Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னோடு கைகோர்க்க 18

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
உன்னோடு கைகோர்க்க 18
இன்னும் கல்யாணத்திற்கு மூன்று நாட்களே இருக்க அந்த நாள் விடியல் அனைவருக்கும் பரபரப்புடனும் ஒரு எதிர் பார்ப்புடனும் விடிந்தது.அன்று சங்கீத் நிகழ்ச்சி வைப்பதாக ஏற்கனவே முடிவு செய்ததுபோல் அணைத்து ஏற்பாடுகளும் செய்துகொண்டிருந்தனர் சிறியவர்கள்.பெரியவர்களுக்கு அன்று ஒரு நாள் ரெஸ்ட் என்று சிறியவர்கள் அன்பு கட்டளையிட்டிருந்தனர்.பெரியவர்களும் இவர்கள் சொல் கேட்டு வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர்.

பெண்களையும் வேலை செய்ய விடாமல் வீட்டிலே இருக்க சொல்ல அவர்களும் தாராவின் அறையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தனர்.

எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வந்த ஆண்கள் அனைவரையும் தயாராக சொன்னார்கள்.பாட்டு நடனம் என்று களைகட்ட போகிறது என்று குஷியாக கிளம்பினர் அனைவரும்.

அனைவரும் தயாராகி கீழே வர ஆஷிக் தருண் கண்ணன் பிரவீன் நால்வரும் அனைவரையும் வரவேற்பதுபோல் பாவனை செய்து வெல்கம் என்று உள்ளே செல்ல கையை காட்டினர்.அவர்கள் செய்துவைத்து இருந்த அலங்காரங்களை பார்த்தவர்கள் அப்படியே ப்ரம்மித்துபோனார்கள்.

குட்டியாக ஒரு மேடை..முழுவதும் பூ அலங்காரத்துடன்..வண்ண வண்ண விளக்குகள் மேடையை மையப்படுத்தி ஒளிருந்து கொண்டு இருந்தது.கீழே சமகாலம் விரிக்கப்பட்டு இருந்தது.மாலை நேர சில்லென்ற காற்று இருள் சூழ்ந்த வேலை நிலவொளி வேறு என்று அனைத்தும் ரசிக்க வைத்தது.அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தனர்.

தருண் தான் பேசினான்."முதல்ல பாட்டி போட்டி..அதுக்காக இப்போ என்ன பண்ண போறீங்கன்னா..பாய்ஸ் ஒரு பக்கம் கேர்ல்ஸ் ஒரு பாக்க எதிர் எதிரா உக்காருங்க..", என்றான்.அனைவரும் அவன் சொல்வது போல் உட்கார்ந்தனர்.

அவனும் உட்கார்ந்துகொண்டான்."இப்போ யாராச்சும் முதல்ல ஆரம்பிக்கலாம்.பாட்டு எந்த எழுத்துல முடிதோ அத முதல் எழுத்தா வச்சி பாடணும் இல்லனா அந்த எழுத்தின் வரிசையில் அடுத்த பாட்டு இருக்கனும் ஓகே.."என்று அவன் கட்டை விரலை உயர்த்தி கேட்க அனைவரும் ஓகே என்று கத்தினர்.

"இன்னொன்னு சொல்லிடறேன்..யார் தோத்து போறாங்களோ அவங்க ஜெயிக்கிற டீம் சொல்றத அப்படியே செய்யணும் சரியா "என்றான்.அதற்கும் அனைவரும் ஓகே என்றனர்."ஓகே..யார் ஸ்டார்ட் பண்றது", என்று தருண் யோசிக்க

"குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா"..

என்று அம்பிகா துவங்கினார்.
அனைவரும் அவர் குரலில் லயித்து இருக்க சம்யுக்தா மட்டும் அவரை முறைத்து கொண்டு இருந்தாள்.அவர் பாடியதும் அனைவரும் அவரை பாராட்டி கை தட்ட சம்யுக்தாவோ"ஏன்மா இப்பவும் கண்ணன் தான", என்றாள்."அவர் இல்லாம எதுவும் இல்லடி", என்றார் அம்பிகா வாஞ்சனையுடன்.

