Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னோடு கைகோர்க்க 13

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
உன்னோடு கைகோர்க்க 13
தன்னுடைய பொருட்டுகள் அனைத்தையும் தயாராக எடுத்துவைத்தவள் கிளம்ப எத்தனித்த பொழுது..இப்படி கிளம்பிவிட்டு நான் போகிறேன் என்று சொல்வது சரி அல்ல..முதலில் கீழே சென்று சொல்லிவிட்டு பின் வந்து தன் உடமைகளை எடுத்து செல்லலாம் என்று முடிவு செய்தாள் சம்யுக்தா.

கீழே வந்தவள் அனைவரும் கூடத்தில் இருப்பதை பார்த்து"நல்ல வேலை..அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் சொல்வது எளிதானது",என்று நினைத்து கொண்டு ஜனார்த்தனன் முன்பு போய் நின்றாள்.

அவளை பார்த்தவர் அவள் ஏதோ சொல்ல வருவது புரிந்து"என்னமா", என்று பணிவாக கேட்டார்.

"தாத்தா நான் ஊருக்கு கிளம்பறேன்",என்றாள் சோர்ந்த குரலில்.

அவள் அப்படி சொன்னதும் அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்.அதிலும் கண்ணனுக்கு இதயமே நின்றுவிடும் போல் இருந்தது.

"சதா என்ன சொல்ற..இப்படி திடிர்னு வந்து சொல்ற..என்கிட்ட கூட எதுவும் சொல்லவே இல்லையே", என்றாள் தாரா ஆற்றாமையுடன்.

"என்னமா..ஏன் இந்த திடீர் முடிவு", என்றார் கோதை பாட்டி அவளை ஆராயும் பார்வையோடு.

"வீட்ல இருந்து வந்து மூனு மாசம் ஆகிடுச்சு பாட்டி", அதான் கிளம்பிட்டேன்.

"அது ஏன் திடிர்னு கெளம்பிட்டா ", என்றாள் தாரா அவளை விடாமல்.

"திடிர்னு அம்மாவ பாக்கணும் போல இருந்தது..அதான் கிளம்பிட்டேன் ", என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

அவள் அப்படி சொல்லவும் யாருக்கும் எதுவும் சொல்ல தோன்றவில்லை.அனைவரும் அமைதியாய் இருக்க ஜனார்த்தனன் அவளிடம் பேசினார்.

"இன்னும் பத்து நாட்களில் தருணுக்கும் தாராவிற்கும் திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கோம்..நீ இங்கே இருந்து திருமணம் முடிந்து பின்பு போமா",என்றார்.

அதை கேட்டதும் அவளுக்கு மிகுந்த ஆனந்தம்.இருந்தாலும் தன்னால் இங்கே இதற்கு மேல இருக்க முடியாது என்று திடமாக இருந்தவள் "ரொம்ப சந்தோஷம் தாத்தா..நான் கண்டிப்பா கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி வந்துடுவேன்..இப்போ கண்டிப்பா போகணும்", என்றாள் மனதின் வலியை மறைத்து.

அவருக்கும் இப்பொழுது என்ன சொல்வதென்று தெரியவில்லை.அமைதியகா இருந்தவரின் அருகில் வந்த கோதை பாட்டி அவர் காதில் ஏதோ சொல்ல அவர் முகம் உடனே பிரகாசமானது.

********

அம்பிகா காலையில் குளித்து பூஜை அறையில் விளக்கேற்றி கிருஷ்ணருக்கு பூஜை செய்து கொண்டு இருந்தார்.அதிலும் கண்ணன் பாட்டுடன் பூஜை நடத்திக்கொண்டு இருந்தார்.


"குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
...

வீட்டில் உள்ள அனைவரும் அம்பிகாவை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டு இருந்தனர்.இவ்வளவு நாட்களாக சம்யுக்தாவை நினைத்து அழுதுகொண்டு இருந்தவர் இன்று இவ்வளவு புத்துணர்ச்சியுடன் காலையிலே எழுந்து பூஜை செய்து கொண்டு இருக்கிறார் என்று பார்த்து கொண்டு இருந்தனர்.

