Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -25

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -25

லீப்டிலிருந்து வெளியே வந்த தேனு, நேராக வந்த அசோக்கை பார்த்தாள்.. அண்ணா கொஞ்சம் இங்க வாங்க... அவனை தன் கேபின் பின்னால் அழைத்துச்சென்றாள்..

அண்ணா, இவர் உயிருக்கு ஆபத்து ரெட்டி அப்பா சொன்னாரு, அந்த மலேசியாவிலிருந்து பாய் ரொம்ப டென்சனா இருக்கானாம்.. அவனுடைய எல்லா பிஸினஸை லாக் செய்துட்டு தான் இவரு வேலையை விட்டிருக்காரு... அதான் இவர்மேல கோவமா இருக்கானாம்... நேற்று எனக்கு பயங்கரமான கனவுண்ணா..

பயப்படாதடா இனியன் அவனை பார்த்துப்பான் முட்டாள் இல்லை....

அண்ணா அவனுங்க பயங்கறமானவங்க, மனுஷனே இல்ல.. இவரு நைட் குடிச்சுட்டு வந்திருக்காரு... நீங்க அவரை கூடவேயிருந்து பார்த்துப்பீங்க நினைச்சேன்.

குடிச்சானா.. ஆச்சரியமாக அசோக் கேட்க

ம்ம்... நான் அவர் ப்ளாட்ல போய் பார்த்தேன்... ஆமாம் இங்க லேகான்னு.

மாடலிங் தான் ,நம்ம பிராண்டுக்கு இனியன்மேல ஒரு க்ராஷ் கூட..

முகம் தொங்கிவிட்டது தேனுவிற்கு.. சரிண்ணா அவரை பார்த்துக்கோங்க.. குடிக்க வேணாம் சொல்லுங்க..

அவளுக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு, இனியனின் அறைக்குச் சென்றான் அசோக்..

டேய் மச்சான்.. எப்படா குடிச்ச, நேற்று 11.30 மணிக்கு நான்தான் வீட்ல விட்டேன்.. அந்த சிங்கப்பூர் பார்ட்டிக்கிட்ட டீல் பேசிட்டு இருந்தோம்.. நீ என்ன சொன்ன, எனக்கு ட்ரிங்க்ஸ் வேணாம் மோகன் வீட்டுல இருக்கான்.. என்னை அப்பாவா பார்க்கிறான்.. ரோல் மாடல நான் இருக்கனும் பில்டப் செஞ்சிட்டு குடிச்சிருக்க..

யார் குடிச்சா, நானா வீட்டுல மோகன் வந்ததிலிருந்து நான் குடிக்கிறதே நிறுத்திட்டேன் அசோக்...

அப்ப தங்கச்சி சொல்லுச்சே...

அவனை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தான் இனியன்..

அடப்பாவி நீ திருந்தலையா... பாவம்டா தேனு உன்னை எப்படிடா நம்புது.. அதான் உன் கண்ணத்துல வெட்டுக்கிளி கடிச்சிருக்காடா... அவன் முகத்தை நிமிர்த்தி கேட்டான் அசோக்...

அவளைபத்தி பேசாதே எனக்கு பிடிக்காது சொல்லிட்டேன்.. போன வாரம் டெலிவரி ஆன லிஸ்டே வரல பாரு.. என்னத்த வேலை செய்யறாளோ.. வேஸ்ட்... ஒரு நாலேஜ்ஜூம் இல்ல, நல்லா அவங்கப்பன் ராணிமாதிரி வளர்த்து விட்டான்.

தேனு பைலை எடுத்துக்கொண்டு உள்ளே வரும்போது அவ வேஸ்ட் என்பதிலிருந்து காதில் விழுந்தது..

யாரு நான் வேஸ்டா.. நான் முட்டாளா... எல்லாம் உன்னால தான் பி.இ படிச்சிருப்பேன்.. உன்னை பார்க்கனும்தான்டா அந்த காலேஜூக்கு வந்தேன்..

