Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும்-அத்தியாயம்- 8

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments.
என்றென்றும் நீயே நானாக வேண்டும் கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழிகளே


அத்தியாயம் - 8

பத்மா வந்து அதிர்ந்து நின்றவர்களைப் பார்த்து என்னடா நடக்குது என்றுச் சத்தம் போட….


முதலில் சுதாரித்த கவின், பேசிக்கொண்டு இருந்தோம் மா… நீங்கள் போங்கம்மா, நான் பதினைந்து நிமிடத்தில் ரெடியாகி விட்டு வரேன் என்றான்.


பத்மா எல்லோரையும், சந்தேகமாக பார்த்துக் கொண்டே உள்ளே சென்றார். வா டா, நீ ஏன் இப்படி நிற்கிற என போகும் போது நீரஜாவையும், அழைத்துச் சென்றார்...


டேய், என்னடா நடக்குது இங்கே என விஷாலும் கவினின் காதை கடிக்க…


இரு மாப்பிள்ளை… வந்து சொல்லுறேன். அம்மா சாப்பிடக் கூப்பிட்டு கொண்டே இருக்கிறார்கள் ‌ இதுக்கு மேலே தாமதம் செய்தால், அம்மா திட்டுவாங்க …. நான் ரெடியாகி விட்டு வரேன் என்றுக் கூறி விட்டு, மாடியில் இருந்த தனது அறைக்கு, இரண்டிரண்டு படிகளாக தாவிச் சென்றான்.



மாடிக்குச் செல்லும் கவினை, கோபத்துடன் முறைத்துக் கொண்டிருந்த விஷாலை, நவீன் வாடா மாப்பிள்ளை என்று அழைத்து தனது அருகே அமர வைத்து சமாதானம் செய்து கொண்டிருந்தான்.


தீப்தியோ, அவளின் அத்தை நீரஜாவை, உள்ளே அழைக்கும் போதே அவளும், எழுந்து அவர்களோடுச் சென்றாள்.


உள்ளே நீரஜாவும், பத்மாவும் மதிய சமையலுக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்‌.


அவர்களின் பின்னே வந்த தீப்தி , அத்தை என அழைக்க..


என்னடா தங்கம், என்ன வேண்டும் என பத்மா வினவ…


"மாமா எங்க அத்தை காணும்" என கேட்ட படியே அங்கே இருந்த சமையல் மேடையில் ஏறி அமர்ந்து, அங்கு நீரஜா, கட் பண்ணிக் கொண்டு இருந்த கேரட்டை எடுத்துச் சாப்பிட்டு கொண்டிருந்தாள் தீப்தி.


கடைக்கு போயிருக்காங்க… இவங்க ரெண்டு பேரும் தான் இன்று கடைக்கு போகமாட்டேன் என்று சொல்லிட்டாங்க…. அவர் போய், மேனேஜரிடம் சில விவரங்கள் தெரிவித்து விட்டு வந்துவிடுவார் செல்லம்….


அம்மாவும், அப்பாவும் இன்னைக்கு வரேன் என்று சொன்னாங்கல்ல, அப்போ மாமா இங்க இருக்கனும், அதனால் சீக்கிரம் வந்து விடுவாங்க, என ….


என்னது … அம்மாவும் அப்பாவும் இன்னைக்கு வராங்களா! என அதிர்ச்சியாக கேட்டு விட்டு மேடையில் இருந்து வேகமாக குதித்தாள் தீப்தி.


ஏன் டி இப்படி குதிக்கிற, என பத்மா கடிந்து கொள்ள…

அதை விடு அத்தை, இப்போ நீ என்ன சொன்ன, அம்மாவும், அப்பாவும் இங்க வராங்களா என நம்பாமல், மீண்டும் மீண்டும் கேட்க…


ஆமாம் தீபு மா, இன்னைக்கு வரேன் என்று சொன்னாங்க… எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை என பதற்றத்தோடு கூற...


ஐயோ! அத்தை இதை முன்னாடியே சொல்லக்கூடாது… இப்போ நான் என்ன பண்ணுவேன் என புலம்பிக் கொண்டே , அத்தை எப்போ கிளம்பி வரேன் என்றுச் சொன்னாங்க என வினவ…


காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பி வரோம் என்றாங்கடா...


