Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - 25

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments ❤

1045


அத்தியாயம் - 25


தைரியசாலியான சுபியே அந்த சூழ்நிலையில் சற்றுப் பயந்து தான் போனாள்.


இதுவரைக்கும் இப்படி போலிஸ் ஸ்டேஷனுக்கு வந்ததது இல்லை. எப்படியும் வீட்டிலிருந்து வந்து அழைத்துச் சென்று விடுவார்கள் என்று நம்பிக்கையில் இருக்க…


அவளது நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காண்பிக்க ஆரம்பித்தது, பயமே அறியாமல் பட்டாம்பூச்சியாய் சிறகடித்தவளின் வாழ்க்கையில் முதன் முதலில் அச்சத்தை உணர்ந்தாள்.


டீவியிலும், சினிமாவிலும் காண்பிப்பதுப் போல் இருக்கும் என்று நினைத்து உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டு, தன்னுடைய வீட்டிலிருந்து வருகிறார்களா என வெளியேப் பார்த்தப்படி தவித்துக் கொண்டிருந்தாள்.


அவர்களோ இவளைக் காணும் என்று எங்கேங்கோ, தேடி பரிதவித்து வீட்டில் அழுதுக் கொண்டிருக்க…


பத்மா, சுகுமாரன், நீரஜா, நவீன் எல்லோரும் சேர்ந்து ஈஸ்வரனின் இல்லத்திற்கு வருகைப் புரிந்தனர். பார்வதியும், ஈஸ்வரனும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ந்தனர்.


என்ன விஷயம் என்றுக் கேட்பதற்குக் கூட ஜீவன் இல்லாமல் பார்வதியும், ஈஸ்வரனும் இருக்க…


கவின் தான், என்னப்பா எல்லோரும் இங்க வந்திருக்கீங்க… ஏதாவது பிரச்சனையா? எனக் களைப்பானக் குரலில் வினவ…


டேய் நீ இங்கத்தான் இருக்கிறீயா என்றுக் கேட்ட சுகுமாரனுக்கு யானைப் பலம் வந்த மாதிரி இருந்தது.


" கவினைப் பார்த்து நம்ம சுபி, என்று சுகுமாரன் ஆரம்பிக்க… "


அங்கு நின்றிருந்த பார்வதியும்,ஈஸ்வரனும் எங்க சுபி … அவ வந்துட்டாளா, என பரபரத்தனர்.


அண்ணி கொஞ்சம் அமைதியாக இருங்க, என்று பத்மா அவளை அணைத்துக் கொள்ள… சுகுமாரன் ஈஸ்வரனிடம்‍‍, எனக்கு ஒரு அன்நோன் நம்பரில் இருந்து கால் வந்தது. சுபி நம்ம ஏரியா போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிறதாக சொன்னாங்க…


அது தான் உனக்கு தெரியுமா என்று இங்கே வந்தேன். ஆனால் உனக்கு ஏதும் தெரியலை. சரி வா நாம ஸ்டேஷனுக்கு போய் பார்ப்போம் என்று ஈஸ்வரனை அழைக்க…


ஆமாம் வாங்க அண்ணா சீக்கிரமா போவோம் அங்க என் பொண்ணு என்ன பாடுபடுறாளோ! தெரியலையே என்று பார்வதி அழுக…


சுகுமாரன், ஈஸ்வரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நீ இங்கேயே இரு மா… போலீஸ் ஸ்டேஷனுக்கு நாங்க மட்டும் போய் பார்த்துட்டு, சுபியைக் கூப்பிட்டு வரோம்.


