Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 30

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 30



“ டக் டக் கதவு தட்டும் சத்தம்”, யாரு என்று மித்ரா கேட்க.

நான் சித்தப்பா வந்திருக்கேன்மா. அதற்குள் சின்னா வாசுக்கு போன் பண்ணினான். “மாமா சித்தப்பா வந்திருக்கார்” ,

“நான் பக்கத்து தெரு வந்துட்டேன், நீ கதவ திற”- வாசு

என்ன சித்தப்பா இந்த நேரத்தில,

உங்க சித்திக்கு நெஞ்சு வலி சொல்லறாமா.

“அய்யோ பதறி கதவை திறந்தாள்“ மித்ரா.

உள்ளே நுழைந்த கார்மேகமும், அவன் ஆட்களும், வெளியே 8 பேர் வீட்டை சுற்றி இருக்க உள்ளே அவருடன் இரண்டு பேர் வந்தனர்.

“சித்தப்பா யார் இவங்க, ஏன் இங்க வந்தாங்க“,

டக்கென்று மித்ராவின் கழுத்தில் கத்தியை வைத்தான் ஓருவன்.

“அக்கா, அக்காவ விடு , மாமாவுக்கு போன் பண்ணிச் சொல்லுவேன்“.

“பளார் ஒரு அடியை“ வைத்தான் கார்மேகம், சுருண்டு விழுந்தான் சின்னா.

உனக்கு ஆயுசு கெட்டிடா நீ செத்துட்ட இல்ல நினைச்சேன், எப்படியோ தப்பிச்சு அந்த வாசு பையன்கூட போயிட்ட.எப்படி தப்பிச்ச தம்பி.

என்ன அப்படி பார்க்கற மித்ரா, உங்க அப்பாவுக்கு எங்க மேல சந்தேகம் வரஆரம்பிச்சிடுச்சு , நான் பணத்தை கையாடல் செய்தது தெரிஞ்சிடுச்சு, எங்களை ஊரவிட்டு போக சோல்லிட்டாரு. நான் அவர ஏமலோகத்திற்கு பார்சல் பண்ணிட்டேன்.

என்ன புரியிலையா உங்க கார் பிரேக்க நான்தான் கட் செஞ்சேன், ஆனா வாசு அப்பா மாட்டிகிட்டான் அவன் நேரம், இப்படி புலி வால புடிச்ச கதையா அவன் பையன் வருவான் நினைக்கல, அங்கதான் நான் விட்டுட்டேன்.

“ஆன்டவா வாசு அப்பாவ தப்பா நினைச்சேனே “மித்ரா கண்களங்கினாள்.

பேசிக் கொண்டிருக்கும் போதே வாசு காம்பெளன்ட்குள் குதித்து சின்னா திறந்து வைத்த பின்பக்கம் வழியாக வந்து ரூமிற்குள் மறைந்து இருந்தான்.

“ஓழுக்காக இந்த பேப்பர்ல கையேழுத்து போடுடா“

சின்னா கையேழுத்து போடாதடா.

“உன்னவிட மூக்கியமா அக்கா, என்னை மாமா பார்த்துக்குவார்“ . பேப்பர்ல கையேழுத்து போடுடா இல்ல உங்கக்கா ஓண்ணுமில்லாத போயிடுவா.

அப்படியா கார்மேகம், சொல்லி ரூமைவிட்டு வெளியே வந்தான் வாசு. கையில் லைட்டரால் சீகரெட்டை பற்ற வைத்தான்.அப்பறம் இதான் உன் பிளானா.

அதிர்ச்சியா பார்த்தான் கார்மேகம் ,

“அடப்பாவி சீக்ரெட் வேற பிடிக்கிறானா“ மித்ரா மொரைத்தாள் வாசுவை.

“என்ன இவ மொரைக்கரா“,

டேய் அவனை அடிங்கடா கார்மேகம் சொல்ல, வந்த ஆட்களையை பிண்ணி எடுத்தான் வாசு, ம்ம் நல்லாதான் பைட் பண்ணறான் நம்ம ஆளு மித்ரா நினைக்க. எல்லோரையும் அடித்துவிட்டு கடைசில கார்மேகத்திடம் வந்தான். நான் அன்னிக்கே சொன்னேன் ஊர விட்டு போயிடுன்னு கேட்டியா. எங்கிட்ட அடி வாங்குனும் இருக்கோ , அடிக்க ஆரம்பித்தான்,வாசு அவரவிடு செத்திட போறாரு மித்ரா சொல்ல, நிறுத்தினான்.

கதவை திறந்து வாசுவின் கார்ட்ஸ் உள்ளே வந்தனர், ஏற்கனவே வெளியே இருந்த ஆட்களை அடித்துவிட்டனர்

.நான் கமிஷனரிடம் பேசிட்டேன், இவங்கள போலிஸ் ஸ்டேஷனில் ஓப்படைச்சிடுங்க. நாளைக்கு பெரிய வீட்டை காலி செஞ்சிடு வீட்டைவிட்டு எல்லோரையும் வெளியே அனுப்பிவிட சொல்லி கார்ட்ஸை அனுப்பினான்.

உடனே பாட்டி, தாத்தா , பாரு வந்துவிட்டார்கள்.

பார்வதி , “மித்ரா என்று அழைக்க“ ஓடிபோய் கட்டிக்.கொண்டாள் மித்ரா.

சின்னா பாட்டியை கட்டிக்கொண்டான்.

ஓண்ணும் பயப்படாதடா சின்னா.

மித்ரா பாட்டியையும் அனைத்தாள். இப்ப பார்வை நல்லா தெரிதா மித்ரா

நல்லா தெரிது பாட்டி.