இப்போ வந்திடுவாங்க, என்று நினைக்கிறேன். இங்கே இருக்கிற காஞ்சிபுரத்தில் இருந்து, வர எவ்வளவு நேரம் ஆகப்போகுது… அதுவும் காரில் தான வருவாங்க, அப்பறம் ஏன்டி லேட்டாக போகுது, என்றவள்



ஆமா நீ ஏன் இவ்வளவு டென்ஷனாகுற என பத்மா வினவ…


ஐயோ! அத்தை நான் இன்னைக்கு காலேஜ் கட் பண்ணி விட்டு தான் இங்கே வந்தேன். இது மட்டும் அப்பாக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்…


நான் கிளம்புறேன் அத்தை , எனக் கூறிக் கொண்டு கிளம்ப எத்தனிக்க…. இருடா செல்லம் உனக்கு பிடிச்சதெல்லாம் அத்தை செய்து இருக்கிறேன்… இரண்டு வாய் சாப்பிட்டு போ மா, என….


தீப்தியோ ஒரு செகன்ட் யோசித்தாள்… சீக்கிரம் சாப்பிட்டு போகலாமா என… "ஓ நோ சாப்பிட

ஆரம்பித்தால், என்னை என்னாலே கண்ட்ரோல் செய்ய முடியாது, பீ கேர் ஃபுல் தீப்தி" என மனதிற்குள் கூறிக் கொண்டு, வேண்டாம் அத்தை நான் காலையில் ஹாஸ்டலில் சாப்பிட்டு தான் வந்தேன்…


இப்போ நான் கிளம்புறேன்‌, பை அத்தை, பை நீரு எனக் கூறி விட்டு, தீப்தி வேகமாக கிச்சனில் இருந்து வெளியே வர, சாப்பிடுவதற்காக உள்ளே விஷால், கவின், நவீன் மூவரும் உள்ளே நுழைய… முதலில் வந்த விஷாலின் மேல் மோதினாள். கீழே விழ இருந்தவளை விழாமல் பிடித்துக் கொண்டான் விஷால்.



அவன் தோள் பிடித்து, மெல்ல தன்னை சமாளித்துக் கொண்ட, தீப்தி தன்னை யார் கீழே விழாமல் பிடித்தது என்றுக் கூட கவனிக்காமல் தேங்க்ஸ் அத்தான், எனக் கூறி விட்டு சிட்டாக பறந்து விட்டாள்.


அவளுக்கு விஷால் வந்தது, எல்லாம் நினைவில் இல்லை… அவள் நினைவில் நின்றதெல்லாம், அவளின் தந்தை சுந்தரம் தான்… பயங்கர ஸ்டிரிக்ட்….


இவள் காலேஜ் கட் அடித்து விட்டு வந்தது, தெரிந்தால் பயங்கர அர்ச்சனை நடக்கும். அதற்கு பயந்து தான் இப்படி ஓடுகிறாள்.


இவள் தந்தைக்கு பயந்து தான் ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள். பி. சி.ஏ படிக்கும் போது எல்லாம் வீட்டிலிருந்து காரில் வந்து போவாள். இப்போ மேற்படிப்பை ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள்.



படித்துவிட்டு தந்தையின் தொழிலான எஸ். எஸ் பட்டு ஜவுளி கடையை தான் பார்த்துக் கொள்ள

போகிறாள்.


அதனால் ரொம்ப படிப்பில் ஆர்வம் காண்பிக்க மாட்டாள்…


அடிக்கடி காலேஜ் மட்டம் போடுவாள்… அது வீட்டிற்கு தெரிய வந்தால் சுந்தரம் கடுமையாக கண்டிப்பார்.

**************************


விஷாலோ, அவள் அத்தான் என்று கூறியதில், அப்படியே மெய்மறந்து நின்றான்.


நவீன் தான் அவன் தோளிலே ஒன்று வைத்தான்.

டேய், கனவு உலகத்தில் இருந்து வெளியே வா….

