Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் அன்பே ஏங்காதே 1

Advertisement

அம்மா ஆஆஆஆஆஆஆ இங்க வாங்க என்று மகள் அழைத்திட பதட்டத்துடன் மாடியேறினார் கலா.
பின்னே பதட்டம் இருக்காதா எட்டு மணிக்கு காபி கொடுத்து எழுப்பினாள் கூட எழுந்துக் கொள்ளாத மகள் ஆறு மணிக்கு அழைக்கிறாளே என்னவோ என்று பத்து படி ஏறுவதற்குள் யோசனையை தறிக் கெட்டுடோடச் செய்தார்.
அறைக்கு வந்தவர் கண்ட காட்சி அவரின் பயத்தை நீக்கி சிரிப்பையே உண்டு பண்ணியது. அது வேறொன்றும் இல்லை அவரது வீர மகள் திவ்யதர்ஷினி பல்லியைப் போல் சுவற்றில் ஒட்டிக் கொண்டிருக்க நிஜ பல்லியோ படுக்கையில் இருந்தது.
பார்த்தவர் சிரிக்காது இன்னைக்கு நீ எனக்கு எவ்வளவு பெரிய உதவி பண்ணியிருக்கற தெரியுமா இரு உனக்கு சூடா பால் எடுத்துட்டு வரேன் என்று மகளிடம் கூறாது பல்லியிடம் கூறிக் கொண்டு இருக்க திவ்யாவிற்கோ தூக்கம் போன எரிச்சல் இதில் அன்னை தன்னை டேமேஜ் செய்வது இன்னும் கோபத்தை உண்டு பண்ணியது.
ஆனால் தாயிடம் கோப பட முடியாது. காரணம் பெரிதல்ல அவரைக் கோபப் படுத்தினால் தன் தூக்கத்தை கெடுத்த துஷ்டனை தன்னுடைய அறையிலே ரூமை ஷேர் பண்ணிக் கொள்ள சொல்வார். பிறகு எப்படி நிம்மதியான காலை நேரத்து தூக்கம் வருமாம்.

ஈஈஈஈஈ என்று அத்தனை பற்களையும் காட்டிய மகளைப் பார்த்தவர் பல்லிய இந்த ரூம விட்டு வெளியே கூட்டிப் போனா எனக்கு என்ன யூஸ் என்று கூறிய தாயை பார்த்தவள் நிஜமாகவே நீ எனக்கு அம்மா தானா இப்படி பெத்த புள்ளைக்கிட்டியே பிஸ்னெஸ் பேசுற என்று கூறிட தாயோ ஐ வான்ட் மோர் எமோசன் என்றிட திவ்யாவோ ப்ளிஸ் மா நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் மா என்றிட நிஜமாவா என்பது போல் கலா பார்த்தவர். அப்போ சரி காபி போட்டு சமையல் பண்ணிட்டு துணி துவைச்சிட்டு குளிச்சிட்டு கோவில் போய்ட்டு வந்துடு இன்னைக்கு வெள்ளி கிழமை வேற கோவில் போறதுக்கு முன்னாடி வீடு பூரா கிளின் பண்ணிடு என்று சொல்லிக் கொண்டே இருக்க சுவற்றில் சாய்ந்த படி நின்றவள் அப்படியே ஷாஷ்டாங்காமாய் தாயின் காலில் விழுந்திருந்தாள்.
என்னை ஈன்றெடுத்த அன்னையே நான் உன் மகள் அல்லவா விட்டுடுமா முடியலை என்று கதறிட சரி சரி நல்லாயிரு எழுந்துக்கோ என்று அவரது வேலைகளை கவனிக்க சென்று விட்டார்.
காலை உணவு மேஜையில் கலா எடுத்து வைத்துக் கொண்டிருக்க ராமநாதன் உணவருந்த வந்தவர் திவ்யா தேவ் எழுந்தாச்சா என்று கேட்டுக் கொண்டே தட்டை எடுத்து வைத்தவர் அவரே இட்லி வைத்துக் கொண்டு சாப்பிட அதற்குள் அவர் மக்கள் இருவரும் சேர்ந்து காலை உணவு அருந்திட எப்போதும் தாயின் உணவினை கேலி செய்து சாப்பிடுபவள் இன்று அமைதியாய் சாப்பிட தந்தை மகன் இருவரும் கண்களால் வினாவிட தெரியாது என உதடு பிதுக்கிட மகளோ தாயினை கண்களால் கெஞ்சிக் கொண்டு இருந்தாள். காலையில் நடந்த விஷயம் தெரிந்தால் தந்தை அண்ணன் இருவருமே திவ்யாவை கிண்டல் செய்து விடுவர் அதை கூறாதே என்று கெஞ்சி கொண்டிருந்தாள்.
நல்ல கலகலப்பான குடும்பம் நம் நாயகி திவ்யதர்ஷினி உடையது.
Super start sis
 
Top