Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னோடு கைகோர்க்க 16

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
உன்னோடு கைகோர்க்க 16


கண்ணனின் கை அவள் மேல் இருப்பதை பார்த்து அதிர்ந்தவள் என்ன நடந்து இருக்கும் என்று எவ்வளவு யோசித்தும் அவளுக்கு புரியவேயில்லை. அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவளுக்கு நிச்சயமாக தவறாக எதுவும் நடந்து இருக்காது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தாள். அவனின் கையை மெதுவாக தன் மீது இருந்து எடுத்தவள் அவன் எழுந்துவிடாமல் கட்டிலில் இருந்து எழுந்து குளிக்க சென்றாள்.

அப்பொழுது தான் தன் உடையை கவனித்தாள். இதை யார் மாற்றி இருப்பார்கள் என்று பலவித யோசனையோடு குளிக்க சென்றாள். தனதறைக்கு வந்தவள் குளித்து முடித்து கீழே சென்றாள். வேலையாள் யாரும் இல்லாததை நினைத்து நல்லவேளை யாரும் இல்லை.இல்லையென்றால் அவன் அறையில் நான் இருப்பதை பக்கத்தில் இருந்தால் என்ன ஆகும் என்று பெருமூச்சுவிட்டாள்.

மனது சஞ்சலத்துடன் இருந்ததால் ரோஜா தோட்டத்திற்கு சென்றாள். இவள் கீழே சென்ற சிறிது நேறத்திற்குள் கண்ணனும் எழுந்துவிட்டான். எழுந்தவன் அவள் தன் பக்கத்தில் இல்லாததை பார்த்து அவள் அறையில் தேடினான். அவள் அங்கும் இல்லை என்றவுடன் கீழே இருப்பாள் குளித்துவிட்டு போகலாம் என்று சென்றான்.

கண்ணன் குளித்துவிட்டு கீழே வந்து பார்த்தான். அங்கும் அவள் தென்படாமல் போக கண்டிப்பாக ரோஜா தோட்டத்திற்கு தான் சென்றிருப்பாள் என்று அவளை தேடி சென்றான். சம்யுக்தா எங்கோ தொலை தூரத்தில் தன் பார்வையை பதித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை நெருங்கியவன் யுக்தா என்று அழைத்தான். அவள் அப்பொழுதும் அசையாமல் இருக்க மறுபடியும் யுக்தா என்று அழைத்தான். இந்த முறை அவனை திரும்பி பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.
அதில் கோபம் கொண்டவன் “உன்ன தான கூப்பிட்டுட்டு இருக்கேன். இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்”,என்றான்.

அப்பொழுதும் அவள் அசையாமல் இருக்க அவள் கையை அழுத்த பிடித்து அவளை எழுப்பியவன் “உனக்கு என்ன தாண்டி பிரச்சனை எதுக்கு இப்படி பண்ணிட்டு இருக்க…என்ன சாகடிக்காத”,என்றான் எரிச்சலுடன்.

“நானில்லை நீங்க தான் என்ன கொஞ்ச கொஞ்சமா சாகடிக்கிறிங்க”,என்றாள் கண்ணீருடன்.

“இப்போ என்ன நடந்துடுச்சுன்னு இப்படி பேசிட்டு இருக்க”,என்றான்.

“அவ்ளோ ஈஸியா போச்சுல உங்களுக்கு நேத்து நைட் நடந்தது”.

இவளுக்கு எல்லாம் நினைவு இருக்கு போல என்று நினைத்தவன்”ஆமா இப்போ அதுனால என்ன….ஆபத்துக்கு வேற வழி தெரியாம உன்கூட கணவனா வாழ்ந்தேன்….அந்த நேரத்துல எனக்கு ஒன்னும் அது தப்பா தெரியல”,என்றான்.

“ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம இப்படி செஞ்சி இருக்கீங்க உங்களுக்கு அசிங்கமா இல்ல”,என்று வார்த்தையை விட்டாள்.

