Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - 27

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments ❤️

1097

அத்தியாயம் - 27


சுபியை, நிதின்குமார் விசாரிக்க… கவினோ, கைகளைக் கட்டிக் கொண்டு, அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வெளியே சாதரணமாக இருந்தாலும், நெஞ்சுக்குள் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.


சுபி, ஏதாவது சொதப்பி விட்டால், உண்மைக் குற்றவாளியை கண்டுப் பிடிப்பதை விட்டு, கேஸை தப்பான கோணத்தில் விசாரிக்க ஆரம்பித்து விடுவார். அப்படி ஏதும் நடந்து விடக்கூடாது என்று கவின் டென்ஷனாக இருந்தான்.


ஆனால் சுபி, ஆரம்பக் கட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு விட்டாள். அதுவும் அவளது கமிஷனர் அங்கிளை பார்த்தவுடன், மீண்டும் அவளுக்கு தைரியம் வந்துவிட்டது. அதனால் சாதாரணமாகவே இருந்தாள்.


நிதின்குமார், " சொல்லுங்க மிஸ் சுப்ரஜா… நீங்க உங்க ஃபேமிலி ப்ரெண்ட் வீட்டிற்கு போனதாக சொன்னீங்க… பட் எங்களுக்கு கிடைச்ச வீடியோ ஆதாரத்துல,நீங்கள் படபடப்போடு திடீரென்று எதிர் சாரிக்கு செல்லும் வீடியோ தான் கிடைச்சிருக்கு. நீங்க உங்க பிரண்டு வீட்டுக்கு போறது என்றால் கேஷுவலா தானே போகணும். பட் இது ஒன்னும் எதேச்சையா நடந்த மாதிரி தெரியவில்லையே? என்ன நடந்ததுது என்று உண்மையை சொல்றீங்களா?" என வினவ…


சுபியோ, ஒரு நிமிடம் கூட தயங்காமல் கூலாக சார், நான் அகல்யா ஆன்ட்டியைப் பார்ப்பதற்காகத் தான் கிளம்பி வந்தேன்‌.


எனக்கு எப்போதுமே எங்க ஏரியா உள்ள சாலையில் நடக்கும் போது இயற்கையை ரசித்து வருவது ஒரு ஹாபி.


அதே மாதிரி நான் நடந்து வந்துட்டு இருந்தேனா… அப்போ,அவங்க வீட்டு கதவு திறந்து இருந்தது.மேக்சிமம் திறந்து தான் இருக்கும். அப்ப நான் திடீரென்று பார்க்கும் போது எனக்கு, ரொம்ப பிடிச்ச அலியம் மலர்ச்செடியில் மேல் இரண்டு அணில் ஓடிப் பிடிச்சு விளையாடிக் கொண்டிருந்தது. பூவெல்லாம் கீழே உதிர்ந்துடும்,அதான் அதை துரத்துவதற்காக ஓடிப் போனேன் எனக் கூற...


கவினோ, ' அடிப்பாவி… இப்படி அசால்டா, ஒரு பொய்யை சொல்ற… அதுவும் ஒரு மொக்கை காரணத்தை சொல்றீயே… பாவம் நிதின் சார் ' என மனதிற்குள் நினைத்துக் கொண்டு, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு சாதரணமாக இருக்க முயற்சி செய்தான்.



நிதினோ, சுப்ரஜாவை ஆராய்ச்சிப் பார்வைப் பார்த்துக் கொண்டு…. ம், நீங்கள் சொல்வது உண்மைப் போல தெரியவில்லை… மீண்டும் தேவைப்பட்டால் விசாரிப்பேன், என்றுக் கூறியவன், கவினிடம் திரும்பி," மிஸ்டர் கவின், எங்க உங்க வீட்டில் இருந்து இன்னும் வரவில்லையா?"


வந்துட்டு இருக்காங்க சார்… டென் மினிட்ஸ்ல ரீச்சாகிடுவேன் என்று மெசேஜ் பண்ணிருக்காங்க…


"ஓ… அப்ப நீங்க பேசிட்டு கிளம்புங்க… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் இப்ப கிளம்புறேன். யூ கேரி யான்." என்றுக் கூறி விட்டு நிதின் கிளம்பிவிட…


சார், ஒன் மினிட்ஸ் என்றுக் கவின் கூற…


என்ன என்பதுப் போல நிதின் பார்க்க…


சார், உங்க ஃபோன் நம்பர் தர முடியுமா ? இந்த கேஸ் விஷயமாக உங்களை கான்டாக்ட் பண்ண தான் சார்.


நிதின்குமார் ஃபோன் நம்பரை சொல்ல… கவின் ஒரு மிஸ்டு கால் கொடுத்தான் … இது என்னோட நம்பர் சார்… குற்றவாளியை கண்டு பிடிச்சிட்டா சொல்லுங்க சார்…


ஓகே கவின், என்றுக் கூறி விட்டு நிதின் வெளியே சென்று விட...


