Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிருள்ள வரை ❤

Advertisement

Rudhra Vikram

Member
Member
" தடக்..தடக்.. தடக்.. தடக்.."

தினந்தோறும் காணும் அழகு ஓவியமான இயற்கையின் அழகை இரவின் மேகங்கள் மேலும் மெருகேற்றி இருந்தது.

ஊர் உறங்கும் அந்த ஜாமத்தில் வானத்தின் கதவுகள் முடி இருள் சூழ்ந்த சமயத்தில்
வெளிர் நிற ஆடையில் அழகுராணியாக நிலா வீற்றிருந்தாள்.

பச்சை நிற மரங்கள் யாவும் காற்றோடு கை குலுக்கி விளையாட, கரும்கம்பிகள் கரு நாகத்தைப் போல அந்திரத்தில் மிதந்தபடி மெல்லிய கோடு வரைய,
ஒரு நிமிடம் ஆளை உறைய வைக்கும் மென்தென்றல் பனிக்காற்றாய் வீசிக் கொண்டிருந்தது அந்த நடு நிசியில்.

அத்துணை அதிசயங்களை ரசிக்க மறந்து சீறிப்பாய்ந்து சென்றது அந்த இரயில்.

" தடக்..தடக்.. தடக்.. தடக்.."

தொடர்வண்டியின் இரைச்சல் அந்த நிசப்தமான இரவில் ஒலிபெருக்கியை போல அதிர்ந்தது.....

இரயிலின் தண்டவாளம் அதிர... அதனூடே இரயிலின் சீரான குலுங்கலில் எட்டாவது கம்பார்ட்மென்டின் கதவை ஒட்டி காலை குறுக்கே மடித்து வெட்ட வெளியை வெறித்தவாறு அமர்ந்திருந்தான் அவன்,
அபிமன்...

சிரிப்பை தன் வாழ்வில் தொலைத்து நின்பவனை பார்த்து தான் ஏளனமாக சிரித்ததோ என்னவோ அந்த தென்றலே புயலாக மாறி தன் இன்னுயிரை எடுத்து விடக் கூடாதா என ஒரு கணம் நினைத்த மனம் ரித்விக்கை எண்ணி பார்த்தது.

அதே எட்டாவது கம்பார்ட்மென்டின் உள்ளிருந்த ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் அவள்,
இந்துமதி.

கள்வன் போல கதவு திறந்து கன்னம் தட்டி காதல் செய்து மேனியை தொட்டு மெல்ல சிரித்த
தென்றல் அவள் மேனியை நடுங்க செய்திருந்தது. நீல நிற கம்பளிப் போர்வையை உடலோடு இறுக அணைத்தவாறு கண்ணீர் துளிகளை சிந்திய அவளின் இரு விழிகளால் நிலவை வெறித்தாள்.

அருகில் திரும்பி அவனை பார்க்க மனமின்றி ஏனோ பார்க்க தூண்டிய மனத்தை கட்டுப்பாட்டுத்தும் வழி அறியாது அவ்விழிகளால் அவ்விடத்தை அலசினாள்.

அவனைக் காணாது எழுந்து அந்த கம்பார்ட்மெண்ட் முழுக்க தேடியவள் கடைசியாக தன் இருக்கைக்கு பின்னால் ஏதோ விசும்பல் சத்தம் சன்னமாய் செவிகளைத் தீண்டியது.

மெல்ல அதன் பக்கம் சென்றவள் சிலையென நின்றாள்...

அவனே தான், அபிமன்.

கண்களில் ஆறாக வழிந்த கண்ணீரை ஒரு கரத்தால் துடைத்துபடி, மறு கரத்தால் தன் பிடிலை (வயலின்)அணைத்தவாறு அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும் தன்னையே அறியாமல் அபி முன் மண்டியிட்டு அவன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டாள்.

தன் சூடான கண்ணீர் கன்னத்தை நனைத்திருக்க இந்துமதியின் கைகள் பனியில் உறைந்து போய் சில்லென்ற குளிரை ஏற்க மறுத்து விலகினான் அபிமன்.

'உங்க மனசுல என்ன இருக்குனு என்னால கொஞ்சம் கூட புரிஞ்சிக்க முடியல மிஸ்டர்.அபிமன்.. '

மனதிற்குள்ளாக நினைத்துக் கொண்டு அவனையே பார்த்தபடி இருந்தவளின் கண்களை நேருக்கு நேராக கூடப் பார்க்க திக்கற்ற நிலையில் எழுந்து நின்றான் அபிமன்.

" ஏன் இந்து...இந்துமதி... அந்த நிலா இன்னைக்கு அழகா, எப்பவும் விட பிரகாசமா இருக்குல்ல..." என்று சகஜமாக பேச முயற்சித்தான்.

" ஹம்... மனிதனோட எண்ணத்தை பொறுத்து தான் மிஸ்டர். அபிமன் எல்லாமே... சந்தோஷமா இருக்குறவங்களுக்கு நட்சத்திரம் கூட நிலாவா தெரியும்... அது அம்மாவாசை வானமா இருந்தாலும்.... "

அவளது கூற்றின் உள் அர்த்தத்தை புரிந்து கொண்டதாலோ என்னவோ அவனின் முகம் லேசாக மாறத் துவங்க, இருந்தும் மனதை மேலும் கல்லாகிக் கொண்டான்.

" ஹாஹா.. உண்மை தான்
இந்துமதி... உங்க கல்யாணத்துக்கு உங்கள விட நான் தான் அதிகமா சந்தோஷப்பட்றேன்... "

அவனின் ஒவ்வொரு வார்த்தையும் இதயத்தை கிழிப்பது போல இருந்தாலும் புன்னகையோடு பதிலளித்தாள் இந்துமதி.

" இந்த தடவை இந்துமதினு முழு பெயரை சொல்லிட்டீங்க
மிஸ்டர். அபிமன். ஐ அம் ரியலி ஹேப்பி... " என்று நகரச் சென்றவளின் கரத்தை தடுத்து இதழை சிறை செய்ய நினைத்த மனத்தை கத்தியால் குத்துவது போல இருந்தது
அவனது நினைவுகளில் வந்து சென்ற ரித்விக்கின் சிரித்த முகம்.

கால்கள் சரிந்து விழுந்தவனின் கரங்கள் தானாக வயலின் நோக்கி சென்றன.



சில்லிட்ட தன் மேனியை தீயென சுடுவது போல் தீண்டிய தென்றலை விட அத்தென்றல் சுமந்து வந்த அந்த இசை அவள் மனத்தை மேலும் சுட்டது.

இருவரும் இணைந்து செல்லும் தன் கடைசி பயணத்தை இதயத்தில் சுமக்கும் ரணத்தோடு கடத்தினர்...

' என்ன உங்களால கடைசி வரைக்கும் புரிஞ்சிக்க முடியாது மிஸ். இந்துமதி. ஹா.. மிஸ்ஸஸ்.ரித்விக்...'

அவளை அவ்வாறு அழைத்தால் தான் பொருத்தமானது என மனத்தை சமாதானம் செய்தபடி தன் வயலினை வாசிக்கபடியே இருந்தான் அவன், அபிமன்.
 
Top