Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னோடு கைகோர்க்க 19

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
Sry frnds..romba late ah update potu iruken..type panna mudila..konjam work..idhu final epi...padichitu sollungha epdi irukunu..

உன்னோடு கைகோர்க்க 19

அந்த மாலை வேலையில் சில்லென்ற காற்றும் வண்ண வண்ண விளக்குகளின் அலங்காரங்களும் அந்த இடத்தையே அழகானதாய் காட்டியது.மெஹந்தி போடுவதற்காக அணைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.பெண்கள் மூவரும் அங்கு மேடை போன்று அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் அமர்ந்து இருந்தனர்.

"பொண்ணுங்களே வந்துட்டாங்க..இன்னும் என்ன பண்றிங்க நீங்க மூனு பேரும்", என்று கோதை பாட்டி குரல் கொடுத்தார் வீட்டை நோக்கி.

ஆண்கள் மூவரும் வந்து அவர் அவர் ஜோடி பக்கத்தில் சென்று அமர்ந்தனர்.அவர்கள் முகத்தை பார்க்க அனைவருக்கும் சிரிப்பாக இருந்தது.அதிலும் தருண் தான் திரு திருவென முழித்துக்கொண்டு இருந்தான்.

"என்ன எங்க மூஞ்சையே பாத்துட்டு இருக்கீங்க..மருதாணி போட்டு விடுங்க மூனு பேரும்", என்றார் கோதை.

என்ன தான் மெஹந்தி பங்க்ஷன் என்றாலும் அவர்கள் மருதாணியை தான் அரைத்து வைத்து இருந்தனர்.

பிரவீன் மருதாணி இட அவனுக்கு வாகாக அமர்ந்து கையை நீட்டி இருந்தாள் பிரணவீ. பாவம் தருணிற்கு தான் மருதாணி வைக்க தெரியவில்லை அவன் ஒவ்வொரு முறையும் வைக்கும்போதும் தாராவிடம் அடி வாங்கிக் கொண்டிருந்தான். கண்ணன் சம்யுக்தாவின் கையைப் பூ போல பிடித்து அழகாக மருதாணி வைத்துக்கொண்டு இருந்தான். அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.அனைவரும் இவர்களை கிண்டலும் கேலியும் செய்துகொண்டு இருந்தனர்.மூவரும் மருதாணி வைத்து முடித்ததும் "நாளைக்கு தெரியும் யார் ஜோடி பெஸ்ட் னு", என்று ஆஷிக் சொன்னான்.

"அண்ணா என்ன சொல்றிங்க..நாளைக்கு என்ன தெரியும்", என்று பயத்துடன் கேட்டான் தருண்..இன்று வாங்கிய அடியே போதும் என்று நினைத்து.

"காலைல கை கழுவிட்டு யாரோட கை நல்லா சிவந்து இருக்கோ அவங்க தான் பெஸ்ட் பேர் ", என்று அவன் தலையில் கல்லை தூக்கி போட்டான் ஆஷிக்.

"ரைட்டு..நாளைக்கு எனக்கு எங்கேஜ்மெண்ட் நடக்குமானு டவுட் தான் ", என்று அவன் தலையில் கைவைத்து அமர அனைவரும் சிரித்தனர்.

அனைவரும் உண்ட பிறகு தூங்க சென்றனர்.இன்று மூன்று ஜோடிகளும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.கண்ணன் சம்யுக்தாவுக்கு ஊட்ட அவர் அவர் அவர்கள் ஜோடிக்கு ஊட்டினர்.

தருண் என்ன தான் விளையாட்டு தனமாக இருந்தாலும் தாராவிற்கு பார்த்து பார்த்து உணவு கொடுத்தான்.தாரா அவனை காதலாக பார்த்துக்கொண்டு இருந்தாள்.அவனை அறிந்தவள் அல்லவா.

கண்ணன் சம்யுக்தாவிற்கு செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவ்வளவு காதல் இருக்க தான் செய்தது.ஆனால் அவன் அதை வெளி காட்டிக்கொள்ள வில்லை.அவன் முகத்தில் இருந்து எந்த உணர்வுகளையும் சம்யுக்தாவால் புரிந்துகொள்ள முடியவில்லை.

