Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் அன்பே ஏங்காதே 2

Advertisement

A. Pavi

Member
Member
திவ்யா சாப்பிட்டதும் எழுந்து கொள்ள வேலைக்கு செல்ல கிளம்பி வந்தவளை பார்த்த தேவ், என்ன திவி சீக்கிரம் கிளம்பிட்ட இரு நான் இன்னும் சாப்பிட்டு முடிக்கலை வெய்ட் பண்ணு என்று வேகமாய் சாப்பிட ஆரம்பித்தான்.
என்னம்மா இது அண்ணாவும் நீயும் டெய்லி ஒண்ணா ஒரே ஆபிஸ் தானே போறிங்க.
எதுக்கு இப்போ இவ்வளவு சீக்கிரமா ரெடியாகி நின்னுட்டு இருக்க என்று ராமநாதன் கேட்டார். அம்மா தான் பா கோவிலுக்கு போக சொன்னாங்க என்று தந்தையிடம் சொல்லி முடிக்கவில்லை அவளின் தாயோ ஏன் நான் சொன்ன மற்றது எல்லாம் எப்போ தான் நீ செய்வ என்று கேட்டிட பதில் கூறாது நின்ற மகளை பார்த்து சிரித்தவர் மனைவியிடம் லன்ச் பேக் எடுத்துட்டு வா மா என்றார்..
ஏன் டா அம்மா பாவம் தான டெய்லி எவ்வளவு வேலை பார்க்கிறா டைம்கு கூட சாப்பிட மாட்டா வேலைய முடிச்சிட்டு தான் சாப்பிடுவா நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணா அவ பீரியா இருப்பா இல்லடா என்றார்.
சரிப்பா என்று மகள் கூறினாலும் கண்கள் கலங்கி விட்டது. கலா வந்தவர் பார்த்தது அவளின் கலங்கிய விழியைத் தான் கணவனை பார்க்க அவர் ஏதும் கூறாது நின்றிருந்தார்.
ஆம் ராமநாதனுக்கு கோபம் வந்தால் அமைதியாக சொல்ல வேண்டியதை சொல்லி விட்டு தீர்க்கமாக பார்த்தபடி இருப்பார். இப்போதும் மகளை பார்த்தவர் எதுவும் பேசாமல் இருந்தார்.
மகளை அழைத்துக் கொண்டு பூஜை அறை சென்று கடவுளை வழிபடும் படி சொன்னவர் கணவரிடம் வந்து லன்ச் பேக் கொடுத்து ஈவ்னிங் பேசிக்கிறேன் பாப்பாவ அழ வைச்சிட்டு இருக்கிங்க நீங்க என்றவர் தேவ் என்றதும் அப்போது தான் போன் பேசி வைத்தவன் என்னம்மா சும்மா காலையிலேயே ஹைபிட்ச்ல கத்துறீங்க என்றிட ராமநாதன் மகனை ஒரு பார்வை பார்க்க அவ்வளவு தான் தாயைக் கூட பார்க்காமல் வெளியே சென்று வண்டியை துடைக்க ஆரம்பித்தான்.
திவ்யா வந்தவளோ தாய் தந்தை இருவரிடமும் கூறி விட்டு செல்ல வந்தவளிடம் தேவ்வோ திவி என்னோட ஆபிஸ் பேக் உள்ள இருக்கு எடுத்துட்டு வாடா ப்ளிஸ் என்றிட ஏற்கனவே தந்தை பேசியயதில் குற்றவுணர்வோடு இருந்தவள் பதிலைதும் கூறாது எடுத்து வர மக்கள் இருவரும் கிளம்பியது தான் தாமதம் கணவரை பிடித்துக் கண்டார்.
எதற்கு பிள்ளைங்க கிட்ட கோபமா பேசுறீங்க அவங்க முகமே வாடிப் போச்சு பொறுமையா பேசுங்க என்று இன்னும் கூறியபடி இருக்க அவரின் கைகளை பிடித்தவர் சரிம்மா என்றிட மணியைப் பார்த்தவர் வேலைக்கு கிளம்பி விட்டார்.
தேவ் மற்றும் திவ்யா இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர். ராமநாதன் தனியார் வங்கி ஒன்றில் மேனஜராக பணிபுரிகிறார்.
இனி நாயகன் அறிமுகம் அடித்த பதிவில்....
 
Last edited:
நல்ல பதிவு. ஆனால் இன்னும் சிறப்பாக செய்யலாம். இடைவேளை விட்டு எழுதலாம் .
 
Top