Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - 26

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments ❤

10601059

அத்தியாயம் - 26


கவின் தன் பைக்கை நிறுத்தி விட்டு, விறுவிறுவென உள்ளே நுழைந்தவன், தனது அறையை நோக்கி செல்ல…


தம்பி என்ற குரலில் அப்படியே நின்றவன், பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க…


அந்த வீட்டில் சமையல் செய்யும் பெண்மணி கைகளை பிசைந்துக் கொண்டு இருந்தாள்.


என்ன என்பது போல் கவின் பார்க்க…


ஐயா, அம்மா எல்லாம் வரவில்லையா தம்பி.‌‌..


அவங்க யாரும் வரமாட்டாங்க… மாமா வீட்டில் தான் நைட் ஸ்டே பண்ணப் போறாங்க …


சாப்பாடு தயாரா இருக்கு, நீங்க சாப்பிட வாங்க தம்பி, எனத் தயங்கிக் கொண்டே மீண்டும் கூற…


எனக்கு சாப்பாடு வேண்டாம். பால் மட்டும் ஒரு கிளாஸ் எடுத்து டேபிளில் வைத்து விடுங்கள், ஃப்ரஷப் ஆகி விட்டு வருகிறேன் என்று கூறி விட்டு வேகமாக மாடிப் படி ஏறினான்.


தனது அறைக்குச் சென்றவன், நேராக குளியலறைக்குச் சென்று ஷவருக்கடியில் நின்று, காலையிலிருந்து ஏற்பட்ட டென்ஷனை குறைத்துக் கொண்டிருந்தான்.

குளிக்கவும் கொஞ்சம் இறுக்கம் குறைந்து ரிலாக்ஸ் ஆக இருப்பதை உணர்ந்தான்.


டவலால் தலையை துடைத்துக் கொண்டே வெளியே வந்தவன்‍, கீழே இறங்கி வந்து மேஜை மேல் இருந்த பால் கப்பை எடுத்து அருந்தத் தொடங்கினான்.


கிச்சனில் இருந்து சத்தம் கேட்பதைப் பார்த்து, அங்குச் சென்றவன், அங்கிருந்த சரளாவைப் பார்த்து, " நீங்க தூங்காமல் இன்னும் என்ன செய்துக் கொண்டு இருக்கீங்க? உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தானே பாலைக் கூட ஆத்தி வைக்கச் சொல்லிட்டு போனேன். அப்புறம் ஏன் இன்னும் இருக்கீங்க… போய் படுங்க… என வீட்டோடு இருக்கும் சரளாவை விரட்டினான்."


அவன் கோபமாக பேசினாலும், அதில் இருந்த அக்கறையைப் புரிந்துக் கொண்ட சரளாவும், தனக்கென ஒதுக்கியுள்ள அறைக்குச் சென்று சத்தமில்லாமல் முடங்கிக் கொண்டாள்.


தனது அறைக்கு வந்த கவினோ, உறங்காமல் அவனது அறையை, தனது கால்களால் அளந்துக் கொண்டிருந்தான்.

ஏதோ, முக்கியமான ஒன்று நினைவுக்கு வராமல் கண் முன்னே ஆட்டம் காண்பிப்பதாக எண்ணினான்.


அவன் திரும்பத் திரும்ப ‌அகல்யா பேசியதை மனதிற்குள் ரிவைன்ட் செய்துக் கொண்டே இருந்தான்.


திடீரென்று நினைவு வந்தவனாக ஓ,காட் இதை எப்படி மறந்தேன் என்று கத்தியவன், நாளை முதல் வேலையாக இன்ஸ்பெக்டரைப் பார்த்து இதைப் பற்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்தவன், அதற்குப் பிறகும் உறக்கம் வராமல் சுபியை நினைத்துக் கொண்டு பால்கனியில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண் மூடி அமர்ந்தான்.


*********************


மறுநாள் காலையில் எழுந்ததும் குளித்து தயாராகி போலிஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டருக்காக காத்திருந்தான். இவன் இரவு முழுவதும் உறங்காமல் பொழுது எப்பொழுது விடியும் என்று காத்திருந்து, ஓடி வந்திருக்க…


இன்ஸ்பெக்டரோ, இரவு முழுவதும் நைட் டியூட்டில் இருந்து இப்பொழுது தான் வீட்டிற்கு சென்றிருந்தார்.