என் பொண்ணு அங்க என்ன நிலைமையில் இருக்காளோ! என்ன பிரச்சினை அவளுக்கு என்றுத் தெரியாமல், என்னால இங்கே நிம்மதியாக இருக்க முடியாது. நானும் வருவேன் என பிடிவாதம் பிடிக்க…


ஆமாம், நாங்க எல்லோரும் வரோம் என்று பத்மாவும் கூற…


பத்மா சும்மா இருக்க மாட்டீயா… பார்வதி தான் புரியாமல் பேசுறான்னுப் பார்த்தால், நீயும் சேர்ந்துக் கிட்டு பேசுற... நீங்க எல்லாரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு இந்த நைட் நேரம் வந்து என்ன பண்ணுவீங்க... நாங்க உங்களைப் பார்க்கிறதா, இல்லை சுபியைப் பார்க்கிறதா… அவளுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை... எப்படி அவளை வெளில கூட்டிட்டு வருவது என்றுப் புரியவில்லை. இதுல நீங்க வேற தொந்தரவு செய்யுறீங்களே, என சுகுமாரன் கடித்துக் கொள்ள…


பார்வதியும், பத்மாவும் அமைதியாகி விட்டனர்.


சுகுமாரன், பத்மாவிடம் " நீ, பார்வதி, நீரஜா, மூன்று பேரும் இங்க இருங்க... உங்களுக்கு துணைக்கு நவீன் இங்க இருப்பான் " என முடித்து விட…


நவீன் ஏதோக் கூற வர… எதுவும் பேச வேண்டாம் என்றுக் கூறி விட்டு, கவினிடம் திரும்பி நம்ம வக்கிலுக்கு ஃபோன் போடு, என்றவர், அங்கு திக்பிரமைப் பிடித்தாற் போல் நின்றுக் கொண்டிருந்த ஈஸ்வரனை இழுத்துக் கொண்டு, கவினையும் வருமாருக் கூறிவிட்டு வெளியேச் சென்றார்.


அடுத்த அரைமணி நேரத்தில், இவர்கள் மூவரும் காவல் நிலையத்தில் இருக்க…


காவல் அதிகாரி முன்பு ஒருவர் வாதாடிக் கொண்டிருந்தார்.


காவல் அதிகாரியோ, " சார், புரிஞ்சுக்கோங்க… நீங்கப் படிச்சவர் தானே, இது க்ளியர் மர்டர் கேஸ். இதற்கு நாங்க ஜாமீன் தர முடியாது. நீங்க கோர்ட் மூலம் தான் ஹேண்டில் பண்ண முடியும்." என்றுக் கூறியவர் நிமிர்ந்து வெளியேப் பார்க்க…


இவர்கள் மூவரும் நின்றிருக்க… கவின் முன் வந்து பேச முயல…


என்ன கேஸ், எதுவாக இருந்தாலும் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க… இல்லை என்றால் ரைட்டரிடம் கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுங்க என்றவர், தன் முன் அமர்ந்து இருந்தவரிடம் மீண்டும் பேச்சை ஆரம்பித்தார். " இங்கப் பாருங்க சார், நீங்க திங்கட்கிழமை வக்கீலோட வாங்க… இப்போ எங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க‌.அவங்க ஃபேமிலி ஆளுங்கக் கிட்ட வேற நாங்க இன்ஃபார்ம் பண்ணனும். அவங்க குடுத்த நம்பருக்கு கால் பண்ணோம், அவங்க ரெஸ்பான்ஸ் பண்ணலை. நான் இப்ப அவங்க வீட்டுக்கு கான்ஸ்டபிளை அனுப்பி விவரம் சொல்லணும். எங்களுக்கு வேலை இருக்கு… நீங்க பயப்படாமல் போங்க… கோர்ட்ல விசாரணைக்காக எங்க கஸ்டடில விட்டிருக்காங்க. இங்கே இருக்கும் வரை அவர்களுக்கு நான் தான் பாதுகாப்பு. "


இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது எக்ஸ்கீயூஸ் மீ சார் என்று கவின், இடைப்புக…


என்ன என்பதுப் போல காவல் அதிகாரி, கவினைப் பார்க்க… சார் வீ ஆர் கிருஷ்ணா சில்க்ஸ் ஓனர்ஸ். எங்க வீட்டுப் பெண் இங்கிருப்பதாக ஒரு ஃபோன் கால் வந்தது. இன்று மதியத்தில் இருந்து எங்கப் பொண்ணை காணும் என்று தேடிக் கொண்டிருக்கிறோம். ப்ளீஸ் ஹெல்ப் மீ சார்.


