Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உருமாற்றம் 3

Advertisement

Jeyalakshmimohan

Member
Member
அடுத்த நாள் காலையில் சாந்தி நேரமாக எழுந்து ரவிக்கு பிடித்த உணவாக பார்த்து பார்த்து சமைத்தாள். ரவி நேரமாக எழுந்து குளித்து புது துணி போட்டுக் கொண்டு தயாராகி "அம்மா என் துணி எப்படி இருக்கு நல்லா இருக்கா" என சாந்தி முன் வந்து நின்று கேட்டான் ரவி. இப்பதான் ரவி பிறந்தது போல் இருந்தது அதற்குள் 13 வருடம் ஓடிருச்சு, எவ்வளவு பெரியவனாக வளர்ந்து விட்டான் என கண் சிமிட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். "அம்மா என்ன கனவா என் புது துணி எப்படி இருக்குன்னு சொல்லு" என சாந்தியை உலுக்கி கேட்டான். உனக்கு என்னடா குறைச்சல் என் தங்கம் அப்படியே ராசா மாதிரி இருக்க என தலையை வருடி கொடுத்தாள்.

ரவி கேக் வெட்டி வீட்டருகில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்தான். அன்றைய நாள் அவனுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. "ரவி பொறந்த நாள் அதுவுமா கலக்குறடா, இதுவே என் பிறந்தநாள் கொண்டாட வேணும்னு ஆயாகிட்ட கேட்டா, நீ பொறந்ததே தண்டம், இதுல உனக்கு பிறந்தநாள் விழா கொண்டாடணுமான்னு" திட்டும் என்றான் சங்கிலி. "எனக்கெல்லாம் அந்த கவலையே இல்லை என்னோட பிறந்த நாளை எங்க அப்பா திருவிழா மாதிரி கொண்டாடுவார்" என பெருமையாக சொன்னான் பழனி.

சாந்தி எதிர்பார்த்தபடியே இரண்டொரு நாட்களில் முழு ஊரடங்கு போட்டுவிட்டார்கள். வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் படித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் சொந்த கிராமம் வந்து சேர்ந்தார்கள்.

சாந்தியின் தம்பி கண்ணன் ஊரடங்கு சமயத்தில் வேலை ஏதும் இல்லை என்பதால் கொஞ்ச நாள் அக்காவுடன் தங்கலாம் என அவள் வீட்டிற்கு வந்தான். அவன் அம்மாவும் சாந்தியும் தான் உலகம் என இருந்தான்.சாந்தி அம்மா இறந்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது. தம்பி நீ தனியே இருக்க வேண்டாம் எங்களுடன் வந்திடு என சாந்தி எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை. உனக்கு ஏன் சிரமம் நான் தனியா சமாளிச்சுடுவேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறி விட்டான்.

"சாந்தி அக்கா....." என அழைத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன். "டே... கண்ணா எப்படி இருக்க வாடா..... "என புன்னகையுடன் வரவேற்றாள். சாந்தியின் தம்பி பார்க்க கருப்பாக இருந்தாலும் அழகாக ஆண்மைக்குரிய உடல் பலத்துடன் இருப்பான். "நான் நல்லா இருக்கேன், மாமா பிள்ளைங்க எல்லாம் எங்க போய்ட்டாங்க? நீ எப்படி இருக்க ?" என கேட்டான் கண்ணன். "அதை ஏன் கேக்குற ஊரடங்கு போடத்துல இருந்து மாமா பிள்ளைகளோடு சேர்ந்து எப்பவும் நாள் முழுக்க விளையாடிட்டு தான் இருக்காரு. சரி நீ போய் சோப்பு போட்டு கை கழுவிட்டு வா நான் குடிக்க ஏதாவது கொண்டு வரேன்" என்றாள்.