அதுவரை பொறுமையாக இருந்தவன் அவள் இப்படி கேட்டதும் “என்னடி நெனச்சி இருக்க என்ன பத்தி….பிடிக்காத பொண்ண தொடர அளவுக்கு நான் கேவலமானவன் இல்ல…அதை விட ஆசை பட்டு உங்கிட்ட அப்படி நடந்துக்கல….எனக்கு உன்ன காப்பாத்த வேற வழி தெரியல….இப்போ சொல்றேன் கேட்டுக்கோ உன்கூட அப்படி இருக்குறதுக்கு முன்னாடியே ஒரு முடிவு எடுத்துட்ட்டேன்”.அவன் அப்படி சொன்னதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னனு கேக்குறிய .. இப்போ என்ன எவ்ளோ அசிங்கமா பேசுனா அந்தமாதிரி எதுவும் நடக்கக்கூடாதுல…அதன் உன்ன கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டேன்”.

அதிர்ச்சியாய் அவனை பார்த்தவள் ”இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்”,என்றாள்.

“இனி உன்னோட சம்மதம் எனக்கு அவசியம் இல்லை..உன் வாய் போய் சொல்லலாம் ஆனா உன்னோட கண்கள் எப்பவும் எனக்கான காதலை தேக்கி வச்சி இருக்கு…எனக்கு அதுவே போதும்”,என்றான்.

இவர்கள் பேசிக்கொண்டு இருந்த நேரம் டவுனுக்கு சென்றவர்களும் வந்துவிட்டனர்.பஸ் வருவதை பார்த்த கண்ணன் “நான் இப்பவே போய் நம்ப கல்யாண விஷயம் பேச போறேன்”,என்று சொல்லிவிட்டு அவள் பதிலுக்கும் காத்திராமல் அவர்களிடம் சென்றான்.

பஸ்ஸை விட்டு முதலில் இறங்கியவர் ஜனார்த்தனன் தான்.அவர் கண்ணனை பார்த்ததும் “என்னடா கண்ணா எங்களை நெனச்சி ரொம்ப பயந்துட்ட போல முகமெல்லாம் வாடி இருக்கு”,என்றார்.

“ஆமாம் தாத்தா”,என்றான்.

“மழை ரொம்ப அதிகமா இருந்தது…அதன் டவுனுலே ஒரு ஹோட்டல்ல தங்கிட்டோம் விடிஞ்சதும் கிளம்பி வந்துட்டோம்”,என்றார்.

அவர் இவ்வளவு சொல்லியும் அவனிடம் எந்த பதிலும் வராமல் போகா அவன் முகத்தை ஆராய்ந்தவர் அவன் ஏதோ சொல்ல தயங்குவது போல் தோன்ற ”என்கிட்ட ஏதாவது சொல்லனுமா”,என்று கேட்டார்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் அனைவரும் பஸ்சிலிருந்து இறங்கியதும் உங்க கிட்ட மட்டும் இல்ல தாத்தா உங்க எல்லார் கிட்டயும் சொல்லணும் என்றான்.

அனைவரும் அவனை புரியாத பார்வை பார்க்க “நான் சம்யுக்தாவை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்.அவளை காதலிக்கிறேன்.எனக்கு மனைவினா அவ மட்டும் தான்.இது தான் என்னோட முடிவு”,என்று சொல்லிவிட்டு….ஆதிசேஷனிடம் சென்று”என்னை மன்னிச்சிடுங்க சார் உங்க பொண்ண உங்கள விட ரொம்ப நல்லா பாத்துப்பேன்…நம்பிக்கை இருந்தா உங்க பொண்ண என்கிட்ட குடுத்துடுங்க”,என்று சொல்லிவிட்டு சம்யுக்தாவை திரும்பி பார்த்துவிட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டான்.

அனைவரும் தர்மசங்கடத்துடன் நிற்க ஜனார்த்தனன் தான் பேசினார்”ஆதி அவன் எதோ தெரியாம பேசிட்டு போறான்..நீ எதுவும் மனசுல வாசிக்காதயா”, என்றார்.

