Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் 23

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments ❤️


978980

அத்தியாயம் - 23



சுபி பதறிக் கொண்டு போய், ஏய், யாருடா நீ… என்னடா பண்ணிட்டு இருக்கிற, எனக் கத்த…


அந்த சத்தத்தில் அவன் ஒரு நிமிடம் திகைத்து போய் நின்றவன்…

பிறகு ஏய் நீ யாருடி உள்ள வர, ஒழுங்கா போய்டு… தேவையில்லாமல் நுழையாத சேதாரம் உனக்கு தான்… இது எங்க குடும்ப விஷயம், ஒழுங்கு மரியாதையா வெளியே போடி …


ஓ காட் ! எது உங்க குடும்ப விஷயம். இப்படி ஒரு குழந்தைக் கிட்டப் போய் மிஸ்பிகேவ் பண்றீயே இது தான் உங்க குடும்ப விஷயமா? முதலில் அந்தக் குழந்தைக்கு நீ என்ன செய்யுற என்றுக் கூட தெரியாதேடா பொறுக்கி நாயே… முதலில் அவளை விடுடா…


ஏய் என்ன வாய் ரொம்ப நீளுது, இருடி வரேன்… நீயும் பார்க்கிறதுக்கு டக்கரா தான் இருக்க… ஆனால் எனக்கு தீர்க்க வேண்டிய கணக்கு இருக்கு, முதலில் அதை முடிச்சிட்டு வரேன், என்று தன்னை கைகளால் அடித்துக் கொண்டிருந்தவளை பிடித்துக் கீழே தள்ளினான்.


இவ்வளவு நேரம் சுபியிடம், பேசுவதில் அந்த குழந்தையிடம் இருந்து நகர்ந்து வந்தவன், மீண்டும் தன் பார்வையை குழந்தையிடம் திருப்பினான். அவன் பார்வைக்கே மிரண்டு அழுதாள் அந்த சிறுமி.


அங்கிள் ப்ளீஸ் அங்கிள் என்னை விடுங்க எனக்கு பயமா இருக்கு…

அம்மா, அப்பா … என அழத் தொடங்கினாள் அந்த சிட்டு…


ஏய் வாயை மூடு என்றுக் கூறிக் கொண்டே அக்குழந்தையின் கைகளைப் பற்றினான்.


கீழே விழுந்த சுபியோ, பதற்றத்தில வேற யாரும் உதவிக்கு வருவார்களா என்று கவனித்தாள். தோட்டக்காரரையும், வாட்ச்மெனையும் எங்கே காணவில்லையே என்று பார்வையால் தேடினாள். தன் கையே தனக்கு உதவி என்பதை சிறிது நேரம் மறந்து விட்டாள். வாட்ச்மென் அங்கிள், வாட்ச்மென் அங்கிள் எனக் கத்த தொடங்கினாள்.


ஏய் என நக்கலாக சிரித்துக் கொண்டே, அவள் முன் வந்து நின்றவன், நான் எத்தனை நாளா வாட்ச் பண்ணி இன்னைக்கு ஆளுங்க யாரும் இல்லாத நேரத்தில் வந்திருக்கேன் தெரியுமா. வாட்ச்மெனை நான் தான் வெளியே அனுப்பியிருக்கேன். நீ என்ன கத்துனாலும் யாரும் உதவிக்கு வர மாட்டார்கள்… முதலில் இந்தக் குட்டிப் பிசாச உள்ள விட்டுட்டு வரேன். சின்ன புள்ளையாச்சே என்று அசால்டா இருந்தா, அப்பா, அம்மா மாதிரி எமகாதகியா இருக்கா, வெளியே ஓடி வந்துட்டா என்றுக் கூறிக் கொண்டே தூக்க முயல…


ஒரு கார் சர்ரென்று வந்து நின்றது. காரிலிருந்து இறங்கியப் பெண்மணியைப் பார்த்ததும், அந்தக் கயவனின் கைகளில் சிக்கியிருந்த சிறுமிக்கு, எங்கிருந்து தான் அவ்வளவு வேகம் வந்ததோ, அவன் கையிலிருந்து தன் கையை வெடுக்கென உருவிக் கொண்டு " வேடனிடம் இருந்து விடுப்பட்ட புள்ளிமானென" ஓடினாள்.