கவினும், சுபியும் மட்டுமே அவ்வறையில் இருந்தனர்…


கவின், சுபியை ஆழ்ந்துப் பார்க்க…


சுபியும், அவனது விழி வீச்சில் கட்டுண்டு கிடந்தாள்.


எப்பொழுதும், க்ளீன் சேவ் செய்து, மிஸ்டர் பர்ஃபெக்டாக இருப்பவன் இன்று சேவ் செய்யாமல் களைப்புடன்,பார்ப்பதற்கு நெஞ்சை பிசைந்தது. ஆனால் அவன் விழிகளில் மட்டும் காதல் வழிந்தது. அதைப் பார்த்தவள் திகைத்தாள்.


இருவரும் பார்த்துக் கொண்டு இருக்கும் போது வெளியே காலடி சத்தம் கேட்டது. காலடிச் சத்தத்தில் விழிகளை திருப்ப…


பார்வதி, ஈஸ்வரன், நீரஜா, நவீன் நால்வரும் வந்திருக்க…


சுபி, " அம்மா, என அழைத்தவள் பார்வதியின் தோளில் சாய்ந்து அழுக…"


"அம்மாடி…எப்படி டா இருக்க… உன்னை எதுவும் அடிச்சாங்களா என வினவியப்படியே தடவிக் கொடுக்க..."


ஒரு புறம் நீரஜா, " சுபி மா… என அழைத்து , என்னால தான உனக்கு இவ்வளவு பிரச்சினை என்றுக் கண்ணீர் விட்டு அழுக…"


யாருக்கும் பதில் அளிக்காமல் தன் தாயைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாள்.


ஈஸ்வரனோ, தன் பொண்ணை இப்படி ஜெயிலில் பார்ப்போம் என்றுக் கனவில் கூட நினைத்திராதவர், இன்றோ என்ன செய்வது என்று தெரியாமல் மௌனமாக கண்ணீர் விட்டுக் கொண்டு இருந்தார்.


பெண் காவல் அதிகாரி இரண்டு முறை வந்து வந்து பார்த்து விட்டு சென்றார்.


அத்தை ஏதாவது பேசணும்னு சீக்கிரம் பேசிட்டு வாங்க… டைம் ஆயிடுச்சு, அவர்கள் வந்து பார்த்துட்டு இருக்காங்க... அப்புறம் போக சொல்லிடுவாங்க என கவின் அவசரப்படுத்த…


பார்வதி தன் அழுத கண்களைத் துடைத்துக் கொண்டு சுபியை அனைத்து, " சுபி மா சீக்கிரம் உன்னை வெளியே கொண்டு வந்து விடுவார்கள். பயப்படாதே என ஆறுதல் படுத்த…"


ஈஸ்வரன் வந்து தன் மகளின் தலையை தடவ… அப்பா என, தன் தாயிடமிருந்து நகர்ந்து அவரது தோளில் சாய்ந்தாள் சுபி.


பெண் காவல் அதிகாரி வந்து அவர்களை வெளியே வருமாறு கூப்பிடும் வரை, சுபியை ஆறுதல் படுத்தினார். பின்பு அவர்கள் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வெளியே வந்தனர்.


வெளியே வந்த பார்வதியோ, பொது இடம் என்று பாராமல் கதறி அழ… கவின் தான் சமாதானம் படுத்தினான்.


"அத்தை,அழாதீங்க… சீக்கிரம் சுபி வெளியே வந்துடுவா… அல்மோஸ்ட் குற்றவாளியை நெருங்கியாச்சு… "


"டேய் கவின், குற்றவாளியை பிடிச்சாச்சா? அப்ப என் பொண்ணை விட்டு விடுவாங்களா?" என் பார்வதி பரபரக்க…


கிட்டத்தட்ட அத்தை… இங்க வச்சு எதுவும் பேச வேண்டாம். வீட்டிற்கு போய் பேசலாம். இப்போ நீங்க காருல ஏறுங்க, எனக் கூற... ஒன்றும் பேசாமல் அமைதியாக காரில் ஏறினாள் பார்வதி.


கவின் தன் காரில் புறப்பட… மற்றவர்கள் அனைவரும் அவர்கள் வந்த காரில் புறப்பட்டனர்.



மீண்டும் எல்லாரும் ஈஸ்வரனின் வீட்டில் கூடியிருந்தனர்.


கவின் ஏதாவது சொல்லுவான் என்று எல்லோரும் அவனையேப் பார்க்க…


கவின் தனக்கு தெரிந்த எல்லோவற்றையும் கூறினான்.