ஆதிசேஷன் உட்பட அனைவரும் அங்கு தான் இருந்தனர்.பூஜை முடித்து வெளியே வந்த அம்பிகா அனைவரும் தன்னை பார்ப்பதை உணர்ந்து "எனக்கு புரிது நீங்க எல்லாரும் ஏன் இப்படி பாக்கறீங்கனு..சம்யுக்தாவை நினைச்சி கவலையா இருந்தேன்..இப்போ இவ்ளோ தெளிவா இருக்கேனு தான", என்றார் சிரிப்புடன்.

அனைவரும் ஆமாம் என்பது போல தலை அசைக்க அமரவாதியோ "இன்றோடு சம்யுக்தா சென்று எவ்வளவு நாட்கள் ஆனது", என்று கேட்டார்.

"மூனு மாசம் ஆச்சு சித்தி", என்றான் ஆஷிக் புரியாமல்.

"சம்யுக்தா என்ன சொல்லி இருந்தா அந்த கடிதத்துல..கண்டிப்பா மூனு மாசம் முடிஞ்சதும் வரேன்னு சொல்லி இருந்த தான..கண்டிப்பா இன்னைக்கு அவளை நான் பார்த்திடுவேன்", என்றார் அவ்வளவு மகிழ்ச்சியுடன்.

அம்பிகா அப்படி சொன்னதும் அனைவரும் அவரை பாவமாக பார்த்தனர்.அவருக்கு எதுவோ ஆகிவிட்டது போல்.அதிலும் அமரேந்திரன் உடைந்தேவிட்டார் இவரின் செயலில்.அதை உணர்ந்த அம்பிகா "யாரும் பயப்பட வேணா..நான் தெளிவா தான் இருக்கேன்.எனக்கு நம்பிக்கை இருக்கு..என் பொண்ண இன்னைக்கு நான் பார்ப்பேன்..நீங்க சொல்லுங்க மாமா", என்று ஆதிசேஷனிடம் கேட்டார்.

அனைவரும் ஆச்சர்யமாக ஆதிசேஷனை பார்க்க, என்ன சொல்லுவாரோ என்ற எதிர் பார்ப்பு அதில் இருந்தது.அதே கணம் அவரின் கைபேசி அழைத்தது.அதை எடுத்து காதுக்கு கொடுத்தவர் மறு முனையில் என்ன சொன்னார்களோ...அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவர் "நான் திரும்பி வர வரைக்கும் இங்கயே இருங்க எல்லாரும்", என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றார்.

அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு நின்றனர்.அம்பிகா சென்று அமரேந்திரன் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.அவரின் கையை ஆறுதலாக பிடித்துக்கொண்டார்.அதில் சிறுது தெளிவடைந்தார் அமரேந்திரன்.அவரை புன்னகையுடன் பார்த்தார் அம்பிகா.

அரைமணிநேரம் சென்ற பின்பு ஆதிசேஷன் தனது அறையிலிருந்து வெளிப்பட்டார். வந்தவர் அம்பிகாவிடம் "நீ சொன்னது சரி தான்மா..அவ என் பொண்ணு..சொல்றத கண்டிப்பா செய்வா..நாம இன்னைக்கு அவளை கண்டிப்பா பாப்போம்", என்றார் முக மகிழ்ச்சியுடன்.

அதை கேட்டதும் அனைவருக்கும் சந்தோஷம்.இவ்வளவு நாள் அவர்கள் வீட்டின் இளவரசி இல்லாமல் எவ்வளவு வேதனை பட்டார்கள்.வீடே மயான காட்சி அளித்தது.எப்போ அவளை பாப்போம் என்று இருந்தனர்.இன்று அவளை பார்க்க போகிறோம் என்று சொன்னதும் அனைவருக்கும் சந்தோஷம் தாளவில்லை.

"எல்லாரும் வெளியூர் போறோம்..பத்து நாள் ஸ்டே..ஒரு மேரேஜ் பங்க்ஷன்..கிளம்பி இருங்க", என்றார்.

