Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -29 (final 1)

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -29 (final 1)

தேனு வெளியேறியது.. என்ன செய்வது என்று தெரியாமல் டென்ஷனாகவே உட்கார்ந்திருந்தான் இனியன்... வெளியூர் பயணம் போனது வேறு அவன் உடம்பு அசதிக்கொள்ள அப்படியே தன் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கண்மூடினான்... ஆபிஸ் முடிந்தவுடன் தேனுவை பார்த்து பேசவேண்டும் எஎன்று நினைத்தான்..

மாலை நான்கானது வெயில் தாழ... இனியனின் போன் ஒலித்தது.. அவன் தூக்கத்தை கலைத்தது போனின் அழைப்பு... கண்ணை மூடியபடியே மேசையின் மேலிருந்த போனை எடுத்து ஹலோ என்றான்...

மாமா என்று அழுத குரலில் மோகன் அழைக்க...

என்னடா... தேனு வீட்டுக்கு வந்தாளா என்ற பதட்டம் அவனுள்...

மாமா.. நாங்க லைப் கேர் ஹாஸ்பிட்டல்ல இருக்கோம்..

என்னாச்சு மோகன், இனியன் எழுந்துக்கொண்டான்..

பப்புக்கு...

பப்புக்கு என்னடா.. பதற்றம் கொள்ள....லீப்ட்டில் கீழேயிறங்கி தனது பைக்கை எடுத்தான்.

ரொம்ப காய்ச்சலா இருந்தது, காலையில ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போனோம்.. மதியம் மேல உடம்பு தூக்கி தூக்கி போடுது... ஹை பீவர் வேற... கண்ணை திறக்கல சீக்கீரம் வாங்க மாமா..

அப்பா..அப்பான்னு சொல்லிட்டே இருக்கான் மாமா.... அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவனது பைக் ஹாஸ்பிட்டல் காம்பௌன்ட்டில் நின்றது..

எவ்வளவு வேகமாக பைக் ஓட்டினான் என்று இனியனுக்கே தெரியவில்லை.. அவனின் எண்ணம் முழுவது அவனது மகன் பப்புவை நினைத்தே... பிள்ள துடிச்சி போயிடும்... சிறிய வலியையே தாங்கமாட்டான்..

மேலே முதல் மாடியில் பப்புவை அட்மிட் செய்திருந்தார்கள்...

அங்கேயிருந்த ரூமின் வாயிலில் மோகன் மற்றும் தேனுவும் நின்றிருந்தார்கள்...

தேனு அழுதபடியே நின்றிருக்க... இனியனை பார்த்தவுடன் மாமா என்று கத்திவிட்டாள்..

எனக்கு பயமாயிருக்கு மாமா... டாக்டர் பிட்ஸ் வந்துடுச்சு சொல்லுறாரு... தேம்பி தேம்பி தேனு சொல்ல... அவளை அனைத்துக்கொண்டு தன் மகன் இருக்கும் அறையை பார்த்தான்.. மெலிந்து நூலாக கிடந்தான்.. அப்பா அப்பா என்று அவனின் உதடுகள் முனுக்க...

பப்புவை பார்த்தவுடனே கண்கள் கலங்கிவிட்டது இனியனுக்கு உள்ளே டாக்டர் அவனுக்கு இன்ஜ்ஷன் போட்டுவிட்டு வெளியே வந்தார்..

டாக்டர்ன்னு இனியன் கூப்பிட, பயப்படாதீங்க இனியன்.. பீவர் குறைஞ்சவுடன் நார்மலா ஆயிடுவான்... ஏதோ யோசிட்டு அதைபற்றியே பேசிட்டு இருக்கான்.. பிள்ளையை பார்த்துக்க வேண்டாமா இனியன் ஸார்..

இனியன் தலைக்குனிந்து நிற்க... இப்போ மருந்து போட்டதுல தூங்கிட்டு இருக்கான்... நான் நைட் வந்து செக் செய்யுறேன் என்று கேபினுக்குள் சென்றார்..

