Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -03

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -03

அந்த நேதாஜி காலனியில் மொத்தம் ஆறு வீடுகள் இருந்தன... அந்த வீடே அழகான தோட்டம் போல் இருந்தது... ஒவ்வொரு வீட்டின் முன்பக்கமும் பூச்செடிகள் அதுவும் நிறைய ரோஜா பூக்கள் இருந்தன. ஒரு பக்கம் மூன்று வீடுகள் விதம். தெரு முடிவில் அம்மன் கோவிலும் இருந்தது..

மென்மலர் காரின் கதவை திறந்து பேக்கை வீட்டின் வெளியே வைத்தாள்.. அப்பா இப்போ உயிரோட இல்லை ஜீஜே எனவும்..

இல்ல நான் வரல... சொல்லும் போதே.. அங்கிருந்த ஒரு பெண் குழந்தை மலர் அக்கா வந்துட்டாங்க என்று கத்திக்கொண்டே வீட்டிற்குள் ஓடியது.

வாங்க தம்பி என்று நடுதர வயதுடையவர் காரின் கதவை திறந்தார்... ஜீஜே இவர் நடேசன் மாமா.. ஜீஜேவை தூங்கி சேரில் உட்கார வைத்தார்.. அவள் வீட்டின் முன்னே பத்துபேருக்கு மேல் கூட்டம் கூடியது..

மிரண்டு போய் மலரை முறைத்தான்... கண்களாலே கெஞ்சினாள் அவள்... ஸாரி ஜீஜே.

அப்படியே இருங்க என்று ஆரத்தி தட்டை எடுத்து வந்தார் வைதேகி நம்ம நடேசனுடைய மனைவி... இருவருக்கும் சேர்த்து ஆரத்தி சுத்தினர்...

அங்கே வந்த ஜானகி பாட்டி தம்பி நீங்க துபாய்ல இருந்தா வறீங்க... நம்ம மலர் அப்பா இறுதி சடங்குக்கூட வரலையே தம்பி... சொந்த மாமாதானே..

மாமாவா... கண்களை விரித்து மென்மலரை முறைத்தான்..

மாமா... என்று ஹரி மலரின் தம்பி ஜீஜேவை அனைத்துக் கொண்டான்.. அபியும் அவன் பக்கத்தில் வந்து நின்றாள்...

எல்லாமே வித்தியாசமாக இருந்தது அவனுக்கு...

தம்பி நீங்க துபாய்ல நடிக்கரா இருந்தீங்கல இம்பூட்டு அழகாக கலரா இருக்கீங்க ஜானகி பாட்டி அவனின் கண்ணத்தை தொட்டு சிருஷ்டி கழித்தாள்..

அப்பதான் லைட்டாக சிரித்தான் ஜீஜே..

இங்கேவா பேசுவீங்க... அவருக்கு ரெஸ்ட் வேணும் உள்ளே போக விடுங்க என்று தாமஸ் சொல்ல..

அவனை உள்ளே கூட்டிச் சென்றனர்..

சாதாரணமான இரண்டு பெட்ரூம் கொண்ட வீடு... சின்னதான சமையல் அறை.. மேலே ஒரு ரூம் இருந்தது..

இவங்க சரோ ஆன்ட்டி என்று அறிமுகப்படுத்தினாள் மென்மலர்...

தம்பி, நாங்கெல்லாம் இங்க குடியிருக்கிறவங்க... ஒரே பேமிலியாதான் பழகுவோம்... பிள்ளைங்க அப்பாயில்லாம ரொம்பவே கஷ்டப்பட்டுடாங்க... இப்போ நீங்க வந்துட்டிங்க அதுபோதும்... அவனுக்கு காபியை கொடுத்துவிட்டு பேசினார்...

பெரிய கூட்டமே கிளம்பி போனது... பெருமூச்சு விட்டான் ஜீஜே...

அவனை ரூமிற்கு கூட்டிக்கொண்டு போனாள்...

நீ ரெஸ்ட் எடுத்துக்கோ ஜீஜே.... அவள் எஸ்கேப் ஆக பார்க்க..

ஏய் நில்லு... என்ன டிராமா ஓடுது..

வார்த்தையை மென்னு முழுகினாள்... அது வந்து..

சொல்லு என்று பல்லை கடித்தான்..

உங்கள என் அத்தை பையன்னு சொல்லிட்டா அபி.. தெரியாம சொல்லிட்டா... சொந்தக்காரன்னு சொன்னாதான் நம்புவாங்க..

அதுக்கு வேற உறவு முறையே தெரியலையா...

ஸாரி ஜீஜே... தலை கவிழ்ந்து நின்றாள்..

அந்த நிமிடம் அமைதியாக போனது... பெட்டில உட்கார எனக்கு ஹெல்ப் செய் மலர்...

அய்யோ ஸாரி ஜீஜே.. மறந்துட்டேன்... அவனை பிடித்துக்கொண்டு உட்கார வைத்தாள்...

வெளியேறும் போது, ஏஸி ஆன் செஞ்சிட்டு போ மலர் ஜீஜே சொல்ல..

