Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -23

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -23

தேனு ஆபிஸில் வேலை ஆரம்பித்து ஒரு வாரம் ஆனது. எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்றது... இனியன் தேனுவை கண்டுக்கொள்ள வில்லை அவனுடைய வேலையை மட்டுமே பார்ப்பான்...

தேனுவிடம் பேசவேண்டுமென்றால் அசோக்கை வைத்து பேசிக் கொள்வான்..

இன்று திங்கட்கிழமை, காலை பத்துமணிக்கு ஆபிஸ் வந்துவிட்டாள் தேனு... அவளுடைய கேபினில் மெயில் செக் பண்ணிக்கொண்டிருக்கும் போது, அங்கே வேலை பார்க்கும் ஜோதி கதவை தட்டிவிட்டு தேனுவின் அறைக்குள் நுழைந்தாள்..

மேம்.. குழந்தைக்கு ரொம்ப உடம்பு சரியில்லை போன் வந்தது மேம்... நான் உடனே போகனும்.. எனக்கு லீவ் தரமுடியுமா.. கேட்க..

இன்னைக்கு ஆடர் எல்லாம் ப்ளேஸ் செய்யனும் சொல்லிருந்தாரு ஸார்.. நீங்க இல்லைனா எப்படி ஜோதி..

வீட்டுல பெரியவங்க யாருமில்ல மேம்.. நான் மட்டும்தான் என் குழந்தையை பார்த்துக்கனும் ப்ளீஸ்..

சரி நீங்க கிளம்புங்க.. நான் ஸார்கிட்ட சொல்லிக்கிறேன் தேனு அவளை அனுப்பிவிட்டாள்..

....

மணி 11.00 என்று காட்ட, வழமையாக அனைவரிடமும் பேசிவிட்டு ஆபிஸ் உள்ளே நுழைந்தான் இனியன்...

தனது லேப்டாப்பை உயிர்பித்து இயக்க ஆரம்பித்தான்... போனில் காபி என்று சொல்லி வைத்தான்..

அச்சோ ஜோதியில்ல காபி கொடுப்பா, லீவுன்னு அனுப்பிட்டோம்... தேனு பதறிக்கொண்டு தானே காபியை போட்டுக்கொண்டு இனியன் அறைக்கு எடுத்துச் சென்றாள்..

உள்ளே வருபவளை கவனிக்கவில்லை இனியன்... தனது கணினியில் முழு கவனத்தை செலுத்தினான்...

திரையில் எதையோ பார்த்தபடி அவள் நீட்டிய காபியை வாங்க... தேனுவின் விரல் ஏதேச்சையா இனியன் கைவிரலில் உரசின.. அந்த ஒரு நொடிதான், வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்தான் தேனுவை..

சிறு தீண்டிலில் கூட தன்னவளை உணர்ந்துக்கொண்டவன்.. ச்சீ என்று கையில் வைத்திருந்த அந்த கப்பை தூக்கி எறித்தான்..

கதவு லேசாக திறந்திருந்ததால் கப் தூக்கி எறிந்த சத்தத்தில் வெளியே வேலை செய்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் இவர்களை பார்த்தனர்.. அந்த கண்ணாடித்திரையில் இருவரும் தெரிந்தனர்..

மாமா... என்று அதிர்ச்சியில் தேனு தன்னைமீறி இனியனை கூப்பிட்டாள்...

யாருடி மாமன், ஆமாம் உங்கிட்ட காப்பி கேட்டேனா.. நீயேன் உள்ளே வர என் அனுமதியில்லாமல்.. அவளை முறைத்துக்கொண்டு இனியன் நிற்க..

இப்போ எதுக்கு இவ்வளவு ரியாக்ஷன் கொடுக்கற மாமா.. என்ன செஞ்சேன், லைட்டா என் விரல் பட்டுச்சு அதுக்கு இப்படியா கப்பை தூக்கி எறிவ, எல்லோரும் என்னையே பார்க்கிறாங்க..

அதுக்கு நான் பொறுப்பல்ல, உன் மூச்சுக் காற்றுக்கூட என்மேல படக்கூடாதுன்னு நினைக்கிறேன்.. நீ என்னை தொடுற..