“மாப்ள தெரியாம பேசலப்பா…உங்க பொண்ணு உங்க கிட்ட இருந்த வரைக்கும் போதும் என்கிட்ட ஒப்படைச்சிடுங்கனு மூஞ்சிக்கு நேரா சொல்லிட்டு போறாரு”,என்றார் சிரிப்புடன்.

அவர் அவனை மாப்பிளை என்று சொன்னதும், அனைவருக்கும் புரிந்துவிட்டது அவருக்கு இதில் சம்மதம் என்று…அதைவிட கண்ணனை நினைத்து மெச்சிக்கொண்டனர் எவ்வளவு தைரியமென்று…

“ஆதி நீ சொல்றது”,என்று அதற்கு மேல் வார்த்தை வராமல் ஜனார்த்தனன் கேக்க…

“ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா பண்ணிடலாம்ப்பா”,என்றார்.

அனைவர்க்கும் மிகுந்த ஆனந்தம்..”ரெண்டு இல்ல மூனு கல்யாணம்”,என்றார் கோதை பாட்டி…அனைவரும் மறுபடியும் முழிக்க”இன்னொரு ஜோடி நீங்களா பாட்டி”,என்று கலாய்த்தான் பிரவீன்.”எனக்கு இல்லடா உனக்கு”என்றார். அனைவரும் இதை மறந்துவிட்டோமே என்று நினைத்தனர்.

அனைவருக்கும் மிகுந்த ஆனந்தம்….ஒரு கல்யாணம் என்றாலே கலாட்டாவாக இருக்கும் இப்பொழுது மூன்று கல்யாணம் என்றால்,அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம்…ஆஷிக்கும் தருணும் பிரவீனை கட்டிக்கொண்டு கூச்சலிட அனைவரும் சிரிப்புடன் வீட்டிற்குள் சென்றனர்.

இவர்கள் அடிக்கும் லூட்டியை தாங்காமல் வைஷு தன் தாயிடம் முறையிட்டாள்”அம்மா நான் என்ன எதிர்பார்த்து வந்தேன் இங்க என்ன நடக்குது..அந்த சம்யுக்தா நான் என்ன பிளான் பண்ணாலும் அவளுக்கு சாதகமா அதை மாதிட்றா..ச்சை…”,என்று அவள் கத்திக்கொண்டு இருக்க… “நான் தான் சொன்னேன்யில்ல கல்யாணம் முடியட்டும்னு..உன்ன யாரு அவசர பட சொன்னது”,என்று அவர் எறிந்துவிழ…கோபத்துடன் உள்ளே சென்றுவிட்டாள்..அவரும் அவள் பின்னே சென்றுவிட்டார்.

பிரணவீயும் தாராவும் சம்யுக்தாவை நோக்கி போக ”என்ன ஆச்சு சம்யுக்தா”, என்றாள் பிரணவீ.அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் சம்யுக்தா.

“என்ன பாக்குற எனக்கு உன்னையும் தெரியும் அண்ணாவையும் தெரியும் அதுனால தான் கேக்குறேன் என்ன நடந்துச்சுனு சொல்லு”,என்று தீர்க்கமாய் கேட்டாள் பிரணவீ..

அவளை கட்டிக்கொண்ட சம்யுக்தா நேற்று அருவிக்கரையில் நடந்த அனைத்தையும் சொல்லிமுடித்தாள்…”ராஸ்க்கல் உன்கிட்டயும் அவனோட வேலையை காட்டிருச்சா அந்த நாயீ”,என்று வெகுண்டாள் பிரணவீ.

“அண்ணி உன்கிட்டயும்னா நீங்க என்ன சொல்லறீங்க”,என்றாள் அதிர்ச்சியாக.

