Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -19

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -19

விடியற்காலை யாரும் நடமாட்டம் இல்லாத அந்த பாலத்தில கார் நின்னுச்சு மாமா.. அப்ப எதிர்பக்கத்திலிருந்து ஒரு கார் வந்தது மாமா, அதிலிருந்து கோட்ட சீனு இறங்கினான்.. அவன் அன்புகிட்ட பேசினான், என்னடா செய்யறான் கலெக்டருன்னு , என் கையை கட்டிப்போட்டிருந்தாங்க.. யாரும் என் பக்கத்தில இல்ல.. நான் மெல்ல கட்டை அவிழ்த்தேன்..

இன்னும் துடிக்கனும் சீனு அண்ணா, என்னை எல்லார் முன்னாடியும் கையில விலங்கு போட்டு கூட்டிட்டு போனான்.. அப்ப நான் எப்படி அவமானத்துல துடிச்சேனோ அதுப்போல அவன் துடிக்கனும் அண்ணா..

எங்கப்பா கூட என்னை வீட்டில சேர்த்துக்க மாட்டுறாரு துவாரகேஷ் சொல்ல...

அதோட விடக்கூடாது சீனு, அவன் பொண்டாட்டிய அந்த மாதிரி இடத்தில விட்டுட்டு போட்டோ எடுத்து நெட்டுல விடனும்...

நம்மள ஏன் பகைச்சோம்னு தினமும் அழனும்..ஹா...ஹா என்று அன்பு சிரித்தான்..

காரைவிட்டு கீழேயிறங்கிய தேனு...

பொறுக்கி பசங்களா... என்று கத்தி சொன்னாள்.. எங்க மாமாவ அப்படி ஒருநாளும் தலைகுனிய வைக்கமாட்டேன்டா...

ஏய் நேத்தே, நீ கெட்டுபோயிட்டடி.. ஒவரா ஆடாதே பேசிக்கொண்டே அவளை பிடிக்கச்சென்றான் அன்பு..

தேனு தப்பித்து ஒட எதிரே ஒருவன்மேல் மோதினாள்..

நிமிர்ந்து பார்த்தாள்... தலையில் கேப் போட்டு ஆறடி உயரமுள்ள 39 வயதுள்ள ஒருவன்..

ஸார்..ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க ஸார்.. இவங்க என்னை கடத்தி வச்சிருக்காங்க...சொல்லிக்கொண்டிருக்கும் போதே தேனுவின் வயிற்றில் கத்தியை சொருக்கினான் அந்த இளைஞன்..

பின்னாடியே வந்த சீனு சூப்பர் பாய் என்று கட்டிபிடித்தான் அவனை.. இப்படியா கேர்லஸ்ஸா இருப்பீங்க..

வயிற்றில் கத்தியோட தேனு கண்ணை சொருக... எங்கடி தப்பிச்சு போற என்று துவாரகேஷ் அவளின் தலைமூடியை பற்றினான்..

கையை எடுடா நாயே... ஒவ்வொருத்தனையும் எங்க மாமன் கொல்லுவான்டா... நான் உயிரோட இருக்குனும் அவசியமில்ல.. என்று அவள் வயிற்றிலிருந்த கத்தியை எடுத்து துவாரகேஷின் வயிற்றில் குத்தினாள்.. இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.. அவனையும் இழுத்து பாலத்தில் மேலிருந்து குதித்தாள்..

டேய் மற்ற மூவரும் அதிர்ந்து நின்றார்கள்... பாலத்தின் கீழே ஆற்றின் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது... எப்படிபோய் தேடுவது தெரியாமல் தடுமாறினர்... டேய் சீக்கீரம் வாடா கரைக்குபோலாம்.. காரை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்கள்..

பசங்களுக்கு போன் போட்டு வரச்சொல் அன்பு.. இரண்டுபேரும் நமக்குவேணும் போலீஸ் கையில பாடி சிக்ககூடாது..

.....

அப்பறம், ரெட்டி அப்பாதான் காப்பாத்தினார்.. ஆறு மாசமா நான் ஏதோ பறிகொடுத்தமாதிரி இருந்தேன் மாமா... அப்பறம் தான் நான் சுயநினைவு வந்ததா அப்பா சொன்னாரு அவர் பெற்றெடுக்காத பிள்ளைமேல பாசம் ரொம்ப மாமா.. அந்த குடும்பமே என்மேல உயிரே வச்சிருக்கு...

எத்தனையோ முறை நான் தற்கொலை செய்ய முயற்சி செஞ்சேன்.. அதிலிருந்து என்னை தடுத்தது இந்த குடும்பம் மாமா... ஒரு வருஷம் ஆனது எனக்கு நம்ம பப்புவ பார்க்கனும்போல இருந்தது.. அம்மாகிட்ட பேசி, அதான் பௌர்னமி ஆனா வந்து பார்ப்பேன்.. அப்பாவ கூட்டிட்டு சென்னைக்கு வருவேன் மாமா..

