Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிரோடு கலந்தவள் 2

Advertisement

ரிஷி

Member
Member
Episode:02

"சார் நாம நேத்து ராத்திரி பன்ன கொலை பத்தின நியூஸ் அடிக்கடி அப்டேட் ஆகிட்டிருக்கு சார்"

என்ற "கதிர்" எனும் கதிரவனின் குரலில் சுழலும் நாற்காலியில் மறுபக்கம் திரும்பியிருந்த "ஆர்.கே" ஒரு நக்கல் சிரிப்போடு திரும்பினான்.

தன் முன் "ரிஷிகுமார்" என பொறிக்கப்பட்ட அந்த பலகையை சுழற்றிக் எதிர்ப்பக்கமாக வைத்தவன்

"ஹூ ஏம் ஐ" என அவன் வழமையாக கேட்கும் கேள்வியை கேட்ட மாத்திரத்தில் கதிரின் உடல் விரைத்து கண்களில் பயத்துடன் அவனை பார்த்து

" யூ ஆர் கிரிமினல் பேட் பாய் சார்"

என்றுவிட்டு அவனை பார்க்க அவனோ ஏதோ பட்டம் கிடைத்தது போல் வாய் விட்டு சிரித்தான்.

" எஸ் ஐ அம் கிரிமினல் பேட் பாய்....அப்போ கிரிமினல் வேல பன்னவன் தான் பன்ன கொலக்கி எதுக்கு கவலை படனும் கதிர்?"

" அது இல்ல சார்..........முன்னைய கொலைகள விட இந்த கொலை ரொம்ப தீவிரமா பேசப்படுதேன்னுதான் சொன்னேன் சார்"

" இட்ஸ் ஓகே கதிர்.... இந்த மனுஷங்க நல்லது செய்றவன விட என்ன மாதிரி கெட்டது செய்றவன பத்திதான் ரொம்ப பேசுறாங்கல்ல?"

தான் செய்த கொலைகளுக்கும் தனக்கும் யாதொரு சம்பந்தமுமே இல்லாதது போல கேட்க கதிருக்குத்தான் அவனுடைய "பீ.ஏ" போஸ்டே வெறுத்துப் போனது.

இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ என நினைத்துக்கொண்டே அவனை பார்க்க அவன் மனநிலையை படித்தவன் போல

"என்ன கதிர்...இவன் இன்னும் என்னென்னெல்லாம் செய்ய போறானோன்னு யோசிக்கிறியா?"

"அது... வந்து... இல்ல சார்.... இல்ல..."
என பதறியவனை பார்த்து

"நீ நெணக்கிறதுல தப்பே இல்ல கதிர்....யேன்னா நாம இன்னைக்கு ஒரு பொண்ண கொலை பண்ண போறோம்" எனவும் அவன் பதிலில் விக்கித்து நின்றுவிட்டான் கதிரவன்.


***

"மா.... கயல் எங்கம்மா போனா நான் வந்ததிலிருந்து காணவே இல்ல..."
சமையலறை மேடையில் கரட் சாப்பிட்டவாறே கேட்டுக்கொண்டிருந்தாள் அஷ்வி...

"அவ நாளைக்கு காலேஜ் சேருரதால அவ பிரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் போயிட்டா"

அவள் கேட்ட கேள்விக்கு அவள் அண்ணி "ஈஸ்வரி" பதில் சொல்லவும் அவளைப் பார்த்து முறுவலித்தவள்

"என்னண்ணி....என்ன விஷயம்? அம்மா கிட்ட கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்றீங்கன்னா இதுல ஏதோ ஒரு விஷயம் இருக்கும் போலவே"

எனவும் சிரித்து மழுப்பியவரை கண்களால் ஜாடை காட்டி அடக்கிய அம்மாவை கண்டு கொண்டாள் அஷ்வி

"ம்மா..இப்ப எதுக்கு அண்ணியோட வாய கட்டி போடுறீங்க?"

"நான் என்னடி பன்னேன்"

" நீங்க நல்லவ பாருங்க... அண்ணிக்கு எதுக்கு இப்போ ஜாடை காட்டினிங்க"

"நான் எங்கடி அவளுக்கு ஜாடை காட்டினேன் நான் என் கண்ணுல தூசி விழுந்திருச்சேன்னு கண்ண பொத்தினேன்"

"விஜி.....நான் இன்னும் சின்ன பப்பி கிடையாது நான் நா ஒரு லாயருங்குறத மறந்துடாத சொல்லிட்டேன் அவ்வளவுதான்"

"அதயேதான் நாங்களும் சொல்ல வர்றோம் அஷ்வி.... நீ இன்னும் சின்னப் பப்பி கிடையாது உனக்கு கல்யாண வயசாகுது..."

