Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எந்தன் உயிர் நீயடி ❤4

Advertisement

உயிர் 4❤❤❤

மாலை அனைவரும் பீச்சுக்கு கிளம்பி சென்றனர். அங்கு நண்பர்களுடன் பிடித்ததை வாங்கி உண்டு, விளையாடி மகிழ்ந்து களைத்து போய் அமர்ந்தனர்.


அருண் "மச்சான் எவ்ளோ நாளைக்கு இப்படியே இருக்கறது.ஏதாச்சும் உருப்படியா பண்லாம்னு தோணுது, அப்பா வேற டார்ச்சர் பண்றாரு வேலைக்கு போ.இல்லனா என்னோட ஆபீஸ் வானு சொல்றாரு என்ன பண்றதுனு ஒண்ணும் புரிய மாட்டேங்குது" என்று கூறினான்.


ஆதி "ஆமாண்டா இத பத்தி பேசத்தான் எல்லாரையும் வர சொன்னேன்" என்று கூற,அதில் அதிர்ச்சியானவர்கள், அவனை பார்க்க,

ஹரிஷ் "டேய் உண்மையாவா சொல்ற" என்று அதிர்ச்சியாக கேட்க,


ஆதி "ம்ம் ஆமாம்,
ப்ரோடாக்ட் டிசைனிங், ப்ரோடாக்ஷன் ஸ்பெர் பார்ட்ஸ் *****,இதான் நான் பிளான் பண்ணிருக்கேன். நீங்களும் இதுல எனக்கு ஒத்துழைப்பு குடுத்து என்னோட பிசினஸ் பார்ட்னர்ஸ் ஆஹ் இருக்கணும்னு நான் நினைக்கிறேன்" என்று கூறினான்.

பிரவீன் "வாவ் மச்சான் நீ தான் இதுல கோர்ஸ் பண்ணிருக்கயே ட்ரை பண்லாம் டா... ஆனா ஒரு விஷயம்."என்று கூறி நிறுத்த,

ஆதி "என்ன டா சொல்லு?"


பிரவீன் "ப்ளீஸ் டா என்னையும் சேர்த்துக்கோ பிலீச்"என்று கூற...

அதில் சிரித்தவன்"ஓகே டா"...

இதில் சூர்யா ஏதும் பேசமலிருக்க...

நிலா "சூரினா நீ ஏன் ஏதும் பேச மாட்டிக்கிற",என்று அவனிடம் கேட்க...

ஆதி சூர்யாவின் அருகில் சென்று "சூர்யா நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்.பி. டெக் அனிமேஷன் படிச்சிருக்க இல்ல. நீ என்னோட இருக்கனும்" என்று கேட்க...

சூர்யா "மச்சான் சத்தியமா னா இத எதிர் பாக்கல... நானே ஒரு ஸிரோ ஒரு பைசா இல்ல என்கிட்ட என்ன போய் பிஸினஸ் ல சேத்துக்கிறேன்னு சொல்ற" என்று சோகமாக கூறினான்.

ஹரிஷ் "டேய் லூசு பயலே... என்ன பேசிட்டு இருக்கே வாடா" என்றே அணைத்து கொண்டனர்.

நண்பர்கள் அனைவரும் சேர்ந்து தொழில் செய்வதாக முடிவு செய்யப்பட்டது.


"ஆனா பணம் அதுக்கு என்ன பண்ண?"சௌமி கேட்க...

"என்கிட்ட கொஞ்சம் சேவிங்ஸ் இருக்கு கொஞ்சம் பணம் இருக்கும் அது எதுக்காகவும் எடுக்க கூடாதுனு நெனச்சேன்" என்று ஆதி கூற...

ஹரிஷ்"உன்கிட்ட எப்டி இவ்ளோ அமௌன்ட் புரியல டா? படிக்க வாங்குன பணமே போன வாரம் தான் கட்டி முடிச்ச" என்று புரியாமல் கேட்டான்.

ஆதி"இது நான் இவ்ளோ... நாளாவே கொஞ்சம் கொஞ்சமா சேவ் பண்ணது.எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் அதான் நிலாக்காக இத எடுத்து வச்சேன். ஆனா இப்போ இது முக்கியம் னு தோணுது! கூறிவிட்டு நிலாவை பார்க்க

அவளோ அவனை தீவிரமாக முறைத்து கொண்டிருந்தாள்.

