Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கேயோ பார்த்த மயக்கம் -06

Advertisement

lakshu

Well-known member
Member
எங்கேயோ பார்த்த மயக்கம் -06

இரவு நேரம் அந்த குன்னூர் பகுதி முழுவதும் காற்றோடு சேர்ந்த சிறு தூறல் பன்னீர் போல் தூவிக்கொண்டிருந்தது...

அந்த ஈரபதம், இடமே குளீர ஆரம்பித்தது... ஏழுமணிக்கே ஊரே அடங்கிவிடும்... ஆனால் மென்மலரோ ஸ்வெட்டரை போட்டுக்கொண்டு டிவியை பார்த்துக்கொண்டிருந்தாள்...

இரவுநேர சாப்பாடு ரெடியாகிவிட்டன.. அபியும் அவன் தம்பி ஹரியும் சாப்பிட்டு தூங்க ஆரம்பித்தார்கள். மதியமும் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டான்..

சுவர் கடிக்காரத்தை பார்த்தாள், மணி ஒன்பதானது... அந்த ராக்கி பையன் ஏதோ பார்சல் எடுத்துவந்தான்... அப்பறம் என் ரூம் பக்கம் வராதே என்று போன்போட்டு சொல்லிட்டான் இந்த ஜீஜே... போய் பார்க்கலாமா..கதவை தாள்போட்டிருக்க மாட்டான்...

உள்ளுக்குள் புலம்பிய படியே குறுக்க நடுக்க நடந்துக்கொண்டிருந்தாள் மலர்... அவளும் சாப்பிடவில்லை... ஏதோ மூட் அவுட் போல.. அதான் இப்படி சிடுசிடுன்னு முகத்தை வெச்சிருக்கான்..

ப்ளேட்டில் அவனுக்கு உணவை எடுத்துக்கொண்டு கதவை இரண்டு தட்டு தட்டினாள்..

பிறகு கதவை திறந்து உள்ளே பார்க்க.. ஜீஜேஜே... என்ன செய்றீங்க... அவன் கையிலிருந்த கண்ணாடி சில்லுயை பிடுங்கி எறிந்தாள்...

சிறிது நேரம் கழித்துதான் அந்த ஆல்ஹகால் நெடி அவள் மூளைக்கு உறைத்தது...

என்ன ஜீஜே இது... அவனின் வலது கையை பிடித்துக்கொண்டு கேட்டாள்..

அவளிடமிருந்து கையை உதறினான்...

தன்னிலை கண்டு அவனுக்கு வெறுப்பானது... உன்னை யாரு உள்ளே வரச்சொன்னது... வெளியே போ..

ஜீஜே நீங்க பேஷன்ட் டிரிங்க்ஸ் குடிக்க கூடாது... கையை வேற கிழிச்சிக்கிறீங்க... என்னாச்சு உங்களுக்கு..

உன்னை நான் காப்பாத்த சொன்னேன்னா.. வெளியே போ..என்று கத்தினான்... கையிலிருந்த கிளாஸை தூக்கி எறிந்தான்...

அந்த ரூமின் கதவை தாளிட்டு திரும்பினாள். அவன் கண்கள் நிம்மதியில்லாமல் அலைபுறுதலை பார்த்தாள்

ஜீஜே என்று இரு கைகளை விரித்து அவனை அழைக்க... அவளின் வயிற்றில் தன் தலையை வைத்து இறுக்க கட்டிக்கொண்டான்.

அவளுக்கு அவனின் செயல் சிறுபிள்ளைபோல் தோன்றியது..

அவனின் தலையை தடவியபடி... இந்த குட்டிபையனுக்கு என்னாச்சு... என் ஜீஜே இப்படியிருக்க மாட்டானே, மத்தவங்களை மிரட்டிதானே பழக்கம்...

ம்ம்... அவன் தலையை ஆட்ட.

நீ வாழ்க்கையில தோத்து போயிடுவேன் பயப்படுறீயா ஜீஜே.. அவள் கேட்ட கேள்வியில் தலையை நிமிர்ந்து அவளின் பிறை முகத்தை பார்த்தான்...

காலேஜில் பார்த்த மலர் சிறியப்பெண்.. இன்று எவ்வளவு பொறுப்பாக மாறியிருக்கிறாள்..