மா,மா எனக் கேவி கேவி அழுதாள். மகளின் கோலத்தைப் பார்த்து பதறிப் போன அந்தப் பெண்மணி, தங்கம் என்னடா, ஏன் மா அழற… என்னாச்சு என்று பதறினாள்.


சுபியோ கீழே விழுந்ததில் கால் ஒரு கல்லில் அடிப்பட்டு வலியால் எழுந்திருக்க முடியாமல் சமாளித்து மெல்ல எழுந்து வந்து அவர்களிடம் செல்வதற்குள், அந்த கயவன் அவர்கள் முன்னே சென்றான்.


அவனைப் பார்த்ததும் இந்த சிறுமி இன்னும் பயந்து அவள் தாயைக் கட்டிக் கொண்டு கதறினாள்.


யார் என்று நிமிர்ந்து பார்த்த அந்த பெண்மணி, "டேய் ! நீயா என்னடா , இங்க உனக்கு என்ன வேலை, என்னடாப் பண்ண என் பொண்ணை… சின்ன குழந்தை டா அவ, என அழுதவள், சினம் பெருக உன்னை,இந்த வீட்டு வாசப்படிய மிதிக்காத என்று தானே அடிச்சு துரத்தினோம்…. மறுபடியும் வந்து நிக்கிற… உனக்கு என் கையால, எத்தனை முறை சோறுப் போட்டுருக்கேன். இப்படி உண்ட வீட்டுக்குத் துரோகம் செய்ய முடியுது… நொடியில் சூழ்நிலையை புரிந்துக்கொண்டதால் அவனிடம் மேலும் பேசினாள்."


"அங்கிள், அங்கிள் என்று உன் பின்னாடியே தானே சுத்திக்கிட்டு இருப்பா…அவக் கிட்டப் போய் தப்பா நடக்க முயற்சிக்கிறீயே... உனக்கு எல்லாம் மனசாட்சி என்று ஒன்னு இருக்காடா… முதலில் என் கண்ணு முன்னாடி நிக்காமப் போயிடு…. இல்லைணா நான் போலீஸ்க்கு கால் பண்ணிடுவேன் என்றுக் கூற… "


அந்த பெண்மணிப் பேசிட்டு இருக்கும் போதே அவளையும் பிடித்துத் தள்ளி விட்டு…

உன் புருஷன் புண்ணியத்தால், நான் ஏற்கனவே ஜெயிலுக்குப் போயிட்டு வந்துட்டேன். அதனால ஜெயிலுக்குப் போறது எனக்கு ஒன்னும் புதுசு இல்லை . நீ யாருக்கு வேண்டும் என்றாலும் ஃபோன் பண்ணு, எனக்கு ஒன்னும் பயம் கிடையாது என்று திமிராகக் கூறினான்.


ஆனால் போலிஸ் வந்தால் உன் பொண்ணை பத்தி விலாவரியாக உன்னிடம் விசாரித்து விட்டு,பத்திரிக்கைக்கு நியுஸ் கொடுத்துட்டு போஸ் தான் கொடுப்பாங்க…


அவர் ஃபோனை எடுத்து கால் செய்யாமல் அப்படியே விழுந்தப் படியே இருக்கவும், எகத்தாளமாகச் சிரித்து அப்படியென்ன யாரும் செய்யாத தப்பை நான் செய்துட்டேன். உங்க கம்பெனிக்கு நாயா, பேயா உழைக்கல… இதுல உங்க சொந்தக்காரங்க என்றுப் பெத்தப் பேரு… கம்பெனியில ஏதாவது சலுகை உண்டா அதுவும் கிடையாது. இதுல சொந்தக்காரன் என்பதால் வீட்டில் எந்தப் பிரச்சினை என்றாலும், ரஞ்சித்தக் கூப்பிடு… ரஞ்சித்தக் கூப்பிடு என்று புருஷனும், பொண்டாட்டியும் கூப்பிட்டு வேலை வாங்கினீங்களே… உங்க வீட்டுல ஆயா வேலைப் பார்க்குறதுக்கு தான் நான் இன்ஜினியரிங் படிச்சேனா?