இவனைப் பார்த்ததும், கான்ஸ்டபிள், " சார், யாரைப் பார்க்கணும் என்று வினவ..."


நான் சுப்ரஜாவைப் பார்க்கணும்…


அவங்களை இப்ப பார்க்க முடியாது, என்று ஏதோக் கூற வர…


அதற்குள் கவின், அவனது இயல்புக்கு மாறாக படபடத்தான். ஏன் பார்க்க முடியாது… நான் உடனேப் பார்க்கணும். எங்க உங்க இன்ஸ்பெக்டர் முதலில் அவரைக் கூப்பிடுங்க எனக் கத்த…


சார், இது போலிஸ் ஸ்டேஷன்‌. இங்கெல்லாம் இப்படிக் கத்தக் கூடாது. இன்ஸ்பெக்டர் இப்ப இங்க இல்லை..‌. நீங்க அப்புறமா வாங்க" என…


ஓ,என்ற கவினோ, வேறு ஒன்றும் கூறாமல் தனது ஃபோனை எடுத்து கமிஷனருக்கு கால் செய்து, அங்கிள் இப்ப உடனே உங்களைப் பார்க்கணும்…


அந்தப் பக்கமோ, டேய் கவின், " என்னைப் பார்க்க வேண்டும் என்றால் வீட்டுக்கு வர வேண்டியது தானே… புதுசா என்ன ஃபோன் பண்ணி பர்மிஷன் எல்லாம் கேட்குற…"


"அது அங்கிள், நான் உங்களை அஃபிஷியலா மீட் பண்ணணும் என்று நினைக்கிறேன். நான் இப்ப நம்ம ஸ்டேஷன்ல தான் இருக்கிறேன்."


ஓ… நான் இன்னும் அரை மணி நேரத்தில் வருகிறேன். நீ சற்று நேரம் வெயிட் பண்ணு…


ஓ.கே அங்கிள்… நீங்க மெதுவாக வாங்க… டேக் யுவர் ஓன் டைம்…


சரிப்பா என்று ஃபோனை வைத்தவர், அடுத்த செகன்ட் ஸ்டேஷனுக்கு கால் செய்தார். பிறகென்ன ராஜ மரியாதை தான்…

அவர் மட்டும் அல்லாமல் இன்ஸ்பெக்டரும் அடுத்த அரை மணி நேரத்தில் வந்திருந்தார்.


கவின் அலட்சியமாகப் ஃபோனுக்குள் பார்வையைப் பதித்திருக்க…


கான்ஸ்டபிளோ, பதற்றத்துடன் இருந்தார். கமிஷனர் வரைக்கும் போயிடுச்சே என்று, இன்ஸ்பெக்டருக்கு கால் செய்து நடந்த அனைத்தையும் கூற… அவரோ, பதற்றபடாமல் கூலாக நான் அங்கே வரேன். நோ டென்ஷன்… பீ ரிலாக்ஸ் எனக் கூறி வைத்து விட்டார்.


முதலில் நிதின்குமார் தான் வந்தார். அப்படி வந்தவர்,ஒன்றும் நடவாததுப் போல, கவினைப் பார்த்து கேஷூவலாக வெல்கம் மிஸ்டர். கவின், என வரவேற்றார். அதற்கு பிறகு கவினை சட்டை செய்யாமல் அவனது வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.


கவினும் என்ன தான் செய்கிறார் என்று அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். கமிஷனர் வரவும் தான், செய்து கொண்டிருந்த வேலையிலிருந்து கவனத்தை திருப்பினான் நிதின்.


அவர் வரவும் வணக்கம் தெரிவித்து விட்டு என்ன விவரம் சார் என நிதின் விசாரிக்க…


நிதின்… இவர் தான் கவின் என அறிமுகப் படுத்த முயல…


தெரியும் சார்… ஆல்ரெடி நேற்றே நாங்கள் அறிமுகமாயிட்டோம்.