"ஆஷிக் போய் பிரவீண என் ரூம்கு வர சொல்லு", என்றார்.அவனும் சரிப்பா என்று பிரவீனை தேடி சென்றான்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நிற்பதை பார்த்த ஆதிசேஷன் "இன்னும் போகலையா..கிளம்புங்க டைம் இல்ல", என்று சொன்னதும் அனைவரும் வேக வேகமா சென்றனர்.

பிரவீன் பெரியப்பா அழைத்து இருப்பதை நினைத்து ஆனந்தமாக அவரை பார்க்க சென்றான்.அவர் அறைக்கு சென்றவன் "பெரியப்பா கூப்பிட்டீங்களா", என்றான்.

அவனை திரும்பி பார்த்தவர் "நீயும் உன் மனைவியும் கிளம்பி இருங்க..ஒரு மேரேஜ் பங்க்ஷன் டென் டேஸ் ஸ்டே..எல்லாம் பேக் பண்ணிக்கோங்க", என்று சொல்லிவிட்டு தன் வேலையில் கவனத்தை வைத்துக்கொண்டார்.

பிரவீன் சென்று விஷயத்தை பிரணவீயிடம் சொன்னான்.அவளுக்கு அவர் அழைத்ததே போதும் என்று சந்தோஷமாக கிளம்பினாள்.

அனைவரும் கிளம்பி இரண்டு காரில் சென்றார்கள்.பெரியவர்கள் ஒரு காரிலும் சின்னவர்கள் ஒரு காரிலும் இருந்தார்கள்.எங்கே போகிறோம் என்று தெரியாமல் சென்றுகொண்டு இருந்தனர்.அமராவதி கேட்டும் ஆதிசேஷகன் சொல்லவில்லை.நேரில் வந்து தெரிந்துகொள் என்றுவிட்டார்.

இரவு பயணம் அனைவரும் உறங்கி விட்டனர்.கார் நிற்பதை உணர்ந்து முதலில் விழித்தது பிரணவீ தான்.கண்ணை திரந்து பார்த்தவள் ஒரு நிமிடம் கனவோ என்று தான் நினைத்தாள்.

பெரியவர்கள் இறங்கிய பின்பு தான் உணர்ந்தாள்.உண்மையாகவே அவள் இருக்கும் இடம் கனவு அல்ல என்று.மிக ஆனந்தத்துடன் இறங்கியவள் முதலில் பார்த்தது கோதை பாட்டியை தான்.

பாட்டி என்று அவரை சென்று கட்டிக்கொண்டாள்.அவரும் அவளை கட்டி முத்தமிட்டு கொஞ்சிக்கொண்டு இருந்தார்.இதை மற்ற அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர் ஒன்றும் புரியாமல்.பிரவீன் மட்டும் அவளை பார்த்து சிரித்துக்கொண்டு நின்றிருந்தான்.

ஜனார்த்தனன் உள்ளே இருந்து வந்தார்.அவரும் பிரணவீயை பாசமாக அணைத்துக்கொண்டார்.பின்பு வந்தவர்களை பார்த்து வாங்க..வணக்கம் என்று கை கூப்பினார்.அவர்களும் மரியாதைகாக வணக்கம் வைத்தனர்.

ஆதிசேஷனின் பார்வை வீட்டினுள்ளே இருக்க அதை உணர்ந்த ஜனார்த்தனன் "அங்கு வந்த தாராவிடம் போய் உன் சினேகிதிய கூட்டிட்டு வா", என்றார்.

தாராவும் சரி என்று சென்றாள்.தங்கள் அறைக்கு சென்றவள் சம்யுக்தா தூங்கி கொண்டு இருப்பதை பார்த்து அவளை எழுப்பினாள்.

"சதா எழுஞ்சிரு", என்று எழுப்பினாள்.

"இன்னும் கொஞ்ச நேரம் தாரா ", என்று போர்வையை இழுத்து கொண்டாள்.

"சதா உன்ன தாத்தா கூப்பிட்டாரு", என்று அவள் சொல்ல..

"அப்படியா", என்று வேகமாக எழுந்து முகம் கழுவி தாராவுடன் கீழே வந்தாள்.

