Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும்- அத்தியாயம் 5

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support & Comments.
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே

அத்தியாயம்-5


சுபி வந்து ஆர்த்திகாவுக்கு முடியவில்லை என்று கூறியவுடன், சுதாரித்த கவின் ….. ரிலாக்ஸ் சுபி , நீ டென்ஷன் ஆகாதே….. நாம இப்ப உடனே கிளம்பலாம்…. நீ போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா என அவளை அனுப்பியவன், அவனும் தயாரானான்.


நவீனை தொந்தரவு செய்யாமல், ஃபோனில் அவனுக்கு தங்கள் கிளம்புகிற விவரத்தை மேசேஜ் செய்தவன், பிறகு நொடியும் தாமதிக்காமல் புறப்பட்டான்.


காரில் செல்லும் போது, மற்ற விவரங்களை விசாரித்தான்.


சுபி, ஆர்த்திகா அப்பா ஊரில் இல்லையா என வினவ….


இல்லை அவர் ஆஃபிஸ் விஷயமாக வெளியூர் போயிருக்கார்…


அவங்க ஃபேமிலி டாக்டருக்கு ஃபோன் போட்டாங்க அகல்யா ஆன்ட்டி, ஆனால் டாக்டர், ஃபோனை எடுக்கவில்லை ‌.


ஆர்த்திகா வேற கத்திக் கொண்டே மயக்கம் போட்டுட்டாள். ஆன்டிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் எனக்கு ஃபோன் போட்டாங்க…. எனக்கும் ஒன்னும் புரியவில்லை…. அம்மா, அப்பாவும் மாத்திரை போட்டுக்கொண்டு தூங்குவாங்க, அதான் அவங்க கிட்ட சொல்லவில்லை…


நாமே கிளம்பலாம் என்று தான் உங்களை எழுப்பினேன் , சாரி என மெல்லிய குரலில் கூறினாள்‌‌.


அது ஒன்னும் பிரச்சனையில்லை சுபி…. இப்போ நாம போய் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாமா? இல்லை என்னுடைய தோழி பிருந்தா , மனநல மருத்துவர் தான் தெரியுமில்லையா… அவளை வீட்டிற்கு அழைத்து செல்வோமா என வினவ….


சுபியோ வீட்டிற்கு வருவதற்கு அவர்களுக்கு தொந்தரவு இல்லை என்றால் வரச் சொல்லுங்க….

வீட்டில் ட்ரீட்மெண்ட் பார்ப்பது தான் ஆர்த்திகாவுக்கு சரி வரும் என்றாள்.


கவின் தன் தோழிக்கு ஃபோன் செய்து ஆர்த்திகா பற்றிய விவரங்களை கூறி தயாராக இருக்குமாறு சொன்னவன்,

நானே வந்து உன்னை அழைச்சிட்டு போறேன் என்று கூறி ஃபோனை வைத்தான்.


பக்கத்தில் பதற்றத்தோடு இருந்த சுபியை இழுத்து தன் தோள் சாய்த்தான். பிறகு யாருமில்லாத சாலையில் கார் அவன் கையில் பறந்தது.


*************************


இரண்டு மணி நேரத்தில் செல்ல வேண்டிய தூரத்தை ஒரு மணி நேரத்தில் சென்றடைந்தான்.


பிருந்தாவின் வீட்டிற்கு முதலில் சென்றான்.

இவர்கள் எல்லோருடைய வீடும் ஒரே ஏரியா தான்.


இவன் சென்று காரின் ஹாரனை அழுத்தும் போதே உள்ளிருந்து பிருந்தா தன் மெடிக்கல் கிட்டுடன் வந்து ஏறினாள்.


கவின் அத்தனை முறை சொல்லியிருந்ததால், பிருந்தா தயாராக இருந்தாள்.


காரில் பிருந்தா ஏறியவுடன், கார் ஆர்த்திகா வீட்டை நோக்கிச் சென்றது.


இவர்கள் கார் சென்றவுடன் வாட்ச்மென் கதவை திறந்து விட்டான்.


அகல்யா வாசலிலே நின்றிருந்தாள். அந்த இரவு நேரத்தில் தனியாக அநாதரவாக நின்ற பெண்மணியை பார்த்தால் மனதை பிசைந்தது. கல்நெஞ்சையும், கசிந்துருக செய்யும் தோற்றத்தோடு நின்றிருந்த அகல்யா, சுபியைப் பார்த்தவுடன் ஓடிச் சென்று அவள் கைகளை பற்றிக் கொண்டு கண் கலங்கினார்.


