Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என்றென்றும் நீயே நானாக வேண்டும் - 29

Advertisement

Chitradevi viswa

Well-known member
Member
Hi friends thanks for your lovely support and comments ❤️

1141

அத்தியாயம் - 29

பத்மா, இனிய காலைப் பொழுதில் பரபரப்பாக சுத்த, அவள் பின்னாலே சுபியும், நீருவும் சுற்றிக் கொண்டிருந்தனர்....


திருமணம் முடிந்து, பதினைந்து நாட்கள் வேகமாக ஓடி இருக்க… இன்றைக்குத்தான் விஷாலுக்கும், தீப்திக்கும் இங்கு விருந்து…


ஹனிமூன் ட்ரிப் முடித்து விட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகிறது . இன்றைக்கு இங்கு விருந்து புதுமண ஜோடிகளோட, சுகந்தி மற்றும் சுந்தரத்திற்கும் சேர்த்து ஏற்பாடாகிறது. அதனால் தான் பரபரப்பாக இருக்கிறார்கள்.


பத்மா தீப்தி, விஷாலுக்கு பிடித்த பதார்த்தங்களை நானே, என் கையாலே, செய்கிறேன் என்று சமையலறையை ரெண்டாக்கி கொண்டிருக்கிறாள். உதவிக்கு எத்தனை பேர் இருந்தும் அவளுக்கு போதவில்லை.


சுகுமாரன், காஃபி குடித்துக் கொண்டே தன் மனைவி செய்பவற்றை ரசித்துக் கொண்டிருந்தார்.


மேலிருந்து கவின், சுபி எனக் கத்த… திடுக்கிட்டுப் பார்த்த சுகுமாரன்," எதுக்கு டா,இப்படி கத்துற? உனக்கு என்ன வேண்டும். அவங்க எல்லாம் கிச்சனில் வேலையா இருக்காங்க…" என…


கவின், சுகுமாரனை முறைத்து பார்க்க…


இருடா வர சொல்லுறேன். அதுக்கு ஏன் இப்படி முறைக்குற…


நீங்கள் இப்ப என்ன பண்ணிட்டு இருக்கீங்க…


காஃபி குடிச்சிட்டு இருக்கிறேன். பார்த்தா தெரியவில்லையா…


தெரியுது பா… நல்லா தெரியுது… பர்ஸ்ட் ரவுண்டா இது என…


சேச்ச, நான் தான் காலையில் சீக்கிரம் எழுந்துடுவேனே, அப்பவே குடிச்சிட்டேன். இது செகண்ட் ரவுண்டு என்று பெருமையாகக் கூற…


இன்னும் உங்க பையன் காஃபி குடிக்காம இருக்கிறேன். நீங்க என்னாட,என்றால் இரண்டாவது ரவுண்டே ஆரம்பித்தாச்சு… என்ன பண்றா, உங்க மருமக… சீக்கிரம் காஃபி எடுத்துட்டு வர சொல்லுங்க என்று கடுப்புடன் கூறி விட்டு அறைக்குள் சென்று விட்டான்.


சுகுமாரன் கிச்சனை பார்த்து சுபி,என அழைக்க…


இதோ வந்துட்டேன் மாமா என்று கைகளை துடைத்துக் கொண்டே வந்தாள். என்ன மாமா வேணும் என்று களைப்புடன் கேட்க…


இங்க வாடா, இப்படி உட்காரு, முகமெல்லாம் வியர்த்து இருக்கு, நீ காஃபி குடிச்சியா இல்லையா, என சுகுமாரன் வினவ…


ஐயோ! எனப் பதற…


என்னடா… ஏன் இப்படி பதற…


மாமா, அத்தானுக்கு இன்னும் காஃபி குடுக்கலை. மறந்துட்டேன் , அவங்களுக்கு சரியா எட்டு மணிக்கு காஃபி வேண்டும். இல்லையென்றால் டென்ஷனாகி கத்தப் போறாங்க…


அல்ரெடி கத்திட்டான் மா, காஃபி கேட்டு, அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்.வேற ஏதோ, பேசி மறந்துட்டேன். நீ சீக்கிரம் கொண்டு போ மா…


வேகமாக கிச்சனுக்குள் நுழைந்தவள்,இண்டக்ஷன் ஸ்டவ்வில் பாலை வைத்து, அவனுக்கான காஃபியை கலக்கினாள்‌. காலை காஃபி மட்டும் நேரத்திற்கு அவனுக்கு கொடுத்தாக வேண்டும், இல்லையென்றால் அவ்வளவு தான்… இன்று இருந்த பரபரப்பில் மணியானதை கவனிக்கவில்லை.


இதுக்கு வேற என்ன சொல்ல போறானோ, என்ற பயத்துடன் காஃபி கப்பை எடுத்துக் கொண்டு மாடி ஏறினாள்.