பத்மா, " அப்போ அந்த வாட்ச்மேன் தான் கொலை செய்தாரா?"என வினவ…


அப்படி கன்ஃபார்மா சொல்ல முடியாது மா. அவர் மேல் சந்தேகமாக இருக்கிறது. கைரேகை மேட்ச் பண்ணிப் பார்க்க போகிறார்கள். அந்த ரிசல்ட் வந்தவுடன், விசாரணை நடத்துவார்கள். மே.பி குற்றவாளி உண்மையை ஒத்துக் கொள்ளலாம். இல்லை என்றால், போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிப்பார்கள். எதுவாக இருந்தாலும் இன்றைக்குள் குற்றவாளியை கண்டு பிடித்து விடுவார்கள்.


அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் அமைதியாக இருக்க, கவின் தான் வற்புறுத்தி எல்லோரோயையும் சாப்பிட வைத்தான்.


இவர்களுடைய அலைப்புறுதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல் நிதினிடம் இருந்து கவினுக்கு அழைப்பு வந்தது.


ஹலோ… சொல்லுங்க சார்… வாவ் நாம் நினைச்சப்படி தான் நடந்திருக்கு… வாட்! என்னது சிக்கலா? … எப்போ விசாரிக்கப் போறீங்க… ஓ, நான் அப்ப ப்ரண்ட்லீ விசிட்டா, இப்பவே அங்கப் போறேன்… ஓ.கே பை, என்றுக் கூறி விட்டு ஃபோனை வைத்தான்.


என்னப்பா யாரு ஃபோன்ல என விசாரித்த தந்தையிடம், இன்ஸ்பெக்டர் தான் ஃபோன் பண்ணாரு. அந்த வாட்ச்மேனோட கைரேகை,

மேட்ச் ஆகுது. பட் ஏதோ ப்ராப்ளம் என்று சொன்னாரு…


என்ன பிரச்சினை என நவீன் வினவ…


தெரியவில்லை, போனால் தான் தெரியும். நீ இங்கப் பார்த்துக்கோ, நான் போய் என்ன விஷயம் என்று பார்த்து விட்டு வரேன் என்றுக் பொதுவாகக் கூறி விட்டு தனது காரிலேறி பறந்தான்.


ஐந்தே நிமிடத்தில் ஆதவன் வீட்டிற்கு சென்று விட… உள்ளே செல்ல, அங்கே காத்திருந்த ஆதவன், வாங்க கவின் என வரவேற்று அமர வைத்தார்.


உங்கள் மிஸஸ் எங்கே சார் காணும் என்று கவின் வினவ…


பாப்பா முழிச்சிட்டு இருக்கா, அவளை கவனிச்சிட்டு, உள்ள இருக்கிறா…


ஓ, பாப்பா இப்ப நல்லா இருக்கிறாளா சார். உங்களை எல்லாம் பார்த்து பயப்படாமல் இருக்கிறாளா…


பயப்படாமல் இருக்கிறா… முன்ன மாதிரி கத்துவது கிடையாது. இருந்தாலும் ஒரு பதட்டத்தோடு இருக்கிற மாதிரி இருக்கு... சீக்கிரம் அந்த கேஸ முடிச்சுட்டு அவளை ஊட்டிக்கு கூட்டிட்டு போகலாம்னு இருக்கிறேன். எங்க கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. அங்க போய் மூணு மாசம் இருந்துட்டு வரலாம்னு இருக்கிறேன்.


பிசினஸ் பாக்குறதுக்கு ஏற்பாடு பண்ணீட்டீங்களா சார்.


அதெல்லாம் மேனேஜரைப் பார்த்துக்க சொல்லி இருக்கேன். அதுவுமில்லாம இருக்கவே இருக்கு லேப்டாப், செல்ஃபோன் அதை வச்சு மேனேஜ் பண்ணிக்கலாம்.


இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இன்ஸ்பெக்டர் ஜீப்பிலிருந்து இறங்கி உள்ளே வந்தார்.


வாங்க இன்ஸ்பெக்டர் என நிதினை இருவரும் வரவேற்க…


மெல்ல தலையசைத்து விட்டு, நிதினும் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து அவர்களைப் பார்க்க…


கவின் தான் பேச்சை ஆரம்பித்தான். என்ன சார் ப்ராப்ளம்… வாட்ச்மேனோட கைரேகை மேட்ச் ஆகியிருக்கு, என்று சொன்னீங்க… அப்புறம் வேற என்ன பிரச்சினை…


அது ஒன்னும் இல்லை.‌‌.. அந்த ஸ்டிக் உங்க வாட்ச்மேன் பயன்படுத்தும் ஸ்டிக் என்று சொன்னீங்க… அவர் பயன்படுத்தும் ஸ்டிக்ல அவரது கைரேகை இருப்பது, பெரிய ஆதாரமாக உதவாது. இருந்தாலும் மிஸ் சுப்ரஜா கைரேகையை விட, இவரது தான் க்ளியரா பொருந்தியிருக்கு. சோ, அவரை விசாரிப்போம். அவர் உண்மையை ஒத்துக் கொண்டால் கேஸ் சீக்கிரம் முடிவுக்கு வந்து விடும்.