மாமா நான் இரண்டுபேருக்கும் டீ வாங்கிட்டு வரேன் என்று கேட்டினுக்கு சென்றான்... அங்கே போடப்பட்டிருந்த சேரில் தலையை சாய்த்து ரிலாக்ஸா உட்கார்ந்தான்..

அந்த வரண்டாவில் யாருமே இல்லை... தேனு மெல்ல இனியனிடம் வந்தாள்..

மாமா...

கண்ணை திறந்து அவளை முறைத்தான்.. கண்கள் கணலாக மாறியது.

போதுமாடி உனக்கு... பிள்ளையை எங்கு கொண்டுவிட்டிருக்க, அவன் என்னடி பாவம் பண்ணான்.. நமக்கு பிள்ளையா பிறந்ததா சொல்லு... உன்னுடைய கோபம், வீராப்பு அதான் முக்கியம்.. அவனை பற்றி யோசிச்சீயா தேனு... சுயநலமா இருந்தீயே...

ஒரு வயசு வரைக்கும் உன்கிட்ட இருந்தான்.. அப்பறம் அவனை தோள்ல மாருல போட்டு வளர்த்தேன்டி... இப்போவாது என் பிள்ளையை பார்க்க விடுவீயா நீ..

மாமா...

பேசாதே... நான் ரொம்ப கோவத்தில இருக்கேன் பேசாம போயிடு..

மோகன் கொண்டுவந்த டீயை இருவரும் குடித்தனர்...

இனியன் உள்ளே சென்று பிள்ளையை பார்த்தான்... ஜூரம் இன்னும் குறையவில்லை.. அவனின் நெற்றியில் முத்தமிட்டான்...

இரவு எட்டு மணிக்கு மெல்ல கண்விழித்தான் பப்பு... அவனது பக்கத்தில் அமர்ந்த இனியனை பார்த்தவுடனே டாடி என்றான்..

பப்பு என் செல்லம்.. என்னடா இது.. பப்புவின் கண்ணத்தில் முத்தமிட்டான்..

போங்க என்று முகத்தை திருப்பிக் கொண்டான் பப்பு.. இனியன் கையை தட்டிவிட்டான்...

என்னடா..

என்கிட்ட பேசாமதானே போனீங்க..

ஸாரிடா தங்கம்.. அதான் அப்பா வந்துட்டேனே...

அம்மா..என்று தேனுவை கூப்பிட.. அவனை அனைத்துக்கொண்டாள்... அழாதேம்மா ஐயம் ஆல் ரைட்...

டாக்டர் மறுபடியும் வந்து செக் செய்தார்... பின்னாடி நின்றிருந்த மோகன், எல்லாரையும் பயமுறுத்திட்ட பப்பு..

தேனு இனியனிடம் அவனுக்கு கொடுக்க வேண்டிய மெடிசன் மற்றும் உணவு முறைகளை சொன்னார் டாக்டர்..

மணி 11 ஆனது... பெட்டின் அந்த பக்கம் சேரில் அமர்ந்தபடியே தேனு தூங்க இந்த பக்கம் காலை நீட்டியவாறு இனியன் உட்கார்ந்திருந்தான்..

தூக்கம் கலைந்து அம்மா என்று அழைத்தான் பப்பு... என்ன பப்பு வேணும் என்று இனியன் கேட்க..

டாடி எனக்கு பாத்ரூம் போகனும்...

அதுக்கு ஏன்டா அம்மாவை எழுப்புற, அவனை தூக்கிக்கொண்டு அந்த அறையிலிருந்த வாஷ்ரூமிற்கு சென்றான்...

இனியனின் கழுத்தில் தன் முகத்தை புதைத்தான் பப்பு.. எத்தனை நாள் ஏக்கம் அவனுக்கு...

அவனை டாய்லெட்டில் உட்கார வைத்தான்... பப்பு அப்பா என்ன சொன்னேன்... கொஞ்சநாள்ல நான் வந்துருவேன் சொல்லிட்டுதானே அம்மாகிட்ட விட்டேன்..

ம்ம் என்று தலையை ஆட்டியது அந்த சிட்டு..

அப்பறம் ஏன்டாம்மா அப்பா அப்பான்னு அழுத..