கதவை திறந்து உள்ளே சென்ற சுபி, கவின் எங்கே என்று பார்க்க, வழக்கம் போல பால்கனியில் அமர்ந்து இருந்தான்.


ஆனால் வழக்கமில்லாத வழக்கமா கோபத்தோடு இருந்தான்‌. பதினைந்து நாட்களில், அவனை கோபமாகப் பார்த்தது இல்லை.


இவளும்,அந்த மாதிரி நடந்து கொண்டது இல்லை.இன்று தான் தாமதம் ஆகி விட்டது.


அத்தான் என அழைக்க, ஒன்றும் கூறாமல் கைகளை கட்டியபடியே, அவளைப் பார்க்க…


மெல்ல நாக்கை கடித்துக்கொண்டவள், சாரி அத்தான் என்றவாறு, காஃபி கப்பை அவனிடம் நீட்ட…


சற்று நேரம் அமைதியாக இருந்தவன், காஃபியை வாங்கிக் கொண்டே, இங்கப் பாரு சுபி, " காலை காஃபி எனக்கு மிகவும் முக்கியம், அது நேரத்துக்கு வரலை என்றால், என் மூடே ஸ்பாயிலாயிடும். சோ, காஃபி ஈஸ் மஸ்ட் … உன் கிட்ட அல்ரெடி சொல்லிட்டேன். உன்னால, முடியவில்லை என்றால், அம்மாவையோ, இல்லை வேறு யாரிடமாவது குடுத்து விடு, புரியுதா " என…


ம், என தலையசைத்த சுபி, மனதிற்குள்ளேயே ' காஃபிக்கு இப்படி ஒரு அக்கப்போரா, ஓ காட் முடியலையே!' என கவுண்டர் விட்டுக் கொண்டிருந்தவள்‍, வெளியே அமைதியாக இருந்தாள்.


இவள் கவினுக்கு காஃபி எடுத்துக் கொண்டு வரும் போதே பத்மா கூறிவிட்டார், சுபி மா கீழ இனி வேற வேலை இல்ல டா. நானும் நீரும் இருக்கற மீதி வேலையைப் பாத்துக்குறோம். நீ ரெடியாகி வாடா… என்று கூறிவிட, அதனால் இப்போது கீழேப் போற வேலை இல்லை.


தனது கஃப்போர்டில் தலையை நுழைத்து என்ன புடவை கட்டலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள்.


காபி குடித்துக்கொண்டே கவின் இவளைப் பார்க்க, அவளது குழப்பத்தையேப் பார்த்தான்…


காஃபியைக் குடித்துக் கொண்டே, அவளருகில் வந்தவன் என்ன என்று புருவத்தை உயர்த்த…


அது அத்தான், இன்றைக்கு கெஸ்ட் வருவதால், அத்தை நல்ல சாரியா கட்ட சொன்னாங்க. பட் வேலை செய்யும் போது,கம்ஃபர்டபிளா இருக்கணும் என்று தேடுறேன் …


சரி நகரு நான் எடுத்து தரேன் எனக் கவின் கூற…



என்ன அத்தான், நீங்க செலக்ட் செய்து தரீங்களா? புடவையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று கிண்டல் அடிக்க…


ஹலோ, நாம துணிக் கடை தான் வைத்திருக்கிறோம். எல்லாம் எனக்கு தெரியும், நீ கொஞ்சம் நகரு என அவளை நகர்த்தி விட்டு‍, அங்கிருந்தப் புடவைகளை ஆராய்ந்தான். பேபி பிங்க் நிறத்தில் இருந்த மைசூர் சில்க் சேரியை தேர்வு செய்தான்.


அதன் அழகில் மயங்கிய சுபி‍, தேங்க்ஸ் அத்தான் என்றுக் கூறி விட்டு, அவன் கையில் இருந்த புடவையை வாங்கிக் கொண்டு ட்ரஸ்ஸிங் ரூம்கிற்கு சென்றாள்.


ஒரு வழியாக கவினும், சுபியும் தயாராகி இறங்கி வர…


அங்கோ, எல்லோரும் வந்திருக்க…


தீப்தி, ஓடி வந்து ஹாய் அத்தான் என்க.


"தீபு, மா எப்படி இருக்கடா? விஷால் ஒழுங்கா கவனித்துக் கொள்கிறானா, இல்லையென்றால் சொல்லு நான் ரெண்டு தட்டு தட்டுறேன்." எனக் கவின் கூற…


தீப்தியோ, முகம் முழுவதும் வெட்கத்தோட, போங்கத்தான். அவர் நல்லாத்தான் கவனித்துக் கொள்கிறார் என…


கவின், சுபியைப் பார்க்க, அவளோ பார்வையை திருப்பிக் கொண்டாள்.


தீப்தி அருகில் விஷால், புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்தான்.


மாப்பிள்ளை எப்படிடா இருக்க, என விஷாலை கட்டிப் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தான் கவின்.