மிஸ்டர் ஆதவன் அவரை வரச் சொல்லுங்க…


இன்டர்காம் மூலம் அழைத்த, ஆதவன் வாட்ச்மேனிடம் உள்ள வாங்க அங்கிள் என அழைக்க…


என்ன தம்பி… என்ன விஷயம் … பாப்பா நல்லா இருக்கா என பதறினார். முப்பது வருடமாக அந்த குடும்பத்திற்கு உழைக்கும் உண்மையான விசுவாசி…


ம், உள்ள வாங்க அங்கிள்‍,மற்றதை சொல்லுறேன் என்றுக் கூறி ஃபோனை வைத்து விட…


மூச்சு வாங்க‍, அவரது வயதுக்கு மீறி வேகமாக வந்தார்.


என்னப்பா, என்ன விஷயம் என்றுப் பதட்டத்துடன் கேட்க…


ரொம்ப அக்கறைப் போல, முதலாளி குடும்பத்து மேல என கிண்டலாக நிதின் கேட்க…


ஒரு நிமிடம் தயங்கி, இருக்காதா தம்பி… எத்தனை வருஷமா இவங்க வீட்டு உப்பைத் தின்றேன். இதுக் கூட இருக்காதா‌… எனக்கும், என் மனைவிக்கும் குழந்தையா,குட்டியா… இருந்த ஒரு பேத்தியையும் தூக்கிக் கொடுத்துட்டோம். இப்ப எனக்கு இருக்கிறது ஆர்த்திகா குட்டி மட்டும் தான் அவளுக்கு ஒன்னும் என்றால் எனக்கு பதறத்தான் செய்யம் தம்பி எனக் கூற…


வாட்ச்மேன் கூறியதை கேட்ட நிதின், ஆதவனிடம் திரும்பி, ஆர்த்திகா யாரு என வினவ…


ஆதவன் பதில் கூறுவதற்கு முன்பு, கவின் முந்திக் கொண்டு, அவரோட பொண்ணு சார். கொஞ்சம் உடம்பு சரியில்லை …


ஓஹோ, நான் பார்க்கலாமா ‌…என்ன ப்ராப்ளம்...


பார்க்கலாம் சார்… பட் இப்ப தூங்கிட்டு இருக்கா… அன்னைக்கு குழந்தையும், வீட்டில் இருந்து அந்தப் பையன், சுப்ரஜாக் கிட்ட கலாட்டா செய்ததைப் பார்த்துட்டா… அது கொஞ்சம் அவளுக்கு அதிர்ச்சி‌. யாரைப் பார்த்தாலும் கொஞ்சம் கத்திகிட்டு இருக்கிறா‌… அதனால் தான் யோசிக்கிறேன் என்றுக் கூறி சமாளித்தார் ஆதவன்.


ஓஹோ! என்றவர் வாட்ச்மேனிடம் திரும்பி உங்களுக்கு, உங்க முதலாளி மேல் ரொம்ப பாசம் போல, அந்த பாசத்தில் தான், முதலாளி வீட்டுக்கு வந்தவரை கொலை செஞ்சீங்களா, என நிதின்குமார் கிடுக்குப்பிடி போட…


வாட்ச்மேன் ஒரு செகன்ட் தான் தயங்கினார். பிறகு நான் ஒன்றும் அந்தப் பொறுக்கிய அடிக்கலை, அடிக்கலை என்று சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறினார்.


இன்ஸ்பெக்டரோ, பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் உண்மையாகாது மிஸ்டர். உங்களுக்கு இந்த குடும்பத்து மேல ஏதோ ஒரு கோபம். அதைத் தீர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டு இருந்து இருக்கிறீங்க. டைம் கிடைக்கவும் அவங்க வீட்டுக்கு வந்தவரை அடித்து கொன்று விட்டு, அவங்க மேல பழிப் போடலாம்னு பார்த்தீங்க‌… பட் வேற ஒரு பொண்ணு வந்து மாட்டிக்கிச்சு... இது தானே நடந்தது என்று அவரை குழப்ப...


வாட்ச்மேன் உணர்ச்சி வசப்பட்டு, சார் உண்ட வீட்டிற்கு என்னைக்கும் துரோகம் செய்ய மாட்டேன். நான் அந்த பாவியைக் கொல்லணும் என்று ரொம்ப நாளாக எதிர் பார்த்துட்டு தான் இருந்தேன். அன்னைக்கு அந்த சந்தர்ப்பம் தானா அமைந்தது.