ஏதோ தெரியாமல் ஒரு தடவை தப்பு செய்துட்டேன். அதுக்கு தான் மன்னிச்சிருங்க என்று காலில் விழுந்து கெஞ்சினேனே விட்டானா உன் புருஷன்…


நான் உனக்கு தம்பி முறை தானே வேணும்… நீயாவது எனக்காக ஏதாவது பேசினீயா … இல்லையே, என்னை ஜெயிலுக்கு அனுப்பி,என்னை வேலையில் இருந்து நிறுத்தி விட்டு, ஜெயிலுக்கு போனவன் என்று ப்ளாக் மார்க் குத்தி என் கேரியரையே கேள்விக் குறியாக்கிட்டீங்களே! ஒரு வருஷமா வேலைக் கிடைக்காமல் தெருத்தெருவா சுத்திக்கிட்டு இருக்கேன்.


ஊருக்கு போனா ஒரு பய மதிக்க மாட்டேங்குறான். என்ன பெத்தவங்களோ, இன்னும் எத்தனை நாளைக்கு தம்பிக் காசுல உட்கார்ந்து சாப்பிடப் போற, என்று நாக்கை புடுங்கற மாதிரிக் கேட்குறாங்க… இல்லை என்றால் இங்கே வந்திடு… விவசாயம் பார்க்கலாம் என்றுக் கூப்பிடுறாங்க…


அந்த கிராமத்திலப் போய் குப்பைக் கொட்டுறதுக்கா நான் கஷ்டப்பட்டுப் படிச்சேன். என் ஆசை, கனவு எல்லாத்தையும் கொன்று குழித் தோண்டிப் புதைச்சிட்டானே… அவனை சும்மா விடுவேனா, அவன் வாழ்நாள் முழுவதும் கதறிக் கதறி அழ விடலைணா நான் ரஞ்சித் கிடையாது என்று வெறிப்பிடித்தவன் போல பேசிக் கொண்டிருக்க … அகல்யா திகைத்துப் போய் பார்த்தாள்.


அகல்யா என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுக் கொண்டிருந்தாள்... அவர்கள் செய்த உதவிகளையும் மறந்து விட்டு, செய்த தவறையும் உணராமல், தவறுக்கு கிடைத்த தண்டனையையும், தண்டனையின் விளைவால் கிடைத்த அவமானத்தை மட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டு வெறிப் பிடித்தவன் மாதிரி இருப்பவனிடம் என்ன பேசுவது என்று புரியாமல் அதிர்ந்து நின்றாள்.


அவன் கையில் மாட்டிக் கொண்டு துடித்துக் கொண்டிருந்த தன் மகளை பார்த்து மூளை வேலை செய்ய மறுத்தது.


அவன் கூறியதைக் கேட்ட பிறகு போலீசுக்கும் ஃபோன் பண்ண பயமாக இருந்தது. இருந்த பதட்டத்தில் தன் கணவனுக்கு ஃபோன் பண்ணி சொல்ல வேண்டும் என்பதையும் மறந்து விட்டாள்.


சுபியோ, அவன் வெறிப் பிடித்த மாதிரி பேசிக் கொண்டிருக்கும் போது போலீஸ்க்கு ஃபோன் பண்ணலாம் என்று தன் ஃபோனைத் தேட ஆரம்பித்தாள். கையில் வைத்திருந்த ஃபோன் அவன் தள்ளிவிட்டதில் எங்கேயோ சென்று விழுந்துவிட்டது.


அதை தேட ஆரம்பித்தாள் ஆனால் அது கிடைக்கவில்லை என்றவுடன் இவன் எந்த நேரத்திலும் அந்த குழந்தையை என்ன வேண்டும் என்றாலும் செய்து விடலாம்‌, நாம் தாம் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என யோசித்தாள்.


ஆரம்பக் கட்ட பதற்றம் நீங்கி நிதானமாக யோசிக்க தொடங்கினாள். இவன் திடீரென்று தனியாக இருக்கும் குழந்தையிடம் தப்பாக நடக்க முயற்சிக்கவில்லை. பழியுணர்ச்சியால் திட்டமிட்டு வந்திருக்கிறான். அதனால் எளிதில் விட்டுட்டுப் போக மாட்டான்.


அவன் ஏதாவது செய்வதற்குள் அவனைத் தாக்க வேண்டும் என்று அருகில் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்தாள்.