அந்த இனிமையான சூழலில் சுகந்தி இடை புகுந்தாள்.


மருமகனே… என் மாப்பிளைய என் பொண்ணு நல்லா பார்த்துக்கிறா... நீ எப்படி இருக்க… அதை முதலில் சொல்லு… இன்னும் உனக்கு ஒன்னும் புரியல... இல்லையென்றால் நாங்க வீட்டுக்கு வந்து அரைமணி நேரம் ஆகுது. எப்ப வந்தோம், நீ இப்ப வந்து வரவேற்கிற? நீ முதலில் சரியா இருந்தால் தானே, உன் பொண்டாட்டி ஒழுங்கா இருப்பா, என சுபியை வம்பிழுக்க‌…


சுபிக்கு வந்த கோபத்திற்கு, கவினை ஒரு முறை முறைத்து விட்டு, அங்கிருந்தவர்களைப் பொதுவாகப் பார்த்து, வாங்க என்றவள் கிச்சனுக்குள் சென்றாள்.


உள்ளே சென்ற சுபியை, யோசனையோடு பார்த்தான் விஷால். புதுமணத் தம்பதியருக்கு உரிய எந்த இணக்கமும், தெரியவில்லை.


கவினைத் திரும்பிப் பார்க்க, அவனோ, என்ன என்று புருவத்தை உயர்த்த... ஒன்றுமில்லை என விஷால் தலையசைத்தான். ஆனால் உள்ளுக்குள் குழப்பத்துடனே இருந்தான்.


அவனை ரொம்பவே யோசிக்க விடாமல், நீரஜா, வந்து அனைவரையும் உணவருந்த அழைத்தாள்.


அதற்குப் பிறகு கைக்கும் வாய்க்கும் மட்டுமே வேலை இருந்தது. இடையிடையே பேசிக் கொண்டிருந்தனர். எல்லோருக்கும் பரிமாறிக் கொண்டிருந்த சுபி, கவின், மற்றும் நவீன் பக்கம் மட்டும் பரிமாற வரவில்லை.




நவீன், அதை கவனித்து, சுபியை அழைத்து, ஏதாவது கேட்க…


அவளோ, முறைத்துக் கொண்டே பரிமாறினாள்‌.


அருகில் உணவருந்திக் கொண்டிருந்த விஷாலோ, நவீன் காதில் டேய், சுபி சிஸ்டர், ஏன் டா உன்னைப் பார்த்து முறைக்கிறாங்க… கவினை முறைத்தாலும், ஏதாவது காரணம் இருக்கும். உன்னை ஏன் டா? முறைச்சிட்டு இருக்காங்க… நீ என்ன மச்சி பண்ணி வச்ச..‌


ம் என பெருமூச்சு விட்டவன், அது ஒரு பெரிய கதைடா… சாப்பிடு அப்புறமா பேசலாம் என்று முடித்துவிட்டான்.


சரி என விஷால் அமைதியாக இருக்க, சுகந்திப் பேச்சை ஆரம்பித்தாள். தன் மகள் மருமகன் போயிட்டு வந்த ஹனிமூன் டூரைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள்.


காஷ்மீரிலிருந்து ஆப்பிள் வாங்கிட்டு வந்தாங்க, அது சூப்பரா‍, ஃப்ரஷ்ஷா இருந்தது தெரியுமா எனக் கூற…


ஏன் அத்தை இங்க ஆப்பிளே கிடைக்காதா… அதைப் போய் வாங்கிட்டு வந்துருக்கு, உங்கப் பொண்ணு என்று நவீன் கிண்டலடிக்க…


அவனை முறைத்த சுகந்தி, டேய் நீங்க தான் அவசரத்தில் கல்யாணம் பண்ணிக்கிட்டு, எங்கேயும் போகல… உன் கூட பிறந்தவனும், எங்கேயும் போகலையாஎன வினவ…


கவினும், சுபியும் ஒருவரை ஒருவர் பார்த்து அதிர்ந்து நின்றனர். ஓரிரு நிமிடத்தில் சமாளித்த கவின், தனது அத்தையிடம், "அத்தை இரண்டு நாளில் ரிசப்ஷன் இருக்குல, அதை முடிச்சிட்டு அடுத்த நாள்,கேரளா போகலாம் என்று இருக்கோம்" என…


ஏன்டா, நவீன் நீங்களும் இவங்களோட ஹனிமூனுக்கு போகலாம் இல்லையா என பத்மா வினவ…


ஐயோ! அம்மா, இது ஹனிமூன் மா… அவங்க மட்டும் போனால், அது ஹனிமூன், நாங்களும் போனால் அது ஃபேமிலி டூர் மா… நான் வேற ஐடியா வச்சிருக்கேன். வெளிநாட்டு டூர் போலாம் என்று இருக்கேன் மா. பட் இப்ப கொரணா அது,இது என்று வெளிநாட்டில் இருக்கு, அதனால கொஞ்ச நாள் போகட்டும், என்று முடித்து விட‌…


கொஞ்சம் நேரம்‍,ரிஷப்ஷன் ஏற்பாடு பற்றி பேசினர். விஷால் பக்காவாக ஏற்பாடு செய்து இருக்க, நிம்மதியாக இருந்தனர்.