குட்… பட் இவன் என்னுடைய நெருங்கிய நண்பரின் மகன். சுப்ரஜா கேஸ்ல நீ தான் இவனுக்கு ஹெல்ப் பண்ணணும்.


அது தான் நேத்து நைட்டே வந்து சொன்னீங்களே சார் . நானும் என்னால் முடிந்தத உதவி செய்கிறேன் என்று சொன்னேனே. நைட் ஃபுல்லா இந்த கேஸ் ஹிஸ்டரியைத் தான் பார்த்துட்டு இருந்தேன். அதுல எனக்கு ஒரு ஹோப் கிடைச்சது… அந்த விசாரணைக்கு தான் கிளம்பி போயிருந்தேன். அதற்குள் நீங்க ஃபோன் பண்ணவும் வந்துட்டேன்.


ஓ, சூப்பர் யங் மேன். யாரு மேல் உனக்கு சந்தேகம் என கமிஷனர் வினவ‌…


நிதினோ, புன்னகையுடன் கன்ஃபார்ம் பண்ணிட்டு சொல்றேன் சார்.


உன் கிட்ட இருந்து எந்த ஒரு விஷயத்தையும் வாங்க முடியாது என்றவர், கவினிடம் திரும்பி என்னப்பா பேசணும், என்று வினவ…


அங்கிள், சுபியைப் பார்க்க வேண்டும், ஆனால் முடியாது என்று சொல்லுறாங்க, என நிதினை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டேக் கூற…


அசோக், நிதினைக் என்னவென்று பார்வையாலே வினவ…


நிதின் புன்னகை முகத்துடன், இப்ப பார்க்க முடியாது என்று கான்ஸ்டபிள் கூறினார். சுப்ரஜாவை பெண்கள் காவல் நிலையத்திற்கு அனுப்பி விட்ட விவரத்தைக் கூற வருவதற்குள் சார், அவசரப்பட்டு உங்களுக்கு கால் செய்து விட்டார், என்று கவினைக் கேலியாகப் பார்த்துக் கூறினான்.


கவினோ, அதை சட்டை செய்யாமல், அசோக்கிடம் திரும்பி அங்கிள், " கேஸ் பற்றி பேசணும்" என்க…


கேசைப் பற்றி பேச வேண்டும் என்றால், நிதின் கிட்டப் பேசு‌… கேஸ் டீடெயில்ஸ் என்னை விட அவனுக்கு தான் நல்லா தெரியும். ஹீ ஈஸ் வெரி ப்ரில்லியண்ட். அவன் சீக்கிரமாகவே உண்மைக் குற்றவாளியைக் கண்டு பிடித்து விடுவான்.எனக்கு நம்பிக்கை இருக்கு.



உனக்கு எதாவது சந்தேகம்னா அவன் கிட்ட சொல்லு... எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் கிளம்புறேன் என்று கமிஷனர் அசோக் கிளம்பி விட, சற்று நேரம் அமைதியாக இருந்தான் கவின், பிறகு நிமிர்ந்து இன்ஸ்பெக்டரைப் பார்த்து சாரி எனக் கூற…


மெல்லிய புன்னகையை உதிர்த்தான் நிதின்குமார். எங்களுக்கு இது எல்லாம் பழக்கம் தான். ஒரு சிலர் அலட்சியமாக இருப்பதால் தான் எங்க டிபார்ட்மெண்டுக்கே கெட்ட பெயர். இட்ஸ் ஓகே கவின்… கேஸ் விஷயமாக பேச வேண்டும் என்றால், என்னோட வாங்க… நான் இப்போ வெளியே தான் போயிட்டு இருக்கேன்… அப்படியே போகும் போது பேசலாம்...இல்லை மிஸ். சுப்ரஜாவைப் பார்க்கணும் என்றால், நீங்க மகளிர் காவல் நிலையத்திற்கு போய் பாருங்கள். நான் அவர்களுக்கு இன்ஃபார்ம் பண்ணிடுறேன். நீங்க எப்போ போனாலும் பார்ப்பதற்கு அலவ் பண்ணுவாங்க.