மறுநாள் விடியலுக்காக அனைவரும் காத்திருக்க பொழுதும் புலர்ந்தது அவர்களை சோதிக்காமல்.பெண்கள் மூவரும் அவர்கள் கைகளை சுத்தம் செய்ய அனைவரும் ஆர்வமாக காத்திருந்தனர்.

பிரணவீ தன் கையை முதலில் கழுவி இருக்க அவள் மருதாணி அந்தி வானம் போல் நன்றாக சிவந்து இருந்தது.அவள் பிரவீனை பார்க்க அவனும் அவளை தான் பார்த்திருந்தான்.

அடுத்து தாராவின் கையை பார்க்க அவள் கையும் அதே அளவு தான் சிவந்து இருந்தது.தருணிற்கு அவள் கையை பார்த்தபின்பு தான் உயிரே வந்தது போல் இருந்தது."எங்கேஜ்மெண்ட் நடக்கும்..கடுவுளே நன்றி", என்றான்.அவனை பார்த்து சிரித்தாள் தாரா.

சம்யுக்தா கையை கழுவி இருக்க அவள் கை அந்தி வான சிகப்பைவிட அதிக சிகப்பாக சிவந்து இருந்தது.அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.அனைவரும் அவளை வாழ்த்திவிட்டு சென்றனர். ஆனால் கண்ணன் எந்த உணர்வையும் முகத்தில் காட்டிக்கொள்ள வில்லை. அவள் மனம் மிகவும் வருந்தியது.

அதன் பின் அணைத்து வேலைகளும் துரிதமாக நடந்தது.மாலை நிச்சயதார்த்தம் என்பதால் அனைவரும் நிக்க நேரம் இல்லாமல் வேலை செய்துகொண்டு இருந்தனர்.

வீட்டிலே கல்யாணம் என்பதால் அனைத்து ஏற்பாடுகளும் வீட்டிலே நடந்தது.இனி இரண்டு நாட்களுக்கு எந்த வேலையும் செய்ய கூடாது என்று கண்ணனுக்கு கட்டளையிட்டார் ஜனார்த்தனன்.

அந்த இனிய மாலை பொழுதில் அனைவரும் கூடி இருக்க மேடையில் மூன்று ஜோடிகளும் நின்று இருந்தனர்.அவர்களை பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது பெற்றவர்களுக்கு.ஊரே அங்கு தான் இருந்தது.

கண்ணனும் சம்யுக்தாவும் ஆகாய நீல வண்ணத்தில் உடை அணிந்து இருந்தனர்.ப்ரவீனும் பிரணவீயும் மஞ்சள் நிறத்தில் உடை அணிந்து இருந்தனர்.தருணும் தாராவும் பேபி பிங்க் வண்ணத்தில் உடை அணிந்து இருந்தனர்.ஆண்கள் அனைவரும் ஷர்வாணியும் பெண்கள் அனைவரும் லெகங்கா அணிந்து இருந்தனர்.

நல்ல நேரம் பார்த்து மூன்று ஜோடிகளும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.பெரியவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.சிறியவர்கள் மனதில் சொல்ல முடியா சந்தோஷம்.ஊருக்கே விருந்து வைத்து தன் மனதை காட்டினார் ஜனார்த்தனன்.ஆதிசேஷனுக்கு அதில் அவ்வளவு பெருமை அவர் பெண்ணை நினைத்து.

ஆனந்தத்தில் அவர் கண்களில் கண்ணீர் வர "என்ன ஆச்சுங்க", என்று பதறியபடி அமராவதி கேட்க..

"ஒன்னும் இல்லை..அவ்ளோ சந்தோஷமா இருக்கேன்..நம்ப வீட்டு இளவரசியை நினச்சு", என்றார் சிறு புன்னகையுடன்.

"ஆமா அண்ணா..நம்ப பொண்ணு ரொம்ப சந்தோஷமா இருக்க போறா..", என்றார் அமரேந்திரன்.

"இப்போ தான் என் மனசு நிம்மதியா இருக்கு..கண்ணன் மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க கொடுத்துவைத்து இருக்கனும்", என்றார் அம்பிகா.அதை ஆமோதித்தனர் மற்றவர்கள்.