அதற்கு பிறகு காலை உணவு, இனிமையாக முடிந்தது.


பெண்கள் மதிய உணவிற்காக ஏற்பாடுகளை பேசிக்கொண்டே ஆரம்பிக்க...


பெரியவர்களோ, ஹாலில் அமர்ந்து நாட்டு நடப்பை பேசிக்கொண்டு இருந்தனர்.


கவின், நவீன், விஷால் மூவரும் மாடிக்கு வந்து விட்டார்கள். மாடித்தோட்டத்தில், ஒரு புறம் போடப்பட்டிருந்த திட்டில் சென்று அமர…



விஷால், நவீனிடம், "என்னடா பிரச்சனை உனக்கும்,சுபிக்கும் என்று வினவ…"


கவினும், நவீனும் ஒன்றும் கூறாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் பார்வை பரிமாற்றத்தை பார்த்து விஷால், இருவரையும் பார்த்து என்னை இன்னமும் அந்நியம்மா தான் நினைக்கிறீங்கல, என வருத்தப்பட…


டேய் நீ நினைக்கிற மாதிரி ரொம்ப முக்கியமான விஷயம் இல்ல என நவீன் மழுப்பலாக் கூற… கவின் அமைதியாக இருந்தான்.



நவீனிடம், ஒன்றும் கூறாமல்,கவினிடம்,"டேய், இப்படி அமைதியாக இருந்தால் என்னடா, அர்த்தம்…"


நீங்க மறைக்க மறைக்க எனக்கு என்னமோ,தோணுதுடா. நான் வேண்டாத இடத்தில் இருக்கிற மாதிரி ஃபீல்… சாரிடா… நண்பன் என்ற என்ற உரிமையில் தான்டா கேட்டேன். இல்லை என்றால் உங்களோட பர்ஸனல கேட்க மாட்டேன் டா… சரிடா, தீப்தி தேடுவா, நான் கீழேப் போறேன், என்று கிளம்ப முயல,


டேய், என்று இருவரும் அவனை இழுத்து உட்கார வைத்தனர்.


கவின், விஷாலின் அருகே அமர்ந்து, பார்வையை, எங்கோ வைத்திருக்க… நவீன், விஷாலின் மறுபுறம் அமர்ந்து நடந்தவற்றைக் கூறினான்.


" கவினும்,சுபியும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் விரும்பினார்கள்." என…


விஷால், "என்னது என்று ஷாக்காகி" நிற்க…


நவீன், "அதுக்கு நீ ஏன் டா ஷாக்காகுற… ஷாக்கக் குறை… ஷாக்கக் குறை… " எனக் கூற…


கவின் முகத்தில் புன்னகை மலர, நவீனைப் பார்க்க…


ஆமாம் டா, நான் இன்னும் சொல்றதுக்கு எவ்வளவோ இருக்கு…


நவீனிடம், "என்னது இந்த விஷயம் உனக்கு முன்னாடியே தெரியுமா? என்னமோ வீட்ல கவின் திருமணம் பற்றி பேச்சு வந்த போது நீயா தானே சுபிக்கு, கவினை கல்யாணம் பண்ணி வைக்கலாமா என்று கேட்ட… தீப்திக் கூட அப்படி தானே சொன்னா…"


ஆமாண்டா, இவங்க லவ் பண்ண விஷயத்தை வீட்ல சொல்லாமல் அரேஞ்ச் மேரேஜா நான் தான்டா மாத்துனேன்.


வீட்டுல கவினோட திருமண பேச்சு ஆரம்பிக்கும் போது, தான் சார் வந்து சுபியை லவ் பண்ண விஷயத்தை சொன்னார்.


சோ, கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கும் போது, லேசா கோடு இழுத்தேன். என் இன்னசன்ட் டார்லிங் நீரு, அவளா வந்து ஹெல்ப் பண்ணி எப்படியோ, அரேஞ்ச் மேரேஜ் ஆயிடுச்சு டா, என நவீன் கூற…


அப்புறம் என்னடா பிரச்சனை? இவங்க ரெண்டு பேரும் விரும்பி இருக்காங்க... அப்புறம் ஏன் இன்னைக்கு ஹனிமூன் டூரப்பத்தி பேசவும், அப்படி முழிச்சாங்க…


டேய் விஷால், இன்னும் அவங்களுக்கு நடுவுல நிறைய விஷயங்கள் பேசப்படாமல் இருக்குதுடா…


டேய் என்னடா! இது, கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லுடா?


