Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் அழகிய தேடல் நான் ....02

Advertisement

niranjana subramani

Well-known member
Member
உன் அழகிய தேடல் நான்...02

“ அழகென்ற
சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா
உந்தன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா

அழகென்ற சொல்லுக்கு முருகா

சுடராக வந்த வேல் முருகா கொடும்
சூரரை போரிலே வென்ற வேல்
முருகா”

என பாட்டு காலை ஆறு மணிக்கு நந்தன் இல்லம் என்ற பெயர் பொறிக்கப்பட்ட அந்த பிரம்மாண்ட வீட்டின் மூலை முடுக்கு என அனைத்திலும் எதிரொலிக்கும் வண்ணம் இசைத்துக்கொண்டிருக்க அந்த வீட்டில் இருந்த அனைவரும் பரபரவென குளித்து பூஜை அறைக்கு வந்தனர் ஒருவரைத்தவிர.

இந்த வீட்டின் தலைவர் வேதானந்தன் பூஜை அறையில் பூஜையை ஆரம்பிக்க அவர் மகன் மகள் மருமகள் மருமகன் பேரன் பேத்திகள் என அனைவரும் பூஜை அறைக்கு வந்தனர்.

அவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அனைவர்க்கும் தீபாராதனை காட்டிய வேதானந்தன் தீபாராதனை தட்டுடன் வேகமாக ஒரு அறையினுள் நுழைந்தார். அவர் திரும்பி வருவதற்குள் நந்தன் குடும்பம் பற்றி பார்த்துவிடலாம்.

எழுபத்தி எட்டு வயதை கடந்தும் இன்னும் முதுமையில் இளமையாக இருக்கும் வேதானந்தன் இந்த சென்னையில் விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களின் வரிசையில் முதல் ஐந்து இடத்திற்குள் இருப்பவர். இவர் மனைவி கஸ்தூரி இறந்து பதினைந்து வருடங்கள் ஆகிறது.

வேதானந்தன் குடும்பம் விவசாய குடும்பம் ஆனாலும் அவரின் அயரா முயற்சியினால் சென்னையில் இன்று நந்தன் டெக்
ஸ்டைல்ஸ் என பத்து கிளைகளும் நந்தன் மில்ஸ் என ஆடை உலகத்தில் பெரிய சாம்ராச்சியத்தையே உருவாக்கிறுக்கிறார்.

வேதானந்தனின் நண்பன் ராஜனின் தங்கை கஸ்தூரியை காதலித்து மணந்து இவர்களுக்கு மேகனந்தன் என்ற மகனும் நளாயினி என்ற மகளும் உள்ளனர்.

மேகனந்தன் அவர் மனைவி மாதுரி. இவர்களுக்கு மூத்த மகன் ஜெக நந்தன், பின் இரட்டையர்களான விஜய நந்தன் பாலநந்தன் என மூன்று மகன்களும் நிவேதிதா என்ற மகளும் உள்ளனர்.

வேதானந்தன் மகள் நளாயினியும் அவர் கணவர் சரவணனும் கோவையில் உள்ளனர். சரவணன் அங்கு மாவட்ட ஆட்சியராக உள்ளார். இவர்களுக்கு ஒரே மகள் வித்யா விஜயநந்தனின் மனைவி.

இன்று கஸ்தூரியின் பதினாறாம் ஆண்டு நினைவு நாள் என்பதால் குடுமபத்தினர் அனைவரும் இங்கு உள்ளனர்.

“ என்னப்பா இன்னைக்கு கூட அண்ணன் நம்மளோட சேர்ந்து இருக்க கூடாதா??” என நிவேதா மேகனந்தனிடம் வினவ

“ ஹ்ம்ம் அவன் சேர்ந்து இருக்குறமாதிரியா இங்க எல்லாம் நடக்குது” என விஜயநந்தனையும் வித்யாவையும் முறைத்துக்கொண்டே பேசிய மாதுரி தொடர்ந்து

“ ஏதோ என் பிள்ளை இந்தமட்டு நம்மளோட ஒரே வீட்டுல இருக்குறானேன்னு சந்தோசப்படு. எப்போ பார்த்தாலும் அவன் என்ன பண்ணுறான் ஏன் இப்படி இருக்கான்னு கேள்வி கேட்காம” என நிவேதாவிடம் எறிந்த விழுந்த மாதுரியிடம்

“ அண்ணி இந்த ஜாடை பேசுற வேலை எல்லாம் வேணாம். இங்க உங்க மூத்த பையனை நாங்க என்ன பண்ணிட்டோமா??.... சொந்த அப்பத்தாவுக்கு சாமி கும்புடனுமே குடும்பமா இருக்கனும்ன்னு இல்லாம அந்த ரூம்ல உட்கார்ந்துகிட்டு இன்னும் கீழ வரல. இந்த வயசுல அப்பா ஓடுறாரு உங்க மூத்த பையன தாங்குறதுக்கு.