அவனை லேசாக அடித்து மயக்கம் வர வைத்து விட்டு போலீசுக்கு ஃபோன் பண்ண வேண்டும் என்று எண்ணியவள் சுற்றும் முற்றும் தேடினாள்.


அவளது அதிர்ஷ்டமோ, இல்லை துரதிஷ்டமோ அருகில் வாட்ச்மேன் பயன்படுத்தும் தடி இருந்தது. அதை எடுத்து கையில் வைத்து மெல்ல மெல்ல அவன் அருகே நெருங்கி நின்றாள்.


இவள் அந்தக் கயவனிடம் செல்வதற்கும் அவன் வெறி பிடித்தாற் போல் பேசி விட்டு குழந்தையை உள்ளே அழைத்துச் செல்ல முயல்வதற்கும் சரியாக இருந்தது.


அவன் பேசியதை கேட்டப் பிறகு மெதுவாக அடித்து மயக்கத்தில் தள்ள வேண்டும் என்று நினைத்தவள் அவன் கூறிய காரணத்தை கேட்டு ஆத்திரத்தில் நன்கு அடித்து விட்டாள்.


அவன் மயங்கி கீழே விழ … அவன் இறுக்கமாக பிடித்துக் கொண்டு இருந்த குழந்தையும் சேர்ந்து விழுந்தது.


அகல்யா திக்பிரமைப் பிடித்தாற் போல் நின்றிருந்தாள்.


சுபி தான் அகல்யாவை அழைத்தாள். ஆன்ட்டி சீக்கிரம் வாங்க இவன் முழிப்பதற்குள். பாப்பாவை உள்ள கூட்டிட்டு போவோம், பாப்பா ரொம்ப பயந்துட்டா, முதலில் அவளை சமாதானம் படுத்துங்க. அப்புறம் அவன் கைகளை கட்ட வேண்டும்.


சீக்கிரம் வாங்க ஆன்ட்டி என மீண்டும் அழைக்க... பிரமிப்பில் இருந்து வெளியே வந்தாள் அகல்யா. இருவருமாக ஆர்த்திகாவைத் உள்ளே அழைத்துச் சென்று ஓர் அறையில் படுக்க வைத்தனர்.


ஏசி இருந்தா போட்டு விடுங்க ஆன்ட்டி என சுபிக் கூற…


அவள் சொல்ல சொல்ல பொம்மைப் போல் நிறைவேற்றினாள் அகல்யா.


ஆன்ட்டி கொஞ்சம் நான் சொல்றதை கேளுங்க... இப்ப நம்ம கொஞ்சம் சுறுசுறுப்பா இருக்கணும், அன்ட் தைரியமா இருக்கணும். நீங்க இப்படி பயந்து நின்னுட்டு இருந்தீங்கணா, அவன் உஷார் ஆகிடுவான்.


அவன் இப்ப மயக்கத்துல இருக்கான்,அவன் கண் விழித்து செயல்படுத்தறதுக்குள்ள நாம் செயல்பட வேண்டும் ஆன்ட்டி.


முதல்ல நீங்க கயிறு இருந்தா எடுத்துட்டு வாங்க... அவன் கையை கட்டிட்டு அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுப்போம் என்றாள்.


சரி என தலையாட்டிய அகல்யா, கயிறு எடுப்பதற்காக எழுந்திருக்க, குழந்தையோ விடவில்லை. மா பயமா இருக்கு மா என விடவே இல்லை. மா ரொம்ப வலிக்குதுமா, என உடம்பில் ஏற்பட்ட காயங்களைக் காட்ட… அகல்யா அடக்கமாட்டாமல் அழுதாள்.சுபியாலும் கண்களிலிருந்து கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.


இந்த சமூகத்தில் பிறந்ததற்கு வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள். பின்னே ஒரு குடும்பத் தகராறுக்கு ஏதுமறியாத குழந்தையை பலியிட முயன்றானே! நவீன உலகத்தின் சாபக்கேடாக சொந்த வீட்டிலே பாதுகாப்பு இல்லாமல் குழந்தைகள் வளர்கிறது என்று நினைத்தவள் மெல்ல சுதாரித்து அவர்களையும் தைரியப் படுத்தினாள்.