"ஆமாக்கா தினமும் ஹோட்டலில் சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சு, உன் கையால ஒரு காபி கொடு" என சொல்லிவிட்டு கை கால்களை கழுவி கொண்டு வந்து அமர்ந்தான். சாந்தி சமையல் அறையில் இருந்து வெளியே வந்து இந்த குடி என டம்ளரை நீட்டியபடி "நீ ஏன்டா தனியா கஷ்டப்படுற இங்கேயே எங்க கூடவே இருக்கலாம் இல்ல" என்றாள். சரி அக்கா என சொல்லிவிட்டு கண்ணன் டம்ளரை வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு "வ்வே... என்ன இது வர காப்பியா ? இப்படி கசக்குது' என்றான். "அது நிலவேம்பு கசாயம் குடிடா உடம்புக்கு நல்லது" என்றாள் . "என்னது கசாயமா காபி தானே உன் கிட்ட கேட்டேன்' என்றான். "இப்ப எல்லாம் காப்பி போடுறது இல்ல காலைல நிலவேம்பு கசாயம் இல்லனா கபசுர குடிநீர் தான் குடிக்கிறோம் அதுதான் உடம்புக்கு நல்லது' என்றாள். "அப்போ இன்னைக்கு சாப்பாட்டுக்கு என்ன செய்வ வேப்பந்தழை சட்னியா" என கேட்டான். "இல்லடா வேப்பம்பூ ரசம் பாவக்காய் பொரியல்" என்றாள். "போக்கா இதுக்கு நான் ஊரிலே இருந்திருக்கலாம்" என சலித்துக் கொண்டே சொன்னான். "எனக்கு ஒரு உதவி செய்டா கண்ணா ரெண்டு வீடு தள்ளி ஒரு வேப்பமரம் இருக்குல்ல, அந்த மரத்தில் ஏறி ரெண்டு கொத்து வேப்பந்தழை ஒடிச்சிட்டு வா" என்றாள். "எதுக்கு அக்கா அதான் வாசல்ல இரண்டு பக்கமும் ஏற்கனவே நிறைய வேப்பந்தழை சொருகி வெச்சிருக்கியே" என கேட்டான்.

"பிள்ளைகளுக்கு வேப்பந்தழை போட்டு தண்ணீர் காயவைத்து ஊத்துனா நோய் நொடி வராது அதுக்குதான். போடா போய் ஒடிச்சிட்டு வா" என்றாள். வேப்பமரம் சங்கிலி வீட்டின் அருகே இருந்தது. கண்ணன் மரத்தில் ஏறி இரண்டு கொத்துக்களை ஒடித்துக் கொண்டிருந்தான். அப்போது சுடிதார் அணிந்த ஒரு அழகான இளம் பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். வீசிய தென்றல் காற்றில் அவள் துப்பட்டா காற்றில் ஊஞ்சலாடி அவள் முகத்தை மறைத்தது. யாருடா அது நம்ம ஊர்ல இவ்வளவு அழகான பொண்ணு இல்லை தேவதை என யோசித்தபடியே அவளை பார்க்க வேகமாக கீழே குதித்தான். அவள் ஆ... என அலறி பயத்தில் பின்னே நகர்ந்து விழ போனவளை கண்ணன் தாங்கி பிடிக்க நினைத்தான். அதற்குள் நடுவே வந்த சின்னத்தாயியை தாங்கி பிடித்து விட்டான். அந்த பெண் அவன் செய்த காட்சியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள். அவனோ கண் கொட்டாமல் அவள் சிரிக்கும் அழகை பார்த்து ரசித்தான். "எந்த ஊருடா நீ இங்கே வந்து வேப்பந்தழையை ஒடிச்சிட்டு இருக்க, கொரோனா வந்ததும் வந்துச்சு வேப்பமரத்தை மொட்டை அடிச்சுட்டானுங்கா" என்றாள் சின்னத்தாயி. "நான் சாந்தி அக்காவின் தம்பி கண்ணன்" என அந்தப் பெண்ணை பார்த்து வழிந்தவாறே சிரித்துக்கொண்டே சொன்னான். சின்னத்தாயி அவன் முகத்தை திருப்பி, "கேட்டது நானு அங்க என்ன பார்வை" என்றாள்.

"ஆயா.... அப்பா உங்களை காலைல நேரமா வர சொன்னார், செடிக்கு எரு அள்ளி வைக்கனுமாம். உங்க கூட இன்னொரு ஆளை கூட்டிட்டு வர சொன்னார்" என சொன்னாள் அந்தப் பெண். "சரி கண்ணு நான் வீட்டு வேலைய முடிச்சிட்டு சீக்கிரமா வந்துதுடறேன்" என்றாள் சின்னதாயி. என்ன குரல்... அப்படியே குயில் பாடுற மாதிரி இருக்கு என அவள் போகும் திசையை பார்த்து சொன்னான். பிறகு சின்ன தாயிடம் "அந்த பொண்ணு யாரு, நான் பார்த்ததே இல்லையே" என விசாரித்தான். "அது பூந்தோட்ட மாணிக்கத்தோட மகள், வெளிநாட்டுல எல்லாம் போய் படிச்சி வந்திருக்கு சும்மா அந்த பிள்ளையை பார்த்து வாயை பொளந்துகிட்டு நிக்காத" என்றாள் சின்னதாயி. "என்ன வெளிநாட்டுல எல்லாம் போய் படிச்சி இருக்கா ? ஒரு வேலை அமெரிக்கால படிச்சு இருக்குமோ" என்றான். இல்லடா மடையா இங்க இருக்க அம்மாபேட்டை இல்ல, அந்த பொண்ணு பெங்களூர்ல.... போய் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு வந்து இருக்கு" என பெருமையாக சொன்னாள் சின்னதாயி. "என்ன பெங்களூரு உனக்கு வெளிநாடா... உன் கிட்ட போய் கேட்டேன் பாரு, மறுபடியும் அந்த தேவதை தரிசனம் எப்ப கிடைக்குமோ" என சொல்லி பெருமூச்சு விட்டபடியே வேப்பங்கொத்துகளை எடுத்து சென்றான்.

