Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - எபிலாக்

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments ❤️❤️❤️❣️❤️❤️❣️
1170

எபிலாக்


சுபி அவசர, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். ஆனால் கவின் கிளம்ப விட்டால் தானே. பின்னால் நின்றுகொண்டு, அவனும் தலையை ஒரு கையால் கோதியவாறு, மற்றொரு கையில், வைத்திருந்த சீப்பால், சுபியின் முதுகில், கழுத்தில் ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தான்.


"ஐயோ! அத்தான் வலிக்குது‌. சும்மா இருங்க…" என கண்ணாடி வழியே கவினை முறைத்துக் கொண்டே தலையில் பூ வைத்துக் கொண்டிருந்தாள்.


ஏய், நான் என்னடி செய்தேன். நான் உன்னை தொடக் கூட இல்லையே? நீதான், கோவிலுக்கு போகணும் சும்மா இருங்க, என்று சொன்ன… நானும் நல்லப் பிள்ளையாக அமைதியாக இருக்கிறேன்.


எது இது தான் நல்லப் பிள்ளையாக இருக்கிற அழகா… பின்னாடி இருந்து என்னை கிளம்ப விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தால், நான் என்ன தான் செய்வது…


ப்ளீஸ் அத்தான் கோவிலுக்கு வேற போகணும்.பிள்ளைகள் வேற, அத்தைக் கிட்ட இருக்காங்க, அவங்க சாப்பிட்டாங்களா, இல்லையா என்று வேற தெரியவில்லை.

நான் போய் பார்க்கணும்…


நான் ரொம்ப பிசி…


ஓஹோ, உன் பின்னாடியே வரதால, நான் எல்லாம் வெட்டியோ, என இறுக்கமான குரலில் கூற‌…


ஐயோ! அத்தான், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, என்று அவன் கழுத்தில் கைகளை மாலையாகக் கோர்த்துக் கொண்டு சமாதானம் செய்துக் கொண்டிருந்தாள்.


அந்த கள்ளன், அதற்காகத் தானே பொய்யாக நடித்துக் கொண்டிருந்தான்.


அவன், ஒன்றும் கூறாமல் முகத்தை திருப்பிக் கொண்டான். இல்லை என்றால்,அவன் முகத்தைப் பார்த்தே கண்டு பிடித்துவிடுவாள்.


அத்தான்," கோவிலுக்கு வேற சீக்கிரம் போயிட்டு வரணும்.வந்து தான் ஈவினிங் பார்ட்டிக்கு ரெடி பண்ணணும்.ஒரு ஆளா, என்னால முடியலை. இரண்டு வாண்டுகளும்,என்னை வச்சு செய்யுதுக…" என்று புலம்ப…


"அதுக்கு தான் அவங்க ரெண்டு பேரையும் அடுத்த வாரம், டூருக்கு போக சொன்னா, எங்க நான் சொன்னதை கேட்டீங்க.."என்று கவின் கோபப்பட…


ஐயோ! நான் எதை சொன்னால், நீங்க என்ன சொல்றீங்க…


அவர்களே,பாவம் எத்தனை வருடங்களாக, ஹனிமூன் டூர் போவதற்கு முயற்சி செய்து இப்பத்தான் போறாங்க, விடுங்க அத்தான்.


நான் எங்கடிப் பிடிச்சிருக்கேன்.நீ தான் விடாமல் பிடிச்சிருக்க, என கேலி செய்ய…


அப்ப தான் இருந்த நிலையை உணர்ந்து, வெட்கப்பட்டுக் கொண்டே, விலக… கவினோ, விசிலடித்துக் கொண்டிருந்தான்.


ஒருவழியாக கீழே இறங்கி இருவரும் வர…


பத்மா, தன் பேரனின் பின்னே ஓடிக்கொண்டிருந்ததாள். டேய், சுபன்… சுபன்…வரீயா, இல்லையா…


நான் வந்தா உனக்கு உதை தான் கிடைக்கும், என்று மூச்சு வாங்கிக் கொண்டேக் கூற…


அந்தக் குட்டியோ, அவளை முதலில் வரச் சொல்லுப் பாட்டி என்று, சமத்தா கிளம்பியிருந்த நிரல்யாவைக் காட்டிக் விட்டு, ட்ரஸ் போடாமல் ஓடிக் கொண்டிருந்தான்.


