Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிரோடு கலந்தவள்

Advertisement

ரிஷி

Member
Member
Episode:01

அந்தக் கும்மிருட்டு நடு நிசியிலும் அவர் அழுகுரல் காதைக் கிழித்துக் கொண்டிருந்தது.

தன் முன் முகத்தை மூடி கையில் அரிவாளுடன் நின்று இருந்தவனை பார்த்து வேர்த்து விறுவிறுக்க அவனைப் பார்த்து கண்கள் திறந்தபடியே கீழே அமர்ந்திருந்தார் அவர்..........

அவன் யாரென்று தெரியாது இப்பொழுது எதற்கு தன் நெஞ்சில் வெட்டினான் என்றும் தெரியாது ஆனால் அவன் உருவம் மட்டும் நெஞ்சில் ஆணித்தரமாக பதிந்து போனதுதான் விந்தை...

நீண்ட நெடுநெடுவென்ற உடல்வாகு....... அவனுக்கே அடங்காமல் அவனைப் போலவே வந்து விழும் அடங்காச் சிகை....இத்தனைக்கும் அவன் யார் என்று அவருக்கு தெரியாது மறுபடியும் தன் மேல் வெட்டு விழ அவன் காலை பிடித்து கதற துவங்கினார் அவர்

" சார் ப்ளீஸ் என்னை விட்டுடுங்க......"

"இத நீ இன்னைக்கு டிரன்டர் எனக்கு எதிரா கேக்குறதுக்கு முன்னுக்கு யோசிச்சி இருக்கணும்"

" சார் இது அநியாயம்.. நீங்களும் கேட்டீங்க நானும் கேட்டேன் எனக்கு கிடைச்சுது... உங்களுக்கு எதிராக கேட்டதுனால என்ன கொல்லப் போறீங்க இது அநியாயம் இல்லையா சார்?"

"ஆமால்ல... ஆமா அது தான் எனக்கு ரொம்ப புடிச்சது"

" பாக்க ரொம்ப நல்லவர் மாதிரி இருக்கீங்க சார்... ப்ளீஸ் பண்ணி என்ன விட்டுடுங்க சார்"

" நான் நல்லவனா? என்ன பாத்து நல்லவன்னு சொன்ன முதல் ஆள் நீதான் அதுக்காக உனக்கு என் முகத்தைக் காட்டிடட்டுமா?"

என்றவன் தன் முகத்தில் கட்டியிருந்த அந்த துணியை அவிழ்க்க அவரின் வாய் "ஆர்.கே" என்று முணுமுணுத்தது அதிர்ச்சியுடன்.......

தன் கையை ஓங்கிய அருவாளால் அவரை வெட்ட இரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.....

***

காலை மணி 10

தன் முதல் கேஸை வெற்றிகரமாக முடித்த வெற்றிக் களிப்பு முகத்தில் தெரிய கோட்டை கழற்றி கையில் வைத்தவாறு மிடுக்கோடு வெள்ளை சாரியில் சிலையென நடந்து வந்தாள் "அஷ்வினி ரிக்ஷிதா"

தன் காரில் ஏறி அமர்ந்து டிரைவரிடம் இராமநாதபுரம் செல்லுமாறு கூறிவிட்டு தன் டேப்பைக் கையில் எடுத்து ஆன் செய்ய அதில் நேற்று நடந்த மர்ம கொலை பற்றிய செய்திகள் யூடியூபிலும் மற்ற சமூக வலைத்தளங்களிலும் குவிந்த வண்ணம் இருக்க அதில் ஒன்றை தட்டி பார்க்க தொடங்கினாள்.

கொலைகள் நடப்பது சகஜம்தான் எனினும் அண்மைக்காலமாக இந்த மர்ம நபரால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் கொல்லப்படுபவர்கள் அனைவரும் நேர்மையாக உழைத்து வாழும் பணக்கார வர்க்கங்கள்!!!