யாரு நானா வரச்சொன்னேன்.. நீ வராத இருந்தா அந்த பார்கவியோட இந்நேரம் நாலு பிள்ளையை பெத்துருப்பேன்டி..

ச்சே, சண்டையை ஆரம்பிச்சிட்டாங்க, அசோக் நைசா வெளியேறினான்..

ஹாங்.. நீ அதுலே இரு... அவளே பிரேக் கப் பண்ணிட்டு போயிட்டா... என்னவோ பாவம் பார்த்து நான் வாழ்க்கை கொடுத்தேன்...

அடேங்கப்பா... நீதாண்டி வாழ்க்கையை கெடுத்த... பார்கவிக்கு அப்பறம் எத்தனை பொண்ணுங்க... எனக்கு லைப் தாங்க கெஞ்சினாங்க தெரியுமா.. அவங்களை உதாசினப்பண்ணதற்கு தான் கடவுள் என்னை பழிவாங்கிட்டாரு...

எங்க க்யூவ்ல இருந்தாங்கல.. அவனை முறைத்து பார்த்துக் கொண்டு பேசினாள்..

எங்க சந்தோஷ் எப்படி லவ் செஞ்சான் தெரியுமா.. தேனு பேச பேச பக்கத்திலிருந்த பெண்ஸ்டான்டை கையால் நொறுக்கி உடைத்தான், அதுவும் கண்ணாடியால் ஆனது...

அவனின் கை கிழிந்து ரத்தம் வெளியேற...

மாமா என்று துடித்தாள் தேன் விழியாள்.. அவனருகில் சென்று கையை பிடித்தாள்.. உள்ளங்கையில் கண்ணாடி குத்தி ரத்தம் வழிந்தது.. கையை இழுத்துக்கொண்டான்..

மாமா.. ரத்தம் வருது, ஒடிச்சென்று பர்ஸ்ட் எய்டு பாக்ஸை எடுத்துவந்தாள்..

கையை காட்டு மாமா.. அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் இனியன்... கையை அவளுக்கு நீட்டாமல் முதுகுப்பின்னாடி வைத்துக்கொண்டான்...

அவனை இறுக்கி கட்டிக்கொண்டு, அவன் முதுகுபின்னாடி காட்டனை எடுத்துச்சென்றாள்..

மூச்சு முட்டியது இனியனுக்கு , தன் கண்களை மூடியபடி அவளின் தனங்களின் ஸ்பரிசம், அவளின் வாசனை முகுர்ந்தபடி ரசித்தான்.. தேனு காட்டனை வைத்ததும் ஸ்...ஸ் என்றான் வலியில்...

எதுக்கு இப்படி செய்ற மாமா..

தன் கண்களை திறந்து.. எதுக்குடி இப்படி கட்டிபிடிக்கற, வேணா வேணான்னு சொல்லிட்டு.. அதுக்கு அலையிறீயா...

அப்படியே அவனை விலக்கி நின்றாள் தேனு... ரத்தம் வழியறது மட்டுமே தேனுவின் கண்களில் பட்டது... துடிதுடித்து போனாள்... தன்னவன், இந்த உலகத்திலே அவனைமட்டும் தன் மனதால் நினைத்தவள்.. தன் அன்பை கொச்சை படுத்திவிட்டானே... கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது தேனுவிற்கு...

துடைத்துக்கொண்டாள், அவமானத்தால் இனி இங்கே நிற்கக் கூடாது என்று நினைத்து கதவை நோக்கி திரும்பினாள்... நீ என் புருஷன் மாமா, உன்கிட்ட அலையறது தப்பில்ல..

புருஷன்னு இப்பதான் தெரியுதா...

தெரிந்ததால தான் மாமா விலக்கிபோறேன்...