ஹா.. என்ன சீன், காலையில எல்லாரையும் பார்த்து கல்லை போட்டுத்தானே மேலே வருவீங்க.. அப்போ எத்தனை பொண்ணுங்க.. உன்னை தொட்டுதடவி பேசறாங்க.. அப்போ மட்டும் பல்லை ஈஈன்னு காட்டுறீங்க...

அவங்களெல்லாம் எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க.. நீயில்ல.. கிளம்பு காத்துவரட்டும்... விட்டா ரொம்ப பேசுவ.. நீ பேசறத ஆன்னு பார்த்துட்டு இருந்தான் ஒரு கேனை அவனுக்கு இப்பதான் கடவுள் அறிவை கொடுத்திருக்காரு.. யோசிடா இனியா, இன்னொருமுறை நான் காப்பாத்த வரமாட்டேன்னு..

அவன் பேசுவதை கேட்டு, முறைத்துக்கொண்டிருந்தாள் தேனு..

என்னடி முறைப்பு காதுல விழல...

என்னடாடா.... தேனு சொல்ல.

டாவா... யாரை பார்த்து சொல்லுற, அவன் சேரைவிட்டு வெளியே வந்து, அவளருகில் வந்தான்..

என்ன சொன்ன...

திரும்பி கதவை தாளிட்டாள் தேனு..

எதுக்கு கதவை லாக் செய்யறா, புரியாமல் அவளையே பார்த்திருந்தான் இனியன்..

கையை கட்டிக்கொண்டு அவனை நோக்கி நடந்தாள்..

பின் வாங்கினான் இனியன்... மாமா... நீ வேணாம் வேணாம் விலகச்சொல்ல தான் எனக்கு உன்கிட்ட வரனும் தோனுது...

அதுவும் இந்த நொடியிலிருந்து தான்..

எய் கிட்டவராதே..

வருவேன்டா... ரொம்ப அலுட்டிக்கிற... என் சுண்டுவிரல் தான் லைட்டா டச் ஆச்சு.. அதுக்கே இப்படி கத்தற.. என்னை வெறுக்கிற பாரு, அதான் ரொம்ப பிடிச்சிருக்கே...

செகன்ட் இயர் காலேஜ் சேர்ந்தபோது , உன்னை பார்த்தேனே அதே மாதிரியே இருக்கிற இனியா... அதே ஹெர் ஸ்டைல்... ரொம்ப தெனாவெட்டா பேசுவ பாரு...

பின்னாடியே நடந்த இனியன் சுவற்றில் மோதி நிற்க... அவன் தலைமுடியை கோதிவிட்டாள் தேனு..

மெல்ல அவளின் ஆள்காட்டி விரல் அவனின் பிறை நெற்றியில் கோடிட்டி செங்குத்தா நின்ற அவனின் மூக்கின் நுனியில் நின்றது..

என் மூச்சுக்காற்று படக்கூடாதுன்னு சொன்ன, இப்படி உரசிட்டு நிற்குற..

ச்சீ.. கையை எடு... எந்த முகத்தை வெச்சு என்கிட்ட பேசவர... உன்னை பார்த்தாலே ஏழுரை சனி பிடிச்சு-க்-கு-ம்... வார்த்தை வாயிலிருந்து வரவில்லை அவன் தொண்டையிலே முழுகினான்..

தேனுவின் விரல்கள் அவனின் இதழ்களை வருட.. வார்த்தைகள் மட்டுமின்றி அவனுமே தடுமாறி நின்றான்...

அப்படி சொல்லாதே மாமா... என்னால தாங்க முடியாது..

அவளின் மூச்சுக்காற்று அவனின் காது மடல்களில் தீண்ட இருவரின் தேகம் உரசிக்கொள்ள சிறிய இடைவெளி மட்டும். கொள்ளைக்கொள்ளும் கண்கள், கலங்கி நின்றது..

இதுகெல்லாம் மயங்காதே இனியா, ஏமாத்துவா உஷாராயிரு என்று அவன் மனசாட்சி மயங்கும் அவன் இதயத்தை தட்டி எழுப்பியது..