"ஓ, நீங்க யாரு ." என இன்ஸ்பெக்டர் விசாரிக்க…


"ஐயம் கவின் சார்." இவங்க என்னுடைய அப்பா, அன்ட் மாமா. நாங்கள் தேடும் பெண் சுப்ரஜா. என்னுடைய மாமா மகள் எனக் கூடுதல் விவரத்தையும் கூறினான்.


கான்ஸ்டபிள் அவங்க ரெண்டு பேரையும் அங்க உட்காரச் சொல்லுங்க… நீங்க இங்க உட்காருங்க மிஸ்டர்.கவின் என…


பரவாயில்லை சார் நாங்க இங்கேயே நிற்கிறோம். என் பொண்ணு எங்க சார்… எங்களுக்கு யார் ஃபோன் பண்ணாங்க சொல்லுங்க சார்… ரொம்ப டென்ஷனா இருக்கு சார்… மதியத்தில் இருந்து எங்கப் பொண்ணை தேடி அலையுறோம் என ஈஸ்வரன் படபடக்க… சுகுமாரன் தான் அவரை அமைதிப்படுத்தினர்.


கூல்… எவ்வளவு நேரம் நின்றுக்கொண்டு இருப்பீங்க ‌… அதற்காகத்தான் உட்காரச் சொன்னேன். இவர் மிஸ்டர். ஆதவன் உங்களுக்குத் தெரியும் தானே என வினவ…


கவின் ஒன்றும் கூறாமல், யோசனையுடன் பார்க்க, ஈஸ்வரனும், சுகுமாரனும் யார் இவர் என ஒரே நேரத்தில் வினவ…


இன்ஸ்பெக்டர், ஆதவனிடம் " என்ன மிஸ்டர், இவங்களுக்கு உங்களைத் தெரியவில்லை என்று சொல்றாங்க… உங்க மனைவியும், அந்தப் பெண்ணும் நாங்க ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் என்று சொன்னாங்க… எது உண்மை என்று ஒழுங்கா சொல்லுங்க…" என சந்தேகத்துடன் வினவ…


சார் நாங்க எல்லாம் ஒரே ஏரியா தான். என் மனைவியும், சுப்ரஜாவும் பார்க்கில் அடிக்கடி மீட் பண்ணுவாங்க. அப்படியே பழகி ப்ரெண்ட் ஆயிட்டாங்க சார். வீட்டுக்கும் வருவாங்க… ஆனால் அவங்க வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு எங்களைத் தெரியாது.


கவின், " சார், சுப்ரஜாவுக்கு என்ன ஆச்சு, சொல்லுங்க சார்" என…


இங்கப் பாருங்க மிஸ்டர்.கவின். இன்று மதியம் மிஸ்டர் ஆதவன் கிட்ட இருந்து ஒரு போன் கால் வந்தது, அவர் வீட்டில்‍, அவரது ரிலேஷன் வந்து கலாட்டா செய்ததாகவும், அவரது மனைவியும் அவரது பிரண்டும்

கலாட்டா செய்த உறவினரை கட்டி வைத்து இருக்கிறார்கள் என்று தகவல் வந்தது‌.


நாங்கள் போய் பார்த்தால் அந்தப் பையன் ரத்தவெள்ளத்தில் கிடக்குறான்.அந்தப் பொண்ணு சுப்ரஜா நான் தான் அடித்தேன் என்று ஒப்புக் கொண்டார்கள். ஆனால் மயக்கத்தில் தான் இருந்தாரு நான் பின் பக்கம் தான் அடிச்சேன். இப்போது காயமோ நெற்றியில் இருக்கு, வேற யாரோ வந்து கொலை செய்து இருக்காங்க… நான் செய்யவில்லை என்று சொல்றாங்க…


பட் சந்தேகத்தின் பேரில் நாங்க கைது செய்திருக்கிறோம். நீதிபதி காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்திருக்காங்க… சார் ஜாமீன் கிடைக்குமா என்றுக் கேட்குறாரு… பட் எதுவாக இருந்தாலும் திங்கட்கிழமை தான்… சோ, நீங்க எல்லாரும் இப்ப கிளம்பலாம்.