அனைவரும் பேசி கொண்டிருக்க சூர்யா வின் பார்வை மட்டும் வேறெங்கோ செல்வதை கண்டு ஆதி... அங்கே திரும்பி பார்க்க அங்கு நதியா கண்களில் கண்ணீருடன் எங்கோ வெறித்து கொண்டிருந்தாள்.

ஆதி பார்ப்பதை கண்டுகொண்டவன் ஏதும் பேசாமல் இருந்து விட்டான்...

ஆதியோ மனதில் (கதை இப்டி போகுதா ?)...

சாஹித்யா "ஹே நதி எங்க காணோம்?"என்று கேட்க...

ஆதி அங்கே என கை காட்ட...

அனைவரும் அவளின் அருகில் செல்ல அவளின் கண்ணீர் தடத்தை கண்டு நிலா அவளை தன் புறம் திருப்ப அதில் தன்னிலை அடைந்தவள் கண்ணீரை வேகமாக துடைக்க...

"ஏன்? நதிமா என்னாச்சு" ராகவ் கேட்க...

ஒன்றுமில்லை என்றே தலையசைத்தாள்... வற்புறுத்தியும்,கூறாமலிருக்க...

"சூர்யா நீ சொல்லு? என்ன பிரச்சனை" ஆதி கேட்க சூர்யா தலைகுனிந்தான்.

நிலா "இவ அழறான்னு அவகிட்ட ஏன் அத்தான் கேக்குறீங்க..."என்று கேட்டாள்.

பிரவீனோ... "ஓ அப்டி போகுதா கதை" என்று கலாய்க்க...

"இல்லடா அது வந்து" என சூர்யா தடுமாற...

"நதி இப்போ என்ன பிரச்சனை?...சொல்லப்போறியா இல்லையா?சொன்ன என்ன செய்யலாம்னு பாக்கலாம்"என அருண் அதட்ட...

"நதியா வீட்ல மாப்பிளை பாக்கிறங்க... என்ன இப்போ வந்து வீட்ல பேச சொல்ற... நா எப்டி பேச முடியும்... கைல பணம் இல்ல. வேலையும் இல்ல இந்த நிலைமைல இவ வீட்டுல எப்டி பேச அவங்க ஒத்துப்பாங்களா... சொன்ன புரிஞ்சுக்காம நடந்துக்குறா" என்று சூர்யா கூற...

"சரி விடு சூர்யா அதான் நம்ம கம்பெனி ஸ்டார்ட் பண்ண போறோமே... அப்புறம் போய் நம்ம எல்லாரும் பொண்ணு கேட்போம்... முடியாது னு சொன்னா தூக்கிருவோம்" என்று ஹரிஷ் கூற...

"நம்ம எதுக்கு அவ்ளோ கஷ்டப்பட்டு இந்த சோத்து மூட்டைய (நதியாவை )தூக்கணும் ஒரு பிரியாணி வாங்கி குடுத்து வீட்ட விட்டுவானு சொன்னா வர போறா அதுக்கு ஏன் கஷ்டப்படணும்?"என்று நிலா சிரித்துக்கொண்டே கூற...

நதியா அவளை "ஏய்? இருடி" என்று அவளை துரத்த நிலா ஓட அனைவரும் சிரித்தனர்...

சிறிது நேரம் அலையில் விளையாடி விட்டு இரவு உணவை முடித்து கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.

அதே நேரம் இரவு ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் தன் எதிரே அமர்ந்திருக்கும் அஷ்வினியை... பார்த்து கொண்டிருந்தான் அர்ஜுன்.

"சொல்லுங்க அர்ஜுன் உங்களுக்கு இந்த மேரேஜ் ல இஷ்டம் இல்லையா? பொண்ணு பாக்க வந்தன்னைக்கு பார்த்ததோட சரி.இன்னும் ஒரு போன் கால் கூட இல்ல அதான் கேக்குறேன்.கடைசியா நா ஏமாந்துர கூடாது இல்ல,அதான் பிடிக்கலைன்னா முன்னாடியே சொல்லிருங்க..."என்று கேட்டாள்.

அர்ஜுன் "எனக்கு பிடிக்காத விஷயத்தை நா பாக்க கூட விரும்ப மாட்டேன் அஷ்வி".அவளோ அவனை விழி விரித்து பார்க்க...

"உன்கிட்ட சொல்ல வேண்டிய விஷயம் நெறய இருக்கு... அஷ்வி உனக்கு டைம் இருக்குல்ல நாம பேசலாமா?" என கேட்க தலையாட்டினாள்.

அர்ஜுன்...