தன் முடியை கோதிக்கொண்டான் கோவத்தில், அப்பறம் ஏன்டி வந்து என் உயிர எடுக்குற... நான் நிம்மதியில்லாம இருக்கேனே பின் மண்டையை சுவற்றில் டக் டக் என்று தொடர்ந்து இடித்துக்கொண்டிருந்தான்...

ஓடிவந்து ஏக்கி அவனின் பின்தலையில் கையை வைத்து அடுத்த நொடியில் இதழில் இதழ் வைத்தாள்.. இனியன், தலையை வேண்டாம் வேண்டாம் என்று திருப்ப... விடவில்லை தேனு நறுக்க என்று அவளின் இதழை கடிக்க.. அமைதியானான்..

அடக்கினால் அவனின் கோபத்தை, ஏற்றினாள் இனியனின் தாபத்தை... கீழ் இதழை விட்டு அவனை பார்த்து அவள் மூச்சுவாங்க, தன் கண்களை மூடி இதழ் பிளந்து நின்றான்... இனியன் நின்ற தோற்றத்தை பார்த்த தேனுவிற்கு ஆசை அடங்கவில்லை கண்ணங்களை தடவி, மறுபடியும் அவனின் உதட்டை உரிஞ்சினாள்.. நடுவில் நீ அழகாயிருக்க மாமா,

ம்ம்.. கொட்டினான்.

இனியனின் கைகள் தேனுவின் இடுப்பில் இருந்தது.. நீ ரொம்ப நல்லவன் மாமா..

ம்ம்... என்றான் மயக்கத்தில்.

மறுபடியும் தொடர்ந்தாள் முத்தத்தை.. ஆனா நான் உனக்கு தகுதியானவள் இல்லதானே மாமா என்றவுடன்.

போடி என்று அவளை தள்ளிவிட்டு... அந்த ரூம்மை விட்டு வெளியேறினான் இனியன்...

அந்தநேரத்தில் எதிரே அந்த நிறுவனத்தின் அஸிஸ்டன்ட் மேனேஜர் கிருஷ்னன் வந்தார்... ஸார் செக்ல கையெழுத்து போடனும்..

அப்பறம் பார்க்கலாம்..

ஸார் இன்னைக்கே கொடுக்கனும் செல்லியிருக்கீங்க.. ரொம்ப முக்கியமான செக்.

அவனை முறைத்துவிட்டு அந்த தளத்திலிருந்து வெளியேறினான்...

கதவை திறந்து தேனு வர.. அவளை ஒருமாதிரியாக பார்த்தார் கிருஷ்னன்.. எல்லாம் இந்த பொம்பள வேலைக்கு வந்ததால... நாம்மதான் மேனேஜர் ஆகியிருப்போம் மனதில் தேனுவை தீட்டிவிட்டு... உள்ளே சென்றான்.

இதை கண்டுக்கொள்ளவில்லை தேனு, அவள் வேலையில் கவனத்தை செலுத்தினாள்..

டெலிவரி செஞ்ச மெட்டிரியலில், அமௌன்ட் குறைந்தது... எங்க கணக்கு மிஸ் ஆனது தெரியவில்லை தொடர்ந்து ஒன்றாம் தேதியிலிருந்து கேஷ் புக்கை செக் செய்தாள்..

அதற்குள் அசோக் அங்கே வந்தான்..

தேனு அடுத்தவாரம் நாம்ம பெங்களூருக்கு போறதா இருக்கும்..

நான் எதுக்குண்ணா..

பிஸினஸ் ட்ரிப்டா.. கூடவே நம்ம நிறுவனம் பெஸ்ட் என்று செலக்ட் செஞ்சிருக்காங்க... நம்ம ட்ரஸை மாடலிங் பண்ணுவாங்க... மூனுநாள் தங்கறதா இருக்கும்..

சரியண்ணா..