வாசு உள்ளே நுழைந்தான் , “வாசு“ என்று மித்ரா கூப்பிட்டாள்.

என்ன?

சாரி வாசு. நான் தெரியாம உங்க அப்பாவ தப்பா நினைச்சிட்டேன். இப்ப என் மனசில எந்த குழப்பமும் இல்ல, நான் உன்கூட சேர்ந்து வாழனும்.

“ஆனா எனக்கு அந்த ஆசையில்ல“-வாசு.

வாசு நான் பண்ணது ரொம்ப தப்புதான் என்னை மன்னிச்சிடு.

நான் தெரியமா தான் கேட்கிறேன், இப்போ எங்க அப்பாமேல தப்பு இல்லவுடனே சேரவர , சப்போஸ் எங்க அப்பா தப்பு பண்ணிட்டாரு நினைச்சுக்கோ அப்ப கடைசிவரைக்கும் என்னோட வாழமாட்ட.

எப்படி டீ நீ மனசு மாருற, என்னுடைய காதல், அன்பு ஓரு இடத்தில கூட உணரல. சரி வா உள்ளே போய் பேசலாம் இங்க வேணா என்று ரூமில் அழைத்து சென்றான்.

நான் யாருக்கிட்டியும் மண்டியிட்டு கேட்டதில்லடி, எனக்கு நீ வேனும் கேட்டேனே , உங்கிட்ட பேசனும் கெஞ்சினே , வாய்ப்பு குடுக்கல.

அதெல்லாம் மறந்து, உன்ன லவ் பண்ண மனசு தாங்கமா அன்னிக்கு தேடி வந்தேனே. என்ன சொன்ன சொல்லுடி.

வாசு அது தெரியாம சொல்லி அழ ஆரம்பித்தாள்.

பொம்பள பொறுக்கி சொல்லிட்ட, அன்னிக்கு வேறுத்தேன்டி உன்ன, உன் பின்னாடியே சுத்தன வாசு செத்துட்டான். இப்ப இருக்கிறது தேவ். நீ எனக்கு வேணா.

அப்ப வேற கல்யாணம் பண்ணிப்பியா

எஸ், நல்ல அழகான பொண்ணா பார்த்து, அதிகமா பேசாத பொண்ணா பார்த்து , என்னை அட்ராக்ட் பண்ணற மாதிரி இருந்தா கல்யாணம் பண்ணிப்பேன்.

அப்ப நான் வேணாமா வாசு.

தொல்லை விட்டிச்சி நிம்மதியா இருப்பேன்-வாசு.

இருப்படா இருப்ப, என்னை ஏமாத்தி கல்யாணம் செஞ்சிட்டு, ஏதோதோ டயலாக் பேசி என்னை அவாய்ட் பண்ணற, முடியாது இந்த ஜென்மம் இல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த மித்ராதான் உன் மனைவி நீயே வந்து எனக்கு நீ வேனும் வேனும் கெஞ்சல நான் மித்ரா வாசு தேவ் ராஜ் இல்லடா. வாழ்நாள் புல்லா என் டார்ச்சர் அனுப்பிக்க போற, ஆல் த பெஸ்ட்.

என்னடி சவாலா, என் பேக்கிரவுணட் என்ன தெரியுமா.

அத தெரிஞ்சிக்க வேனாம் , ஆனா வாசு என்ற பெரிய பிஸினெஸ்மேன், மித்ரா என்ற கண்ணு தெரியாத பொண்ணுகிட்ட எப்படி அடங்கினான் தெரியும்.

ரொம்ப பேசாதடி

வா வெளியே போவோம் எல்லோரும் காத்துட்டு இருக்காங்க.

மித்ரா அழுதுக்கொண்டே பாரும்மா, வாசு என்னை வேணா சொல்லிட்டான்.

டேய் வாசு ஏன்டா இப்படி மித்ராவ கஷ்டப்படுதற,

உள்ள சவால் விட்டு வெளிய வந்து எப்படி ஆக்ட் கொடுக்கற பாரு நினைத்து, அம்மா அவக்கூட என்னை வேணா போடா சொன்னா, நீ அவக்கிட்ட போய் சண்டை போட்டியா, இல்லதான.

வாசு அவ எனக்கு மருமகள், என்கூடதான் இருப்பா சொல்லிட்டேன்.

அது உங்க இஷ்டம் சொல்லி காரில் ஏறி உட்கார்ந்தான்.

பாட்டி மாமா கோவிச்சிட்டாங்க, அக்கா கூட பேச மாட்டாங்களா.

சின்னா நீ ஃபில் ஆகாத, புருஷன் , பொண்டாட்டி சண்டைக்குள் போக கூடாது.



 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
அடப்பாவி கார்மேகம்
இவனா பிரேக்கைக் கழட்டி மித்ராவின் பெற்றோரைக் கொல்லப் பார்த்தது?
அதுக்கு பாவம் வாசுவின் அப்பா பலியாகி விட்டார்
கார்மேகம் பொறுக்கியை காலி பண்ணாமல் வாசு அவன் வீட்டை காலி பண்ண சொல்லுறானே
 
Last edited:
Superb sis vaasu kalakuranga mithrakku idhellam thevathaan konja naal mithraava nalla katharavidunga appothan vaasu paiyanoda love nalla puriyum
 
அடப்பாவி கார்மேகம்
இவனா பிரேக்கைக் கழட்டி மித்ராவின் பெற்றோரைக் கொல்லப் பார்த்தது?
அதுக்கு பாவம் வாசுவின் அப்பா பலியாகி விட்டார்
கார்மேகம் பொறுக்கியை காலி பண்ணாமல் வாசு அவன் வீட்டை காலி பண்ண சொல்லுறானே
Thk u banu mam for ur comment
 
Top