அன்றைய இரவு அனைவருக்கும் தூக்கமில்லா இரவாக சென்றது.பெரியவர்கள் அனைவரும் கல்யாண வேலையை கவனிக்க சிறியவர்கள் அனைவரும் கல்யாண கனவில் மிதந்து கொண்டு இருந்தனர் சம்யுக்தாவை தவிர.

என்ன தான் கண்ணனின் அன்பு பிடித்து இருந்தாலும் காதல் கொண்டு இருந்தாலும் அவள் மனதின் ஓரத்தில் நவாவின் நினைவு போகவே இல்லை.ஏதோ மனதில் பாரமாகவே உணர்ந்தாள்.நான் தவறு செய்கிறேனோ என்று ஒரு மனது யோசிக்க, இல்லை இதுதான் நிஜம் இது எனக்காக கடவுள் கொடுத்த வாழ்வு என்று இன்னொரு மனம் கூற அவள் தவித்து போனாள்.இப்படியே அந்த இரவை கழிக்க அதிகாலை வேலையில் பெண்களை எழுப்பி குளிக்க வைத்து அலங்காரம் செய்துகொண்டு இருந்தனர் உறவுக்கார பெண்கள்.

ஆண்களும் பட்டு வேஷ்டி சட்டை என்று காண்பீராமாக கிளம்பி இருந்தார்கள்.அய்யர் ஆண்களை மேடைக்கு வர சொல்ல மூவரும் வந்து அமர்ந்தனர்.சிறிது நேரம் செல்ல பெண்களை அழைத்தார் அய்யர்.பிரணவீயும் தாராவும் அறையில் இருந்து வர சம்யுக்தாவின் சேலை காலில் மாட்டிக்கொள்ள அவள் சற்று நின்றாள்.அந்த நேரம் பார்த்து வைஷு கீழே எண்ணெயை ஊற்றிவிட்டாள் அவள் விழ.இதை பார்த்த பார்வதி ஓடி வந்து சம்யுக்தாவை நிறுத்தினார்.பாத்துமா யாரோ எண்ணெயை ஊத்திட்டாங்க போல என்று வைஷுவை முறைத்துகொண்டே சம்யுக்தாவை அனுப்பி வைத்தார்.

மூன்று ஜோடிகளும் மேடையில் அமர்ந்து இருக்க அதுவும் பெண்கள் கூற சேலையில் இருக்க பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தனர்.

அந்த நேரம் பளார் என்று வைஷு கன்னத்தில் அறைந்திருந்தார் பார்வதி.அவள் அதிர்ச்சியுடன் தாயை பார்க்க "என்ன பாக்குற..பிச்சிடுவேன்..எவ்ளோ தான் உனக்கு புத்தி சொல்றது..புரிஞ்சிக்க மாட்டியா..கண்ணனை நீ உண்மையா காதலிச்சு இருந்தா நானே என் உயிர கொடுத்தாவது கல்யாணம் செஞ்சி வச்சி இருப்பேன்.வீம்புக்கு பண்ணிட்டு இருக்க நீ..உன் வாழ்க நல்லா இருக்க வேணாமா..உன்ன பிடிக்காத ஒருத்தனோட எப்படி வாழ முடியும்..கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு..உனக்காக ஒருத்தன் கண்டிப்பா பொறந்து இருப்பான்..இங்க கூட இருக்கலாம்..", என்று அவர் சொல்ல.."அம்மா ", என்று ஆச்சர்யமாக பார்த்த வைஷுவிடம் "புரிது..நானா பேசுறேன்னு கேக்குற..எனக்கும் ஆச இருந்தது என் பொண்ண கண்ணன் போல ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு..ஆனா அவனுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லையே..அதுக்காக பிடிக்காதவனுக்கு என் பொண்ண எப்படி கொடுப்பேன்..யோசிச்சி பாரு..அம்மா சொல்றது புரியும்..அப்பாக்கு இதெல்லாம் தெரிஞ்சது அவ்ளோதான்", என்று அவர் சொன்னதும் அனைத்தையும் மறந்து "அப்பா எப்போ வந்தாங்க மா", என்றாள் சந்தோஷமாக.

"விடிய காலையில் வந்தாரு..லீவ் கிடைக்கல போல..அங்க தருண் பக்கத்துல நிக்கறாங்க பாரு", என்று பார்வதி சொன்னதும் வைஷு நான்கு வயது சிறுமியை போல துள்ளி ஓடினாள் தன் தந்தையிடம்.