"ஓகே..இப்போ நீங்க தான் பாடணும்", என்று ஆண்களை பார்த்து சொன்னாள் தாரா.
அவர்கள் தா என்ற வார்த்தையில் பாடலை யோசித்துக்கொண்டு இருக்க "ம்ம்..சீக்கிரம்..", என்றாள் பிரணவீ.

பிரவீன் "தாண்டியா ஆட்டமும் ஆடா", என்று துவங்க ஆண்கள் அனைவரும் சேர்ந்து பாடினார்கள்.

"தாண்டியா ஆட்டமுமாட
தசராக் கூட்டமும் கூட

குஜராத் குமரிகளாட
காதலன் காதலிய தேட

அவள் தென்படுவாளோ
எந்தன் கண் மறைவாக
இன்று காதல் சொல்வாளோ
நெஞ்சோடு

அவள் எங்கே என காணாமல் வாட
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ".

ஆண்கள் முடிக்க பெண்கள் ளோ என்ற வார்த்தையில் பாடலை தேடிக்கொண்டு இருந்தனர்.தருண் இப்பொழுது அவர்களை கிண்டல் செய்ய தாரா பாடினாள்

"லாலி பப்பு லாலி பப்பு
போல் இனிக்கும் மனசு
ஜாலி டைப்பு பாட்டு
கேட்டா ஆடுகின்ற வயசு

என்னவளே என்னவளே
எங்கிருந்தாய் நீதான்
கனவினிலே கனவினிலே
காக்க வைத்தாய் நீதான்".

இப்படியே இவர்கள் மாற்றி மாற்றி பாடிக்கொண்டிருக்க ஆண்கள் ட வரிசையில் பாடவேண்டிய தருணம் வந்தது.அவர்கள் யோசித்துக்கொண்டு இருக்க பெண்கள் கவுன்டிங்கை ஸ்டார்ட் செய்து விட்டார்கள்.ஒன்னு..ரெண்டு என்று..பத்து முடிந்தும் ஆண்கள் கண்டுபிடிக்காமல் போக பெண்களே பாடினார்கள்.

"டிங் டாங்
கோயில் மணி
கோயில் மணி
நான் கேட்டேன்.

உன் பேர்
என் பெயரில்
சேர்ந்தது போல்
ஒலி கேட்டேன்.

நீ கேட்டது
ஆசையின் எதிரொலி

ஆ.. ஆ.. நீ தந்தது
காதலின் உயிர்வலி!",

என்று முடித்தனர்.பெரியவர்களுக்கு ஒரு சில பாடல்கள் தெரியவில்லை என்றாலும் ரசித்து விளையாடினர்.

பெண்கள் அனைவரும் எழுந்து டான்ஸ் ஆட ஆண்கள் முகத்தை தொங்க போட்டு உட்கார்ந்து இருந்தனர்.ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்காமல் தருண் "போதும் போதும் ரொம்ப பண்ணாதீங்க..பனிஷ்மென்ட் என்ன சொல்லுங்க ", என்றான் எரிச்சலாய்.

பெண்கள் அனைவரும் தீவிரமாக யோசிக்க "மச்சி இவளுங்க யோசிக்கிறதா பாத்தா..எங்கள தூக்கிட்டு பத்து ரவுண்ட் சுத்துங்கனு சொல்வாளுங்க போல", என்றான் பயந்து.

"என்ன மச்சி இப்படி கூடவா பண்ணுவாங்க ", என்றான் பிரவீன் மிரட்சியுடன்.

"சரி நான் செல்றேன்", என்று சம்யுக்தா சொல்ல அனைவரும் அவளை ஆர்வமாக பார்த்தனர்.

