Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் விழியாக நான் வரவா – 35

Advertisement

lakshu

Well-known member
Member
உன் விழியாக நான் வரவா – 35


“கவிதையா, வேணாடி, வாசு,பீஸ்ஸு, கிஸ்ஸுன்னுவ,நான் புஸ்ஸாயிடுவேன். “

“சரி நான் ஒரு உண்மை சொல்லட்டா பாஸ்“.

“சொல்லு“

“பாஸ் இத நான் யாருக்கிட்டயும் சொன்னதில்லை வாசுக்கிட்ட கூட. “

“ம்ம் அப்படியா“, ரொம்ப போதை ஆயிடுச்சா இவளுக்கு, வீடு வந்துச்சு இறங்கு சொல்லி கார்கதவை திறந்தான். மித்ரா இறங்கி தடுமாறி விழ வாசு தாங்கிக் கொண்டான். இவள எப்படி நடக்க வைக்கிறது வேலைக்கே ஆகாது. மித்ராவை இரு கையால் தூக்கிக் கொண்டு மாடி ஏறி அவன் ரூம் பெட்டில் படுக்க வைத்தான்.

பாஸ், “நான் என்ன சொல்லனும் சொன்னேன். “

“ம்ம் உண்மையை, “

“நான் வாசுவ லவ் பண்ண தெரியுமா“

அதான் தெரியுமே ,
“ஐயோ பாஸ் நான் கல்யாணத்துக்கு முன்னாடியே வாசுவை காதலிச்சேன், அவனுக்கே தெரியாம ரம்யாவுக்கு மட்டும்தான் தெரியும்“.

இது எப்போடி எனக்கு தெரியாம , சொல்லுடி

“ஆங் நான் சொல்லமாட்டேன். வாசுக்கிட்ட தான் சாரிக்கேட்டு சொல்லுவேன்“

“ஏய் நான் வாசுதான் நல்லாபாரு“

“ம்ம் நான் நம்ப மாட்டேன்பா , நீ எனக்கு பாஸ் நான் ஒரு கொஸ்டின் கேட்கிறேன் , நீ கரேக்டா ஆன்ஸர் செஞ்சா , நீதான் வாசு, இல்ல பாஸ்“

சரி கேள்

“நீ என்ன சொல்லி கூப்பிடுவ செல்லமா“

கிட்டவாடி ,அவளை மார்பில் போட்டு கொண்டு , அவள் காதருகில் “பஞ்சு மிட்டாய். “

“கரேக்ட் நீதான் என் வாசு மாமா. “

என்கிட்டவாடி கேடி நினைத்து , “இப்ப சொல்ல , எப்ப லவ் பண்ண“

ம்ம் நீ எனக்கு ஊட்டிவிட்டியே அப்போ, உன் கையை கடிஞ்சேன் இல்ல, அப்பறம் நீ என் இடுப்ப புடிச்சு கிள்ளச்சொல்ல, என் சிக்கன எடுத்து சாப்பிட்டது, இது மாதிரி உன் விஷியமெல்லாம் எனக்கு புடிக்கும். ஆனா கண்ணு தெரியாத என்னை எப்படி கல்யாணம் பண்ணிக்குவே என்ற பயம் தகுதி மீறி ஆசைப்படுறேனே நினைப்பு ஆனால் எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப புடிக்கும்.

அவளை அனைத்து,அப்பறம் எதுக்குடி கல்யாணத்தன்னிக்கு அவ்வளவு பிலிம் காட்டன

ம்ம் அதுவா வாசு , யாரு பெத்த புள்ளையோ இப்படி மாட்டிக்கிச்சே பீல் செஞ்சேன் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னால்.