ஏன் அவன் கீழ இறங்கி வந்தா என்ன குறைஞ்சுடுவானமா??... அதை கண்டிக்க மாட்டீங்க. சும்மா என் மகளை எதுக்கு முறைக்குறிங்க” என நளாயினியும் எகிறினர்

“ ஏன் என் மகன் இப்படி குடும்பத்தோட ஒட்டாம இருக்குறதுக்கு யாரு காரணம்ன்னு உங்களுக்கு தெரியாதாக்கும்” என மாதுரியும் சீற

“ ஆமா உங்க மகன் அதுக்கு முன்னாடி மட்டும் அப்படியே குடும்பத்தோட கொஞ்சி குலாவிட்டான். இப்போ இப்படி யிருக்க நாங்க தான் காரணம்” என நளாயினி நொடிக்க

அதற்குள் இவர்களின் சண்டைக்கு காரணமானவனும் இந்த நந்தன் இல்லத்தின் முதல் வாரி
சும் நம் கதையின் நாயகனுமான ஜெக நந்தனின் அறையில் இருந்து வெளியே வந்தார் வேதானந்தன். அவரை கண்டவுடன் அனைவரும் அமைதியாக.

“ அப்புறம் எல்லாரும் தயாரா இருங்க பத்துமணிக்கு கோவிலுக்கு போகணும்” என செய்தியா அல்லது கட்டளையா என பிரித்தறிய முடியதா குரலில் கூறிய வேதானந்தனிடம் அனைவரும் தலை ஆட்ட

“ மாமா நம்ம ஜெகா….” என தயங்கி கேட்ட மாதுரியிடம்

“ உன் மகனை பத்தி தெரியாத. அவன் இன்னைக்கு மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டான் போங்க போய் கிளம்புங்க” என கூறிவிட்டு அவரின் அறைக்கு சென்றுவிட்டார்.

எட்டு மணி அளவில் உணவு மேஜையில் அனைவரும் அமர்ந்திருக்க தனது அழுத்தமான காலடிகளுடன் வெள்ளைநிற சட்டையும் கருப்பு நிற பேண்டும் கோட்டும் அணிந்து வேக நடையுடன் தனது அறையில் இருந்து வந்துகொண்டிருந்தான் ஜெக நந்தன்.

ஜெக நந்தனின் கூர்மையான பார்வையும் அழுத்தமாக மூடி இருக்கும் உதடும் இறுக்கமான முக பாவனையும் அனைவரையும் அவனிடம் இருந்து ஒரு எட்டு தள்ளி நிறுத்த அவனின் முக அமைப்பு அனைவரையும் ரசிக்க வைக்கும் ஜெக நந்தன் யாரையும் கவனித்ததில் கொள்ளாது நேராக வேதனந்தனிடமும் மாதுரியிடம் மட்டும் கூறிக்கொண்டு கிளம்ப,

“ சாப்பிட்டு போகலாம்ல ஜெகா” என கெஞ்சிய பாவனையில் கேட்ட மாதுரியிடம் வேண்டாம் என்ற ஒற்றை பதிலை அழுத்தமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

வீட்டில் இருந்து கிளம்பிய ஜெக நந்தன் தனது காரில் அமர

“ சார் இன்னைக்கு…..” என எதோ கூற வந்த ஜெக நந்தனின் PA மற்றும் டிரைவரான வினோத்திடம்

“ இன்னைக்கு எல்லாம் ப்ரான்ச்சசோட குடோனுக்கும் போகணும். அதானே???.... முதல்ல வளர் நகர் பிரான்ச்க்கு போ வினோத்” என ஜெக நந்தன் கூற வேகமாக காரை இயக்கினான் வினோத்.

ஜெகநந்தன் தொழில் மற்றும் வீட்டில் ஜெகா. நந்தன் இல்லத்தின் முதல் வாரிசு முப்பது வயதை அடைந்த வாலிபன். தனது பதிமூணு வயசு வரை மற்ற குழைந்தைகள் போல சந்தோசமாக இருந்த ஜெகாவிற்கு அதன் பின் தெரிந்த தன் தந்தையின் மறுப்பக்கத்தால் தனக்குள் இறுகி அவரை அடியோடு வெறுத்து ஒதுங்கி நின்றுகொண்டான் மேகனந்தனிடம்.