ஈஸ்வரன், என்ன சார் சொல்றீங்க, என்
பொண்ணை என் கூட அனுப்ப மாட்டீங்களா அவ எந்த தப்பும் செய்திருக்க மாட்டா சார்.அவளை விட்டுடுங்க சார். ரெண்டுநாள் என் பொண்ணு இல்லாமல் நான் என்ன பண்ணுவேன் என்னால முடியாது, ஐயோ‍! எனக் கத்த…


இங்கப் பாருங்க மிஸ்டர், நீங்க மாலையில் வந்திருந்தால் நீதிபதியிடம் ஜாமீன் மனு கொடுத்து இருக்கலாம். இப்போது நேரம் ஆகிவிட்டது. நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை. இனி நீங்கள் திங்கட்கிழமை தான் ஜாமீன் மனு கோர முடியும். புரிஞ்சுக்கோங்க சார். கிளம்புங்க சார்.


ஈஸ்வரனும், சுகுமாரனும் ஸ்தம்பித்து போய் நிற்க… கவின் தான் தொண்டை அடைக்க, சார், சுப்ரஜாவைப் பார்க்க முடியுமா? என் வினவ...


கான்ஸ்டபிள் இவங்களை அழைச்சிட்டு போங்க...


சார் ஐந்து நிமிடத்தில் வந்துடுங்க…


மூவரும் சென்று சுபியைப் பார்க்க, அவளோ அந்த செல்லில் ஒரு மூலையில் பயத்துடன் அமர்ந்து இருந்தாள்.


சுபி மா, என ஈஸ்வரன் அழைக்க… அப்பா எனக் கதறியப் படியே வந்தவள், " பா… பா… எனக் கேவியவள், நான் பண்ணலைப்பா" என பயத்துடன் கூறினாள்.


"எனக்கு தெரியும் டா… நீ பயப்படாதே…" என ஈஸ்வரன் கண் கலங்க…

சுகுமாரனுக்கு என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க…


கவின்," சுபி, எப்படியும் உன்னை வெளியே கொண்டு வந்துடுவோம். நீ தைரியமாக இருக்க வேண்டும். அப்புறம் என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியணும். ஆதவன் யாரு? கொஞ்சம் சீக்கிரமாக சொல்லு. " என அவசரப்படுத்த…


ஆதவன் சார் வீட்டில தான் கொலை நடந்தது. அவருடைய மனைவியிடம் எல்லா விவரமும் சொல்லியிருக்கிறேன் அத்தான். அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.


ஓ.. என்ற கவின், மீண்டும் பேச்சை ஆரம்பிப்பதற்குள், கான்ஸ்டபிள் குறுக்கிட்டு சார், டைம் ஆச்சு என்று அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்.


இன்ஸ்பெக்டர், " மிஸ்டர். ஆதவன் நாங்க விசாரணைக்கு கூப்பிடும் போது வர வேண்டும். கவின் நீங்க திங்கட்கிழமை ஜாமீனோட வாங்க… நாங்களும் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சிக்கிறோம்"என்றுக் கூறி இருவரிடமும் கை குலுக்கி விடைக் கொடுத்தார்.


வெளியே வந்த கவின், ஆதவனிடம், "சார் என்ன நடந்தது. தெளிவாகச் சொல்லுங்க ப்ளீஸ் … " என.


ஆதவன், " நடந்தது எல்லாம் சொல்லுறேன். ஆனால் இங்க வேண்டாம். எங்க வீட்டுக்கு போகலாம். எனது மகளுக்கு வேற உடல்நிலை சரியில்லை. அதுவும் இல்லாமல் எனக்கே, இன்னும் என்ன நடந்தது என்று சரியாகத் தெரியவில்லை. என் மனைவிக்குத் தான் முழுமையாகத் தெரியும்."


அதுவும் சரிதான் … உங்க வீடு எங்கே இருக்கிறது சார்.


நான் கார்ல முன்னாடி போறேன். அப்படியே என் காரைப் ஃபாலோ செய்து வாங்க,என்ற ஆதவன் வேகமாக காரை செலுத்தினான். அவன் இங்கு போலிஸ் ஸ்டேஷனில் இருந்தாலும், அவனது எண்ணம், சிந்தனை எல்லாம் தன் மகளிடமே இருந்தது.