இனியன் தோள்மீது சாய்ந்து அழுதாள் தேனு.. மாமா வயிற்றிலிருந்த பாப்பாவும் செத்துப்போச்சு கதறி அழுதாள்..

தேனு அழாதேடா... சுயநினைவு வந்தவுடனே மாமாகிட்ட வந்திருக்கலாமே.. நீயில்லாம நான் எப்படி துடிச்சேன் தெரியுமா.. அதான் மாமா வந்துட்டேனே எதுக்கு இப்படி ஐலாவா நடிக்கிற...

இல்ல மாமா.. இப்படி நடந்துடுச்சு சொல்லிருந்தா நீ உடனே கோபப்பட்டு அவங்களை கொல்லனும் போவே.. நீ கலெக்டர் மாமா... இதுக்காகவா நீ கஷ்டப்பட்டு படிச்ச, என்னால நீ கொலைக்காரனும் பெயர் வாங்கனுமா ...

வேணாம் மாமா, விஷியம் தெரிஞ்சிடுச்சினா கலெக்டர் பொண்டாட்டிக்கு இப்படி ஆயிடுச்சுன்னு பேப்பர்ல, நெட்ல போடுவாங்க..

தேனு, அதுக்காக எல்லாரையும் விட்டு இப்படி மறைஞ்சி வாழ்வியா.. இனிமே நீ அழக்கூடாது அதான் மாமா வந்துட்டேன்ல.. பாப்பா போனா என்ன நாம சந்தோஷமா வாழ்ந்து நிறைய பாப்பாவ பெற்றுக்கலாம்.. சரியாடா, அவளின் முகத்தை நிமிர்த்தி அவள் பிறைநுதலில் அழுத்தி முத்தமிட்டான்...

கண்களை துடைத்துக்கொண்டாள்... அவனிலிருந்து பிரிந்து நின்றாள்..

மாமா...

என்னடா..

மாமா, களங்கப்பட்ட நான் உனக்கு வேணாம் மாமா, என்னால உன்கூட வாழமுடியாது..

தேனு.. மாமா ஏதாவது உன்னை நினைச்சுப்பேன் யோசிக்கிறாயாடா..

நீ அப்படி நினைக்கமாட்ட ஏன்னா நீ தங்கம் மாமா.. நான்தான் உனக்கு ஏற்றவள் இல்ல, உனக்கு பொண்டாட்டியா இருக்கிற தகுதி எனக்கில்ல மாமா.. எனக்கு மனசு முழுக்க ரணமா இருக்கு.. குடும்ப நடத்திற மனநிலையில இல்ல..

அப்படியேல்லாம் ஒண்ணுமில்ல தேனு.. இங்கப்பாரு நான் உன் மனநிலையை மாற்றிடுவேன்டா நம்பு..

தலையை குறுக்காக ஆட்டினாள்..

உங்க அழகுக்கும், திறமைக்கும் எத்தனையோ பொண்ணுங்க நீங்க கிடைக்கமாட்டிங்களா ஏங்கறாங்க.. அன்னைக்கு மினிஸ்டர் பொண்ணு ஜோயல் எப்படி உங்களை பார்த்தாங்க தெரியுமா.. அவங்களுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.. நான் அப்படி என்ன மாமா உனக்கு செஞ்சேன்.. தன் உதட்டை பிதுக்கி ஒண்ணுமில்லையே.. உனக்கு மனைவியா வரபோறவளை கையில வச்சிதாங்குவீங்க.

ஏய் வாயை மூடுடி.. லூஸூ மாதிரி பேசிட்டு இருக்க.. கோவத்தில் இனியன் கத்த..

சட்டென்று இனியன் காலை பிடித்தாள் தேனு...

பப்புவ மட்டும் என்கிட்ட கொடுத்திருங்க..

ஆத்திரத்தில் தன் கண்கள் பெரியதாகின இனியனுக்கு.. அவளை தொட்டு தூக்கினான்..

என்னடி சொன்னே...

அவன் கண்கள் பார்க்கமுடியாமல் தலையை கவிழ்ந்து தரையை பார்த்தாள். எனக்குன்னு இனி வாழ்க்கையில்ல மாமா.. எனது ஒரே பிடிமானம் பப்பு மட்டும்தான், இல்லையின்னா நான் தற்கொலை பண்ணிப்பேன்.

எனக்கு இந்த உலகத்திலே யாருமேயில்லடி அவனை தவிர..