"ஏய் சாந்தி.... இன்னைக்கு பூவெடுக்க வரலையா மணி ஏழு மணி ஆகுது" என வாசலில் இருந்தே சத்தம் போட்டாள் அலமேலு. "உனக்கு விஷயமே தெரியாதா ஊரடங்கு போட்டதால பூக்கடை எல்லாம் இருக்காது இல்ல, பூவெடுத்து மட்டும் என்ன செய்றது. அதனால மாணிக்கம் ஐயா எடுக்க வேண்டாம் உங்களுக்கு தலைக்கு வேணா எவ்வளவு வேணும்னாலும் பறிச்சிட்டு போங்கனு சொல்லிட்டாரு" என்றாள் சாந்தி. "சரி நான் பூவெடுக்க போறேன் எங்க வீட்டிலதான் மூனு பொட்ட புள்ளைங்க இருக்கே என்னையும் சேர்த்து நாலு பேர். பரிமளாவுக்கு பூ வைக்கிறது ரொம்ப பிடிக்கும்" என்றாள் அலமேலு.

அலமேலு மல்லிகை தோட்டத்திற்கு வரும் முன்னே இரண்டு பெண்கள் பூ எடுத்துக் கொண்டிருந்தார்கள். "ஊரடங்கு போட்டதால இப்போ வேலை தான் இல்லாம போச்சுனு பார்த்தா மல்லிகை பூ எடுக்குற வருமானமும் போச்சு" என்றாள் ஒரு பெண். "காசுக்கு பூ எடுக்கிற நீயே இப்படி கவலை படுறியே பூந்தோட்டம் வச்சிருக்கவங்க என்ன பண்ணுவாங்க, சரியா மகசூல் அதிகம் வர நேரம் பார்த்து ஊரடங்கு போட்டுட்டாங்க. எவ்வளவு பராமரிப்பு செய்து வளர்த்து கடைசியில பூ எடுக்க முடியாம செடியிலேயே பூவெல்லாம் வெடித்து வீணா போகுது" என்றாள் அலமேலு. "இந்த முறை சாமந்தி பூ வெள்ளாமை செஞ்சவங்க எல்லாத்துக்கும் நஷ்டம் தான். மாடசாமி அண்ணன் நாலு வயலுக்கு சாமந்தி போட்டு இருக்காரு. வயல் உழுது செடிகளை வைத்து, களை வெட்டி , உரம் போட்டு, தண்ணி கட்டி பாத்து பாத்து வளத்து சரியா சாமந்திப்பூ வர சமயம் பார்த்து ஊரடங்கு போட்டுட்டாங்க. பூ மார்க்கெட் இல்லாததால் சாமந்திப்பூ எடுக்காம அப்படியே செடியோடு காஞ்சி போகுதுன்னு கவலைப்பட்டு புலம்பிட்டு இருக்காரு" என்றாள் மற்றொரு பெண்.

கொரோனா வைரஸ் பரவிய ஆரம்ப கால கட்டத்தில் அந்த நோயை பற்றி பூங்குளம் மக்களிடம் சரியான புரிதலும் விழிப்புணர்வும் இல்லாமல் இருந்தது.