அதை பார்த்துக்கொண்டு இருந்த பார்வதிக்கு மனது வலித்தது..இப்படி சிறு பிள்ளை போல் குணம் கொண்டவளை நான் எப்படி மாற்றி இருக்கிறேன் என்று வருந்தினார்.

குறித்த நல்லா நேரத்தில் ஆண்கள் தங்களின் ஜோடிகளுக்கு மங்கள நாணை பூட்டினர்.அனைவர் கண்களிலும் ஆனந்த கண்ணீர்.அணைத்து சம்பிரதாயங்களும் முடிய இரவு முற்றத்தில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.இன்று நல்லா நேரம் இல்லை என்பதால் அனைவரும் நாளை தான் முதலிரவு என்று முடிவுசெய்து இருந்தனர்.

"உங்க எல்லாருக்கும் சந்தோஷம் தான..கல்யாணம் நல்லபடியா நடந்தது..", என்று கேட்டார் ஜனார்த்தனன்.

"என்னப்பா இப்படி கேட்டுட்டீங்க..ஊரே வந்து நல்லா நடத்திக்கொடுத்து இருக்காங்க..இதுக்கு மேல என்ன வேணும்", என்றார் ஆதிசேஷன்.

"ஆமாப்பா..என் பொண்ணு கொடுத்து வச்சவ..உங்க வீட்டுக்கு மருமகளா வர", என்றார் அம்பிகா.

"என்ன அண்ணி இப்படி சொல்றிங்க..நாங்க தான் கொடுத்து வச்சவங்க..சம்யுக்தா எங்க வீட்டுக்கு வர..", என்றார் துளசி.அதை கோதை பாட்டியும் ஆமோதித்தார்.

"உங்க வீட்டு இளவரசி இனி எங்க வீட்டு மகாராணி", என்றார் துளசி சம்யுக்தாவை கட்டிக்கொண்டு.அதில் அனைவருக்கும் ஆனந்தம்.

காலையில் இருந்து அதே சட்டையை அணிந்து இருப்பது ஒரு புழுக்கத்தை தர அதை கழட்டிகொண்டே தன் அறைக்கு சென்றான் கண்ணன்.அப்பொழுது அவன் சட்டை பாக்கட்டில் இருந்து ஏதோ கீழே விழ அதை கவனிக்காமல் அவன் சென்றுவிட்டான்.அதை பார்த்த சம்யுக்தா துளசியின் அணைப்பை விட்டு ஓடிச்சென்று அதை கையில் எடுத்து சுற்றி சுற்றி அதை பார்த்தாள்.பின்பு அவள் கத்தி அழ அனைவரும் என்னவோ ஏதோ என்று அவள் அருகே வர அதற்குள் அவள் கண்ணனை தேடி அவன் ரூமிற்கு சென்றுவிட்டாள்.

"இது என்ன", என்று அவள் கண்ணீருடன் கேட்க.

ஒரு நிமிடம் அதிர்ந்தவன் பின்பு "தெரியல..ஜிமிக்கி", என்றான்.

"யாரோடது ", என்றாள்.

"தெரியாத மாரி கேக்குற..உன்னோடது தான", என்றான் சலிப்பாக.

"அப்போ நவா", என்று அவள் கேட்க.."உன் முன்னாடி தான நிக்குறேன்", என்றான் கோவமாக.

அவன் சொன்ன அடுத்த நிமிடம் அவனை இருக்க கட்டிக்கொண்டு தேம்பி தேம்பி அழுதாள் சம்யுக்தா.அவள் அழுவதை பார்த்தவன் மனது தாங்காமல் "என்ன ஆச்சுடி எதுக்கு அழற", என்றான்.

அவள் அழுகையை நிறுத்தவே இல்லை."சொல்லுடி..நீ அழுதா எனக்கு மனசு தாங்காது", என்றான் வலியுடன்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்களை துடைத்துக்கொண்டு பெருமூச்சை விட்டு எதையோ தேடினாள். "நான் கேட்டுட்டு இருக்கேன்..நீ என்ன தேடிட்டு இருக்க", என்றான் புரியாமல்.