நீ வேற யாராவது கட்டிக்கிட்டா, நிறைய பிள்ளையை பெத்துக்கலாம் மாமா.. ப்ளீஸ் என்னால உனக்கு நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கமுடியாது... குற்றஉணர்ச்சியே என்னை கொன்னுடும்.. என்னை விட்டு போயிடுங்க.. மறுபடியும் அவன் காலில் விழுந்தாள்.

அந்த இடத்தை விட்டு நகர்ந்து திரும்பி நின்றுக்கொண்டான் இனியன்...இதுக்கு நீ சொத்துல விஷம்வச்சே என்னை கொன்னுருக்கலாம் தேனு..

மாமாமாமா...

நான் வேண்டாம் உனக்கு...

வேணாம் மாமா என்று தெளிவாக உச்சரித்தாள் மாது...

சரி.. நான் வேணாம், அட்லீஸ்ட் என் பையனையாவது கேட்டியே.. எடுத்துக்கோ..

நீங்க திரும்பவும் ஏதாவது நடிச்சு திரும்பி பப்புவ என்கிட்டயிருந்து பிரிச்சிடுவீங்க... என்னை கன்வீன்ஸ் செய்வீங்க.

நடிப்பேனா...

ம்ம்.. அதனால எச்சில் கூட்டிவிழுங்கினாள் தேனு... எனக்கு டைவர்ஸ் கொடுத்திடுங்க..

அந்த அறையின் கதவை டமால் என்று சாற்றிவிட்டு காரை எடுத்து வெளியே சென்றான் இனியன்...

.......

இரவு ஒரு மணிக்குமேல் தனது ரூமின் கதவை திறந்து உள்ளே வந்தான் இனியன்..

தனது பெட்டில் அழகோவியம் போல் காட்சியளித்தது.. அவனது மகன் தேனுவை கட்டிக்கொண்டு தூங்கும் காட்சி... அந்த இரவின் விளக்கில் தேனுவை பார்த்தான் அழுதிருப்பாள் போல் முகமே வீங்கியிருந்தன.

மகனின் பக்கத்தில் படுத்தான்... அவனது மனம் உணர்ந்திருப்பான் போல பப்பு, திரும்பி தனது காலை எடுத்து இனியன்மேல் போட்டான்.

அவனது சிகையை கலைத்து, அவன் கண்ணத்தில் முத்தமிட்டான் இனியன்.. அவனை தூக்கி தன் மார்பில் போட்டு தட்டினான்.. கண்கள் கலங்கி விழி மூடி பெருமூச்சி விட்டான். பப்புவின் கைவிரல்களில் முத்தமிட்டான்.. இறுக்கி அனைத்துக்கொண்டான் தனது மகனை..

....

அடுத்தநாள் காலையில் எழுந்து குளித்துவிட்டு, தனது லேப்டாப்பை பேக்கில் எடுத்துக்கொண்டு கீழே வந்தான்.. காலை எட்டுமணி கிச்சனில் வேலை நடந்துக்கொண்டிருந்தது...ரேணுகா கூட தேனும் வேலை செய்துக்கொண்டிருந்தாள் அங்கே..

அத்தே.. இனியன் கூப்பிட.

கிச்சனிலிருந்து வெளியே வந்தார் ரேனுகா.. இனியா என்னடா காலையில கிளம்பிட்ட.. சரி நான் டிபன் எடுத்துவைக்கிறேன் சொல்லி ரேனு திரும்ப..

வேணா அத்தே.. எனக்கு அவசர வேலையிருக்கு மதியம் எனக்கு பிடிச்ச சமையலை உங்க பொண்ணுகிட்ட சொல்லி செய்ய சொல்லுங்க அத்தே..

இனியா என்று அதிர்ச்சியா அவனை ஏறிட்டார்... அவரது பார்வையில் எல்லாம் தெரிந்துவிட்டதா ஐலா தான் தேனுவென்று..

தனது இமையை மூடி திறந்தான்.. வரேன் அத்தே..

இதை பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள் தேனு.. ஆனால் ரேனுகாவிற்கு சந்தோஷம் எல்லாம் தெரிந்துவிட்டது இனிமே தேனுவோட புதிய வாழ்க்கை வாழபோறான் தனது மருமகன் என்று நினைத்து தேனுவின் அருகில் சென்றார்...

பார்த்தாயா இனியன் கண்டுபிடிச்சிடுவான் சொன்னேன் தானே.. இனிமே நீங்க நல்லாவாழ்வீங்க.. அதுபோதும் எனக்கு.. டேய் பப்பு வாடா உனக்கு பாட்டி சாக்கி தரேன்...

எதுவும் பேசாமலே இருந்தாள் தேனு.. எதற்கு தாயிடம் வாக்குவாதம் செய்வது.. நாம் ஏதாவது சொன்னா அழ ஆரம்பிச்சிடுவாங்க என்று நினைத்தாள்...