சரி டா மச்சி, இப்ப நான் புரியிற மாதிரி சொல்றேன். ஊருல கவின், சுபிக் கிட்ட லவ்வ சொன்னான். ஆனால் சொல்லவில்லை, என மேலும் குழப்ப…


விஷாலோ‍, கொலைவெறியில் இருந்தான்.


கவினோ,அடக்கமாட்டாமல் நகைத்து டேய் நீ சும்மா இரு டா... நானே சொல்லிக்கிறேன்‌... மாப்ளை வேற ரொம்ப டென்ஷனா இருக்கிறார் என்றவன், விஷாலைப் பார்த்து உனக்கு ஞாபகம் இருக்கா... ஆறு மாசத்துக்கு முன்னாடி நடந்த எதையும் நீ மறந்து இருக்க மாட்ட... நாங்க குலதெய்வ கோயிலுக்கு போனோமே, அங்க தான் அவகிட்ட லவ்வ சொன்னேன். நான் அவக் கிட்ட சொல்லிட்டு திரும்புனா, இந்த தடியன் திடீரென்று வந்து நிக்குறான். இவனப் பார்த்த அதிர்ச்சியில் நான் ஓடிப் போயிட்டேன்.


அதுக்கப்புறம்,உன் கிட்ட இருந்து ஃபோன் கால் வந்தது. நான் அப்புறம் இங்க வந்துட்டேன். அதுக்கு அடுத்த ரெண்டு நாளுக்கு அப்புறம் ஏற்பட்ட கலவரம் தான் உனக்கு தெரியும் இல்ல...


அதற்கப்புறம் என் காதலை சொல்லும் நிலை வரவில்லை. அவளா உணர வேண்டும் என்று நான் நினைக்கிறேன் அவ்வளவுதான் டா…


ஓ, என்ற விஷால்,உன் கிட்ட ஏன் கோபமாக இருக்காங்க என நவீனைப் பார்த்து கேட்க...


ஐந்து நிமிடம் அமைதியாக இருந்த நவீன், விஷாலிடம், " டேய் நானும், அவளும் நல்ல நண்பர்கள் என்று உனக்கு தெரியும் தானே, அவக் கிட்ட சொல்லாம திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன், என்று கோவமா இருக்கா… " என…


அதிர்ச்சியில் வாயடைத்து போய் இருந்தான் விஷால்.


கவின், நவீன் இருவரோடும் சுபி பேசாமல் இருப்பதற்கும், அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைக்கும் தான் தான் காரணம் என்பதை உணர்ந்தான் விஷால்‌.


சாரிடா… என்னால உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு சங்கடம் என்று தெரியுது, பட் நீங்க எனக்கு எவ்வளவு பெரிய சொர்க்கத்தை கொடுத்து இருக்கீங்க தெரியுமா? அதற்கு நான் உங்க ரெண்டு பேருக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.


சிஸ்டர் கிட்ட, நானே எல்லா உண்மையும் சொல்லுறேன் என…


டேய், அதெல்லாம் வேண்டாம் என்று இருவரும் தடுக்க…


"நீங்க இரண்டு பேரும் இப்படி தவிச்சிட்டு இருக்கும் போது, நான் மட்டும் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறது, எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்குடா." என விஷால் கூற…


லூசாடா, நீ பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுற… தீப்தியும், நீயும் சந்தோஷமா இருந்தாலேப் போதும் என்று நவீன் கூற‌‌…


கவினும், ஆமாம் டா.‌.‌‌. நீ போய், எல்லாம் சொல்லி ஒன்னும் அவ, என்னைப் புரிந்துக் கொள்ள வேண்டாம்… அவளா, புரிந்துக் கொள்ள வேண்டும்… அவளே, நானாக மாறணும் டா…


விஷாலோ, கவின் பேச்சை ஆரம்பிக்கும் போது, அவன் மேல் பார்வை வைத்தவன், இப்போதோ, வேற எங்கோ பார்த்துக் கொண்டிருக்க…


கவின் மனதிற்குள்,' நான் எவ்வளவு சீரியஸாக பேசிட்டு இருக்கேன். இவன் என்னவென்றால் பராக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.' என வைதுக் கொண்டே, அவன் பார்வை போன திசையில் திரும்பியவன், அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.
 
அங்கோ,காளி அவதாரமாக சுபி நின்றுக் கொண்டிருந்தாள்.


மூவருக்குமே என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தார்கள்.


சுபியோ, தன் கையிலிருந்த ட்ரேயை அவர்கள் எழுந்த இடத்தில் வைத்து விட்டு, கவினை முறைத்துக் கொண்டிருந்தாள், சுபி.


நவீன் என்ன சுபி, என வினவ…


அத்தை ஜுஸ் கொடுத்து விட்டாங்க, என்றவள் எல்லோருக்கும் எடுத்து கொடுத்து விட்டு, அமைதியாக இருக்க…


அவர்களோ, ஒன்றும் கூறாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.