நீங்க என்னைவிட்டு வெளிநாடு கோவாவுக்கு போக போறீங்க..

கோவா, வெளிநாடா பப்பு..

ம்ம்.. என் கேர்ள் பிரண்ட் சொன்னா.. நீங்க பாரின் போனா ரொம்ப நாளாகுமா திரும்ப வர...

எந்த நாட்டுக்கும் போகலடா... உன்னைவிட்டு அப்பா போவேனா

அவன் வேலையை முடித்தவுடன் கதவை சாற்றிவிட்டு பப்புவை தூக்கிக்கொண்டு நடந்தான்.. அப்ப போகலையா என்று கேட்க.

இல்ல... தலையை ஆட்டினான் இனியன்..

ஸ்வீட் டாடி..என்று இனியன் கழுத்தை இறுக்கி பிடித்து கண்ணத்தில் முத்தமிட்டான்.

சிரித்துக்கொண்டே அவனை பெட்டில் படுக்கவைத்தான்.. தூங்கு பப்பு டாடி பக்கத்திலே இருக்கேன்.. ஓகேவா..

ஒரு கையால் பப்புவின் கேசத்தை தடவியபடியே,மறுகையை அவன் நெஞ்சில் வைக்க இறுக்க பற்றிக்கொண்டான் பப்பு, எங்கே தனது அப்பா தன்னைவிட்டு சென்றுவிடுவாரோ என்ற பயத்தில்... இனியன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்..

சிறுநேரத்தில் பப்பு தூங்கிவிட...சேரில் கால்களை நீட்டி உட்கார்ந்தான் இனியன்.. எதிரே தேனு அழுது அழுது சோர்வாக இருந்தது அவளது முகம்.. ரொம்ப பயந்துட்டா..

நாங்கள் இருவரும் பிள்ளையிடம் இருக்கிறோம் நீ வீட்டிற்கு போடா என்று மோகனை அனுப்பிவிட்டான் இனியன்..

காலையில் எழுந்தவுடன் தன்னை தேடுவான் என்று இனியனுக்கு நன்றாகவே தெரியும்.. அதலால் அவனுக்கு பால் கலந்து எடுத்துவந்தான்...

பப்பு கண்ணை விழித்து பார்த்தது தனது டாடியைதான்..

அவனின் முகத்தை துடைத்துவிட்டு வேறு ட்ரஸை மாற்றிவிட்டாள்.. பிறகு இனியன் கொண்டுவந்த பாலை நன்றாக ஆற்றி பப்புவிற்கு கொடுத்தாள்.

இனியன் தேனுவிடம் பேசவில்லை, முகத்தையும் பார்க்கவில்லை... அதுவே அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.. நேற்று ஆபிஸில் நடந்த சம்பவமும் ஒரு காரணம், வீட்டிற்கு வந்தவுடன் பப்பு உடம்பு தூக்கி போட ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்தாள்... நேற்று இனியன் பேசியது அவளது மனதை கூர்போட்டு அறுத்தது.. தன் மகனை இனியனைவிட்டு பிரித்தது பெரிய தப்பு என்று உணர்ந்தாள்...

இனியன் பில்லை செட்டில் செய்ய கவுன்டருக்கு சென்று பார்மாலிடிஸ் முடித்துவிட்டு வந்தான்.. கூட மோகனும் வர.. மாமா காரை எடுத்துட்டு வந்திருக்கேன்..

தேனு பொருட்களை ஒரு பேக்கில் எடுத்துவைத்தாள்.. பின் பப்புவை தூக்கிக்கொண்டு காரில் ஏறினாள்.. முன் சீட்டில் மோகன் உட்கார்ந்திருக்க இனியன் ட்ரைவ் செய்தான்..

தனது ப்ளாக்கில் காரை நிறுத்தினான்... பின் சீட்டிலிருந்த பப்புவை தூக்கிக்கொண்டு தனது ப்ளாட்டிற்கு சென்றான்...