பின்னே வந்த காரில் ஈஸ்வரனும் வேற எதைப் பற்றியும் சிந்திக்காமல், தன் மகளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். 'ஐயோ! என் மகள் எப்படி ஜெயிலில் இருப்பாள். இரண்டு நாள் என்னால் எதுவும் செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்கணும் போல… இவ்வளவு காசு, பணம் இருந்தும் என் பெண்ணை வெளியே கொண்டு வர முடியாமல் தவிக்கிறேன்' என மனதிற்குள் குமுறிக் கொண்டே வந்தவர் அவர்களது தெருவிற்குள் வந்ததை கூட கவனிக்கவில்லை.


சுகுமாரன் கவினும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இப்படி ஒரே ஏரியாவில் உள்ளவர்களைக் கூட தெரிந்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறோமே என்று எண்ணினர்.


இந்த அவசரம் உலகில் அக்கம் பக்கத்தில் உள்ள வரை அறிந்து கொள்ளாமல் எதை நோக்கிப் பயணிக்கிறோம்,என்றேப் புரியவில்லை, என்று வேதனையுடன் நினைத்த கவின், வண்டியை ஆதவனின் வீட்டில் நிறுத்தினான்.



ஆதவன், " உள்ள வாங்க… " என எல்லோரையும் அழைத்துச் சென்றவர்.


உட்காருங்க… என் மனைவியை அழைச்சிட்டு வரேன் என்று உள்ளே சென்றவர், சில நொடிகளில் அகல்யாவை அழைத்து வந்தார்.


அவரோ, ஜீவனே இல்லாமல் அமைதியாக நடந்த அனைத்தையும் கூறி விட்டு கதறி அழ…


ஆதவன் தான் தன் மனைவியை சமாதானம் செய்ய, அவளும் தன்னை சமாளித்துக் கொண்டு எக்ஸ்கீயுஸ்மீ என்றுக் கூறி விட்டு உள்ளே சென்று முகம் கழுவி விட்டு வந்தாள்.


அந்த இடத்தில் மௌனமே ஆட்சி செய்தது. யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. சுபியால் ஒரு குழந்தையை காப்பாற்ற பட்டதை நினைத்து , இரண்டு பெண்களைப் பெற்ற, ஈஸ்வரனுக்கு சற்று கர்வமாகவும், பெருமையாகவும் தான் இருந்தது.ஆனால் சுபியை நினைத்து கலங்கி போய் நின்றார்.


சுகுமாரனோ, நம்ம வீட்டில் இருந்து அனுப்பியதால் தான்‍, சுபி இப்படி. ஜெயிலில் இருக்கிறாள் என சங்கடப்பட்டுத் தவிக்க‌…


கவினோ, நான் மட்டும் அவள் ஃபோன் பண்ணும் போதே எடுத்திருந்தால், சுபியை இன்னேரம் ஜாமீனில் எடுத்திருக்கலாம், இப்படி இரண்டு நாட்கள் ஜெயிலில் அவள் துன்பம் படும் அவசியம் வந்திருக்காது, எனக் குற்றவுணர்ச்சியில் தவித்தான்.


முகம் கழுவி வந்த அகல்யா, அந்த அமைதியை களைத்தாள். " இங்கப் பாருங்க சார், சுபியை எப்படியாவது வெளியே கொண்டு வந்துடுவோம்.நாங்க எந்தத் தப்பும் செய்யலை. உண்மையானக் குற்றவாளியை சீக்கிரம் கண்டுப் பிடித்து தண்டனையும் வாங்கித் தரணும். நல்லது செஞ்ச சுபியை சீக்கிரம் வெளியில கொண்டு வரணும்.நாங்க கட்டாயம் அதுக்கான முயற்சிகளை எடுப்போம். நீங்க கவலைப்படாதீங்க என்றாள்."