கவினோ மனதிற்குள்,' நாம பேசியதை அவள் கேட்டிருப்பாளோ, எப்ப வந்தா' எனக் குழப்பிக் கொண்டிருந்தான்.


எல்லோரும் குடித்து முடித்தவுடன், விஷாலிடம் சென்றவள், அண்ணா என்று அழைக்க…


சொல்லுங்க சிஸ்டர் என்றான் விஷால்.


அண்ணா, பேர் சொல்லியேக் கூப்பிடுங்க, சும்மா சிஸ்டர், சிஸ்டர் என்று கூப்பிட வேண்டாம் என…


சரி மா சுபி, என்றுக் கூறி புன்னகைக்க…


அவளது முகத்திலும் புன்னகை மலர்ந்தது. அது விஷால் அருகில் நின்றிருந்த கவின், மற்றும் நவீனைப் பார்த்தவுடன் மறைந்து விட்டது, அவ்விடத்தில் கோபம் வந்தமர்ந்தது.


என்ன அண்ணா, நீங்களே சொல்லுங்க... இவங்க ரெண்டு பேரும் மட்டும் என்ன நம்ப மாட்டாங்களாம், நான் மட்டும் மாற வேண்டும் என்றால், என்ன நியாயம்…


என்ன நடந்தது என்று தெரியாமல் குழப்பத்துடன் இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?...


விஷயம் என்ன என்று சொன்னால், நான் கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பேன் அல்லவா… என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை கிடையாது. அப்படி நீங்க என்கிட்ட உண்மையை சொல்லிட்டா, நான் மரியாதை இல்லாமல் உங்கக் கிட்ட நடந்து கொள்வேனா… நான் அப்படி பட்டவளா...நான் கொஞ்சம் ஜாலியா பேசுவேன். பட் யாரையும் ஹர்ட் பண்ண மாட்டேன். தீப்தியும், நானும் சின்ன வயதில் இருந்து சண்டைப் போட்டுக் கொண்டே இருப்போம். அதெல்லாம் யாருக்காகவும் மாற்றிக் கொள்ள முடியாது, என்றவள் கவினை ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.


அதெல்லாம் யாருக்காகவும், நீ மாற வேண்டாம் மா… தீப்திக்கும், உனக்கும் நடுவில் நான் வரமாட்டேன். எனக்கு உன் மேல ஹண்ட்ரட் பர்ஸன்ட் நம்பிக்கை இருக்கு. என்ன நடந்ததுன்னு நான் சொல்றேன்.


அவங்க ரெண்டு பேரும், 'என்னடா இப்படி பெரிய பிஸ்னஸ் பண்றவங்க, இப்படி கோழை மாதிரி பண்ணிட்டாங்க' என்று நீ நினைத்து விடக்கூடாது என்று தான் சொல்லலை.


பட் அப்படி நினைத்தாலும், நான் கவலைப்பட மாட்டேன். ஏன் என்றால் நீ, என்னோட தங்கச்சி. என்னை எப்படி வேண்டும் என்றாலும் கழுவி ஊத்தலாம். உனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு...


என்ன அண்ணா, பில்டப் பண்ணிட்டே இருக்கீங்க… சீக்கிரம் விஷயத்தைச் சொல்லுங்க…


அது சுபி, அன்னைக்கு பீச்ல தீப்திய லவ் பண்ண விஷயத்தை பற்றி சொன்னேன்ல...

அதுல பாதி தான் உண்மை.


என்ன நடந்துச்சுணா, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொல்லத் தொடங்கினான் விஷால்.


" எங்க அப்பா, அம்மா ஆக்சிடெண்ட் ஆன புதிது, அப்போ ஒரு முறை நவீனோட, போன்ல இருந்து தீப்தி ஆறுதல் சொன்னாள்."


அப்பவே என் மனசுல வந்துவிட்டாள். அவ என் மேல காட்டின அக்கறை எனக்கு அப்பொழுது ரொம்ப தேவையாக இருந்தது.


அப்போது நான் அவளைப் பார்த்ததுக் கூட இல்லை. அதற்கு பிறகுதான் நான் நவீனிடம், "யார் என்னோட போன்ல பேசியது?" என்று கேட்டு அவளைப் பார்த்தேன்.


அவளை பத்தி நான் விசாரிக்கும் போது, நவீன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


நீங்க குலதெய்வ கோவிலிக்கு போயிருந்த போது கவினுக்கு, யதேச்சையாக நான் ஃபோன் போட்டேன்.


அப்போ, பேச்சுவாக்கில் நாங்கள் கோயில் வந்திருக்கோம் என்றான்.


என்னடா விசேஷம் என்று நான் கேட்டேன்.