அவ உன் மூஞ்சியையே பார்க்கவில்லை டா…

நாங்கள் என்று நினைத்து தான் அத்தான் என்று கூறி விட்டு போறா எனக் கூற …


விஷால் கவினைப் பார்த்து" டேய் நீ என்னை பார்ட்டிக்கு இன்வைட் பண்ணும் போது நீ என்ன சொன்னடா… உங்கள் வீட்டில் தீப்தியை திருமணம் செய்து தர விருப்பமாக இருக்காங்க என்று சொன்னியா, இல்லையா?" என வினவ


ஆமாடா, ஆனால் என்று ஆரம்பிக்க… நிறுத்துடா, நீ வச்ச பார்ட்டியில் அவள் கிட்ட பேசுனா, என்னை லூசு என்று சொல்லி விட்டு போறா…. என்னை ஒரு மனுஷனா கூடப் பார்க்க மாட்டேங்கறா… என்னை பிடிக்கலையாடா அவளுக்கு, என பரிதாபமாக் கேட்டான்.


டேய் எனக்கு உறவே வரப் போறவள் தானடா… நீ சொன்ன என்று அவளை என் மனைவியா நினைச்சிட்டேனடா… இப்போ அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் என்னடா செய்வது,என விஷால் புலம்ப…


டேய் சும்மா இருடா, அவளிடம் நான் இன்னும் உன்னைப் பற்றி பேசவில்லை… மாமாவிடம் தான் உன்னைப் பற்றி சொன்னேன்.


தீப்தி, ஏற்கனவே " அத்தை, மாமா சொல்கிறவங்களைத் தான், திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லிட்டா டா"என்றவன்,

மாமாவோ, தீப்தியோட திருமணம் எனது பொறுப்பு என்று சொல்லிட்டாங்க..


சோ, எனக்கு ஓகே என்றாலே போதும்…

இருந்தாலும் உன்னை பார்ப்பதற்காக அவங்களை இன்னைக்கு வரச் சொல்லி இருக்கேன் என்றான் கவின்.


மீதி எல்லாம் சாப்பிட்டு விட்டு வந்துப் பேசலாம், என்றுக் கூறி அவனை டைனிங் டேபிளில் அமர வைத்தான் கவின்.


நவீன் அம்மா, டிபன் வைங்க என கத்த… இருடா வரேன் என்று கூறி விட்டு, நீரஜாவையும் அழைத்து வந்தார்.


அம்மா, நீரஜா, நீங்களும் உட்காருங்க, சேர்ந்தே சாப்பிடலாம் எனக் கூற, அனைவரும் சேர்ந்து உணவருந்தினர்.



கவின், நவீன், விஷால் மூவரும் பேசிக் கொண்டே உணவருந்தினர்.


பேசாமல் சீக்கிரம் சாப்பிடுங்க… அத்தையும், மாமாவும் வரேன் என்று சொன்னாங்க… அவங்க வருவதற்கு முன்பு எல்லா வேலைகளையும் முடிக்கணும் என்றாள் பத்மா.


அம்மா நீங்க சீக்கிரம் வேலையை முடிக்கணும், என்பதற்காக எல்லாம் என்னால் சீக்கிரம் சாப்பிட முடியாது மா… நான் இப்போ தான் சாப்பிட, ஆரம்பித்தேன். எனக்கு இன்னொரு ரவுண்டு ஆரம்பிக்கணும், என்றுக் கூறி தனது அம்மாவை வம்பு இழுத்தான் நவீன்.


டேய் நானே உங்க அத்தை, எதுக்கு வராங்க எனத் தெரியாமல் டென்ஷனா இருக்கேன்.



அது தெரியாமல் நீ வேற என்ன படுத்தி எடுக்காதே என்றார் பத்மா.


அம்மா" தீப்தியின் கல்யாணம் விஷயமாக பேசத் தான் அத்தையும், மாமாவும் வருகிறார்கள்." என்றான் கவின்.


'ஓ' என்ற பத்மா ஏதும் நல்ல வரன் வந்திருக்காப்பா, என்று கவினிடம் கேட்க‌….


ஆமா மா, ஒரு வரன் வந்திருக்கு, ஆனால் பையன் கொஞ்சம் லூசு மா, என நவீன் கூற…


அம்மா…. எனக் கத்தினான் விஷால். டேய் நீ ஏன்டா இப்படி கத்துற…. அந்த லூச சொன்னா…. உனக்கு ஏன் கோபம் வருது என பத்மா வினவ..