அதன் பின் ஒரு வருடத்தில் தன் பாட்டி கஸ்தூரியின் இழப்பு இன்னும் அவனை இறுக செய்ய தன் தாய் மாதுரிக்காகவும் தாத்தாவுக்காகவும் அங்கிருந்தவன் பன்னிரெண்டாம் வகுப்பை முடிந்தவுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டான் படிப்பை காரணம் காட்டி.

பின் அங்கையே படிப்பை முடித்து சொந்தமாக தொழில் ஒன்றை நிறுவி அதனை சிறப்பாக நடத்த கடந்த நான்கு வருடங்களுக்கு முன் தனது குடும்ப தொழிலில் சரிவு ஏற்பட தாத்தா மற்றும் அன்னையின் கெஞ்சலுக்கு இணங்கி தனது உடன்பிறப்புகளின் தடுமாற்றத்தை போக்க குடும்ப தொழிலான நந்தன் textilesஐ கையில் எடுத்தான்.

அதன் பின் தொழிலில் ஏறுமுகத்தை மட்டும் கண்டவன் ஆறு மாதத்திற்கு முன் மீண்டும் தனது குடும்பத்தால் ஒரு அவமானத்தை சந்திக்க மேலும் தன்னை இறுக்கி குடும்பத்தில் இருந்து இன்னும் விலகி கொண்டான்.

மாலை ஆறு முப்பது அளவில் ஜெகா வினோத்திடம்,

“ வினோத் இப்போ மணி ஆறு முப்பது ஆச்சு. இன்னும் கம்பன் நகர் அப்புறம் வைகை நகர் குடோன் மட்டும் தான் இருக்கு நீ வைகை நகர் குடோன்க்கு கேப் புக் பண்ணி போய் ஸ்டாக் செக் பண்ணு. நான் கம்பன் நகர் கிளம்புறேன்” என கூறிவிட்டு தனது காரில் அழகம்மாள் இருக்கும் கம்பன் நகர் குடோனிற்கு சென்றான்.

மாலை ஆறு முப்பது மணி அளவில் குடோனில் இருந்த அழகியிடம் வந்த மாணிக்கம், “ அழகு” என அழைக்க

“ என்ன அண்ணே??... இப்போவே மணி ஆறு முப்பது ஆச்சு பெரிய சார் இன்னைக்கு வரலையா??.. வீட்டுக்கு போலாமா??...” என பரபரப்புடன் கேட்ட அழகம்மாளிடம்

“ அது இல்ல அழகு. சார் ஏழு மணிக்கு வந்துடுவாராம் supervisor மட்டும் இருந்தா போதும்ன்னு சொல்லிட்டாரு”

“ அப்பன்னா நான் கிளம்பட்டுமாண்ணா??”

“ இல்ல இரு அழகு. எனக்கு ஒரு உதவி மட்டும் செய்மா??”

“ என்ன உதவிண்ணா??”

“ என் பாப்பாவுக்கு உடம்பு முடியலையாம் அதான் என்னனு ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடுறேன்மா. அதுவரை நீ இங்க இருக்கியா??. சார் வரதுக்குள்ள வந்துடுவேன்”

“ அண்ணா நானா!!... மத்த வேற யாரையாவது இருக்க சொல்லலாம்ல” என தயங்கி கேட்ட அழகம்மாளிடம்

“ இல்லாம மத்த யாரையாவது இருக்க சொன்னா ஒவ்வொருத்தரும் ஒரு காரணம் சொல்றாங்க. சிலரு நான் வர லேட் ஆச்சுன்னா சார் கேள்வி கேட்டு எங்களுக்கு தெரியலைனா வேலை போயிடும்னு பயப்புடுறாங்க. நீனா கொஞ்சம் தெளிவு. அதான் ஆனா சார் வரதுக்குள்ள நான் வந்துடுவேன். நீ இரு. சரியா??....” என கேட்ட மாணிக்கத்திடம்

“ ஏதே!!!... நான் தெளிவா!!... ரைட்டு விடு. அண்ணே நீ எப்போ வேணும்ன்னாலும் வா. ஆனா சரியா எட்டுமணிக்குள்ள வந்துடு இல்ல என் வேஷம் கலஞ்சுடும்” என புலம்பலுடன் உளறிய அழகம்மாளிடம்

“ என்ன?? என்ன வேஷம்??” என கேட்ட மாணிக்கத்திடம்

“ வேஷமா!!!.. என்ன என்ன வேஷம்??” என பத்தட்டதுடன் கேட்ட அழகம்மாளிடம்

“ நீதானே சொன்ன அழகு”