இப்போ ஒன்னும் விசேஷம் இல்லடா... கோவில் திருவிழா தான். ஆனா இனிமே விசேஷங்கள் எல்லாம் வரும் டா…


தீப்திக்கும், நவீனுக்கும் சீக்கிரம் மேரேஜ் நடக்கப்போகுது டா. நாங்க இன்னும் மூன்று நாட்களில் ஊருக்கு வந்துடுவோம்‌. ஊரில் இருந்து வந்ததற்கு அப்புறம், எங்க அத்தை திருமணத்திற்கு நாள் பாக்கறதுக்காக, வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்காங்க, என்று சொன்னான்.


தீப்திக்கு மேரேஜ் என்று கூறியவுடன், அந்த டைம்ல என்னால வேறு எதையுமே யோசிக்க முடியலை. நான் ஒரு பெரிய பிசினஸ் மேன் என்பதையும் தாண்டி எனக்கு தீப்தி மட்டும்தான் ஞாபகத்தில் வந்தாள்‌. நான் சாதாரணமா பேசும்போதே நவீன் கிட்ட தீப்தியை, உனக்கு பிடிக்குமா என்று கேட்டிருக்க்கிறேன்.


அவனோ, பிடிக்கும் என்றெல்லாம் கிடையாது, எங்க அத்தை பொண்ணு அவ்வளவுதான், அப்படின்ற மாதிரி தான் சொன்னான். அதனாலதான் நான் கவின், நவீன் கிட்ட சொல்லி மேரேஜ் பண்ணிக்கலாம், என்று நினைத்து இருந்தேன்.


இவ்வளவு சீக்கிரம் மேரேஜ் அரேஞ் பண்ணுவாங்க என்று நினைக்கலை… மேரேஜ் ஃபிக்ஸ் பண்ண விஷயம் தெரிந்தும் என்னால ஒண்ணும் பண்ண முடியலை. வேற எதையும் யோசிக்க முடியவில்லை.


என்னோட தனிமையை போக்க வரும் தேவதையாய் நினைத்திருந்தேன். அவள் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து பார்க்க முடியாமல்,கோழை போல் தற்கொலை முயற்சி பண்ணேன்.


கடைசியா கால் பண்ண, நம்பரை வச்சு, என்னோட பிஏ வேற யாருக்கும் சொல்லாம கவினுக்கு மட்டும் கால் பண்ணி சொல்லிட்டார்.


நான் உயிருக்கு போராடிட்டு இருக்கிற விஷயம், தெரிந்தவுடன் கவின் திருவிழாவில் இருந்து பாதியில் வந்துட்டான்.


உனக்கு அதனாலதான் கவினோட குழப்பம் வந்து விட்டது. அந்த விஷயம், எனக்கு இன்னைக்கு தான் தெரிஞ்சுது. கவின் சொல்லி இருக்கலாம். என்னை நீ,கீழாக எண்ணிவிடுவாயோ, என்று பயந்திட்டான். சாரி மா, என்னால ஏற்பட்ட குழப்பத்திற்கு என்று கூற…


"அண்ணா, அதெல்லாம் ஒன்னும் இல்லை விடுங்க. சாரி என்ற வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க‌," என சுபி தடை செய்ய…


முகத்தில் ஏற்பட்ட புன்முறுவலுடன் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான். நவீன பத்தி சொல்லணும்னா அவன் எனக்காக எல்லார்கிட்டயும் கெட்ட பெயர் வாங்கினான்.


அவனும் ஊர்ல இருந்து வந்த உடனே என்ன வந்து பார்த்தான். அவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது, என்னை பிடித்து உலுக்க...


நான் தீப்தியை விரும்புறதைக் கூறி விட்டேன். தீப்திய விரும்புற விஷயம் கவினுக்கு தெரியாது.


தீப்தியைப் பற்றி அடிக்கடி நவீன் கிட்ட தான் விசாரித்து இருக்கேன். அப்போ, கவினும் வெளிநாட்டில் இருந்தான். அதனால் அவனுக்கு தெரியாது. இங்கே இருந்திருந்தால் அவன் கண்டுப் பிடித்திருப்பான்.


ஹாஸ்பிடல் இருந்து வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆகி வந்த போது நவீன் தான் கூட இருந்தான். கவினுக்கு வேலை என்று வெளியேச் சென்று விட்டான்.


போகும் போது,என்கிட்ட என்னன்னு கேட்டான்.நான் ஒன்னும் சொல்லல… லவ் மேட்டரா என்று கேட்டான், அதற்கு மட்டும் ஆமாம் சொன்னேன்‌.


அதற்கு பிறகு எந்த தொந்தரவும் செய்யாமல் அவன் ஆறுதல் சொல்லி விட்டு, தைரியம் சொன்னான். எது வந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம்னு என்று சொல்லி புரிய வைத்துவிட்டு அவன் கிளம்பிட்டான்.


நவீனோ, "தீப்திக்கும், உனக்கும் தான் கல்யாணம். அதுக்கு நான் பொறுப்பு" என்று கூறிவிட்டான்.