என்ன அப்படி பார்க்கிற ஜீஜே.. மதியத்திலிருந்து நீ சாப்பிடவேயில்ல, அதனால நானும் சாப்பிடல..

நீயேன் சாப்பிடல உனக்கென்ன தலையெழுத்து...

ஜீஜே... என்று அவன் அருகில் உட்கார்ந்தாள்... உனக்கு என்ன பிரச்சனையின்னு எனக்கு தெரியாது... ஆனா சிங்கத்தோட கண்ணு மாதிரி ஜீவாலையா இருக்கும் உன் கண்ணு

என் கண்ணு.. ஏன்டி இப்படி காமெடி பண்ற, நான் ரொம்ப மனவருத்ததில இருக்கேன் விட்டுடு ப்ளீஸ்..

ப்ச்..ஜீஜே எனக்கு உன்னை பற்றி எல்லாமே தெரியும்..

ஒரு டேஷ்ஷூம் தெரியாது என்று பழையபடி முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டான்...

அவன் நாடியை பிடித்து என்ன ஜீஜே இப்படியிருக்க...

நான் உன் மடியில தலைவச்சி படுக்கவா..

எதுவும் யோசிக்காமல் ,ம்ம்... என்று அவனை தன் மடியில் படுக்க வைத்தாள்...

எனக்கு விவரம் தெரிஞ்சி எங்கம்மா மடியில படுத்தது இல்ல மலர்... அவள் அவன் தலையை கோத...

ஒரு பொறுப்பில்லாத அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பிறந்த நான் எப்படி நல்லவனா இருப்பேன் மலர்...

ஜீஜே அப்படி அம்மாவ சொல்லக்கூடாது...

சொல்லுவேன் ஆயிரம் முறை சொல்லுவேன்... சிறுவயதிலே போர்டிங் ஸ்கூல் ,அவங்க வீட்டுக்கு கூட்டிட்டே போனதில்ல... பள்ளிபடிப்பை முடிச்சிட்டு காலேஜ் சேரலாம் என்று சென்னைக்கு வந்தா...

ஒரு கார்ல எங்கம்மா பார்ட்டி முடிச்சிட்டு குடிச்சிட்டு வராங்க, எங்கப்பா இன்னொரு பொம்பளையோட ச்சே பேசவே நா வரல..

அன்னையிலிருந்து நான் கெஸ்ட் ஹவுஸ்ல தங்க ஆரம்பிச்சிட்டேன்... பணக்காரனா இருந்து என்ன பிரயோஜனம்... நீயே கேள்வி பட்டிருப்ப... நிறைய கேர்ள் பிரண்ட்ஸ், டேட்டிங், எல்லாம் என் பணத்துக்காக தான் மலர்...

அப்பறம் ஒரு வருடம் கழிச்சு எங்கம்மா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க... அடுத்தமாசமே எங்கப்பா இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டார்...

இந்த வயசுல கல்யாணமா , அம்மா செத்து ஒரு மாசம் கூட ஆகலன்னு கேட்டா... அவங்கதான் அவருடைய பழைய லவ்வராம் லீவிங்ல இருந்தாராம்...

அப்படின்னா...

கீப்பா வச்சிட்டிருந்தாரு மலர்... காலேஜ் முடிச்சிட்டு பாரின்ல எம்.பி.ஏ படிச்சேன்.. அப்பறம் இங்கவந்து அவருடைய பிஸினஸ்ஸை பார்த்துகிட்டேன். பிஸினஸ்ல கில்லாடிதான் அவரு..

ஒரு கட்டாயத்தில தான் நான் கம்பெனி பொறுப்பை ஏற்றுக்கிட்டேன் மலர்.. நல்லாதான் போயிட்டிருந்தது. ஒரு மீட்டிங்காக பூனே போனேன், அப்ப எனக்கு பழக்கம் ஆனவதான் மாயவர்த்தினி...

அவ ரொம்ப அழகா, மார்டனா இருப்பா, அதான் என்னை ரொம்ப கவர்ந்துச்சு.... அப்பறம் புத்திசாலி கூட.. அவளும் சின்னதா கம்பெனி ரன் பன்னுறா.. எனக்கு அவள பிடிச்சிருந்தது... அவளுக்கு ஒரே சித்தப்பா மட்டும்தான் சரி இரண்டுபேரும் பேசி மேரேஜ் பண்ணிக்கலாம் முடிவு பண்ணோம்.. எங்கப்பாவும் சம்மதிச்சாரு ஹோட்டல் கிராண்ட் பேலஸ்ல என்கேஜ்மென்ட் வச்சிக்கலாம் அடுத்தவாரம் கல்யாணம் வரை பிக்ஸ் செஞ்சோம்...