அப்படியே நின்றாள்.. ஏஸியா எங்கயிருக்கு.. ஜீஜே இந்த குளிரல ஏஸி எப்படி..

எப்படியா காலையில வெயில் காய்து மலர் நிமிர்ந்து சுவற்றை சுற்றி பார்த்தான்..

ஏஸி இல்லையா...

சன்டே வாங்கி ஃபிட் செஞ்சிடுறேன்பா... அவளை கேவலமாக பார்த்துவிட்டு போ நீ..

மதியம் உணவு சமைக்க ஆரம்பித்தாள் மென்மலர்... அடுத்த ஒரு மணிநேரத்தில் அவர்கள் வீட்டு காலிங் பெல் அடிக்க, ஓடிவந்து கதவை திறந்தான் ஹரி...

அக்கா.. அக்கா என்று கத்தி அழைக்க..

என்னடா என்று கையை துடைத்துக்கொண்டு கதவருகே வந்தாள்... மூன்று ஆட்கள் கையில் புது ஏஸி பாக்ஸோடு வந்திருந்தார்கள்..

மேம்.. நான் சத்யா ஷோரூமிலிருந்து வந்திருக்கோம்.. ஆர்டர் கொடுத்திருந்தீங்க...ஜீஜே..ரிஷி..

ஹாங்.. இங்கதான்.. ஒரு மணிநேரத்தில் ஏஸி பொருத்தப்பட்டது...

ரிஷி எதுக்கு இப்படி பணம்போட்டு வாங்குறீங்க...

நான் கொடுக்கிற வாடகையில கழிச்சிகோ மலர்...

நீங்க கிளம்பிட்டா நாங்க யூஸ் பண்ணவே மாட்டோம் ஜீஜே..

ச்சே.. இதுக்குதான் நான் சொன்னனே, எனக்கு வசதியா இருக்காது.. நீதான் கூட்டிட்டு வந்தே..

....

இரவு எட்டு மணிக்கு, ஜீஜே சாப்பிட்டு தூங்குங்க... அவனின் ரூமிற்கே தட்டில் போட்டு எடுத்துவந்தாள்..

என்னது தோசையா... எனக்கு பிடிக்கல மலர் சாப்பாடு வேணாம்..

ஜீஜே... மெடிசின் போடனும் சாப்பிட்டாதான் முடியும்..

ஒரு தோசையை உண்டு முடித்தான்.. அவனுடைய லேப்டாப், செல்போன், இயர்போன் என்று அனைத்தும் அவனுடைய பெட் சுற்றியிருந்தது.. காதில் போட்டுக்கொண்டு ஒருவனை தீட்டிக்கொண்டிருந்தான்...

ஒரு ஆபிஸே நடப்பதுபோல் இருந்தது அந்த ரூம்..

ஜீஜே பால் எடுத்துட்டு வந்திருக்கேன்..

வச்சிட்டு போ என்றான்..

அந்த ரூம் மட்டும்தான் பெரியது போல, மூவரும் வெளியே உள்ள ஹாலில் படுத்துக்கொண்டார்கள்...

ரூமிலிற்கும் ஜன்னல் ஹாலை பார்ப்பதுபோல் இருக்கும்...

அவர்கள் மூவரையும் பார்த்துக்கொண்டே இருந்தான்.. தூக்கம் வரவில்லை அவனுக்கு.. காலில் வலிவேற இருந்துக் கொண்டேயிருந்தது.. அவன் தூங்கியதோ மணி மூன்று...

விடியற்காலை ஹாலில் லைட் எறிய, அந்த வெளிச்சம் அவன்மேல் விழுந்தது.. கண்ணை சுருக்கி திறந்து பார்த்தான்.. குளித்துவிட்டு சாமியின் முன் விளக்கு ஏற்றினாள்..

பிறகு சாம்பிரானி புகைபோட்டு எல்லா இடத்திலும் காட்டினாள்... அவள் மணியடித்தது.. தூக்கத்தை தொலைத்து நிமிர்ந்து உட்கார்ந்தான். காலையிலே எழுப்பிட்டாளே...

ப்ளவர் என்று அவன் கத்த..

என்னாச்சோ என்று ஓடி வந்தாள்..

என்ன ஜீஜே...

காலையிலே ஏன் டிஸ்டர்ப் செய்யற..

ஜீஜே.. மணி 6.30 ஆயிடுச்சு.. இன்னைக்கு வெள்ளிக்கிழமை வழக்கமா பூஜை பண்ணுவேன்.. ஸாரி..

கண்ணை மறைக்கும் மாஸ்க்கை போட்டுக்கொண்டு மறுபடியும் படுத்துவிட்டான்...

அவளின் தங்கை, தம்பியை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, கையில் காபியோடு அவனை எழுப்பினாள்..

ஜீஜே...

ம்ம்... டைமாயிடுச்சு... ப்ரஷ் அப் செய்யவேணாமா..

அவனை பாத்ரூமிற்குள் விட்டு வந்தாள்.. முகம் கழுவி தனது கடமைகளை முடித்துவிட்டு அவளை அழைத்தான்..அங்கே வாக்கிங் ஸ்டிக் இருக்கு பாரு, அதில பயிற்சி செய்ய சொன்னாரு டாக்டரு.. அதை எடுத்து தா என்றான்...