மார்க்கெட்டிங் பண்ண வேண்டிய மாடல்ஸ் எல்லாம் ப்ரஸன்டேஷனா ரெடி செஞ்சிங்கோ.. அங்க டெமோ காட்டனும். நம்ம மெட்டிரியல் குவாலிட்டி எல்லாத்தையும் செக் செய்வாங்கடா.. நம்ம மூனுபேருதான் போவோம்.

இதை கேட்ட கிருஷ்ணனுக்கு மனம் தாங்கவில்லை.. இப்ப வந்தவளுக்கு என்ன தெரியும்.. சிறிதுநேரம் கழித்து அசோக்கின் அறைக்குச் சென்றான்...

ஸார்... இந்த ட்ரிப்புக்கு நான் கிடையாதா ஸார்... புதுசு அவங்க எப்படி என்று இழுத்தான்..

அசோக் அமைதியாகவே இருக்க...

ஸார்.. அவங்களுக்கு எதுவும் தெரியமாட்டுது.. கணக்கு கூட ஒழுங்கா போட மாட்றாங்க.. இஷ்டத்து லீவ் எடுக்குறாங்க... குறை சொல்ல ஆரம்பித்தான்..

நீங்க உங்க வேலையை போய் பாருங்க கிருஷ்னன் என்று அவனை விரட்டிவிட்டான் அசோக்...

.....

அடுத்தநாள் காலை 6.30 மணிக்கே தன் மாமனை எழுப்பிவிட்டான் மோகன்... ஹாப்பி வெட்டிங் டே மாமா , இனியனுக்கு வாழ்த்து சொல்ல..

காலையிலே ஏன்டா வெறுப்பேத்துற சலித்துக்கொண்டே எழுந்தான்.. குளித்துவிட்டு வேட்டிக் கட்டிக்கொண்டு பக்கத்திலிருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்றான்..

அம்மனை வேண்டிவிட்டு கண்ணை திறக்க.. எதிரே அவனைப்போலவே பப்பு வேட்டிகட்டிக்கொண்டு தன் தந்தையே பார்த்தான்...

யார்கூட வந்திருக்கான் என்று நிமிர்ந்தால் பப்பு பக்கத்தில் மோகன், ரேனு மற்றும் அவனின் தேவதை ஒரு நிமிடம் தேனுவை மற்றுமே விழி அகலாம பார்த்தான்.. அவனுக்கு பிடித்த சிகப்பு கலரில் பட்டுச்சேலையில் உச்சி கிளிப் போட்டு ப்ரீ ஹேர் விட்டிருந்தாள்.. உதட்டில் லைட் சிகப்பு நிற லிப்ஸிட்க் சிறியதான பொட்டு அவளின் கூர் நாசியில் சிகப்பு நிற கல் வைத்த மூக்குத்தி போட்டிருந்தாள்..

என்னடா குடும்பமே வந்து நம்மள மிரட்டுது... யார் பேருக்கு அர்ச்சனை ஐயர் கேட்க... ரேனு இனியன் என்றாள்...

அங்கிருந்து ஓடியே விட்டான் இனியன்..

அம்மா, மாமா பயந்து எப்படி ஓடுற பாருங்க..

ஆபிஸ் கிளம்ப தலை வாரிக்கொண்டு இனியன் வெளியே வர... சோபாவில் ரேனுகாவும், மோகனும் உட்கார்ந்திருந்தார்கள்..

அப்படியே நின்றுவிட்டான் இனியன்..

ரேனு இனியன் அருகில் வந்தாள்... தேனு பிறக்கிறது முன்னாடியே நான் உனக்கு அத்தைடா... அவ வேணான்னா , உனக்கு அத்தையில்லாம ஆயிடுமாடா... நீ பிறந்திலிருந்து மூனுவருஷமா உன்னை வளர்த்தவடா இப்பவும் என் கண்ணுக்கு நீ சிறியவன் தான்.. அத்தையை ஒதுக்காதே இனியா..

அத்தே என்று கட்டிக்கொண்டான்... அவளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்..

ஏன்டா இப்படி இளைச்சு போயிட்ட..