சுகுமாரனோ, பேப்பர் படித்துக்கொண்டு தன் பேரன் செய்யும் சேட்டையை ரசித்துக் கொண்டிருந்தார்.


அதை பார்த்து விட்ட பத்மா, " ஏங்க கோவிலுக்கு வேற நேரமாச்சு, சும்மா பார்த்து சிரித்துக் கொண்டு இருக்கிறீங்க? வந்து உதவி செய்யலாம் இல்லையா…" என…


நீ சொன்ன நான் செய்ய மாட்டேனா, என்ற சுகுமாரன் தனது அருகில் வந்த சுபனைப் பிடித்துக் கொண்டார்.


டேய்,தெரியாத்தனமா உனக்கு உங்க அம்மா பேரை வச்சாலும் வச்சாங்க, அவளை மாதிரியே சேட்டை என சுகுமாரன்க் கூறிக்கொண்டே நிமிர…


அங்கே முறைத்துக் கொண்டு இருந்த சுபி, என்ன மாமா, என்ன சொல்லிட்டு இருக்கீங்க என…


அது ஒன்னும் இல்லடா. சும்மா சுபன்,குட்டியை கூப்பிட்டு இருந்தேன். டிரஸ் போட தான் மா… நீ போ மா உள்ள வேலை இருந்தா பாரு… இவனை நான் பாத்துக்குறேன் என்றுக் கூற…



கவினோ, நக்கலாக சிரித்து விட்டு இங்க கொடுங்க நான் கவனிச்சுக்கிறேன் என்று கூறி சுபனைத் தூக்கி ரெடி பண்ணினான். அந்த சேட்டைக்காரன் கவினிடமும், சுபியிடமும் மட்டும் அமைதியாக இருப்பான்.


ஏன் அத்தை,டென்ஷனா இருக்கீங்க என்று பத்மாவிடம், சென்று வினவ…


ம், இந்த குட்டியை என்னால் சமாளிக்கவே முடியவில்லை. அதோ அங்க பாரு நிரல்யா எவ்வளவு அமைதியா, இருக்கிறா…


இவன் பண்ற சேட்டைக்கு, என்னால சுத்தமா முடியலை. ஈவினிங் ஃபங்ஷன் வேற இருக்குது. ஊருக்கு போனவங்க நேற்றே வர வேண்டியது தானே… இல்ல இந்த ஃபங்ஷனை முடிச்சுட்டு போகணும், அதுவும் கிடையாது என்று புலம்ப…


சரி விடுங்க அத்தை, நாம கோவிலுக்கு போயிட்டு வரதுக்குள்ள, அவர்கள் வந்து விடுவார்கள் அத்தை. அக்கா, வந்துட்டா எல்லா வேலைகளையும் பாராத்துப்பாங்க என…


என்னது உங்க அக்கா வந்தவுடன்,எல்லா வேலையையும் பார்த்துப்பா என்று நினைக்கிறீயா?. " நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்" அந்த கதையாக இல்ல இருக்கு.


என் பையன் நவீனோட, நீண்ட நாள் ஆசை ஹனிமூன் போகணும் என்று... அது நீங்க போன போதே ஒழுங்கா போயிருக்கலாம். அப்போ போக சொன்ன போது, வெளிநாட்டுக்கு தான் போகணும், இப்ப கொரோனா, எங்கேப் பார்த்தாலும் பரவுது மா, நாங்க பொறுமையா போறோம் என்று சொல்லிட்டான்.


அப்படி, இப்படி என்று ஒரு வருடம் ஓடிவிட்டது. அதற்குப் பிறகு ஏற்பாடு செய்தால், அவள் கன்சீவ் ஆகிட்டாள்‌. அப்புறம் நீ கன்சீவ் ஆகிட்டே… இரண்டு பேருக்கும் புள்ள பிறந்து, அப்படியே இரண்டு வருடம் ஓடிவிட்டது‌.