ரொம்ப தேங்க்ஸ் சார். பட் இப்போ உங்க கிட்ட பேசணும். ரொம்ப இம்பார்ட்டன்ட். சுபியை அப்புறமாக பார்க்கிறேன் எனக் கவின் கூற…


அப்போ வாங்க, நாம போகலாம் என்று கூறிக் கவினை வெளியே அழைத்து வந்தார்.


ஜீப் அருகே காத்திருந்த டிரைவரிடம் நாங்க பாத்துக்குறோம். நீங்க இங்கேயே இருங்கள் என்றுக் கூறி விட்டு, கவினைப் பார்த்து உங்க வண்டியிலே போகலாமா? அது இன்னும் கொஞ்சம் சேஃபா இருக்கும், என்று வினவ…


ஷயூர் சார், வித் ப்ளஷர் என்ற கவின் தனது காரில் நிதினையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையத்தை விட்டு வெளியேறினான்.


எங்கே போகணும் என கவின் வினவ…


மிஸ்டர்.ஆதவன் வீட்டிற்கு போங்க… ஒரு சின்ன என்கொயரி இருக்கு. அப்புறம் நீங்க என்ன விஷயமாக வந்தீங்க... உங்களுக்கு என்ன சந்தேகம் சொல்லுங்க…


எனக்கு அவங்க வீட்டு வாட்ச்மேன் மேல் சந்தேகமாக இருக்கிறது. அவர் சொன்னதாக, மிசஸ். அகல்யா சொன்னதெல்லாம் யோசித்துப் பார்த்தால், அந்த வாட்ச்மேன் மாத்தி மாத்தி பேசியதாக தெரிகிறது.


அது தான் நீங்கள் அவரை விசாரிச்சிங்களா என தெரிந்துக்கொள்ளலாம் என்று வந்தேன்.அது மட்டும் இல்லாமல், மிஸ்டர்

ஆதவன் வீட்டுல, சிசிடிவி கேமரா பத்தி நீங்க விசாரிச்சதா சொன்னாங்க.


அது வொர்க் ஆகவில்லை என்று உங்ககிட்ட சொன்னதாவும் சொன்னாங்க. பட் எங்க ஏரியாவில் நிறைய இடத்தில சிசிடிவி கேமரா இருக்கு. அவங்க வீட்டுக்கு எதிர் சைட்ல சிசிடிவி கேமரா இருக்கான்னு பார்த்து, யார் யார் வீட்டிற்கு அந்த நேரத்தில் வந்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அப்படி வந்தவங்கக் கிட்ட விசாரித்தால் நமக்கு ஏதாவது ‌ஹோப் கிடைக்கும். அதான் உங்கக் கிட்ட ஷேர் பண்ணலாம் என்று வந்தேன்.


நிதின் லேசாக சிரித்துக் கொண்டே, கவின் நீங்களே இவ்வளவு யோசிக்கும் போது, இந்த ஃபீல்டுல வொர்க் பண்ணிட்டு இருக்குற நாங்க, இதை தாண்டி யோசிப்போம். இதை மாதிரி எத்தனை கேஸ் நாங்க பார்த்திருப்போம்‌. எங்களையும் கொஞ்சம் நம்புங்க…


நான் நேற்றே அந்த வீட்டிற்கு எதிரே இருந்த இரு வீட்டில் சிசிடிவி புட்டேஜ் கேட்டிருக்கேன். இப்போ போய் நாம கலெக்ட் பண்ணிக்க வேண்டியது தான். அது மட்டும் இல்லாமல் நான் ஒரு சின்ன என்கொயரி இருக்கு என்று சொன்னேனில்லையா… அது அந்த வாட்ச்மேனை விசாரிப்பது தான்.


அந்த வாட்ச்மேன் என்ன சொன்னார் அவருக்கு ஒரு நம்பர்ல இருந்து ஃபோன் வந்துச்சு. அவரோட மனைவிக்கு முடியல என்று யாரோ சொன்னாங்க…


உடனே அவரு பதட்டத்துல எதுவும் சொல்லாமல், வீட்டுக்கு போய் பார்த்தாகவும். ஆனால் அவரது மனைவி நல்லா இருக்கவும், உடனே திரும்ப வந்துட்ட தாகவும் சொன்னார்.