உன் பார்க்காம இருந்தானா டார்லிங் அதான் சிரித்தபடியே சொல்ல...

படவா உன் குறும்பு போகாது...

இன்னைக்கு உன் கல்யாணம் நாளாச்சே அதான் உனக்கு பிடிச்சதெல்லாம் செஞ்சி எடுத்துட்டு வந்திருக்கேன்..

எப்ப வந்தீங்க..

நேற்று நைட் வந்தேன்டா.. அவனுக்கு பிடித்த பணியாரம், தேன்குழல் எடுத்து வைத்தாள்.. அப்பறம் அவனை சேரில் உட்காரவைத்து தட்டில் காலை உணவான.. இடியாப்பம், பூரி, வடையையும் வைத்தாள்..

ஒரு வாய் சாப்பிட்டவுடன், எனக்கு வேண்டாம் என்று எழுந்துக்கொண்டான்..

ஏன்பா..

நீ செஞ்ச பனியாரம், தேன்குழல் வெச்சுட்டு போ... அவ செஞ்சது எதுவும் வேண்டாம்...

ஒரு வாய் சாப்பிட்டதுமே கண்டுபிடிச்சிட்டியா மாமா... தேனுக்கா நல்லாவே செய்ய மாட்டா.. எனக்கும் வேணாம் எடுத்துட்டு போம்மா..

அதெல்லாம் நல்லாதான் செய்வா மோகன்.. நீ சாப்பிடு, சொல்லிவிட்டு ரூமிற்கு சென்று தனது லேப்டாப்பை எடுத்தான்..

ஓய்... ஹலோ.. ஹலோ மிஸ்டர் இனியன் என்று தேனு பால்கனியிலிருந்து கூப்பிட..

எவ்வளவு கொழுப்பு இவளுக்கு, பேர ஏலம் விடுறா..

என்னடி.. கொழுப்பா...

ச்சு.. என்று பறக்கும் முத்தத்தை அனுப்பினாள்..

பே என்று முகத்தை திருப்பிக்கொண்டான்.. சூப்பரா இருக்கு உங்க ட்ரஸ்.. ஹாப்பி வெட்டிங் டே மாமா.

ஹாப்பியா மவளே.. என்று பக்கத்திலிருந்த பவுடர் டப்பாவை எடுத்து வீசினான்...

---- உன்னில் சிக்க வைக்கிற

.......
 
Nirmala vandhachu ???
Surprise
 
அடேய் அடிக்கடி இந்த பக்கம் வாடா.....
Happy new year ???? sis......
அவன் கூறலாம்
ஆயிரம் காதல் கதைகள்....
அவள் கூற கூடாது
அவனை தவிர வேறு யாரும் பற்றி.....
அன்பால் கொள்ளும்
அழகு ராட்ஸசன்.....
அவளுக்கும் தெரியும்
அவன் கோவத்தை குறைக்க....
அவளின் இதழ் முத்தம் கூறும்
ஆயிரம் கதைகள்.....
அவளை பற்றி அறிந்தவன்
அவள் கைபக்குவம் தெரியாதா என்ன...
 
அடேய் அடிக்கடி இந்த பக்கம் வாடா.....
Happy new year ???? sis......
அவன் கூறலாம்
ஆயிரம் காதல் கதைகள்....
அவள் கூற கூடாது
அவனை தவிர வேறு யாரும் பற்றி.....
அன்பால் கொள்ளும்
அழகு ராட்ஸசன்.....
அவளுக்கும் தெரியும்
அவன் கோவத்தை குறைக்க....
அவளின் இதழ் முத்தம் கூறும்
ஆயிரம் கதைகள்.....
அவளை பற்றி அறிந்தவன்
அவள் கைபக்குவம் தெரியாதா என்ன...
அழகான் கவிதை மேம்... தேங்கஸ் உங்கள் கமென்ட்ஸுக்கு.. happy new year mam
 
Top