அவரது வார்த்தையை கேட்ட, அங்கிருந்த அனைவருக்கும் தைரியம் வந்தது. வேற என்ன செய்வது என்று புரியாமல் தவித்து அமர்ந்து இருந்தவர்கள், பிறகு நாங்கள் புறப்படுகிறோம் என்று கிளம்ப…


கவின், அகல்யாவிடம்," பாப்பாவை பார்க்கலாமா " என்று கேட்க…


அவ தூங்கிட்டு தான் இருக்கா! முழுச்சு இருந்தா தான் கத்திக் கிட்டே இருப்பா… இப்போ ஒன்னும் பிரச்சனை இல்லை.நீங்க வந்து பாருங்க என்று அழைத்துச் சென்றாள் அகல்யா.


அந்த சின்ன குழந்தையை பார்த்த அனைவரது நெஞ்சிலும் ரத்தம் கசிந்தது. சின்னக் குருத்து.இந்தக் குழந்தையிடம் போய் எப்படி தப்பாக நடக்க மனசு வருகிறது.


அதுவும் குடும்பத் தகராறைத் தீர்த்துக் கொள்ள இந்த குழந்தை தானா கிடைத்தது! மனிதம் மடித்துக் கொண்டு இருக்கிறது இந்த இயந்திர உலகில் என வேதனையுடன் நினைத்துக் கொண்டான் கவின்.


அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல், ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு பிறகு, ஒன்றும் கூறாமல் தலையசைத்து விட்டு கிளம்பினார்கள்.


பார்வதியை எப்படி சமாளிப்பது என்று ஈஸ்வரன் குழம்பிக் கொண்டு தயங்கி தயங்கி நிற்க…


சுகுமாரன் நான் இருக்கிறேன் என்று சொல்லாமல் சொல்வதுப் போல், தோளில் கைப் போட்டு அழைத்துச் சென்றார்.


இவர்கள் உள்ளே நுழைந்ததும், புயல் போல ஓடி வந்த பார்வதி,சுபிமா… சுபிமா… எனக் கத்திக் கொண்டே தேடியவள், சுபியைக் காணவில்லை, என்றவுடன் எங்கே? என் பொண்ணு ? எனக் கத்த தொடங்கி விட்டாள்.


பார்வதியை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. கவின் நீரஜாவைப் பார்க்க… அவளோ மரம் போல நின்றாள். நீரஜாவிடம், அத்தைக்கு பழச்சாறு எடுத்துட்டு வரச் சொல்லலாம் என்றுப் பார்த்தால் இவளும் கலங்கிப் போய் நிற்கிறாள். சரி நாமே போய் எடுத்து வருவோம் என்று கிச்சனுக்கு சென்றவன், குளிர்சாதனப் பெட்டியில் இருந்து, பழச்சாறை எடுத்தவன், பிறகு மெடிக்கல் கிட்டிலிருந்து எடுத்த தூக்க மாத்திரையை அதில் கலந்தான்.


அத்தை என மென்மையாக அழைத்தான். பார்வதியோ, கவின் கூறியதைக் கவனிக்காமல் சொன்னதையே, திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தாள். அது தான், ஈஸ்வரனிடம் என் பொண்ணைக் கூட்டிட்டு வரலையா என்றுக் கேட்டுக் கொண்டே இருந்தாள்‌.


அவர் திரும்புவதாக இல்லை என்றவுடன், அவர் அருகேச் சென்று ," அத்தை, இதைக் குடிங்க … நீங்க இதைக் குடிக்கவும், நாமப் போய் சுபியை அழைச்சிட்டு வரலாம் " என…


இதைக் குடிச்சா சுபிக் கிட்டக் கூட்டிட்டு போவியா, என்றுக் கவினிடம் வினவியவர், அவன் தலையசைக்கவும் மடமடவெனக் குடித்தார்.


குடித்து விட்டு சரி வா கவின், நாம் போகலாம் எனப் பார்வதி அழைக்க…



இதோ, டிரைவரை வரச் சொல்லியிருக்கேன் அத்தை. வந்தவுடன் நாமப் போகலாம், அதுவரைக்கும் இங்க உட்காருங்க என்று சோஃபாவில் அமர வைத்தவன், அவர் கண் அசரவும் மெல்லத் தூக்கிக் கொண்டுப் போய் அவரது அறையில் படுக்க வைத்து விட்டு வந்தான்.