கதவை திறந்து ,பேன் சுவிட்ச்சை போட்டான் பிறகு தனது ரூமில் பப்புவை படுக்கவைத்துவிட்டு வெளியே வந்தான். மோகன் பப்பு இந்த வீட்டில்தான் இருப்பான்.. உன் அக்கா என்ன சொல்லுறா..

எதுவும் சொல்லாமல் பப்பு இருந்த அறைக்குச்சென்றாள் தேனு...

மோகன் என்ன சொல்லுவது என்று தெரியாமல் நிற்க... உள்ளேயிருந்தே குரல் கொடுத்தாள்.. மோகன் வீட்டிலிருந்து பப்புதும் என் ட்ரஸும் எடுத்துட்டு வா.. நான் குளிக்கனும்...

சரிக்கா என்று சந்தோஷமாக ஓடினான் மோகன்.. அப்பாடா என்று அவனது மனம்... அக்கா ஏதாவது முரண்டுபிடிப்பாள் என்று நினைத்தான்..

பிரிட்ஜை திறந்து பாலை எடுத்துக்கொண்டு கிச்சனுக்கு சென்றாள்... பேப்பரை படிப்பதுபோல தேனு என்ன செய்கிறாள் என்று ஒரக்கண்ணால் பார்த்தான் இனியன்..

பாலை காய்ச்சி காபி போட்டு எடுத்துவந்தாள்... வீட்டின் வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்க திரும்பி பார்த்தாள்.. அங்கே சமீராவும், அசோக்கும் நின்றிருந்தார்கள்..

வாங்க அண்ணா, வா சமீ என்று உள்ளே அழைத்தாள் தேனு... இனியனும்

அழைக்க..

எங்கண்ணா பப்பு -சமீ

உள்ளேயிருக்கான் போய் பாருடா, இனியன் பக்கத்தில் அசோக் உட்கார,

காபியை அசோக் கையில் கொடுத்தான்... மச்சான் தேனு இங்கேவா தங்குது..

ம்ம்..

டிபன் எடுத்துவந்திருக்கேன்டா.. நீங்க இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டிங்க. அப்போது மோகனும் வந்துவிட... கொஞ்சம் நேரம் பேசிவிட்டு கிளம்பினார்கள்...

மோகனை தனியாக கூட்டிச்சென்றான் அசோக்.. மோகன் நீ எதிர் வீட்டில தங்கிக்கோடா.. இரண்டுபேரும் தனியாயிருந்தா தான் பேசிக்குவாங்க.. இல்லை உன்னை வச்சி பேசுவாங்க.. புரியுதா மோகன்..

நீங்க சொல்லுறது சரிதான்னா... காலையிலும் அப்படிதான் மாமா பேசிச்சு.. மதியம் பப்புவுக்கு கஞ்சி செய்தாள்.. பிறகு அவர்களுக்கு சம்பார், வறுவல் என்று சிம்பளாக செய்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு பப்புவிடம் சென்றுவிட்டாள்..

அவள் செய்த உணவைதான் சாப்பிட்டான் இனியன்.. ஆனால் எதுவும் பேசவில்லை.. கோபம்தான் அவனிடம்... நைட் தனது வேலையை முடித்துவிட்டு லேட்டாகதான் ரூமிற்கு வருவான்.. பெட்டின் அந்த பக்கம் படுத்துக்கொள்வான்.. காலையில் சீக்கிரமே எழுந்து சென்றுவிடுவான்...

மூன்று நாட்களாக இப்படியே சென்றது... பப்பு எழுந்து விளையாட ஆரம்பித்தான்.. எப்பவும் மோகனை வம்புபிழுத்தபடியே செல்ல ரேனுகா அன்று காலையில ஊரிலிருந்து வந்துவிட்டார்....

அவரை பார்த்தவுடன்.. பாட்டி என்று குதித்தான் பப்பு... என் செல்லம் என்று வாரியனைத்துக்கொண்டாள் ரேனுகா..

வா அத்தே..

உள்ளிருந்து தேனுவும் வெளியே வர... அம்மா எப்பவந்தீங்க என்றாள்..

இப்பதான்டி..

----- உன்னில் சிக்க வைக்கற
 
Nirmala vandhachu ???
 
Top