அப்பொழுது அவர்கள் எதிரில் தருண் வந்து கொண்டு இருந்தான்.தாராவின் மீது விழுங்கும் பார்வையை பதித்து கொண்டே வந்தவன் அவர்கள் கிட்டே வந்ததும் "குட் மார்னிங் ", என்று தாராவை பார்த்து கொண்டே சம்யுக்தாவிற்கு சொன்னான்.

அவனை முறைத்தவள் "தாத்தா கூப்படறாரு..போய்ட்டு வந்து உங்கள பாத்துக்கிறேன்", என்று அவனை எச்சரித்து விட்டு சென்றாள் சிறப்புடன்.

இவனுடன் நின்றால் ஏதாவது செய்வான் என்று தாராவும் சம்யுக்தவுடன் சென்றாள்.சம்யுக்தா தாராவை கிண்டல் செய்து கொண்டே வர தோழிகள் இருவரும் ரகசியம் பேசிக்கொண்டு சிரிப்புடன் வருவதை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

பின்னிருந்து கோதை பாட்டியை அனைத்த சம்யுக்தா "குட் மார்னிங் பாட்டி ", என்று சொல்லி கொண்டே நிமிர்ந்தவள் அப்படியே சிலையாக நின்றாள்.

கண்களில் இருந்து வழிந்து கன்னங்களில் உருண்டோடியது கண்ணீர்.பேச்சே எழவில்லை அவளுக்கு.ஒவ்வொருவரின் முகமாக பார்த்து கொண்டே வந்தவள் தன் பெரியப்பாவை பார்த்ததும் ஓடி வந்து கட்டிக்கொண்டாள் அழுகையுடன்.

"பெரியப்பா சாரி..ப்ளீஸ் என்ன மன்னிச்சுடுங்க", என்று அவள் அழுதுகொண்டே சொல்ல அவர் கண்களிலும் ஈரம்.அவள் மேல் பட்டு தெறிக்க நம்ப முடியாமல் நிமிர்ந்து பார்த்தாள்."பெரியப்பா ", என்றவலுக்கு அதற்கு மேல் அவளுக்கு பேச்சே எழவில்லை.

"என்ன அவ்ளோ கொடும காரனு நெனச்சிட்டியா சம்யுக்தா ", என்றார் மிகுந்த மன வலியுடன்.

"அப்படி இல்லை பெரியப்பா..நான் தான் தெரியாம தப்பு பண்ணிட்டேன்..உங்கள விட்டு வந்துட்டேன்.சாரி", என்றாள்.

அனைவரையும் அணைத்து தன் இத்தனை நாள் ஏக்கத்தை சொல்லி அழுது பின் சிரிப்புடன் "நான் இல்லாமல் எல்லாரும் ஜாலியா இருந்து இருப்பிங்க", என்றாள் வேண்டுமென்றே.

அடுத்த நொடி அவள் கன்னத்தில் அறைந்து இருந்தார் அம்பிகா.அவள் அப்படியே கன்னத்தில் கை வைத்து தன் அன்னையை பார்த்துக்கொண்டு நிற்க அம்பிகா என்று அமரேந்திரன் கத்தி இருந்தார்.

"உனக்கு எல்லாம் விளையாட்டா போச்சுல..இந்த மூனு மாசமா எவ்ளோ கஷ்ட பட்டோம்னு தெரியுமா..நீ இங்க ஜாலியா இருந்துட்டு எங்கள கேக்கறியா...சாப்பிடாம தூங்காம எப்படிலான் இருந்தோம்னு தெரியுமாடி உனக்கு ", என்று கத்தினார்.

அனைவருக்கும் அவர் வலி புரிந்ததால் அமைதியாக நின்றனர். ஆனால் இவர் கோபப்படுவதை பார்க்க முடியாமல் சம்யுக்தாவை பாசமாக அனைத்தவன் அம்பிகாவிடம் "இனி ஒரு முறை அவளை அடிச்சீங்க அவ்வளவு தான் ", என்று கோபமாக சொன்னான் தருண்.