ஆன்ட்டி நீங்கள் அழுதால், பாப்பா இன்னும் அழுவாள் அதனால நீங்க தைரியமா இருங்க…


முதலில் ஃபேமிலி டாக்டருக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுங்க எனக் கூற…


அகல்யாவும் டாக்டருக்கு ஃபோன் பண்ணி விவரத்தைக் கூற… அவளுக்கு ஏதாவது ஜூஸ் போட்டு அதில் தூக்க மாத்திரையை கலந்து சற்று நேரம் தூங்க வைக்க சொன்னார்.


அவர் தான் ஒருமணி நேரத்தில் வந்துவிடுகிறேன்.அதுவரை குழந்தை அலட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் அதற்காக தான் தூக்க மாத்திரையைப் பயன்படுத்த சொன்னேன். பார்த்துக் கொள்ளுங்கள் என்றுக் கூற... டாக்டர் கூறிய படி குழந்தைக்கு ஜூஸ் எடுத்து வருவதற்காக எழுந்திருக்க…. குழந்தை விடவே இல்லை.


குட்டி, அம்மா போய் உனக்கு ஜூஸ் போட்டு எடுத்து வரேன். அது வரை இந்த அக்காவோட இரு, பயப்படாதே சரியா என்று அவளை சமாதானம் செய்து விட்டு உள்ளே சென்றாள்.


ஜுஸ் கொடுத்து தூங்க வைத்து விட்டு இருவரும் வெளியே வந்தனர்.


சுபி கயிறை தேடி எடுத்து சென்று அவனின் கைகளை கட்டி விட்டாள். இறுக்கமாக கட்டும் போது வலித்திருக்கும் போல முனகிக் கொண்டே இருந்தான். நல்ல அடிப் போல, இன்னும் கண் விழிக்கவில்லை, நல்ல வேளை என்று எண்ணிக் கொண்டு உள்ளே சென்றாள்.


ஆன்ட்டி குடிக்க கொஞ்சம் தண்ணி தாங்க, ரொம்ப தாகமாக இருக்கு எனக் கூற…


இதோ, எடுத்துட்டு வரேன் என்று கிச்சனுக்குள் நுழைந்தவள், குழந்தைக்காகப் போட்ட ஜுஸ் மீதி இருக்க, அதை இரண்டு க்ளாஸில் ஊற்றி எடுத்து வந்தார்.


அவளுக்குமே தொண்டை வறண்டு இருந்தது. ஏதாவது குடித்தால் தான், அடுத்த அடியே எடுத்து வைக்க முடியும் போல அவ்வளவு களைப்பாக இருந்தது.


சுபியிடம் ஒரு கிளாஸை எடுத்துக் கொடுத்தவள், மற்றொன்றை எடுத்து தான் அருந்த தொடங்கினாள். குடித்து முடித்த சுபி, ரொம்ப தேங்க்ஸ் ஆன்ட்டி என்று சொல்ல‌‌…


தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் மா, அப்படி சொல்வது என்றால், நான் தான் சொல்லனும்மா, உன்னை எனக்கு முன்னப் பின்ன தெரியாது. இருந்தாலும் நீ என் பொண்ணை காப்பாற்றியதற்கு நான் தான் காலம் பூரா உனக்கு நன்றி சொல்லணும் மா…


எதுக்கு ஆன்ட்டி பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க… நம்ம பக்கத்துல இருக்கிறவங்க கஷ்டப்படும் போது பார்த்துட்டு சும்மா இருக்க கூடாது… அவர்களுக்கு ஏதாவது ஆபத்து வந்தால், பக்கத்தில் இருக்கிறவங்க எனக்கு என்ன வந்தது என்று போகாமல் போராடணும். இதைத் தான் பாரதியார் கூட "ரெளத்திரம் பழகு " என்று சொல்லியிருக்கிறார். இதை எல்லாம் பெரிசு பண்ணாதீங்க ஆன்ட்டி, என்றவள் வேறுப் பேச்சிற்கு தாவினாள்.


முதலில் போலிஸ்க்கு கால் பண்ணுங்க ஆன்ட்டி… என் ஃபோனை வேற காணும், அதை வேற தேடனும் ஆன்ட்டி.


அப்புறம் பாப்பா பேரு என்ன ஆன்ட்டி…என்ன படிக்கிறா...