"எனக்கு மூணு தம்பி அப்புறம் ஒரு தங்கச்சி இருகாங்க,"என்க...

அஷ்வினி "தங்கச்சி ஆனா உங்களுக்கு ரெண்டு தம்பி தான அப்புறம் சந்தோஷ் அத்தை பையன் தான" என்று தன் சந்தேகத்தை கேட்க...

அர்ஜுன் "ஆமா ஆனா சந்தோஷ் எங்க எல்லாருக்கும் தம்பி போலவே தான்.நாங்க அப்டி தான் இருந்தோம்.எங்க அம்முவோட.என் தங்கச்சி அவ குழந்தை போல,வீட்டுல எல்லாருக்கும் அவ ரொம்ப செல்லம். என்ன விட ஆறு வயசுல சின்ன பொண்ணு.நாங்க மூணு பேரும் அவளை எப்போவும் பிரிய மாட்டோம். ஆனா அன்னிக்கு ஒரு வாரம் நாங்க அவளை விட்டு காலேஜ் டூர் போனோம்."

"நாங்க திரும்பி வரும் போது... அவ இல்ல... அவ யாரோயோ லவ் பண்ணி ஓடிப்போய்ட்டதா சொன்னாங்க,கோவத்துல திட்டி அனுப்பிட்டேன். அவள தேடணும்
அப்டினு அப்பா சொன்னாரு... அதிலிருந்து நா வீட்ல தம்பிகள தவிர,யார்கிட்டயும் பேசறதில்ல... மேரேஜ்க்கு ரெண்டு வருசமா கம்பெல் பண்ணாங்க நா ஒத்துக்கலை இப்போ எனக்கு இருக்க ஒரு ஆசை. என் அம்மு அவளை ஒரு தடவ நான் பார்த்துட்டேனா போதும்... நான் பழைய படி மாறிருவேன்... அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும்.
உன்ன மிஸ் பண்ண எனக்கு விருப்பம் இல்ல. சோ, உனக்கு புரியுதா?" என்று கேட்க...

அவனையே பார்த்திருந்தவள்.
"அர்ஜுன் ஐ லவ் யு " அதில் அதிர்ந்தவன் அவளை பார்க்க விட்டு போன தங்கச்சி மேல இவ்ளோ பாசமா இருக்கும் போது நிச்சயம் என்ன ஹாப்பியா வச்சுப்பிங்க, அதான்
❤.ஆனா அதுக்காக நீங்க இப்பவே லவ் சொல்லணும்னு வற்புறுத்த மாட்டேன் ஹாப்பி"என்று கூற...

இடையில் ஆர்டர் செய்த உணவு வர சாப்பிட்டு விட்டு கிளம்பினர்.

அர்ஜுனுனின் மனமோ... என்றும் இல்லாத ஒரு உணர்வு... ஐந்து வருடங்களுக்கு பிறகு... நிம்மதியான உறக்கம்...

நாளையிலிருந்து உயிர் கொல்லும் வேதனை அனுபவிக்க போவது தெரியாமல்...

.............................................

தூங்குமுன் நிலாவோ... நெடுநேரம் தன் அலுவலகத் தோழியிடம் பேசி விட்டு வர அவள் முகமோ குழப்பத்தில் இருக்க,

ஆதி அவளிடம் என்னாச்சு "இனி மா...உன் குட்டி மூளைய கசக்கி அப்டி என்ன யோசிக்கிற?" என்று கேட்க...

நிலா "அது ஆபீஸ் கை மாறிருச்சாம்.நாளைக்கு புது md கம்பெனி டேக் ஓவர் பண்றார்.அதான் பழைய ஆளுங்கள எடுத்துட்டு புதுசா எல்லாரையும் வேலைக்கு எடுக்க போறாங்க அதான் கொஞ்சம் டென்ஷன்".


ஆதி "பிரீய்யா விடு, பாத்துக்கலாம். வேலை போனா நம்ம ஆபீஸ் லா ஜோயின் பண்ணிக்கோ விடு"
என்று கூலாக கண்ணை சிமிட்டி கூற...

அதில் சிரித்தவள்...

அனைத்தையும் மறந்து அவனின் அணைப்பில் கண்ணுறங்க விடியல் அனைவரையும் சோதிப்பதற்காக விடிந்தது.


அந்த விடியல் அர்ஜுன் குடும்பத்திற்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை...