அதற்குப் பிறகு டூருக்குப் போ என்று சொன்னால், உன் அக்கா, பிள்ளைகளை விட்டு போக முடியாது என்று பிடிவாதமாக சொல்லி விட்டாள்.


ஒரு வழியா, இப்போ தான் போனாங்க.

போன இடத்திலாவது ஒழுங்கா என்ஜாய் செய்தாளா… அதுவும் கிடையாது.


அரை மணி நேரத்துக்கு, ஒரு தடவை போன் பண்ணி சுபன், பற்றி விசாரித்தால் கூடப் பரவாயில்லை. சேட்டை பண்ணுற அவனை விட்டுட்டு, அமைதியா இருக்கிற நிரல்யாவை, எப்படி இருக்கா,எப்படி இருக்கா என்று விசாரித்தால் நான் என்னத்த சொல்லுவேன்‌. வந்த உடனே அவளைத் தான் தூக்கி வச்சு சுத்துவாள்.நீ வேண்டும் என்றால் பாரு என்றார்.


ஒரு வழியாக அனைவரும் கிளம்பி கோவிலுக்கு சென்றனர். இன்று சுபி, கவினுக்கு ஐந்தாவது ஆண்டு திருமணநாள்.


அதைக் கொண்டாடுவதற்கு தான் கோவிலுக்கு செல்கின்றனர். ஈவினிங் பார்ட்டி ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.


பார்வதியும், ஈஸ்வரனும் நேராக கோவிலுக்கு வந்து விட்டனர்‌.


நல்லபடியாக சாமி தரிசனம் முடிந்து அங்கு சற்று நேரம் உட்கார்ந்து இருந்தனர்.


இரண்டு குழந்தைகளும், சும்மா இராமல் ஆடிக் கொண்டிருந்தனர். சுபி தான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அங்கு வந்த ஒரு பெண்மணி, பத்மா, பார்வதியிடம் பேசிக்கொண்டு இருந்தார்‌. இரண்டு குழந்தைகளையும் பார்த்து இது உங்க பேரன் பேத்தியா என்று விசாரித்தார்.


ஆமாம் என புன்னகையுடன், பத்மாவும், பார்வதியும் கூறியினர்.


அதானேப் பார்த்தேன், இரண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கிறார்களே, என்றவர் சுபியிடம் திரும்பி, ட்வின்ஸாமா…


ஐயோ ! ஆன்ட்டி, அப்படி எல்லாம் இல்ல... ஒரே நேரத்துல நான் இரண்டு பிள்ளை பெற்றுக் கொண்டால், இந்த நாட்டோட நிலைமை அவ்வளவு தான் என…



பத்மாக் குறுக்கிட்டு எங்க ரெண்டு பசங்களோட,பிள்ளைங்க என்றவர், நேரமாச்சு நாங்க கிளம்புறோம் என்று விடைப் பெற்றார்.


வழக்கம் போல வீட்டிற்கு வந்ததும் குழந்தைகளுக்கு சுத்தி போட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்த்தாள்.


சற்று நேரத்தில் நீராஜாவும், நவீனும் சுவீஸ் டூர் முடித்து வீட்டிற்கு வந்தனர்.

உள்ளே வந்த நீரஜா கை, கால்களை கழுவி விட்டு ஓடி வந்து நிரல்யாவைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.


பத்மா, சுபியிடம்," பார்த்தீயா சுபி, நான் சொன்ன படி தான் நடக்குது‌."


ஏய் நீரு…


ஹாங் என்ன அத்தை…


ஏய் வந்தவுடன் இவளைத் தான் தூக்க வேண்டுமா, அங்கப் பாரு உன் பிள்ளை சுபன், உன்னப் பார்த்துக் கிட்டே இருக்கானா, அவனைத் தூக்கு என்று கண்டிப்புடன் கூற…


சுபி வந்து அவளது மகளை வாங்கிக் கொண்டாள்.


நீரஜா, நவீனின் அருகில் செல்ல… அவன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த, சுபனும் அம்மா என்று தாவிச் சென்றான்.