அன்னைக்கு எனக்கு ஒரு ஃபோன் வந்துச்சு… உங்கள் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்று, அந்த பதட்டத்தில் நான் ஐயா, அம்மா கிட்ட கூட சொல்லாம நான் கிளம்பி போயிட்டேன் .


அங்க வீட்டுக்கு போய் பார்த்தா என்னோட மனைவி நல்லா தான் இருந்தாள். எனக்கு ஒரே குழப்பம்... என்னமோ சரியில்லையே என்று, திடீரென்று தான் வீட்டில் பாப்பா மட்டும் தனியா இருந்தது ஞாபகம் வந்தது. பயந்து ஓடி வந்தது நான் பார்த்தால் அம்மாவோட வண்டி இருந்தது. சரி அம்மாக் கிட்ட சொல்லுவோம் என்று உள்ளே வந்து பார்த்தால் அந்த அயோக்கியனைக் கட்டி போட்டு இருந்தாங்க…


அவனை பார்க்கவே எனக்கு கோபம் வந்தது. அங்கே இருந்த குச்சியை எடுத்து ஆத்திரம் தீர வரைக்கும் அடிச்சேன். அடிச்சிட்டு நான் பாட்டுக்கும் வீட்டுக்குப் போயிட்டேன்.


அவருடைய பேச்சில் நிதின் குறுக்கிட்டு, ஏன் உங்களுக்கு அவன் மேல கோவம் என வினவ…


ஆத்திரத்தோடு என் பேத்தி, என் பேத்தி சாவுக்கு அவன் தான் காரணம். தங்கச்சிலை மாதிரி இருப்பா… சும்மாவே ஒரு இடத்தில் இருக்க மாட்டா, சுறுசுறுப்பா சிட்டு மாதிரி சுத்திக்கிட்டு இருப்பா…


காலேஜ் லீவுல இங்க வந்தவ… நான் வேலைக்கு வரும் போது, நானும் வரேன் தாத்தா என்றுக் கூறி என்னோடவே வந்து இந்த தோட்டத்தில் சுத்திக்கிட்டு இருந்தா…


அப்ப அந்த பொறுக்கி இங்க வேலை செய்தான். வீட்டுக்கு அடிக்கடி வருவான். வரும் போதும், போகும் போதும் இவளைப் பார்த்து மனச கலைச்சு காதலிக்கிறேன் என்று சொல்லி, வயத்துல குழந்தையை கொடுத்துட்டான்.


இந்த பாவி மக என்கிட்ட சொல்லாம, அவன் கிட்டப் போய், வயத்துல குழந்தை இருக்கிற விஷயத்தை சொல்லி, நாம கல்யாணம் பண்ணிக்கலாம் என்றுக் கேட்டுருக்கா…


அவனோ, கிண்டல் செய்து ஆஃப்ட்ரால் நீ, ஒரு வாட்ச்மேனோடப் பேத்தி… உன்னைப் போய் கல்யாணம் பண்ணிக்கணுமா… நான் சும்மா டைம் பாஸ்க்கு தான் லவ் பண்ணேன். மறுபடியும் தொந்தரவு பண்ண, கேவலப் படுத்திடுவேன், என்று மிரட்டிருக்கான்.


இவளும் பயந்து லெட்டர் எழுதி வைத்து விட்டு மாத்திரை சாப்பிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டா… நாங்கப் பார்க்கும் போது உயிர் இல்லை. இதெல்லாம் வெளியே தெரிந்தால் செத்ததுக்கப்பறமும் என் பேத்திய தான் தப்பா பேசுவாங்க என்று அமைதியாக காரியம் பண்ணிட்டு சும்மா இருந்தேன்.


ஆனால் என்னைக்கா இருந்தாலும், அவனை என் கையால தான் கொல்லணும் என்று வெறியோட நினைச்சேன். அதே மாதிரி சந்தர்ப்பம் அமையவும் அவனை கொன்னுட்டேன்.


நான் வீட்டிற்கு போய் கறையா இருந்த ட்ரஸை மாத்திட்டு வந்துப் பார்த்தால், திடீரென்று ஒரு பொண்ணை அரஸ்ட் பண்ணிட்டு போனாங்க… அது வசதியான வீட்டுப் பொண்ணு, எப்படியும் வெளியே எடுத்துடுவாங்க என்று அமைதியாக இருந்தேன் சார். என் முதலாளிக் குடும்பத்தை பழிவாங்கணும் நினைக்கலை சார், என உண்மையைக் கூறி விட்டு கதறி அழுதார், அந்த வாட்ச்மேன்.
 