அம்மா என பரிதாபமாக இப்பொழுது விஷால் கூற….


கவினும், நவீனும் விஷாலை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே, அந்த லூசே சார் தான என்றனர்.


டேய், "விஷால் நீ தானா இந்த வீட்டுக்கு மாப்பிள்ளையா வரப்போற, ரொம்ப சந்தோஷம் பா." என்றவள், தன் மக்களைப் பார்த்து டேய் எருமைங்களா அவனை ஏன் வம்பு இழுக்கிறீங்க…


அவனைப் போய் லூசு என்று சொல்லுறீங்க…

அவன் தங்கமான பையன்... அவனை கட்டிக்க தீப்தி குடுத்து வைத்து இருக்க வேண்டும்.


அவனை ஏதாவது சொன்னா கேள்வி கேட்க யாரும் இல்லை என்று நினைக்க வேண்டாம், நான் இருக்கிறேன் புரியுதா? என்று கண்டிப்புடன் முடித்தாள் பத்மா.


நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை, சார் தான் சொல்லுறாரு தனக்கு உறவு என்று யாருமே இல்லை என்று, நீங்களே கேளுங்கள் என்று நவீன் கோபத்துடன் கூற…


விஷால் நவீனைப் பார்த்து" டேய், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை டா, நீங்கள் எல்லாம் என் உறவுக்கு மேல் என்றவன், இது வேற விஷயம் டா எனக் கூறி கண் கலங்க"


சரி, சரி விடு மச்சி என கவின், விஷாலை சமாதானம் செய்தான்.


விஷால் சென்னையில் உள்ள பிரபல ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் அதிபர். நிறைய கிளைகள் உண்டு. எல்லாவற்றுக்கும் இவன் ஒருவனே வாரிசு. பார்க்க தான் விளையாட்டு பிள்ளை போல இருப்பான். பிஸ்னஸில் புலி.


விஷாலோட, பெற்றோர் சென்ற வருடம் நடந்த பிளைட் ஆக்ஸிடென்டில் இறந்து விட்டார்கள்.


அதற்கு பிறகு தான் உறவினர்களின் சுயரூபம் தெரிந்தது… விஷால், யாரையும் தன் அருகில் சேர்க்கவில்லை. கவின், நவீன் மற்றும் அவன் குடும்பம் தான் அவனுக்கு எல்லாமே…


சாப்பிட்டு விட்டு மூவரும் எழுந்தனர். பத்மாவும்,நீரஜாவும் எல்லாவற்றையும் எடுத்து வைத்து சுத்தம் செய்துக் கொண்டிருந்தனர்.


கார் வந்து நின்ற சத்தம் கேட்டு அனைவரும், வெளியே சென்று வரவேற்றனர். வெளியே போகும் போதே பத்மா, தன் மருமகளிடம் " நீருமா, சுகந்தி ஏதும் சொன்னால், பெரிது பண்ணாத… மாமாவுக்காக பொறுத்துக் கொள்" என…


சரி அத்தை என்ற நீரஜா, உள்ளுக்குள் பயந்தாள்.

திருமணமான இந்த ஆறு மாதத்தில், நவீனின் அத்தையும், மாமாவும் இங்கு வரவே இல்லை….


பத்மாவும், சுகுமாரனும் தான் இரண்டு முறை சென்று வந்தார்கள்.


இவர்களின் திருமணம் செய்து கொண்ட நாள், அன்று வீட்டில் நடந்த பிரச்சினைகளை, இப்போ நினைத்தால் கூட அவளுக்கு நடுக்கம் வரும்.


சுபிக்கும், சுகந்திக்கும் நடந்த வாக்குவாதங்கள், முடிவில் சுபி அந்த வீட்டை விட்டு வெளியே போனது… பிறகு சுபி பட்ட துன்பங்கள் எல்லாமே கண் முன்னே வந்து போனது…


வெளிறிய முகத்தை, மெல்ல சமாளித்து இயல்பாக வைத்து கொண்டு அவளும் வந்தவர்களை வரவேற்பதற்காகச் சென்றாள்.


தொடரும்…..
 
Top