“ஆமா சதா அன்னைக்கு ஒரு பொண்ண பத்தி சொன்னேன்ல அது இவ தான். உங்க அண்ணா தான் அந்த நல்ல மனுஷன். அந்த மாரி இவ கிட்ட தான் தப்பா நடந்துக்க பாத்தான் அதுக்குள்ள அண்ணா காப்பாத்திடுச்சு அப்புறம் ஊரே இவளை பத்தி தப்பா பேச சாமி போல உங்க அண்ணா வந்து கட்டிக்கிட்டு கூடவே கூட்டிட்டு போய்ட்டாரு…இவ என்னோட சொந்தம் மட்டுமில்ல என்னோட உயிர் தோழியும் இவ தான்”,என்றாள் தாரா.

அனைத்தையும் கேட்ட சம்யுக்தா பிரணவீயை இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்டாள்”ஹே போதும்டி வலிக்குது கண்ணன் அண்ணாவை நினைச்சி என்ன கட்டிக்கிட்டு இருக்கியா”,என்று பிரணவீ அவளை கிண்டல் செய்ய…அவளை உடனே விடுவித்தவள்”அண்ணி எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை”,என்றாள்.

அவளை முறைத்த பிரணவீ நீ உன்மனசுல என்ன நெனச்சிட்டு இதை சொல்றனு எனக்கு தெரியும்.
“அண்ணி”,என்று சம்யுக்தா தடுமாற..

“அது ஒரு ஆக்சிடென்ட்..கண்டிப்பா வேற யாரோட வாழ்க்கையில இப்படி நடந்து இருந்தாலும் இப்படி தான் சொல்வாங்க…ஆனா நீ தான் பைத்தியகாரி மாரி அத உன்னோட வாழ்க்கையா நெனச்சிட்டு இருக்க….அத விட நீ நினைக்கிற விஷயம் நடைமுறைக்கு சாத்தியமா யோசிச்சி இருக்கியா ஒரு நாளாச்சும்”,என்று பொரிந்தாள் பிரணவீ.

“நீ என்ன சொல்ற பிரணவீ”,என்றாள் தாரா புரியாமல்.

“ஒரு வருஷத்துக்கு முன்னாடி இவ ப்ரவீணோட ஆபிஸ்க்கு போன..அப்போ ஸ்டெப்ஸ்ல கால் தடுக்கி விழ பாத்து இருக்கா…அப்போ அங்க வந்த ஒருத்தர் இவளை விழாம புடிச்சு காப்பாத்தினார்…ஆனா விழ போர பயத்துல மேடம் அவரை பாக்கல..அன்னைல இருந்து அவருக்காக இவங்க காத்துட்டு இருக்காங்க..இது சுத்த பயித்தியக்காரத்தனமா தெரியல”,என்றாள் பிரணவீ.

“அண்ணி ப்ளீஸ் எனக்கு நம்பிக்கை இருக்கு”,என்றாள் சதா.

“எனக்கும் இது சரியா தோனலை…ஒரு வேல அந்த ஆளுக்கு கல்யாணம் கூட ஆய்டு இருக்கலாம்,இல்லனா அவர் வயசானவரா கூட இருக்க வாய்ப்பு இருக்கு”என்று தாரா சொல்ல.

”ம்ம்ம்…அவளுக்கு மண்டையில உறைகின்ற மாரி சொல்லுடி”,என்றாள் பிரணவீ.சம்யுக்தா அமைதியாக நிற்பதை பார்த்தவள் இது உன்னோட வாழ்க்கை..நீயே முடிவு பண்ணிக்கோ,நல்லது எதுன்னு வழி காட்டிட்டோம் இனி உன் விருப்பம்”என்று தாராவின் கையை பிடித்துக்கொண்டு வீட்டை நோக்கி சென்றாள் பிரணவீ.

போகும் அவர்களையே குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் சம்யுக்தா..அவனை நான் நினைத்து கொண்டிருப்பது முட்டாள் தனமோ என்று முதல் முறை வருந்தினாள்.
 
Interesting.
Avalu yen thanai kaapatriyavanai parkalai?athu yarunu avaluku theriyatha?another surprise .Enna avumo curiosity thangala.
 
Top