நவீன்,நீரஜா தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை… தன் தங்கைப் பேரு வருமாறு வைக்க வேண்டும் என்றுத் தேடித் தேடி, சுபன் என்று வைத்தாள்.


இவன் பிறந்ததற்கு பிறகு ஐந்து மாதம் கழித்து, சுபி, கவினுக்கு நிரல்யா பிறந்தாள். அவளும்,நீரஜா பெயர் வருமாறு வைத்தாள்.


பார்பதற்கு இருவரும் ஒரே மாதிரி தான் தெரிவார்கள்.


ஆனால் குணமோ,மாத்தி பிறந்து விட்டது. சுபிக்கு அமைதியான பிள்ளை. நீருவிற்கு அடாவடி பிள்ளை. நீருவால் அவனை சமாளிக்க முடியாமல் சுபியிடம் விட்டு விட்டாள்..


அதற்கு பிறகு நீரஜாவை ஓய்வெடுக்க சொல்லி விட்டு, பத்மாவும். பார்வதியும் வேலைகளை மேற்பார்வை பார்க்க, பொழுது அமைதியாக ஓடியது.


இரவு விருந்து பார்வதி, சுகந்தி குடும்பத்துக்கும் மட்டும்தான். அது போக, சுபியோட ஃபிரண்ட் குடும்பமான அகல்யா வீட்டிற்கு மட்டும் தான் அழைப்பு…


மாலையில் சுகந்தி, தன் கணவர், மகள்,மாப்பிள்ளை மற்றும் பேத்தியுடன் சந்தோஷமாக வந்தார்.


சுகந்தி வழக்கம் போலவே தான் இருந்தாள். ஒரே ஒரு வித்தியாசம்,முன்னாடி மகளின் பெருமையை பேசுபவர், இப்பொழுதோ பேத்தியின் பெருமையை பேசிக் கொண்டு இருக்கிறார்.



அதை காதில் வாங்கி கொள்ளாமல் எல்லோரும் இருக்கப் பழகிக் கொண்டனர்.


சற்று நேரத்தில் அகல்யாவும் குடும்பத்துடன் வர, சுபி,கவின் தம்பதியினர் கேக் வெட்டி அவர்களது திருமண நாளை கொண்டாடினர்.


பஃபே முறையில் உணவு எடுத்து வைத்து, பேசிக் கொண்டே உண்டனர்.


அகல்யாவும், ஆர்த்திகாவும் சுபியிடம் வர... ஹாய் ஆர்த்தி, " எப்படி நீ இன்னிக்கு வந்த பப்ளிக் எக்ஸாம் வரப் போகுதே. நீ படிச்சிட்டு இருப்ப என்று நினைச்சேன் " என கலாய்க்க…


சுபிக்கா, நீங்க என்ன எங்கம்மாவை கிண்டல் செய்யுறீங்களா…

எங்க அம்மா பாவம்," நான் ஃபிப்த் படிக்கும் போது, எங்க அம்மாவை, நீங்க படுத்தன பாட்டுல, இப்ப நான் டென்த் படிக்கும்போது கூட அவங்க என்ன கண்டு கொள்வதே கிடையாது." என படபடவென பேசினாள்.


நான் நிரல்யா குட்டியைத் தூக்கிட்டு வரேன் என்று ஓடினாள்.


மான் குட்டிப் போல,துள்ளித் குதித்து ஓடும் தனது மகளை கண்கலங்க பார்த்த அகல்யா,


சுபியிடம் திரும்பி, " உன்னோட அறிமுகம் கிடைத்ததுக்கு நாங்க குடுத்து வச்சிருக்கோம். என் பொண்ணோட வாழ்க்கையை திருப்பிக் கொடுத்துருக்க டா… நீயும், உன் கணவரும், சேர்ந்து என் பொண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்க சொல்லவில்லை என்றால், நான் என் பொண்ணை இப்படி பார்த்திருக்க மாட்டேன் டா. " என தழுதழுக்க...



விடுங்க ஆன்ட்டி..