எல்லோரும் சற்றுநேரம் அதிர்ச்சியில் இருந்தனர். நிதின் தான் முதலில் சுதாரித்து, கான்ஸ்டபிளை வரச்சொல்லி கைது செய்ய ஏற்பாடு செய்தார்.


கவினைப் பார்த்து, ஸ்டேஷனுக்கு வாங்க கவின்… சில ஃபார்மாலிட்டிஸ் இருக்கு, அது முடிந்தவுடன் நீங்கள் மிஸ் சுப்ரஜாவை அழைத்துச் செல்லலாம்.


"தேங்யூ சார்… " எனக் கவின் கூற…


வெல்கம் கவின். ஸாரி பார் த ட்ரபுள்…


இட்ஸ் ஓகே சார். சந்தர்ப்பம் அந்த மாதிரி அமைந்ததற்கு, நீங்கள் என்ன செய்வீர்கள்.

குற்றவாளியை சீக்கிரம் கண்டுப் பிடித்தற்கும், எங்கப் பொண்ணை பத்திரமாகப் பார்த்துக் கொண்டதற்கும், நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். நான் எங்க மாமாவை அழைத்துக் கொண்டு நேரா ஸ்டேஷனுக்கு வந்துடுறேன் என்றுக் கூறி விட்டு உற்சாகமாக கிளம்பினான். அந்த உற்சாகம் எல்லாம் இன்னும் சற்று நேரத்தில் வடியப் போவதை அவன் அறியவில்லை.


அழுதுக் கொண்டிருந்த வாட்ச்மேன் ஆதவனிடம் சென்று என்னைய மன்னிச்சிடுங்க தம்பி… நான் வேண்டும் என்று செய்யலை. என் பொண்டாட்டியப் பாத்துக்கோங்க தம்பி. அவளுக்கு வேற யாரையும் தெரியாது, எனக் கூறி கண் கலங்க …


ஆதவனும், இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளே இருந்து வந்த அகல்யாவும், அவரிடம் நாங்க பாத்துக்குறோம்... உங்களையும் கூடிய சீக்கிரம் வெளியே எடுக்குறோம். நீங்க கவலைப்படாதீங்க என்றுக் கூறி அவரை ஆறுதல் படுத்தினர்.


நிதின்குமாரை கடமை அழைக்க, வாட்ச்மேனை கைது செய்து அழைத்துச் சென்றான்.



********************

கவின் முகம் கொள்ளா புன்னகையுடன் வீட்டிற்கு சென்றவன், அத்தை, மாமா எனக் கத்த…


அவன் சத்தத்தைக் கேட்டு என்னவோ,ஏதோ என்று பயந்து எல்லோரும் அவனைப் பார்க்க…


அவனோ, சந்தோஷத்துடன் உண்மைக் குற்றவாளியைக் கண்டு பிடிச்சாச்சு. சுபியைச் சீக்கிரம் வீட்டுக்கு அனுப்பி விடுவாங்க , எனக் கூற…


எல்லோர் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. அப்பாடா, நாம கும்பிட்ட தெய்வம் கை விடவில்லை என்று ஆளாளுக்குக் கூறி சந்தோஷப்பட்டுக் கொண்டனர்.


என் பொண்ணுக்கு ஏற்பட்ட கஷ்டக்காலம் எல்லாம், இன்னையோடத் தீர்ந்தது என பார்வதி சந்தோஷப்பட்டுக் கொள்ள..‌. இது நிரந்தரமில்லை என்பதை உணரவில்லை அந்த பேதை. சுப்ரஜா அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் ஏராளம் இருக்க… இவர்களோ, அதை அறியாமல் உற்சாகமாக இருந்தனர்.


ஆண்கள் நால்வரும் சுபியை அழைத்து வர புறப்பட்டனர். பார்வதியும் தன் மகளுக்கு பிடித்த உணவுகளை தயாரிக்க சமையலறைக்குச் சென்றாள். பத்மாவும், தன் அண்ணிக்கு உதவுவதற்கு சென்றாள்‌.


தனியே விடப்பட்ட நீரஜா, போரடிக்கவே, இரண்டு நாட்களாக எடுக்காமல் இருந்த தன் செல்ஃபோனை எடுத்து, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என்ற மாய உலகத்திற்குள் சென்றாள்.



*****************


எல்லா, பார்மாலிட்டிஸூம் முடித்து வெளியே வந்த சுபியிடம், அங்கிருந்த பெண் காவல் அதிகாரி, இனி மேலாவது பொறுமையாக இரும்மா, அவசரப்பட்டு ஏதாவது செய்து விட்டு, பின்னாடி யாரு அவதிப்படுவது, எல்லாம் நீ தானே… எல்லா நேரமும் சிபாரிசு வேலை செய்யாது என நக்கலாகக் கூற…


' சுபி அதிர்ந்து விட்டாள். அப்போ,உண்மை குற்றவாளியை கண்டுப் பிடித்தும் கூட யாரும் என்னை நம்பவில்லை. நான் தான் கொலை செய்தேன், என்று எண்ணுகிறார்களோ..