யாரு நீ பாவம் பார்த்த ,என்னை வச்சி செஞ்சேடி

ஏய் தேனு மிட்டாய் என்ன சேலைடி இது,

ஏன் நல்லாதான் இருக்கு,

ம்ம் இந்த வோர்க்கெல்லாம் குத்தது, கழட்டி என் டிரஸ் போட்டுக்கோ

அய்யையோ எனக்கு வெட்கமா இருக்குமே மாம்ஸ்

அடச்சீ சேலை கழுட்டு, ஏற்கனவே எல்லாமே தெரியுது, அவன்னவன் கண்ணு கண்ட இடத்துல மேயுது அதுக்குதான் பார்ட்டி விட்டு பாதியிலே கூட்டிட்டு வந்தேன்

வாசு உன் கண்ணு ஏன் அப்படி மேயல.

மித்ராவை பார்த்து முறைத்தான் , ஏன் வாசு இப்படி என்னை ரசிச்சு பார்க்கிற

நீ இதுவும் பேசுவ இதுக்கு மேல பேசுவ , டிரஸை மாத்து,

சரி மாத்தி விடு வாசு, நான் கண்னை மூடிக்கிறேன். எல்லாம் நேரமிடி , ஓழுங்கா இரு ஷர்ட் போடறேன் , ஆடாதடி, மித்ரா தள்ளாடி வாசு மேலே விழுந்தாள்

மாமா, ம்ம்,மாமா, என்னடி , ஒரு உம்மா தாயேன்

நோ வே நீ தெளிவாயில்ல, அப்பறம் ஏன்டா தொட்டன்னு சொல்லுவ

உனக்கு புடிக்கலையா என்னை-மித்ரா

புடிக்காதவா கல்யாணம் பண்ணே சொல்லி இறுக்க கட்டிக்கொண்டான், நீ நிதானத்துல இல்ல தூங்கு வா, அவன் தோள்வளைவில் படுத்துக் கொண்டாள். அவள் நெற்றியில் முத்தமிட்டான்

மறுநாள் காலை, மித்ரா மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள் , வாசு சாப்பிட்டு கொண்டிருக்க அவளை ஓரக்க கண்ணால் பார்த்தான், தெளிச்சிடுச்சோ. பக்கத்தில் அமர்ந்த தாத்தா,வாசுவை பார்த்து, டேய் என் பொண்டாட்டிக்கிட்ட பேச பிரைவேசியே இல்லை, தனியா பேச முடியல, கை, கால் வலிக்குது புடிச்சுவிட ஆள் இல்லை

சிலுக்குக்கு புடிச்சிவிட வா,

ஆமாம், முதல்ல அவங்க அவங்க பொண்டாட்டிய அவங்க புருஷன் ரூமுல தங்க சொல்லு,

புரியல தாத்தா

ம்ம் உன் பொண்டாட்டிய உன் ரூமுல தங்க வைச்சுக்கோ. மித்ரா வாசுவை பார்த்தாள் வாசு கையை கழுவி விட்டு மித்ராவை பார்த்து நம்ம ரூமுக்கு வந்துடு, போதுமா தாத்தா

சரி வாசு , பாட்டி மித்ராவை பார்த்து சிரித்தார்

சாந்தியக்கா ஹெல்ப் பண்ணுங்க எனக்கு ஆபிஸ்ல மீட்டிங் இருக்கு சொல்லி சென்றுவிட்டான்.

பாட்டி என்று அனைத்துக்கொண்டாள் மித்ரா, சாந்தியக்கா எங்க போறாங்க வாசு ரூம் இங்கதானே இருக்கு பாட்டி

அதுயில்ல மித்ரா இது அவன் ஆபிஸ் ரூம் அவன் மனைவியில்லாம தங்க மாட்டேன் சொல்லிட்டான், போ,போய் பாரு, மித்ரா சாந்தியுடன் சென்றாள் மித்ரா உனக்கு ஞாபகம் இருக்கா இந்த ரூமுல தான் அன்னிக்கு கூட்டிட்டு வந்தேன. அங்கே வைத்துவிட்டு சென்றாள்

மித்ரா கதவை திறந்து கண்முடினாள், அன்று வந்த அதே வாசனை கண்ணை திறந்து பார்த்தாள், அவர்களுடைய கல்யாண போட்டோ, சுவற்றில் பெரியதா பைன்டிங் மித்ரா கையை பிடித்து வாசு நடப்பதுபோல்,

