சிடும்னு வேற இடத்திற்கு மாற்ற கூட்டிட்டு போனாங்க.. அப்பதான் இன்னொருத்தன் வந்தான் அன்புசெழியனோட அண்ணன் கோட்ட சீனு... இவங்க ஒரு நெட்வொர்க்கே வச்சிருக்காங்க..

பாலத்தில் மேல வண்டி நின்னுச்சு அப்ப காரிலிருந்து ஒருத்தன் வந்தான்..

----- உன்னில் சிக்க வைக்கிற
Nirmala vandhachu ???
 
Top