"தருண் அண்ணா", என்று அவள் ஆரம்பிக்க.."மச்சி நீ செத்த", என்று பிரவீன் அவன் காதில் சொன்னான்.தருண் அவள் என்ன சொல்ல போகிறாளோ என்று பயத்துடன் பார்த்து இருக்க "தருண் அண்ணா பாய்ஸ் சார்பா நீ தான் செய்யணும்..இப்போ சொல்ல மாட்டேன்..லாஸ்டா போகும்போது உன்னோட சீன் தான் எல்லாரும் பாக்கணும் சரியா", என்றாள்.

"அச்சச்சோ..பெரிய ஆப்பா இருக்கும் போலவே", என்று மிகவும் வருந்தினான்.அவன் முக பாவத்தை பார்த்து அனைவரும் சிரித்தனர்.

"நெக்ஸ்ட் டான்ஸ்..நேரம் குறைவா இருக்கிறதால நான் ஒரு ஐடியா வச்சி இருக்கேன்..ஓகே இப்போ முதல் ஜோடி கண்ணன் சம்யுக்தா ஸ்டேஜ்கு போங்க" என்றான்.

கண்ணனும் சம்யுக்தாவும் ஸ்டேஜிற்கு சென்றனர்.அவர்கள் சென்றதும் "இப்போ நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சாங் பாடணும்..பாடி முடிச்சதும் அதுக்கு டான்ஸ் ஆடணும் நான் சாங் பிலே பண்றேன்..ஓகேவா", என்றான்.

அனைவரும் கைதட்டி அவர்களை உற்சாக படுத்த கண்ணன் தான் பாட துவங்கினான்

"முதல் முறையாகா பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக என்னை ஆண்ட்ரே தோற்றேன்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்",

என்று அவன் தொடங்க அவனுடன் சம்யுக்தாவும் இணைந்து பாடினாள்.அவர்கள் இருவரும் சுற்றம் மறந்து பாடிக்கொண்டிருந்தனர்.இருவரின் காதலை அங்குள்ள அனைவருமே உணர்ந்தனர்.
அவர்கள் பாடிமுடித்ததும் அனைவரும் பலமாக கைதட்டினர்.பின் அதே பாட்டிற்கு இருவரும் இனைந்து ஆடினர்.அப்பொழுது அவனின் காதல் பார்வையிடனான தீண்டல் சம்யுக்தாவை என்னவோ செய்தது.இப்படியே அவனுடன் இணைந்தே இருக்க கூடாத என்று எண்ணினாள்.இது தான் காதலோ என்று எண்ணினாள்.அவர்கள் நடனமாடி முடித்ததும் அனைவரும் அவர்களை வாழ்த்தினர்.

"அடுத்த ஜோடி பிரணவீ பிரவீன்", என்றான் ஆஷிக்.அவர்கள் மேடை ஏற ப்ரவீனுக்கு என்ன பாடுவதென்றே தெரியவில்லை.அவன் அமைதியாய் இருக்கா பிரணவீ துவங்கினாள் அவனை பார்த்துக்கொண்டே

"நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா வார்த்தையில்லையே
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே",

என்று அவள் பாட ப்ரவீனும் இனைந்து பாடினான்.அதை பார்த்துக்கொண்டிருந்த அனைவர் கண்களிலும் கண்ணீர் பெருக்கு.பாடி முடித்ததும் மேடையில் வந்து அனைவரும் அவளை கட்டிக்கொண்டனர்.சம்யுக்தாவின் குடும்பத்திற்கும் தெரிந்தது அவளை ஏன் பிரவீன் திருமணம் செய்து இருந்தான் என்று கண்ணன் சொல்லி இருந்தான் இவர்களிடம்.