அப்படியே நான் கொலை செய்தால் கூட என்ன தப்பு… நான் ஒன்னும் உத்தமப்புத்திரனை கொலை செய்யவில்லையே… ஒரு சின்ன குழந்தைக்கிட்ட தப்பாக நடந்துக் கிட்ட கயவன்… அவனைக் கொன்றால் கூட தப்பே இல்லை‌… சட்டத்தில் கூட இடம் இருக்கிறது… ஆனால் ஒரு போலீஸ் அதிகாரியே இப்படி பேசும் போது,சாதரண மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்…

என வேதனையாக நினைத்து அதிர்ந்து நின்றாள்.'


நல்ல வேளை அந்த பெண் அதிகாரி பேசியதை மற்ற யாரும் கேட்கவில்லை. இல்லையென்றால் எல்லோரும் வருத்தப்படுவார்கள், அவர்களுக்கு இதெல்லாம் தெரிய வேண்டாம் என நினைத்தவள், முகம் மாறாமல் சமாளித்து தன் தந்தையின் அருகே வந்து அவரின் கையை பிடித்துக் கொண்டாள்.


அதற்குப்பிறகு காரில் வரும்போது, மற்றவர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு, பிறகு யோசனையிலே வளைய வந்தாள். அவளது மன நிலைப் புரிந்த மற்றவர்களும் அவளை தொந்தரவு செய்யாமல் இருந்தனர்.


வீட்டில் வந்து காரை நிறுத்திய கவின், வீட்டின் அமைதியைப் பார்த்து புருவ முடிச்சுடன் யோசனையில் ஆழ்ந்தான்.


காரிலிருந்த மற்றவர்களுக்குமே ஏதோ சரியில்லை என்று தான் தோன்றியது. ஏனென்றால் சுபி வரும் வரை எல்லோரும் வெளியிலே நிற்பார்கள் என்று நினைத்து வந்திருக்க, ஒருவரையும் காணாமல் அதிர்ந்து நின்றனர். உள்ளே சென்றுப் பார்த்தால் ஆளுக்கொரு திசையில் அமர்ந்து அழுதுக் கொண்டிருந்தனர்.


சுபியைப் பார்த்தவுடன், சோஃபாவில் அமர்ந்து இருந்த பார்வதி எழுந்து,வந்து சுபியைக் கட்டிப்பிடித்து அழுதுக் கொண்டிருந்தாள். அதான் நான் வந்துட்டேன்ல மா, எதுக்கு இன்னும் அழுகுறீங்க, என சுபிக் கேட்க…


ஐயோ! எப்படி டா, நான் அதைச் சொல்லுவேன்… இனி உன் எதிர்காலம் என்னாகுமோ, எனக்கு ஒன்னுமே புரியலையே என புலம்பிக் கொண்டே இருக்க…


கவின், " என்னாச்சு அத்தை… அது தான் சுபி மேல எந்த தப்பும் இல்லை என்றுச் சொல்லி விடுதலை செய்துட்டாங்க… இனி அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை அத்தை..."என சின்னக் குழந்தைக்கு சொல்வதுப் போலக் கூற…


ஊரு முழுக்க, என் பொண்ணை தப்புத்தப்பா சொல்றாங்களே என்றுக் கூற..‌.


சுபி‍, தன் தாயிடமிருந்து நகர்ந்து, அங்கு இன்னமும் அழுதுக் கொண்டிருந்த நீரஜாவிடம் சென்று, " அக்கா… நீ ஏன் இன்னும் அழுதுக்கிட்டே இருக்க… என்ன விஷயம் என்று சொல்லப்போறீயா? இல்லையா?" எனக் கத்த…


நீரஜா, எதுவும் சொல்லாமல் தனது ஃபோனை எடுத்து ஃபேஸ்புக்கில் நுழைந்து, அதை சுபியிடம் காட்டினாள்.


அதை வாங்கிப் படித்தவள், எதுவும் கூறாமல், செல்ஃபோனை சோஃபாவில் போட்டவள், வேகமாக அவளது அறைக்குச் சென்றாள்.


அவள் போகும் வேகத்தைப் பார்த்து, பயந்து நீரஜாவும் அவள் பின்னே சென்றாள்.


கவின் அதை எடுத்துப் பார்த்தான். அதைப் பார்த்து சுபியின் வேதனையை, தனது வேதனையாக உணர்ந்து கல்லாக சமைந்தான்.


என்ன என்றுக் கேட்ட தந்தை மற்றும் மாமனிடம், ஒரே வரியில் "விஞ்ஞான வளர்ச்சியில், மனுஷங்க அவங்களோட, வக்கிரத்தை ஃபேஸ்புக்ல கொட்டிட்டு போறாங்க" என்றான்.