போன வருடம் ஊரில் அம்மனுக்கு திருவிழா நடத்தாததால் இந்த மாதிரி புதுசு புதுசா நோய் வருது என சில பெரிசுகள் பேசிக்கொண்டனர். ஆமா திருவிழா நடத்தலைனா நம்ம ஊருக்கு மட்டும் தான் நோய் வரணும் ஆனா உலகமே இல்லை நோய் பரவி கிடக்கிறது என இளவட்டங்கள் பேசிக் கொண்டனர். இப்ப புதுசு புதுசா நோய் பரவுது அதனால ஊர் மக்கள் எல்லோரும் வீடு வாசல் சுத்தமா வச்சிக்கணும், வாசலுக்கு சாணி போட்டு மஞ்சள் தண்ணீர் தெளித்து ஒரு குடத்தில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வைத்து வேப்பங்கொத்தை சொருகி வைத்து, எல்லாரும் அவங்க அவங்க வாசல் முன்னாடி அந்த குடத்தை வைத்து விளக்கேற்றி சாமி கும்பிட வேண்டும் என ஊர் தலைவர் சார்பாக தெரிவிச்சிக்கிறோம் என ஊர் முழுவதும் துடும்பு அடித்து சொல்லப்பட்டது.

பூந்தோட்டகாரர் மாணிக்கம் ஐயா மகள் வெளியூரில் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். ஊரடங்கு போட்டதால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் பூங்குளம் கிராமத்திற்கு வந்து விட்டாள் .அவள் கிராமத்தில் பிறந்து இருந்தாலும் அவள் அப்பா அவளை நகரத்தில் பெரிய கல்லூரியில் படிக்க வைத்தார்.

அனிதாவுக்கு கல்லூரி விடுமுறை என்பதால் எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக அவள் தோழியுடன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். "என்னடி எப்பவும் போனும் கையுமா இருக்க போய் வாசல கூட்டி சாணி போடு" என்றாள் அவள் அம்மா. "முடியாது போமா. நீ என்ன செய்ற நீயே போய் கூட்டு" என்ற அனிதாவின் காதை திருகி அம்மா சொன்னாள் "இப்படி ஒரு வேலை கூட செய்யாமல் இருந்தால், நாளைக்கு நீ கட்டிக்க போற இடத்தில ஒன்னுமே தெரியல உனக்கு உங்க அம்மா என்ன சொல்லி கொடுத்தாங்கனு என்னதான் திட்டுவாங்க" என அம்மா கூறினாள்.

சரி நீ உன் அர்ச்சனையை ஆரம்பிக்காத செய்கிறேன் என சொல்லிவிட்டு வாசலை கூட்டி தண்ணீர் தெளித்தாள். உன்ன சாணி தான தெளிக்க சொன்னேன் என்றாள் அம்மா. "அம்மா இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல. காலைல தான் சாணி தெளிப்பாங்க இப்போ சாயந்தரம் மணி ஆறாக போகுது தெரியுமா" என்றாள். “இருக்கட்டும் இப்ப புதுசு புதுசா நோய் பரவி கிடக்கு. வாசலுக்கு சாணி தான் போடணும்னு துடும்பே போட்டுட்டாங்க தெரியுமா" என்றாள் அம்மா. நீயே என்ன செய்யனுமோ செஞ்சிக்கோ என் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள் அனிதா.

அவள் அம்மா பக்தியுடன் துடும்பு போட்டதில் சொன்னபடியே சாணி தெளித்து மஞ்சள் தண்ணீர் குடத்தில் வேப்பங்கொத்தை சொருகி வாசலில் வைத்து விளக்கேற்றி வைத்தாள். அதேபோல் அந்த ஊர் மக்கள் எல்லோரும் அவரவர் வாசலில் மஞ்சள் தண்ணீர் குடத்தை வைத்து விளக்கேற்றி வைத்தனர். சிரித்துக்கொண்டே இப்படி செஞ்சா கொரோனா போய் விடுமா என கிண்டல் செய்தாள் அனிதா. ஆனால் பெரியவர்களோ பயபக்தியுடன் கடவுளை வேண்டி குடத்தை வைத்து விளக்கேற்றினர். "அங்க நோய்க்கு மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்க இரவு பகலாக ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க. நீங்க இப்படி காமெடி செஞ்சிட்டு இருக்கீங்க" என்ன சொல்லி சிரித்தாள். அவள் பேசுவதை கேட்டு கொண்டிருந்த மாணிக்கம் "தப்புமா இப்படி எல்லாம் கிண்டல் பண்ண கூடாது. டாக்டர் எல்லாம் அவங்க கடமையை செய்கிறார்கள். விளக்கு வைக்கிறது மஞ்சத்தண்ணி தெளிக்கிறது எல்லாம் நம்ம முன்னோர்கள் நம்பிக்கை அதை மதிக்க கற்றுக்கொள்" என்றார். அனிதா ஏதும் பேசாமல் அமைதியாக தலையாட்டினாள்.
 
Nirmala vandhachu ???
 
Top