அவப் பேரு ஆர்த்திகா மா, ஃபிப்த் படிக்கிறா…


நான் அங்கிளுக்கு கால் பண்ணி நடந்ததைச் சொல்லிட்டு, அப்படியே போலிஸ்க்கும் இன்ஃபார்ம் பண்ண சொல்லிடுறேன், என்றவர் அதே போல் தனியேச் சென்று ஃபோன் பேசிட்டு வந்தார்.


சரி வா மா… அங்கிள் உடனே கிளம்பி வரேன் என்று சொன்னார் மா… வா நாம போய் உன் ஃபோனை தேடுவோம். அப்படியே அந்த பொறுக்கி என்ன பண்ணுறான் என்றுப் பார்ப்போம். "பாம்புக்கு பால் வார்த்தாச்சு" அதுக்கான பலாபலனை அனுபவிச்சுத் தானே ஆகணும் என்றுப் பெருமூச்சு விட்டுக் கொண்டே சுபியோடு வெளியே வந்தாள்.


ஆமாம் ஆன்ட்டி நானே கேட்கணும் என்று நினைச்சேன் அந்த பொறுக்கி என்ன உங்கள் சொந்தக்காரரா… எங்க குடும்ப விஷயத்துல தலையிடாத என்றுச் சொன்னான்.


வெளி வாயிலுக்கு வந்தவர்கள் அது ஒரு பெரிய கதை மா… எங்க ஊர்ல எனக்கு தூரத்து சொந்தம். தம்பி முறை வேணும். வசதியில்லாத குடும்பம். அவன காலேஜ்ல சேர்க்க பணம் இல்லாததால் படிப்பை நிப்பாட்டி விட்டு விவசாயம் செய்ய சொல்லணும் என்று எங்க சின்னம்மா வருத்தப்பட்டு என்கிட்ட சொல்ல எனக்கு மனசு கேட்காமல் நாங்க படிக்க வைக்கிறோம் என்று நான் தான் அழைச்சிட்டு வந்தேன்.


இங்க சென்னையில ஹாஸ்டலில் சேர்த்து நல்ல காலேஜ்ல படிக்க வச்சேன். என்ன அவனை படிக்க வச்சும் படிப்பு வரலை … அரியர்ஸ் வச்சு, அரியஸ் வச்சு எப்படியோ படிப்பை முடிச்சான். பட் கேம்பஸ்ல வேலை கிடைக்கலை... சரி வெளியில வேலை கிடைக்கிற வரைக்கும் எங்க ஆபீசுக்கு வரட்டும் நான் தான் ரெகமெண்ட் பண்ணேன்.


இவன் படித்ததற்கும் எங்க ஆஃபிஸ் வொர்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இருந்தாலும் எனக்காக என் ஹஸ்பன்ட் சேர்த்துக்கிட்டார்.


ஆனால் அவனுக்கு சொந்தக்காரன் என்று பெரிய போஸ்ட் கொடுப்போம் என்று நினைச்சிருப்பான் போல இப்போது தான் பேசும் போது எனக்கே தெரியுது… இது தெரியாமல் எங்க ஆஃபிஸ்ல சேர்த்துக் கிட்டோம்.


நாங்க மெட்டிரியல்ஸ் வாங்குற கஸ்டமர் கிட்ட சைடுல கமிஷன் வாங்கியிருக்கான். இது அவருக்கு தெரிய வந்துச்சு… கண்டிச்சாரு அதுவும் இல்லாமல் கம்பெனி அக்கவுண்ட்ல இருந்தும் சஸ்பென்ஸ்ல எங்க ஹஸ்பன்ட் வாங்கிட்டு வரச் சொன்னதா சொல்லி அவ்வப்போது பணம் எடுத்துருக்கான்.



அந்த பணத்தை தான் தரச் சொல்லிக் கேட்டாங்க... இல்லை என்றால் போலீஸில் கம்ப்ளைன்ட் செய்வேன் என்று சொன்னாங்க… அவன் இல்லை என்று சாதிச்சான். அதான் இவரு போலிஸ்ல ஹேண்ட் ஓவர் பண்ணிட்டாங்க…


அவங்க கவனிச்ச கவனிப்புல எடுத்தப் பணத்தை கொடுத்துட்டான். அதுக்குத் தான் இப்ப பழிவாங்க வந்துருக்கான்.