பட், நாங்க வரும் வரைக்கும் வாட்ச்மேன் வரவில்லை. ஏனென்றால் கேட்டு சாத்தி இருந்ததால் ஜீப்பை நாங்க வெளில தான் நிறுத்தி இருந்தோம். கதவைத் திறந்து தான் உள்ளே சென்றோம். சாதாரண கேஸ் என்று கொஞ்சம் அலட்சியமாகத் தான் போய் பார்த்தோம். ஆனால் அந்த அக்யூஸ்ட் இறந்து விட்டான். நாங்கள் திரும்பி வரும் போது வாட்ச்மேன் இருந்தார். அப்பொழுது ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் இப்போது சந்தேகமாக இருக்கிறது…


முதலில் அந்த சிசிடிவி புட்டேஜ் பார்ப்போம். அதற்குப் பிறகு வாட்ச்மேனை விசாரிக்கலாம் என நிதின் கூற…


கவின், " ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்" என…


மிஸ்டர்.கவின் இது என்னுடைய கடமை… நன்றி எல்லாம் தேவை இல்லை என்று நிதின் கூறிக் கொண்டு இருக்கும் போதே இவர்களது ஏரியா வந்து விட்டது.


கவின் இப்படியே ஓரமாக நிறுத்துங்க... அந்த அந்த இரண்டு வீட்டிலும் போய் பார்த்து விட்டு வருவோம், என்றுக் கூறிய நிதின் விறுவிறுவென முதலில் ஒரு வீட்டில் நுழைய… கவினும் பின் தொடர்ந்தான்.


அந்த வீட்டுத் தலைவனோ, வாங்க சார் என்று இருவரையும் ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று சிசிடிவி புட்டேஜ்ஜை காண்பிக்க… அதில் ஒன்றும் தெளிவாக தெரியவில்லை.


ஓகே சார். இதுல ஒன்னும் தெரியவில்லை‍, இருந்தாலும் உங்க உதவிக்கு நன்றி என்றுக் கூறி விட்டு இருவரும் வெளியே வந்தனர் ‌


ஆதவன் வீட்டிற்கு எதிரில் இருந்த வீட்டிற்கு சென்றார்கள். அங்குள்ள சிசிடிவி புட்டேஜ் பார்த்தனர். கொலை நடந்த நேரத்தை வைத்து பார்க்கும்போது முதலில் சுப்ரஜா பதட்டத்தோடு வருவது கண்ணில் பட்டது.


ஏன் பதட்டமாக வருகிறாள் என மனதிற்குள் யோசித்துக் கொண்டு… மீண்டும் வீடியோவில் கவனத்தை வைத்தான் நிதின்.


சுப்ரஜா அந்த வீட்டிற்குள் நுழையும் போது வாட்ச்மேன் அங்கில்லை. சற்று நேரம் கழித்து எங்கிருந்தோ வந்தார்.


குழப்பத்தோடு வீட்டிற்குள் சென்றவர், திரும்ப வெளியே வந்தப் போது கொஞ்சம் பதட்டத்தோடு வந்தவர் எங்கோ சென்றார். பிறகு கொஞ்சம் நேரம் கழித்து வேறு சட்டைப் போட்டுக் கொண்டு வந்தார்.


அப்பொழுது போலிஸ் ஜீப் வெளியே நின்றது. வந்தவர் உள்ளே செல்லாமல் அமைதியாக, அவருக்கான நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு அவ்வப்போது நெற்றியைத் துடைத்துக் கொண்டு பதற்றத்தோடு தான் இருந்தார்.அது

துல்லியமாக அந்த கேமராவில் பதிவாகியிருந்தது.


நிதினும், கவினும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டனர். ரொம்ப நன்றி என அந்த வீட்டு ஓனரிடம் கூறி விட்டு, அந்த சிசிடிவி புட்டேஜ்ஜை பென்ட்ரைவில் ஏற்றிக் கொண்டு வெளியே வந்தனர்.