காலை பொழுது விடியும் போதே அர்ஜுனின் இல்லத்தில் பரபரப்பாக விடிய, அனைவரும் புதிய அலுவலகத்தின் பூஜைக்காக ரெடியாகி கொண்டிருந்தனர்.

ஆனந்த் கிருஷ்ணனிடம் "அப்பா அது பழைய ஆபீஸ் தான அதுக்கும் இப்படி பூஜை, ஓப்பனிங் பங்ஷன் வேணுமா?"...

கிருஷ்ணன் "பழைய ஆபீஸ் இருந்தா என்ன? நம்ம அத எடுத்து நடத்தப்போறாம்... அப்போ எந்த தடங்கல்களும் வரக்கூடாது னு பூஜை பண்றோம்.அந்த ஆபீஸ் இனி நம்மளோடது சோ ஓபன் பண்றது கொஞ்சம் கிராண்ட் ஆஹ் பண்லாம்னு பிளான் பண்ணிருக்கோம் " அதுனால இதெல்லாம் பேசாம போய் எல்லாரும் தயாராகுங்க"என்று கூறிவிட்டு செல்ல...

அனைவரும் தயாராகி... மகிழ்வுடன் செல்ல (வரும்போது அழுதுட்டே வருவீங்க ponga?)...

அங்கே நிலாவின் நிலையோ...

ஆபீஸ்க்கு கிளம்பி அமைதியாக அமர்ந்திருந்தாள் நிலா. அப்போது குளித்து வந்த ஆதி..." இனிமா ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணு இதோ கிளம்பி வரேன் "அவளோ?பதில் பேசாமல் இருக்க...

தயாராகி வந்தவன்"கிளம்பலாம் டா வா"அவளை அழைக்பதில் பேசாமல் எங்கோ வெறித்து கொண்டிருக்க அதில் பதறியவன்,அவளை உலுக்க ...

"என்ன ஆச்சு நிலா? ஏன் இப்படி இருக்க? பதட்டதுடன் வினவ,அதில் தெளிந்தவள் ஒண்ணுமில்ல அத்தான்..."எதோ மாதிரிய இருக்கு என்னனு தெரியல?"...

ஆதி "அப்டி என்ன ஆகப்போகுது.நல்லது நடக்க போகுதுனு நெனச்சுக்கோ... இன்னிக்கு நம்ம ஆபீஸ் க்கு இடம் பாக்க போறோம்.நான் சந்தோசமா இருக்கேன். நீ இப்படி இருக்கறது எனக்கு கஷ்டமா இருக்கு"என்று கூற...

நிலா "அப்டிலாம் இல்லை, நீங்க வருத்தப்படாதீங்க?நான் ஓகே தான்கிளம்பலாம் ஒண்ணும்
இல்ல"என்று கூறி அங்கிருந்து கிளம்பினர்.

அங்கு ஆஃபிஸில்...

அனைவரும் தங்களின் புது முதலாளியையும் அவரின் குடும்பத்தையும் வரவேற்க தயாராக இருக்க அவர்களுடன் நிலாவும் இணைந்து கொண்டாள்.

அலுவலகத்தில் உள்ளவர்களோ புது முதலாளி யாரை வேலை இல்லை என்று அனுப்ப போகிறாரோ என அவரவர் கருத்தில் பதிந்ததை பேசிக்கொண்டிரிந்தனர்.


அப்போது மூன்று கார்கள் வரிசையாக வந்து நிற்க...அந்த நிறுவனத்தின் மேனேஜர் வந்து அனைவரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.


உள்ளே சென்றதும் அங்கிருந்த அனைவரையும் அறிமுகப்படுத்த துவங்கினார். அவர்களை கண்ட நிலாவின் கண்களில் கண்ணீர் கரகர வென வழிய... யாருமறியாமல் துடைத்து கொண்டாள்.


அடுத்து அவளின் முறை... "இவங்க நிலவினி 10மந்த் முன்னாடி ஜோயின் பண்ணாங்க பழைய எம் டி யோட பி. ஏ.ஷி ஸ் வெரி டேலண்ட் "என்று கூறினார்.


அவளை கண்ட குடும்பத்தினரோ,அதிர்ச்சி விலகாமல் அவளையே பார்திருந்தனார்.அவளின் வீட்டில் இருந்த போது சப்பியாக குண்டு கண்ணங்களுடன் குறும்பு கண்களுடன், ஷார்ட் டி ஷிட்டில் சிறுபிள்ளை போல் தெரிந்தவள் இன்றோ...