இவர்கள் அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க..சம்யுக்தா இன்னும் அவன் அணைப்பில் இருக்க அதை பொறுக்காமல் ஆஷிக் ஏதோ சொல்லவரா அதை ஒரு பார்வையால் தடுத்தார் ஆதிசேஷன்.

"பெரியம்மா தப்பா நினைக்காதீங்க..என் தங்கச்சி கஷ்ட பட்டா என்னால பாத்துட்டு இருக்க முடியாது", என்று தருண் சொன்னதும் அனைவருக்கும் இப்பொழுது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.ஆஷிக்கை பார்த்த ஆதிசேஷன் இப்போ புரிதா அமைதியாய் இரு என்று பார்வையில் சொன்னார்.

அவனை பார்த்து அனைவரும் சிரித்தனர்."எங்க வீட்டு வாலு உங்களையும் கவுத்துடுச்சா", என்றான் பிரவீன்.

"ஏன் எல்லாரும் வெளியே நிக்கறீங்க..உள்ள வாங்க", என்று ஜனார்த்தனன் அழைத்தார்.

நிதினை கொஞ்சி கொண்டே அவர்களுடன் உள்ளே சென்றாள் சம்யுக்தா.

இரண்டு குடும்பமும் பேசி ஒன்றாக ஆனது.வீடே கலகலப்பாக இருந்தது.துளசி அனைவருக்கும் டீ போட்டு கொண்டு வந்தார்.அனைவரும் பேசி கொண்டு இருக்க சம்யுக்தாவின் பார்வை வீட்டை சுற்றி அலைந்தது.

அவள் பார்வை சுழன்று ஒரு இடத்தில் வந்து ஆணி அடித்தார் போல் நின்றுவிட்டது.அங்கே கண்ணன் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

மனதில் அடிபட்டது போன்று ஒரு பார்வை அவள்மீது விழ அதை தாங்காமல் இவள் பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.கண்களில் இருந்து நீர் வழிய அதை யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டாள்.

மறுபடியும் நிமிர்ந்து பார்க்க அங்கே அவன் இல்லை.எங்கே என்று அவள் தேட "யாரை தேடுற", என்று அவள் காதின் அருகில் இவன் குரல் கேட்டு திடுக்கிட்டு அவனை திரும்பி பார்க்க அவள் சாய்ந்து இருக்கும் தூணின் மறைவில் இருந்து அவன் பேசிக்கொண்டு இருந்தான்.

அவனை விட்டு அவள் நகர பார்க்க அவள் சேலையின் முந்தானையை இழுத்து பிடித்துக்கொண்டான் அவள் நகராதபடி.

அவள் பயந்து "என்ன பண்றீங்க..யாராச்சும் பாக்க போறாங்க..விடுங்க", என்றாள்.

"என்னோடு காதலுக்கு பதில் சொல்லு ", விட்டுறேன் என்றான் கள்ள சிரிப்புடன்.

அவனை பார்த்து முறைத்தவள் "ஐ ஹேட் யூ ", என்றாள்.

"பட் ஐ லவ் யூ டி பொண்டாட்டி ", என்று சொல்லி அவளின் இடையை கிள்ளினான் கண்ணன்.


அவள் வலியில் கத்த அனைவரும் பதறி அவள் அருகில் வந்தனர்.அவள் பயத்துடன் அவனை மாடி படியின் அடியில் தள்ளிவிட அவள் கைகளுக்கு முத்தம் கொடுத்துவிட்டே ஒளிந்தான்.
 
Nice epi dear.
Appo kalyanam scene ellam unda? 10 days kondattama?I like marriage per preparation scenario very much.jolly ah irruku alla.waiting eagerly for that.kalyana vittil youngsters kallata nalla irrukum. Authore veegam varennae seriya.
 
Nice epi dear.
Appo kalyanam scene ellam unda? 10 days kondattama?I like marriage per preparation scenario very much.jolly ah irruku alla.waiting eagerly for that.kalyana vittil youngsters kallata nalla irrukum. Authore veegam varennae seriya.
Sure.. seekrama ud kudukren..tnk u so much ?
 
Top