அழாதீங்க ஆன்ட்டி என சுபி ஆறுதல் படுத்தியவள், கவினை தான் உங்களுக்கு தெரியும் தானே, ஆன்ட்டி என்றவள், இவங்க டாக்டர் பிருந்தா என்று அறிமுகம் செய்தாள். மெல்ல தலையசைத்து எல்லோரும் உள்ளே வாங்க என்றார் அகல்யா, ஆர்த்திகாவின் அறைக்கு அழைத்துச் சென்றார் .


அங்கு மெத்தையில் படுத்திருந்த ஆர்த்திகாவை பார்த்த பிருந்தா, அதிர்ந்து போய் கவினைப் பார்க்க ஆம் என தலையசைத்தான்.


மெல்ல தன்னை சமாளித்துக் கொண்டு , ட்ரீட்மெண்டை ஆரம்பித்தாள்.


பல்ஸ் செக் பண்ணி விட்டு, பி. பீ செக் செய்தாள். பிறகு தான் கொண்டு வந்திருந்த

மெடிக்கல் கிட்டிலிருந்து இன்ஜெக்ஷன்

எடுத்து ஊசி போட்டவள், அகல்யாவை பார்த்து பி.பீ அதிகமாக இருக்கு . இப்போ போட்டிருக்க ஊசி பி.பீ ய நார்மலாக்கிடும். நல்லா தூங்கட்டும், காலையில் எழுந்து ப்ரீயாயிடுவாங்க….


உங்க கிட்ட ஆர்த்திகா பற்றி பேசனும், இப்போ பேசவா? இல்லை காலையில் வரவா என…..


இல்லை டாக்டர் உங்களுக்கு தொந்தரவு இல்லை என்றால் இப்போ பேசலாம், எனக்கு ஆர்த்தியை விட எதுவும் எனக்கு முக்கியமில்லை என்றாள் அகல்யா.


அப்போ வாங்க மிஸஸ் அகல்யா ஹாலில் உட்கார்ந்து பேசலாம் என்றாள் பிருந்தா.


ஹாலில் அமர்ந்தவுடன் நீங்கள் எல்லோரும் காஃபி சாப்பிடுவிங்களா இல்லை பால் ஏதும் கொண்டு வரவா என அகல்யா வினவ…


அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று மற்ற மூவரும் மறுக்க…


நைட் கண் விழித்தால் பசி எடுக்கும். ஏதாவது சாப்பிடுங்க என்றாள் அகல்யா ….


அப்போ காஃபியே போட்டுட்டு வாங்க என்ற பிருந்தா, மற்றவர்களை நோக்கி உங்களுக்கும் ஓகே வா என்று வினவ …. அவர்களும் சரி என்றனர்‌.


அகல்யா ஒரு ட்ரேயில் நான்கு கோப்பைகள் காஃபி மற்றும் பிஸ்கெட்களுடன் வந்தாள்.


அந்த நேரத்தில் அவர்களுக்கு தேவையாக இருந்தது.


காஃபி குடித்துக்கொண்டே பிருந்தா விசாரித்துக் கொண்டிருந்தாள்.


ஆமா குட்டிக்கு நைட் எப்படி முடியாமல் போனது என வினவ….


அவளோ, சுபியை பார்க்க சுபியோ, சொல்லுமாறு கண் அசைத்தாள்.


அகல்யா தயங்கித் கொண்டே இருக்க…

இங்கே பாருங்க உங்க குழந்தையோட நல்லதுக்கு தான் அஸ் ஏ டாக்டரா கேட்கிறேன்.


நான் ஒரு மனோதத்துவ மருத்துவர், எனக்கு தெரிந்து அந்த விபத்து நடந்து ஆறுமாதம் இருக்குமா? இப்போ ஏன் குழந்தை இப்படி டென்ஷன் ஆகுறா? இவ்வளவு நாளில் நல்லா ரெகவர் ஆகி இருக்கனும், எங்கேயும் கவுன்சிலிங் கூட்டிட்டு போனீங்களா என வினவ…



அகல்யா தயங்கி கொண்டே கவுன்சிலிங் எங்கேயும் போகவில்லை என …..


படிச்சவங்க தானே …. நீங்களே இப்படி இருந்தால் எப்படி சமுதாயத்தில் மாற்றம் வரும் … ஸ்கூலுக்கு போறாளா என வினவ…


ட்ரிட்மென்ட் முடிந்து மூன்று மாதத்திற்கு முன்பு அனுப்பினேன். ஒரு மாதம் சென்றாள், அப்பறம் என்று தயங்கினாள் அகல்யா….