நாளைக்கு நிச்சியதார்த்தம், நான் பத்திரிக்கை எடுத்துட்டு என்னுடைய பிஸினஸ் பிரண்ட் பாலாவை பார்க்கலாம் என்று அவன் தங்கிருக்கும் ஹோட்டலுக்கு போனேன்... அப்பதான் நான் அந்த காட்சியை பார்த்தேன்... மாயா அவன்கூட ரிலேஷன்ல இருந்தா...

எனக்கு ஷாக்காயிட்டு அவ கண்ணத்திலே ஒரு அறைவிட்டேன்... என்ன பொண்ணுடி நீ..

நாளைக்கு நிச்சியதார்த்தம் வச்சிட்டு, இன்னொருத்தன் கூட படுத்துட்டு இருக்க..

ஸ்டாப் இட் ஜீஜே... நீ யோகியனா.. நீயும் என்னை மாதரிதானே... ஜஸ்ட் ஒரு மூட் தட்ஸ் ஆல்..

ச்சீ... இனிமே என் கண்ணுல முழிக்காதே, இந்த நிச்சியதார்த்தம் கேன்சல்...

போடா... நீ பெரிய இவன்னாட்டாம் பேச வந்துட்டே..

என்னடி சொன்ன என்று அவ கழுத்தை நெறித்தான்...

ஜீஜே..விடு என்று மாயா தடுக்க... நீ எப்படி பிஸினஸ் செய்யுறேன் நான் பார்க்கிறேன் அவளை கீழே தள்ளிவிட்டு சென்றான்...

அப்பறம் என்ன ஜீஜே, பிரச்சனைதான் முடிச்சிடுச்சு... நீ ரொம்ப லவ் செஞ்சியா.......

ப்ச்... இனிமேதான் பிரச்சனையே ஆரம்பம் ஆனது மலர்... அடுத்தநாள் அந்த மண்டபத்துக்கு எல்லாரும் வந்தாங்க..

அய்யோ, மாயாவே கல்யாணம் செஞ்சிட்டியா ஜீஜே...

அவளை பார்த்து முறைத்தான்... நான் இல்ல எங்க அப்பன், அவளை கல்யாணம் பண்ணிட்டு பார்ட்டி கொடுத்தாரு...

வாயில் கையை வைத்துக் கொண்டாள் மலர்...

சிறிதுநேரம் அமைதி அங்கே... நான் எப்படி அவள அம்மாவா ஏற்றுப்பேன்...

நீயேன் வருத்த படுற ஜீஜே... அவதான் உன்னை நினைச்சு வெட்கப்படனும், நீ ஏன் யோசிக்கிற...

அடக்கடவுளே இவ இன்னும் சின்னபொண்ணாதான் இருக்கா மனதில் நினைத்துக்கொண்டான் ஜீஜே..

எனக்கு ரொம்ப அசிங்கமா போயிடுச்சு மலர் எங்க பார்ட்னர்ஸ் எல்லாம் கேலி செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.. இந்த மனுஷன் அவருடைய எல்லா ஷேரும் அவ பெயர்ல எழுதிக்கொடுத்துட்டாரு..

இப்ப அதுதான் பிரச்சனை மலர்...

சரி விடு ஜீஜே.. நீ புத்திசாலி புதுசா ஏதாவது வேலை தேடிக்கோ... அதுபோதும் உனக்கு... நிம்மதியான வாழ்க்கை வாழனும்... எங்க நரசிம்மன் தாத்தாகிட்ட சொல்லி மேனேஜர் வேலை வாங்கி தரட்டா..

ம்ம்..சரி மலர்..

ஏன் ஜீஜே இதெல்லாம் ஒரு ப்ராபளமா, அப்பா இல்லாத, ஒரு பொண்ணா இந்த குடும்பத்தை பார்த்துக்கிறேன் அதைவிடவா இது பெரிசு... சரி இந்த டிரிங்க்ஸ் எல்லாம் ராக்கி பையன் வாங்கி கொடுத்ததா...