வெளியே வந்து கார் அருகே நின்று கவின், நிதினிடம் நெக்ஸ்ட் மூவ் என்ன சார், என வினவ…


இப்போ, நாம கேஷிவலா போய் மிஸ்டர்.ஆதவன் கிட்டேயும், அவங்க மிஸஸ்கிட்டேயும் விசாரிக்கணும்…


அப்புறமா வாட்ச்மேன் கிட்டே விசாரிக்கணும். ஃபாரென்ஸிக் ரிப்போர்ட் வந்துடுச்சு. அதில் சுப்ரஜா கைரேகையோட இன்னோரு கைரேகையும் இருக்கு. வாட்ச்மேனோட கைரேகை, அன்ட் மிஸ்டர். ஆதவன், மிஸஸ். அகல்யா கைரேகையையும் கலக்ட் பண்ணி மேட்ச் பண்ணிப் பார்க்கணும்.


கைரேகை வைத்து யாரு கொலைப் பண்ணாங்க ஈஸியாக கண்டுப் பிடித்துவிடலாம். குற்றவாளி உண்மையை ஒத்துக் கொள்ளவில்லை என்றால், எங்க ஸ்டைலில் விசாரிப்போம், தட்ஸ் ஆல் எனக் கூறி நிதின் புன்னகைக்க… கவின் முகத்திலும் புன்னகை வந்தமர்ந்தது.


இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது, அதை தொந்தரவு செய்வதுப் போல் கவினின் ஃபோனில் பீஜிஎம் இசைத்தது.


அதன் இனிமையான சத்தத்தில், எக்ஸ்கீயுஸ்மீ என்றுக் கூறி விட்டு, சற்று தள்ளி நின்று ஃபோனை அட்டெண்ட் செய்தான். அழைத்ததோ,அவனது இரட்டை…


என்ன நவீன், எனி ஃப்ராப்ளம்… அத்தை, மாமா எல்லாரும் நல்லா இருக்காங்களா எனப் படபடக்க…


ம், அதுக்கு தான் ஃபோன் போட்டேன். அத்தை ரொம்ப கலாட்டா பண்ணிட்டாங்க…


நைட் தூக்க மாத்திரையால நல்லா தூங்கினவங்க … காலையில் எழுந்ததுல இருந்து என் பொண்ணை பார்க்கணும், என்று ஒரே ரகளை.சமாளிக்க முடியலை… நம்ம ஃபேமிலி டாக்டருக்கு ஃபோன் செய்து வரச் சொன்னேன்.


அவர் வந்து பார்த்து விட்டு இன்ஜெக்ஷன் போட்டார். ட்ரிப்ஸ் ஏத்தி விட்டு போயிருக்கார். எழுந்ததும், அவங்களை கூட்டிட்டு போய், அவங்க பொண்ணை காண்பீங்க… இல்லை என்றால் அவங்க மைன்ட் டிஸ்டர்ப் ஆகி, அரகண்டா பிகேவ் பண்ண ஆரம்பிச்சிருவாங்க… சோ, கவனமா பார்த்துக்கோங்க என்றுச் சொல்லி விட்டு போய் விட்டார்.


எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை டா‌… ஆளாளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து இருக்காங்க… யாரும் சாப்பிடவும் இல்லை. நீரஜாவும் அழுதுக் கிட்டே இருக்கா… எனக்கு பைத்தியம் புடிக்கிற மாதிரி இருக்கு… அதான் என்ன செய்வது என்று தெரியாமல் உன்னை பார்க்க என்று வீட்டிற்கு வந்தால் நீயும் வீட்டில் இல்லை. நீ எங்கடா போன?


அது நான் இங்க பக்கத்துல தான் இருக்கேன். ஆதவன் சார் வீட்ல இருக்கேன்‌. கேஸ் விஷயமாக இன்வெஸ்டிகேஷ் பண்ண, இன்ஸ்பெக்டர் வந்திருக்காரு… நானும் அவர் கூடத் தான் இருக்கிறேன். இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் வந்து விடுவேன்‌. அப்புறமா என்ன செய்வது என்று பேசிக்கலாம்... நீ வெயிட் பண்ணு என்று விட்டு போனை கட் பண்ணினான் கவின்‌.