அவள் கையை முறுக்கி, முதுகுபுறம் கொண்டுவந்தான்... என்னடி கொஞ்சம் விட்டா ஒவரா செய்ற..

வலிக்குது மாமா.. கையை விடு.

அதற்குள் அசோக் உள்ளே வர... டேய் தேனுவ விடுடா.. எப்ப பார்த்தாலும் சண்டை போடுறதே உன் வேலையா.. விடு.. கை உடைஞ்சிட போது..

அவளை முறைத்துக்கொண்டே கையைவிட்டான்... இங்க பாருடா உன் தங்கச்சி என் பேச்சிக்கு வந்தா அவ்வளவுதான் சொல்லிட்டேன்..

நான் ஒண்ணுமே பண்ணல அண்ணா.. இவர்தான் என்னை அடிக்க வராருன்னு அழ ஆரம்பித்தாள் தேனு...

நீ அழாதடா தேனு.. அண்ணே கேட்கிறேன்... டேய் அவ சின்ன பொண்ணுடா இப்படியா கையை முறிப்ப மச்சான்..

யாரு இவளா சின்ன பொண்ணு, ட்ராமா போடுறா பாரு...

அண்ணா... இவரு வேணுமேனே என்மேல எரிஞ்சு விழுறாரு... நான்தான் இரண்டாவதா யாரைவேணா கட்டிக்கோன்னு சொல்லிட்டேனே.. பிறகு என்னவாம்... தேம்பி தேம்பி தேனு சொல்ல..

அவளை கண்டுக்கொள்ளாமல் கணினியில் கவனம் செலுத்தினான் இனியன்..

நீ வாடா.. அவனுக்கு திமிறு அதிகமாயிடுச்சு அதான் இப்படி நடந்துக்கிறான்... ஆமாம் பப்பு ஸ்கூல் போயிட்டானா.. அசோக் கேட்க.

ம்ம்.. அவனை விட்டுதான் ஆபிஸூக்கு வந்தேண்ணா..

.....

மாலை 5.30 மணிக்கு , அவர்களின் வீட்டின் அருகேயுள்ள பூங்காவில் விளையாடும் குழந்தைகளை பார்த்துக்கொண்டிருந்தான் இனியன்.

மச்சான் இங்கதான் இருக்கீயா அந்த சிமென்ட் பெஞ்சில் வந்து உட்கார்ந்தான் அசோக்..

டேய் மதியமும் சாப்பிடல... இப்பவும் சாப்பிடாம இருக்க உடம்பு கெட்டுபோகும் மச்சான்..

அதான் நைட் தண்ணீயடிக்க போறேனே அப்ப நிறைய சாப்பிடுறேன்டா..

அவன் தோளில் கையை வைத்தான் அசோக்.. ஆனால் இனியன் பார்வை அங்கே விளையாடும் குழந்தைகளிடம் மட்டுமே இருந்தது..

மச்சான் உன் பீலீங்ஸ் எனக்கு புரியுதுடா.. எல்லாம் சரியாகும்...

எதுவும் சரியாகாது அசோக்... நான் ஒத்தையிலதான் இருக்கனும் இந்த ஜென்மத்தில நான் வாங்கி வந்த வரம்..

அந்த பூங்காவின் நுழைவாயிலிருந்து ,ஹாய் அங்கிள் என்று, பப்பு அசோக்கை பார்த்து கையை ஆட்டினான்...

டேய் பப்பு வந்திருக்கான்

ம்ம்... பார்த்துட்டேன் , எழுந்து அந்தபக்கமாக சென்றான்..

ஒரு பத்துநிமிடம் செல்ல... அம்மாமா.. என்று பப்பு வீரிட்டு அழ... ஊஞ்சலிருந்து கீழேவிழுந்திருந்தான்..

ஆ... என்று கத்திய சத்தத்தில், இருவரும் அங்கே ஓடினர்... மச்சான் தூக்குடா அவனை, இனியன் அசோக்கிடம் கூற..