எல்லாம் என் மேல் தான் தப்பு… அவரு முதலில் ஃபேக்டரில சேர்க்கிறேன். படிப்படியாக வந்தால் தான் தொழில் பற்றி எல்லா நுணுக்கமும் கற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார், நான் தான் கேட்கலை… ஒரேப் பிடியாக நின்று ஆஃபிஸில் சேர்த்துக்க சொன்னேன்…


சரி விடுங்க ஆன்ட்டி… ஆமாம் வாட்ச்மென் எங்க? தனியா இப்படி பாப்பாவை மட்டும் விட்டுட்டு எப்படி வெளியே போனீங்க…


அது மா … என்றவள் பிறகு ஏதோ யோசித்து விட்டு முதலில் உன் பேரைச் சொல்லுமா… உன்னை பார்த்த மாதிரியும் இருக்கு, ஆனால் பேரு தெரியவில்லை என …


ஐயோ! சாரி ஆன்ட்டி என்னை அறிமுகம் படுத்தாமல் நான் பாட்டுக்கும் பேசிக் கொண்டிருக்கிறேன். நான் சுபி… சுப்ரஜாஈஸ்வரன்…


கிருஷ்ணா சில்க்ஸ் எங்கக் கடை தான் ஆன்ட்டி.


ஓ உங்க கடையில தான் நான் எப்பொழுதும் பர்சேஸ் பண்ணுவேன்‌. மே பி அப்போ பார்த்து இருப்பேன் என்று நினைக்கிறேன் ‌…


இருக்கலாம் ஆன்ட்டி… இல்லை ஒரே ஏரியா என்பதால் இங்கக் கூடப் பார்த்திருக்கலாம்… நான் கூட இந்தப் பக்கம் வந்தால உங்கள் தோட்டத்தை ரசிக்காமல் சென்றதே இல்லை. உங்கள் தோட்டத்தில் இருக்கிற அலியம் மலர் எனக்கு அவ்வளவு பிடிக்கும்.


அதை ஒரு ஐந்து நிமிடமாவது இருந்து ரசித்து தான் போவேன். ஆனால் உங்க வாட்ச்மேனை நான் ஒரு நாளும் கேட்டுக் கிட்ட இருந்து நான் பார்த்ததில்லை.


அவர் எங்கேயாவது உட்கார்ந்து தான் நான் பார்த்திருக்கிறேன். ஏன் ஆன்ட்டி வயசானவர சேர்த்து இருக்கீங்க என்று கேட்க…


அவர் ரொம்ப நாளாவே எங்களோடு தான் இருக்கிறார் மா… சமீபத்தில் கூட அவருடைய ஒரே பேத்தி தூக்குப் போட்டு தற்கொலை பண்ணிக்கிச்சு… பாவம் இவரும், இவருடைய மனைவியும் அதனால சும்மா ஹெல்ப்புக்காக வச்சிருக்கேன்.


ஆனால் ஆர்த்திகாவைத் தனியா விட மாட்டேன். இன்னைக்கு திடீரென்று தலைவலிக்குது ஸ்கூலுக்கு போகலை என்று ஒரே அழுகை… எனக்கு முக்கியமான மீட்டிங் சோ, அதுல கலந்துக் கிட்டு வந்துடலாம் என்று அவளை ஜாக்கிரதையாக இரு என்று சொல்லி விட்டு தான் போனேன்.


ஓ, ஆனாலும் ஆன்ட்டி பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். வேற ஏதாவது வகையில் அவருக்கு ஹெல்ப் பண்ணுங்க … நல்லா எனர்ஜிடிக்கா இருக்கிற வாட்ச்மேனை வேலைக்கு வைங்க ஆன்ட்டி அது தான் நல்லது.


ம்,ஆமா மா… இனி வேற ஏற்பாடு தான் செய்யணும்.

சரி வாங்க அவன் என்ன பண்ணுறான் என்றுப் பார்ப்போம் என்றுக் கூறிய படியே அங்குச் செல்ல… அங்கோ, அவன் இரத்த வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருந்தான்.