என்னப்பா புரியற மாதிரி சொல்லுப்பா‌, எனப் பதட்டப்பட…


நவீன் பார்த்து விட்டு," அப்பா... சுபியை கைது செய்துட்டுப் போனதை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்ல போட்டு, தன்னை தற்காத்துக் கொள்ள கொலை செய்த சிங்கப்பெண், என்று ஒருவன் போட்டுருக்கான். அதுக்கு கமெண்ட் சொல்லுறேன் என்று ஆளாளுக்கு, விஷயம் என்ன என்று தெரியாமலே அவங்க,மனசுல இருக்கிற வக்கிரத்தைக் கொட்டிருக்காங்க."‌


அது மட்டும் இல்லாமல் ஒரு பொண்ணைப் பத்திப் பேசுறோம், என்று புத்தியில்லாமல், அந்த வீடியோவை ஆளாளுக்கு போஸ்ட் பண்ணி, ஆர்க்யூ பண்ணிட்டு இருக்காங்க எனக் கூற…


ஐயோ! இப்ப என்ன பண்ணுறது என்று பெரியவர்கள் பயப்பட…


கவின், " யாரும் பயப்படாதீங்க… நான் அசோக் அங்கிளுக்கு ஃபோன் பண்ணுறேன். சைபர்க்ரைம்ல கம்ப்ளைன்ட் செய்து இந்த வீடியோவை ரீமுவ் பண்ண சொல்லிடலாம்" என்க.


அப்பொழுது தான் எல்லோருக்கும் சற்று நிம்மதியாக இருந்தது.


சுபியைப் பார்க்க, அவளது அறைக்குச் சென்றனர்… அங்கோ, நீரஜாவோடு சென்ற பார்வதி புலம்பிக் கொண்டு இருந்தாள்.


பெரியவ தான்,எங்கக் கிட்ட சொல்லாமல் திருமணம் செய்துக்கிட்டா‌… உனக்காவது பார்த்து, பார்த்து திருமணம் செய்யணும் என்று எவ்வளவு கற்பனை செய்தேன் தெரியுமா… இனி எப்படி மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்யப் போறேனோ, என்று புலம்ப…


உள்ளே நுழைந்த கவின், அத்தை என்று அழைத்து ஏதோக் கூற வர…


அவனின் எண்ணம் புரிந்த சுபி, அதை தடுப்பதற்காக,ஐயோ! காதை மூடிக் கொண்டு எல்லோரும் கொஞ்சம் நேரம் சும்மா இருக்கீங்களா…


கவின், " சுபி கொஞ்சம் அமைதியாக இரு …" என்றவன், மேலும் ஏதோக் கூற வர...


சுபியோ‍, ' கவின், பரிதாபப்பட்டு திருமணத்திற்கு சம்மதம் சொல்லிடுவானோ, என்று பயந்தவள்' அவன் பேசுவதற்கு முன்பு, முந்திக் கொண்டு, ' நான் யாரிடமும் பேச விரும்பவில்லை. கொஞ்சம் நாளைக்கு என்னை தனியா விடுங்க… என்னப் பாக்கணும் என்றோ, ஆறுதல் சொல்றேன் என்றோ, என்னை தொந்தரவு செய்யாதீங்க… "ப்ளீஸ் லீவ் மீ அலோன்" எனக் கூறி அழுக…


நீரஜா," சுபிமா…" என்றுக் கூறி அவள் அருகே வர...


அக்கா, உனக்கும் சேர்த்து தான் சொல்றேன். என்னை தொந்தரவு செய்யாதே… அத்தை, மாமா தப்பா நினைக்காதீங்க என்றவள், நவீனை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.


பத்மாவும், சுகுமாரனும் கிளம்ப… நவீனோ, நான் செய்த தவறை சுபி மன்னிக்கமாட்டாளா, என திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே நீரஜாவை அழைத்துச் சென்றான். நீரஜா திக்ப்ரமைப் பிடித்தவள் போல சென்றாள்.


கவின் உடனே செல்லாமல், சுபியைக் கூர்ந்து பார்த்தான். ' உன் வேஷத்தை நான் கண்டுகொண்டேன். உனக்கும் என்னைப் பிடிக்கும். உனக்கு எங்க யாருமேலயும் கோபம் கிடையாது. எதையோ மறைக்கிற…' என மனதிற்குள் நினைத்தான்.


" காதல் நீ

காயம் நீ நீ

கானல் நீயே மறைந்தாயே


வேஷம் நீ

பொய்கள் நீயே

மாற்றம் நீ

நான் உடைந்தேனே…"


தொடரும்…..
 
Last edited:
Top