கையில் ஒரு கண்ணாடி ஸ்கேல் கிடைக்க அதை வைத்து அவனை அடித்தாள்."ஹேய்..வலிக்குதுடி..அடிக்காத..விடு..எதுக்கு இப்போ அடிக்கிற", என்றான் வலியுடன்.

"அன்னைக்கு என்ன காப்பாத்திட்டு எங்க போனீங்க..நான் இவ்ளோ நாளா உங்கள மனசுல வச்சிட்டு கல்யாணமே பண்ணிக்காம வீட்ட விட்டு ஓடி வந்து..அண்ணி தாரா கிட்ட லான் திட்டு வாங்கி..இதுல உங்க லவ் ஒரு பக்கம்..எவ்ளோ அழுது இருப்பேன் தெரியுமா", என்றாள் அழுகையுடன்.

அவள் அரைகுறையாக சொன்னாலும் அவள் சொல்வது அவனுக்கு புரிந்தது..அவளை அனைத்தவன் "அப்போ நீயும் என்ன மாறியே லவ் பண்ணிட்டு தான் இருந்தியா..அன்னைக்கு உன்ன காப்பாத்த தான் புடிச்சேன்..ஆனா உன்ன பாத்ததும் என் மனசு என்கிட்ட இல்லை..அதுக்குள்ள எல்லாரும் வந்துட்டாங்க..அப்புறம் ரொம்ப முக்கியமான வேலையா என் பிரண்ட் கூட வந்தேன் உங்க அண்ணாவை பாக்க..பிரணவீ விஷயமா தான்.அப்போ அவங்க மேரேஜ் ஆனா புதுசுல..அதான் போய்ட்டேன்..ஆனா உன் முகம் என் மனச விட்டு போகவே இல்லை.வீட்டுக்கு வந்து பாத்த அப்போ தான் உன்னோட கம்மல் என் பாக்கட்டுக்குள்ள இருந்தத பார்த்தேன்.மறுபடியும் உன்ன தேடி வரலானு நெனச்ச அப்போ தான் ஸ்கூல் ஓபன் பண்ணி கொஞ்சம் வேலை..அப்புறம் என்ன..என்ன தேடி நீயே வந்துட்ட..உன்ன இங்க பாத்த அன்னைக்கு நான் அவ்ளோ சந்தோஷ பட்டேன்.அப்போ கூட என் லவ் எனக்கு புரியல..தருண் கூட நீ கிளோஸா பேசின அப்போ தான் உன்ன யாருக்கும் விட்டு கொடுக்க முடியாதுனு தெரிஞ்சிகிட்டேன்..உங்கிட்ட ஹார்ஷா பிஹேவ் பண்ணேன்..சாரிடி..அப்புறம் அன்னைக்கு மாரிகிட்ட இருந்து உன்ன காப்பாத்தி கூட்டிட்டு வந்து உனக்கு காய்ச்சல் போக அந்த அளவுக்கு பண்ணவேண்டியதா போச்சு..ஆனா என் மனசுல என் பொண்டாட்டிய நெனச்சி தான் நான் செஞ்சேன்.அத நீ தப்பா பேசுனதும் கோவத்துல நானும் பேசிட்டேன்.மேரேஜிக்கும் நீ சம்மதிக்கல அதுவும் ஒரு கோவம்.அதான் உன் முகத்தை கூட பாக்கல பேசாம இருந்தேன்..ஆனா இப்போ தான் புரிது நீ என்ன மனசுல வச்சிட்டு தான் என்ன வேணான்னு சொன்னேன்னு..சாரிடி", என்றான் கெஞ்சலாக.

"எனக்கு தான் உங்கள தெரியாது..உங்களுக்கு என்ன தெரியும் தான..அப்போ ஏன் சொல்லல..", என்றாள் குற்றமாக.

"அது ஒரு ஜஸ்ட் ஹெல்ப்..அத ஏன் சொல்லிகாமிக்கணும்னு நெனச்சி விட்டுட்டேன்..நீ அத உன் வாழ்க்கையா நெனச்சி வாழ்ந்துட்டு இருப்பனு நெனச்சிக்குட பாக்கல ", என்றான் வலியுடன்.