ம்ம்... அவனை திட்டாதே மலர், நான்தான் போர்ஸ் செஞ்சி வாங்கிட்டு வரச்சொன்னேன்...

தன் மனதில் உள்ளதை அனைத்து சொல்லியவன் , அவள் அவனின் கேசத்தை கோதிவிட அந்த ஏஸி காற்றில் நிம்மதியாக கண்ணை மூடி தூங்கினான் ஜீஜே..

என்ன அதுக்குள் தூங்கிட்டான்.. அவனையே பார்த்தாள் பூவிழியாள்... அடம்பிடிக்கும் குழந்தைபோல் தோற்றம் அவன் முகத்தில்.. அன்புக்கு ஏங்கியவன், உறவுகள் இருந்தும் அனாதை.. அதான் அவன் வீட்டிற்கு செல்லவில்லை... நிறைய ஸ்ட்ரஸில் இருக்கான்..

மெல்ல அவன் தலையை தலையனையில் வைத்துவிட்டு திரும்ப, அவள் கையை பற்றிக்கொண்டான்... அன்றும் ஹாஸ்பிட்டலில் சேர்க்கும்போதும் இப்படிதான்... சிரித்துவிட்டு விரல்களை மெதுவாக விலகி, கதவை சாற்றிவிட்டு சென்றாள் மென்மலர்..

.....

அடுத்தநாள் காலை எட்டுமணிக்கு, அக்கா டைமாயிடுச்சு சீக்கிரம் ஹரி கத்த, லன்ச் பாக்ஸை எடுத்துவந்து தந்தாள்...

அங்கு நடக்கும் காட்சிகளை ஹாலில் உட்கார்ந்து பேப்பரை படித்துக்கொண்டே பார்த்திருந்தான் ஜீஜே...

ஹரி... கம்பீரமான குரலில் அவனை கூப்பிட..

என்ன மாமா என்றான்..

நேற்று ஸ்கூலிருந்து ஏன் லேட்டா வந்தே..

அது அது... மென்று விழுங்கினான்..

ஹாங் ஸ்பெஷல் கிளாஸ்ன்னு சொன்னா ஜீஜே மலர் எடுத்துச் சொல்ல, அவளை பார்த்து முறைத்தான்... நான் கேள்வி கேட்கும்போது நீ ஏன் குறுக்கே வர...

ஆமாம் மாமா ஸ்பெஷல் கிளாஸ்,

எக்ஸாமே வரல அதுக்குள்ள என்ன ஸ்பெஷல் கிளாஸ் எட்டு மணிக்கு ரீச்சாகுற..

அதான் ஸ்பெஷல் கிளாஸ் சொல்லுறேன் திரும்ப கேட்கிற நிற்காமல் கிளம்பினான் ஹரி...

கோபத்தில் முகம் சிவந்தது ஜீஜேக்கு... சின்னப்பையன் வேற பொறுமையாதான் இவனை ஹான்டல் செய்யனும் போல..

ஜீஜே... அவனுக்கு ரொம்ப ஹோம் ஹோர்க் கொடுக்கிறாங்களாம் அதான் இப்படியிருக்கான்...

அந்த நேரம் ராக்கி வீட்டிற்குள் நுழைந்தான்.. ஹலோ பாஸ் குட் மார்னீங்... மேடம் இங்கதான் இருக்காங்களா, ஆபிஸ் போகல..

இல்ல உனக்காகதான் வெயிடிங்...

-------- மயக்கம்
 
அன்புக்கு ஏங்கும் குழந்தை
அன்னை இல்லாத
ஆனால் தந்தை இருந்தும்
அனாதை போல.....
அன்பாக மலர் அவனை
அரவணைக்க நெடு நாள் சென்று
அமைதியாக உறங்கும் ஜீஜே......
 
Nirmala vandhachu ???
 
அன்புக்கு ஏங்கும் குழந்தை
அன்னை இல்லாத
ஆனால் தந்தை இருந்தும்
அனாதை போல.....
அன்பாக மலர் அவனை
அரவணைக்க நெடு நாள் சென்று
அமைதியாக உறங்கும் ஜீஜே......
சூப்பரா இருக்கு சிஸ் கவிதை
 
Top