சரி டா… ஆமாம் டாக்டர் எங்கே காணோம். இன்வைட் பண்ணவில்லையா‌…


அவங்க ஒரு மீட்டிங்காக டெல்லி வரைக்கும்,போயிருக்காங்க… அவர்களால் வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க…


ஓ சரி டா‌…



இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே நிரல்யாவைத் தூக்கிக் கொண்டு வந்த ஆர்த்திகா, அக்கா‌, " நீங்க ஆஃபிஸ்க்கு போகும் போது பாப்பாவை யார் பார்த்துப்பா?"


அது தான் அக்கா இருக்கா... அக்காவும்‍, ‍ அத்தையும் பார்த்துப்பாங்க…


சுபி, அவள் ஆசைப்பட்ட மாதிரியே தனியாக, கே.எஸ் கன்ஸ்ட்ரக்ஷன் ஆரம்பித்துவிட்டாள்‌.

கவின் அவளுக்கு ஃபுல் சப்போர்டா,எல்லா விதத்திலும் உதவினான்.


அக்கா, எனக்கும் ஒரு லட்சியம் இருக்குகா என்று, இவளது யோசனையில் குறுக்கிட்டாள்.


என்னடா தங்கம்…


அது நான் இப்ப கராத்தேல ப்ளாக் பெல்ட் வாங்கிட்டேன் தெரியும் தானே அக்கா…

அதுல இன்னும் நைன் லெவல்ஸ் இருக்கு. அதை எல்லாம் முடிச்சுட்டு, நானும் தனியா பயிற்சி பள்ளி ஆரம்பிக்கப் போறேன்.



அப்ப நீங்க பாப்பாவை கண்டிப்பா என்கிட்ட தான் அனுப்ப வேணும்…


நிச்சயமாக டா,என சுபி உறுதிக் கொடுக்க…


ஆர்த்திகா, அந்த உற்சாகத்துடன், தன் பெற்றோரோடு வந்து விடைப் பெற… வருங்காலத்தில் அவள் நிறைய சாதிப்பாள், என மனதிற்குள் நினைத்துக் கொண்டு விடைக்கொடுத்தாள் சுபி.


அதற்கு பிறகு சுபி,நீரஜா, தீப்தி மூவரும் வழக்கம் போல கொட்டம் அடித்துக் கொண்டு இருந்தனர். இப்போது மூவரும் நெருங்கிய தோழிகளாயினர். குழந்தைகளைப் பெரியவர்கள் பார்த்துக் கொள்ள, இவர்கள் சுற்றம் மறந்து பேசிக் கொண்டிருந்தனர்‌.


திடீரென்று, சுபி மட்டும் அமைதியாகி விட, என்னவென்று பார்த்தால் கவினை சைட் அடித்துக் கொண்டிருந்தாள்.


நீருவும்,தீப்தியும் சுபியைக் கிண்டலடித்தனர். ஏய் உங்களுக்கு வயசாயிடுச்சு இன்னும் என்ன சைட் அடிச்சிட்டு இருக்க, என தீப்தி கலாய்க்க…


"வாலிபங்கள் ஓடும், வயதாகக் கூடும்

ஆனால் அன்பு மாறாதது" என பாடிய சுபி, இதேபோல் நான் சைட்டடிப்பதையும் நிறுத்த மாட்டேன் என்றுக் கூறி கண்ணடிக்க…

ஓவென ஆர்ப்பாட்டம் செய்தாள் தீப்தி.


இவர்களது ஆர்ப்பாட்டத்தில்‌, என்னவென்று கவின் பார்க்க… சுபியோ முகம் சிவந்தாள்.


தன் மனைவியின் முகம் பார்த்து நடக்கும் கவினுக்கா தெரியாது. தன் மனைவியின் எண்ணவோட்டத்தை அறிந்தவன் புன்னகை சிந்தினான்‌.


இருவரும் ஒருவருக்கொருவர் காரியம் யாவிலும் கைக்கொடுத்து சந்தோஷமாக வாழ்வார்கள் என்று நாமும் வாழ்த்தி விடைப்பெறுவோம்.



முற்றும்.
 
Top