இதுல எப்படி நீரஜா சிஸ்டருக்கும், அவனுக்கும் திடீர்னு கல்யாணம் நடந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்காகக் தான் செய்துருப்பான். ஆனால் நீரஜா சிஸ்டர் எப்படி ஒத்துக்கிட்டாங்க என்று தெரியவில்லை. அதை நவீன் கிட்ட தான் கேட்கணும். அவ்வளவு தான் என்னோட பிளாஷ்பேக், என்று விஷால் முடித்து விட‌…


சுபி, நவீனைப் பார்க்க, சுபி மா… நான் விஷால், தீப்தியை விசாரிச்சதை சாதரணமாக தான் நினைத்தேன்.


பட் அவன் தற்கொலை பண்ணிக்கவும்‍, நான் பயந்துட்டேன்.


நீரஜா ஏற்கனவே என்னை விரும்புவது எனக்கு தெரியும். இருந்தாலும் குடும்பத்தில் குழப்பம் வேண்டாம், என்று அவளை அவாய்ட் செய்தேன்.


ஆனால் விஷால் உறுதியாக இருக்கவும், அவன் நல்ல பையன் தீப்திக்கு பொறுத்தமா‌, இருப்பான்.


ஆனால் அத்தை கிட்ட சொன்னா புரிஞ்சுக்க மாட்டாங்க‌… நான் யாரையாவது, கல்யாணம் பண்ணிட்டு போய் நின்றால், அவர்களால் ஒன்றும் சொல்ல முடியாது, என்று நீரஜாக் கிட்ட போய் தனியா பார்க்கணும் என்று ஃபோன் பண்ணி அவளை வரச் சொன்னேன்.


நாம இரண்டு பேரும், இன்னைக்கே கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டேன்.


அவளோ அழுதிட்டே, எனக்கு உங்களை பிடிக்கும் அத்தான். ஆனா வீட்டுக்கு தெரியாம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று சொன்னா…


நான் தான் இன்னைக்கே எனக்கு கல்யாணம் நடக்கணும், நீ சம்மதிக்கவில்லை என்றால்,நான் வேற யாரையாவது பண்ணிக்கிற மாதிரி இருக்கும் என்று அவளை மிரட்டி தான் கல்யாணம் பண்ணேன்.


எங்க கல்யாணம் முடிந்து, நாங்க வந்ததைப் பார்த்து கவின் புரிந்துக் கொண்டான்.


அதனால் தான் தீப்திக்கும்,விஷாலுக்கும் திருமண ஏற்பாடு பண்ணான். ஆனால் ஒன்றும் தெரியாத மாதிரியே நடந்துக் கொண்டான்.


அதற்கு அப்புறம் நடந்ததெல்லாம் தான் உனக்கு தெரியுமே, என்று முடித்து விட்டான் நவீன்.


சுபி மா, என நவீன் ஏதோ பேச வர... நீங்க எதுவும் பேச வேண்டாம் அத்தான்.


என்னை நீங்கள் புரிந்து கொண்டது அவ்வளவுதான் இல்லன்னா, என்கிட்ட எல்லா உண்மையும் சொல்லி இருப்பீங்க... இந்த அளவுக்கு பிரச்சனை பெருசா வந்திருக்காது.


வேறு ஏதாவது நல்ல ஐடியா பண்ணி இருக்கலாம், என்று முறுக்கிக் கொள்ள…


விஷால் வந்து, எனக்காக அவன் செஞ்சதை மன்னிச்சிடு சுபி என…


நான் உங்களுக்காக மன்னிக்கிறேன் அண்ணா என்று சொல்ல‍, அதைக் கேட்டதும் நவீனின் முகம் வாடிப்போனது.


அதைப் பார்த்த கவின், சுபியிடம் திரும்பி, "ஏன் நீ புரிஞ்சுக்க வேண்டியது தானே... நவீனையும் புரிஞ்சுக்கல, என்னையும் புரிஞ்சுக்கல…"


என்னையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால்," நீயே நானாக மாற வேண்டும்." என்று சண்டையிட…


சுபியோ, "நான் தான் மாறணுமா? நீங்க மாற வேண்டியது தானே! எனக்காக… " என்று சண்டையிட...


இப்படியே இருவரும் சண்டையிட்டுக் கொள்ள, அங்கே இருப்பவர்களுக்கு எப்படி சண்டையை நிறுத்துவது என்று தெரியாமல் தவிக்க…


கீழிருந்து நீரஜா வந்தாள். என்னடி பண்ணிட்டு இருக்க, அத்தை உன்னை எவ்வளவு நேரமா தேடிட்டு இருக்காங்க... ஒரு ஜூஸ் குடுத்துட்டு வரதுக்கு இவ்வளவு நேரமா என…


ஐயோ! என அதிர்ந்தவள், கவினைப் பார்த்து பே என முழித்தாள்.


தொடரும்…..
 
Top