பப்பு ஒண்ணுமில்ல, அவனை தூக்கி மூட்டியை தேய்த்துவிட்டான்.. கீழே விழுந்ததில் மூட்டி சிராய்த்து இருந்தது.. கைகளிலும் சிராய்த்து லைட்டாக ரத்தம் கசிந்தது.. தனது கையை காட்டி அழுதான் பப்பு..

அவனின் கண்களை துடைத்துவிட்டு அழாதே பப்பு மாமா இருக்கேன்ல ஒண்ணுமில்லடா ராஜா..

இனியனை பார்த்து பார்த்து மறுபடியும் அப்பா என்று அழஆரம்பித்தான் பப்பு.. தன் அப்பா தன்னை தூக்கவில்லையே என்ற ஆதங்கம்.. தனது பிஞ்சு உதட்டை பிதுக்கி அழுதது..

அங்கே இனியனால் நிற்கமுடியவில்லை... பல்லைக் கடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்..

மோகன் வந்து பப்புவை அழைத்துச்சென்றான்...

......

இரவு பத்து மணிக்கு அந்த நட்சத்திர பாரில் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்த யூத் ஒரு பக்கம்... ஒரமாக போட்டிருந்த இருக்கையில் ஆறடி உயரம் , பெரியமீசை அந்த மீசைக்கு ஏத்த படர்ந்த முகம், வெள்ளை சட்டையில் ஜீன்ஸ் பேன்டில், கட்டப்பஞ்சாய்த்துக்கு பெயர் போன சத்யவேல் சரக்கை அருந்தியபடி உட்கார்ந்திருந்தான்...

அவனுக்கு எதிரே வரதன்.. தரகர் போல, சத்யா இவன்தான் என்று தனது செல்லில் போட்டோவை காட்டினான்...

தனது கண்ணை சுருக்கி திரையிலிருந்த போட்டோவை பார்த்தான் சத்யா..

இவனுக்கென்ன பார்க்க சோக்காதானே இருக்கான்... எங்கியோ பார்த்தமாதிரி இருக்கு..

ம்ம்.. கலெக்டர், பெரிய பாய் கொடுத்திருக்காரு.. இவனை தூக்கனுமாம்... நம்ம அன்புவ, கோட்டையை போட்டிருக்கான்..

இவனா...

லேசா எடைபோடாதே... போலிஸூக்கே தெரியல..

அடுத்தவாரம் மலேசியாவிலிருந்து அண்ணே வராரு... அவருடைய பிஸினஸ் எல்லாம் முடக்கிட்டானாம்... அதுக்குள் அவனை தூக்கிடனும் சொல்லுறாரு.. முடிஞ்சா ஆளே க்ளோஸ் செய்ய சொல்லுறாரு..

ரேட்டு..

நீ கேட்டதுக்கு மேலே பணத்தை தரேன்னும சொல்லுறாரு சத்யா.. ஸ்கெட்ச் போட்டு தூக்கனும்..

முடிச்சுட்டு சொல்லுறேன் வரதா..

விஷியம் யாருக்கும் தெரியக்கூடாது வரதா... போலீஸ் கேஸ் ஆயிடும்... பார்த்து செய்ய..

.....

அந்த இரவில் மழை சோன்னு கொட்டிக்கொண்டிருக்க... அந்த மெயின் ரொடே வெள்ளக்காடா மழைநீர் ஒடிக்கொண்டிருந்தது..

இடைவிடாது கொட்டின மழை, காற்றில் அந்த கிர்ஸ்டல் ரோடின் மூனையில் கம்பத்தின் லைட் வெளிச்சம் விட்டு விட்டு எரிந்தன..

மழையை எதிர்த்து பாஸ்டா ஓடினான் இனியன்.. டேய் சீக்கிரம் பிடிங்கடா மூவரும் அவனை துரத்த... பைக் ஓட்டியபடியே கையில் பெரிய கத்தியை எடுத்து எதிரே ஓடிவரும் இனியன் வயிற்றில் குத்தினான் ஒருவன்..

மாமா...மாமா... தேனு அலற..

----- உன்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
 
Top