நவீன், " டேய் கவின், என்ன நடந்துச்சு? " என வினவ…


நடந்த அனைத்தையும் கூறிய கவின், சீக்கிரம் குற்றவாளியை கண்டுபிடிக்கணும்டா… இல்லை என்றால் வக்கிலை வைத்து ஜாமீன் வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்... எதுவாக இருந்தாலும் இனி திங்கட்கிழமை தான்…


சற்று நேரம் சும்மா இருந்தவன், திடீரென்று நினைவு வந்தவனாக, 'ஷட்! இவ்வளவு நேரம் எப்படி இதை மறந்தேன்' என்று தலையில் தட்டிக் கொண்டவன். சுகுமாரனிடம் , " அப்பா, நம்ம கமிஷனர் அங்கிளுக்கு முதலில் கால் பண்ணுங்க. அவரிடம் எல்லாவற்றையும் சொல்லி ஹெல்ப் கேட்போம். முதலில் சுபியை நல்லாப் பார்த்துப்பாரு. கேஸ்ஸ வேகமாக மூவ் ஆகுறதுக்கு ப்ரஷர் பண்ணுவாரு. தட்ஸ் குட் ஐடியா பா" என்றுக் கவின் கூற‌...


ஈஸ்வரன், சுகுமாரன் இருவரது முகங்களிலும் சற்று மலர்ச்சி வந்தது.


சுகுமாரன், உடனே தங்களது தோழனான அசோக்கிற்கு கால் செய்ய…


அவரும் உடனே எடுக்க… பரஸ்பர நலன் விசாரிப்புக்கு பிறகு, சுகுமாரன் நடந்தவற்றைக் கூறி உதவிக் கேட்க..‌.


டேய், என்னடா… உதவி என்று பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற… நாங்க எங்க கடமையைத் தான் செய்யப் போறோம். சுபியை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்க இரண்டு பேரும் கவலைப்படாதீங்க. அப்புறம் ஈஸ்வரனை தைரியமா இருக்கச் சொல்லு... சுபிப் பொண்ணு ப்ரேவ் கேர்ள், அவ இரண்டு நாளை ஈஸியா சமாளிச்சிப்பா… நான் ஸ்டேஷனுக்கு போய் பார்த்து சொல்லி விட்டு வரேன், என்றுக் கூறி வைத்து விட…


இங்கோ, அதற்குப் பிறகு ரிலாக்ஸான கவின், தன் மாமனிடம், " மாமா நீங்களும் கொஞ்சம் நேரம் தூங்குங்க… " என்றவன், அம்மா வீட்டிற்கு வரீங்களா என அழைக்க…

நான் வரவில்லை என்று பத்மா கூறி விட… தன் தந்தையும் வர மாட்டார் என்பதை உணர்ந்தவன் நவீனை பார்க்க…


அவனும் வரவில்லை என்று தலையசைக்க… கவின் மட்டும் புறப்பட்டு விட்டான்‌. அவனுக்கு சற்று தனிமையில் யோசிக்க வேண்டிருந்தது. அசோக் அங்கிளிடம் பேசியதில் சுபியைப் பற்றிய கவலை சற்று தீர்ந்தது. அதனால் அவன் வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டான்.


நவீனுக்கும், நீரஜாவிற்குமான அந்த நாளோ முடியும் போது, ஆளுக்கு ஒரு இடத்தில் முடங்கி அந்த இரவு விடியாத இரவாக இருந்தது.


அவர்களுக்கு இருந்த மன உளைச்சலில் அனைவரும் ஒன்றை யோசிக்க மறந்து விட்டனர். உண்மையானக் குற்றவாளியை கண்டு பிடித்து விட்டால், சுபியின் பிரச்சினை தீர்ந்து விடும், என்று நினைத்து இருக்க… விதியானது சிரித்தது… இனி தான் அவள் வாழ்க்கையில் நிறையப் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறாள்.


தொடரும்…..
 
Last edited:
Top