ம் அப்பறம் சொல்லுங்க மா, என்ற கவின்

பி. பீ எவ்வளவு அதிகம் தெரியுமா, இப்படியே விட்டால் மூளைக்கு போகும் நரம்பு பாதிக்கப்படும்… அதனால் தான் பிருந்தா டென்ஷன் ஆகுறா… நீங்கள் சொல்லுங்க என ….


கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டே, எங்கள் பையன் பிறந்த பிறகு, பத்து வருடங்களுக்கு அப்புறம் பிறந்தவள்…

எங்கள் மூவருக்கும் அவ்வளவு செல்லம்…

எங்கள் போதாத காலம் இவ்வளவு கஷ்டம் படனும் என்று அவள் தலையில் எழுதியிருக்கு என புலம்பி விட்டு, ஸ்கூலுக்கு போன வரை நல்லா தான் இருந்தா… இப்போ வீட்டில் இருப்பதால் அடிக்கடி கத்துகிறாள். அவளோட அண்ணன் வெளிநாட்டில் படிக்கிறான் . நானும் , அவரும் ஆஃபிஸுக்கு போயிடுவோம். இவளைப் பார்த்துக் கொள்ள இரண்டு பேர் இருக்கிறார்கள் . அவங்க கிட்ட சரியா பேச மாட்டா , டென்ஷனாவே இருக்கிறாள் என்றார்.


ஏன் ஆன்ட்டி நான் அன்னைக்கு வந்த போது ஸ்கூலுக்கு போனாளே, நல்லா தானே இருந்தாள் என சுபி வினவ….


அது வந்து வந்து என இழுத்து இழுத்து மூவரையும் டென்ஷனாக்கி விட்டு, இந்த வருடம் பப்ளிக் எக்சாம் என இப்போ தான் அறிவிச்சாங்க…


இவள் மூன்று மாதமாக, போகலையா இவளால் இந்த வருடம் லெசன்ஸ் கவர் பண்ண முடியாது என அனுப்பவில்லை என்றாள் அகல்யா.


வாட், ஆன்ட்டி என சுபி அதிர்ந்து விழிக்க…

கவினும், பிருந்தாவும் விழுந்து விழுந்து நகைத்தனர்.


அய்யோ, மா நீங்கள் இவ்வளவு அப்பாவியா இருக்ககூடாது. நாங்கள் எல்லாம் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தான் ஆங்கிலமே புரிந்து படிக்க ஆரம்பித்தோம். அது வரைக்கும் கடம் பண்ணி ஏதோ எழுதினோம் என்றான் கவின்.


நீங்கள் என்னவென்றால் பப்ளிக்எக்சாம், பாடம் முழுவதும் படிக்க முடியாது என்று கூறி பள்ளிக்கு அனுப்பாமல், உங்கள் பொண்ணை எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கீங்க என்று தெரியுமா என்றாள் பிருந்தா.


எதிர் சோஃபாவில் கவின், அருகில் அமர்ந்து இருந்த சுபி, எழுந்து வந்து அகல்யாவின் அருகில் அமர்ந்து, அவள் கையைப் பிடித்து " நாங்கள் எல்லாம் சிறு வயதில் எவ்வளவு சந்தோஷமா தெருவில் விளையாடிக் கொண்டிருந்தோம், ஆனால் இப்போ வீட்டில் கூட பத்து வயது குழந்தைக்கு பாதுகாப்பில்லை"

அப்படி பட்ட சமுதாயத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். இதுவே வேதனையான விஷயம்,

இதில் இந்த அரசாங்கம், ஐந்தாம் வகுப்பு , பொதுத்தேர்வு எனக் கூறி குழந்தைகளோட சிறகை வெட்டிவிடுகிறது…..


அதற்கு நாம் இடம் கொடுக்க கூடாது ஆன்ட்டி…


ஆர்த்திய ஸ்கூலுக்கு அனுப்புங்க, மார்க் பர்சன்டேஜ் என்று கூறாமல், அவளை அவளாக இருக்க விடுங்க…


நமக்கு தேவை திறமை தான் ஆன்ட்டி, படிச்ச எல்லோரும் ஜொலிக்கவில்லை….

அதே மாதிரி படிக்காதவங்க அப்படியே முடங்கி போவதில்லை…. அவங்க திறமையால் முன்னேறி போய்க் கொண்டிருக்காங்க….