“ நானா!!... நா…. நா…. வேஷம்ன்னு சொல்லல. ஹ்ம்ம்… ஹான் கே….சம்…. கேசம் என்னோட முடி… முடி… அதான் கேசம் கலஞ்சுடும்ன்னு சொன்னேன்”

“ முடியா??” என மாணிக்கம் ஏற்கனவே முன் முடி அனைத்தும் கலைந்து பஞ்சுமிட்டாய் போல் சுருண்டு இருந்த அழகம்மாள் தலையை சுட்டுவிரலால் காட்டி

“ இது இதுக்கு மேல கலஞ்சுடும் கவலை படுறியா??” என கேட்ட மாணிக்கத்திடம்

“ அண்ணே உனக்கு உன் பாப்பாவை பார்க்க போற எண்ணம் இல்லையா என்கிட்டே அரட்டை அடிச்சுகிட்டு இருக்க” என கேட்ட அழகம்மாளிடம்

“ ஹ்ம்ம் ஆமா அழகு நேரம் ஆச்சு நான் போயிட்டு வரேன் மத்தவங்க இப்போ கிளம்பிடுவாங்க. நீ பார்த்து பத்தரமா இரு நான் போயிட்டு வந்து சார் வந்துட்டு போன அப்புறம் நானே உன்னைய வீட்டுல விடுறேன். அதுக்குள்ள தனியா போக வேணாம் சரியா”

“ ஹ்ம்ம் சரி ஆனா நான் எட்டு மணி ஆஹிட்டா வீட்டுக்கு போயிடுவேன் சொல்லிட்டேன்”

“ சரி சரி வரேன்” என கூறிவிட்டு மாணிக்கம் கிளம்பிவிட அதன் பின் அங்கிருந்த அனைவரும் ஒவ்வொருவராக கிளம்பிவிட அழகம்மாள் மட்டும் அங்கிருந்த supervisor அறையில் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.

‘ போச்சு போச்சு இந்த மாணிக்கம் அண்ணனால மட்டும் லேட்டாகி பதினொரு மணி ஆச்சு என் மேக் அப் எல்லாம் கலஞ்சுடும் நான் அதுக்குள்ள வீட்டுக்கு போயிடனும் முருகா’ என வேண்டுதலுடன் அமர்ந்திருந்தாள். சிறுது நேரத்தில் கண்ணயர மேஜையில் அப்படியே உறங்கிவிட்டாள்

அழகம்மாள் இருக்கும் குடோனின் வாசலில் இருந்த வாட்ச்மன் வேலு யாருக்கோ போன் செய்ய மறுமுனை இணைப்பு எடுக்க பட்டவுடன்

“ சார் நான் வேலு பேசுறேன் சார். கம்பன் நகர் நந்தன் textiles குடோன் வாட்ச்மன்” என வேலு கூற

மறுமுனையில் இருந்த ஆண் குரல்,

“ ஏன்யா அப்டியே உன் ஜாதகத்தையும் சொல்லேன்” என கடுப்படிக்க

“ சார்” என பம்பினான் வேலு.

“ பின்ன என்னய்யா இந்த நேரத்துல வேலுன்னா நீதான்னு எனக்கு தெரியாதா. சரி சொல்லு என்ன அங்க எல்லாம் முடிஞ்சுச்சுடுச்சா”

“ ஹ்ம்ம் முடுஞ்சுடுச்சு சார் மாணிக்கத்தை அவன் வீட்டுக்கு அவன் குழந்தைக்கு முடியலைன்னு சொல்லி அனுப்பிருக்கேன் எப்படியும் போற வழில நம்ம ஆளுங்க அவனை ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடுவாங்க. இப்போ இங்க நான் மட்டும் தான் சார் இருக்கேன். இன்னும் ஜெகா சார் வரல அவர் வந்தவுடன் நான் என்ன சார் செய்யட்டும்” என வேலு கேட்க

“ நீ ஒன்னும் செய்ய வேணாம்.
அது……”

“ அப்போ நான் வீட்டுக்கு கிளம்பட்டுமா சார்”

“ சரிப்பா வேலு நீ வீட்டுக்கு போயிட்டு நல்லா தூங்கிட்டு காலையில நாலு இட்லியும் தேங்காய் சட்னியும் சாப்பிட்டு பொறுமையா வாப்பா” என மறுமுனை நக்கலுடன் கூற

“ சார்” என தயங்கினான் வேலு

“ பின்ன என்னய்யா நீ வீட்டுக்கு கிளம்பி போறதுக்கா கை நீட்டி காசு வாங்குன”

“ இல்ல சார்”

“ அப்போ சொல்றதை கவனி. ஜெகா வர வழில என் ஆட்கள் அவனை மெதுவா வண்டியோட தட்டி மயக்கமா அங்க கொண்டு வருவாங்க.”