அந்த ஸ்டூலை தூக்கி வைத்தபடி நடந்து மெல்ல பெட்டில் உட்கார்ந்தான்...

அவனின் காலை தூக்கி மெதுவாக பெட்டில் வைத்தாள்...

ஜீஜே.. டிபன் என்று இட்லி, சாம்பாரை தட்டில் வைத்தாள்..

ஏன் இப்படி செய்யற... பிரட், ஆம்பலேட் மூனு போட்டு எடுத்துட்டு வா.. அதான் காலையில நான் சாப்பிடுவேன்...

இட்லியும் சாம்பாரும் நல்லாதான் இருக்கும் ஜீஜே.. ஈவினீங் செஞ்சு தாரேன்..

நோ..நோ நான் ஸ்வீக்கில ஆர்டர் செஞ்சுக்கிறேன்..

நான் ஆபிஸூக்கு போயிட்டு மதியம் இரண்டு மணிக்கு வந்துடுவேன்.. ஏற்கனவே ஒருநாள் லீவ் போட்டுட்டேன்..

எந்த ஆபிஸூ..

இங்கயிருக்கிற ஜெய்சிம்மன் எஸ்டேட்ஸ்.. நம்ம நரசிம்மன் ஐயாவோடது ஜீஜே.. இன்னைக்கு என்னை பார்க்க வருவாரு... அதான்.

அவர்தான் அப்பா போனதுக்கு அப்பறம் வேலைபோட்டு கொடுத்தாரு ஜீஜே... நான் போயிட்டு வந்துடவா..

ம்ம்.. நான் மேனேஜ் பண்ணிக்குவேன் ப்ளவர்.. யூ கோ..

.....

மணி பத்தானது... ஜெஸி வந்தார்கள் தாமஸின் மனைவி..

தம்பி இந்தாங்க சிக்கன் சூப் கொஞ்சம் குடிங்க வலியெல்லாம் சரியா போகும்.. பவூலில் போட்டு கொடுத்தாள்..

தாங்க்ஸ் ஆன்ட்டி...

ஏதாவது தேவையன்னா ஜெஸின்னு கூப்பிடுங்க, நான் வரேன் பக்கத்து வீடுதான் நம்மளது..

அடுத்த அரைமணி நேரத்தில் எதிர்வீட்டு காய்த்ரி வந்தார்கள்... தம்பி என்று குரல் கொடுத்துக்கொண்டே வந்தாள்..

உங்களுக்காக பில்டர் காபி போட்டு எடுத்துட்டு வந்தேன் என்று கப்பில் ஊற்றி கொடுத்தாள்..

குடிச்சிட்டு எப்படியிருக்குது சொல்லுங்க... பின்னாடியே சீனுவாசன் வந்தார்... காய்த்ரியோட புருஷன்..

தம்பி உங்களை பாத்ரூமிற்கு கூட்டிட்டு போகனுமா சொல்லுங்க என்றார்..

இல்ல இப்பதான் போயிட்டு வந்தேன் அண்ணா , இவனைவிட ஒரு ஐந்துவயது பெரியவன் போல் இருப்பார்.. அவர்களுடைய பெண் பிரியா தான் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள்...

இப்படியே அரைமணிக்கு ஒருவர் வந்துபோய் இருந்தார்கள்..

நொந்து போய்விட்டான்.. கடைசியாக மலர் வந்தாள்..

ஜீஜே சாப்பாடு எடுத்து வைக்கவா சொல்ல..

இங்க வா என்று அவனின் அறைக்குள் வர சொன்னான்..

மென்மலர் உள்ளே சென்று பார்க்க.. அவனை சுற்றி எல்லா பொருட்களும் இருந்தது..

மரியாதையா ஐந்து நிமிசத்தில இதையெல்லாம் டிஸ்போஸ் பண்ணு... இல்ல..

தூங்கவா விடுறீங்க.. இதுக்கு ஹோட்டலே பெட்டர் போல...

அய்யோ கோபமா இருக்கான்னே... சுத்தம் செய்தபடியே கூறினாள்... இங்க நாங்க எல்லாம் உறவுமுறை வைத்து வாழுறோம் ஜீஜே.. அப்பா போனது பிறகு.. இவங்கெல்லாம் என்னை மகளா தாங்குறாங்க... எனக்கு வேற உறவும் இல்ல..

போதும்... அழறதை நிறுத்து, இதையெல்லாம் சாப்பிட்டு வயிறே பெரிசா போயிடுச்சு... மலர்..

......
..... மயக்கம்
 
Nirmala vandhachu ???
 
உறவாக இருந்த தந்தையை இழக்க
ஊரே உறவாக மாறி இருக்க
உதவி என அவனை பாடு படுத்த....
உண்மையான உறவை சீக்கிரம்
உன் மனம் கண்டு கொள்ளும்.....
 
சுத்தி இருக்கிற நல்ல உள்ளங்கள்
அருமையான துணை
 
Top