அதனால் ஆர்த்திய இயல்பாக இருக்க விடுங்க, என்றவள் ஆமாம் ஏன் ஆன்ட்டி நைட் திடீர் என்று மயக்கம் போட்டுட்டாள் என வினவ…


அவ ஃப்ரண்ட்ஸ் வந்தாங்க… பக்கத்தில் ஒரு அப்பார்ட்மெண்டில் இருக்கிறவங்க… அங்கே பார்ட்டி என்று கூப்பிட்டாங்க நான் அனுப்பலை, அந்த கோபத்தில் இருந்தா, நைட் வாட்சப்ல போட்டோ போட்டாங்க அதை பார்த்து விட்டு ஒரே அழுகை…. எல்லோரும் ஜாலியாக இருக்காங்க என்று விட்டு, என்னை மட்டும் போக விடமாட்டேங்குற என ஒரே அழுகை…. அவ அழுறதைப் பார்த்து நானும் அழுதேனா, அவ டென்ஷனாகி மயக்கம் போட்டுட்டா…


கொஞ்சம் தண்ணீர் தெளித்து வெயிட் பண்ணேன். அப்பறமும் எழுந்திருக்கவில்லை என்றவுடன் ஃபேமிலி டாக்டருக்கு கால் பண்ணேன் அவங்களும் எடுக்கவில்லை

அப்புறம் தான் உனக்கு பண்ணேன் என்றாள் …


சரி விடுங்க ஆன்ட்டி, அடிக்கடி வெளியே அழைச்சிட்டு போங்க சீக்கிரம் சரியாகிவிடும் என்றாள் சுபி.


ஓகே மிஸஸ் அகல்யா நீங்களும் சற்று ஓய்வெடுங்கள்..


உங்கள் கணவர் எப்போ ஊரிலிருந்து வருவார் என பிருந்தா வினவ…


இரண்டு நாளில் வந்திடுவாங்க டாக்டர் என… ஓ என்ற பிருந்தா, தன் கைப்பையிலிருந்து விசிட்டிங் கார்ட் எடுத்து கொடுத்து, கவுன்சிலிங் தேவைப்படும், அவர் வந்தவுடன் நீங்கள் மூவரும் என்னை வந்து பாருங்க என்றாள்.


சரி என தலையசைத்தாள் அகல்யா.


ஓகே கவனமாக பார்த்துக்கோங்க… நாங்கள் வரோம் என்று மூவரும் விடை பெற, ரொம்ப நன்றி இந்த இரவு நேரத்தில் உதவி செய்ததற்கு, என்று மீண்டும் நன்றி கூறினார் ‌ அகல்யா.


அதெல்லாம் பரவாயில்லை என்று கூறி விட்டு மூவரும் காரில் ஏறினர்.


முதலில் பிருந்தாவை அவள் வீட்டில் விட்டனர். சாரி பிருந்தா உன் தூக்கத்தை தொந்தரவு செய்து விட்டோம் என கவின் கூற…

ஏய் உதை வேண்டுமா? அந்த குழந்தைக்கு என்னால் முடிந்த சின்ன உதவி. இதை பெரிது பண்ணுவியா என பிருந்தா திட்டினாள்.


இல்லை பிருந்தா, நான் இன்வைட் பண்ண பார்ட்டிக்கே முடியவில்லை, அதனால் வரவில்லை என்று சொன்ன … எமர்ஜென்சி என்றவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் உன்னை டிஸ்டர்ப் பண்ணிட்டேன், அதான் சாரி கூறினேன். இப்போ என்ன அந்த சாரிய வாபஸ் வாங்கிக்கிறேன், நீ போய் தூங்கு மா, என்னை ஆளை விடு என….


அது என்று கெத்தாக கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள் பிருந்தா.


காரை ஸ்டார்ட் செய்த கவின், சுபியைப் பார்த்து " எனக்கு ஒன்னும் மட்டும் புரியவில்லை சுபி, அன்றைக்கு வீட்டை விட்டு அனுப்பியது ஒன்னும் உனக்கு கோபம் கிடையாது, அதனால் தான் அந்த குழந்தையை உன்னால், காப்பாற்ற முடிந்தது. வேறு ஏதோ என் மேல் கோபம், அது என்ன என்று தான் புரியவில்லை என்றவன், இவள் ஒன்றும் கூறாமல் அமைதியாக இருப்பதை பார்த்து சீக்கிரம் கண்டு பிடிக்கிறேன் என்றான்".


மெல்ல புன்னகை புரிந்த சுபி மனதிற்குள் அத்தான் அதற்கு " நீயே நானாக வேண்டும்" என்று நினைத்தாள்‌.




தொடரும்….
 
Last edited:

Advertisement

Top