“சார்…..” என இழுத்த வேலுவிடம்

“ என்னய்யா???.....” என எரிந்து விழுந்த மறுமுனையிடம்

“ இல்ல வண்டிய தட்டினா ஆளு எப்பிடி சார் மயங்குவாங்க”

“ நீ நாளைக்கு வண்டில போகும்போது என் ஆளுங்களை வீட்டு தட்ட சொல்லுறேன் அப்போ தெரிஞ்சுக்கோ இப்போ சொல்லுறதை கவனி” என தனது திட்டத்தை கூறிய மறுமுனை

“ அப்புறம் நான் சொன்னது புருஞ்சுச்சா வேலு??” என கேட்க

“ ஹான் சார் ஒரு சந்தேகம் தான் சார் எனக்கு”

“ என்னய்யா??”

“ சார் நாளைக்கு இங்க வேலை பார்குறவங்க வந்துட்டா நாம மாட்டிக்குவோமே???”

“ உன்னைய என்னதான் செய்றதுயா???.... நாளைக்கு ஆயுத பூஜை அதனால எல்லாருக்கும் விடுமுறை அதனால யாரும் வரமாட்டாங்க. நாளைக்கு ஒரு நாள் மட்டும் குடோன்ல இருக்கட்டும். அதுக்குள்ள அடுத்த என்ன திட்டம்ன்னு நான் சொல்றேன்”

“ சரிங்க சார்”

“ நீ நம்ம ஆளுங்க வந்தவுடன் கதவை திறந்துவிட்டு அப்புறம் அவங்க போனவுடன் கதவை மூடிரு”

“ சரிங்க சார்.
அப்புறம் நான் வீட்டுக்கு கிளம்பிடலாமா சார்” என வேலு கூறி கொண்டிருக்கும்போது அழைப்பு துண்டிக்கபட்டது.

“ வச்சுட்டாரா நாம கிளம்பி போனா என்னய்யா வாங்குற காசுக்கு கொஞ்ச நேரம் காவலுக்கு இருந்தா என்னன்னு திட்டுவாரு. இல்ல போகாம இருந்தா காவலுக்கு இருந்து என்னைய காட்டி குடுக்க போறியான்னு கத்துவாரு என்னதான் செய்றதோ” என புலம்பலுடன் வேலு அவன் இடத்தில அமர்ந்துகொண்டான்.

அவன் அறியாதது மாணிக்கம் அழகம்மாளை குடோனில் காத்திருக்க சொன்னதை. இதனால் அவளின் இருப்பையும் அறியாமல் போனான்.

கம்பன் நகரை நெருங்கும் போது எதிரில் வந்த லாரி ஜெக நந்தனின் காரின் வலது பக்கம் லேசாக உரச நிதானத்துடன் இருந்த ஜெக நந்தன் தடுமாறி எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் வண்டியை ஓரமாக நிறுத்தினான் .

பின் வண்டியில் இருந்து இறங்கி லாரியின் நம்பரை பார்க்க முயற்சி செய்யும்போது இரு சக்கர வண்டியில் தலை கவசத்துடன் வந்த இருவர் பெரிய கனமான ஆய்தத்தால் ஜெக நந்தனின் பின் தலையில் தாக்க அந்த திடீர் தாக்குதலில் அங்கயே மயங்கினான்.

மயக்கமடைந்த ஜெக நந்தனை அங்கிருந்து கடத்தி வேலுவின் உதவியோடு கம்பன் நகர் குடோனில் கண்கள் கை கால் என அனைத்தையும் கட்டிய நிலையில் அங்கிருந்த மூட்டைகளுக்கு இடையில் கிடத்தினார்கள்.

பின் குடோனை பூட்டிவிட்டு அங்கிருந்து அனைவரும் சென்றுவிட இது எதனையும் அறியாது மணி ஒன்பதை கடந்த நிலையிலும் அழகம்மாள் உறங்கிக்கொண்டிருந்தாள்.

குடோனில் அழகம்மாளும் ஜெக நந்தனும் ஒருவர் மற்றவரை அறியாது உறக்கத்திலும் மயக்கத்திலும் இருந்தனர்.

plz drop ur comments &

thanks for supporting friends
 
Nirmala vandhachu ???
 
Top