"உங்க பேர் என்ன", என்றாள் அவனை முறைத்துக்கொண்டு.

"நவநீத கண்ணன்", என்றார் கோதை பாட்டி.

அதை கேட்டு இருவரும் விலகி நிற்க அங்கு குடும்பமே அவர்களுக்காக நின்று இருந்தது.சம்யுக்தா அழுதுகொண்டே வர அவர்களும் அவள் பின்னே வந்துவிட்டார்கள்.இவர்கள் இருவரும் சுற்றத்தை மறந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

பிரணவீயும் தாராவும் சம்யுக்தாவை கட்டிக்கொண்டு முத்தமிட்டு அவளை சுற்றினார்கள்.பெரியவர்களுக்கு அவர்கள் பேசியதிலே அனைத்தும் விளங்கியது.சம்யுக்தாவை நினைத்து ஒரு மனம் வருந்தினாலும் இப்பொழுது அவள் சந்தோஷமாக இருப்பதை நினைத்து அவர்கள் சந்தோஷ பட்டார்கள்.

"சரி சரி..கிழ போவோம் வாங்க..", என்றார் ஜனார்த்தனன்.

அனைவரும் அவர்களுக்கு தனிமை அளித்து விட்டு செல்ல திரும்பி வந்த பிரணவீ "எப்படியோ மனசுல நெனச்சவரோட கைகோர்த்துட்ட", என்று அவர்கள் கை கோர்த்து நின்று இருப்பதை பார்த்து சொல்லிவிட்டு சென்றாள்.

தங்கள் கைகளை பார்த்தவர்கள் புன்னகையுடன் கட்டிக்கொண்டனர்.

"அப்போ உனக்கு நவாவ தான் பிடிக்குமா", என்றான் கண்ணன்.

"எனக்கு எப்பவும் கண்ணனை தான் பிடிக்கும்..என் நவநீத கண்ணனை", என்று அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவனும் சிரித்துகொண்டே அவள் நெற்றியில் தன் இதழை பதித்தான்.

"எப்பொழுதும் உன்னோடு கைகோர்க்க", என்று வருந்திக்கொண்டு இருந்தவள் இன்று அவனோடு கைக் கோர்த்து அவனின் அணைப்பில் நின்றிருந்தாள் மகிழ்ச்சியுடன்.

முற்றும்....
 
Super epi dear.
Katha nalla viruvirupa irrunthathu.
Aana mudinji pocha?parvathi ,Vaishu manamatrum nalla irruku. Tharun as usual nalla comedy.
Nalla oru sugamana kathal kathai.Tq author ji.
Come soon with another super story like this.we are eagerly waiting for your next season.
 
Super epi dear.
Katha nalla viruvirupa irrunthathu.
Aana mudinji pocha?parvathi ,Vaishu manamatrum nalla irruku. Tharun as usual nalla comedy.
Nalla oru sugamana kathal kathai.Tq author ji.
Come soon with another super story like this.we are eagerly waiting for your next season.
Tnk u so much dear..last varaikum enoda story kuda travel pannadhuku..unga comments dhan ennoda energy booster..nega ilama indha story ah indha alavuku kondu poi iruka maten..onnu kekalama..ending unghaluku pudichu irundhadha..
 
Tnk u so much dear..last varaikum enoda story kuda travel pannadhuku..unga comments dhan ennoda energy booster..nega ilama indha story ah indha alavuku kondu poi iruka maten..onnu kekalama..ending unghaluku pudichu irundhadha..
Feel good story ku ending ippadi than irrukum. Ippadi irrunthal than fulfill aagum. Mudivu ellavarukum theriyum aanal neega katha kondu pona vitham than mukkiyam . Athu neega yematravillai. Arumaiya kondu poneego.first few epi la irrunthu last varum pol nalla mature da irrunthathu ungada katha.so dont worry keep up your good work. All the best dear.
 
Feel good story ku ending ippadi than irrukum. Ippadi irrunthal than fulfill aagum. Mudivu ellavarukum theriyum aanal neega katha kondu pona vitham than mukkiyam . Athu neega yematravillai. Arumaiya kondu poneego.first few epi la irrunthu last varum pol nalla mature da irrunthathu ungada katha.so dont worry keep up your good work. All the best dear.
Tnk u so much dear ?
 
Top