புடவை கட்டி, கழுத்தில் தாலி செயின், காதில் கம்மல், ஒரு கையில் வாட்ச், வளையல் என்று ஒரு முழு பெண்ணின் உயரத்துடன் கண்களில் தெளிவும் தீர்க்கமும் உடைய ஒரு பெண்ணாக...


அவள் தான் பெற்ற மகளா? என சந்தேகிக்கும் தோற்றத்தில் இருந்தது அவளின் பெற்றோர் நிலை...


அவர்களின் அலுவலுகத்தில் வேலை செய்யும் பெண்ணாக அவளை கண்டதில் அவளின் தமையன்களே சற்று ஆடி போயிருந்தனர் ???.


அவளை எங்கெங்கு தேடியும் கிடைக்காதவள்... இன்று இப்படி ஒரு நிலைமையில் கனவிலும் நினையவில்லை அர்ஜுன் மிகவும் கலங்கிருக்க...

மீனாட்சி குமரன் கூட அதிர்ந்து போயிருந்தனர். தங்கள் வீட்டின் ஒரே செல்ல மகளை இன்று இங்கு இவ்வாறு கண்டதில்...

மேனேஜர் குரலில் சுயம் வந்தவர்கள். நிலாவின் "வெல்கம் சார் "என்ற அழைப்பில் அதிர்ந்து அனைவரும் அவளை நோக்க அவளோ அதை கண்டுகொள்ளாமல் "ஐ ம் நிலவினி ஆதித்யன்"என்று வேண்டும் என்றே கூற...


கிருஷ்ணன்" நிலாவிடம் ஆதித்யன்ங்கறது" என்று வினவ, "மை ஹஸ்பண்ட் சர் என்று கூற,"அவர் என்ன செய்றார்"என்று குமரன் கேட்க,

"இந்த ஆபீஸ் ல நான்தான் சார் ஒர்க் பண்றேன். என் ஹஸ்பண்ட் இல்லஅவர் டீடெயில்ஸ் உங்களுக்கு எதுக்கு" என முகத்தில் அடித்தது போல் கேட்க,அவள் கேட்டதில் பதறிய மானேஜர்..."சார் தப்பா நெனச்சுக்காதீங்க? நிலா கொஞ்சம் பட்டுனு பேசிருவ? வேற ஒண்ணுமில்ல.இதுக்காக வேலைய விட்டு தூக்கிராதீங்க? கஷ்டப்படுற பேமிலி"என்று அவளுக்கு சப்போர்ட் செய்தார்.

"அப்டி எல்லாம் ஒண்ணுமே இல்ல. டாடி சும்மா தான் கேட்டார்.நாங்க நாலுபேரும் இங்க தான் இனி ஒர்க் பண்ண போறோம் (அர்ஜுன், ஆனந்த், மகிழன், சந்தோஷ் ).எங்களுக்கு பி. ஏ வா உங்க பழைய பி. ஏ வே இருக்கட்டும்" என்று ஆனந்த் தாராள மனதுடன் கூற,அவளை P. A என்று கூறியதில் அனைவரும் அவனை முறைக்க...


ஓகே எல்லாரும் போய் வேலைய பாருங்க... என்று அனைவரையும் அனுப்பி விட்டு அவர்களின் கேபின் குல் நுழைந்தவர்கள் ஆனந்தை முறைக்க...


அவனோ "இப்போ தான் நாம அவளை பார்த்துருக்கோம். நம்ம பக்கத்துலயே இருக்கணும்னு தான் நான் அப்டி சொன்னேன்" என கூற...

சிந்துவோ" மேனஜர் சொன்னதை கேட்டிங்கல்ல ரொம்ப கஷ்டப்படுற பேமிலி சொன்னாரு அவ வேலை பாக்கிறதையே என்னால தாங்க முடில. இதுல கஷ்டப்படுற குடும்பம் அப்டினு என்னால முடியல" என்று அழுக...

அவரின் அருகில் வந்த அம்மா என்று அழைக்க, அவனை கட்டியணைத்து கதற... ஐந்து வருடங்கள் கழித்து அவரிடம் பேசுகிறான்.


ஒவ்வொருவரும் ஒரு மன நிலையில் வீடு வந்து சேர்ந்தனர்...

to be continued...???












 
Nice epi dear.
Seriyana loosu kudumbam, ivalavu kasu irruku la do, oru detective agency approach panni irrunthal AtoZ ellam therinju irrukum. Athu vittu varusha kanakka thedittu irruku thu.yedo 4 thandamare, smart ta react pannungo da.
 
Top