கவின் ஃபோனை வைத்து விட்டு நிதின் அருகேச் சென்று, கார் இங்கே இருக்கட்டும், நாம போகலாமா என வினவ…


கவின் உங்களுக்கு வேலை இருந்தால் நீங்க போய் பாருங்க… நான் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி வண்டியை எடுத்துட்டு வரச் சொல்றேன்…


எனக்கு நோ ப்ராப்ளம் சார். நான் வெயிட் பண்றேன். நீங்கதான் எனக்கு ஒரு உதவி செய்யணும். எங்க அத்தை, மாமா, மற்றும் சுபியோட சிஸ்டர் எல்லோரும் சுபியைப் பார்க்கணும் என்று சொல்றாங்க... அதற்கு நீங்க அனுமதி வாங்கித் தாருங்கள், அது மட்டும் போதும்… இப்ப நாம ஆதவன் சார், வீட்டுக்குப் போய் விசாரிக்கலாம் என கவின் கூற ‌…


நான் காலையிலே சொல்லிட்டேன் சுப்ரஜாவைப் பார்க்க வருபவர்களை, சந்திப்பதற்கு அனுமதியுங்கள் என்று‍‍, அதனால் நீங்கள் எப்பொழுது வேண்டும் என்றாலும் போய் பார்க்கலாம். இப்ப நாம மிஸ்டர்.ஆதவன் வீட்டிற்கு போகலாம் என்றுக் கூறி ரோட்டை க்ராஸ் செய்ய, கவினும் அவரைத் தொடர்ந்தான்.


வாட்ச்மேனோ, இவர்களைப் பார்த்து சற்று தடுமாறி விட்டு, பின் கதவை திறந்தார்… நிதின்,வாட்ச்மேனிடம் மிஸ்டர் ஆதவன் இருக்கிறாரா என்று பேச்சுக் கொடுக்க... இருக்கிறார் என்று தயங்கிக் தயங்கிக் கூற, அவரது தயக்கத்தை மனதில் குறித்துக் கொண்டு உள்ளே சென்றார்.


ஏற்கனவே தான் வருவது பற்றி நிதின் கூறியிருக்க… ஆதவனும், அவரது மனைவியும் காத்திருந்தார்கள்.


வாங்க சார், வாங்க கவின் என இருவரையும் வரவேற்று உட்காரச் சொன்னார். நிதினிடம் திரும்பி என்ன சார் விஷயம், என்று ஆதவன் வினவ…


உங்க வாட்ச்மேன் கேரக்டர் எப்படி என்று வினவ…


சார்… அவர் ரொம்ப நல்லவர்.எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார். அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருப்பார் சார். ஏன் சார் கேட்க்குறீங்க…


ஒரு வேளை அவர் கொலை செய்திருக்கலாம் இல்லையா என நிதின் வினவ...



அவர் கொலை செய்வதற்கு வாய்ப்பே இல்ல சார் என உறுதியாக ஆதவன் கூறினார்…


அது சரி தான்… இதைப் பார்த்து விட்டுச் சொல்லுங்க என லேப்டாப்பில் அந்த வீடியோவைப் போட்டு காண்பிக்க.‌‌..


ஆதவனும், அகல்யாவும் அதிர்ந்து நின்றனர்…


அப்புறம்‌, இன்னோரு விஷயம் மிசஸ்.அகல்யா… மிஸ்.சுப்ரஜாவும், நீங்களும் ப்ரெண்ட் என்று சொன்னீங்க. உங்களைப் பார்க்க வந்ததா சொல்லியிருக்கீங்க… பட் இந்த வீடியோவைப் பார்த்தால், ஏதோப் பதட்டத்தோடு வந்த மாதிரி தெரியுது… என்ன விஷயம் உங்களுக்கு எதுவும் தெரியுமா என வினவ…


ஒரு நிமிடம் தயங்கிய அகல்யா எனக்கு தெரியவில்லை. எங்கள் வீட்டுக்கு தான் வந்தாள். வேற எதையாவது பார்த்து இருப்பாள், பெரியதாக எதுவும் இருக்காது. அவளுக்கு சற்று இளகிய மனம் என முடித்து விட…