தருண் தான் நிலைமையை இலகுவாக்கினான்."சரி இப்போ டான்ஸ்", என்று லாலி பப்பு சாங்கை போட்டு விட்டான்.அவர்களும் ஜாலியாக நடனம் ஆடினர்.அனைவரும் கைதட்ட பின்பு கடைசி ஜோடியாக தருண் தாரா மேடையேறினர்.
தாரா தான் பாட துவங்கினாள்

"ஹே எஸ்கியூஸ் மீ
மிஸ்டர்.கந்தசாமி
ஹெய் எஸ்கியூஸ் மீ
மிஸ்டர்.கந்தசாமி
ஒரு காபி குடிப்போம்
கம் வித் மீ
ஹாட்டா கோல்டா
நீயே தொட்டு பாரு
போடி
போ டி",

என்று அவள் பாட தருணும் அவளுடன் இனைந்து பாடினான்.அவர்கள் இருவரும் அனைவரின் மனதை மாற்றவே இந்த பாடலை தேர்ந்தெடுத்தனர்.அவர்கள் நினைத்ததுபோல் பிரணவீயின் மீது இருந்த மனதை மறந்து இப்பொழுது நன்றாக என்ஜாய் செய்துகொண்டு இருந்தனர்.அந்த பாடலுக்கே அவர்கள் நடனமும் ஆடினார்கள்.அனைவரும் சிரிப்புடன் கைதட்ட கீழே இறங்க பார்த்தவர்களை சம்யுக்தாவின் குரல் தடுத்தது.

"ரெண்டு பேரும் அங்கேயே நில்லுங்க..அண்ணா உங்க டாஸ்க் சொல்றேன்னு சொன்னேன் தான..இப்போ செய்யலாம்..தாராவுக்கு ப்ரொபோஸ் பண்ணுங்க", என்றாள்.

தாரா அவளை பார்க்க சம்யுக்தா அவளை பார்த்து கண்ணடித்து சிரித்தாள்.தான் மனதை புரிந்த தோழி கிடைத்ததை நினைத்து சந்தோஷப்பட்டாள்.தருணிற்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. பின்பு தாராவின் முகத்தை பார்தவன் அவளின் எதிர்பார்ப்பை புரிந்து அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அலங்காரத்திற்கு வைத்திருந்த ஒரு ரோஜாவை பறித்து அவளை பார்த்து பாட துவங்கினான் தருண்

"மெய் நிகராட்டகள் ஆடிடும் போது
ஆயிரம் எதிரிகள் போர்களம் மீது
எந்தன் படையில் நீயும் இருந்தால்
அந்த வெற்றி எந்தன் காலடியில்

இணைய தொடரை இணைத்தே
மெய் காண்போமே
அழுதால் உடனே
நீ துடைப்பாய்
மனதில் நினைத்து
ஒரு சொல் சொல்லும்போதே
தொடங்கும் எதையும்
நீ முடிப்பாய்

நீயும் எந்தன் தனிமையே
அதை விட இனிமையே
இதய சுவரில் இறைவன் வரையும்
குறுநகையே

எந்தன் நண்பியே நண்பியே
நண்பியே…..ஏ…..
எனை திறக்கும் அன்பியே
நண்பியே…..ஏ…..
எந்தன் நண்பியே நண்பியே
நண்பியே…..ஏ…..
எனை இழக்கும் இன்பியே
இன்பியே………",

என்று அவன் பாடி முடிக்க அனைவருக்கும் இது அவன் தான என்று இருந்தது.அப்படி மனமுருகி பாடினான் காதலுடன் அவளுக்காக.அவன் கண்கள் மூடி பாடிக்கொண்டு இருக்க தாராவும் அவனை போல் மண்டியிட்டு அவனையே பார்த்திருந்தாள் கண்ணீருடன் அவன் காதலை முதல் முறை உணந்ததால்.அவன் பாடி முடித்து கண்களை திறக்க அவள் உடனே அவனை கட்டிக்கொண்டாள்.அவனும் அவளை கட்டிக்கொண்டான். அனைவரும் அவர்களை கைதட்டி வாழ்த்தினர்.

பின் அனைவரும் உண்டு தூங்க சென்றனர் அந்த நாளின் நினைவுகளை மனதில் பொக்கிஷமாக பதுக்கி.
 
Top