அவளுடைய அண்ணி பாயின்டை போடவும் கட்டிலிலிருந்து இறங்கியவள்

"ஏன்மா நான் உன் கூட இருக்கிறது பிடிக்கலையா? எப்ப பாரு வீட்ட விட்டு தொரத்துறதுலேயே குறியாய் இருக்க?

வராத கண்ணீரைத் துடைத்துக்கொண்டு நைஸாக சமையல் அறையிலிருந்து வெளியேறியவளை பெருமூச்சுடன் பார்த்தார் விஜயலட்சுமி........

"எப்ப கேட்டாலும் இதையே கேட்டுட்டு போயிட்றா அத்த... இவள எப்படி சம்மதிக்க வைக்கிறது?"

"அஜய்......." என பதிலளித்தவர் சமையல் பார்க்க ஆரம்பித்தார்.

***

"ஆரவ்.........." என்றபடியே கதவைத்திறந்து கொண்டு வந்த தன் அண்ணனின் கம்பீரத்தில் ஒரு தம்பியாக பெருமை கொண்டான் ஆரவ்.

சிவப்பு கலர் ஷர்ட்டுக்கு மேலால் வெள்ளை கோட்டுடன் அதே கலரில் டிரௌஸரும் அணிந்து இடது கையில் வெள்ளி வாட்ச் அணிந்திருந்தான்.

"என்னடா நான் கூப்பிட்ட இருக்கேன் என்ன எதுக்கு பாத்துட்டு இருக்க?"
என்ற குரலில் கலைந்தவன்

"இல்லண்ணா.......இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க"

"டேய் டேய் "

"நிஜமாத்தாண்ணா"

"கிளம்புடா ஏற்கனவே லேட்டாயிடுச்சு இப்போ போனாத்தான் கரெக்ட்டா இருக்கும்"

"நான் ரெடிணா...வா போலாம்"
என்றவாறு அவனுடன் இணைந்து நடந்தான் ஆரவ்.

ஒரு பெரிய பங்களாவுக்குள் காரை நுழைத்தவன்

"ஆரவ்.....நீ இங்க வெயிட் பண்ணு நான் பார்க் பண்ணிட்டு வந்திடுறேன்"

என்றவன் அவனை இறக்கிவிட்டு காரை பார்க் பண்ணிவிட்டு வந்தவன் ஆரவ்வுடன் உள்ளே நுழைவதை கண்ட பெண் ஒருத்தி ஓடி வந்து தேவாவை கட்டிக் கொள்ள அவளுடைய நவநாகரீக ஆடையில் ஆரவ் முகத்தை சுளிக்க....தேவாவை ஒருபடி மேலே சென்று அவளுக்கு அறைந்தே விட்டான்.

"ஏய்...யார் நீ?" எனும் கேள்வியில் உள்ளுக்குள் புகைந்தாளும் நீ கேட்ட கேள்வி என்னை ஒன்றுமே செய்யவில்லை எனும் ரீதியில் அவனைப் பார்த்து

"என்ன தெரியலையா டார்லிங் நான் தான் "ஆத்மிகா" எனும் பதிலிள் மேலும் கடுப்பானவன்

" ஒன்ன தெரியாததுனால தான் ஒன் பேரும் தெரியல.... ஒனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?..... இடியட்......." என கடைசி வார்த்தையை முணுமுணுக்கும் போதுதான் அங்கு வந்து சேர்ந்தார் அவளுடைய அப்பா "ராஜன்"

"ஹலோ மிஸ்டர் மாறன்..... இவ தான் என்னோட ஒரே பொண்ணு... நான் உங்கள பத்தி நிறைய சொல்லியிருக்கிறதுனால உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டா அவக்காக நா மன்னிப்பு கேட்டுக்குறேன்."

"இதோ பாருங்க ராஜன்.... உங்க குடும்ப விஷயங்களை என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்காதீங்க..நமக்குள்ள தொடர்பு தொழில்ல மட்டுமே தவிர அததாண்டி வர ட்ரை பண்ணாதீங்க"

பேச்சை கத்தரித்துவிட்டு தன் தம்பியை கூட்டிக்கொண்டு பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்தான்.
அதுவரை அமைதியாக இருந்த ஆரவ்

" அண்ணா...ஒன்னு சொன்னா கோச்சுக்க மாட்டீங்களே!?"

"இப்ப என்ன...... நீங்க அவங்க கிட்ட அப்பிடி நடந்துகிட்டது சரி இல்ல.... கொஞ்சம் தன்மயா பேசியிருக்கலாம்னு சொல்ல போற அப்படித்தானே?"

"அதான் நீங்களே சொல்லிட்டீங்களே அப்படித்தானேன்னு மட்டும் எதுக்கு கேக்குறீங்க?"