மதியம், இனியனின் கார் வந்தது.. இறங்கி உள்ளே வந்து சாப்பிட உட்கார்ந்தான்..

வந்துட்டியா இனியா, சாப்பாடு பரிமாற போனாள்.. அத்தே உங்க பொண்ணு பரிமாறட்டும்..

சிரித்துக்கொண்டே ரேனு... தேனு மாமாவுக்கு சாப்பாடு போடு என்று அழைத்தாள்..

அவனுக்கு பிடித்த வெஜ் மற்றம் நான்-வெஜ் செய்திருந்தாள் தேன்மொழியாள்..

நிமிர்ந்து அவளின் முகத்தை பார்க்கவில்லை இனியன் உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்தினான்..

சாப்பிட்டு முடித்தவுடன் கையை கழுவிட்டு ஹாலில் உட்கார்ந்திருந்த ரேணுவிடம் வந்தான்.. பக்கத்தில் பப்பு விளையாடிக்கொண்டிருந்தான்..

அத்தே.. என் இனியா..

உங்க பொண்ணு ஆசைப்பட்டு கேட்டா ,விவாகரத்து பத்திரத்தில சைன் போட்டு கொடுத்திருக்கேன்.. அவள் கையில் கொடுத்தார்.

என்னடா இது என்று ..தேனுவை முறைத்தாள் ரேனுகா..

அப்பறம் பப்புகிட்ட அப்பான்னு உரிமை எடுத்துக்க மாட்டேன்... சொந்தம் என்று உங்கவீட்டுக்கு வரமாட்டேன்..

டேய் இனியா ஏன்டா இப்படி பேசற குரல் உடைந்து கண்ணீராக வழிந்தது ரேனுகாவிற்கு..

கிராமத்தில இருக்க வீடு தேனுபெயரில எழுதிருக்கேன்... பப்பு படிக்க பேங்கில பணம் போட்டுவச்சிருக்கேன் , பைலை கொடுத்தான்..அவளை நீ வெறுக்காதே அத்தே.. பப்புவ நல்லா பார்த்துக்கோ...

சுவற்றில் சாய்ந்து இனியனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள் தேனு.. ஆனால் அவளை ஏறிட்டு பார்க்கவில்லை அவன்.

என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க.. அவரின் காலில் விழுந்தான்..

கண்களை துடைத்துக்கொண்டு... அவனை தோள்தொட்டு தூக்கினாள்.. நல்லாயிருடா இவ உனக்கு வேணா... உன் மனசிற்கு நீ எங்கபோனாலும் நல்லாயிருப்ப.. இந்த அத்தையை மறந்திடாத இனியா..

விரக்தியில் அவன் தலையாட்டி புன்னகை தந்தான்.. நான் தொந்தரவா இருக்கேன்னு, உங்க பொண்ணு சொத்துல விஷம் வச்சி தந்திருப்பா நினைச்சேன்.. வைக்கலபோல

மாமா... என்று தேனு கத்தினாள்.

கண்டுக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினான் இனியன்... அழுதபடி அவன் பின்னாடியே ஓடினாள் தேனு... தன்னை பார்க்காமலே செல்கிறானே.. அன்றும் ட்ரைனீங் போகும்போதும் தன்னை பார்க்காமல் சென்றானே அதே காட்சிதான் தேனு கண்முன் வந்தது...

........

மூன்று மாதம் கடந்தது..

சென்னை மெட்ரோ ப்ளாட்டில், இனியனின் டபுள்பெட்ரூம் வீடு... காலை 8.00 மணிக்கு இனியன் போன் ஒலிக்க..தனது இடுப்பில் நிற்காத கைலியை கட்டிக்கொண்டு செல்லை எடுத்தான்..

அசோக் காலிங் என்று அவனது போட்டோவோட வந்தது.. என்னடா மச்சான் தூக்கத்திலே கேட்டான் இனியன்..

இனியா... கோவாவுக்கு போற நம்ம கார்மெட்ஸ் லோடு பாதியிலே நிற்குதான்டா என்னனு தெரியல... அந்த மேனேஜர் இன்னும் உங்க சரக்கு வரலன்னு போனா போடுறாரு.. என்ன பாருடா மச்சான்..

சரி வை.. நான் ஆபிஸூக்கு கிளம்பி வரேன்... அவசரமாக குளித்துவிட்டு தலையை ஸ்பைக் வைத்து ஸ்டைலாக வாரினான்.. ஜீன்ஸும், டீ ஷர்ட்டில் அணிந்து ,தனது பைக் எடுத்துக்கொண்டு பறந்தான்.

------- என்னில் சிக்க வைக்கிறேன்
 
Nirmala vandhachu ???
 
என்ன இது இப்படி ஆயிடுச்சு
இனியா இன்னும்
குசும்பு ஆரம்பிக்கலயா
 
Top