மூனு வருஷம் முன்னாடி பார்த்தான் சொன்னானே அது உண்மை, லாங் மிடி பாதி வெட்டன முடி , வாசு என்று அழ ஆரம்பித்தாள் பெட்டின் மேல் அன்று அவள் கட்டின புடவை மடித்து வைக்கப்பட்டிருந்த்து. அன்று கழுண்ட அவள் கொலுசும் இருந்தது, கண்கள் இல்லாமல் இருக்கும்போதே லவ் பண்ணியா வாசு. நான் எவ்வளவு பெரிய தப்பு செஞ்சிட்டேன் கடவுளே இன்னிக்கு வாசுக்கிட்ட சாரிக் கேட்கனும். குளித்து பிங் நிற சாரியை உடுத்தினாள் ,சிறிது மேக்கப் போட்டாள், இவன் எப்போ வருவான்,

மித்ரா செல் அடிக்க எடுத்துப்பார்த்தாள், மாலனி பெயரை கண்டவுடன் கட் செய்தாள், திரும்ப போன் அடிக்க, போனை எடுத்து என்ன வேனும் மாலனி

மித்ரா உன்கிட்ட முக்கியமான விஷியம் பேசனும் , வாசு அவன் கேர்ள் பிரண்ட ஸ்ருதில்லா அத பத்தி

அதெல்லாம் எனக்கே தெரியும், போனை வை

அவங்களோட விடியோஸ்,போட்டோஸ் எல்லாம் நெட்டல விட போறாலாம் , நீ வாயேன் சரி வரேன் எங்க

ஹோட்டல் கண்ணா

என்னது ஹோட்டல் கண்ணாவுல சூஸ்ஸைட்டு பண்ணபோறாளா என்ன அத்தை சொல்லுறீங்க

ஆமாம் வாசு, நீ சீக்கீரம் போப்பா,மாலனி ஏதாவது பண்ணிக்க போறா, லவ் பையிலியராம் .பிளிஸ் வாசு

ஓகே அத்தை , நான் கிளம்பிட்டேன்.
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
ஹா ஹா ஹா
வாசுதான் கேடின்னா இந்த மித்ரா அவனுக்கு மேலே கேடியா இருக்காளே

அவன் இவளுக்கு டிரஸ் போட்டு விடணுமாம்
ஆனால் ஏண்டா தொட்டேன்னு கத்துவாளாம்

ஹப்பா ஒரு வழியா மித்ராவுக்கு வாசுவைப் பற்றி தெரிஞ்சு பல்ப் எரிஞ்சிடுச்சேன்னு பார்த்தால் இனி லவ்வுஸ் ஸ்டார்ட்டாயிடும் வண்டி நிற்காமல் ஓடி பிள்ளை குட்டிகளில்தான் போய் நிற்கும்ன்னு பார்த்தால் நடுவிலே எவ அவ மாலனி கூனி?

ஏன்மா மாலனிப் பொண்ணுக்கு சூஊஊஊசைட் செஞ்சுக்க ஒரு ஆறு குளம் ஏரி குட்டை மட்டை கிடைக்கலையா?
ஹோட்டல் கண்ணா தான் கிடைச்சுதா?

வாசுவைக் கூப்பிடும் அத்தைக்காரிக்கு சூசைட் செய்யப் போகும் மகளைக் காப்பாற்றுவதை விட வேறென்ன முக்கியமான வேலையோ?

சரி அந்த மாலனி பீடை மித்ராவையும் எதுக்கு கூப்பிடுறாள்?
வாசுவுடன் இவள் கொஞ்சுவதை மித்ரா பார்க்கட்டும்ன்னா?

அப்படீன்னா இவளுக்கு வாசுவைப் பத்தி தெரியலையே
ஹ்ம்ம்......விதி வலியது வாசுவிடம் நல்லா வாங்கிக்கட்டும்

இல்லை மித்ராவுக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோ?
ஹ வாசு இருக்கான் பொஞ்சாதியை அவன் பார்த்துக்குவான்
 
Last edited:
Top