ஓ… என்ற நிதின், பட் உங்க வாட்ச்மேன் மேல சந்தேகம்.‌‌.. ஃபிங்கர் பிரிண்ட் எக்ஸ்பெர்ட் வரச் சொல்லியிருக்கேன்


உங்க இரண்டு பேரோட கைரேகையும், அப்புறம் உங்க வாட்ச்மேன் ஓட கைரேகையும், எங்களுக்கு கிடைச்சி இருக்கிற கைரேகையோட மேட்ச் பண்ணிப் பார்க்கப் போகிறேன். கொஞ்சம் கோஆபேரேட் பண்ணுங்க…


முதலில் உங்க வாட்ச்மேனை வர சொல்லி எதையாவது வாங்கிட்டு வரச் சொல்லுங்க… அதிலிருந்து கைரேகை கலக்ட் பண்ணிக்கலாம். பீ கேர் ஃபுல்... இப்போதைக்கு உங்க வீட்டு வாட்ச்மேன் கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்.


அதே போல் வாட்ச்மேனை வரச் சொல்லி ப்ரூட்ஸ் வேண்டும் வாங்கிட்டு வாங்க என அகல்யா அனுப்பி வைத்தாள்.


இவர்கள் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது வாட்ச்மேன் வாங்கி வந்த பழங்களை நீட்ட…


டேபிளில் வைத்து விடுங்கள் என்று அகல்யாக் கூற…


வாட்ச்மேனோ, குழப்பத்தோடு உள்ளே சென்று வைத்து விட்டார். ஏனென்றால் அனாவசியமாக வீட்டிற்குள் அனுமதித்தது இல்லை…


சற்று நேரத்தில் கைரேகை நிபுணர்களும் வந்து விட… அனைவரது கைரேகையையும் எடுத்துக் கொண்டு அவர்கள் சென்று விட்டார்கள்.


ரிப்போர்ட் வந்ததும் வருகிறேன் மிஸ்டர். ஆதவன். அதுவரை உங்க வாட்ச்மேனுக்கு சந்தேகம் வராத மாதிரி நடந்து கொள்ளுங்கள். நாங்களும் அவரை வாட்ச் பண்ண மஃப்டியில் ஆள் போட்டுருக்கோம். டேக் கேர் சார் என்றுக் கூறி இருவரும் கிளம்பினர்.


அவர்கள் வெளியே சென்றவுடன் அகல்யா, வேகமாக தன் மகள் இருக்கும் அறைக்கு சென்று பார்வையிட்டாள். குழந்தையோ, சுருண்டு, படுத்துக் கொண்டிருந்தாள். துருதுருவென இருந்த குழந்தை இப்படி படுத்துக் கிடப்பதைப் பார்த்து அந்த தாயின் உள்ளம் தவித்தது. கடவுளே என் குழந்தை சீக்கிரமா இந்தப் பிரச்சினையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.


வெளியே வந்த கவின், சார் உங்களை எங்க டிராப் பண்ண என வினவ…


என்னை மகளிர் காவல் நிலையத்தில் விட்டு விடுங்கள். அங்கு சுப்ரஜாவை விசாரிக்க வேண்டியது இருக்கு… நீங்களும் பார்க்க வேண்டும் என்று சொன்னீங்கள்ள வாருங்கள் அப்படியே பார்த்து விட்டு வரலாம்.


இது நல்ல ஐடியாவா இருக்கு… அப்படியே எங்க வீட்டுக்கும் கால் பண்ணி அங்க வரச் சொல்லிடுறேன், எனக் கூறியவன் நவீனுக்கு அழைத்து எல்லோரையும் மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வருமாறு கூறி விட்டு வைத்தான்.


கவினுக்கு இப்போது தான் சற்று நிம்மதியாக இருந்தது. ஏனென்றால் வீடியோவில் சுபியின் பதட்டத்தைப் பார்த்து நிதின் சுபியை சந்தேகப் படுகிறாரோ,என்று நினைத்தான். சுபி வேறு எப்படி சமாளிக்கிறாளோ என்று பயம். இப்போது இவன் செல்வதால் என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்வோம் என்று நம்பிக்கை வந்தது.


தொடரும்…..
 
Last edited:
Top