காரிலிருந்து இறங்கியவள் வந்ததும் வராததுமாக "அம்மா"....... என கத்திக்கொண்டே பட்டு சேலை உடுத்தி முகத்தில் தவழும் புன்னகை யுடன் சாந்தமான நடையுடன் வந்த விஜயலட்சுமியை கட்டியணைத்தாள்
"நான் ஜெயிச்சுட்டேன்மா......"

என அவரை பிடித்து சுற்றிக் கொண்டிருக்க அவளை பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார் "ராமநாதன்"-அவளுடைய அப்பா

அம்மாவை சுற்றுவதை நிறுத்திவிட்டு எழுந்து தன் அன்பு அப்பாவின் கைகள் புகுந்து கொள்ள அவர் அவள் தலையை அன்பாக வருடிக் கொடுத்தார்.

"என்ன நாட்டாமை சார் ஊர் மக்கள அரவணச்சி முடிஞ்சதோட இப்ப உங்க அன்பு மகளுக்கு ஆரம்பிச்சிட்டிங்க போலவே" என்று கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தான் "அஜய்"-
அவளின் குறும்பு அண்ணன் .
அவனை திரும்பி முறைத்துவிட்டு போலிக் கோபத்துடன்

"போடா உனக்கு பொறுத்துக்காதே"

என பழிப்பு காட்ட அவளுக்கு செல்லமாக குட்டிவிட்டு ஓட அவனைத் துரத்திக்கொண்டு ஓடினாள் ரிக்ஷிதா....

***

அந்த மூன்று மாடி அடுக்கு பங்களாவின் இரண்டாம் மாடியின் அறைக்கு பயந்து பயந்து கையில் டீ கோப்பையுடன் வந்து கொண்டிருந்த வேலையாள் கந்தையாவை சிரித்தவாறே எதிர் கொண்டான் "ஆரவ்"

"என்னண்ணே! என் அண்ணாக்கா டீ கொண்டு போறீங்க?"

"ஆமாங்கய்யா இன்னுமே மாறன் ஐயா எந்திரிகலயா அதான்"

"சரி என்கிட்ட கொடுங்க நான் கொடுத்து விட்றேன்"

என்றவன் அவரிடமிருந்து டீ கோப்பையை வாங்கி தன் அண்ணனின் அறைக்கு படி ஏறினான்.

டீ கோப்பையை அருகில் இருந்த டேபிளில் வைத்துவிட்டு தலைவரை போர்த்தி படுத்து இருந்த ஷீட்டை உருவி எடுக்க கோபத்தில் முகத்தை சுளித்தவாறே எழுந்து எழுந்து அமர்ந்தான்
"தேவமாறுதன்"-
ஆரவ்வின் அண்ணன்

"அண்ணா கோவப்படாத நா லேட் ஆகிருச்சே ஆபீஸ் போக வேணாமான்னு தான் எழுப்பி விட்டேன் டிஸ்டர்ப் பண்ணி இருந்தா சாரிணா"

எனவும் அவனை இழுத்து தன் பக்கத்தில் அமர வைத்தவன்

"டேய் உனக்கு எத்தனை தடவ சொல்லி இருக்கேன் என்ன பார்த்து பயப்படாதன்னு..... உனக்கு என்னை எழுப்ப எல்லா உரிமையும் இருக்கு டா"

"இல்ல தேவாண்ணா நீ கோபப்பட்ருவியோன்னு பயம் அதான்"

"சரி நீ கிளம்பி ரெடியா இரு நான் பிரஷ்ஷப்பாகிட்டு வந்தர்றேன்"

என்றவன் டியை பருகிவிட்டு குளியலறை செல்ல ஆரவ் கீழே இறங்கி சென்றான்.

தொடரும்...................

03-03-2021.
 
உங்களுடைய "உயிரோடு
கலந்தவள்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரிஷி தம்பி
 
Last edited:
உங்களுடைய "உயிரோடு
கலந்தவள்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரிஷி தம்பி
நன்றி கா ❤️
 
Top