என்றவனை பார்த்து கண்களை சிமிட்டியபடி திரும்பியவன் தன் பக்கத்தில் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் ஆத்மியின் முகத்துக்கு சொடக்கு போட
திடுக்கிட்டு அவனை பார்த்தவள்

"என்ன?.....என் முகம் என்ன உனக்கு கண்ணாடியா? இப்படி பார்த்துட்டு இருக்க?"

"நீ ரொம்ப ஸ்மார்ட்டா இருக்க தேவா அதான்...."

"சீ...... தள்ளிப் போ" என்றவன் அவனை இழுத்துக் கொண்டு வெளியே வந்து விட்டான்.

***

"கதிர்...." எனும் சிம்மக் குரலில் அவன் முன் வந்து நின்றான் கதிரவன்.

"சார் இப்போ 9:30..... 10 மணிக்கு அந்த பொண்ணு வேலையை விட்டுவிட்டு கிளம்புவா..... ஒரு 15 நிமிஷம் நடந்ததுக்கு அப்பறம் அவ வீட்டுக்கு போற ரோட்ல தனியாத் தான் போவா நாங்க அப்போ அந்த பொண்ண போட்ரலாம் சார்"

"போட்ரலாம்" எனும் போது அவனது குரல் நடுங்குவதை கவனித்துக் கொண்டு இருந்தாலும் அவளை விட்டு விட அவன் என்ன நல்லவனா?

தான் செய்த கொலையை அவள் எவ்வாறு புகைப்படம் பிடித்தாள் என்பது அவனுக்கு தெரியவில்லை ஆயினும் அந்த நினைப்பே அவளை கொல்ல தூண்டிக்கொண்டிருந்தது அவனுக்கு.....
கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருந்தவன் கதிரை பார்த்து

" கிளம்பலாம்" என்ற ஒற்றை சொல்லோடு முன்னே நடக்க எதுவுமே பேசாமல் அமைதியாக அவன் பின்னே நடந்தான் கதிரவன்.

இரவு 10.00

அந்த தனி இருட்டு சாலையில் அவள் வழமை போல அந்த வீதியில் வந்து கொண்டிருந்தாலும் மனதில் ஒன்றிக்கொண்டிருக்கும் பயத்தை மட்டும் ஏனோ அவள் கண்டு கொள்ளவில்லை...

எப்பொழுதும் இப்படி பயம் இருந்தது இல்லை ஆதலால் அதை அவள் பொருட்படுத்தவில்லை.

நடந்து கொண்டிருக்கும் போது திடீரென தன் முன் சூழ்ந்து கொண்ட அந்த ரவுடி கும்பலை பார்த்து உண்மையில் அவளது இதயம் திடுக்கிட்டாலும் தன் கேமராவை ஆன் செய்து வீடியோ செய்ய கையில் எடுத்த வேளை திடீரென அவள் முன் வந்து நின்ற ஆர்.கே.... சிறிதும் தாமதிக்காமல் தன் கையிலிருந்த கத்தியால் அவள் வயிற்றில் குத்தினான்.

எதிர்பாராவிதமாக நடந்த தாக்குதலில் நிலைகுலைந்தவள் தன் பலத்தையெல்லாம் திரட்டி அவன் கட்டி இருந்த அந்த சிவப்பு துணியை அகற்ற அவன் முகத்தை கண்டு அதிர்ச்சியில் "ஆர்.கே" என கண்களை விரிக்க மறுபடி அந்த கத்தியை எடுத்து குத்த அப்படியே மயங்கி சரிந்தாள்.
அவளுடைய கையிலிருந்த கேமிராவை எடுத்து துண்டு துண்டாக உடைத்துவிட்டு அவள் பேகையும் தடயமில்லாமல் எரித்தவன் நிம்மதியாக வீட்டுக்குச் சென்றான்.

இரவு 10 மணியாகியும் வீட்டுக்கு வந்து சேராத தன் தங்கை கயல்விழியை எதிர்பார்த்து காத்திருந்தாள் அஷ்வினி.

தொடரும்...................

04-03-2021.
 
Last edited by a moderator:
த்ரில்லிங் எபி ???

ஒவ்வொரு எபிக்கும் வரிசையா நம்பர் போடலாமே.... இல்லனா கடைசில படிக்கிறவங்களுக்கு குழப்பிடும்.....
 
த்ரில்லிங் எபி ???

ஒவ்வொரு எபிக்கும் வரிசையா நம்பர் போடலாமே.... இல்லனா கடைசில படிக்கிறவங்களுக்கு குழப்பிடும்.....
ஓகே கா.... அப்பிடியே பண்ணிட்றேன்
 
Top