சுபி, என்னமா இப்படி கிடக்குறான் என்று பயத்தில் தந்தியடிக்க அகல்யாக் கூற…


நெற்றியில் வியர்வை சுரக்க, சுபி பதற்றத்துடன் தெரியவில்லை ஆன்ட்டி… நாம உள்ள போகும் போது நல்லாத் தானே இருந்தான். அதுவும் இல்லாமல் நான் பின்னாலிருந்து தான் அடிச்சேன். ஆனால் இப்போ முகத்தில் இருந்து ரத்தம் வருது… அதுவில்லாமல் நான் அவனை அடிச்சிட்டு அந்தக் குச்சியை கோபத்தில் விட்டேறிந்தேன். ஆனால் இப்போ குச்சி இங்கேயே இருக்கு… அப்போ யாரோ வந்துருக்காங்க எனக்கு பயமாயிருக்கு என்றுப் புலம்ப…


அகல்யாவோ, ஐயோ! நான் வேற அங்கிள் கிட்டச் சொல்லி போலிஸ்க்கு கால் பண்ண சொல்லிட்டேனே இப்ப என்ன பண்ணுறது… ஐயோ! அந்தப் பாவி சொன்ன மாதிரியே என் பொண்ணு பேரு பத்திரிகையில் வரப் போகுது…

நான் எப்படி என் பொண்ணை காப்பாத்த போறேன் என்றுத் தெரியலையே எனக் கண்ணீர் விட்டுக் கதற…


கொஞ்சம் பொறுமையாக இருங்க, ஆன்ட்டி போலிஸ் வந்தால் நான் பேசிக்கிறேன். என் கிட்ட மிஸ்பிகேவ் பண்ண முயற்சி செய்தான்… என்னைக் காப்பாத்திக்க தான் அவனை அடிச்சேன் என்று சொல்றேன்… அது பிரச்சினை இல்லை ஆன்ட்டி… மூன்றாவதாக இன்னொருத்தர் இங்க வந்து இவனைக் கொன்னுருக்காங்க அது யார் என்று கண்டு பிடிக்கணும். முதலில் என் ஃபோன் எங்கே என்றுப் பார்க்கணும்… எங்க வீட்டுக்கு கால் பண்ணணும்.


இருவருமாகத் தேடி ஒரு வழியாக ஃபோனை கண்டுப் பிடித்து ஈஸ்வரனுக்கு சுபி கால் செய்ய… அவளது நேரம் ஃபோன் செய்தால், ஃபோன் ஸ்விட்ச்டு ஆஃப் செய்யப்பட்டுள்ளது, சிறுது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும் என்ற வாய்ஸ் மெசேஜ் தான் கேட்டது ‌…


அவருக்கு இருந்த மன உளைச்சலில், வியாபாரம் நிமித்தம் ஃபோன் கால் வந்துக் கொண்டிருக்க பேசும் மன நிலையில் இல்லாததால் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டார்.


பார்வதி எப்பொழுதும் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே ஃபோனை கையில் எடுப்பார். மீதி நேரத்தில் அது எங்கேயாவது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்.


அதனால் தான் தன் தாயிற்கு ஃபோன் செய்ய முயற்சிக்கவில்லை. சரி இருந்தாலும் ஒருமுறை முயற்சி செய்வோம் என்று பார்க்க... அது முழு ரிங்டோன் அடித்து முடிந்தது.


பெரும் யோசனைக்குப் பிறகே கவினுக்கு முயற்சி செய்யதாள். அவனோ கோபத்தில் இவள் ஃபோன் பண்ண, பண்ண கட் செய்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டான்.


' நானே உன் மேல செம்ம கோபத்தில் இருக்கிறேன் … நான் அமைதியாக இரு என்று சொல்ல, சொல்ல என் பேச்சைக் கேட்காமல் பேசக் கூடாத பேச்சை யெல்லாம் பேசி விட்டு இப்போ எதுக்குடி ஃபோன் செய்யுற…' என கோபத்துடன் நினைத்தவன் ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துத் தூக்கிப் போட்டு விட்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் யோசனையில் ஆழ்ந்தான்.


இங்கோ சுபி விக்கித்துப் போய் நின்றாள். இவள் பிறந்ததிலிருந்து அறியாத ஒன்றை செய்துக் கொண்டிருந்தாள். அது தான் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மலைத்து நின்றாள்.போலீஸ் ஜீப்பின் சைரன் சத்தம் மிக மிக அருகேக் கேட்டது.


தொடரும்…..
 
Top